World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US actor Sean Penn visits Baghdad

அமெரிக்கா நடிகர் சியன் பென் பாக்தாத் விஜயம்

By David Walsh
20 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க திரைப்பட நடிகர் சியன் பென் டிசம்பர் 15-ல் பாக்தாதில் மூன்று நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற மிரட்டலுக்கு எதிராக உரையாற்றினார். 42 வயதான அந்த நடிகர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ''வாஷிங்டன் போஸ்ட்'' நாளிதழில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து அதில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தனது நிர்வாகத்தின் முயற்சியைக் கைவிடக் கோரினார்.

''இந்த அச்சமூட்டும் மோதலின் அடிப்படையை ஆழமாகப் புரிந்து'' கொள்வதற்காக தான் வந்திருப்பதாக பாக்தாத்தில் வந்திறங்கியதும் பென் கருத்துத் தெரிவித்தார். ''அமெரிக்கர்கள் அனைவரும் வழக்கமான தகவல் வாயில்களுக்கு அப்பாலிருந்து கிடைக்கும் எல்லாத் தகவல்களையும் அறிந்து புரிந்து கொள்வர்'' என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ''எனது ஈராக் பயணம் மனசாட்சிப்படி எனது கருத்தைப்புரிந்து கொள்ளும் கடமையின்பாற்பட்ட இயல்பான நடவடிக்கை'' என்று அவர் வர்ணித்தார்.

பென் விஜயத்திற்கு அமெரிக்காவின் பப்ளிக் அக்யூரசி (PA) அமைப்பு ஏற்பாடு செய்தது. இது தாராண்மைவாத கொள்கைகளை ஆராயும் ஒரு அமெரிக்க அமைப்பு. சான் பிரான்சிஸ்கோ, மற்றும் வாஷிங்டனில் இந்த அமைப்பிற்கு அலுவலகங்கள் உள்ளன.

பாக்தாதில் தங்கி இருந்தபோது பென், குழந்தைகள் மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்தார், அங்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. மருத்துவமனையைச் சுற்றிப் பார்க்கும்போது அவருடன் பத்திரிக்கையாளர்கள் வருவதை அவர் அனுமதிக்கவில்லை. நான் தனிப்பட்ட முறையில் குழந்தைகளைச் சந்திக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார். ஈராக் உதவியாளர்கள் இல்லாமல் பாக்தாத் தெருக்களில் நடமாடினார். அவர் ஈராக் துணைப் பிரதமர் தாரெக் அஜீஸ் (Tareq Aziz) மற்றும் சுகாதார அமைச்சர் உமீத் மதாத் முபாரக் (Umeed Madhat Mubarak) ஆகியோரை சந்தித்து - பேசினார்.

பாக்தாத்தில் டிசம்பர்-15-அன்று செய்தியாளர் மாநாட்டில், பென் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை பின்வருமாறு: ''நான் ஐக்கிய அமெரிக்காவில் ஓர் குடிமகன், அமெரிக்க அரசியல் சட்டத்தை நம்புகிறேன். அமெரிக்க மக்களை நம்புகிறேன். நமது அரசு மக்களுக்காக மக்களால், மக்களே உருவாக்கிக் கொண்டது. அத்தகைய மக்களில் நானும் ஒருவன் மற்றும் சலுகைகள் பெற்ற மனிதன்.

''எனது குழந்தைகளை, சுகாதாரம் சேமநல மற்றும் பாதுகாப்பு மிக உயர்ந்த தரத்திலுள்ள நாட்டில் வளர்ப்பதற்கு உரிமை படைத்தவனாக இருக்கின்றேன். எனது கனவுகளை நனவாக்கி நான் செழிப்போடு வாழ்வதற்கு, அரசியல் சட்டம் அனுமதிக்கின்றது. இப்படிப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற நான், அமெரிக்கன் என்ற முறையிலும் ஒரு மனிதன் என்ற அடிப்படையிலும் எனது அரசாங்கம் வகுக்கும் கொள்கைகளுக்கு நான் பொறுப்பேற்றாக வேண்டும். சில கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன், சிலவற்றை நான் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கிறேன் இதை சுருக்கமாக சொல்வதென்றால் போர்மூளுமானால் அல்லது ஈராக் மீது பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் நீடிக்குமானால், அமெரிக்கர்கள் மற்றும் ஈராக்கியர்களின் இரத்தம் ஒருங்கே என் கைகளில் இருக்கும் அதற்கு பொறுப்பு நான்தான்.

''எனது இந்தப் பயணம் இங்கு நடப்பதற்கு காரணம் ஈராக் மக்களின் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளத்தான். அதன் மூலம் ஈராக் மக்களினது இரத்தம் அமெரிக்க படைவீரர்களது இரத்தத்துடனும் சேர்ந்து என் சொந்தக் கரங்களில் காணாதிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்."

"இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தகராறு நம்மில் எவர் மூலமாவது சமாதான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு உங்களோடு அமர்ந்திருக்கிறேன்''.

அமெரிக்க செய்தி ஊடகங்கள், புஷ் நிர்வாகத்திற்குப் பின் நாடே ஒன்றுபட்டு நிற்கிறது என்ற ஓர் காட்சியை உருவாக்க உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. எனவே அமெரிக்க நடிகர் பென்னின் ஈராக் பயணத்தைப் பற்றிய விபரங்களை அவை தரவில்லை.

டிசம்பர் 15-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது உங்களது விஜயத்தின் மூலம் உங்களுக்கு தேசபக்தி குறைவாக இருக்கிறது என்ற குற்றச் சாட்டிற்கு இலக்காக மாட்டீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த பென், அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறும் எவருடனும் விவாதம் நடத்த தான் தயாராக இருப்பதாகக் கோடிட்டுக்காட்டினார்.

'ஈராக் மக்களின் சாதாரணமானவர்கள் தினசரி வாழ்வில் துன்பத்தில் உள்ளவர்கள் என் மீது அன்பு காட்டும் நிலை என்னைத் தொட்டுவிட்டது. என்னை வெகுவாகத் தொட்டுவிட்டது. இது போன்ற சூழ்நிலைகளில் புன்னகையின் வலிமையை நீங்கள் அறிவீர்கள் நான் கண்ட புன்னகைகள் அளப்பரியவை'' என பென் குறிப்பிட்டார். ஈராக் மண்ணில் இருந்த நேரத்தில் புஷ் நிர்வாகத்தைக் கண்டிக்க மறுத்துவிட்டார்.

''வாஷிங்டன் போஸ்ட்'' பத்திரிகையில் அக்டோபர் 19ந் தேதி பென் வெளியிட்ட விளம்பரத்தில், புஷ் நிர்வாகம் கொள்கைகள் குறித்து "விவாதம் நடத்துவதைச் சகித்துக் கொள்ளவில்லை,'' (நமக்கு ஆதரவாகவோ எதிராக விவாதம் நடத்துவதை சகித்துக் கொள்வதில்லை') விமர்சிப்பவர்களை ஓரங்கட்டி விடுகிறார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதன் மூலம் மீதி உணர்வை வளர்க்கிறார்கள். உடனடி ஆறுதல்தரும் ஊடகங்களை உருவாக்குகிறார்கள்" என்று அந்த விளம்பரத்தில் பென் குறிப்பிட்டிருக்கிறார். நேரடியாக புஷ்ஷிற்கு வேண்டுகோள் விடுத்தார்: ''நீங்கள் பயங்கரமும் வெட்கக்கேடுகளும் நிறைந்த பாரம்பரியத்தை விட்டுச் செல்லும் முன் அமெரிக்காவைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்." இறையாண்மை பெற்ற தனி நாட்டின் மீது வரலாறு காணாத அளவிற்கு முன் கூட்டிய திடீர்த்தாக்குதல்களை நடத்தி அமெரிக்க படைவீரர்களையும் அப்பாவி மக்களையும் பலியிடுவது மிகவும் தற்காலிகமான மருந்தாகவே இருக்கும்" என்று பென் வாதிட்டார்.

டிசம்பர் 10ந் தேதி, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நடிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினர் குழு ஒன்று ''போர் இன்றி வெல்வதற்கு கலைஞர்கள் ஐக்கியம்'' என்ற குழுவைத் தொடங்க செய்தியாளர் மாநாட்டை நடத்தியது. அக்குழு ஈராக்கில் அமெரிக்காவின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது. இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வகையில் புஷ் நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி பகிரங்கக் கடிதம் ஒன்றை அக்குழு வெளியிட்டிருந்தது.

அவர்களது கடிதம் மிகவும் பயந்த சுபாவத்துடன் வாசகங்களை வெளிட்டிருந்தது. ''சட்டப்பூர்வமான ராஜீய வழிகளில்'' ஈராக் ஆயுதக்குறைப்பு நடவடிக்கை எடுப்பதற்கு புஷ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. ''நாங்கள் தேசபக்தியுள்ள அமெரிக்கர்கள் சதாம் ஹூசேனிடம் மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்கள் இருக்க அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள். ஈராக் சரியாக ஆயுதக்குறைப்புச் செய்துள்ளதா என்பதை கடுமையான சோதனை மூலம் ஐ.நா ஆயுதங்கள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்துவதை ஆதரிக்கின்றோம்." அது மேலும் கூறியது: "என்றாலும், திடீரென ஈராக் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய போரில் மனிதர்களது துன்பங்கள் அதிகரிக்கும், நமது நாட்டின் மீது குரோதம் வளரும் பயங்கரவாதிகளது தாக்குதல்கள் அதிகரிக்கலாம், பொருளாதாரம் பாதிக்கப்படும் மற்றும் உலகில் நமது தார்மீக செல்வாக்கு சீர்குலையும்'' என்று அது தொடர்கிறது.

டிசம்பர் 10ந் தேதி நிருபர்களுக்கு மார்டின் ஷீன் (Martin Sheen), மைக் பேரல் (Mike Farrell), டோனி ஷால்ஹொப் (Tony Shalhoub) ஆகியோர் பேட்டியளித்தனர், "முன்கூட்டிய திடீர்த் தாக்குதல் நடத்துவது என்பது, ஒரு முன்மாதிரியை உருவாக்கிவிடும். அது எங்கே முடியும்? எங்கு அடுத்த முன் கூட்டிய திடீர்த்தாக்குதல் நடக்கும்?'' என்று ஷால்ஹொப் கேட்டார்.

இந்த பகிரங்க கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் அகாடமி விருதுகள் பெற்ற கிம் போசிங்கர் (Kim Basinger), ஹெலன் ஹன்ட் (Helen Hunt), ஒலிம்பியா டுகாக்கிஸ் (Olympia Dukakis), சூசான் சரண்டோன் (Susan Sarandon ) மற்றும் இயக்குனர் ஜோனாதன் டெம் (Jonathan Demme) ஆகியோர் அடங்குவர். எக்ஸ் பைல்ஸ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்களான கில்லியன் ஆண்டர்சன் (Gillian Anderson), டேவிட் டுச்சோவ்னி (David Duchovny), வெஸ்ட் விங் திரைப்பட நட்சத்திரங்கள் ஷீன், ஜேனல், மலோனி, பிராட்லி லிட்போர்டு லில்லி டாம்லின், சிஎஸ்ஐ: கிரைம்சீன் இன்வெஸ்டி கேஷன் திரைப்பட நட்சத்திரங்கள் மார்க் ஹெல்ஜென் பெர்ஜர், ரொபர்ட் டேவிட்ஹால், ஓசன் லெவன் நடிகர்கள் மாட்டமன், டான் சியேடில், எலியட் கெளல்ட், கால்ரெய்னர்

நடிகர்கள், ஜெர்ஸிகா லாங்கே, ஈத்தன் ஹாக், சாமுவேல் எல்.ஜாக்சன்,ஜேன் கஸ்மாரக் (Jane Kaczmarek), லாரன்ஸ் பிஷ்பர்ன், ஆல்பிரி உடார்ட், டேனி குளோவர், நோவா வைல், (Noah Wyle ) டீ லியோனி, இசைத்துறையினரான ஆர்.இ.எம். மைக்கேல் ஸ்டைப், பீட்டர்பக்,மைக் மில்ஸ், பானி ராயிட் (Bonnie Raitt), பீட்டர் யாரோ- ஆகியோர் இந்த பட்டியலில் தங்களின் பெயர்களை இணைத்திருந்தனர். அந்தக் கடிதத்தில் ஓய்வு பெற்ற அட்மிரல் யூஜின்கரோல் ஜூனியர் (admiral Eugene Carroll Jr), ஈராக்கின் முன்னாள் அமெரிக்க தூதர் எட்வர்ட் பெக் ஆகியோரும் கையெழுத்திட்டனர்

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழின் தகவல்படி, அந்த பகிரங்கக் கடிதம் கருத்தரங்கு ஒன்றில் உருவாயிற்று. அந்தக் கருத்தரங்கிற்கு, ஃபாரல் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் ரொபேர்ட் கிரீன் வால்ட் இருவரும் அக்டோபர் மாதம் ஏற்பாடு செய்தனர். குடியரசுக் கட்சிக்கு நிதி திரட்டும் ஸ்டேனிலி ஷியன்பாம் இல்லத்தில் நடந்த கருத்தரங்கில், ஐ.நா முன்னாள் தலைமை ஆயுதங்கள் ஆய்வாளர் ஸ்காட் ரிட்டர், நாட்டர் டாம் பல்கலைக்கழக சமாதான ஆய்வு பேராசிரியர் டேவிட் காட்ரைட், ஆகியோர் உட்பட உரையாற்றினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட 50 பேரில், வாரன் பீட்டி (Warren Beatty), அவரது மனைவி பெனிங் ஜனநாயகக்கட்சி அரசியல் வாதிகளான டாம் ஹேடன், கேரி ஹார்ட் ஆகியோரும் அடங்குவர்.

Top of page