World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

40 millionaires in US Senate

அமெரிக்க செனட் சபையில் 40 கோடீஸ்வரர்கள்

By Jeremy Johnson
7 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க செனட் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 செனட்டர்களில் குறைந்த பட்சம் 40 பேர் கோடீஸ்வரர்கள், சிலர் அதைவிட பல மடங்கு சொத்துக்களுக்கு உரியவர்களாக இருக்கின்றனர். செனட் சபை உறுப்பினர்களின் சொத்து உடைமைகள் பற்றிய விபரங்கள் சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்டன. குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த வகையில் ஜனநாயக கட்சியைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குடியரசுக் கட்சியை சேர்ந்த கோடீஸ்வர செனட்டர்கள் 22 பேர்கள் ஆவர். ஜனநாயக கட்சியைச் சார்ந்தவர்கள் 18 பேர் என்றாலும் ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றும் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் 10 பேரில் எட்டு பேர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது சொத்துப் பட்டியலை ஆராய்ந்த CNN விபரம் தந்திருக்கிறது.

கடைசியாக கிடைத்திருக்கின்ற நிதி நிலைமை பற்றிய விபரங்களை ஆராயும்போது சராசரி அமெரிக்கர்களுக்கும், அவர்களது பிரதிநிதிகளாக ஆட்சியில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையே பெருகிவருகின்ற பொருளாதார இடைவெளியை இந்த அறிக்கை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிக சுமாரான சொத்து மதிப்புள்ளவர்கள் என்று அறிக்கை தாக்கல் செய்திருப்பவர்களது ஊதிய விகிதங்கள் ஆண்டிற்கு 1,54,700 அமெரிக்க டொலர்களாக இருப்பதுடன், தலைமை பதவிகளில் இருப்பவர்களுக்கு ஆண்டிற்கு 1,71,900 டொலர்கள் கிடைக்கின்றன.

இந்தப் பட்டியலில் முதல் நிலை வகிப்பவர் மசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயக கட்சிக்காரரும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளவருமான ஜோன் கெரியாகும் (John Kerry). இவரது நிகர சொத்துக்கள் என்று மதிப்பிடப்பட்டிருப்பது 164 முதல் 211 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தனக்கு 75 பரஸ்பர நிதிகள் சொந்தமாக இருப்பதாக அவர் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். மேலும் 2 பரஸ்பர நிதி நிறுவனங்களில் அவரது மனைவி தெரிசா ஹீன்ஸ் கெரியும் பங்குதாராக இருக்கிறார். அவரது ஹீன்ஸ் (Heinz) உணவு நிறுவனத்தின் திரண்ட சொத்துக்களின் மதிப்பு பிற வட்டாரங்களின் கணிப்பின்படி பல நூறு மில்லியன் டொலர்களாக இருக்கலாம். அவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கோடீஸ்வர செனட்டர்கள் பட்டியலில் மிகக் குறைந்த அளவில் 111 மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரர் விஸ்கான்சின் பகுதியைச் சேர்ந்த ஹெர்ப்கோள் ஆவார். இவர் அரசியலில் நுழைவதற்கு முன்னர் சங்கிலித் தொடர் போன்ற தனது பலசரக்கு மற்றும் அங்காடி வளாகங்களை விற்பனை செய்துவிட்டார். தற்போது அவர் தொழில் முறையிலான கூடைப்பந்து குழுவான மில்வாக்கி பக்ஸ் (Milwaukee Bucks) அணியின் முதலாளியாகும்.

அடுத்து வருகின்ற செனட்டர்கள் என்று கொண்டால் மேற்கு வேர்ஜீனியாவை சேர்ந்த ஜோன்.ஜே. ராக்பில்லரை குறிப்பிடலாம். அவரது சொத்து மதிப்பு 81.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். முன்னாள் வோல் ஸ்டீரிட் நிர்வாகியான நியு ஜெர்ஸியைச் சேர்ந்த ஜோன் கார்சைனது சொத்து மதிப்பு 71 மில்லியன் டொலர்களாகும். மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த டியான பியன்ஸ்ரைன் (Dianne Feinstein) பாரிய முதலீடு செய்பவரான ரிச்சார்ட் பிளம் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 26.3 மில்லியன் டொலர்களாகும்.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் 10 என்ற வரிசையில் இரண்டு குடியரசுக்கட்சி செனட்டர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் இல்லினாய் பகுதியைச் சேர்ந்த, வங்கித் தொழிலின் வாரிசாக உள்ள பீட்டர் பிட்ஸ் ஹெரால்ட்டின் சொத்து மதிப்பு 26.1 மில்லியன் டொலர்கள் ஆகும். மற்றும் டென்னஸ்ஸியைச் சேர்ந்த பெரும்பான்மைத் தலைவரான பில் பிரிஸ்ட்டினது சொத்து மதிப்பு 15.1 மில்லியன் டொலர்களாக இருப்பதுடன், அவரது குடும்பம் அமெரிக்காவிலேயே லாப நோக்கில் நடத்தப்படும் சங்கிலித் தொடர்போன்ற HCA மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. சென்ற ஆண்டு இந்த மருத்துவமனைகளின் வருமானம், 20 பில்லியன் டொலர்களாகும். கண் நோய் மருத்துவமனை அறக்கட்டளைகளின் மதிப்பு 6.5 மில்லியனிலிருந்து 31 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்று இவர் கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டு இதர ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் உயர்ந்த வரிசையில் அமர்ந்துள்ளனர். ஒன்பதாவது இடத்தில் இருக்கும் வடக்கு கரோலினாவின் ஜோன் எட்வர்ட்ஸ் தனது நிகர சொத்து மதிப்பு 12.8 லிருந்து 60 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்று தகவல் தந்திருக்கிறார். 12 வது இடத்தில் உள்ள புளோரிடாவின் பாப் கிரஹாம் தனது சொத்து மதிப்பு 7.7 மில்லியனிலிருந்து 31.6 மில்லியன் டொலருக்குள் இருக்கக் கூடும் என்று கணக்கு தந்திருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எட்வர்ட்ஸ், ஒரு வழக்கறிஞராக வடக்கு கரோலினாவில் சில முக்கியமான வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்று மில்லியன்கணக்கான டொலர்களை சம்பாதித்துள்ளார். அந்தப் பகுதியில் கிரஹாமும் அவரது சகோதரர்களும் மியாமி ஏரிகளுக்கு அருகில் குடும்ப பண்ணை நிலத்தை மேம்படுத்தி, அவற்றை மதிப்புமிக்க புறநகர் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஏற்பாட்டில் பலகோடி டொலர்கள் மதிப்புள்ள சொத்துக்களும், வருமானங்களும் மறுக்கப்படுகின்றன. அந்த அளவிற்கு அமெரிக்கச் சட்டம் தெளிவில்லாததாக இருக்கின்றது. திட்டவட்டமான விபரங்கள் விரிவான பகுப்பின் கீழ் ஒரு மில்லியனில் இருந்து 5 மில்லியன் டொலர்வரை என்று பொதுப்படையாக தகவல் தந்து விடுகிறார்கள். இவை தவிர, குடியிருக்கும் வீடு சில சந்தர்ப்பங்களில் அதன் மதிப்பு 1 மில்லியன் டொலருக்கு மேல் இருக்கக்கூடும். அதன் விபரம் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று குறிப்பிடப்படுகிறது

இப்படி ஹிலாரி ரோட்மேன் கிளிண்டனின் சொத்து மதிப்பு மிகக்குறைந்த அளவிற்கு 352,000 டொலராக இருக்கலாம். அல்லது 3.8 மில்லியன் டொலர் அளவிற்கு உயர்ந்த அளவாகவும் இருக்கலாம். அவரது குறைந்த பட்ச சொத்து உடைமை ஒரு மில்லியன் டொலருக்கு குறைவாக இருப்பதால் 40 கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் சேர்க்கப்படவில்லை. சென்ற ஆண்டு அவரது கணவர் கிளிண்டன் பல்வேறு பகுதிகளில் உரையாற்றியதன் மூலம் 9.5 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளார். அண்மையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ''வாழும் வரலாறு''' (Living History) என்ற அவரது நூலுக்கு 8 மில்லியன் டொலர்கள் முன்பணம் தர ஒப்புக்கொள்ளப்பட்டு அதில் 4 மில்லியன் டொலர்களை ஏற்கெனவே பெற்றிருக்கிறார்.

மற்றொரு முன்னணி ஜனநாயக கட்சித் தலைவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளவருமான ஜோசப் லைபர் மேன் அதே காரணங்களுக்காக கோடீஸ்வரர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர் தனது சொத்து மதிப்பு 1.8 மில்லியன் டொலர்களாக இருக்கலாம் என்ற மதிப்பீடுகளை தாக்கல் செய்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நிதி மற்றும் சொத்து நிலவரங்கள் குறித்து முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை தருவார்களானால் 100 செனட் சபை உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள்.

அத்துடன் அமெரிக்க - கீழ்சபை உறுப்பினர்கள் 435 பேர்களில் பலர் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

இப்படிப்பட்ட கோடீஸ்வரர்களில் மிகவும் முக்கியமானவர் நான்சி போலேசி ஆவர். இவர் ஜனநாயக கட்சி சிறுபான்மைக் குழுத் தலைவராக இருப்பதுடன், அவருக்கு 92 மில்லியன் டொலர் சொத்துக்கள் உள்ளன. இவருடைய கணவன் போல், ஒரு வர்த்தகராக இருப்பதுடன் கூட்டாக இருவரும் சொத்துக்களை வைத்திருக்கின்றனர். இவற்றில் இரண்டு திராட்சை தோட்டங்களும் அடங்கும். ஒரு திராட்சை தோட்டத்தின் மதிப்பு 5 முதல் 25 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது. மற்றொரு தோட்டம் 1 முதல் 5 மில்லியன் டொலர்கள்வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் கூட்டாக வைத்திருக்கும் உணவு விடுதிகளின் மதிப்பு 25 மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டிருக்கின்றது. சான்பிரான்சிஸ்கோவில் பெரும் மதிப்புள்ள 3 ரியல் எஸ்டேட் கட்டிடங்கள் இவர்களுக்கு சொந்தமானதாகும். இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சொகுசு மாளிகை பசுபிக் ஹைட்ஸ் புறநகர் பகுதியில் அமைந்திருக்கிறது. இவர்களுக்கு சொந்தமான கட்டிடத்தின் மதிப்பு 5 மில்லியன் டொலர்களாக இருப்பதுடன், இவர்களது ரியல் எஸ்டேட் உடைமைகளில் இரண்டு மலை விடுதிகளும் அடங்கியிருக்கின்றது. இவற்றின் மொத்த மதிப்பு 11 மில்லியன் டொலர்கள் ஆகும்.

விஸ்கோன்சன் (Wisconsin) பகுதியைச் சேர்ந்த மற்றொரு கீழ்சபை கோடீஸ்வரர், குடியரசுக் கட்சி உறுப்பினர் ஜேம்ஸ் சென்சங் பெர்னர், கீழ் சபையின் நீதித்துறை குழுவிற்கு தலைவராக இருப்பதுடன், தனது நிகர சொத்து மதிப்பை துல்லியமாக தந்திருக்கிறார். அது 9,315,491.13 டொலர்களாகும். அவர் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் சொத்துக்களுக்கு வாரிசாக இருப்பதுடன், அவருக்கு இரண்டு வகையான பங்குகள் சொந்தமாக இருக்கின்றன. கிளினக்ஸ் தயாரிப்பு ஹிக்பர்ளி கிளார் மற்றும் மருந்துக் கம்பெனி ராட்சத நிறுவனமான கீப்பைசர் ஆகியவற்றில் இவருக்குள்ள பங்குகளின் மதிப்பு 5 லட்சம் முதல் 1 மில்லியன் டொலர்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. வேறு 3 நிறுவனங்களில் இவருக்குள்ள பங்குகளின் மதிப்பு 250,000 முதல் 5 லட்சம் டொலர்கள் வரை, ஒவ்வொரு குழுவின் பங்கின் மதிப்பும் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது.

மிச்சிகன் மாநிலத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி கீழ்சபை உறுப்பினர் ஜான் டிங்கள், நீண்ட காலமாக கீழ்சபையில் உறுப்பினராக பணியாற்றி வருபவர் ஆவர். அவருக்கு தனியாகவும் அல்லது அவரது மனைவி டெபியுடன் கூட்டாகவும் 37 பரஸ்பர நிதி நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. அவரது மனைவி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். அவரது சொத்துப் பட்டியலில் அவரது மனைவிக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 1 முதல் 5 மில்லியன் வரை விருப்ப பங்குகள் இருப்பதாகவும் சேமிப்பு பங்குகள் வாங்கும் திட்டப்படி அவருக்கு (GM) இந்த நிறுவனத்தில் 5 லட்சம் முதல்1 மில்லியன் டொலர் அளவிற்கு பங்குகள் இருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

அமெரிக்க கீழ் சபையில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விபரங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்படாவிட்டாலும் சான் பிரான்ஸிஸ்கோ கிரானிக்கல் பத்திரிகை நடத்திய ஓர் ஆய்வில் சான் பிரான்ஸிஸ்கோ பே (San Francisco Bay) பகுதியை சேர்ந்த 12 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 8 பேர்கள் கோடீஸ்வரர் பட்டியலில் வருகின்றனர். அந்தப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடியரசுக் கட்சி உறுப்பினர் கோடீஸ்வரர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் அவர் தனது சொத்துக் கணக்கை தாக்கல் செய்வதற்கு காலக் கெடுவை பெற்றிருக்கிறார்.

கோடீஸ்வரர்கள் ஆவதற்கு நெருக்கிக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், புஷ் நிர்வாகத்தில் அதிகரிப்பதற்கான காரணம் பணக்காரர்களுக்கு தரப்பட்டுள்ள வரி குறைப்பு, வரி ரத்து ஆகிய சலுகைகள் ஆகும். 20,000 டொலருக்கு குறைவான வருமானம் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு குழந்தை வீதம் கணக்கிட்டு வரிச்சலுகை வழங்குவதாக புஷ் அறிவித்த திட்டம் கைவிடப்பட்டு விட்டது. அத்துடன் அமெரிக்க மூத்த குடிமக்களுக்கு மருந்துகளை வழங்குகின்ற சலுகைகளை ரத்து செய்யும் ''சீர்திருத்தத்தை'' நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Top of page