World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ICFI பற்றியவை

Oppose Imperialist War & Colonialism!

ஏகாதிபத்திய யுத்தத்தையும், காலனி ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்!

Use this version to print | Send this link by email | Email the author

பகுதி 1 |பகுதி 2 |பகுதி 3 |பகுதி 4

ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சி

21. முதலாளித்துவத்தின் பிரமாண்டமான உலகளாவிய விரிவாக்கத்திற்கு அரசியல் அடித்தளத்தை வழங்கிய ஏகாதிபத்தியத்தின் போருக்குப் பிந்தைய சமநிலை உடைந்து நொருங்கி உள்ளது. பழைய சமநிலையைக் கொண்டிருந்த சகல இணைப்புப் பகுதிகளுக்கும் இடையிலான உறவுகள் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதால் இதனைச் சமாதான வழியில் திரும்பக் கொணர முடியாது. இது முதலாளித்துவ அரசுகளின் தனிப்பட்ட தலைவர்களின் அகநிலை விருப்பங்கள் பற்றிய பிரச்சனை அல்ல, மாறாக அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பொருளாதார சமூக முரண்பாடுகளின் புறநிலை விளைவுகளாகும்.

22. உலக ஏகாதிபத்தியத்தின் ஸ்திரமின்மைக்கு மத்தியில் அமெரிக்காவின் நெருக்கடி உள்ளது. முதலாளித்துவத்தின் கீழ் எதை எல்லாம் ஈட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சோவியத் அதிகாரத்துவம் அமெரிக்காவை புகழ்ந்தேற்றிக் கொண்டிருக்கும்போதே, இடம் பெறும் வரலாற்றின் விசித்திரமான திருவிளையாடல்களுள் ஒன்றாக அது இருக்கிறது. "சுதந்திர நிறுவனம்" முறையின் அனைத்து நிறுவனங்களையும் அழுகச் செய்யும் ஒரு சமூக நெருக்கடியினால் அமெரிக்கா பீடிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்குள் மூன்றாவது பிரமாண்டமான பொருளாதாரப் பின்னடைவானது, 1980களில் பேரளவிலான கடன்களின் அடிப்படையில் விஸ்தரிக்கப்பட்ட எண்ணற்ற வங்கிகளையும் கூட்டுத்தாபனங்களையும் சரித்து வீழ்த்த அச்சுறுத்திக் கொண்டுள்ளது. பழைய சீர்திருத்தவாத கைமருந்துகளான புதிய கொடுக்கல் வாங்கல்கள், புதிய எல்லைகள், மாபெரும் சமுதாயம் ஆகியன எல்லாம் மிகக் கடந்த காலத்துக்கு உரியனவாகிவிட்டன. எந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சமூகச் சட்டமும் இருபதாண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் இயற்றப்படவில்லை. பழைய சமூக வேலைத்திட்டங்களில் எஞ்சிக் கிடந்தவற்றை பிரமாண்டமான வரவு-செலவுத்திட்ட வெட்டுக்கள் அழித்துவிட்டன: குற்றங்கள் பற்றிய புள்ளி விபரங்கள் சமூக உறவுகளின் உயிராபத்தான அறிகுறிகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. விரைந்து வளரும் வேலையின்மை, வேலையில் இன்னும் உள்ளவர்களின் சம்பள வீழ்ச்சி, கல்வி, வீட்டு வசதி, மருத்துவ பராமரிப்பு போன்றவற்றின் நிலைமையும் பேரழிவுக்கு ஒன்றும் குறைந்ததல்ல. மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் நடைமுறையில் கல்வி அற்றவர்களாக உள்ளனர். வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் கூட சமூக நெருக்கடியின் தாக்குதலினால் அழிக்கப்பட்ட வாழ்க்கைகளின் 'பயங்கரக் கதைகளை': வீடற்ற மக்கள் காட்போட் பெட்டிக்குள் முடங்கிக் கிடத்தல், மருத்துவ காப்புறுதி இல்லை என்பதற்காக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டமை, வேலை அற்ற தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் தற்கொலை போன்றவற்றை-- தினசரி அறிவிக்காமல் இருக்க முடியாதுள்ளது. அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள் அதன் சமூக அமைப்புக்களது சீரழிவினையும், மக்கள் தொகையின் பரந்த அளவிலான தட்டினரின் வறுமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே வந்து விட்டனர் என்று, நன்கு பிரபலமான உண்மையை சாதாரணமாக அறிவிப்பதுபோல் ஒரு முன்னணி முதலாளித்துவப் பத்திரிகையின் நிருபர் குறிப்பிட்டிருந்தார். சமூக உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கு அமெரிக்க முதலாளி வர்க்கம் போலீசாரிலும் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள அதன் ஏஜெண்டுகளின் அளவற்ற துரோகத்திலும் தங்கியிருக்கும்படி தள்ளப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான போராட்டத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் நசுக்கி ஒடுக்குவதே அவர்களின் சமூக செயல்பாடாகும்.

23. மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியின், அதில் கருக்கொண்டிருக்கும் ஆழமான புரட்சிகர விளைபயன்களின் பின்னணியில் உலக ஆளுமையில் தனது அந்தஸ்தினைப் புதுப்பிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தள்ளப்பட்டுள்ளதானது, உலக அரசியலில் வெடித்துச் சிதறும் தனியொரு போக்கைக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சர்வதேசக் கொள்கையானது, ஐரோப்பிய, ஜப்பானிய போட்டியாளர்களின் செலவில் தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஓர் ஆண்டுக்கு சற்றுக்கூடிய காலத்துக்குள் புஷ் நிர்வாகம் இரண்டு தடவை - முதலில் பனாமாவுக்கு எதிராகவும் பின்னர் ஈராக்குக்கு எதிராகவும் யுத்தத்துக்குச் சென்றுள்ளது. இறுதி ஆய்வில் பார்க்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிகரித்த அசட்டுத் துணிச்சலும் போர் வெறியும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனது பொருளாதார வீழ்ச்சியைச் சீர்செய்யவும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் முயற்சிப்பதை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த இராணுவ பலத்தில் மட்டுமே அமெரிக்கா கேள்விக்கிடமில்லாத வகையில் ஆதிக்கத்தினை இன்னமும் பிரயோகிக்கின்றது. குவைத்தின் "விடுதலையை" காட்டிலும் அமெரிக்காவிற்குப் பெரிதும் முக்கியமானது, அமெரிக்க அழிக்கும் தன்மையை அனைத்துலகுக்கும் காட்ட ஒரு சந்தர்ப்பம் வழங்குவதே ஆகும். யுத்தத்தின் போது புஷ், பாரசீக வளைகுடா எண்ணெயில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் போட்டியாளர்கள் தங்கி உள்ளதைப் பகிரங்கமாக சுட்டிக் காட்டியதோடு, யுத்தம் அமெரிக்காவின் "தன்வயமாக்கலை" கூட்டி, "அமைதியான வர்த்தக உறவுகளுக்கு இட்டுச்செல்லும்" என சிபாரிசு செய்தார். உண்மையில் ஐரோப்பியர்கள் மற்றும் ஜப்பானியர்களிடமிருந்து அதிக சலுகைகளைப் பிடுங்கிக்கொள்ள இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடியும் என்ற கருத்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவினரிடையே செல்வாக்குப் பெற்றுள்ளது. யுத்தத்தின் முடிவில் ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகை "பலாத்காரம் கொள்கையின் ஒரு நியாயமான ஆயுதம், அது செயற்படுகின்றது" என பிரகடனம் செய்தது. மேல் அதிகாரத்தில் உள்ளவருக்கே வந்த செய்தி: "அமெரிக்காவினால் தலைமை வகிக்க முடியும், சந்தோஷக் கணைப்பை நிறுத்து, மேலும் துணிவாக சிந்தி, இப்பொழுதே தொடங்கு" என்றும் குறிப்பிட்டது.

24. புஷ்ஷின் பகட்டான "புதிய உலக ஒழுங்குமுறை" பற்றிய வாயளப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்கா உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களில் தனது ஆளுமை அந்தஸ்தினை மீண்டும் நிலைநாட்டுவதற்கு தேவையான சட்ட ரீதியான மூலவளங்கள் இல்லாதிருக்கிறது. யுத்தத்தின் செலவினங்களை நிதியீட்டம் செய்ய தனது கூட்டுக்களை பணத்துக்காக ஆட்டிப் படைத்தமையானது, அமெரிக்காவின் ராணுவப் பகட்டுகளுக்கும் அதன் நிதி வளங்களுக்கும் இடையேயான சமத்துவமின்மையை உலகின் கவனத்துக்கும் கொண்டு வந்தது. மேலும் நவீன தொழில் நுட்பத்திற்கு அடிப்படையான மேலாதார பண்டமான-செமிகண்டக்டருக்கான உலகச் சந்தையில் ஜப்பான் கொண்டிருக்கும் முன்னணி அந்தஸ்தினை திரும்பக் கைப்பற்றுவதைவிட, பாதுகாப்பற்ற பாக்தாத்தின்மேல் குண்டு வீசுவது அமெரிக்காவிற்கு சுலபமானது. ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையேயான உறவுகளில் ஒரு புதிய ஒழுங்கினை உண்டு பண்ணுவதற்கு மாறாக யுத்தம் பழைய மரணத்தினை மேலும் நிரூபித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரப் பலவீனங்கள் வெளிப்படையாகியதும் ஐரோப்பிய ஜப்பானிய முதலாளி வர்க்கங்கள் தமது சொந்த நலன்களை மிக மூர்க்கமாக வலியுறுத்துகின்றன. மத்திய கிழக்கில் தமது சொந்த மூலோபாய நலன்களைக் காக்கும் பொருட்டு குர்துகளின் நிலைமையை ஐரோப்பிய முதலாளி வர்க்கம் வெற்றிகரமாக சுரண்டிக்கொள்கின்றது என்பதை புஷ் நிர்வாகம் உணர்ந்து கொண்டதும், "பாலைவனப் புயலின்" வெற்றியினைத் தொடர்ந்து அமெரிக்க முதலாளி வர்க்கத்தின் வெற்றிக் கூச்சல்கள் திடீர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. பாரசீக வளைகுடாவிலும் ஈராக்கின் தெற்கு எல்லையிலும் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளை எதிர்கொள்வது போன்று ஐரோப்பியர்கள் தமது படைகளை வடஈராக்கிலும் நகர்த்தத் தொடங்கினர். ஐரோப்பிய ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவின் கைகளில் தமது தலைவிதியை விட்டுவைக்க எண்ணவில்லை, யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்கள், அமெரிக்கா இன்னமும் முன்னணிப் பாத்திரம் வகிக்கும் "நேட்டோ" அமைப்பில் இருந்து சுதந்திரமாக, தமது சொந்த "அதிரப்படைகளை" நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜேர்மன் ஆளும் வர்க்கம், 21-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அடைந்த ராணுவத் தோல்வியால் நிர்ணயம் செய்யப்படுவதை அங்கீகரிக்க முடியாது என்பதைத் தெளிவுப்படுத்தியது. குர்துகளுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் சாக்கில் ஜேர்மன் ராணுவம், ஹிட்லரின் வேர்மட் தோல்யின் பின்னர் முதல் தடவையாக ஐரோப்பாவுக்கு வெளியே தனது முதல் நடவடிக்கையை ஆரம்பித்தது. நோட்டோவுடன் ஜேர்மன் செயலதிபரான மான்பிரட் வோர்னர், பழைய பிஸ்மார்க்கின் "இரத்தமும் இரும்பும்" பேச்சினை நினைவூட்டி, "வாள் இல்லாமல் இராஜதந்திரம் மலடாகிப் போன சமயங்களும் உண்டு" எனப் பிரகடனம் செய்தார். அதே சமயம் ஜப்பானிய அரசாங்கம் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் முதன் முதலாக தனது படைகளை சொந்த எல்லைகளுக்கு அப்பால் நிறுத்தத் தொடங்கியது.

25. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவினைத் தொடர்ந்து சர்வதேச உறவுகளில் அந்த அளவுக்கு ஸ்திரத்தன்மை நிலவி வரவில்லை. உள்நாட்டு யுத்தத்தின்போது சர்வதேச ராஜதந்திரம் பெருக்கெடுத்த முன்கணித்த வழிகளை சம்பவங்கள் தாண்டிச்சென்றன. பழைய கூட்டுக்கள் உடைந்து செல்கின்றன: புதியவை இன்னமும் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. உலக மேலாளுமைக்கான சக்திவாய்ந்த 'டிரான்ஸ் நேஷ்னல்' கூட்டுத்தாபனங்களின் போராட்டமானது, பயங்கர பதட்டத்தில் இருந்து சர்வதேச விவகாரங்களுக்கு செல்கின்றது. அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் இடையேயான யுத்தத்தின் சாத்தியங்கள் ஏற்கனவே உலகப் பத்திரிகைகளின் பக்கங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசியல்வாதிகளின் தேசிய வெறிதொனிக்கும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதன் நோக்கம், ஜப்பான் தனது பிரமாண்டமான பொருளாதார பலத்தினையும் அமைப்புத் திறமைகளையும் பயன்படுத்தி அமெரிக்காவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு இராணுவ சக்தியை உண்டாக்கிக் கொள்வதற்கு முன்னதாகவே, அதனைத் தாக்குவதற்குச் சாதகமான ஒரு பொதுஜன அபிப்பிராயத்தைத் தயார் செய்வதற்காகவே ஆகும். ஆனால் இன்றைய சமயத்தில் இது எவ்வளவு தான் சாத்தியமாகத் தோன்றிடினும் பொருளாதார நலன்களின் மோதல்கள் முதலில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான ஒரு இராணுவ மோதலுக்கே இட்டுச் செல்லும் என முன்கணித்துக் கூறிவிட முடியாது. அமெரிக்காவிற்கும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையேயான ஒரு யுத்தமும் கூடச் சாத்தியமானதுதான். மேலும் எதிர்கால யுத்தம் ஐரோப்பிய அரசுகளைத் தம்மிடையே பிளவுபடுத்தி, வேறுபட்ட தடை முகாம்களில் நிற்க வைக்கவும் கூடும் என்ற சாத்தியத்தினையும் நீக்கிவிட முடியாது. ஜேர்மனியின் ஒன்றிணைப்பானது, ஐரோப்பியக் கண்டத்தில் பழைய சமபல நிலையை அடியோடு மாற்றி விட்டது. "நண்பர்களதும்" "எதிரிகளதும்" கூட்டுக்கள் இன்னமும் எதிர்பாராத வடிவத்தை எடுக்க உள்ளன. ஆனால் ஏகாதிபத்தியத்தின் நலன்களின் மோதல் தவிர்க்க முடியாத விதத்தில் ஒரு யுத்தத்துக்கு இட்டுச் செல்கின்றது. இன்றுள்ள தொழில் நுட்பங்களால் விளைவுகள் பயங்கரமாக இருக்குமாதலால் ஏகாதிபத்தியவாதிகள் அத்தகைய தீவிரமான பெறுபேறுகளை தவிர்த்துக் கொள்வார்கள் என எண்ணுவது ஆபத்தான அரசியல் தவறாகும். பேரழிவு பற்றிய அச்சமானது சர்வதேச உறவுகளின் நடத்தையில் சில செல்வாக்கை செலுத்துகின்றது என்பது உண்மைதான். உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்கள் புத்தி சுவாதீனமான வேளையில், மூன்றாம் உலக யுத்தம் மனித நாகரிகத்துக்கு சமாதி கட்டுவதாகும் என்பதை உண்மையில் உணரவே செய்வார்கள். ஆனால் வரலாற்று அனுபவம், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அகநிலைப் பயமோ அல்லது ஒழுக்கவியல் மனசாட்சியோ அல்லாமல், ஏகாதிபத்தியத்தின் புறநிலை முரண்பாடுகளே பிரச்சினைகளை தீர்மானம் செய்கின்றன என்பதை நிரூபிக்கின்றது. இன்னொரு உலக யுத்தத்தினைத் தடுக்கக்கூடிய உலகில் உள்ள ஒரே சக்தி புரட்சிகரத் தொழிலாள வர்க்கமே ஆகும்.

கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி

26. இறுதி ஆய்வுகளின்படி ஏகாதிபத்திய சமநிலையின் சரிவுக்குக் காரணமாக உள்ள அதே அடிப்படை முரண்பாடுகளே -உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையேயான முரண்பாடுகளே- அனைத்து ஸ்ராலினிச ஆட்சிகளின் வெடித்துச் சரிதல்களுக்கும் காரணமாகும். கான்கிரீட் மதிற்சுவர்களோ அல்லது அரசினால் திணிக்கப்பட்ட ஊடுருவ முடியாத வர்த்தகத் தடைகளோ, உலகச் சந்தையின் அழுத்தங்களுக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு தடுப்பு ஊசி ஏற்ற முடியவில்லை. ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவுக்கான பொறுப்பினை மார்க்சிசத்தின்மேல் போடும் முயற்சிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய தேசிய அரசுகளில் சோசலிசத்தைக் கட்டி எழுப்புவதாக ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் குறிப்பிட்ட முந்தைய கூற்றுக்களைப் போன்றே மோசடியானவை. புரட்சிகர வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதினின்று விலகி, உலகச் சந்தையில் இருந்தும், உலக உழைப்புப் பிரிவினையிலிருந்தும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளை செயற்கையாகத் தனிமைப்படுத்துவதானது, பின்தங்கிய தேசியப் பொருளாதாரங்களுக்கும் உலக ஏகாதிபத்தியத்துக்கும் இடையே விநோதமான விதிமுறைகளை நிலைநாட்டும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கையாலாகாத தனமான முயற்சியை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஸ்ராலினிச போக்கிரிகளின் குழப்பமூட்டும் வீண்பேச்சை நீக்கிவிட்டு, அவர்களின் தேசிய பொருளாதார வேலைத் திட்டத்தினை ஆராய்ந்தால், நிஜ சோசலிச நிர்மாணத்திற்கு உலகப் பொருளாதார அபிவிருத்தியை தொடக்கப் புள்ளியாகக் கொள்ளும் மார்க்சிசத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கையே அவர்களது கொள்கை என்பதைக் காட்டும். கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளின் சரிவும், சோவியத் ருஷ்யாவில் ஸ்ராலினிச ஆட்சியின் வெடிப்பும், 1924-ல் இருந்து டிராட்ஸ்கிச இயக்கம், மார்க்சிச விரோத பிற்போக்கு வேலைத்திட்டமான "தனி ஒரு நாட்டில் சோசலிசத்துக்கு" எதிராகத்தொடுத்து வந்த சளைக்காத போராட்டத்தை மிகவும் சக்தி வாய்ந்த முறையில் ஊர்ஜிதப்படுத்துகிறது.

27. கிழக்கு ஐரோப்பிய, சோவியத்யூனியன் சம்பவங்கள் உலக முதலாளித்துவத்தின் சமநிலையின்மையை உக்கிரமாக்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச முதலாளித்துவம் அளவிலா மகிழ்ச்சியடைந்தது. முதலாளித்துவம், தான் ஒரு பிரமாண்டமான வெற்றி கண்டுள்ளதாக நம்பியது. பொது நல மனோநிலையால் தூண்டப்பட்ட ஒரு கல்விமான் "வரலாற்றின் முடிவு வந்துவிட்டது" எனப் பிரகடனம் செய்தார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் வெற்றியை கற்பனை செய்வதைத் தவிர மனித இனத்துக்கு எதுவும் மிஞ்சவில்லை என்றார். இன்று மிகவும் எச்சரிக்கையான குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன, ஸ்ராலினிச ஆட்சிகள் விட்டுச் சென்றுள்ள அரசியல் பொருளாதார சீரழிவுகளை ஆய்வு செய்கையில் முதலாளித்துவ வர்க்கத்தில் உள்ள சிந்தனை மிகுந்த பிரிவினர், போருக்குப் பிந்தைய கிழக்கு ஐரோப்பா ஸ்ராலினிச ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது, உலக முதலாளித்துவத்தின் புனர்நிர்மாணத்திற்கு அது செய்துள்ள தீர்க்கமான பங்களிப்பினை நினைவுகூரத் தொடங்கியுள்ளனர், ஓட்டோமான். ஹப்ஸ்பேர்க் பேரரசுகளின் வீழ்ச்சியின் பின்னர் நீண்டகாலமாக அடக்கப்பட்டதும், தீர்வு காணப்படாததுமான தேசிய இன மோதல்கள் கிழக்கு ஐரோப்பாவையும் பால்கனையும் பற்றிப் படர்ந்துள்ளன. இவை சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் பழைய, இன்னமும் நச்சுத்தன்மை கொண்ட விஷத்தினை கக்கிக்கொண்டிருக்கின்றன.

28. பால்கன் பிராந்தியத்தில் இருந்து கிடைக்கும் சமகாலச் செய்திகள் -1930-ல் அல்லது 1910-ல் எழுதப்பட்டவை போன்று இருக்கின்றன. கொசோவாவின் தலைவிதியைப் பற்றிய போராட்டங்கள், சேர்பிய, குரோஷிய, சுலோவினிய, பொஸ்னியன் முஸ்லீம்களுக்கு இடையேயான மோதல்கள் பற்றியும், மசிடோனியரின் தேசிய அடையாளம் பற்றிய வரைவிலக்கணம் தொடர்பான தகராறுகள் பற்றிய அறிக்கைகளாலும் சர்வதேசப் பத்திரிகைகள் நிரம்பி வழிகின்றன. எல்லைத் தகராறுகள், தேசிய அரசுகளின் தேசிய இனக்கலப்பு பற்றிய மோதல்கள் ஒவ்வொன்றும் சர்வதேச ரீதியில் கூறுகூறாக வெடித்துச் சிதறும் (Ramification) அரசியல் தொடர் விளைவுகளை இயக்கும் சாத்தியக்கூறை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன, செக்குகளுக்கும் ஸ்லோவேனியர்களுக்கும் இடையிலான தகராறுகளை ஜேர்மனி, ஹங்கேரி, போலந்து மற்றும் உக்ரேனிய தேசியப் பிரச்சினைகளில் இருந்தும்கூட பிரித்துவிட முடியாது. ஹங்கேரியிலும் ருமேனியாவிலும் உள்ள தேசிய சிறுபான்மையினரின் அதிருப்தியானது, அவ்விரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. யூகோஸ்லாவியாவிற்குள் வெடித்துச் சிதறும் தகராறுகள் இன்றைய அல்பேனியா, ருமேனியா, கிரீஸ் எல்லைகளின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குரியதாக்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனுடைய தகராறுகள் பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் சதிகளில் தவிர்க்க முடியாத வகையில் சிக்க வைத்துவிடும், உள்ளூர்ப் போட்டிகள், பல்வேறு தேசியக் குழுக்களின் ஆரம்ப எதிர்பார்ப்புக்களைப் பொருட்படுத்தாமல், அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியவாதிகள் தமது சொந்த ஊடுருவலை விஸ்தரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

29. கிழக்கு ஐரோப்பிய நெருக்கடியானது, தேசிய அரசு முறையினை மற்றும் தேசிய சுயநிர்ணயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளின் சர்வதேச நெருக்கடியை தெளிவான முறையில் எடுத்துக்காட்டியுள்ளது. முதலாளித்துவத்தின்கீழ் இவற்றுக்கு உண்மையான ஜனநாயகத் தீர்வினை காண முடியாது. முற்றிலும் ஓரின மக்கட்தொகையினரை உள்ளடக்கி வைக்க தேசிய எல்லைகளைத் திரும்பி வரையும் எண்ணமானது, ஒரு மோசடியான பிற்போக்கு கோமாளித்தனமாகும். ஆனால் முதலாளித்துவம் செல்வம், மூலவளங்களின் அநீதியான பங்கீடு பற்றிய மக்களின் கவனத்தைத் திருப்ப, அவர்களை தேசிய இனத்தகராறுகள் போன்ற முட்டுச் சந்துக்குள் தள்ளிவிடுகின்றது. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தினைத் தடுக்கவும் வர்க்கப் போராட்டத்தின் வேகமான அபிவிருத்தியைத் தடுக்கவும், ஆளும் வர்க்கங்கள் ஏதோ ஒரு வகையான இனவாதத்தின் வீரர்களாக சேவை செய்ய ஆர்வம் காட்டும் குட்டி முதலாளித்துவ வாய்வீச்சுக்காரர்களை அமர்த்துகின்றது. அத்தகைய பிரச்சாரத்தின் வெற்றியானது, தேசியவாதத்தின் புத்திஜீவி மற்றும் ஒழுக்கநெறிப் பலத்தின் காரணமாக அமையவில்லை; மாறாக முதலாளித்துவ முறையின் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான வழியைக்காட்டாத, தொழிலாள வர்க்கத்தின் பாரம்பரிய இயக்கங்களின் அடிபணிவினால் உண்டான அரசியல் இடைவெளியினாலேயே அமைகின்றது.

30. நான்காம் அகிலமானது, தேசிய சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை எங்கெல்லாம் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைத் தூக்கி வீசவோ அல்லது எந்த ஒரு தேசிய இனக்குழுவின் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவோ முற்றிலும் நியாயமானதும் முற்போக்கு விருப்பத்தினை வெளிக்காட்டுகிறதோ அங்கெல்லாம் அதற்கு உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் ஆதரவளிக்கின்றது. ஆனால் நான்காம் அகிலம், உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் அனைத்து தேசிய இனங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்துவதன் மூலம் தனது ஜனநாயக வேலைத் திட்டத்தின் இந்த முக்கிய அம்சத்தினை நிறைவேற்ற முன் மொழிகிறது. இது தொழிலாள வர்க்கம். முதலாளித்துவ தேசியவாதத்தின் பிற்போக்கு வாய் வீச்சுக்காரர்களை ஒதுக்கித் தள்ளுவதையும், சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை சர்வதேச வர்க்க ஐக்கியத்தின் உலகளாவிய செய்தியுடன் முன்னெடுப்பதையும் குறிக்கிறது. இந்த வழியில் மட்டுமே தேசிய சுயநிர்ணயமானது, மனித இனத்தின் பொருளாதார, கலாச்சார அபிவிருத்தியில் எல்லா மக்களையும் சமாதான முறையில் ஐக்கியப்படுத்தும் ஒரு கருவியாக முடியும், 57 ஆண்டுகளுக்கு முன்னர் லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல்: "தேசியப் பிரச்சினை எங்கும் சமூகப் பிரச்சினையுடன் இணைந்துகொள்கிறது. உலகத் தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே பூகோளத்தின் அனைத்து தேசிய இனங்களுக்குமான உண்மையானதும் உறுதியானதுமான சுதந்திரத்தை உத்தரவாதம் செய்ய முடியும்".

தொடரும்......