World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Thousands die in European heat wave

ஐரோப்பிய வெப்ப அலையில் ஆயிரக்கணக்கானவர்கள் பலி

By Stefan Steinberg
14 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பா முழுவதும் பதிவானதிலேயே உயர்ந்த வெப்ப அளவு, வெப்பத் தொடர்புடைய மரணங்களையும், தெற்கு ஐரோப்பாவில் தொடர்ச்சியான பெரும் காட்டுத் தீக்களையும் ஏற்படுத்திய அளவில் ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. வெப்பம் தொடர்பான இறப்புக்களை கணிப்பிடுவதற்கு துல்லியமான வழி இல்லை என முன்னர் கூறி இருந்தபோதும், இப்பொழுது பிரெஞ்சு சுகாதார அமைச்சகம் வெப்ப அலையின் விளைவாக பிரான்சில் அண்மைய வாரங்களில் 3,000 பேர்கள் வரை இறந்திருப்பதாக அறிவித்துள்ளது.

வெப்பத்தாக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பெருகிய எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல் பிரான்சு நாட்டின் மருத்துவர்கள் திணறினர். பாரிஸ் பகுதியில் மட்டும் அண்மைய நாட்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பரனைட்) -ஐ தொட்ட அளவில், வியாழன் அன்று சற்றே தணிந்து இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த வாரத்தில் பிரான்சின் இறுதி ஊர்வல அமைப்புக்கள் 37 சதவிகிதம் கூடுதலான இறப்புக்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

பிரதமர் ஜோன் பியர் ரஃபரன் இந்தப் பேரழிவுகளை உடனடியாக கவனிக்கத் தவறிவிட்டதற்காக அதிகரித்த அளவில் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்தவாரம் அரசாங்கமானது பாரிஸ் பகுதியில் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க, விடுமுறையிலிருக்கும் மருத்துவர்களை அழைப்பதற்கும் மற்றும் மேலதிக பணியாளர்கள் மற்றும் தற்காலிக பிணக்காப்பகங்களை வழங்குவதற்கும் அனுமதிக்கும் அவசரநிலை திட்டங்களைத் தொடங்கியது. பிரெஞ்சு செஞ்சிலுவைச் சங்கம் தாக்குதலுக்கு ஆளானவர்களைப் பராமரிக்க உதவி செய்தது மற்றும் வார்டுகளில் அளவுக்கதிகமான கூட்டங்களைக் கண்டதால் இராணுவ மருத்துவ மனைகளின் படுக்கைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.

பிரான்சின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை டாக்டர்கள் சங்கத்தின் தலைவரான பாட்ரிக் பெல்லொக்ஸ் (Patrick Pelloux), அரசாங்கத்தின் அசட்டையான போக்கும், வரவு செலவுத் திட்டத்தில் குறைப்புக்களும் பிரச்சினையைக் கூட்டின என்று சுட்டிக்காட்டினார். "நலிந்தவர்கள், இலையான்கள் (ஈக்கள்) போல் இறந்து விழுந்துள்ளனர்" என சில நாட்களுக்குமுன் பேசும்பொழுது அவர் குறிப்பிட்டுள்ளார். இறப்புக்கள் தொடர்பாக அரசாங்கம் மெத்தனமான போக்கைக் காட்டி வருகிறது என குற்றஞ்சாட்டிய அவர், ``சாவு இயற்கையானது என அவர்கள் திமிராகப் பேசுகிறார்கள். இதை நான் முற்றிலும் ஏற்க முடியாது. இதைப் பற்றி எந்தப் புள்ளி விவரமும் சேகரிக்கப்படவில்லை. பொதுத் தகவலும் கொடுக்கப்படுவதுமில்லை, ஒன்றும் செய்யப்படவில்லை`` என தொடர்ந்து கூறினார்.

பாரிஸ் மருத்துவர் முரியல் செய்லெட் பிபிசி யிடம், கடந்த கோடையில் நிலைமை அழிவுகரமாக இருந்தது, இந்த ஆண்டு அது மோசமாக இருக்கிறது. நாங்கள் தயார் நிலையில் இருக்கவில்லை - மருத்துவமனை முறை தோல்வி அடைந்து விட்டது.

பிரிட்டனில் இந்தவாரத் தொடக்கத்தில் பதிவு வரலாற்றிலேயே முதல் முறையாக மிக அதிகமான 37.7 டிகிரி செல்சியஸ் (100 டிகிரி பரனைட்) க்கு மேல் பதிவானதுடன் கண்டம் முழுவதும் கிட்டத்தட்ட உயர்ந்த பதிவுக்கு நிகரான வெப்பமே பதிவாயிற்று. வடஇத்தாலியில் டாக்டர்கள் வெப்பத் தொடர்புடைய இறப்புக்கள் குறைந்தது 60 ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்; போர்த்துக்கலில் காட்டுத்தீக்கு 125 பேர் பலியாயினர் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.

அமெரிக்காவைப் போலன்றி, பெரும்பாலான ஐரோப்பிய இல்லங்களும் வேலையிடங்களும் வெப்பத்தை எதிர்க்கும் குளிர்பதன வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. உஷ்ணப் பிரதேசங்களில் இருப்பதுபோன்ற தட்பவெப்ப நிலையில் மில்லியன் கணக்கிலான தொழிலாளர்கள் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது மற்றும் ஐரோப்பா முழுவதும் மருத்துவர்கள் வெப்பத் தொடர்புடைய சுகவீனங்களில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதிலும் வயதானவர்களும், ஏற்கனவே பலவீனமானவர்களும் கூடுதலான அளவில் அறிவித்துள்ளனர்.

போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் காட்டுத்தீ

தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் காட்டுத்தீ பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாத இறுதியிலிருந்து மத்திய போர்த்துகல்லில் பெரும் தீ விபத்துக்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்த வாரத் தொடக்கத்தில் 20 பெரிய தீ விபத்துக்களும் நூற்றுக்கணக்கான சிறிய விபத்துக்களும் தீயணைக்கும் படையினரால் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. தீயினால் இதுவரை 25 பேர். உயிரிழந்ததாகவும், அதேவேளை வன அதிகாரிகள் மூலம் 215,000 ஹெக்டேர்கள் நிலப்பரப்பு அழிந்துவிட்டது தெரியவந்துள்ளதாகவும் மதிப்பீடுகள் கூறுகின்றன. ``மத்திய போர்த்துக்கல், பற்றி எரியும் தீச்சுவாலைகளுள் உள்ளது`` என்று ஒரு போர்ச்சுக்கீசிய நாளேடு எழுதியுள்ளது.

நாட்டின் மையப்பகுதியில் ஏற்பட்டுள்ள நெருப்புக்களை அணைக்கப் பாடுபடும் முயற்சிகள் போர்த்துகீசியக் கடலோரப் பகுதியை அடுத்த அல்கார்வேயில் கடந்த சில தினங்களாக தோன்றியுள்ள புதிய தீப்பரவலால் தடைபட்டுள்ளன. Silves, Alzejur ஆகிய பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்புச்சுடர்களிலிருந்து டசின்கள் கணக்கான உள்ளூர் மக்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். சுற்றுலா இதையொட்டி பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது; ரயில், சாலைப் பயணங்களும் பாதிப்பிற்குள்ளாகி ஆயிரக்கணக்கான விடுமுறை கழிப்போர் இப்பகுதியிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். நெருக்கடிகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ள போத்துக்கலின் பிரதம மந்திரி, ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காட்டுத்தீக்கள் ஸ்பெயின் பகுதிகளிலும் பரவி நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வாரம் தீயின் பாதிப்பில் முதலாவதாக சிலர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 கருகிய சடலங்கள் காணப்பட்டன, சிலவேளை அவர்கள் வீட்டிலிருந்து தப்பியோடும்போது அகப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும், கட்டலோனியா வடகிழக்குப் பகுதியில் அனைத்துப் பக்கமும் நெருப்பு எரியும் இடத்தில் அந்தவீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐநூறு பேர் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இம்மாதத் தொடக்கத்திலிருந்து 30,000 ஹெக்டேர் காட்டு நிலப்பரப்பு தீயினால் சாம்பலாகியுள்ளது. ஸ்பானியத் தீக்களில் ஒரு தீயணைப்புப் பணி ஊழியர் மாண்டுபோனார்; நெருக்கடி சமாளிக்கும் குழுக்கள் கடும் உழைப்பில் ஈடுபட்டு முழு அளவில் பணி ஆற்றுகின்றன.

ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் காட்டு நிலங்கள் இத்தாலியில் இன்னமும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பிற்கு இரையாகியுள்ளன. இங்கு குறைந்தது நெருப்பு தொடர்புடைய 60 சாவுகளாவது ஏற்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. டஸ்கனி, பீட்மாண்ட், லிகுரியா, லசியோ, காம்பானியா ஆகிய பகுதிகளில் எழுந்த மோசமான நெருப்பை அணைக்கும் முயற்சியில் அத்துறையினர் 24 இடங்களில் ஈடுபட்டிருந்தனர். இத்தாலி மற்றும் போத்துகலில் செய்தி ஊடக அறிக்கைகள், நில ஊகக்காரர்களையும், குற்றஞ்சார்ந்த தன்மையுடைய நபர்களையும் நிலச்சொத்து மறுவளர்ச்சிக்காக வேண்டுமென்றே இத்தீவிபத்துக்களையேற்படுத்தி லாபம் பெறப்பார்க்கின்றனர் என்று குற்றச்சாட்டுகின்றன.

குரோஷியாவில் சில பகுதிகளும், ஜேர்மனியில் சில பகுதிகளும், பிரான்ஸின் மத்தியதரைக்கடல் தீவுப் பகுதியான கோர்ச்சிக்காவிலும் கூட காட்டுத்தீக்கள் பரவியுள்ளன. பெருமளவு தெற்கு கடற்கரைப் பகுதியில் ஜூலையில் தாக்குதல் நிகழ்ந்த அளவு பிரான்ஸ் இந்தக் கோடையில் மிக மோசமான அளவு தீச்சேதத்தைச் சந்தித்துள்ளது. கான் பகுதியைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளிலும் நிறைய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐரோப்பா முழுவதும், குறிப்பாக ஜேர்மனியில், கடும் வெப்பத்தின் விளைவாக ஆறுகள் சூடடைந்துள்ளன. ஆறுகளிலுள்ள மீன்கள் எண்ணிக்கை இதையொட்டிப் பெருமளவு குறைந்ததோடு, ஆபத்து தரக்கூடிய கடற்பாசிகள் வளர்ச்சி கடலோர வடஜேர்மனியப் பகுதிகளில் தழைத்துள்ளன. இப்பகுதிகள் அனைத்திலுமே தீச்சேதத்தின் விளைவு நீண்ட நாட்களுக்கு விவசாயம், சுற்றுலா, சுற்றுப்புறச்சூழல் ஆகிய துறைகளில் காணப்படும்; காட்டுப் பகுதிகளில் புல் அடிக்கட்டுக்கள் அனைத்துமே தீக்குப் பலியாகிப் போயின. கடந்த வார நெருப்பிற்கு முன்பே ஐரோப்பாவில் பல விவசாயிகள் பல வாரங்கள் மழையின்றியும், அழிந்த காட்டுப் பகுதிகளாலும் நிலங்கள் பெருமளவு உற்பத்திக்குறைவை, குறிப்பாக கோதுமையில் உற்பத்திக் குறைவைக் காட்டும் என புகார் கூறியுள்ளனர்.

உயர்ந்த அளவு வெப்பம், கடுமையான அளவு சக்தி தேவையிலும் பின்விளைவுகளைக் காட்டும். வெப்ப அலையால் ஏற்படும் மின் வெட்டை எவ்வாறு சமாளிக்கலாம் என்று ஆராய ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் இந்த வாரம் நெருக்கடிக் கூட்டங்களைக் கூட்ட இருக்கின்றன. குறைந்துவிட்ட நீரின் அளவு கண்டம் முழுவதும் அணு மின் ஆற்றல் உற்பத்தியைக் குறைத்துள்ளன. உதாரணமாக, பிரான்சின் 58 அணு சக்தி மின் நிலையங்கள் அதன் 70சதவீத மின் தேவையை உற்பத்தி செய்கின்றன; அவை ஆற்றுத் தண்ணீரை குளிரவைக்கும் வகைமுறையில் பயன்படுத்துகின்றன; மீண்டும் பயன்படுத்தும் தண்ணீரின் உச்சபட்ச வெப்பநிலை பற்றிய விதிகளை மீற அவர்கள் அனுமதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் வெப்பநிலை குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர்தான் வெப்ப அலையினால் மனிதச் செலவினங்களின் முழுத்தன்மை தெளிவாகும்.

பூகோள ரீதியான வெப்பமடைதல்

உயர்ந்த வெப்பம் சாதாரண வேறுபாடுகளிலிருந்து தோன்றியதா அல்லது பூகோள ரீதியான வெப்பமடைதல் என்பதற்கு ஓர் அடையாளமா என்பது பற்றிய விவாதத்தை வெப்ப அலை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது; தற்பொழுதுள்ள சான்றுகளில் பெருமளவு பூகோள ரீதியின் அடையாளம் என்பதைக் கருதவைக்கிறது. 1998 அதிக வெப்பம் பதிவான ஆண்டு, 1990 களே ஆயிரம் ஆண்டுகளில் அதிக வெப்பம் பதிவான பத்தாண்டுகளாகும். வல்லுநர்கள் 2003, 1998ஐ விடக் கூடுதலானது என்பதை எளிதில் காட்டிவிடும் எனக் கூறுகின்றனர். மேலும் 1860லிருந்து ஜேர்மனியில் பதிவான விவரங்களின்படி அதிக வெப்பம் நிலவிய பத்து கோடைகளில் ஏழு கோடைகள் கடந்த 13 ஆண்டுகளில் இருந்திருக்கின்றன.

உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (WMO), கடந்த மாதம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "வெப்ப நிலையில் 20ம் நூற்றாண்டில் தோன்றிய உயர்வு கடந்த 1000 ஆண்டுகளில் எந்த நூற்றாண்டையும் விட மிக அதிகமானதாகும். 1976லிருந்தே இப்போக்கு முழுகால கட்டத்தின் அளவையும்விட மூன்று மடங்கு கூடுதலாகக் காணப்படுகிறது." WMO-ன் கருத்தின்படி, தட்பவெப்பநிலை மாற்றம் ஐரோப்பா, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவில் கடும்புயலுக்கும் ஸ்ரீலங்காவிலும், மற்ற நாடுகளிலும் பெரும் வெள்ளங்களுக்கும் காரணமாக இருந்திருக்கலாம்.

உலக அரசாங்கங்கள் பூகோள வெப்பமடைதலுக்கு செய்த நடவடிக்கைகள் போதாதவை என்பதைக் அண்மைய வெப்பத் தொடர்புடைய நெருக்கடி அம்பலப்படுத்துகிறது. அதனுடைய புள்ளி விவர நிலை பழைமையாகிவிட்டது என்றாலும் சர்வதேச க்யோடோ உடன்பாடு நடைமுறைக்கு இன்னமும் வரவில்லை. உடன்பாட்டின் விதிகளை ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டது; உலகின் மிகப்பெரிய மாசுபடுத்தும் நாடான அமெரிக்கா, புஷ் நிர்வாகத்தின் இசைவுடன் ஒருதலைப்பட்சமாக உடன்பாட்டிலிருந்து விலகிவிட்டது.

ஐரோப்பாவில் பதில்விளைவு

சமீபத்திய வரலாற்றில் கண்டம் இத்தகைய பேரழிவுகளைக் காண்பது முதல் தடவை அல்ல என்றாலும், ஐரோப்பிய அரசியல்வாதிகள் அண்மையில் நிகழ்ந்த வானிலை தொடர்பான பேரழிவுகளுக்கு பொது பீதி கலந்த குறுகிய நடைமுறைப் போக்கை வெளிப்படுத்தி உள்ளனர். 2001ம் ஆண்டு மத்திய தரைப்பகுதி ஐரோப்பாவில் ஒரு பெரும்பகுதி பத்தாண்டுகளில் காணப்படாத காட்டுத்தீயினால் தாக்கப்பட்டும், 1997ல் போலந்தில் நிறைய பகுதிகளிலும் கிழக்கு ஜேர்மனியிலும் பெரும் வெள்ளங்களும் ஏற்பட்டன. மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய ஐரோப்பாவில் பெரிய பகுதி இதுவரை காணாத உயர்ந்த அளவு மழையினால் தாக்கப்பட்டது.

வெள்ளங்கள் எப்போதும் நினைவுகூரத் தக்கனவாய் கடுமையாய் இருந்தன. கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி, தலைநகரம் பிராக் உட்பட செக் குடியரசு தெற்கு மற்றும் மத்திய ஜேர்மனிப் பகுதிகள் அனைத்துமே நீரில் மூழ்கி பெரும் குழப்பத்தையேற்படுத்தின. அப்பொழுது அரசியல்வாதிகள் கைகளைப் பிசைந்து நின்றனர் என்றாலும் போலந்து, ஜேர்மன் அதிகாரிகள் 1997 அழிவிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாததுடன், 2002ல் வந்த பேரழிவிற்கும் தயாராக இல்லை என்பது புலப்பட்டது.

இப்பொழுதும் அதே குறுகிய புத்தியும் தயாரின்மையும் சமீபத்திய வெப்ப அலை மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றிற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் பதில் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. வெப்ப அலை அதன் தடுப்பு பற்றி, ஐரோப்பிய ஒன்றியம் 2001 தீவிபத்துக்களுக்குப்பிறகு கூடுதலான செயற்கைகோள் வெப்பநிலை அறிதல் முறை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வெப்ப அலை மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி போதுமான முன் எச்சரிக்கை ஏதும் தரப்படவில்லை (தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசத் தேவையில்லை).

அத்துடன், தற்போதைய வெப்ப அலை மற்றும் அதன் விளைவுகளை சமாளிப்பதற்கான அவசரநிலை முன்னேற்பாடுகளை, தீயணைத்தல், காடுகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், அவசரநிலை மற்றும் மருத்துவ சேவைகள் ஆகியனவற்றை தனியார்மயமாக்குவதற்கான அரசாங்க நடவடிக்கைகள் பல ஐரோப்பிய நாடுகளில் சீர்குலைத்திருக்கின்றன.

Top of page