World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese Communist Party to declare itself open to the capitalist elite

சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ செல்வந்தத் தட்டுக்கு கதவு திறக்க தானே அறிவிப்பு

By John Chan
13 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 8 லிருந்து பெய்ஜிங்கில் கூடி வரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) 16வது தேசிய காங்கிரஸ் சீன முதலாளித்துவ தட்டிற்கு கட்சி உறுப்பாண்மையை சம்பிரதாயபூர்வமாகத் திறப்பதற்கு முன்வைக்கிறது. நவம்பர் 14ல் காங்கிரஸ் முடிவுறுமுன், சீனா முழுவதிலும் இருந்து வந்துள்ள அதன் 2,114 பேராளர்கள் 200 உறுப்பினர்கள் கொண்ட புதிய மத்திய குழுவை, 21 உறுப்பினர்கள் கொண்ட அரசியற் குழுவை மற்றும் எல்லா வகையிலும் அதிகாரம் கொண்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட அரசியற்குழு நிலைக்குழுவை தேர்ந்தெடுப்பர். இது சீன மக்களை, தடை செய்யப்படா முதலாளித்துவ சுரண்டலுக்கு எஞ்சியுள்ள சில தடைகளையும் அகற்றுவதற்கு பொறுப்புடையதாக இருக்கும்.

நவம்பர் 7 அன்று, கட்சித் தலைமைக்கு பின்னால் வரவிருக்கும், உதவி ஜனாதிபதி ஹூஜிண்டாவோ தலைமையிலான 236 உறுப்பினர் குழு --தற்போதைய பொதுச் செயலாளர் ஜியாங் ஜெமினின் தத்துவமான "மூன்று சுட்டிக்காட்டல்கள்" காங்கிரசில் விவாதிக்கக் கூடிய கருத்தாக இருக்கும் என அறிவித்தனர். ஜியாங்கின் தத்துவம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் யாப்பில் தனியார் வர்த்தகர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆவதையும் அரசாங்கத்தில் சேவை செய்வதையும் உத்தியோக ரீதியாய் தடுக்கும் பிரிவை ரத்துச் செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றது.

அப்பிரிவை அகற்றுதல் சீ.க.கட்சியின் அரசியல் யாப்பை கட்சியின் யதார்த்தத்துடனும் அது சந்தை சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கு தயார்ப்படுத்தும் வகையில் கட்சியின் பண்பு மற்றும் சமூக சேர்க்கை இவற்றின் யதார்த்தத்துடன் பொருந்தும் வகையில் கொண்டு வரும் நோக்கம் கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கான பொருத்தம் இல்லாத தொடக்க உரையில், ஜியாங் புதிய சீன செல்வந்தத் தட்டின் வர்க்க நலன்களைப்பற்றி தெளிவாகப் பேசினார். முதலாளித்துவ சந்தைக்கு சீனாவை திறந்துவிடுவதை பெய்ஜிங் ஆட்சி பேணுவதற்கும் அழைத்தார் மற்றும் வர்த்தகர்கள் மற்றும் சொத்துடைமையாளர்களின் "சட்டரீதியான உரிமைகள் மற்றும் நலன்களை" சீ.க.க பாதுகாக்க வேண்டும் என்று அறிவித்தார். அவரது பேச்சு பலத்த கைதட்டல்களைப் பெற்றது.

வர்த்தகத் தட்டினருக்கு சீ.க.கவின் சம்பிரதாயபூர்வமான திறப்பு ஒரு திருப்புமுனையைப் பிரிதிநிதித்துவம் செய்கின்றன. இருப்பினும், சீன ஸ்ராலினிசத்தின் நோக்கு நிலை ஜியாங்கின் அறிவிப்புக்களுக்கு நீண்டகாலத்திற்கு முன்னரே தோன்றியது. 1930-ன் ஆரம்பத்திலேயே, மாவோ சேதுங், மார்க்சிசத்தின் சர்வதேச சோசலிச முன்னோக்கை நிராகரித்தார் மற்றும் "நான்கு வர்க்கங்களின் கூட்டை" --சீன முதலாளித்துவ செல்வந்தத்தட்டின் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு ஆட்சியை-- ஏற்படுத்துவது சீ.க.கவின் நோக்கமாக இருக்கும் என்று அறிவித்தார். மாவோவின் பின்வந்தவரான டெங் க்சியாவோ பிங், 1979ல் முதலாளித்துவ சந்தைக்கு சீனாவைத் திறந்தார் மற்றும் ஹாங்காங் மற்றும் தாய்வானில் உள்ள புலம் பெயர்ந்த சீன முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து முதலீட்டை செயலூக்கத்துடன் நாடினார்.

ஏற்கனவே தோன்றியிருந்ததை ஜியாங்கின் தத்துவம் நெறிமுறை ஆக்குகிறது என்ற உண்மை இந்த ஆண்டின் போர்ப்ஸ் இதழின் (Forbes magazine) சீனாவின் 100 செல்வம்மிக்க கோடீசுவரர்கள் பட்டியலால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. கால் பகுதியினர் அவர்கள் சீ.க.க உறுப்பினர்கள் என அறிவித்தனர். தனியார் நிறுவனங்களின் அல்லது நாடுகடந்த நிறுவனங்களின் பெரும்பாலான சீன தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட கட்சி தொடர்புகளை வைத்திருக்கின்றனர். எடுத்துக் காட்டாக, ஜியாங்கின் மூத்த மகன் அரசுக்குச் சொந்தமான முன்னாள் செய்தித் தொடர்பு நடவடிக்கை நிறுவனத்தைப் பிரித்து ஏற்படுத்தப்பட்ட, தனியார் நலன்களுக்கு விற்கப்பட்ட, நாட்டின் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான, சீனா.நெட் கொம் நிறுவனத்திற்கு தலைமை வகிக்கிறார். 1990களின் பொழுது, தனியார் மூலதன வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்த லட்சக்கணக்கான அரசுடைமை நிறுவனங்கள் திவாலாக்கப்பட்டன அல்லது தனியார்மயமாக்கப்பட்டன.

காங்கிரஸ் தொடக்க நாள் அன்று வாஷிங்டன் போஸ்ட் பின்வருமாறு குறித்தது: "அதன் வளர்ச்சி-சார்பு கொள்கையுடன், சுதந்திர தொழிற்சங்கங்களைத் தடை செய்தும் சுற்றுச்சூழல் தரங்களைத் தாழ்த்தியும், (சீ.க.க) அரசாங்கமானது பணம் சம்பாதிப்பதற்காக பொருளாதாரத் தட்டினருக்கான சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது. ஒரு மேற்கத்திய தூதரின் வார்த்தைகளில், சீனாவின் பொருளாதார வேலைத் திட்டம், 'அமெரிக்க குடியரசுக் கட்சியின் கனவை' ஒத்திருக்கிறது என்று கூறும் விதத்தில் செல்வந்தர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அந்த அளவு சாதகமாகி இருந்தது."

நியூயோர்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் ஜோசப் கான், நவம்பர் 10 அன்று கூறினார்: "20 ஆண்டு மாற்றத்திற்குப் பின்னர், உலகின் கடைசி பிரதான இடதுசாரி சர்வாதிகாரம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தன்னைத்தானே மாற்றிக் கொண்டுள்ளது. வாதத்துக்கு எடுத்துக் கொண்டால், அது இப்பொழுது, உலகின் கடைசி பெரும் வலது-சாரி சர்வாதிகாரம்" ஆகும்.

கட்சியின் சுதந்திர சந்தை நிகழ்ச்சி நிரலில் இருந்து பலனடைந்திருக்கும் "பொருளாதார செல்வந்தத்தட்டின்" கட்சி என்று தன்னைத்தானே வெளிப்படையாக அறிவித்துக்கொள்வதன் மூலம், சீ.க.க ஆனது அதன் தொடர்ந்த ஆட்சிக்கான ஒரு நம்பிக்கைக்குரிய ஆதரவுத் தளத்தை திடப்படுத்திக் கொள்ள நம்பிக்கை கொண்டிருக்கிறது. சீனாவின் கிராமப்புற விவசாயி மற்றும் தொழில்துறை தொழிலாள வர்க்கம் மத்தியில், உத்தியோக ரீதியிலான ஊழல், வறுமை, சேவைகள் இழப்பு, வேலையின்மை மற்றும் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளி மீதாக கொதித்துக் குமுறும் குரோதம் எழும்பிக் கொண்டிருக்கிறது.

மனித உரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஹாங்காங் மையத்தின்படி, அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைக்கு எதிராக கடந்த ஆண்டு 2,00,000 ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றதாக மதிப்பிடப்படுகிறது. காங்கிரஸ் கூடுகையிலும் கூட, வடகிழக்கு சீனாவில் உள்ள கதவடைப்பு செய்யப்பட்டுள்ள 1000 இரும்பு எஃகு மற்றும் துணி ஆலைத் தொழிலாளர்கள் வடகிழக்கு லயோனிங் மாகாணத்தின் தலைநகரான, லியாவோயாங்கில் வேலையின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர், அதேவேளை (சாராய) வடிப்பு ஆலைத் தொழிலாளர்கள் ஜிலின் மாகாணத்தில், ச்சாங்ச்சுன்னில், கம்பெனி நிலம் அரசு அதிகாரிகளுக்கு முறையற்ற விற்பனையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எந்த புறநிலையான அளவீடும், சீனா முழுவதிலும் உள்ள வர்க்கப் பதட்டங்கள், 1989 ஜூலை 4 அன்று, பெய்ஜிங்கின் தியனென்மன் சதுக்கத்தில், கொடூரமாக நசுக்கப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இட்டுச்சென்ற மாதங்களில் இடம்பெற்றதை விடவும் மிதமிஞ்சியதாய் இருக்கிறது. உத்தியோகரீதியிலான சீன சமூக விஞ்ஞானக் கழகத்திற்கான முன்னணி பொருளியலாளர் ஹு அங்காங், "மிகவும் கடுமையான எச்சரிக்கை: பொருளாதார முன்னேற்றத்திற்குப் பின்னால் சமூக அமைதியின்மை" எனத் தலைப்பிடப்பட்ட ஆய்வில், "சீனா பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு போன்ற கட்டுப்படுத்த முடியாத நெருக்கடியின் முன்பொழுதில்" இருந்தது என்று ஆகஸ்டில் எச்சரித்தார்.

நகர்ப்புற வேலையின்மையின் உண்மையான வீதம் 10 சதவீதம் என்று மதிப்பிடப்படுகிறது மற்றும் அது 15 சதவீதமாக உயரும் என கணிக்கப்படுகிறது. உத்தியோகரீதியான மதிப்பீட்டின்படி, 12 சதவீத அல்லது 37 மில்லியன் மக்கள் "நகர்ப்புற ஏழைகள்" வகையினத்திற்குக் கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டுப்புறத்தில் 150 மில்லியன் "உபரி" தொழிலாளர்கள் குறைந்த பட்ச உயிர் பிழைப்புக்கே வழிதேடும் நிலையில் இருக்கின்றனர் என மதிப்பிடப்படுகின்றது.

உலக வர்த்தக அமைப்பின் நுழைவு

அடுத்த 5 ஆண்டுகளாக, இந்த பதட்டங்கள் உலக வர்த்தக அமைப்புக்குள் அரசாங்கம் நுழைவின் விதிமுறைகளால் தேவைப்படும் தொலை நோக்குள்ள பொருளாதார மறுசீரமைப்பை அரசாங்கம் அமல்படுத்துகையில் திடீரென்று அதிகரிக்கும். முதலாளித்துவ செல்வந்தத்தட்டு உலக வர்த்தக அமைப்பை புதிய வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான வழிமுறைகளாகவும் சீன ஏற்றுமதிகளுக்கு மேற்கத்திய சந்தைகளுக்கு பெரும் வாய்ப்பாகவும் பார்க்கிறது. பத்து லட்ச ஏழை விவசாயிகளைப் பொறுத்தவரை, அதன் அர்த்தம் மலிவான விவசாய இறக்குமதிப் பொருட்களால் நிலத்தை விட்டு விரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகும். சீனாவின் முன்னர் பாதுகாக்கப்பட்ட சந்தைகளில் நுழைவதற்கு வெளிநாட்டுக் கம்பெனிகளை அனுமதிக்கின்றதால் நகர்ப்புறங்களில் மிகப் பல வேலைகள் அழிக்கப்படும்.

ஹாங்காங்கை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இதழான ஜெங் மிங் (Zeng Ming) -TM நவம்பரில் வெளியான அறிக்கையின்படி, சீன முதல்வர் ழு ரோங்ஜி, சீ.க.க உலக வர்த்தக அமைப்பின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுகையில் கீழ்மட்டத்திலிருந்து கடும் சவால்களை கட்சி எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது என்று, அக்டோபர் நடுப் பகுதியில் 4 நாட்கள் நடந்த அரச அவை சந்திப்பில் மூத்த அதிகாரிகளை எச்சரித்தார்.

ழு: பொருளாதார சூழ்நிலை மற்றும் சமூக முரண்பாடுகள் அதிகரித்த அளவில் கூர்மையானதாகவும் வெடிப்புள்ளதாகவும் இருக்கின்றன; கட்சியானது ஊழலைக் கட்டுப்படுத்தி இருக்கவில்லை; கதவடைக்கப்பட்ட மற்றும் வேலையற்ற பத்து லட்சக்கணக்கானோர் அரசாங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் கண்டிக்கின்றனர்; விவசாயிகள் கடும் சுமைகளை சுமக்கின்றனர் மற்றும் கிளர்ச்சி செய்ய விரும்புகின்றனர் இந்த மூன்று பிரதான பிரச்சினைகளும் நேரத்தே சரியான வகையில் தீர்க்கப்பட முடியாதெனில் அரசியல் நெருக்கடி எந்த நேரமும் வெடிக்க முடியும். இல்லையெனில், அது ஒரு சில மாநகர்களாக இருக்காது, மாறாக கம்யூனிஸ்ட் கட்சியை பதவி இறக்கக் கோரி தெருக்களில் ஆயிரக் கணக்கில் மற்றும் பத்துலட்சக் கணக்கில் அணிவகுப்பர்." என செய்தி அறிவித்தார்.

இந்த வாய்ப்பு வளம் "மூன்று சுட்டிக்காட்டல்கள்" -இன் வடிவாக்கத்தின் கீழே மற்றும் சீ.க.க காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளலில் இருக்கிறது. சீ.க.கவுக்குள் பல ஆண்டுகளாக நடைபெற்ற குழு (கன்னை) வாதங்களுக்குப் பின்னர், தியனென்மன் சம்பவங்களில் இருந்து படிப்பினை பெறப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதாவது ஆட்சியானது வெகு ஜனங்களுக்கு ஜனநாயக ரீதியான சலுகைகளை செய்யாத அதேவேளை. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ஒரு உறுதியான அடித்தளத்தைக் கட்டி எழுப்பியாக வேண்டும் என்பதாகும்.

அரசியல் நிறுவனத்தின் உணர்வு மீதாக கருத்துக் கூறுகையில், சீன சமூகவியலாளர் காங் க்சியாவோகுவாங் இந்த ஆண்டின் ஆரம்பத்தில், செல்வாக்குள்ள அரசு இதழான மூலோபாயம் மற்றும் மேலாண்மை (Strategy and Management) இல் எழுதுகையில்: "சீனாவின் அரசியல், பொருளாதார மற்றும் அறிவர் செல்வந்தத் தட்டுக்கு இடையில் நிலையான கூட்டு இருக்கிறது. முக்கியமான விளைபயன் செல்வந்தத் தட்டு அரசாங்கத்தை சவால் செய்யாது. பொருளாதார செல்வந்தத் தட்டு பணத்தை நேசிக்கும், ஜனநாயகத்தை அல்ல. கட்சியானது அவர்களுக்கு கட்சி உறுப்பாண்மை மற்றும் அரசாங்க பதவிகளில் இடம் வகிக்க உறுதி அளித்திருப்பதால் அதன் பகட்டும் கூட திருப்திப்படுத்தப்படும்." அரசாங்கம் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் எந்த தேசிய அமைப்பும் இல்லாமல் அல்லது ஒத்திசைவான வேலைத் திட்டமும் இல்லாமல், "சிதறிய மணல் போல்" வைத்திருப்பதன் மூலம் அவர்களின் எதிர்ப்பினை கடந்து வர முடியும் என நம்புகிறது என குறித்தார்.

தற்போதைய காங்கிரசில் புதிய கட்சித் தலைமை தேர்வு அத்தகைய தேர்வு முறையால் வழிகாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் வயது காரணமாக, 3 முக்கிய சீனத் தலைவர்கள் --பொதுச் செயலாளரும் தலைவருமான ஜியாங், தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் லி பெங் மற்றும் முதல்வர் ழு ஆகியோர்-- கட்டாயம் ஓய்வு பெறப் போகிறார்கள். தற்போதுள்ள 7 உறுப்பினர்களின் அரசியற்குழு நிலைக்குழுவில், உதவி ஜனாதிபதி ஹு ஜின்டாவோ அவரது அலுவலகப் பொறுப்பில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமையின் இறுதிச் சேர்க்கை என்வாக இருந்தாலும், குறிப்பிடப்பட்டிருக்கின்ற பெயர்கள், முடிவெடுத்தலிலும் இராணுவத்தின் மீதான தங்களின் ஆணையிலும் அவர்களின் செல்வாக்கை செலுத்த, குறைந்த பட்சம் வருகின்ற ஆண்டுகளுக்காகவாவது இப்போது இருக்கின்ற தலைவர்கள் தொடர்ந்து நீடிக்க விருப்பம் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.

மக்கள் அரசியல் கலந்தாலோசனைக் குழுவின் ஜனாதிபதி, லி ருய்குவான் தொடர்ந்து நீடிக்க தகுதியாக இருப்பினும், அரசியற்குழுவிலிருந்து ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக வதந்திகள் கட்டுக்கடங்காமல் எழுகின்றன. சீன ஸ்ராலினிசத்தின் மாக்கிய வெல்லி உலகத்தில், அவரது புறப்பாடு, அரசு மற்றும் இராணுவ உயர்நிலையுடன் ஆதரவற்ற நிலைக்கு அவர் வீழ்ச்சி அடைந்து விட்டார் என்று மட்டுமே அர்த்தப்படுத்த முடியும். பல ஆண்டுகளாக, அவர் சீ.க.கவின் சர்வாதிகாரத்தை பலவீனப்படுத்துவதை பகிரங்கமாக ஆதரித்திருக்கிறார் மற்றும் சீ.க.க அல்லாத அமைப்புக்கள் அமைக்கப்படுவதற்கு அனுமதித்தல் போன்ற அடையாள ஜனநாயக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலுக்கும் ஆதரவளித்து இருக்கிறார்.

டெங் க்சியாவோபிங்கின் இள மாணாக்கரும் சீ.க.க வின் சர்வாதிகாரத்துக்கு கடும் பாதுகாவலருமான ஹு ஜிண்டாவோ புதிய கட்சித் தலைமையாக ஆவதும் மற்றும் அவர், ஜியாங் பதவி இறங்கும்பொழுது, அடுத்த மார்ச்சில் சீனாவின் ஜனாதிபதியாகவும் கூட அறிவிக்கப்படுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நிலைக் குழுவில் புதிய முதல்வராகவும் பொருளாதாரக் கொள்கையின் பொறுப்பாளராகவும் வென் ஜியாபாவோ இருப்பார். இவர் சீனப் பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாய் கதவு திறந்து விடலுக்கும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலுக்கும் அர்ப்பணித்துக் கொண்ட ஆதரவாளராக சர்வதேச நிதி வட்டாரங்களில் நன்கறியப்பட்டவர் ஆவார்.

மற்றைய உறுப்பினர்கள் பெரும்பாலும் ஜியாங் அல்லது லி பெங்கிற்கு மிக நெருக்கமான அரசியல் சகாக்கள் ஆவர். நான்கு ஜியாங் சகாக்கள் பெயர்கள்: ஜியாங்கின் கீழே கட்சி எந்திரத்தின் தலைவராக இருந்த Zeng Qinghong, பெய்ஜிங்கில் கட்சித் தலைவரான Jia Qinglin, ஜியாங்கின் தளமான ஷாங்காயில் கட்சித் தலைவரான Huang Hu, உதவி முதல்வர் Wu Bangguo ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். லி பெங்கிற்கு, இராணுவத்திற்கு மற்றும் போலீசுக்கு நெருக்கமான நபரான லுவோ கான் கடைசி இடத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

"மூன்று சுட்டிக்காட்டல்கள்" மற்றும் இந்த தரகு தலைமை ஆகியன எப்படி சீன ஆட்சியானது உயிர் பிழைத்திருக்க நோக்கங்கொண்டிருக்கிறது என ஒரு தெளிவான முன் எதிர்பார்ப்பை வழங்குகின்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சியானது, மிகவும் வெளிப்படையாக அபிவிருத்தி அடைந்து வரும் சீன முதலாளித்துவ வர்க்கத்தின் கருவியாக தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்கிறது. சீன முதலாளித்துவ வர்க்கம் நாட்டின் மலிவான உழைப்பு மற்றும் இயற்கை வளங்களை சுரண்டலில் பெரும் நாடுகடந்த நிறுவனங்களின் இளைய பங்காளராக தொடர்ந்து இலாபம் சம்பாதிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறது.

Top of page