World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்

An exchange: How should socialists approach the issue of stem cell research?

ஒரு கருத்து பரிமாற்றம்: சோசலிஸ்டுகள் எவ்வாறு பரம்பரைக் கல ஆராய்ச்சி பிரச்சனையை அணுக வேண்டும்?

25 August 2001

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்தில் பரம்பரைக் கல (Stem Cell) ஆய்வு வெளியீட்டுக் கட்டுரை குறித்தும் மற்றும் மனிதக் கருக்களிலிருந்து பரம்பரைக் கலங்களின் புதிய அணிகளை உருவாக்குவது சம்பந்தமான ஆய்வுக்கான நிதியை அண்மையில் புஷ்ஷின் நிர்வாகம் தடுத்தது குறித்தும் வந்த விமர்சனத்தைப் பற்றி பல வாசகர்கள் எழுதியுள்ளனர். பரம்பரைக் கல ஆய்வைப் பற்றியும் மற்றும் மரபுவழி பண்பியல் பொறியியல் (Genetic engineering) முறை குறித்தும் அக்கறை கொள்ளும் சோசலிஸ்ட் ஆதரவாளர்களிடமிருந்து வந்ததே இக் கடிதங்களில் பலவாகும். கீழே அவ்வாறு வந்துள்ள இரண்டு வாசகர்கள் கடிதங்களையும் அதற்கு பட்ரிக் மார்ட்டின் அளித்த பதில்களையும் பிரசுரிக்கின்றோம்.

அன்புள்ள ஆசிரியருக்கு,

14-08-2001-ல் வெளியான பட்ரிக் மார்ட்டின் உடைய (புஷ்ஷின் பரம்பரைக் கல முடிவு: மருத்துவ விஞ்ஞானத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல்) கட்டுரை பல முக்கிய கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு நல்ல சோசலிஸ்ட், ஜனாதிபதி புஷ்ஷின் முடிவில் ஒழிந்திருந்த தந்திரத்தை வெளிப்படுத்தவில்லை என்று நான் வியப்படைந்தேன். நான் இதை தவறாகப் புரியாமல் இருந்தால், இந்த ஒழுங்குக் கட்டுப்பாடு "அரசாங்க நிதிகளில் முதலீடு செய்யப்பெற்ற" அதாவது பொது நிறுவனங்களுக்கு மட்டுமே இதுவரை இந்த பரம்பரைக் கல ஆய்வைச் செய்ய பயன்படுவதோடு, இது "தனியார்துறை நிதிகளில் முதலீடு செய்யப்படும்" போது, பரம்பரைக் கல ஆய்வுகள் கட்டுப்பாடுகளை மீறுகிறது.

பரம்பரைக் கல ஆராய்ச்சிக்குரிய தனியார் தொழிற்துறை உரிமை பாதிக்கப்படுவதையிட்டு, புஷ்ஷிற்கு சில ஒழுக்கக் கட்டுப்பாடு எதுவுமே கிடையாது. இதனால் என்ன தெரிகின்றதென்றால் தனியார் தொழில் முனைவோர் பரம்பரைக் கல ஆய்வை பொறுத்தவரை புஷ்-க்கு தார்மீக அடிப்படையான கொள்கைப்படி "பரம்பரைக் கல சிகிச்சை" (Cures) கிடைக்க செய்வதே புஷ்ஷின் தீர்மானமாகும். இவ்வாறு அமெரிக்க அரசின் பணம் மூலம் செய்யப்படும் ஆய்வு மூலமாக சாதாரண பொது மக்களுக்கு சிகிச்சையும் மற்றவர்களுக்கு காப்புரிமையும் (பேடண்ட்) கிடைக்கும்.

எதிர்காலத்தில் பரம்பரைக் கல ஆய்வுக் குறைபாட்டை பற்றி அதிகமாக வருத்தப்படுவது, ஏதாவது ஒரு விடயத்தை திசை திருப்புவதாகும். இதைப்போல மேலும் பல ஆய்வுகள் நடத்தப்படுவதானது பொது மக்களின் நலன்களிலிருந்தல்ல மற்றும் நுகர்வோரினுடைய சிறந்த நலன்களிலிருந்தே.

இந்த நுகர்வோர்கள் மருந்து தயாரிக்கும் ஏகபோக தொழிலதிபர்கள் ஏற்கனவே மாத்திரைகளுக்கும் மற்றும் சர்வரோக நிவாரணி மருந்துகளுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். எதிர்காலத்தில் தனியார் துறையாக்கப்படும் காப்புரிமைக்கும் மற்றும் ஏகபோக "பரம்பரைக் கல சிகிச்சைகள்" விற்பனை சந்தைக்கு வரும்வரைக்கும் காத்திருக்கின்றார்கள்.

Q

14 August 2001.

பட்ரிக் மார்ட்டினின் பதில்:

உங்கள் கடிதத்தை மேலே நோக்கும்பொழுது, நீங்கள் இந்த பிரச்சனையை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என தோன்றுகின்றது. புஷ் அரசு, பரம்பரைக் கல ஆய்வுக்குப் பணம் தருவதை நிறுத்திவிட்டது எனக் கூறுகின்றீர்கள். உண்மையில் புஷ் இத்தகைய ஆய்வுக்கு எதிராளி அல்ல. ஆனால் தனியார் முதலாளிகள் ஆய்வு நடாத்தி மருந்துகளையும் சிகிச்சைகளையும் பரம்பரைக் கல மூலமாக கண்டுபிடித்து அவை லாபகரமாக்க வழி வகுக்கின்றார். புஷ்ஷின் பரம்பரைக் கல தொடர்பான முடிவு ஒரு பின்புற கதவினூடாக தனியார் மயமாக்கும் செயலாகும்.

வெள்ளை மாளிகை புதிதாக மனிதக் கருவிலிருந்து எடுத்த பரம்பரைக் கல ஆய்வுக்கு எங்கிருந்து பணம் வந்தாலும் அந்த ஆய்வை எதிர்க்கின்றது என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் தெளிவுப்படுத்திவிட்டனர். இத்தகைய ஆய்வை தடை செய்யக்கூடிய அமெரிக்க சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை. ஆகவே தனியார் ஆய்வு செய்து புதிய பரம்பரைக் கல அணிகளை கண்டுபிடிப்பதை தடை செய்வதற்கு ஜனாதிபதிக்கு சட்டபூர்வமாக அதிகாரம் இல்லை. அத்தகைய சட்டத்தை அமெரிக்க காங்கரஸ் நிறைவேற்றினால் புஷ் அதில் கையெழுத்திடுவார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றார்கள். ஆனால் தற்போது அது சாத்தியப்படாது. அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெருபான்மையான ஆதரவு பரம்பரைக் கல ஆய்வுக்கு புஷ் அளிக்கும் ஆதரவை விட அதிகமாகும்.

பரம்பரைக் கல ஆய்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு புதிய சிகிச்சைகளும் புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து தொழிலில் ஏகபோக லாபம் சம்பாதிக்க தனியார் மருத்துவ தொழிற்துறையே முயலும். இந்த விஷயத்தில் உங்கள் எச்சரிக்கை சரியானது. ஆனால் இதுமட்டும் புஷ் அரசின் இந்த பிரச்சனையின் அணுகுமுறையை தெளிவுபடுத்தவில்லை.

ஒரு சோசலிஸ்ட் ஆய்வு ஒரு முதலாளித்துவ அரசின் முடிவுகளை உடனடியான மாற்றி முதலாளிகள் பொருளாதார லாபம் பெற உதவும் என்று நம்புவது தவறு. இது மிகவும் சாதாரண, எளிய ஆய்வு. முதலாளித்துவ நாடுகளில் அரசு அமைப்புக்கும் பொருளாதார அஸ்திவாரத்திற்கும் உள்ள உறவு சிக்கலானதும் இயங்கியலானதும் ஆகும், இதில் உள்ளார்த தொடர்புகள் கொண்டதும், அரசியல் தத்துவமும் முரண்பாடான சமுதாய சக்திகளும் ஒன்றோடொன்று மோதுகின்ற போக்க்கானது பெரும் பாத்திரம் வகிக்கின்றது. இதை இயந்திரரீதியில் (மாறாநிலை வாதமாக) உருவகப்படுத்துவது அல்லது ஓர் டொலர் பண உடன்படிக்கையாளவிற்கு சிறுமைப்படுத்துவது மாக்சிசத்தினை ஒரு வக்கிரம் பிடித்த கேலிச்சித்திரமாக ஆக்குவதாகவே இருக்கும்.

அனைத்து முதலாளித்துவ அரசைப் போன்று புஷ் அரசும், லாப முறையையும் பணக்கார வர்க்கத்தினரின் சொத்தையும் ஆதரிக்கின்றது. அமெரிக்கா 2001-ல் சீரழிந்துபோனதும் வெட்கம் கெட்டதுமான அமெரிக்க அரசியலின் மூலம் இதை நிறைவேற்றுகின்றது. புஷ்ஷின் பரம்பரைக்கல ஆய்வு பற்றிய முடிவுவானது, ஐரோப்பிய மற்றும் ஆசிய முதலாளிகளின் இந்த ஆற்றல் மிக்க துறைக்கு நகர்ந்து நன்மைபெறப்போவது, அமெரிக்க மரபுவழி பண்பியல் நிறுவனங்களின் (The American genetic engineering companies) வருவாய் வெற்றி வாய்ப்பையும் மற்றும் அமெரிக்க பங்குமாற்று சந்தையான Wall Street யும் இந்த முடிவு பாதிக்கின்றது. புஷ் உம் மற்றும் அவருடைய அரசியலை கையாளுபவர்களும் அடிப்படைவாத கிறிஸ்தவ சக்திகளுக்கு ஆதரவை கொடுப்பதோடு, இவர்களே குடியரசுக் கட்சியின் நம்பத்தக்க சமூகத் தட்டாகவுமிருக்கின்றார்கள்.

அன்புள்ள ஆசிரியருக்கு,

நான் ஒரு சோசலிஸ்ட் ஆனால் பரம்பரைக் கல ஆய்வு பற்றிய உங்கள் கட்டுரை எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் புஷ்-ஐ தாக்குவதற்காக, ஆய்வை பற்றி விவாதிப்பதை தவிர்பதுபோலவே அது தோற்றமளிக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் மதவெறி, அறிவொளிகால விஞ்ஞானிகளின் இரண்டு பிரிவுகள் என்பவை எளிமையானவை மற்றும் மிகவும் பழையவை. மனிதக் கருக்களை திகைப்பூட்டும் மருத்துவத்தில் ஆய்வுக்காக பயன்படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை. நான் ஒரு மதவாதி அல்ல. ஆனால் இந்த ஆய்வு முதலாளித்துவத்தால் மனித வாழ்வை மேலும் சீர்குலைப்பதாக அமைகிறது. மனித அறிவை மேம்பாடு செய்து வளர்ப்பது நல்லதே. ஆனால் தற்கால விஞ்ஞானம் மனித இனத்தின் நன்மைக்காக முயற்சி செய்கிறது என்பது நம்பத்தகாததாக உள்ளது.

மருத்துவ அறிவை மேம்பாடு செய்வதற்காக ஒரே மனித இனப் பண்புள்ளவர்களாக மனிதர்களை ஆக்கும் நோக்கத்திற்கு, நான் எதுவித ஆதரவையும் கொடுக்கவில்லை. இப்போதுள்ள நிலை மிகவும் பரிதாபகரமானது. உலகத்தை எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய மருத்துவப் பிரச்சினைகள் வறுமை பற்றியது; பல ஆண்டுகளாக இவற்றிற்கு சிகிச்சைகள் உண்டு. இப்போதுள்ள பொருளாதார முறையினால் ஏழைகளுக்கு உணவளிக்க முடியாது. இன்றைய பரம்பரைக் கல ஆய்வு வசதி படைத்த ஐரோப்பியர்களின் வாழ்நாளை நீடிப்பதற்கே, அதாவது போப் ஆண்டவர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் ஆகியோருக்காகும்.

விஞ்ஞான உலகின் மற்றொரு இரட்டை வேடம் மரபுவழி பண்பியலை மாற்றியமைக்கும் உணவு (Genetically Modified Food). உலகத்தில் பசிப் பிணியை போக்குவதாக கூறிக்கொண்டு, இந்த ஆய்வு மனிதர்களையும், விலங்குகளையும் வர்த்தகப் பொருளாக மாற்றுகிறது. நான் விஞ்ஞானிகளையே குறை கூறுவேன், அவர்கள் பொய் கூறுகிறார்கள், குற்றவாளிகளாகவும் இருக்கிறார்கள். ஜனநாயக சோசலிச கட்டுப்பாட்டில் விஞ்ஞானம் அனைவரையுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தலாம். விஞ்ஞான ஆய்வுக்கு அதிகப்படியான பணம் தேவைப்படுவதால் இப்போது அது அந்நியப்படுத்தபடுவதாகவும், வர்த்தகப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

உங்களது புரட்சிக்காக,

AT

14 August 2001

பட்ரிக் மார்ட்டின் பதில்:

உங்கள் கடிதம் முதலாளித்துவத்தின் கீழ் மருத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் நெறி புரழ்ந்து தவறாக கணிப்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் நீங்கள் ஒரு பக்கச்சார்பான, ஒட்டுமொத்தமான முடிவுக்கு வருகிறீர்கள், குறிப்பாக நவீன விஞ்ஞானம் முதலாளித்துவத்தின் ஆதரவில் வளர்ச்சியடைந்து வருவதால், அதிலிருந்து நல்லது எதையும் எதிர்ப்பார்க்க முடியாது என்பது உங்கள் கூற்று, இக் கூற்றின் மூலம் சோசலிசத்தினுடைய வரலாற்று விதிகளை நீங்கள் உங்களை அறியாமலே மறுக்கிறீர்கள், கார்ல் மார்க்ஸ் விவரித்தவாறு, ஆங்கில அரசியல் பொருளாதாரத்தை உருவாக்கிய ஸ்மித், ரிகார்டோ, ஜேர்மனியின் மரபு தத்துவஞானிகளான Kant, Hegel, Feuerbach, பிரான்சில் சோசலிசத்தையும் புரட்சிகர கொள்கைகளை வகுத்தவர்களான Fourier, St.-Simon, ஆகியோரின் முதலாளித்துவ சிந்தனைகளையும், விஞ்ஞானத்தினதும் வெற்றியினை அடிப்படையாக கொண்டதே விஞ்ஞான பூர்வமான சோசலிசம் என்பதாகும்.

"மதவாத தீவிரவாதத்தின், அறிவொளிகால விஞ்ஞான இரட்டை வாதம் மிகவும் பழையது" என்ற கூற்றை நான் மறுக்கிறேன். யாருமே விஞ்ஞான அறிவிற்கு எதிரான மத மூட நம்பிக்கைகளை அழிப்பதற்கான போராட்டத்தை முக்கியமாக அமெரிக்காவில் நடந்த போரை குறை கூற முடியாது. இன்றும் கூட பல மாநிலங்களில் பரிணாம வளர்ச்சி (Evolution) பற்றிய போதனை அரை சட்ட பூர்வமாக உள்ளது, பள்ளி மற்றும் பொது நூல் நிலையங்களிலிருந்து "நீதி போதனையற்ற" ("Immoral") புத்தகங்களை ஒழித்துகட்ட கோரி காலத்துக்குக் காலம் (Periodic) போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் கருக்கலைப்பு குறித்து அரச மருத்துவர்கள் கூட பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமானது. பெரும்பான்மையான மக்கள் பறக்கும் தட்டுகளிலும் (UFOs), தேவதைகள் (Angels) மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், இத்தகைய ஓர் சமுதாயத்திலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்.

மேலும் இதுபோன்ற கூற்று அதிகரபூர்வமான பொதுமக்களின் கருத்து எனப்படுவதன் பிற்போக்கினால் கட்டுண்டுபோனதையே வெளிப்படுத்துகின்றது. "சோசலிஸ்ட்" வெர்மோ அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் பெர்னார்ட் ஸான்டர்ஸ் -ம் தீவிர வலது சாரி குடியரசு தலைவரான டாம் டீலே உம் பரம்பரைக் கல ஆய்வை எதிர்க்கின்றனர் என்பதை முன்னரே WSWS சுட்டிக்காட்டியது. இப்படிப்பட்ட ஒரு கூட்டு அசெளகரியமாக உங்களுக்கு காணப்படுகின்றது. எனவே நீங்கள் முன்கூட்டியே "மதவாத தீவிரவாதிகளுடனான" ஒருங்குபடலின் முக்கியத்துவத்தினை (கருத்து, விளைபயன்) ஆதரிக்கவில்லை.

"தற்போதைய விஞ்ஞானம் மனித குலத்தின் நன்மைக்காகவே" என்பதை நம்புவதற்கு கடினமாக இருப்பதை உங்களிடம் காணலாம். இது பற்றி திட்டவட்டமாக ஆராய்வோம்.

பெரிய தொழில் நிறுவனங்களின் பரிசோதனைக் கூடங்கள் லாபத்தை ஈட்டுவதே குறிக்கோளாக கொண்டுள்ளன என்பது உண்மையே. ஆனாலும் அவைகள் நவீன யுகத்தில் சில முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புக்களை உலகத்திற்கு வழங்கியுள்ளன. விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் ஒரு பெரிய தொழிலதிபர் ஆனார். மற்ற குழுக்களைப் போலவே விஞ்ஞானிகள் மத்தியிலும் பலதரப்பட்ட கொள்கைகள் இருக்கின்றன. பலர் உண்மையாகவே விஞ்ஞான அறிவை வளர்க்கவும் மனிதவள மேம்பாட்டுக்கும் பாடுபடுகின்றனர். இவை தனித்து அடையாளம் காணப்பட்டாமுடியாதாக, ஒன்றுக்கொன்று உள்ளார்ந்த பிணைப்புடையவையாக இருக்கின்றன. இதில் சுயநலம் அதிகமுள்ள விஞ்ஞானிகள் வாழ்க்கையில் வெற்றி பெறவில்லை. பலர் இவ்விரண்டு குழுக்களின் நடுவில் உள்ளனர். இதற்கு மாறாக, தீவிரமான உத்தரவாதமற்ற தோல்வி மனப்பான்மையுடைய மனித மனோபாவமற்ற நோக்கங்களுக்கு எல்லா விஞ்ஞானிகளும் ஒரே மாதிரி செயற்பட தூண்டுதலளிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பாய் குறிப்பிடமுடியும்.

பரம்பரைக் கல ஆய்வு குறித்து உங்கள் முக்கிய கருத்து பின்வருமாறு: "மனிதக் கருக்களை மருத்துவ ஆய்வுக்காக பயன்படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் நான் ஒரு மதவாதி அல்ல. இந்த ஆய்வுமுறை முதலாளித்துவத்தால் மனித வாழ்வு மேலு சீர்குலைப்படுவதற்கும் சுரண்னப்படுவதற்கும் வழி வகுக்கின்றது". நீங்கள் ஒரு மதவாதி அல்ல என குறிப்பிடுகிறீர்கள். ஆனால் உங்கள் மொழி நடையும் கருத்தும் கத்தோலிக்க சேர்ச்சையும் புரட்டஸ்டன்ட் மதவாத அடிப்படைவாதிகளையும் சார்ந்துள்ளது. இவர்கள் மனித உயிர்க்கருவை "மனித உயிர்" என்றும் கருக்கலைப்பையும் உறை நிலையிலுள்ள மனித கருவை அழிப்பதையும் குழந்தைக் கொலைகளாகவும் மற்றும் மனித கொலைகளாகவும் ஒப்பிடுகிறார்கள்.

வேறொரு சமூக பொருளாதார அமைப்பின் கீழ் மனிதக்கருக்கள் மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்துவதை நீங்கள் எதிர்ப்பீர்களா? இது குறித்து நீங்கள் சிந்தித்ததுண்டா? கருக்களை அழிப்பதனூடாக உற்பத்தி செய்யப்படும் பரம்பரைக் கல அணிகளின் பலனாக புற்று நோய்க்கு மருந்து, நீரழிவு நோய், மற்றும் பார்கின்ஸன்ஸ் நோய்க்கு மருந்துகளை உற்பத்தி செய்வதை நீங்கள் எதிர்க்கிறீர்களா? சோசலிச சமுதாயத்தில் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுக்கு அதிக சம்பளம் கொடுக்காமல் நடத்துவதை நீங்கள் எதிர்ப்பீர்களா? மேலே சொல்லப்பட்ட கேள்விகளுக்கு பதில் ஆம் என்றால், நீங்கள் பரம்பரைக் கல ஆராய்ச்சிக்கு எதிரான மத எதிர்ப்பாளர்களில் ஒருவராக உங்களை கருத வேண்டும். அப்படி இல்லையெனில், இதற்கு மாறாக கருதப்பட வேண்டும்.

அதாவது ஒரு சில டசின் கலங்களின் ஒருங்கிணைப்பாலான மனிதக்கருவானது, கடவுளால் தேவையான அளவு கொடுக்கப்பட்ட ஆத்மாவிலான ஒரு முழு மனிதன் என்பதை நீரழிவு நோயினால் அல்லலுறும் ஒரு குழந்தைக்கோ அல்லது வயதான Alzheimer நோயினால் பாதிக்கப்பட்டவருக்கோ பொருத்தி கூறும் விநோதமான சமய கருத்துருவை நீங்கள் நிராகரிக்கின்றீர்கள் என்று கருதுவோம். இந்நிலையில் எப்படி பரம்பரைக்கல "ஆய்வுமுறை முதலாளித்துவத்தால் மனித வாழ்வு மேலும் சீர்குலைப்படுவதற்கும் சுரண்டப்படுவதற்கும் வழிவகுக்கின்றது"?... முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் அனைத்து மனித நடவடிக்கைகளும் இலாபமடையும் நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இன்றைய உலகத்தில் விவசாயம், தொழில் உற்பத்தி, விஞ்ஞானம் மற்றும் பண்பாடு, நாகரிகம் எல்லாமே வியாபார கண்ணோட்டத்துடனேயே பயன்படுத்தப்படுகின்றது. சோசலிசத்தில் இத்தகைய செயல்கள் தொடரும். ஆனால், இவை இலாப அமைப்பின் பிடியிலிருந்தும் அத்துடன் கூடவே அழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தும் மத மூட நம்பிக்கைகளிலிருந்தும் கூட விடுவிக்கப்படுவதன் காரணமாக முன்னொருபோதும் இல்லாதவாறு மிகச் சிறப்பாக அபிவிருத்தியடையும்.

இங்கே நாம் உங்களுடைய முன்னோக்கிலுள்ள அடிப்படை பிரச்சனைகளைப் பார்ப்போம்: அது "பிசாசு மற்றும் அதனுடைய அனைத்து வேலைகளும்" என்பதை கைவிடும் கத்தோலிக்கத்தின் கொள்கை மாற்றம் போலவே ஒரு வக்கிரமானதும் மேலோட்டமானதுமான தீவிரவாத (Radicalism) நோக்குநிலையிலிருந்து முதலாளித்துவத்தினை நிராகரிப்பதாக இருக்கின்றது. நீங்கள் முதலாளித்துவத்துடன் விஞ்ஞானத்தை இனங்கண்டு முதலாளித்துவம் சோசலிசத்திற்கான சாத்தியத்தை வழங்குவதை நிராகரிக்கின்றீர்கள் அல்லது குறைந்தது உங்களுடைய கற்பனையும் விஞ்ஞான வெறுப்பும் காணப்படுகின்றது.

முதலாளித்துவத்தின் கீழ் விஞ்ஞானம் "அனைத்தையும் முதலாளித்துவப் பண்ட உறவாய் கீழ்ப்படுத்துவதற்கும் மற்றும் அந்நியப்படுத்துவதற்குமான ஒரு ஆயுதம்" என்று கூறுகிறீர்கள். அப்படியானால், முதலாளித்துவத்தின் கீழ் ஆங்கில மொழி அனைத்தையும் முதலாளித்துவப் பண்ட உறவாய் கீழ்ப்படுத்துவதற்கும் மற்றும் அந்நியப்படுவதற்குமான ஒரு ஆயுதம் என்று ஒருவர் சமமாக நியாயப்படுத்தி கூறலாமா அல்லது ஆங்கிலம், உலகின் மேல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் கலாச்சாரத்தை திணிக்கிறது என்று சொல்லலாமா? அப்படியானால் நாம் ஆங்கிலத்தை புறக்கணிக்கலாமா? ஷேக்ஸ்பியர் (Shakespeare), பைரன் (Byron), ட்ரீஸர் (Drieper) முதலிய ஆங்கில கவிகளை மறந்துவிட்டு, இனிமேல் எதிர்காலத்தில் Esperanto ஸ்பானிய மொழியை உபயோகப்படுத்த முடியுமா?

மனிதகுலத்தை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய மருத்துவ பிரச்சனைகள் வறுமைக்கும் சமுதாய அநீதிக்கும் சம்பந்தப்பட்டவையே அன்றி விஞ்ஞான அறிவு பற்றாக்குறையினால் அல்ல என்பது மிகவும் தர்கவியலான உண்மையாகும். ஆனால், இன்றைய "பரம்பரைக் கல ஆய்வு வசதி படைத்த ஐரோப்பியர்களின் வாழ்நாளை நீடிப்பதற்கே, அதாவது போப் ஆண்டவர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன் முதலியோருக்காகும்" என்று இதிலிருந்து நீங்கள் முடிவுக்கு வருவது சரியானதல்ல.

ஆய்வுகளின் தரவுகளிற்கு புறம்பான வகையில், நீரிழிவு மற்றும் Parkinson நோயினால் ஒப்பிட்டு மதிப்பிடமுடியாத வகையில் ஏழைகள் மற்றும் குறிப்பிட்ட சிறிய எண்ணிக்கையானவர்கள் தான் பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்பது போன்றவை மோசமான பிற்போக்கு வாதங்களாகும். இதன் அடிப்படையில் 19, 20 நூற்றாண்டுகளின் ஒவ்வொரு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் ஒருவர் நிராகரிக்கலாம். மின்சக்தி, டெலிபோன், விமானம், கார், கம்பியூட்டர் எல்லாமே முதலில் ஒரு சில வசதிபடைத்த உயர்தட்டினரால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. இன்றும்கூட மனிதக்குலத்தில் பாதி மக்கள் டெலிபோனை உபயோகப்படுத்தவில்லை. ஆகவே டெலிபோனை நாம் "பணக்கார ஐரோப்பியர்களின்" தொலைத்தொடர்பு சாதனமாக கருத வேண்டுமா? இந்த வாதம் தவறானது. இது மிகவும் எளிமைபடுத்தப்பட்டும் மென்மையாக்கப்பட்டும் இருக்கின்றது. இது வெறுப்பு மனப்பான்மையையும் மேலும் சகிப்புத்தன்மையற்ற மனப்பான்மையையும் காட்டுகிறது.

நீங்கள் உங்கள் கடிதத்தை "உங்களது புரட்சிக்காக" என்று முடிக்கிறீர்கள். எனது பார்வையின்படி, இந்த மகத்தான புரட்சிகரப் போராட்டத்தால் மட்டுமே விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தினது மிகப்பெரும் சாதனைகள் அனைத்தையும் மனிதகுலம் சுவீகரித்துக்கொள்ள முடியும். சோசலிசம் என்பது ஓர் இளமைக் கவர்ச்சி விம்பமோ அல்லது ஒரு தொகை தீவிரவாத சுலோகங்களோ அல்ல. இதுவே மனிதகுலத்திற்கு ஓர் முற்போக்கான எதிர்காலத்தை அளிக்க வல்ல ஒரே ஒரு வரலாற்று முன்னோக்காகும். அதாவது இது மனித வளங்களை ஒரு அற்ப சலுகை படைத்த சிறுபான்மையினரது இலாப நலன்களுக்காக கீழ்ப்படுத்தியிருக்கும் ஒரு சமூக அமைப்பின் பிடியிலிருந்து மனிதகுலத்தை ஓர் உண்மையான விடுதலைக்கு இட்டுச்செல்வதாகும். மனித குலத்தில் பெரும்பான்மையாயுள்ள தொழிலாள வர்க்கத்தினது சுயாதீனமானதும் சுய-நனவடையதுமான ஓர் இயக்கத்தினால் மட்டுமே இது ஸ்தாபிக்கப்படமுடியும். மேலும் இது, பூர்சுவா கலாச்சாரத்தினதும் மற்றும் பூர்சுவா விஞ்ஞானத்தினதும் மகத்தான பெறுபேறுகள் உள்ளடங்கலாக, மனிதகுலத்தின் முழுமையான கலாச்சார பாரம்பரியங்களிலில், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அரசியல் கல்வியூட்டப்படுவதை வேண்டிநிற்கின்றது.