World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா

றிutவீஸீs ரீணீs ணீttணீநீளீ வீஸீ விஷீsநீஷீஷ்tலீமீ ஷீutநீஷீனீமீ ஷீயீ ஸிussவீணீs தீணீக்ஷீதீணீக்ஷீவீநீ ஷ்ணீக்ஷீ வீஸீ சிலீமீநீலீஸீஹ்ணீ

மொஸ்கோவில் புட்டினின் வாயு தாக்குதல்- செச்சேனியா மீதான ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தின் விளைவு

By the Editorial Board
29 October 2002

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத்தளமானது மொஸ்கோ இசை நாடக அரங்கின் மீதான ரஷ்ய இரகசிய பொலிசின் விஷேட பிரிவினர் நடாத்திய தாக்குதலை கண்டனம் செய்கின்றது. விஷ வாயுவை பிரயோகித்த இந்த மோசமான தாக்குதல் மூலம், விலாடிமிர் புட்டினின் அரசாங்கமானது வழமையாக செச்சேனிய மக்கள் மீது நடாத்தும் எவ்வித சிந்தனையுமற்ற கொலையை, ரஷ்ய பணயக்கைதிகளுக்கும் செச்சேனிய பணயம் வைத்தவர்களுக்கும் மேலும் பிரயோகித்ததன் மூலம் ரஷ்ய தலைநகருக்கு கொண்டுவந்துள்ளது.

புட்டின் கடந்த சனிக்கிழமை நிகழ்தது தொடர்பாக இரகசியத்தை பரப்பி மற்றும் செய்தி ஸ்தாபனங்களுக்கு மறைத்தபோதிலும், நூற்றுக்கு மேற்பட்ட பணயக்கைதிகள் விஷேட பாதுகாப்பு படை, நாடக அரங்கினுள் புகுவதற்கு பாவிக்கப்பட்ட விஷவாயுவால் கொல்லப்பட்டனர் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. ஒருவர் மட்டுமே சூட்டுக்காயத்தால் இறந்துள்ளதுடன், இது பணயம் வைத்தவர்களாலா அல்லது பொலிசாராலா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சோசலிஸ்டுக்கள் என்றவகையில் நாங்கள் 800 அப்பாவி மக்களை பணயமாக பிடித்த செச்சேனிய பிரிவினை வாதிகளின் வழிமுறையை மாற்றமேதுமின்றி எதிர்க்கின்றோம். இந்த இறுதி துன்பகரமான நிகழ்வானது பயங்கரவாத முறைகளுக்கு அடித்தளமான அரசியல் ரீதியாக வங்குரோத்தினதும், அடிப்படையாக எதிர்ப்புரட்சிகரமானதுமான முன்னோக்கையும் கோடிட்டு காட்டுகின்றது. ஆனால், ரஷ்ய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொலைகாரத்தனமான நடவடிக்கைகளை பணயம் வைத்தவர்களின் நடவடிக்கையால் நியாயப்படுத்தமுடியாது.

புட்டின் பணயக்கைதிகளை பாதுகாப்பதற்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் மறுத்துவிட்டார். அவரது முக்கிய நோக்கமாக இருந்தது என்னவெனில், மூர்க்கத்தனமானதும் பயங்கரமானதுமான நடவடிக்கையால் செச்சேனிய மக்களை பயமுறுத்துவதுமட்டுமல்லாது ரஷ்ய முழுவதும் அதிகரித்துவரும் யுத்த எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிராக அரசாங்கத்தின் பலத்தை எடுத்துக்காட்டுவதாகும். இவ்வாறு செய்வதன் ஊடாக அவரது அரசாங்கமானது தனது சொந்த மக்களுக்கு எதிராக முற்றுமுழுதான மூர்க்கத்தனத்தையும் அவமதிப்பையும் எடுத்துக்காட்டியுள்ளது.

53 பணய வாதிகளில் 50பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் அதிகமானோர், பெண் அங்கத்தவர்கள் உட்பட பிரயோகிக்கப்பட்ட வாயுவால் மயங்கி இருக்கைகளில் எதிர்ப்பின்றி இருக்கையில் கொல்லப்பட்டனர். Moskowski Komsomolez பத்திரிகைக்கு விஷேட படைப்பிரிவின் அங்கத்தவர் ஒருவர் ''எமது விஷேட படையினர் பயங்கரவாதிகளின் கழுத்தில் அல்லது தலையில் சுட்டுக்கொன்றனர்'' என தெரிவித்தார்.

இந்நடவடிக்கை தொடர்பான சகலவிதமான உத்தியோகபூர்வமான அறிக்கைகளுக்கும் மத்தியில் இவ்விவாதமானது விமர்சனத்துடன் ஆராயவேண்டிய ஒன்றாகின்றது.

முதலாவதாக, தற்கொலைத் தாக்குதலாளியை அவரது நோக்கமான தன்னைத்தானே வெடிக்க வைப்பதை வாயுவை பிரயோகித்ததன் மூலம் தடுத்திருக்க முடிந்திருக்காது. சாட்சிகளின் அறிக்கையின்படி, வாயு பிரயோகிக்கப்பட்டதை ஒரு சில பணயவாதிகள் அவதானித்து தமது முகமூடிகளை அணியமுற்பட்டனர்.

ஒரு பணயக்கைதி தனது கைத்தொலைபேசியினால் வெளியே உள்ளவர்களுடன் தொடர்புகொண்டு, கட்டிடத்தினுள் வாயு பிரயோகிக்கப்பட்டது தொடர்பாக கூறியுள்ளார். தற்கொலைத் தாக்குதலாளிகளுக்கு தமது குண்டை வெடிக்க வைப்பதற்கு ஒரு சில வினாடிகள் கட்டாயமாக கிடைத்திருக்கும். இது அவர்கள் உண்மையான வெடிகுண்டுக்கு பதிலாக போலியான குண்டுகளை வைத்திருந்திருக்கலாம் என்ற ஐயுறவை உருவாக்குகின்றது. சில பத்திரிகைகள் இப்படித்தான் இருந்திருக்காலாம் என குறிப்பிட்டிருந்தன.

இரண்டாவதாக, பாரியளவு வாயுவை சுவாசித்த பின்னர், பணயம் வைத்தவர்கள் எவ்வித ஆபத்தையும் கொண்டிருந்திருக்க முடியாது. அவர்கள் சுலபமாக நிராயுதபாணியாக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான நிலைமைகளுக்குள் விஷேட படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு கொலையை ஒத்தாகும்.

எவ்வகை வாயு பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் பல பணயக்கைதிகளின் உயிரையும் மற்றும் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் உள்ள பலருக்கு வைத்தியமளிக்க முக்கியமாக இருந்திருக்கும் என மருத்துவர்களால் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் அரசாங்கம் எவ்வகை வாயு இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதற்கு இன்னும் மறுத்துவருகின்றது. சில ஆய்வாளர்கள், சர்வதேச சட்டத்தினால் தடை செய்யப்பட்ட நரம்பு மண்டலத்தை தாக்கும் வாயு விஷேட படையினரால் பயன்படுத்தப்பட்டதை ஒத்துக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை எனக்குறிப்பிட்டனர்.

பிரயோகிக்கப்பட்ட வாயுக்களில், அமெரிக்காவால் 1960களில் உருவாக்கப்பட்ட 48 மணித்தியாலம் ஸ்தம்பிதமடைய செய்யக்கூடிய இரசாயன நஞ்சான 3BZ உள்ளடங்கலாம். இன்னொரு சாத்தியப்பாடு சரீன்(Sarin) வகைப்பட்ட வாயுவாகும். இரண்டுவகையும் சர்வதேச உடன்படிக்கைகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களில் அடங்குவதுடன், இவ்வுடன்படிக்கையில் ரஷ்யா 1997 இல் கையைழுத்திட்டும் உள்ளது.

மறுக்கமுடியாதது என்னவெனில், ரஷ்ய அரசாங்கம் தனது சொந்த மக்களின்மேல் நஞ்சு வாயுவை பாவித்துள்ளது என்பதுதான். இது ஈராக்கின் சதாம் ஹூசேனின் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினதும் மற்றைய அரசாங்கங்களினதும் முக்கிய குற்றச்சாட்டும், பாரசீகவளைகுடா நாட்டின் மீதான வாஷிங்டனின் படையெடுப்பினை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது. இந்த கசப்பானதும் கவலையானதுமான சாகஸமானது புஷ் நிர்வாகத்தாலும் முக்கியமாக செய்திதுறையினராலும் அமைதியாக விடப்பட்டது ஆச்சரியப்படக்கூடியதல்ல.

ரஷ்ய அரசாங்கத்தால் தனது மக்கள் மீது வெளிப்படுத்தப்பட்ட கவனமின்மையானது இந்த பணயக்கைதிகளின் நாடகத்துடன் முடியப்போவதில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து, மொஸ்கோவின் வைத்தியசாலைகளுக்கு வெளிப்புறத்தில் நம்பிக்கையற்ற மக்கள் பாரியளவில் கூடிநிற்கின்றனர். பொலிஸ் மற்றும் இராணுவத்தின் நடவடிக்கையின் இரண்டு நாட்களுக்கு பின்னர், அவர்களுக்கு தமது அன்புக்குரியவர்கள் உயிருடன் உள்ளார்களா இல்லையா என்பது தெரியாதுள்ளது. அரசாங்கம் தப்பியவர்களை பார்ப்பதற்கு மறுப்பதுடன், மிகவும் அடிப்படையான தகவல்களை கூட வழங்க மறுக்கின்றது.

ரஷ்யாவும் செச்சேனியாவும்

மொஸ்கோவின் பணயம் வைத்தவர்களின் மீதான மூர்க்கமான நடவடிக்கை மூலமாக, சோவியத் யூனியனின் கலைப்பின் பின்னர் ரஷ்ய அரசாங்கமானது கிளர்ந்து எழும் சிறுபான்மையினருக்கு எதிராக ஒவ்வொரு அரசாங்கமும் நடாத்திய நடவடிக்கைகளையே புட்டினும் தொடருகின்றார். 1994 இற்கும் 1996 இற்கும் இடையில் ரஷ்யாவின் தலைவரான பொறிஸ் ஜெல்சின் சிறிய கவுகாஸஸ் குடியரசிலுள்ள பிரிவினைவாத போக்குகளுக்கு எதிராக செச்சேனியா மீது இரக்கமற்ற யுத்தத்தை நடாத்தினார். புட்டினின் பதவியேற்பும் செச்சேனியா மீது நடாத்தப்பட்ட இரண்டாவது யுத்தத்துடன் தொடர்புபட்டது.

ஒருதொடர் நெருக்கடிக்களுக்கும், ஊழல்களுக்கும் பின்னர், 1999 ஆகஸ்டில் முன்பின் தெரிந்திராத முன்னாள் பாதுகாப்புதுறை போராளியான புட்டினை அரசாங்கத்தின் தலைவராக ஜெல்சின் நியமித்ததுடன், இது பின்னர் புட்டின் ஜெல்சினின் ஜனாதிபதி பதவியை எடுத்துக்கொள்ளவதற்கும் வழியமைத்தது. இதனைத்தொடர்ந்து மொஸ்கோவிலும் ஏனைய நகரங்களிலும் குடியிருப்பு மாடிக்கட்டிடங்கள் மீது குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதற்கு காரணமானோர் சரியாக அடையாளம் காணப்படாதபோதும், இரகசிய படையினரான FSB இதற்கு பின்னணியில் இருந்திருக்கலாம் என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. புட்டின் இந்த குண்டுத்தாக்குதல்களை செச்சேனியா மீதான முற்றுமுழுதான இராணுவ தாக்குதல் தயாரிப்பிற்கான சாட்டாக பாவித்துக்கொண்டார். பெரிய ரஷ்ய இனவாதத்திற்கு அழைப்புவிட்ட வண்ணம் செச்சேனியர்கள் மீது தாக்குதலை மூர்க்கமாக நடாத்தியதுடன், ''எதிரிகளை கழிவறையில் இட்டு தண்ணீரால் அடியுங்கள்'' என்பது அவரின் முக்கிய சுலோகமாக இருந்ததுடன், இதன் மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது.

செச்சேனியா மீதான தனது சர்வாதிகாரத்தை முழு பயங்கரவாத்தின் அடித்தளத்திலையே ரஷ்ய இராணுவம் நிறுவிக்கொண்டது. 1994 இருந்து ஆகக்குறைந்தது 80,000 பேர் இறந்துள்ளனர். தலைநகரான குரொஸ்னி உட்பட சகல முக்கிய நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கு வாழ்ந்தவர்கள் தொடர்ச்சியான வீட்டுசோதனைகள், கடத்தல்கள், கொலைகள், கற்பழிப்புக்கள் மற்றம் பணத்திற்கான கடத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். சாதாரண வாழ்க்கை என்பது சாத்தியமற்றதானது.

இது அதிதீவிர பிரிவினைவாதிகளின் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. சோவியத் யூனியன் துண்டுகளாக உடைகையில் இஸ்லாம் செச்சேனியாவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கவில்லை. தற்போதைய செச்சேனிய படையினர் பலர் சோவியத் யூனியனின் பல்கலைக்கழகங்களில் கல்விகற்றதுடன், சோவியத் இராணுவத்தில் தமது உத்தியோகத்தை தொடர்ந்தனர். இவர்கள் மொஸ்கோவின் யுத்தத்தை அடுத்தே இஸ்லாமை நோக்கி திரும்பினர். மொஸ்கோவின் பணய நாடகத்தின் தலைவனான மொஸ்வார் சோவியத் யூனியனில் போக்குவரத்து பொலிசாக கடைமையாற்றிய பிரிவினைவாத தலைவரான அபி பராஜேவின் பெறாமகனாவார்.

இக்குழுவால் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத முறையானது பிற்போக்கானதும், எதிர்ப் புரட்சிகரமானதுமாகும் மட்டுமல்லாது ஆதரிக்கப்படவோ அல்லது பாதுகாக்கப்படவோ முடியாததாகும். இறுதி ஆய்வுகளில், அவர்களின் முறையின் தீவிரமானதும், பயங்கரமானதுமான தன்மையின் மத்தியிலும் அப்படியான அமைப்புக்கள் ரஷ்ய அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை குறைத்து ஒரு உடன்பாட்டுக்கு வரும் ஒரு முன்னோக்கால் வழிநடாத்தப்படுகின்றனர். ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் அக்கறையின்மையை எடுத்துக்காட்டுவது ஒடுக்கப்பட்ட ரஷ்ய மக்களின் ஆதரவை வென்றுகொள்ள இயலாமையையும், அக்கறையின்மையையுமே எடுத்துக்காட்டுகின்றது.

எவ்வாறிருந்தபோதிலும், மொஸ்கோவின் துன்பகரமான நிகழ்வுகளுக்கான முக்கிய பொறுப்பு புட்டினும் ரஷ்யாவின் ஆளும்தட்டினருமாகும். பணயக்கைதிகளை பிடிப்பதோ அல்லது அதுபோன்ற நடவடிக்கைகளோ அரசாங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாதத்தினை வடிவத்தை நீண்டகாலத்திற்கு முன் எடுத்துள்ள யுத்தத்தின் தவிர்க்கமுடியாத விளைவாகும். பணயம்வைத்தவர்களில் பலர் தமது 20வது வயதை அடையமுன்னரே மரணத்தை சந்தித்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்கள் யுத்தத்தையும், வன்முறையையும், மரணத்தையும், ஒடுக்குமுறையையும் தவிர வேறொன்றையும் கண்டிருக்கவில்லை.

அவர்களினது முறையின் பிற்போக்கான தன்மையினதும், அவர்களினது இனவாத முன்னோக்கினது பிற்போக்குத்தன்மையினதும் மத்தியிலும் அவர்களின் அடிப்படை கோரிக்கையான செச்சேனியாவிலிருந்து ரஷ்ய படைகளை வாபஸ் வாங்கு என்பது முற்றும் நியாயமானதே. இக்கோரிக்கையானது ரஷ்யாவினுள்ளும் அதிகரித்துவரும் ஆதரவை பெறுகின்றது.

பணயக்கைதிகளை பிடிப்பதற்கு முந்திய கருத்துகணிப்பீடுகளின்படி, 40% ஆன ரஷ்யர்களே செச்சேனியா மீதான யுத்தத்திற்கு ஆதரவாக உள்ளனர். மூன்று வருடத்திற்கு முன்னர் இது 80% ஆக இருந்தது. பணய நாடகத்தின்போது அவ்வரங்கத்தின் முன் திரண்ட பணயக்கைதிகளின் நூற்றுக்கணக்கான உறவினர்கள் செச்சேனியாவில் சமாதானத்திற்காக அழைப்புவிட்டனர். கிரெம்ளினின் முன்னர் சமாதான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றது.

புட்டினால் இக்கோரிக்கைக்கு விட்டுக்கொடுக்க முடியவில்லை. செச்சேனியா மீதான யுத்தமானது இரண்டு காரணங்களால் அவரது அரசாங்கத்தை தொடர்வதற்கு மிகவும் முக்கியமானதாகவும் உள்நாட்டுரீதியில், இந்த யுத்தமானது ஒடுக்குமுறையான ஒரு அரச அமைப்பை கட்டுவதற்கு ஒரு காரணமாக பயன்படுத்தப்பட்டது. நாட்டினை உடைவிற்கு இட்டுச்செல்லும் தாங்கிக்கொள்ள முடியாத சமூக நிலைமைகளை தீர்க்கமுடியாது இருப்பதால், புட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும், பாதுகாப்பையும் பாதுகாப்பதற்கான ஒன்றாக ''பயங்கரவாதத்தை'' முன்வைக்கின்றார். ஜனாதிபதி பதவியை ஏற்றதில் இருந்து இரகசியபடையினருக்கும், பொலிசாருக்கும், இராணுவத்திற்குமான அதிகாரங்கள் பாரியளவு அதிகரித்துள்ளது. செய்தித்துறையானது கடுமையான தணிக்கைக்கும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவரப்பட்டுள்ளது.

புட்டினின் மூர்க்கமான ஆளும்முறைகளானது சோவியத் யூனியனது கலைப்பின் பின்னர் உருவாகிய புதிய சமூகத்தட்டினரது தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. முன்னாள் ஆளும் தட்டினரிடமிருந்தும் மாபியா பிரிவினரிடம் இருந்து அணிதிரட்டப்பட்ட இச்சமூக பிரிவானது கொள்ளைக்கார முறைகளில் நாட்டின் சொத்துக்களையும் தொழிற்துறையையும் கொள்ளையடிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட சிறிய சமாதான காலப்பகுதியில் ஒரு நாடானாது இவ்வாறான வகையில் ஒருபோதும் அழிவுகரமான சமூக சீரழிவிற்கு உள்ளாகவில்லை. இச்சமூகத்தட்டானது ஜனநாயகம் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்கின்றது என்பதை ஜெல்சின் 1993 இல் நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமான பாராளுமன்றத்தை டாங்கிகளால் குண்டுவீசி தாக்க உத்தரவிட்டதில் தெளிவாக்கினார்.

வெளிநாட்டுக்கொள்கையை பொறுத்தவரையில், செச்சேனியா மீதான புட்டினின் நடவடிக்கைகளானது ரஷ்ய ஆளும் தட்டினது பாரிய அதிகார நோக்கத்தை அடைவதை நோக்கமாக கொண்டதாகும். கவுகாஸஸ் குடியரசு மீதான கட்டுப்பாட்டு இழப்பானது, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை தீர்க்ககரமாக பலவீனமடையச்செய்கின்றது. ஏனெனில் இப்பிரதேசமானது பாரிய எண்ணெய் வளங்களை கொண்டிருப்பதுடன், ஏனைய எண்ணெய் மற்றும் நிலவாயு வளங்களுக்கு அண்மையான மூலோபாயமான நிலையில் இருப்பதுமாகும்.

வாஷிங்டனிதும், இலண்டனினதும், பாரிசினதும் பேர்லினதும் துன்மார்க்கமான கூட்டு

ரஷ்ய அரசாங்கத்தினது மூர்க்கமான நடவடிக்கையானது வாஷிங்டனாலும், இலண்டனாலும், பாரிசாலும் பேர்லினாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விஷேட படையினரது வாயுத்தாக்குதலுக்கு முன்னர், கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி புஷ், புட்டினுக்கு தொலைபேசியில் அமெரிக்கா ''சகல ஆதரவையும், உதவியையும்'' வழங்குவதாக குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கான மொஸ்கோவின் தூதுவரான Aleksander Vershbov, பணயக்கைதிளை விடுவிப்பதில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் ரஷ்ய படையினருடன் இணைந்து இயங்குவதாக குறிப்பிட்டார். Aleksander Vershbov ஒரு கிரெம்ளினின் உள்மட்டத்திலான உயர் அதிகாரிபோல் இயங்குவதாக ஜேர்மனியின் பத்திரிகை ஒன்று குறிப்பிட்டது.

பிரித்தானிய பிரதமரான ரொனி பிளேயர், பிரான்சு ஜனாதிபதியான ஜக் சிராக், ஜேர்மனி பிரதமரான ஹெகார்ட் ஷ்ரோடர் போன்றவர்கள் இப்பணயக்கைதிகளின் பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவந்ததற்காக புட்டினிற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜேர்மனியின் வெளிநாட்டு அமைச்சரான ஜொஸ்கா பிஸ்ஸர் பாரிய உயிரிழப்பிற்கு பணயம்வைத்தவர்களை தவிர வேறு ஒருவரும் காரணமல்ல எனக்குறிப்பிட்டார். அவர் ''மீண்டும் ஒரு தடவை சர்வதேச பயங்கரவாதத்திற்கு அப்பாவி மக்கள் பலியானது தொடர்பாக தான் அதிர்ச்சியடைந்ததாகவும்'' குறிப்பிட்டார்.

மொஸ்கோவின் துன்பகரமான நிகழ்வுகளுக்கான பொறுப்பில் மேற்கின் அரசாங்கங்கள் முக்கிய பங்கை கொண்டுள்ளன. ஆரம்பத்தில் செச்சேனியா மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஒரு தற்காலிக சர்வதேச எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனால் இது 2001 செப்டம்பர் 11ஆம் திகதி தாக்குதலுக்கு பின்னர் இல்லாதுபோனது. அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் மீதான யுத்தத்திற்கு புட்டினின் ஆதரவிற்று பிரதியீடாக செச்சேனியாவில் முழுக்கட்டுப்பாடும் வழங்கப்பட்டது. மனித உரிமைகளை பாதுகாக்க கோரும் சாதுவான அழைப்புகள் கூட இல்லாதுபோனது. செச்சேனிய மக்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதலை ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கான'' சட்டபூர்வமான பங்களிப்பாக வாஷிங்டன் கருதுகின்றது. மொஸ்கோவின் அழித்தொழிக்கும் கொள்கை மீது முன்னாள் விமர்சனத்தை முன்வைத்த ஜேர்மன் பிரமரான ஹெகார்ட் ஷ்ரோடர் செச்சேனியா தொடர்பாக தற்போது ''மிகவும் வித்தியாசமான நிலைப்பாட்டை'' கொண்டுள்ளார்.

அண்மைய நெருக்கடி தொடர்பாக வாஷிங்டனுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான ஒற்றுமையானது இதுவரையிலான ஈராக் தொடர்பான ரஷ்யாவின் கொள்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. பணயக்கைதிகள் நாடகத்தை இரத்தம்தோய்ந்த முறையில் முடிப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவிற்கு பதிலாக பாக்தாத் மீது அமெரிக்கா யுத்தத்திற்கு செல்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ரஷ்யா ஆதரவளிக்கலாம்.

''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' என்பது ஏகாதிபத்திய சக்திகளின் அரசாங்கங்களால், மற்றைய நாடுகளுக்கு எதிராகவும், தமது எல்லைகளுக்குள் உள்ள சிறுபான்மையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் எதிரான மூர்க்கமான ஆத்திரமூட்டலை நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாடாக பிரயோகிப்பது அதிகரித்தளவில் தெளிவாகின்றது.

Top of page