World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

OECD predicts bleak outlook for Japanese economy

ஜப்பானின் பொருளாதாரம் இருண்ட காலத்தை நோக்கிச் செல்வதாக பொருளாதார கூட்டுழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு முன்கூட்டி குறிப்பிட்டுள்ளது

By Joe Lopez
6 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

பொருளாதார கூட்டுழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD), ஜப்பானின் பொருளாதாரத்தின் எதிர்கால நிலவரம் மிகுந்த மந்த நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை மதிப்பீடு செய்திருக்கிறது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்த அறிக்கை வலியுறுத்துகின்றது.

பொருளாதார கூட்டுழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பொருளாதார ஆய்வு அறிக்கை சென்ற மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சம் பின்வருமாறு:-''ஜப்பானியப் பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஏற்றுமதிகள் பெருகுதலாலும், கையிருப்பில் செய்யப்பட்ட திருத்தங்களாலும், 2002 இன் நடுப்பகுதியில் ஓரளவிற்குப் பொருளாதார வளர்ச்சிப்போக்குக் காணப்பட்டது என்றாலும், அது மிக குறைவான வளர்ச்சிதான். 90களில் காணப்பட்ட பொதுவான குறைந்த அளவு வளர்ச்சியைச் சரிசெய்கின்ற அளவிற்குப் பொருளாதார வளர்ச்சி உருவாகவில்லை. ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது, 2004 இன் இறுதி வரை பொருளாதார வளர்ச்சி விகிதம் 1% ஆகவே இருக்கும்.''

ஜப்பான் தனது ஏற்றுமதிகளை குறிப்பாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை சார்ந்தே இருக்கும் போக்கு குறித்து OECD எச்சரித்திருக்கின்றது. ''உலக பொருளாதாரம் மந்த நிலையில் சென்று கொண்டிருக்கின்றது. நிதி நிலவரங்கள் மேலும் சீர்குலையும் போக்கில் இருப்பதால், பொருளாதார மந்த நிலை கடுமையாகுவதற்கான சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றது'' என்று OECD எச்சரித்திருக்கின்றது.

''ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜப்பானிய பொருளாதாரத்தை தற்போதைய மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளுவதில் ஜப்பான் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. ஜப்பானிய பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்வது அரசியல் அடிப்படையில் சிக்கலானது. ஏனெனில் ஜப்பானிய பொருளாதாரத்தில் ஆதிக்க சக்திகள் மிக ஆழமாக கால் ஊன்றிவிட்டன. பொருளாதார சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்கள், மாற்று எதுவும் இல்லை என்பதை உணரவேண்டியதோடு, ஜப்பானிய பொருளாதாரத்தை மீண்டும் உயிர் துடிப்போடு இயங்கச் செய்வதற்கு ஜப்பானிய பொருளாதார முறையை சீரமைத்தாகவேண்டும். இனி வீணாக்குவதற்கு நேரம் இல்லை'' என அந்த அறிக்கை விமர்சனம் செய்துள்ளது.

OECD கடந்த பத்து ஆண்டுகளாக பரிந்துரை செய்துவரும் மாற்று ஆலோசனைகள்தான் இப்போதைய அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஜப்பானிய நிதி நிர்வாக அமைப்புக்களில் கடுமையான கடன் சுமை நிலவுகிறது. எனவே அந்த நிதி நிர்வாக முறையை சீரமைக்கவேண்டும். உள்நாட்டில் ஜப்பானிய பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். ஜப்பானிய தொழிலாளர்களின் நிலை மேலும் சீர்குலைந்து கொண்டு வருகின்றது. அத்தகைய ''அதிர்ச்சி வைத்தியம்'' மூலம் பல்லாயிரக்கணக்கான நஷ்டத்தில் இயங்கும் கம்பெனிகள் திவாலாகும் நிலை உருவாகும். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து உருவாகும்.

ஜப்பானிய பிரதமாக சூயூனிச்சிரோ-கோஸுமி (Junichiro Koizumi) சென்ற ஆண்டு பதவி ஏற்றார். மிகத் தீவிர பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் அந்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்கி முந்தைய பிரதமர்களைப்போல், பணவீக்கம் அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். நவம்பர் இறுதியில் அரசு மற்றொரு சிறிய வரவுசெலவுத்திட்டத்தை அறிவித்தது. அரசு பொதுவான திட்டங்களில் அதிக அளவு செலவு செய்வதற்கும், சிறிய வர்த்தகத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் வேலையில்லாதவர்களுக்கு உதவவும் வீழ்ச்சியடையும் வரிவசூலை முடுக்கிவிடவும், சிறிய வரவுசெலவுத் திட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டன. இப்படி பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு 12 பில்லியன் டாலர்கள் அளவிற்கு பொதுப் பணிகளுக்காகவும், வேலையில்லாதவருக்கு உதவுவதற்காக மற்றொரு 12 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள் பரவலாக எள்ளி நகையாடப்பட்டதுடன், கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுக்கடன் அளவு அதிகரிக்கும். ஏற்கனவே பொதுக்கடன்கள் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 150% ஆக இருக்கின்றது. தற்போது பொளாதாரத் தர மதிப்பீடு நிறுவனங்கள் (Credit rating Agencies) ஜப்பானின் தேசிய பொதுக்கடன் அளவை குறைத்து மதிப்பீடு செய்யும் ஆபத்தை அதிகரித்துள்ளது. ஜப்பானில் நிலவும் மிக அதிக அளவிலான வேலையில்லாதிண்டாட்டத்தை சமாளிப்பதற்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல. ''ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் இறுதியில் இன்னொரு ஜூரோவை (0) சேர்த்து, ஒதுக்கப்பட்ட தொகையை 10 மடங்கு உயர்த்தினாலும், பொரளாதார வீழ்ச்சிப்போக்கிலிருந்து நாட்டைத் திருத்த முடியாததுடன், பொதுப்பணிகளை அதைச் சாதிக்க இயலாது'' என ஒரு பொருளாதார ஆய்வாளர் கருத்துத் தெரிவித்தார்.

ஜப்பானின் பொருளாதாரம் ''கட்டுப்படுத்தமுடியாத'' நெருக்கடியில் சிக்கித் தவிப்பதையும், கோடிக்கணக்கான ஜப்பானிய குடும்பங்கள், ஏற்கனவே கடுமையான சிக்கலில் இருப்பதையும், பல்வேறு புள்ளி விவரங்கள் தெளிவுப்படுத்துகின்றன. OECD இன் அறிக்கை வெளிவந்ததும், ஜப்பானிய மத்திய வங்கி கடந்த 11 மாதங்களில் ஜப்பானிய பொருளாதாரத்தின் வீழ்ச்சிப்போக்கை ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டது. ஏற்றுமதிகள் மற்றும் தொழில்துறை உற்பத்திகள் வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக ஜப்பான் மத்திய வங்கி மதிப்பீடு செய்திருக்கிறது. செப்டம்பரில் தொழில் உற்பத்தி வீழ்ச்சி 0.3 % குறைந்துள்ளது.

ஜப்பானியப் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, பொருளாதாரம் ஸ்திர நிலையில் இருந்தாலும், ''பொருளாதாரம் மீண்டும் வலுவான அடிப்படைக்குச் செல்வதில், நிச்சயமற்ற தன்மைகள் அதிகமாக உள்ளது. உள்நாட்டுத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதிகள் தங்களது விறுவிறுப்பை இழந்து கொண்டிருக்கின்றன'' என ஜப்பான் மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது. நுகர் பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்துகொண்டிருக்கிறது. வருடாந்தம் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் நுகர் பொருட்களின் விலை கடந்த 38 மாதங்களில் தொடர்ந்து நவம்பர் மாதம் 0.7 % வீழ்ச்சியடைந்திருக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக்கொண்டே வருகின்றது. நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டன. நிரந்தர ஊழியர்களுக்குப் பதிலாக, தற்காலிக, பகுதி-நேர, குறுகிய கால ஒப்பந்த ஊழியர்களை நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் இதுவரை கண்டிராத அளவிற்கு, ஜப்பானில் வேலையில்லாதோரின் அளவு 5.5% ஆக அக்டோபரில் பதிவு செய்யப்பட்டதாக ஜப்பானில் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வேலையில்லாத ஆண்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 5.9% ஆக அதிகரித்தது. வேலையில்லா பெண்களின் தொகை செப்டம்பரில் 4.9% ஆக இருந்து தற்போது 5.1% ஆகப் பெருகிவிட்டது. அக்டோபரில் வேலையில்லா, மக்கள் எண்ணிக்கை 36.2 லட்சம் என்று அதிகாரபூர்வமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஓராண்டில் வேலை இல்லாதவர் தொகை ஒரு லட்சம் அளவிற்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து 19 மாதங்களாக வேலையில்லாதோர் கூட்டம் பெருகி வருகின்றது.

ஜப்பானில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய மதிப்பீடுகள், உண்மை நிலவரத்தை மிகக் குறைத்தே தயாரிக்கப்பட்டுள்ளன. ஜூலைக்கும், செப்டம்பருக்கும், இடைப்பட்ட காலத்தில் வேலை இல்லாது திண்டாடிய 19.9 லட்சம் மக்கள், அதிகாரபூர்வமான வேலை இல்லாதோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் அவர்கள் வேலை தேடுவோராகக் கருதப்படவில்லை என்று, அண்மை அரசு அறிக்கையொன்று குறிப்பிட்டிருக்கிறது.

அண்மையில் ஜப்பானின் முன்னணி நாளேடுகளில் ஒன்றான யோமுரி ஷிம்பன்(Yomiuri Shimbun) வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டது. கம்பெனிகள் சீரமைப்பு மற்றும் மூடப்பட்டதன் காரணமாக வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை 15.3 லட்சமாக உயர்ந்துவிட்டது. சென்ற ஆண்டு, இதே தரப்பினரது எண்ணிக்கை 3,90,000ஆக இருந்தது. மிகப்பெரும்பாலான ஜப்பானிய குடும்பங்களில் குடும்பங்களில் குடும்பத்தைக் காக்கும் பொறுப்புள்ள 35 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களில் வேலை இல்லாதிருப்போர் எண்ணிக்கை முந்திய ஆண்டைவிட 60,000ஆல் அதிகரித்துள்ளது என்ற விவரங்கள் அப்பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

''வேலை வாய்ப்பு உள்ள நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை, முக்கியமாக நிரந்தர கம்பெனி ஊழியர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 660,000 ஆல் குறைந்திருக்கிறது. இப்படியே கடந்த 15-மாதங்களாக நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கும் குறைந்த கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் பணியாற்றுபவர்களது எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 440,000 உயர்ந்திருக்கிறது. இத்தரப்பினரை குறிவைத்து மிக எளிதாக கம்பெனி நிர்வாகங்கள் ஊழியர்களை நியமித்து வருகின்றன'' என்று அந்த பத்திரிகை எழுதியுள்ளது.

தற்போது விலைவாசிகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன, லாபங்கள் குறைகின்றன, நுகர்பொருட்கள் விற்பனையும் குறைந்து வருகின்றது. இத்தகைய பொருளாதார நிலை குறித்து மசாக்கி முராட்டா (Masahi Murata) என்ற பொருளாதார நிபுணர் (UFJ இன்டிஸ்ட்டியுட்) ''நிறுவனங்களுக்கு அதிக அளவில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதையும், சம்பளத்தை குறைப்பதையும் தவிர வேறு வழியில்லை. ஏனெனில், தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் நிறுவனங்களது இலாபம் மிகக் குறைவாக உள்ளன. தொழிலாளர் தங்களது எதிர்காலம் பற்றியும், தொழில் பாதுகாப்பு தொடர்பாகவும் தொடர்ந்து கவலையில் மூழ்கியுள்ளனர். தொழிலாளர்கள் தாரளமாக, செலவு செய்யும் மனப்போக்கில் இல்லை'' என விமர்சனம் செய்திருக்கிறார்.

நாட்டின் மொத்த நுகர்பொருள் விற்பனையில் உழைக்கும் வர்க்கத்தின் குடும்பத்தினரின் நுகர்வுப்பங்கு 60% ஆகும். உழைக்கும் மக்கள் நுகர்பொருட்களுக்காக செலவிடும் தொகை அண்ணளவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 60% ஆகும். மாத ஊதியம் பெறுவோர் வருவாய் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. போனஸ், மேலதிக வேலைநேரக கொடுப்பனவுகள் குறைக்கப்படுவதாலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிவருவதாலும், தொழிலாளர் ஊதியம் குறைந்து வருகின்றது. அத்தகைய தொழிலாளர் இல்லங்களின் மாதாந்திர சராசரி வருமானம் 1.6% ஆக குறைந்துள்ளது. அவர்களது செலவுக்காக கையில் மிச்சமாகும் வருமானத்தின் அளவு 1.4% ஆல் குறைந்திருக்கிறது. தொழிலாளர்கள் இப்படி மோசம் அடைந்துவரும் நிலமை குறித்து கவலை அடைந்துள்ளனர். ஊதியம் பெறும் குடும்பங்களின் வருவாய் முந்தைய ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் 0.7% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.

Top of page