World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Parliamentary probe exposes lies on Iraqi weapons

பிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை
ஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை அம்பலப்படுத்துகிறது

Part 3: Foreign Secretary Jack Straw

பகுதி3:வெளிநாட்டு அமைச்சர் ஜக் ஸ்ரோ

By Robert Stevens and Richard Tyler
7 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு, பிரதம மந்திரி டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் உளவுத்துறை அறிக்கையை, ஈராக்கின் மீதான போரை நியாயப்படுத்த திரித்ததா என்ற விசாரணையை நடத்தி வருகிறது. அதன் அறிக்கையை இன்று வெளியிட இருக்கிறது.

செய்தி ஊடகங்களுக்கு வந்துள்ள இரகசியச் செய்திகளிலிருந்து, தொழிற்கட்சி ஆதிக்கத்தில் உள்ள பாராளுமன்றக்குழு இதிலிருந்து கூடியளவு அரசாங்கத்தை கெளரவமாக விடுவித்துவிடும் என்று நம்ப இடமிருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட முடிவு, பிரிட்டிஷ் அரசாங்கம் முதலிலேயே உறுதியளிக்கப்பட்ட முடிவான ஈராக் பேரழிவு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்ற காரணத்திற்காக போர் தொடுப்பது என்பதை விசாரணையின் சாட்சியங்கள் சில வெளிப்படுத்திய அளவில் மாறுபட்ட தன்மையுடையதாக அமையும்.

இந்த தகவல் சீரணிக்கப்படாத ஆயிரக்கணக்கான பக்கங்களில் புதைந்துவிடாமல் இருப்பதற்காக உலக சோசலிச வலைத் தளம் முக்கியமான சாட்சியங்கள் சிலவற்றைச் சுருக்கமாகக் கொடுத்துக் கொண்டு வருகிறது.

ஜாக் ஸ்ரோ

ஜூன் 24, 27 தேதிகளில் பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு வெளிநாட்டு மந்திரி ஜாக் ஸ்ரோவிடம் பகிரங்க விசாரணையும், இரகசிய விசாரணையும் நடத்தியது. பெரும்பாலான கேள்விகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஈராக் போருக்குமுன் தயாரித்து அளிக்க இரண்டு கோப்புக்களிலுள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

மிகுந்த ஆரவாரத்திற்கிடையே வெளியிடப்பட்ட இந்தப் பத்திரங்கள் சதாம் ஹுசேன் ஆட்சியில் அவர் வைத்திருந்ததாகக் கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய உளவுத்துறை அறிக்கைகளையொட்டியனவாகும். செப்டம்பர் 2002ல் வெளியிடப்பட்ட முதல் கோப்பிற்கு ''ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள்: பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மதிப்பீடு'' என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மற்ற குற்றச்சாட்டுக்களுடன், இதில் ஈராக் இந்த பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுசைன் ஆட்சி முடிவெடுத்த 45 நிமிடத்திற்குள் உபயோகிப்பதற்குத் தயார் செய்துவிட முடியும் என்று மொட்டையாகக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது பத்திரமான, "ஈராக்: அதன் மறைப்பினதும், திரிபாக்கத்தினதும், அச்சுறுத்தலினது கட்டுமானம்'' என்பது பெப்ரவரி 2003ல் வெளியிடப்பட்டது. இதற்கு ''போலியான கோப்பு'' என்ற அலங்காரப் பெயர் வந்துள்ளது. ஏனெனில் இது 1990ல் கலிபோர்னியாவில் கலாநிதி பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து பெருமளவு, பிரதிபண்ணப்பட்டு திரிபுபடுத்தப்பட்ட ஆவணமாகும். பிளேயர் அரசாங்கத்தால் போருக்குத் தயார் செய்வதற்காக இது வேண்டுமென்றே பல மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு சதாம் ஹுசைனையும் ஈராக்கையும் தீய சக்திகள் போல், உருவாக்கிக் காட்டப்பட்டுள்ளது.

பெப்ரவரி 2003ன் இரண்டாவது 'போலியான கோப்பின்' வெளியீடு பற்றி ஸ்ரோ, அரசாங்கம் 'குற்றமற்ற பிழைகளை' செய்துவிட்டதாகவும், ஆவணம் 'முறையற்றுப்' போய்விட்டது என்ற கூற்றை முன்வைத்தார். அதனுடைய ஆரம்ப வடிவத்தை ''ஆலோசனை பத்திரம்'' என்றும், முடிந்த பதிப்பை 'முழுமையான கலவை' என்றும் வருணனை செய்தார்.

பெப்ரவரி 3ம் தேதி ஆவணத்தில் ஆதாரங்களைப் பற்றிய குறிப்புக்கள் கொடுக்கப்படவில்லை என்றும் ''ஒவ்வொரு கட்டத்திலும் பல மாறுதல்களை சொற்கள் அமைக்கும் முறையில் ஆதாரங்கள் உதிர்ந்து விழுந்துவிட்டன'' என்று தெரிவித்தார். ஆனால் ''அதில் கூறப்பட்டுள்ளது அனைத்தும் கணிசமான பிழைகள் உட்பட, ஆதார மூலங்கள் கொடுக்கப்படாததுடன், உதாரணத்திற்கு 'எதிர்ப்புக் குழுப்புக்கள்' என்பதற்கு 'தீவிரவாத அமைப்புக்கள்' என்ற மாற்றங்கள் போன்றவை இருந்தபோதிலும், ஆவணத்தின் சரியான தன்மை முக்கியமானதல்ல என நான் நினைக்கின்றேன் ''என்று அதனுடைய உள்ளடக்க விஷயங்களைக் காக்கும் அளவில் பேசினார்.

45 நிமிடக் குற்றச்சாட்டைப் பற்றிய முக்கியத்துவத்தையொட்டி கேட்கப்பட்டதற்கு ''அந்த 45 நிமிடம் பற்றிய அறிக்கைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இருப்பதாக நான் கருதவில்லை. வேறு யாரும் கொடுப்பதாகவும், உரிய மரியாதையுடன் இந்த மேசையைச் சுற்றியுள்ளவர்கள் உட்பட யாரும் கொடுக்கவில்லையென்றும், நான் நினைக்கிறேன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற மிக அதிக அளவிலான விவாதங்களிலும் அது இடம்பெறவில்லை, பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழுவுக்கு கொடுக்கப்பட்ட சான்றுகளிலோ, வானொலி, தொலைக்காட்சிக்கு நான் பேட்டிகள் கொடுத்தபோதெல்லாம், அது குறிக்கப்படவே இல்லை.'' என ஸ்ரோ கூறினார்.

குழு உறுப்பினர் சேர் ஜோன் ஸ்டான்லி பிரதம மந்திரி டோனி பிளேயரே 45 நிமிடக் கூற்றை கோப்பிற்கான முன்னுரையில் எடுத்துக்காட்டிப் பேசியுள்ளாரே எனக் குறிப்பிட்டார். ஸ்ரோ இதற்கு அதன் மதிப்பைக் குறைக்கும் வகையில், ''ஆம், ஆனால் வேறு பல விஷயங்களைப் பற்றியும் முன்னுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது'' என்றார்.

பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழுவில் ஸ்ரோவின் சாட்சியத்தை எதிர்க்கும் வகையில் தன்னுடைய 12 பத்தி முன்னுரையில் ''உளவுத்துறை'' குறிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோப்பில் உறுதியிட்டுக் கூறியுள்ள அறிவிப்பு இந்த 45 நிமிடக் கூற்று ஒன்றுதான். பிளேயர் அதில் எழுதியதாவது:

''சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கும் திறன் பற்றியும், வெளிநாடுகளில் அவர் அதை உபயோகிக்கக்கூடும் என்ற நம்பிக்கையையும், இது எவ்வாறு அவருடைய மூலோபாய நலன்களுக்கு முக்கியமானதும், குறிப்பாக அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்திற்கு உதவக்கூடும் என்பது பற்றிய பார்வையை உளவுத்துறைக் குறிப்புக்கள் தெளிவாக்குகின்றன. இந்த ஆவணம் அவருடைய இராணுவத் திட்டம் எவ்வாறு பேரழிவு ஆயுதங்களை 45 நிமிடத்திற்குள் ஒழுங்குபடுத்தி அதைப் பயன்படுத்த முடியும் என்பதையும் தெரிவிக்கிறது.''

பின்னர் குழுவிடம் ஸ்ரோ ''எளிதில் உண்மையான விஷயம் என்னவென்றால், இந்த 45 நிமிடக் கூற்று போருக்குச் செல்வதற்கு ஒரு துணை காரணமேயொழிய, முக்கிய உண்மையாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.... பெப்ரவரி ஆவணத்தில் 45 நிமிடக்கூற்றும், ஏனையவையும் பெருமளவு திசைதிருப்புவதாகும். போருக்குப் போவதற்கு இவை மையக் காரணங்கள் இல்லை. உங்கள் விசாரணையின் நோக்கம் இதுதான். தலைவர் அவர்களே, மிகுந்த மரியாதையுடன் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், திரு. ஜில்லிகனின் கூற்றான 45 நிமிட விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் போருக்குச் சென்றோம் என்ற ஆலோசனையை நீங்கள் தெரிவித்தால், வரலாற்று ஆய்வாளர்கள் உங்களுக்கு ஒரு மதிப்பெண்கூட தரமாட்டார்கள். ஏனென்றால் அது காரணமில்லை.'' என்றார்.

வெளிநாட்டுமந்திரி உண்மையைத்தான் கூறியுள்ளார். 45 நிமிடம் பற்றிய கருத்து அரசாங்கம் போருக்குச் செல்வதற்கான ''மையக் காரணம்'' அல்ல. சதாம் முக்கிய, உடனடியான ஆபத்தாக உள்ளார் என்ற பொய்யை மக்களுக்கு மறைப்பதற்கு அரசாங்கமே கூறுகின்ற இந்த ஒரே காரணம் சரிபார்க்கப்படாத உளவுத்துறையின் ஒற்றை ஈராக்கிய ஆதாரத்தை கொண்டதாகும்.

பேரழிவு ஆயுதங்களுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை

தொழிற்கட்சி உறுப்பினராகிய எரிக் இல்ஸ்லி (Eric Illsley), அத்தகைய ஆயுதங்கள் 45 நிமிடங்களில் பயன்படுத்தப்பட முடியுமா என்ற பார்வையைப் பற்றிக் கேட்டார். அதற்கு ஸ்ரோ ''ஒரு போரின்பொழுதோ அதற்குப்பின் நடத்தப்படும் விசாரணைகளின்போதோ அதைப்பற்றி எளிதில் அறிய முடியும். அப்படியான ஆயுதங்கள் இருந்திருக்குமானால் அவை வெகு எளிதில் கண்டுபிடிக்கப்படலாம் என்பதையே இந்த 45 நிமிடக் கூற்று எம்மை கருதவைக்கின்றது'' என்றார்.

குழு உறுப்பினர் டேவிட் சிட்கே (David Chidgey) ஸ்ரோவைக் ''போர் முடிவடைந்தபிறகு ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய சான்றுகள் என்ன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?'' என கேட்டார்.

இதற்கு நேரடி விடையை தவிர்க்கும் வகையில் ஸ்ரோ ''அல்-சமூத் ஏவுகணைகளின் தாக்கம் திறனை அதிகரிக்கும் திட்டங்கள் பற்றி அல் சமூத்தின் செய்முறைக் குறிப்புக்களில் கண்டுபிடிக்கப்பட்டது UNMOVIC முடிவுரைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இந்த ஆவணங்களை மறைத்தமை பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக மறைக்கப்பட்டவையுடன் இணைந்ததாகும். நாங்களே அதை முழுமையாக மதிப்பீடு செய்ய முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நேற்று ஒரு மூத்த விஞ்ஞானி, ஈராக்கின் அணுவாயுதத் திட்டம் பற்றிய கோப்போடு தொடர்புடையவர், தன்னுடைய திட்டத்தைத் தன் தோட்டத்தில் புதைத்துவிட்டிருந்ததாகத் தகவல் வந்துள்ளது. எவ்வாறு சதாம் ஹூசேன் தன்னுடைய அணுவாயுதத் திட்டத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு கொள்கையை உண்மையில் வைத்திருக்கு முடியும்'' என்றார்.

இப் பதில் சிட்கேயைக் குறுக்கிடத் தூண்டியது. அவர் ''நீங்கள் இதுவரை திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளீர்கள், தீர்மானங்கள், செயற்பாடுகள் பற்றிப் பேசியுள்ளீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் அதை வளர்ப்பதற்கான திட்டங்கள் பற்றி. போர் முடிந்த நிலையில் பேரழிவு ஆயுதங்களைப் பற்றி ஈராக்கில் உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளனவா?'' என கேட்டார்.

ஸ்ரோ ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் ''திரு.சிட்கே, இரசாயன பொருட்களோ அல்லது, உயிரியல் கலவைகள் பாவிக்க தயாரான வழங்கக்கூடிய நிலையில் இருந்ததா என்றால், உங்களுக்குத் தெரியும், விடை இல்லை என்பதே'' என்றார்.

ஈராக்கில் போர் வெற்றியை அடைந்தே தீருவோம் என்று புஷ் அறிவித்து இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும்கூட எந்தவிதமான பேரழிவு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜூன் 21 வரை 240 ஆராச்சி பிரதேசங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன என்று ஸ்ரோ குழுவினரிடம் ஒப்புக்கொண்ட அளவில் இந்த நிலைமை உள்ளது.

45 நிமிடக் கூற்று மீண்டும் தலைதூக்கல்

ஜூன் 27 அன்று ஸ்ரோ சாட்சியம் அளிக்க வந்தபொழுது, குழு உறுப்பினர்கள் பல மணி நேரம் பெப்ரவரிக் கோப்பில் உள்ள 45 நிமிடக் கூற்றைப் பற்றி கேள்வி கேட்டார்கள். கூடுதலான விசாரணை ஆவணம் எய்த வரிசையில் தயாரிக்கப்பட்டது என்பதையும் மற்றும் எந்த கட்டத்தில் 45 நிமிடக் கூற்று வந்தது என்பது பற்றியும் கேள்விகள் இருந்தன.

கீழ்க்கண்ட கேள்வி-பதில்கள் இதை எடுத்துக்காட்டுகின்றன:

ரிச்சார்ட் ஒட்டவே: இந்த 45 நிமிடக் கூற்றைப் பற்றி முதலில் திரு (அலஸ்டார்) காம்ப்பெல் (பிளேயரின் தலைமைத் தயரிப்பாளர்) அது முதல் படிவத்தில் இருந்தது என்று ஒருமுறை அல்ல இருமுறை புதனன்று கூறினார். நீங்கள் அதை ஏற்கிறீர்களா?

திரு.ஸ்ரோ முதல் படிவமா? செப்டம்பரில் தயாரிக்கப்பட்டது, ஆம் அவ்வாறு இருக்கலாம், ஏனெனில் JIC (இணை உளவு குழு) அறிக்கை செப்டம்பர் முன்பகுதியில் வந்தது. திரு. ஒட்டவே 45 நிமிடக் கூற்றைப் பற்றிய முக்கியக் கருத்து என்னவென்றால் அது இணை உளவு குழுவின் உளவுத்துறைப் பகுதியிலிருந்து வந்தது. அது நம்பத்தகுந்தது என மதிப்பீடு செய்யப்பட்டது.

ரிச்சார்ட் ஒட்டவே: அது கேள்வியல்ல; இங்கு இரண்டு புள்ளிகள் உள்ளன; எப்பொழுது அது உள்ளே வந்தது? அது நம்பத்தகுந்ததா?

மிஸ்டர் ஸ்ரோ: தனிப்பட்ட விசாரணையில் நாம் அது பற்றிப் பேசுவோம்.

தலைவர்: திரு.ஒட்டவே கேட்ட கேள்வி வேறு. திரு.ஒட்டவே, தயவு செய்து அதை மீண்டும் கேளுங்கள்.

ரிச்சர்ட் ஒட்டவே: நான் கேட்பது அது செப்டம்பர் ஆவணப் படிவத்தில் எப்பொழுது தோன்றியது என்பது ஆகும்.

திரு.ஸ்ரோ: நான் அந்தத் தேதியைக் கொடுக்க முடியும்.

ரிச்சார்ட் ஒட்டவே: அது முதல் படிவத்தில் இருந்ததா?

திரு.றிக்கெட்ஸ் (Ricketts- வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகத்தில் மூத்த அதிகாரி): அது வந்தவுடன், மதிப்பீடு செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டது.

ரிச்சர்ட் ஒட்டவே: அது முதல் படிவத்தில் இருந்ததா?

திரு.ஸ்ரோ: நாங்கள் தனி விசாரணையில், செய்தியைப் பற்றிய முதல் படிவங்கள் பொதுவாக்கப்படுவதைப் பற்றியும், ஈராக்கைப் பற்றிக் கூறவதற்கு கோடைகால ஆரம்பத்திற்கும் போகவேண்டும். இதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். வெளியிடப்படவேண்டிய ஆவணங்களைப் பற்றிய பதிப்புக்கள் அப்பொழுதே தயாராகிக் கொண்டிருந்தன. இது இணை உளவு குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. செப்டம்பர் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். அப்பொழுதிலிருந்தும், இணை உளவு குழு மதிப்பீடு செய்ததிலிருந்தும், அந்த மதிப்பீட்டின் பிரதிபலிப்பை கோப்பில் காணலாம்.

ரிச்சார்ட் ஒட்டவே: அது பின்னால் சேர்க்கப்பட்டது.

திரு.ஸ்ரோ: அதைத்தான் உங்களுக்கு நான் சொல்ல முயற்சிக்கிறேன்.

ரிச்சார்ட் ஒட்டவே: விடை என்ன என்றால், அது முதல் படிவத்தில் இல்லை, பின்னால்தான் சேர்க்கப்பட்டது.

திரு. ஸ்ரோ: மீண்டும், நாம் அதைப்பற்றி விவரமாகப் பேசுவோம்.

ரிச்சர்ட் ஒட்டவே: இது மிக முக்கியமான விடயம்.

திரு. ஸ்ரோ: திரு. ஒட்டவே, (உங்களுக்கு மிகுந்த மரியாதையுடன்) இது ஓர் அற்பமான விடயம்.

ரிச்சார்ட் ஒட்டவே: கடந்த 30 நிமிடங்களாக நீங்கள் இதை மறுத்து வருகிறீர்கள்.

திரு.ஸ்ரோ: இது தனிப்பட்ட விடயம் அல்ல. இதைப் பற்றிய குற்ச்சாட்டு என்னவென்றால், முதல் படிவத்தில், இரண்டாவதில் அல்ல இது வெளிவந்தது முதலில் என்பதுதான். அதைப் பற்றி நாம் தெளிவாக இருப்போம். 45 நிமிடத்தைப் பற்றிய கூற்று தகுந்த ஆதாரமற்றது, இணை ஆதாரங்கள் காட்டப்படாதது, இறுதி ஆவணத்தில் கலக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.

இவ்வாறு உரையாடல் நடந்துகொண்டேபோயிற்று. ஸ்ரோ இறுதியில்

''உளவுத்துறைக் குறிப்பு செப்டம்பர் வரை வரவில்லை; பின்னர் செப்டம்பர் முதல் பகுதி வரை மதிப்பீடு செய்யப்படவில்லை, எங்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை என்றால் எவ்வாறு முதற்பதிப்பில் சேர்க்க முடியும்.'' என கூறினார்.

ஸ்ரோவோடு பணிபுரிந்த வெளிநாட்டு அமைச்சகத்தின் மூத்த ஆட்சித்துறை அதிகாரி வில்லியம் எர்மன் (William Ehrman), இணை உளவு குழுவின் தலைவரின் தலைமையின் கீழ் இரண்டு கோப்புக்களும் தயாரிக்கப்பட்ட முறையை விளக்கிய வகையில் எடுத்துரைத்தார். இணை உளவு குழுவின் தலைவர் ''மதிப்பீட்டு அலுவலர்களுடன் மட்டும் இல்லாமல் எல்லா துறைத் தலைவர்களுடனும் மாதம் முழுவதும் (செப்டம்பர் 2002) நிகழ்ந்த பெருமளவுக் கூட்டங்களில் அந்த ஆவணத் தயாரிப்பிற்காகக் கலந்துகொண்டார்'' என்றும் தெரிவித்தார்.

''மற்றைய துறை அலுவலர்கள்'' ஒரு ''பாரிய கூட்டங்களில்'' கலந்துகொள்வதனால், இந்த முறை அரசாங்கத்திற்கு ஆவணத்தின் தயாரிப்பில் தன் செல்வாக்கைக் காட்ட வசதி அளித்திருக்க முடிவதுடன் மற்றும் அரசாங்கத்திற்கு முழுமையாக அதை மறுக்கும் வாய்ப்பையும் இது கொடுக்கிறது. ஏனெனில் எந்த அமைச்சரும், பிரதம மந்திரியின் செய்தித் தொடர்பு இயக்குனர் அல்ஸ்டர் காம்ப்பெல் உட்பட இரு கோப்புத் தயாரிப்புக்களிலும் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கமாட்டார்கள்.

பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு விசாரணையின் பலமற்றதன்மை தலைவர் டொனால்ட் ஆண்டர்சன் ஸ்ரோவைக் ''பாராளுமன்ற வெளியுறவு தெரிவுக்குழு ஏன் இணை உளவு குழுவின் தலைவரைப் பார்த்து இரு கோப்புக்களைப் பற்றி கேள்வி கேட்கக்கூடாது?'' என கேட்டதிலிருந்து புலனாகும்.

அதற்கு ஸ்ரோ ''ஏனென்றால், தலைவர் அவர்களே, நீங்கள் வெளிநாட்டு விவகார குழுவினருக்கும், உளவுத்துறைப் பாதுகாப்புக் குழுவிற்கும் என்னால் மோதல் ஏற்படட்டும் என்று நினைக்கிறீர்கள். இதைப் பற்றிய, உளவுத்துறை பற்றிய முழு விவரத்தையும் கேட்கும் அதிகாரம் உளவுத்துறை பாதுகாப்பு குழுவிற்கு (ISC) உள்ளது என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவை பாராளுமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டவை, அந்த அறையில் எல்லா மக்களுடைய நண்பர்களும், சகல கட்சியினரும் அடங்கியுள்ளனர்.'' என்றார்.

உளவுத்துறை பாதுகாப்பு குழு உண்மையில் சட்டங்களால் அமைக்கப்பட்டதேயொழிய, பாராளுமன்றம் ஏற்படுத்தியது அல்ல. தலைமை அமைச்சருக்கு மட்டுமே பொறுப்புக்கூறும் அதன் உறுப்பினர்கள் அவரால்தான் நியமிக்கப்படுகிறார்கள்.

காலம் காலமாக சிறப்பிக்கப்படும் மரபின்படி, பாராளுமன்றமும் அதன் குழுக்களும் அரசாங்கத்தின் கறைபடிந்த செயற்பாடுகளை பூசி மெழுகி, மூடிமறைத்துவிடும்.

See Also :

பிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை ஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை வெளிப்படுத்துகிறது. பகுதி1

பிரிட்டன்: பாராளுமன்ற விசாரணை ஈராக்கிய ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரைகளை வெளிப்படுத்துகிறது. பகுதி2

Top of page