World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Reflections on the 40th anniversary of the Kennedy assassination

கென்னடி படுகொலையின் 40 ஆண்டுகள் நிறைவில் சில நினைவுக் கருத்துக்கள்

By David North and Bill Vann
22 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜோர்ஜ் டபுள்யூ. புஷ், அரசியல் சதியால் ஜனாதிபதி பதவியில் இருத்தப்படுவதற்கு 37 ஆண்டுகள் முன்பு, 1963, நவம்பரில், சதித்திட்டமுறையில் ஒரு ஜனாதிபதி எவ்வாறு பதவியிலிருந்து அகற்றப்பட முடியும் என்பதை ஜோன் எப். கென்னடி படுகொலை செய்யப்பட்டமை நிரூபித்தது.

டல்லாஸில் கென்னடி படுகொலை செய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னரும், கொலையின் உண்மைகள், இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், கொலையைப் பற்றிய அதிகாரபூர்வமான வெளியீட்டுத்தகவல், இன்னமும் பொதுவாக மூடிமறைக்கப்பட்டுள்ளது என்றுதான் பரவலாகக் கருதப்படுகிறது.

கென்னடி கொலையுண்டமை ஒர் அரசியல் குற்றமாகும். அதற்கு அரசியல் முறையிலான ஒரு விளக்கம் தேவை. இந்த அடிப்படைக் கொள்கையை மறைப்பதற்குத்தான் வாரன் கமிஷன் (Warren Commission) நியமிக்கப்பட்டதுடன், இந்தக் கருத்து நாற்பது ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல முக்கியத்துவம் நிறைந்த, கொலைசெய்யப்பட்டதின் குற்றத்தடையங்கள் பற்றிய கேள்விகள் மர்மத்தில் ஆழ்ந்துள்ளபோது, தற்போது அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினர் மத்தியில் உள்ள நெருக்கடிகளும், பிளவுகளும், கென்னடி அரசாங்கச் சதி விளைவினால் பாதிக்கப்பட்டவர் என்பதையும், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளின் போக்கை மாற்றுவதற்கு, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினராலேயே இலக்கு வைக்கப்பட்டவர் என்பதையும் திட்டவட்டச் சான்றுகளுடன் காட்டுகின்றன. இக்குற்றம், அக்காலத்திய அரசியல் சூழ்நிலை, மற்றும் அதன் தொலைநோக்கு முக்கியத்துவம் இவற்றில் ஆழமாக வேர்விட்டிருந்தன.

கொலைநடந்து நிறைவு விழா முடிந்ததைப்பற்றி, செய்தி ஊடகம், ஒருபுறத்தில் உணர்வுப் பெருக்கத்துடன் அவருடைய வரலாற்றை, "காமிலெட்" (Camelot) பெரும்புகழ் உடையவர் என்றும், மறுபுறத்தில், கென்னடி மாத்திரை உட்கொள்ளும், பெண்கள் பின்சுற்றும், அரசியல் திறமை அற்றவர் என்பதற்குமேல் வேறொன்றுமில்லை என உதறித்தள்ளும் விஷமத்தனமான மற்றும் குணநலன்களைத் தாக்கும் வேலைகள், வலதுசாரிக் கருத்தாய்வினரால் வைக்கப்படுகிறது.

அவர் காலத்தில் கென்னடி வாழ்ந்த முறையை, 40ஆண்டுகளுக்குப் பின்னர், பின்மதிப்பீட்டின் அனுபவத்தை வைத்து மதிப்பீடு செய்வதுதான் நேர்மையான மதிப்பீடாகும். மார்க்சிஸ்டுகள், அரசியலில் வர்க்க மதிப்பீட்டிலிருந்துதான் தொடங்குவர், கென்னடி அமெரிக்க நிதி ஆளும் செல்வந்த தட்டினை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதும், தொழிலாள வர்க்கத்தின் எதிரி மற்றும் சோசலிசத்தை நனவாக எதிர்த்த பகைவர் என்பதும் மார்க்சிசவாதிகள் உணர்ந்ததாகும்.

அதே நேரத்தில், இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம், ஒரு தனிமனிதனுடைய வாழ்விலும், பெரும்பாலான உழைக்கும் மக்கள் மீதான அதன் தாக்கத்திலும், ஒரு சோகத்தன்மையைக் கொண்டிருந்து என்பதையும் நாம் அறிவோம்.

கென்னடியின் மிகச்சுருக்கமான நிர்வாகத்தின் போற்றும் தன்மையுடைய ஈர்ப்பு, தற்செயல் நிகழ்ச்சி அல்ல. அவரும், அவருடைய அரசியல் வாழ்வும், அடர்த்தியான முறையில், அக்காலகட்டத்தின் தீவிர சமூக, அரசியல் முரண்பாடுகளை ஆழ்ந்து வெளிப்படுத்தியவை ஆகும்.

சமீபத்திய ஆண்டுகளில், கென்னடியின் தனிப்பட்ட வரலாறு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளன. இவற்றைப்படித்த பின்பு, நமக்கு இவருடைய இரட்டைவாழ்வுத் தன்மைகளைக் காணும் உணர்வுதான் ஏற்படுகிறது. அவருடைய பொதுவாழ்வுத் தோற்றத்தின் இயல்பு, உயர்ந்த குணங்களின் இருப்பிடமாகவும், முழுமையான விரைவாற்றல் படைத்ததாகவும், அழகிய மனைவி, இரு குழந்தைகள் கொண்ட, ஜனாதிபதி என்று காணப்படும். இவருடைய ஆளுமையில், ஐயத்திற்கிடமின்றி, ஈர்க்கும் தன்மையும், தன்னையே குறைகூறிக்கொள்ளும் நகைச்சுவையும், தன்னுடைய சொந்த வாழ்விலும், இரண்டாம் உலகப்போரின் இரத்தம் சிந்திய போக்கினாலும் ஏற்பட்ட அனுபவங்களின் விளவுகளால் தோன்றிய, தனிப்பட்ட விதிவழிப்பற்று, ஆகியவை மறுக்கமுடியாதவகையில் ஈர்க்கப்பட்டன.

ஆனால் பொதுப்பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட தோற்றத்திலோ, நோய்களின் பாதிப்பு, வலிகுறைப்பு மாத்திரைகளை எப்பொழுதும் உட்கொள்ளவேண்டிய கட்டாயம், மாஃபியாக்களால் வழங்கப்பட்ட விலைமாதர்களுடன் மூர்க்கமான சல்லாபங்கள் முதலியவை உள்ளன.

இப்படிப்பட்ட இரட்டைத்தன்மை அவருடைய அரசியல் வாழ்விலும் செயல்பட்டிருந்தது. அவரால் ஒரு இலட்சியவாத உணர்வைத் தட்டி எழுப்பும் உரைகளை வழங்க முடிந்தது- அது அரசியல் பக்குவமற்ற தன்மையிலும் அக்காலத்திய பிரமைகளிலும் வேரூன்றி இருந்தது என்பதில் ஐயமில்லை- பெரும்பாலான அமெரிக்க இளைஞர்களுக்கு அவர்கள் சமுதாயப் போராட்டங்களில் ஈடுபடவேண்டும் என்ற ஊக்கத்தின் தொடக்கத்தை, அவரே நினைத்தும், விரும்பியும் பார்க்காத அளவிற்கு ஏற்படுத்தின.

அதேநேரத்தில், அவர் உலகெங்கிலும் மிருகத்தனமான எதிர்ப்பு இயக்கங்களிலும், படுகொலைகளுடனும் தொடர்பு உடைய கொடூரமான சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தார். இவருடைய நிர்வாகம், தீவிர கம்யூனிச-எதிர்ப்பு அமைப்புக்களுடனும் அரசியல் கொலைகாரர்களுடனும், குற்றஞ்சார்ந்த பிரிவுகளுடனும், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்களுக்காக, அவருடைய அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவரைத் தொடர்ந்து முறியடிக்கவும் இரகசியமாகச் செயல்பட்டது. முடிவில் இத்தகைய கூறுபாடுகளில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, அவருடைய படுகொலைக்கே எளிதில் வழிவகுத்தது.

இருந்தபோதிலும்கூட, கென்னடியின் சில உரைகளின் பொருளுரையை, கடந்த நாற்பது ஆண்டுகளில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் எந்த அளவிற்கு இழிவுற்று சரிந்துபோய்விட்டது என்பதைக் காண்பதற்காகவாவது, பரிசீலனை செய்வது உகந்ததேயாகும். ஒரு பொது உரை உண்மையான சமூக, ஒழுக்க நெறிகளைக் கொண்டு, பொதுமக்களின மிக உயர்ந்த அறிவுஜீவி தரத்தைக் கவரும் வகையில் அமையவேண்டுமென நினைத்த கடைசி அமெரிக்க ஜனாதிபதி கென்னடிதான் என்றுகூடச் சொல்லமுடியும்.

பரந்த அளவிலான அணுவாயுதச் சோதனைத் தடுப்பு உடன்பாட்டிற்காக, சோவியத் ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பது பற்றியும், வாயுமண்டலத்தில் அணுவாயுதச் சோதனை நடத்துவதற்கு அமெரிக்காவே தடை விதித்துக் கொள்ளும் என்பது பற்றியும் அறிவித்து, 1963 ஜூன் 10 அன்று, அமெரிக்கப் பல்கலைக்கழக உரையில் கென்னடி கூறினார்:

"....நம்முடைய வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது; ஆனால் நம்முடைய கவனத்தைப் பொது நலன்களுக்காகவும், எவ்வாறு அந்த வேறுபாடுகள் களையப்படலாம் என்பது பற்றியும் கவனம் செலுத்துவோம். நம் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளமுடியாவிட்டாலும்கூட, குறைந்த பட்சமாக, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டாலும், உலகத்தைப் பாதுகாக்க நம்மால் உதவ முடியும். ஏனென்றால், இறுதிப் பகுப்பாய்வில், மிக முக்கியமான அடிப்படைத் தொடர்பு நாம் அனைவரும் இந்தச் சிறிய பூமியில்தான் வாழ்கின்றோம். ஒரே காற்றைத்தான் சுவாசிக்கின்றோம். நம்முடைய குழந்தைகளின் வருங்காலம் சிறந்ததாக அமையவேண்டும் என்று நினைக்கின்றோம். மேலும், நாம் அனைவருமே இறப்புத்தன்மை உடையவர்கள்தாம்."

இதற்கு மறுநாள், நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில், தான் கூட்டாட்சியின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளை, அலபாமா பல்கலைக் கழகத்திலிருந்த இனப்பாகுபாடுகளை அகற்றுவதற்கான முயற்சிகளைச் செயல்படுத்த ஆணையிட்டிருப்பதாகவும், குடியுரிமை வழியில் சட்டபூர்வமாக இனப்பிரிவைத் தடை செய்வதற்கான திட்டங்கள் இருப்பது பற்றியும் அறிவித்தார்.

"அமெரிக்காவில் இப்போழுது பிறக்கும் நீக்ரோக்குழந்தை, நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்திருந்தாலும், இதேநாளில், இதே இடத்தில் பிறக்கும் வெள்ளைக்காரக் குழந்தைக்கு கிடைக்கும் வாய்ப்பில் பாதி பங்குதான், உயர்நிலைக்கல்வியை முடிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது; ஒரு வெள்ளைக்காரர், கல்லூரிப்படிப்பை முடிக்கும் வாய்ப்பில் மூன்றில் ஓரு பங்குதான் இதற்கு உள்ளது; ஒரு நல்ல சிறப்புப்பணி கிடைக்கும் வாய்ப்பில், மூன்றில் ஒரு பங்குதான் உள்ளது; ஒரு வெள்ளைக்காரரைவிட இருமடங்கு வேலை இன்மை நிலையும், வெள்ளையரைப்போல் ஏழில் ஒரு பங்குதான் ஆண்டு ஒன்றுக்கு 10,000 டாலர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பும், சராசரி ஆயுட்காலத்திலும் ஏழு ஆண்டுகள் குறைவாகத்தான் இருக்கும் நிலையும், வெள்ளையரில் அரைப்பகுதிதான் சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளன....

"லிங்கன் அடிமைகளை விடுவித்துச் சட்டம் இயற்றி நூறு ஆண்டுகள் கடந்தும், இன்னும் தாமதமாகவே, அவர்களுடைய வழித்தோன்றல்கள், பேரக் குழந்தைகள், முழுமையான சுதந்திரத்துடன் வாழவில்லை. அநீதியின் தளைகளிலிருந்து அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. சமுதாயப், பொருளாதார அடக்குமுறைகளிலிருந்து அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதன் நம்பிக்கைகள், பெருமை பேசிக் கொள்ளுதல் எல்லாம் ஒருபுறம் இருந்தபோதிலும், இந்நாடு, அதன் குடிமக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழும் வரை, முற்றிலும் சுதந்திரம் பெற்ற நாடாக கருதப்படமுடியாது."

அவர் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், மாசாசுசெட்ஸில் (Massachusetts) உள்ள அமெர்ஸ்ட் கல்லூரியில், 1963ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி நிகழ்த்திய உரையில், அமெரிக்காவில் சமூகசமத்துவம் அற்ற நிலை பற்றியும், சமுதாயத்தில் கலைஞரின் பங்கு பற்றியும் கருத்துக்களைத் தெரிவித்தார்:

"சலுகைகள் இங்கு உள்ளன; சிறப்புச் சலுகைகளுடன் பொறுப்பும் உடன் செல்லும். ... 1962 மார்ச் மாதம், 18 வயது, அதற்கு மேலும் இருப்பவர்கள், உயர்நிலைப்பள்ளி கற்கமுடியாதவர்கள், மொத்த உழைக்கும் பிரிவினரில் 46 சதவிகிதமாக இருந்தனர்; அவர்கள் மொத்த வேலையில்லாத மக்களில் 64 சதவீதம் ஆவர். 1958ல் அமெரிக்க கடைக்கோடியிலுள்ள ஐந்தில் ஒரு பங்கு குடும்பங்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் நாலரை சதவிகிதம்தான் பெற்றனர்; உயர்மட்ட ஐந்தில் ஒரு பங்கினரோ, 44.5 சதவீதம் பெற்றிருந்தனர். இந்த நாட்டில் வழிவழியாகப் பெறப்படும் சொத்துக்களும் உள்ளன; வழிவழியாகப் பெறப்படும் வறுமையும் உள்ளது. இந்தக் கல்லூரிப் பட்டதாரிகளும், இதேபோன்ற மற்றய கல்லூரிப் பட்டதாரிகளும், வாழ்க்கையைக் கூடுதலான வாய்ப்புக்களுடன் தொடங்க வாய்ப்புள்ளவர்கள், சமுதாயப் பணிக்கும் தங்கள் திறமையையும், பரந்த பரிவுணர்வையும், உணர்ந்து கொள்ளும் சக்தியையும், கருணையையும் கொடுக்க முன்வரவில்லையெனில், இந்த மகத்தான குடியரசின் பணிக்கு தங்கள் நற்பண்புகளையும், இயல்புகளையும் அர்ப்பணிக்க முன்வரவில்லையெனில், நம்முடைய ஜனநாயகம் எந்த நோக்கங்களுக்காக நிறுவப்பட்டதோ, அவை தவறானவை என்று ஆகிவிடும்...."

"தன்னுடைய உண்மையைப்பற்றிய பார்வையில் எவ்வளவு விசுவாசத்தோடு இருந்தாலும், ஒரு குறுக்கீடு செய்யும் சமுதாயத்திற்கும், அதிகாரம் செலுத்தும் அரசாங்கத்திற்கும் எதிராக, தனி மனித, மனத்தையும், உணர்வுகளையும் பொறுத்தவரையில், வெற்றியாளர் பட்டியலில் அவன் கடைசியாகத்தான் இருக்கிறான். ஒரு பெரிய கலைஞன், ஒரு தனிமையானவனாகத்தான் உள்ளான். பிராஸ்ட் (Frost) குறிப்பிடுவதுபோல், உலகத்தோடு, அவன் ஒரு காதலனின் ஊடலைத்தான் கொண்டுள்ளான். உண்மையைப்பற்றி தன்னுடைய உணர்வுப் பெருக்கத்தை தொடருகையில், அவன் காலவெள்ளத்தைப் பலநேரமும் எதிர்த்துத்தான் போராட வேண்டும். இது அனைவரையும் மகிழ்விக்கும் பங்கு அல்ல. தன்னுடைய வாழ்நாளில் ரொபேர்ட் பிராஸ்ட் பெரும் மதிப்பை பெற்றிருந்தார் என்றால் அவர் கூறிய இருண்ட உண்மைகளைப் பலரும் பொருட்படுத்தாமல் இருக்கத் தயாராகத்தான் இருந்தனர்.

"சில நேரங்களில், நம்முடைய மாபெரும் கலைஞர்கள், நம்முடைய சமுதாயத்தைப் பற்றி மிகுந்த விமர்சனப்பார்வை கொண்டிருந்தால், அது அவர்களுடைய உய்த்து உணரும் தன்மையையும், நீதியின்பால் அவர்கள் கொண்டிருந்த அக்கறையின் காரணமாகத்தான் ஆகும். எந்தப்பெரிய கலைஞரையும் இவை ஊக்குவித்து, அவரை நம் நாடு அதன் உயர்ந்த திறனை அடையவில்லை என்ற உணர்வை அறியும்படி செய்யும்."

தற்காலத்தில் யாராவது முக்கிய அரசியல் பிரமுகர் இப்படிப்பட்ட கருத்துக்களைக் கூறுவார் என்று கற்பனையாவது செய்து பார்க்கமுடியுமா? கென்னடியின் நிர்வாகத்தில், பெரும்பாலும் சிறந்த தேர்ச்சியுடைய உரையெழுதுபவர்களும், அறிவாளிகளும் கூறிய சொற்கள் இவை என்றே இருக்கட்டும். இப்பொழுதும் திறமையுடன் உரையெழுதுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எதை எழுதுவதற்கு என்றால், ஜோர்ஜ் டபுள்யு. புஷ்ஷினால் உதிர்க்கப்பட்ட அரசியற் பன்றி உறுமலில், "நீங்கள், எங்களுடன் இருக்கிறீர்கள், அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள்" என்பது போன்றவற்றையும், அதேபோல ஜனநாயக கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக வரவிரும்பும், களத்திலுள்ள அரசியல் சிறுமதியாளர்களின் கருத்தை எழுதவும்தான்.

சமூக நீதிக்கும், சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுப்பதும் இலட்சியவாதமும் ஒரு திட்டவட்டமான அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன. கென்னடி சகாப்தம், அடிப்படையில் அமெரிக்கத் தாராண்மைவாதத்தின் உயர்ந்த அலையைப் பிரதிநிதித்துவம் செய்தது.

கென்னடி படுகொலை செய்யப்பட்டது, 1933ல் பிராங்க்ளின் டெலினோ ரூஸ்வெல்ட் பதவிக்கு வந்த 30 ஆண்டுகள் ஆகியிருந்தது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். படுகொலையிலிருந்து தற்போதைய காலத்தைவிட இதுகால அளவில் குறைந்ததேயாகும். சமூக இயக்கத்தின், வெடிப்புடைய தன்மை எவ்வாறு வெளிப்பட்டு, புதிய பொருளாதார ஏற்பாட்டு (New Deal) சீர்திருத்தங்கள் செயல்ப்படுத்தப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதோ, அது கென்னடியின் காலத்தில், இன்னமும் இருந்தது. AFL-CIO ஆகியவற்றால் தோற்றுவிக்கப்பட்ட, பெரும் தொழிற்சங்க அமைப்புக்கள், அமெரிக்க அரசியல் வாழ்வில் இன்னும் ஒரு பெரிய சக்தி என்பதைப் பிரதிநிதித்துவம் செய்தன.

அமெரிக்க முதலாளித்துவம், அதன் அரசியல், பொருளாதார அதிகாரத்தின் உச்சக்கட்டத்தின் நிலையில்தான் நின்றிருந்தது. அது மகத்தான சமூக செல்வத்தைக் குவித்திருந்தது, அதேவேளை புதிய பொருளாதார ஏற்பாட்டுடன் அடையாளம் இனம்காணப்பட்ட சமூக சீர்திருத்தக் கொள்கைகளைத் தொடரவும் ஆழப்படுத்தவும், அங்கு பரந்த ஆதரவுத் தளம் இருந்தது.

உயர்ந்து பெருகும் முரண்பாடுகளும் மோதல்களும்

கென்னடியின் கொள்கைகளால் கட்டுப்படுத்த முடியாத, மாபெரும் பதட்டங்களும், முரண்பாடுகளும் அந்த அடிப்படைகளைச் சிதறடிக்கத் தயாராக இருந்தன. கென்னடி பேச்சின் புதிய பொருளாதார ஏற்பாட்டியம் மற்றும் இலட்சியவாதம் ஆகியவற்றால் ஒருபுறத்தில் தொழிலாளர்கள், கறுப்பு அமெரிக்கர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரிடையே ஊக்குவிக்கப்பட்ட நம்பிக்கைகள், மறுபுறத்தில் அக்கொள்கைள் அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பான -முதலாளித்துவத்திற்கும்- இடையே, பெரிய பிளவு நிலவியது.

உண்மையான, சமூக சீர்திருத்தத்திற்காக விழையும் மில்லியன் கணக்கான மக்களுடைய அபிலாசைகள், உற்பத்திச் சக்திகள் தனிச்சொத்துடைமையின் அடிப்படையிலான ஒரு அமைப்பில் தீர்த்து வைக்கப்பட இயலாதது ஆகும். 1963லியே ஆழ்ந்த பொருளாதார முரண்பாடுகளின் வலிமை தாங்கமுடியாமல் டாலர் விரிசலைக் காணும் நிலை இருந்தது. பெருமளவில் வளர்ந்த பற்றாக்குறையும், விரிவடைந்து கொண்டிருந்த வெளிநாட்டு முதலீடும், வளர்ந்து வரும் இராணுவச் செலவுகளும், சமூக சீர்திருத்தம் நிலைகொண்டிருந்த உள்நாட்டுச் செல்வக் கொழிப்பைக் கீழறுத்தன.

இந்தச் சூழ்நிலையின் கீழ், கென்னடி நிர்வாகத்தின் கொள்கைகளே, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரின் போட்டிப்பிரிவுகளுக்கு இடையிலான உள்மோதல்கள் மற்றும் கடும் முரண்பாடுகளால் குறிக்கப்பட்டன. இந்த மோதலுற்ற சமூக சக்திகளைச் சமன்படுத்தவேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருந்தது.

எஃகுத் தொழில்துறை நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சமரச ஒப்பந்தத்தை தலையீடு செய்து கொண்டுவந்தபின், 1962ல் கென்னடி, அமெரிக்க எஃகுத் தொழில் நிர்வாகத்தை, ஒரு டன்னுக்கு 6 டாலர்கள் விலை உயர்த்தியதற்கு கடுமையாகத் தாக்கினார். அதை எதிர்த்து பொதுப் பிரச்சாரம் நடத்தி, பொது நடுவர் மன்றக் குற்ற விசாரணைக்கு அதைக் கொண்டுவந்து, நிர்வாகம் அதை ரத்து செய்யும் வரை போராடினார். அந்த நேரத்தில் அவர் கூறினார்: "என் தகப்பனார் எப்பொழுதும், எல்லா வணிகர்களும் நாய்களுக்கு பிறந்ததுகள் (Sons-of-bitches) என்று கூறுவதுண்டு. நான் அதை நம்பியதில்லை; இப்பொழுது அதை நம்புகிறேன்." பின்னர், கம்பனி அதன் விலையை உயர்த்துவதற்கு அவர் அனுமதி கொடுத்தார்.

1963 அளவில், குடியுரிமைகளுக்கான போராட்டம், அப்பொழுதிருந்த அரசியல் கட்டுப்பாடுகளை மீறி பாரிய மக்கள் இயக்கப் போராட்டமாக மாறியதை, இவர் நிர்வாகம் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. கென்னடியின் கட்சிக்குள்ளேயே, இது வெடிக்கும் தன்மையுடைய நெருக்கடிகளை ஏற்படுத்தியது; அலபாமாவின் கவர்னர் ஜோர்ஜ் வாலஸ், மிசிசிபி கவர்னர் ரோஸ் பார்னட் போன்ற ஜனநாயக கட்சிக் கவர்னர்கள் தேசியக் கூட்டாட்சிக்கு எதிராக உண்மையில் போர்க்கொடி எழுப்பக் கூடிய அளவிற்கு அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது. இறுதியில் இந்த மோதல் ஜனநாயகக் கட்சியினரை பிளவுபடுத்தியது. ஜனநாயகக் கட்சி முன்னர் புகழாரம் சூட்டியிருந்த "திடமான தெற்கு" கொடுத்த, சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி ஜனநாயக கட்சியின் ஜனாதிபதியாக கென்னடி இருந்தார். அதேபோல் இவர்தான் வெள்ளை மாளிகையைப் பிடித்த வடகிழக்குப் பகுதியின் தாராண்மைவாதியும் ஆவார்.

அமெரிக்கத் தாராண்மைவாதமானது, அரசியல் ரீதியாகவும் புத்திஜீவித ரீதியாகவும், ஒரு பொய்யுரையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது ஆகும். 1930, 1940களில் பெரும் சமூக கொந்தளிப்பை, அது பெளஸ்சியன் (Faustian) சமரசக் கொள்கையாலும் அரசியல் பிற்போக்குத்தனத்தாலும் சமாளித்து மீண்டது. அமெரிக்க அரசியல் நடைமுறையில், கம்யூனிச எதிர்ப்பு, ஏற்கப்பட்ட சிந்தனையாக நின்று, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டினாலும் தழுவப்பெற்றது.

கென்னடியின் இலட்சியவாத பேச்சுக்களின் பின்னணியில், உலகெங்கிலும் அடக்குதல்களும், கொடுமைப் படுத்துதல்களையும், இயல்பாகக் கொண்டிருந்த முதிர்ச்சியான ஏகாதிபத்திய அரசின் கருத்தியல் இருந்தன. மனித உணர்விற்குப் பாராட்டுப் பாடல்களை ஒலித்தவாறே, கென்னடி நிர்வாகம், தன்னுடைய இரு பாதங்களையும் சகதியிலும் இரத்தத்திலும் உறுதியாக ஊன்றி நின்றது.

அமைதிப்படை (Peace Corps), பச்சைச் சீருடை (Green Berets) என்ற இரு அமைப்புக்களையுமே, நிறுவியதற்காக, இந்த நிர்வாகம் நினைவு கொள்ளப்படுகிறது. இரண்டுமே, அமெரிக்க நலன்களை வெளிநாடுகளில் மேம்படுத்த வந்த கருவிகளாக இருந்தபோதிலும், ஒன்று உலக வறியவர்களுக்காக, இளம் அமெரிக்கர்கள் தங்களையே தியாகம் செய்யத் தூண்டியபோது, மற்றொன்று அதே வறியவர்களை, வாஷிங்டனின் கொள்கைகள் மற்றும் அமெரிக்கப் பெருநிறுவனங்களின் நலன்களை அவர்கள் சவால்செய்தால், அவர்களைக் கொலை செய்வதற்கு இளைஞர்களை ஆட்தேர்வு செய்தது.

புரட்சியின் அச்சுறுத்தல், ஒடுக்கப்பட்ட உலக ஒடுக்கப்பட்ட மக்களின் சோசலிசம், கம்யூனிசம் இவற்றிற்கான வேண்டுதல்கள் ஆகியவற்றிற்கு, புலன்களால் மிக அறிந்து கொள்ளும் மற்றும் நீண்டகாலக் கண்ணோட்டம் கொண்ட ஆகியவற்றைப் புரிந்து கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளின் பதில்தான் கென்னடியின் பொது அழைப்பில் காணப்பட்ட சமூக முன்னேற்றம், இலட்சியவாதம் மீதான வலியுறுத்துதல் என்பது சிறிய அளவிலானதல்ல.

ஆனால், அந்த அச்சுறுத்தலை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது, ஆளும் செல்வந்த தட்டினருக்குள்ளே நீடித்த மோதலின் கருப்பொருளாக இருந்தது, இறுதியில் அது கென்னடியின் உயிரையும் பறித்தது.

முதலில் அங்கே கியூப பிரச்சினை ஏற்பட்டது. தனக்குமுன் ஜனாதிபதியாக இருந்த ட்வைட் டி. ஐசன்ஹோவரின் திட்டமான, CIA யிடம் பயிற்சி பெற்ற வலதுசாரிப் புலம் பெயர்ந்தோரைக் கொண்டு, கியூபாவின்மீது படையெடுப்பதைச் செயலாற்றுவதற்கு, கென்னடி நிர்வாகம் உத்தரவு இட்டது. இந்தப்படைகள் Bay of Pigs ல் தலைகுனியும் அவமானத் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து, கென்னடி அப்படைக்கு கூடுதலான உதவி கொடுத்துக் காப்பாற்ற மறுத்துவிட்டதால், புலம்பெயர்ந்தோர், CIA புரவலர்கள், இருபுறத்தினரும் கடுங்கோபமடைந்தனர். இந்த அவமான நெருக்கடியைத் தொடர்ந்து, கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவை, மாஃபியா ஒத்துழைப்புடன், படுகொலை செய்வதற்கு CIA ஒரு இரகசியத் திட்டம் தீட்டியது.

1962ல், கியூபாவிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது பற்றிய நெருக்கடி, அமெரிக்கா கியூபாமீது படையெடுக்காமல் இருக்கும் என்றும், துருக்கியிலிருந்து ஏவுகணைகளைத் திருப்ப பெற்றுக்கொள்ளுவதாகவும் கென்னடி உறுதியளித்ததின் பேரில், சோவியத் ஒன்றியம் விலகிக் கொள்வதாக அறிவித்தவுடன், முடிவிற்கு வந்தது.

இந்த உடன்பாடு, மாஸ்கோவுடன் மறு ஆண்டு பேச்சுவார்த்தை செய்யப்பட்ட அணுவாயுத சோதனைத் தடுப்பு உடன்படிக்கையுடன் சேர்த்து, இராணுவம் மற்றும் CIA இரண்டினுடைய சிலபிரிவுகளில் -மாஃபியாவில் CIA ன் சில கூட்டாளிகள், புலம்பெயர்ந்த கியூப வலதுசாரி அணிகளைப் பற்றிக் கூறத்தேவை இல்லை- அடிப்படைக் காட்டிக்கொடுப்பு என்று பார்க்கப்பட்டன.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தீவிர வலதுசாரிப் பிரிவுகளிடையே, சோவியத் ஒன்றியத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தலும், அணுவாயுதப் போட்டியில் கொண்ட சமரசமும், முற்றிலும் கசப்பான கருத்துக்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. கென்னடி சமரசத்தை விரும்பியபோது, இவை இராணுவமுறையில் மோதி, சோவியத் ஒன்றியத்தை அழிக்கவேண்டும் என்று விரும்பின. அமெரிக்க அரசின் மையத்தில் இக்கொள்கைப் பிளவுகள் ஆழ்ந்தும் கடுமையாகவும் விளங்கின.

இதைத் தொடர்ந்து, வியட்நாமில் நீண்ட நாட்கள் நிகழ்ந்த போர் தொடங்கியது. ஓர் இராணுவ ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, வியட்நாமின் சக்திவாய்ந்த மனிதர் Ngo Dinh Diem, படுகொலை செய்யப்பட்ட செயல், கென்னடியின் படுகொலைக்கு முன்று வாரங்கள் முன்புதான் நடந்தது. கொலையைப் பற்றி, தனிப்பட்ட கொடூரமான அதிர்ச்சி என கென்னடி குறிப்பிட்டிருந்தாலும்கூட, அதை அப்படியே எடுத்துக்கொண்டாலும், இராணுவ ஆட்சி ஏற்படுத்த ஒப்புதல் கொடுத்து இருந்ததால், இவர்தான் அதற்குப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கூடுதலான உண்மையும் வெளிப்படுகிறது.

அவர் இறக்கப் போகும் நேரத்தில், வியட்நாமில் அமெரிக்கத் தலையீட்டை தீவிரப்படுத்துதல், அல்லது வாலைச் சுருட்டிக்கொண்டு பேசாமல் திரும்பிவிடுதல் என்ற முடிவகளில் ஏதேனும் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. எந்த வழியானாலும், அவருடைய நிர்வாகத்திற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொண்டிருந்ததை முன்வைத்தது.

கடந்த 40 ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாற்றுப் போக்கை, கென்னடி படுகொலையின் தாக்கம் என்று கூறிவிடமுடியாது. அமெரிக்காவிற்குள்ளேயே இருந்த சமூக மோதல்கள், உலக முதலாளித்துவத்திற்குள்ளேயான முரண்பாடுகள், கென்னடி இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், லிண்டன் ஜோன்சனுடைய துரதிருஷ்ட நிர்வாகத்திற்குக் காட்டியது போலவே , அவை தங்கள் அழுத்தத்தைக் காட்டியிருக்கும்.

இருந்தபோதிலும் கூட, கென்னடியின் படுகொலை, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை வலதுபுறத்திற்கு மாற்றிய நோக்கத்தைக் கொண்டிருந்த ஓர் அரசியல் நடவடிக்கையே ஆகும். அந்த சதித்திட்டம் தன்னுடைய நோக்கங்களை செயல்படுத்துவதில் வெற்றியைத்தான் அடைந்தது. மேலும், அது, ஜனநாயக கட்சியின் தாராண்மைப் பிரிவிலிருந்த மிகத்திறமையான தலைவர்கள் மற்றும் மக்கள் உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர்கள் -மார்ட்டின் லூதர் கிங், ரொபேர்ட் கென்னடி போன்றோரை-- படுகொலைகள் மூலம் திறமையாக அகற்றும் அரசியல் காலகட்டத்தையும் கொண்டு வந்தது.

கென்னடியின் மரணம், புதிய பொருளாதார ஏற்பாட்டு காலத்திலிருந்து, திறம்படச் செயல்பட்டுவந்த ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குத் தக்க முறையில் முற்றுப்புள்ளி வைத்தது. 1963ம் ஆண்டிலிருந்து தாராண்மைவாதம் தன்னுடைய கால்களின் செயல்திறமையை இழந்துவிட்டது. அதிகரித்த அளவில், இரண்டு பெரிய கட்சிகளுடைய கொள்கைகளும், வெளிப்படையான பிற்போக்கு வாதத்திற்குச் சென்ற ஒரு விலகலைத்தான் குறித்தன.

இன்றைய அமெரிக்காவின் அரசியல் வாழ்வு, 1963 படுகொலையில் தொடர்பு கொண்டு, அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய அதே சக்திகளின் வெற்றியைத்தான் பிரதிபலிக்கிறது. CIA கொலைகாரர்களின் அரசியல் நிழலுலகத்தினர், கொள்ளைக் கூட்டத்தினர் மற்றும் கென்னடி நிர்வாகம் திரைமறைவில் வேலை செய்த ஆளும் செல்வந்தத்தட்டிற்கு உள்ளே உள்ள குற்றவாளிகள் அனைவரும், இப்பொழுது அரசு அதிகாரத்தை வெளிப்படையாக கைப்பற்றிச் செயல்பட முன்வந்துள்ளனர்.

Top of page