World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE makes major concessions at peace talks with Sri Lankan government

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தையில் பாரிய சலுகைகளை வழங்கியுள்ளனர்

By Wije Dias
7 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே தாய்லாந்தில் இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையானது, கெரில்லா அமைப்பை அரசியல் ஸ்தாபனத்துடன் விரைவாகவும் சாத்தியமான வகையிலும் இணைத்து விடுவதை இலக்காகக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு தொடரான புதிய சலுகைகளை வழங்குவதுடன் கடந்தவார இறுதியில் முடிவடைந்தது.

நவம்பர் 3ம் திகதி கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில், விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை அடுக்கிய பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கம், தனது அமைப்பின் முக்கிய குறிக்கோள் இலங்கை அரசியலின் "ஜனநாயக, அரசியல் நீரோட்டத்தில் நுழைந்துகொள்வதே" என கூறினார். "எவரும் சாத்தியமானது என நினைத்திராத முன்னேற்றத்தை" இருசாராரும் கண்டுள்ளதாக பிரகடனம் செய்த இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி ஜீ.எல். பீரிஸ், பேச்சுவார்த்தையின் முடிவுகளை புகழ்ந்தார்.

பாலசிங்கம் பத்திரிகையாளர் மகாநாட்டில்: "நாம் ஏனைய அரசியல் குழுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அதைச் செய்ய விரும்புகிறோம்," எனப் பிரகடனப்படுத்தினார். விடுதலைப் புலிகள் தனது அரசியல் எதிர்ப்பாளர்களை பயமுறுத்தல், தடுத்து வைத்தல் மற்றும் கொலை செய்தல் என்பவற்றில் பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு தமிழ் முதலாளித்துவ கட்சிகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் அதேவேளை, வட இலங்கையிலுள்ள சோசலிஸ்டுகளின் அரசியல் உரிமைகள் பற்றிய விடுதலைப் புலிகளின் போக்கு வேறுபட்டதாகும். விடுதலைப் புலிகளின் தலைமையானது ஊர்காவற்துறை தீவில் தனது உள்ளூர் அலுவலர்களால் சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டனம் செய்ய மறுத்து வருகின்றது. [See: Sri Lankan police belatedly initiate action over the LTTE's threats against the SEP]

செப்டம்பரில் இடம்பெற்ற முதற் சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர், வடக்கு கிழக்கில் ஒரு தனித் தமிழ் அரசுக்கான விடுதலைப் புலிகளின் நீண்டகால கோரிக்கையை பகிரங்கமாக விலக்கிக் கொண்ட பாலசிங்கம்: "விடுதலைப் புலிகள் ஒரு தனி அரசு என்ற நிலைப்பாட்டுடன் செயற்படவில்லை," என பிரகடனம் செய்தார். அவர், விடுதலைப் புலிகள் பிராந்திய சுயாட்சி வகையிலான அமைப்பை ஏற்றுக்கொள்வர் என சுட்டிக்காட்டினார். இடைக்கால நிர்வாக சபையொன்றை நிறுவுவது சம்பந்தமான கலந்துரையாடல்கள் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளின் போது முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.

எவ்வாறெனினும், அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, விடுதலைப் புலிகளுக்கு அடிபணிவது சம்பந்தமாக எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணி மற்றும் சிங்கள தீவிரவாத குழுக்களின் எரிச்சலுக்குள்ளாகியுள்ள கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்வதின் பேரில், விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபைக்கான தனது அழைப்பை தாக்கத்துடன் தள்ளிவைத்தனர். நாட்டின் 19 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்காக அரசாங்கத்துடன் சேர்ந்து மூன்று கூட்டுக்குழுக்களை ஸ்தாபிப்பதற்கும் பாலசிங்கம் இணக்கம் தெரிவித்தார்.

பாலசிங்கம், ஜீ.எல். பீரிஸ் இருவரின் தலைமையிலான அரசியல் விடயங்கள் பற்றிய பிரதான குழுவானது, கொழும்புக்கும் வடக்கு கிழக்கு நிர்வாக சபைக்குமிடையிலான அதிகார பகிர்வு ஏற்பாடுகளில் இழுபறிப்படும் ஓர் மைய அலகாக விளங்கவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இந்தக் குழுவில் ஒரு இடம் வழங்கப்படவுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஒரு பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லின் காங்கிரஸ் நாட்டின் கிழக்கில் ஒரு தனியான முஸ்லிம் நிர்வாக அலகை ஸ்தாபிப்பதற்காக அழைப்புவிடுக்கின்றது. முன்னர், இந்தக் கோரிக்கையை விடுதலைப் புலிகள் எதிர்த்து வந்தனர்.

வட கிழக்கில் உள்ள தமது வீடுகள் நிலங்களுக்கு இரு மாதங்களுக்குள் முஸ்லிம்களை மீளத்திரும்ப அனுமதிப்பதாக விடுதலைப் புலிகள் ஸ்ரீ.ல.மு.கா. வுக்கு வழங்கிய உறுதிமொழியானது, கொழும்பு ஆளும் கும்பலுக்காக விடுதலைப் புலிகள் வழங்கும் விட்டுக்கொடுப்புகளின் இன்னுமொரு சமிக்ஞையாகும். 1991ல், தனித் தமிழீழக் கோரிக்கையை காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், விடுதலைப் புலிகள் ஆயிரக் கணக்கான முஸ்லிம் குடும்பங்களை தமது வீடுகள் வயல்களை விட்டு ஓடுமாறு விரட்டினர். இந்த நடவடிக்கையானது, இன்று விடுதலைப் புலிகள் ஒரு தீர்வுக்காக எதிர்நோக்கியிருக்கும் இனவாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கரங்களை பலப்படுத்தியுள்ளது.

நவம்பர் 25, ஒஸ்லோவில் நடைபெறவுள்ள நிதி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் கூட்டத்தில் வெளிநாட்டு உதவிக்கும் மற்றும் முதலீடுகளுக்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுக்க விடுதலைப் புலிகளும் இணங்கியுள்ளனர். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்படும் நிதிகளை நிர்வகிப்பதற்காக மனிதநேய மற்றும் புனரமைப்புத் தேவைக்கான கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. மூன்றாவது குழுவான இராணுவ விடயங்களுக்கான குழு, பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ மற்றும் விடுதலைப் புலிகளின் தளபதி கருணா உட்பட "இருசாராரதும் சிவிலியன் மற்றும் இராணுவ உயர் மட்ட அதிகாரிகளை" கொண்டதாக அமைந்திருக்கும்.

இப்பேச்சுவார்த்தைகள் நடந்தபோது இலங்கை கடற்படை, பெருந்தொகையான வெடிபொருட்கள் அடங்கிய விடுதலைப் புலிகளின் படகொன்றை வேவு பார்த்தது. திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் உள்ளூர் தலைவர் கிருபா உட்பட ஆறு விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தூதுக்குழு அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் "விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துக்கு அறிவிக்காமல் தமது சுயவிருப்புடன் செயலாற்றினார்கள்" என பிரகடனம் செய்ததோடு, அவர்கள் தொடர்பாக "நாட்டின் சட்டத்திற்கமைய" நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு இடமளித்து, ஆறுபேரையும் கைகழுவிவிட்டனர்.

கொழும்பு தன்னுடன் உடன்பட வேண்டுமென்பதற்காக விடுதலைப் புலிகள் என்னவெல்லாம் செய்யத் தயாராக உள்ளனர் என்பதற்கு வரையறை கிடையாது போலத் தோன்றுகிறது. பாலசிங்கம், கலந்துரையாடலின் போது ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி ஸ்திரமான பெரும்பான்மையை உருவாக்க புதிய தேர்தலை நடத்தவேண்டும் என்றும் கூட தெரிவித்துள்ளார். ஐ.தே.மு. ஒரு முன்கூட்டியத் தேர்தலைத் தீர்மானிக்குமாயின், விடுதலைப் புலிகள் தமது முழு ஆதரவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் எனவும் பாலசிங்கம் உறுதியளித்தார். 1983ல் இனவாதப் பதட்ட நிலைமைகளுக்கு வழியமைத்த மோதல்களைத் தூண்டிவிட்டதற்கும், கட்சி 1994ல் பொதுஜன முன்னணியால் அரசாங்கத்தலிருந்து வெளியேற்றப்படும் வரை, கொடூர யுத்தத்தை முன்னெடுத்து வந்ததற்குமான பொறுப்பாளி விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியேயாகும்.

76 ஊழியர்களைக் கொன்ற 1996 மத்திய வங்கி குண்டுத் தாக்குதலை திட்டமிட்டதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 200 வருட சிறைத் தண்டனை விதித்த அறிவித்தலையடுத்து ஒரு அதிருப்தியான குறிப்பு வெளிப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு தெளிவாகப் பிரதிபலித்த பாலசிங்கம் "இது மிக இழிவானது" எனக் குறிப்பிட்டார். அரசாங்கத் தலைவர்கள், தமிழ் சிவிலியன்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின்போது கொழும்பின் நடவடிக்கைகளை சோதிப்பார்களேயானால், நீதிமன்றம் அவர்களுக்கு 2000 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டிவரும் என விடுதலைப் புலிகளின் பேச்சாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஆத்திரத்துடன் பிரகடனப்படுத்தினார். ஒரு சில சலுகைகளை வழங்கிய அரசாங்கம், மேற்கொண்டு நடக்கவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது, இந்த நீதிமன்றத் தீர்ப்பினை ஒரு தகுந்த பேரம் பேசும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஒரு தீர்வினை எட்டுவதற்கான கணிசமான அனைத்துலக அழுத்தங்களுக்கு இருசாராருமே கீழ்பட்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தைகள் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவின் பின்னணியுடன் நோர்வேயால் ஒழுங்கு செய்யப்பட்டன. கொழும்பில் வர்த்தகர்களின் சக்திவாய்ந்த பிரிவுகள், சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கோரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நோக்கித் தள்ளுவதன் பேரில், அரசாங்கத்தை விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் மோதல்களுக்கு முடிவுகட்டுமாறு நெருக்கி வந்துள்ளன.

சுமார் இரு தசாப்தகால யுத்தத்தின் பின்னர் பொருளாதாரமானது முதலீட்டு வீழ்ச்சியினாலும், பெருந்தொகையான இராணுவச் செலவுகள் மற்றும் ஏற்றுமதி வீழ்ச்சியினாலும் பாதிப்புக்குள்ளானது. செவ்வாயன்று சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ. 339 பில்லியன் ($US3.5 பில்லியன்) வருவாயானது, கடன் மீள்செலுத்துகைக்காக நுகரப்படவுள்ளதால், அரசாங்கம் ரூ.350 பில்லியன் தொகையை கடனாகப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதோடு திட்டமிடப்பட்டுள்ள தனியார்மயமாக்கலை முன்னெடுக்கவும் நெருக்குவாரத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு பொருளாதாரம் 1.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததோடு இவ்வாண்டில் அது 2 இலிருந்து 2.5 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளது.

தனியார் மயமாக்கம் மற்றும் ஏனைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தால் அரசாங்கத்துறை ஊழியர்களிடையே வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பையிட்டு ஆளும் வட்டாரம் கலவரமடைந்துள்ளது. அண்மையில் அக்டோபர் 24ம் திகதி தனியார்மயமாக்கல் மற்றும் மோசமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10,000 மேற்பட்ட துறைமுகங்கள், புகையிரத, அரசாங்க வங்கி மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனங்கள், மின்சாரசபை ஆகியவற்றின் ஊழயர்கள் பங்குகொண்டனர். அவர்களுடன் வட மத்திய மாகாணத்தின் நூற்றுக்கணக்கான சிறு விவசாயிகளும் அமெரிக்க கூட்டுத்தாபனத்துக்கு பொஸ்பேற் வண்டல் விற்கப்படுவதை எதிர்ப்பதற்காக சேர்ந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், விடுதலைப் புலிகள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை துவம்சம்செய்யும் அதன் நடவடிக்கைகளின் பேரில் அவர்களின் எதிர்ப்பை நசுக்கவும் சாத்தியமானால் பலாத்காரமாக திணிக்கவும் அரசாங்கத்துடன் இணைந்த சக்தியாக இருக்க சக்திவாய்ந்த முறையில் உடன்பட்டுள்ளது. நோர்வேயில் நவம்பர் இறுதியில் இடம்பெறவுள்ள கடன் வழங்கும் நாடுகளின் மாநாட்டின் போது பாலசிங்கம் சிலவேளைகளில் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கக் கூடும், என பேச்சுவார்த்தைகளின் பின்னர் கிடைத்த சமிக்ஞையானது, விடுதலைப் புலிகள் விரைவாக வழிக்கு வருவதையிட்டு அரசாங்கம் திருப்தியடைந்துள்ளதற்கான அறிகுறியாகும். அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று டிசம்பர் 2-5 திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

See Also :

இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தை: தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மூலதனத்துக்கு தலைவணங்குகின்றது

Top of page