World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Corporate corruption and academia: The Bush-Harvard-Enron connection

கார்ப்பொரேட் நிறுவன ஊழலும் கல்வி நிறுவனமும்: புஷ் ஹார்வார்டு - என்றோன் தொடர்பு

By Joseph Kay
19 October 2002

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த பல வாரங்களாக வந்து கொண்டிருக்கும் செய்திகள், எந்த அளவு புஷ் நிர்வாகமும், கல்வி நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து அலையலையென தொடரும் லஞ்ச ஊழல்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டு சுட்டிக்காட்டும்.

ஹார்வார்ட் வாட்ச் என்பது இப்போதைய மாணவர்களும் பழைய மாணவர்களும் இணைந்த நிறுவனம். இதுவே அந்த பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கிறது. இது பல தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ஐவி லீக் பல்கலைக் கழகம் (Ivy League university) ஹார்க்கன் எண்ணெய் நிறுவனத்திற்கு, கடன்களை மறைத்தும் வருமானத்தை பொய்யாக உயர்த்தியும் காட்டி என்றோன் நிறுவன மாதிரியான ஊழல்களைச் செய்ய துணை போயிருக்கிறது என்பது தெரிகிறது. அந்த நேரத்தில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்தான் அந்தக் கம்பெனியின் இயக்குனர். ஹார்வார்ட் வாட்ச், தன் அறிக்கையில் ஹார்வார்ட் என்றோன், புஷ், கிளின்டன் நிர்வாகங்களின் அதிகாரிகளுக்குள்ள நெருக்கமான தொடர்பை பத்திரமிட்டுக் காட்டியுள்ளது.

ஹார்வார்டும் ஹார்க்கனும்

1986லேயே ஹார்வார்டுக்கும் ஹார்க்கனுக்கும் தொடர்பு உண்டு. இது அதன் இயக்குனர்கள் குழுவில் புஷ் பதவி ஏற்றதை அடுத்து குறுகிய காலத்தில் ஏற்பட்டது. புஷ்ஷின் சிறிய எண்ணெய் கம்பெனியான ஸ்பெக்ட்ரம் 7 பங்குகளை ஹார்க்கன் அதிக விலை கொடுத்து வாங்கிய பின்தான் புஷ், ஹார்க்கன் கம்பெனிக்கு வந்தார். புஷ் தொடர்பு இல்லையென்றால், வீழ்ந்து கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் 7 கம்பெனி வாங்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. அப்போது ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தை துணை ஜனாதிபதியாக இருந்தார். இளைய புஷ்க்கும் பல அரசியல் தொடர்புகள் இருந்தது.

இதில் ஒன்றுதான் அவருக்குள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழக தொடர்பு. அங்குதான் அவர் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். ஹார்க்கன், ஸ்பெக்ட்ரம் 7ஐ வாங்கிய பிறகுதான், ஹார்வார்டும், கோடீஸ்வரர், நிதி நிறுவனர் ஜோர்ஜ் சோரோஸ்-ம் சேர்ந்து அதில் தங்கள் பணத்தை கொட்டினார்கள். இதற்கு முன் இந்தக் கம்பெனி, பாஸ்டன் வங்கியிலும், பஸ்ட் சிட்டி வங்கி கார்ப்பிலும் வாங்கிய கடன்களை திரும்பக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. பஸ்ட் சிட்டி வங்கி கடன் திரும்பவும் தர இணங்கியது. அக்டோபர் 9ம் நாள் ேவால் ஸ்ரீட் பத்திரிகை யில் வெளிவந்த கட்டுரைப்படி ஹார்வார்ட் மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் அளித்த பண உதவிதான் இந்த கம்பெனி தலைதூக்க முக்கிய காரணமானது. இருபது பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பல்கலைக்கழக சொத்துக்களை ஹார்வார்ட் மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் தன் கட்டுக்குள் கொண்டுள்ளது.

ஹார்வார்ட் உடனடியாக ஹார்க்கனின் மூன்றில் ஒருபாக பங்குகளை, வாங்கியது. 1987 முதல் 2000 வரை பல்கலைக்கழக பிரதிநிதிகள் இந்தக் கம்பெனி நிர்வாகக் குழுவில், பதவி வகித்தனர். இவர்களுக்கு கம்பெனி நிர்வாக இழப்பீட்டுக் குழுக்களிலும் இடம் கிடைத்தது. பல்கலைக்கழக பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் ஹார்க்கன் கம்பெனிகள் 10,000 பங்குகள் சொந்தக்காரர்கள் ஆகும் அளவுக்கு அதிக முதலீடு செய்தனர்.

புஷ் இந்த கம்பெனியில் இருப்பதைத் தவிர ஹார்வார்டின் இந்த பெருமளவு முதலீட்டிற்கு வேறு விளக்கக் கூடிய காரணங்கள் இல்லை. ஹார்க்கனில் அவர் 1993ல் ரெக்ஸாஸ் கவர்னர் ஆகும் வரை அப்பதவியை வகித்தார். புஷ்ஷின் தொடர்பை தன் நிதி நிலை உயர வைத்துக்கொண்டாலும், ஹார்க்கன் ஒருபோதும் லாபம் ஈட்டும் செயலில் இல்லை. அடுத்து ஐந்து வருடங்கள் ஹார்வார்ட் மேனேஜ்மென்ட் கமிட்டி பல கடும் நெருக்கடிகளை முன்னுணர்ந்து அந்நெருக்கடிகளிலிருந்து ஹார்க்கனை மீட்க இருந்தது. ஹார்வார்ட் மேனேஜ்மென்ட் கமிட்டி அடுத்த நேரம் ரொபேர்ட் ஸ்டோனின் கட்டுக்குள் இருந்தது. அவர் எண்ணெய் வணிகர், குடியரசுக் கட்சியின், புஷ் அப்பாவின் ஆதரவாளர்.

கடுமையான நிதிநிலை நெருக்கடியிலிருந்து வெளியேற, ஹார்வார்டும் மற்றொரு பெரும் பங்குதாரரும் மே 1990ல் 46 மில்லியன் டாலர் கடன் கொடுத்தார்கள் என்று ஹார்வார்ட் வாட்ச் அறிக்கை கூறுகிறது. இதில் எவ்வளவு கடன் ஹார்வாடிலிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

டிசம்பர் 1990ல், ஹார்வார்டும், ஹார்க்கனும் கூட்டு சேர்ந்து கொண்டன. அதற்கு ஹார்க்கன் அனடார்க்கோ கூட்டு என்பது பெயர் அது கம்பெனியின் நிதிப் பளுவை மறைக்க உதவியது. இப்புதிய கட்டமைப்பு கொண்டிருப்பது 64.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் ஹார்வார்டால் தரப்பட்டதும் 26.1 மிலியன் மதிப்புள்ள குழாய்கள் அமைக்கும் செயல்கள் ஹார்க்கனால் தரப்பட்டதும் ஆகும். ஹார்க்கன் 20 மில்லியன் டாலர் கடனையும் கடன்படு பொறுப்புக்களையும் அதற்கு கொண்டு வந்தது. அதனால் அதனுடைய நிகர முதலீடு 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே. இது ஹார்க்கன் அனடார்க்கோ கூட்டு மொத்த முதலீட்டில் 20%க்கும் குறைவாக இருப்பதால், ஹார்க்கன் கம்பெனிகளுக்கான பங்குதாரராக நிதிநிலை அறிக்கைகளில் காட்டப்படத் தேவையில்லை என்றானது.

இதன் விளைவாக ஹார்வார்டு, ஹார்க்கனின் கடன்களின் பெரும்பகுதியை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த கம்பெனி இயக்குனர்கள் கூட்டத்தில் புஷ் தானே இந்த கூட்டு பங்காண்மையுடன் முன்செல்ல வேண்டும் என முன்மொழிந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

என்றோனில் செய்யப்பட்டதைப் போலவே இந்தக் கூட்டமைப்பிலும் `கட்டமைப்பு நிதி` ஏற்பாடுகள் போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன. இதன் அடிப்படை எண்ணம் என்னவென்றால், ஆண்டு முடிவுக் கணக்குகளில் கடனை மறைத்து வருமானத்தை கூட்டிக்காட்டி பங்கு மதிப்புகள் உயர வழி செய்ய முடியும். இது ஒரு கணக்கு மோசடி. இது போன்ற கட்டமைப்பு கணக்கு மோசடிகளில் பல அமெரிக்க கம்பெனிகள் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன.1990ல் பங்குமுதல் சந்தை உயர்வின் பொழுது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுடன.

புஷ் நிர்வாக அதிகாரிகளும் ஹார்வார்டும், இந்த ஹார்க்கன் அனடார்க்கோ கூட்டமைப்பு சட்ட விரோதமான என்றோனைப் போன்றதல்ல என்கின்றனர். வெளியிலிருந்து நிதி இல்லாமல் உள்ளுக்குள் இருப்போரால் மட்டுமே நடத்தப்பட்டு வந்ததன் காரணமாக, என்றோனின் கூட்டு பங்காண்மை முற்றிலும் ஒரு உண்மையான கூட்டமைப்பல்ல. கடன்கள் தாய் கம்பெனிக்கு இல்லாததுபோல் மாற்றிக்காட்டியது. அதனால் கணக்கு முறை ஒழுங்குகளை மீறியது.

எப்படியானாலும் இந்தக் கூட்டமைப்பு என்றோனிலிருந்து மாறுபட்டதல்ல. ஹார்வார்டு பிரதிநிதிகள் ஹார்க்கனில் மிக அதிகம் முதலீடு செய்ததால் பங்கின் உண்மையான மதிப்பை காட்டாமல் பங்குதாரர்களை மோசடி செய்து தாங்கள் லாபம் பெற்றார்கள். இதைத்தான் இந்தக் கூட்டமைப்பும் செய்தது.

1990ம் ஆண்டு இறுதியில் ஹார்க்கனின் பங்கு மதிப்பு 1.25 டாலருக்கு வீழ்ச்சியுற்றபோது, ஹார்க்கன் அனடார்க்கோ கூட்டமைப்பு ஏற்பட்ட இரண்டு வருடங்களை அடுத்து பங்கு மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியது. `ஹார்வார்ட் வாட்ச்சின்` அறிக்கைப்படி, முன்னுக்கு கொண்டு வரப்பட்ட தொகைகள் ஹார்க்கனின் தற்காலிக திடீர் பங்கு முதல்விலை வீழ்ச்சிக்கு பின்னுக்கு வர அனுமதிக்கப்பட்டது மற்றும் 1991ல் அதன் வரலாற்று உயர்வை அடைந்தது. இது அனடார்க்கோ கூட்டமைப்பு கம்பெனியின் வருங்கால லாபம் பற்றி முதலீட்டாளர்களுக்கு தவறுதலான வழியைக் காட்டியது. ஹார்க்கன் அனடார்க்கோ கூட்டின் நடவடிக்கை ஹார்க்கனின் நீண்ட நாள் தாக்குப்பிடித்தல் பற்றி அமைப்பில் உள்ளவர் என்ற முறையில் உள் விவரங்களை அறிந்து கொண்ட ஹார்வார்டு, இந்த நீர்க்குமிழி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 1.6 மில்லியன் ஹார்க்கன் பங்குகளை விற்றுவிட்டது.

ஹார்க்கன் அனடார்க்கோ கூட்டு, பங்கு விற்பனையால் புஷ் நேரடியாக பலன் பெறவில்லை. அவருக்குச் சொந்தமான ஹார்க்கன் பங்குகளை ஏற்கனவே விற்றுவிட்டு ரெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ் பங்குகளை அவர் வாங்கியிருந்தார். இந்த விற்பனையின் பலனாக அவருக்கு 1.5 மில்லியன் டாலர் அளவு வருவாய் சேர்க்க முடியும். புஷ்ஷின் ஹார்க்கன் பங்குகளை, ஹார்க்கன் செய்த மற்றொரு சந்தேகத்திற்கிடமான நிதி நடவடிக்கையின் பின் விற்றுவிட்டார் [See On eve of Wall Street speech: Bush's past business dealings come back to haunt him, 9 July, 2002]

ஹார்க்கன் பங்குகளை புஷ் விற்றதில் சூழ்ந்துள்ள இரகசியங்களில் ஒன்று என்னவென்றால், புஷ் யாருக்கு விற்றார் என்பது. புஷ் விற்ற பங்குகளின் மதிப்பு எவ்வளவெனில் அந்த கம்பெனியின் நாள் வியாபார மதிப்பைப் போல் இருபது மடங்கு இருக்கும். இந்த பங்குகளை சந்தையில் கொண்டுபோய் திணித்திருந்தால், பங்கு விலை பெரும் சரிவை சந்தித்திருக்கும். அவருடைய பங்குகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் வாங்க புஷுக்கு ஒரு பெரும் முதலீட்டாளர் தேவைப்பட்டது.

வாங்கியவரின் அடையாளம் காட்டப்படவில்லை என்றாலும் சந்தர்ப்ப சாட்சிகள் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தைத் தவிர வேறு யாருமில்லை என்பதைக் காட்டுகின்றன. சார்லஸ் லூவிஸ், பொது நாணய மையத்தினர் `ஜனாதிபதி 2000 ஐ வாங்குதல்` என்ற அறிக்கையில் பின்வருமாறு கூறுகின்றார், "கிடைத்த சாட்சிகள் ஹார்வார்ட் தான் பங்குகள் வாங்கியவர் என்பதைக் காட்டுகின்றன. அந்த நேரத்தில் தான் பல்கலைக்கழகம் தன் பங்குகளை ஹார்க்கனில் அதிகப்படுத்தியது. வேறு புதிய முதலீட்டாளர் யாரும் அதில் காணப்படவில்லை."

லூவிஸ் கூற்றுப்படி கணக்குக் குறிப்பு கடிதங்களில் அடியில் கண்டபடி, புஷ்ஷுக்கு அடிக்கடி போன் செய்த புஷ்ஷின் தரகர் பெயர் மைக்கேல் ஐஸன்சன் என்பதும் இவர் ஹார்க்கன் அமைப்பிலிருந்த ஹார்வார்ட் பிரதிநிதி என்றும் அத்துடன் ஹார்வார்ட் மனேஜ்மென்ட் கார்பரேஷனின் தொலைபேசி எண்ணும் கிடைத்துள்ளது.

ஹார்வார்ட், என்றோன் புஷ் மற்றும் கிளிண்டன்

இந்த ஹார்க்கன் அனடார்க்கோ கூட்டு செய்து கொண்ட ஒப்பந்தம், எப்படி இப்போது ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியும் மிகுந்த பண வசதியுள்ள பல்கலைக்கழகமும் சேர்ந்து பணம் சேர்த்துக்கொண்டு அதை முதலீட்டார்களை ஈடு செய்ய வைக்கலாம், என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். ஹார்வார்டுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள தொடர்பின் வரலாறு, ஹார்வார்டுக்கும், என்றோனுக்கும் உள்ள தொடர்போடு சேர்ந்தது. என்றோன் புஷ் நிர்வாகத்தோடு பல தொடர்புகள் கொண்டது. என்றோனின் தலைவரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான கென்னத் லே, புஷ்ஷின் மிகப்பெரும் பொருளாதார தரகர் ஆவார்.

என்றோனுக்கும் ஹார்வார்டுக்கும் உள்ள தொடர்பு மிக அகலமானது. இதன் விவரம் ஹார்வார்ட் இணையதளத்தில் (www.harvardwatch.org) ``வணிக உண்மை ஹார்வார்ட் என்றோன் பிணைப்புகளின் அறிக்கை`` என்ற தலைப்பில் உள்ளது. இத்தொடர்புகள் மேலும் ஹார்வார்டை, கிளிண்டன், புஷ் நிர்வாக அதிகாரிகளோடு இணையச்செய்தன. இதனால் கார்ப்பொரேட் ஊழல்கள் பெருகும் நிலைகள் ஏற்பட்டன.

இந்த தொடர்புகள் எல்லாம் சக்தி (மின்சக்தி) சந்தையை ஒழுங்குமுறை தளர்த்தலுக்கு 1990 ஐ மையமாக்கி ஏற்படுத்தப்பட்டன. சக்தி துறை ஒப்பந்தங்களை வாங்கி விற்கும் என்றோனின் வியாபாரத்திற்கு இந்த ஒழுங்குமுறை தளர்த்தல் அடித்தளமாக அமைந்தது. இந்த தளர்த்தல்தான் கலிபோர்னியா சக்தி (மின்சார) நெருக்கடி ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அப்போது சக்தி வணிக பெரும்புள்ளிகள், என்றோன் உட்பட கணக்குகளை ஒரு மாதிரி சரிக்கட்டி காட்டி பெருத்த லாபம் ஈட்டினர்.

மின்சார ஒழுங்குமுறை தளர்த்தலை சப்பை கட்டி சரி எனக் காட்ட ஹார்வார்டு பல்கலைக்கழகம் பெரும்பாலான பொருளாதார கோட்பாடுகளின் வளமாக இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, என்றோனை முதன்மையான பொருளாதார உதவியாளர் எனக்கொண்ட ஹார்வார்டு மின்சார கொள்கைக் குழு (HEPG), மின்சார ஒழுங்குமுறை தளர்த்தலை பரிந்து ஆயிரம் அறிக்கைகளை வெளியிட்டது. ஹார்வார்டு மின்சாரப் பிரிவு ஆய்வு இயக்குனரான வில்லியம் ஹோகன், கலிபோர்னியா பொது பயன்பாட்டுக் குழுவை (CPUC) (என்றோன் மாதிரியை) பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தினார். இரண்டாயிரம் ஆண்டின் நெருக்கடிக்குப் பிறகும் ஹார்வார்டு மின்சார கொள்கைக் குழு மிக உயர்வாக ஏறிக்கொண்டிருக்கும் மின்சார விலையை கட்டுப்படுத்தும் எந்த ஒழுங்கு முறையையும் தொடர்ந்து எதிர்த்து வந்தது.

1990 பிற்பகுதியில் ஊகத்தில் விளைந்த வளர்ச்சிக் காலத்தில் ஹார்வார்டு மின்சார கொள்கைக் குழுவும் ஹார்வார்டு வணிக பள்ளியும் (HBS), என்றோன் தனிச் சிறப்பு காட்டிய பொருளாதார சப்பைக்கட்டு முறைகளையும் ஊகங்களையும் அதுபோன்ற பொருளாதார செயல்பாடுகளையும் ஆதரித்து வந்தது. என்றோன் ஒரு உன்னத கார்ப்பொரேஷன் என அக்காலக்கட்டம் முழுவதும் புகழப்பட்டது. ஹார்வார்டு வணிகப் பள்ளிதான் அந்தக் கம்பெனி மீது புகழ் மாலை குவிப்பதில் முதல் நிலையிலுள்ள, கல்வி நிறுவனமாக இருந்தது. இதன் அறிக்கைகள் பல, நாடு முழுவதும், வணிக பள்ளிகளில் படிக்க வேண்டிய பாடமாக்கப்பட்டன.

அமெரிக்க மக்களுக்கு எதிரான இந்த மாபெரும் கார்ப்பொரேட் மோசடியானது கல்வி நிறுவனம் அளித்த இந்த உதவி இல்லாவிட்டால் சாத்தியமாயிருக்காது. இந்த மோசடியின் வெற்றியில் ஹார்வார்டில் உள்ளவர்களுக்கு சுய லாபமிருந்தது. ஹார்வார்டு நிர்வாக அமைப்பின் உறுப்பினர் பலருக்கு என்றோனோடு மிக நெருக்கமான தொடர்பு இருந்தது.

ஹெர்பேர்ட் ``பக்`` வினோக்கர் (Herbert "Pug" Winokur) பல்கலைக்கழக ஏழு உறுப்பினர் கொண்ட ஆளுகை குழுவான ஹார்வார்டு கார்பொரேஷன் உறுப்பினர். இவர் ஹார்வார்டு மனேஜ்மென்ட் கார்பொரேஷனிலும் பணிபுரிந்திருக்கிறார். என்றோன் இயக்குனர் குழுவில் நீண்ட நாள் உறுப்பினரும்கூட. கம்பெனியின் பொருளாதார கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வினோக்கர், என்றோனின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரியும், ஹார்வார்டு வணிக பள்ளியின் பட்டதாரியுமான ஜெப்ரே ஸ்கில்லிங்க் என்பவரால் திட்டமிடப்பட்ட எல்லா பொருளாதார மோசடி செயல்களையும் ஆதரிக்க வேண்டியதாயிற்று.

கம்பெனி உடைபடும் வரையாவது ரொபேர்ட் பெல்பெர், என்றோன் மூலதனத்தின் மிகப்பெரிய பங்குதாரர். அவர் என்றோன் குழுவின் உறுப்பினரும் கூட. பெல்பெர், ஹார்வார்டுக்கு பணம் அதிக அளவில் நன்கொடையாக அளித்தவர். அவர் எவ்வளவு அதிக நன்கொடை அளித்தாரென்றால் ஹார்வார்டில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பெரிய கட்டிடத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதுதான் சர்வதேச மற்றும் மூலோபாய அலுவல்களுக்கான மையம் அவர் ஹார்வார்ட் கமிட்டியின் பொருளாதார கட்டமைப்பில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

ஜோனாதன் ஜாகொப்சன் ஒரு ஹார்வார்ட் பட்டதாரி. ஹார்வார்ட் எண்டோமென்டின் இரண்டு பில்லியன் டாலர் தொகையை கண்காணிக்கும் ஹைபீல்ட்ஸ் கேபிடல் என்ற கம்பெனியை நிர்வகிப்பவர். ஹைபீல்ட்ஸ் கம்பெனியே 500 பில்லியன் டாலர் ஹார்வார்டு பணத்தின் அடிப்படையில் தான் உருவானது.

2001ல், என்றோனின் தொல்லைகள் வெளிக்கு வந்த உடனே, ஹைபீல்ட்ஸ் என்றோனின் பங்குகளை (அவை வீழ்ச்சி அடைகின்றன என உறுதியாக தெரிந்தும் கூட) விற்று, அந்த கம்பெனியும் என்றோனும் சேர்ந்து 50 மில்லியன் டாலர் லாபம் ஈட்டின. இச்செயல் ஜேகப்சன், ஹார்வார்ட், இருவரும் வினோக்கர் பெல்பர் அல்லது ஹார்வார்ட் தொடர்புள்ள ஒருவரால் உள்ளிருந்து கொடுக்கப்பட்ட தகவலால்தான் இந்த லாபம் கிடைத்தது என்ற சந்தேகத்தை இயற்கையாக ஏற்படுத்துகிறது.

இப்போது புஷ் நிர்வாகத்தில் உறுப்பினர்களும் முதன்மை பொருளாதார ஆலோசகருமான லோரன்ஸ் வின்ட்சே, ஐக்கிய நாட்டு வணிக பிரதிநிதி ரொபேர்ட் சோலிக் ஆகியோர் இந்த என்றோன் ஹாவார்ட் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் என்பது தெரிகிறது. லின்ட்சே ஹார்வார்டில் முனைவர் பட்டம் பெற்றவர். பொருளாதாரத் துறையிலும் பேராசிரியராக இருந்தவர். அவர் ஒரு சமயம் என்றோனின் ஆலோசனை குழுவில் பணியாற்றியவர். அவர் சிட்டி குறுப்புக்கும் ஆலோசகர். என்றோனுக்கு மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியவரான சோலிக்கும் ஹார்வார்டில் பட்டம் பெற்றவர். அவர் ஒரு காலத்தில் பல்கலைக் கழகத்தின் பெல்பர் மையத்தில் இயக்குனராக பணியாற்றியவர். அவர் என்றோனின் ஆலோசனைக்குழு உறுப்பினரும் கூட.

இந்த தொடர்பு கிளிண்டன் நிர்வாகத்திற்கு கூட செல்கிறது. கிளிண்டனின் நிதி அமைச்சர் ரொபேர்ட் ரூபின் ஒரு காலத்தில் ஹார்வார்ட் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர். கிளிண்டன் நிர்வாகத்தில் பணிபுரியும்போதே என்றோனுக்கு சாதகமான சட்டங்கள் நிறைவேறுவதை அவர் மேற்பார்வையிட்டார். அரசு பணியை விடுத்தவுடன் அவர் சிட்டி குருப்பில் மிக உயர்ந்த பதவி வகித்தார்.

ஜோன் ஹோல்டன், ஹார்வார்டில் சுற்றுப்புற சூழல் இயற்கை வளதிட்டத் (ENRP) தலைவர். இந்த திட்டத்திற்கு பெல்பெர் பெரும் பொருள் வழங்கியுள்ளார். ஹோல்டன் கிளிண்டனால் அறிவியல் தொழில்நுட்பத் துறையை மேற்பார்வையிட தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் துறை ஜூன் 2001ல் ஒரு அறிக்கை அளித்தது. அது "சக்தி (மின்சார) தொழில் துறையில் தனியார்மயமாக்குதல் ஒழுங்குமுறை தளர்த்தல் போன்றவைகளை புகுத்தி சக்தி (மின்சார) துறைக்கு தனியார் முதலீடு வரும்படி செய்வதற்கு" அழைப்பு விடுத்தது.

இறுதியாக லோரன்ஸ் சம்மர்ஸூம் இதில் அடங்கியுள்ளார். இவர் 1999ல் ரூபினுக்குப் பதிலாக நிதியமைச்சரானார். கென்னத் லே பெரும் பாராட்டுகளை அவருக்கு வழங்கினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ``நான் மின்சார ஒழுங்குமுறை தளர்த்தல் மின்சார மார்க்கட் கட்டமைப்பில் எப்போதும் ஓரு கண் வைத்திருப்பேன்`` என்று பதிலளித்தார் சம்மர்ஸ். புஷ் பதவிக்கு வந்ததும் சம்மர்ஸ் பதவி விலகி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆனார்.

See Also :

Xerox பில்லியன் கணக்கான பணத்தை தனது வருடாந்த வருமானத்தில் மீள்வரவு வைத்துள்ளது: கணக்கு ஏமாற்றல் தொடர்பான இன்னுமொரு நிகழ்ச்சி
WorldCom இன் உடைவின் அபாயமானது அரசியல் கட்டமைப்பினை நெருக்கடியினுள் இட்டுச்சென்றுள்ளது

Top of page