World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sinhalese extremist thugs attack arts festival in Colombo

கொழும்பில் சிங்களத் தீவரவாத குண்டர்கள் கலை விழாவுக்கு தாக்குதல் தொடுக்கின்றனர்

By a correspondent
17 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி நவம்பர் 4 அன்று அதிகாரத்தை அபகரிப்பதற்காக முனைந்துவந்த நாட்களில், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக கண்டனம் செய்த பல வித சிங்கள தீவிரவாதக் குழுக்கள், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, சிஹல உறுமய கட்சி கொழும்பில் இடம்பெற்ற இரண்டு நாள் கலாச்சார விழா மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை ஒழுங்கு செய்திருந்தது.

விழாவின் குறிக்கோளானது, 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தால் தோற்றுவிக்கப்பட்ட சந்தேகங்களையும் வேற்றுமைகளையும் தகர்த்தெறிவதன் பேரில், சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்களை ஒன்றிணைப்பதாக இருந்தது. நிகழ்வின் அமைப்பாளர்களான ஹிரு குழுவினர், ஏகாதிபத்திய அனுசரணையுடனான சமாதான முன்னெடுப்புகளுக்கு தமது விமர்சனமற்ற ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வரும் அதே சமயம், இந்த நிகழ்வானது யுத்தத்துக்கும் மற்றும் தீவில் செல்வாக்குச் செலுத்தும் பிரிவினையான இனவாத அரசியலுக்கும் முடிவுகட்டும் பரந்த அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில், முன்னணி சிங்கள மற்றும் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை உள்வாங்கியிருந்தது.

இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஆத்திரமூட்டலாகும். விழாவின் முதல் நாளான அக்டோபர் 29 அன்று, மத்திய கொழும்பில் உள்ள புதிய நகர மண்டப அரங்கினுள் பல சிஹல உறுமய உறுப்பினர்கள் இருந்தனர். பிரசித்தி பெற்ற எழுத்தாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி எஸ். யோகநாதன் தனது உரையை ஆரம்பித்த சமயம், ஒன்றுகூடலை குழப்புவதற்குத் தீர்மானித்திருந்த சிஹல உறுமய உறுப்பினர்கள், கூச்சலிட்டு அவமதிக்கத் தொடங்கினர். வெளியேறுமாறு விடுத்த வேண்டுகோளை நிராகரித்ததை அடுத்து மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சிறிது நேரத்தின் பின்னர், சைக்கிள் சங்கிலிகள், தடிகள் மற்றும் கத்திகளுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதபாணிகள், "தமிழர்களைக் கொல்" என கூச்சலிட்ட வண்ணம் மண்டபத்தை முற்றுகையிட முற்பட்டனர். ஆனால் அமைப்பாளர்கள் அவர்களை துரத்திய போதும் பொலிசார் சும்மா நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இறுதியாக கலகம் அடக்கும் பொலிசாரால் வளாகத்தை விட்டு வெளியேற்றப்படும் வரை மண்டபத்துக்கு வெளியில் இருந்த விழா பதாகைகளையும் கொடிகளையும் கொளுத்தியதோடு கற்களையும் வீசிக்கொண்டிருந்தனர். இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் ஒரு வைத்தியர் உட்பட நால்வர் தாக்குதலில் காயமடைந்ததோடு வைத்தியர் நெற்றியில் கத்திக் குத்து காயத்துக்குள்ளானார்.

சிஹல உறுமய தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க மறுத்துள்ளது. ஆனால், சிஹல உறுமயவின் உப செயலாளர் நிஷாந்த வர்ணசிங்க மற்றும் தேசிய பிக்குகள் சம்மேளனத்தின் முன்னணி உறுப்பினரும் ஒரு வலதுசாரி பெளத்த பிக்குவுமான ஹடிகலே விமலசார ஆகியோரும் நேரடியாகத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆத்திரமூட்டலின் படுமோசமான தன்மையின் காரணமாக வர்ணசிங்க உட்பட ஐந்து சிஹல உறுமய உறுப்பினர்களை சம்பவத்தின் பேரில் கைது செய்ய பொலிசார் தள்ளப்பட்டனர்.

இந்த சிங்களத் தீவிரவாதிகள் இரண்டாவது நாள் விழாவையும் குழப்புவதாக அச்சுறுத்தியிருந்த போதிலும் பொலிஸ் தடைகள் மூலம் வளாகத்துக்கு அப்பால் நிறுத்தப்பட்டனர். ஆயினும் சிஹல உறுமய, தமது அங்கத்தவர்களை விடுதலை செய்யுமாறும், விழா அமைப்பாளர்களையும் விழாவில் பங்கேற்கும் "விடுதலைப் புலி உறுப்பினர்களையும்" கைது செய்யுமாறும் கோரி ஒரு ஆத்திரமூட்டல் ஊர்வலத்தை நடத்தியது. ஊர்வலத்தில் பங்கேற்ற உயர்மட்ட பெளத்த பிக்குகள், ஹிரு குழுவினரையும் சிங்களக் கலைஞர்களையும் அச்சுறுத்தியதோடு அவர்களுக்கு "சிங்களப் புலிகள்" எனவும் முத்திரை குத்தினர். பல விழா அமைப்பாளர்களுக்கும், பங்கேற்றவர்களில் சில முக்கியஸ்தர்களுக்கும் தொடர்ந்தும் தொலைபேசி மூலமும் கடித மூலமும் அநாமதேய மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

ஜனநாயக உரிமைகள் மீதான சிஹல உறுமயவின் அத்துமீறிய தாக்குதலை பல கலைஞர்களும் கண்டனம் செய்தனர். இலங்கையின் முன்னணி நாடக மற்றும் திரைப்பட இயக்குனருமான தர்மசிரி பண்டாரநாயக்க உலக சோசலிச வலைத் தளத்தோடு உரையாற்றும் போது: "எங்களுக்கு மத்தியில் ஒரு பீதி காணப்பட்டதோடு 1983 ஜூலையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் எனக்கு ஞாபகத்தில் வந்தது (யுத்தத்துக்கு வழி வகுத்த தமிழர் விரோத திட்டங்கள் தோன்றியது). சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்பையிட்டு இந்த இனவாதிகள் பீதியடைகின்றார்கள். கலைஞர்களுக்கு சுதந்திரமாக ஒரு படைப்பை உருவாக்க இயலவேண்டும். அண்மைய காலங்களில், நான் எனது படைப்புக்களை தமிழ் பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்ற ஒவ்வொரு சமயத்திலும், என்னை புலிகளுக்காக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறி பல மொட்டைக் கடிதங்கள் மூலம் எனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன," என்றார். இந்த அச்சுறுத்தல்களின் காரணமாக, பண்டாரநாயக்க தீவின் யுத்தப் பிராந்தியமான வடக்கில் உள்ள கலைஞர்கள் பங்கேற்கும் ஒரு தமிழ் நாடக விழாவை ஒத்தி வைக்கத் தள்ளப்பட்டார்.

கொழும்பு விழா மீதான தாக்குதலானது வெறுமனே வானத்தில் இருந்து விழுந்ததல்ல. பல மாதங்களாகவே சிஹல உறுமயவும் மற்றும் கொழும்பு ஊடகங்களில் ஒரு பகுதியும், இது விடுதலைப் புலிகளின் அனுசரணையில் இடம்பெறும் "பொங்கு தமிழ்" பிரச்சாரத்தின் ஒரு பகுதி என கண்டனம் செய்து வந்துள்ளன. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் கலைஞர்களை "விடுதலைப் புலி பயங்கரவாதிகள்" என வர்ணித்த சிஹல உறுமய, அவர்களைக் கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கத் தொடங்கியது. ஐலண்ட் பத்திரிகையும் அதற்கு சரிநேர் சிங்கள மொழிப் பத்திரிகையான திவயினவும், விழாவை "பொங்கு தமிழ்" நிகழ்வு என கண்டனம் செய்யும் சிறப்புக் கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் தலையங்கங்களை வெளியிடுவதன் மூலம், இந்த சந்தர்ப்பத்தை இனவாத பதட்டத்தை தூண்டுவதற்காக பற்றிக் கொண்டது.

தமிழ் அமைப்புகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) விழாவை நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு குறிப்பறிந்து ஆதரவளித்தன. அமைப்பாளர்களுக்கு நிகழ்ச்சியை நடத்துவதற்கு உரிய அடிப்படை ஜனநாய உரிமையை அதிகளவில் உறுதியுடன் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவர்கள் இனவாத மோதல்களை தவிர்ப்பதன் பேரில் நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டும் என பிரகடனம் செய்தார்கள். எந்தவொரு சாட்சியங்களும் இன்றி, இந்த இரு கட்சிகளும் இது விடுதலைப் புலிகளின் வேலை என முத்திரை குத்தின. ஈ.பி.டி.பி.யும் மற்றும் புளொட் அமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டன.

தாக்குதலின் பின்னர் பின்வாங்குவதற்குப் பதிலாக, சிஹல உறுமய விழா அமைப்பாளர்களை கண்டனம் செய்ததோடு வன்முறைக்காக அவர்களைக் குற்றம் சாட்டியது. அது மாத்திரமன்றி, அதன் அறிக்கைகள் கொழும்பு பத்திரிகைகளில் விமர்சனமற்று வெளியிடப்பட்டிருந்தன. தமது உறுப்பினர்கள் பிணையில் விடுதலையான பின்னர், சிஹல உறுமய நவம்பர் 11 அன்று, அதே புதிய நகர மண்டபத்தில் தாக்குதல் நடத்தியவர்களை வீரர்கள் என புகழ்ந்து கொண்டாடும் பொதுக் கூட்டமொன்றை நடத்தியது.

சிஹல உறுமயவின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் கொழும்பில் உள்ள அரசியல் பதட்ட நிலைமைகளின் உற்பத்தியாகும். பல சிங்களத் தீவிரவாத குழுக்கள் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான இனவாத எதிர்ப்பை கிளறிவிடுவதற்காக ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொள்கின்றன. இச் சந்தர்ப்பத்தில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பிரதான கட்சிகளான ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணி மீதான பரந்த அதிருப்தியில் இருந்து பெருமளவிலானதை சுரண்டிக்கொள்ள முன்வந்துள்ளது.

மக்கள் இயக்கமாகவும் மற்றும் மார்க்சிச இயக்கமாகவும் கூட சொல்லிக்கொள்ளும் ஜே.வி.பி.யைப் போலன்றி, சிஹல உறுமயவானது யுத்தத்தில் நேரடியாக இலாபம் பெற்ற இராணுவத்தின் ஒரு பகுதியினர், அரச அதிகாரத்துவம் மற்றும் பெளத்த பெருந் துறவிகளோடு தொடர்புபட்ட மிகவும் வெளிப்படையான ஒரு பாசிச இயக்கமாகும். கடந்த மாதங்களில் சிஹல உறுமய தமது சொந்த அடித்தளத்துக்கு முண்டு கொடுப்பதன் பேரில் ஒரு தொடர்ச்சியான இனவாத ஆத்திரமூட்டல்களை அரங்கேற்றியது.

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரும் தமிழ் சிங்கள கலாச்சார விழா மீதான சிஹல உறுமயவின் தாக்குதலை பகிரங்கமாக கண்டனம் செய்ய வேண்டும். இது இன முரண்பாடுகளை தூண்டுவதையும், சந்தேகம், பீதி மற்றும் இரண்டு தசாப்த கால அழிவுகரமான யுத்தத்துக்கு வழிவகுத்த வேற்றுமையான காலகட்டத்தை பேணிக்கொள்வதையும் இலக்காகக் கொண்டதாகும்.

Top of page