World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

SEP statement to Berlin demonstration

நிமீக்ஷீனீணீஸீஹ்: மீபீuநீணீtவீஷீஸீ வீs ணீ யீuஸீபீணீனீமீஸீtணீறீ க்ஷீவீரீலீtஸீஷீt ணீ நீஷீனீனீஷீபீவீtஹ்

ஜேர்மனி: கல்வி ஓர் அடிப்படை உரிமை, விற்பனைப் பொருள் அல்ல

15 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

பேர்லினில் சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட, கல்வி சமூகநலன்கள் திட்டச் செலவினங்கள் குறைப்புக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், சோசலிச சமத்துவ கட்சியால் (ஜேர்மனி) வெளியிடப்பட்டு அதன் ஆதரவாளர்களால் வினியோகிக்கப்பட்ட அறிக்கை கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. [See" Berlin: 40,000 demonstrate to defend education and social programs"]

ஜேர்மனியில் கல்வி உரிமை, கத்திவெட்டு ஆபத்திற்குட்பட்டுள்ள சமீபத்திய சமூக நலன்களில் ஒன்றாகியுள்ளது. இது "கல்விச் சீர்திருத்தம்" என்று கூறப்பட்டாலும், சமூக சீர்திருத்தங்கள் என்ற பெயரில் எவ்வாறு மற்ற ஓய்வூதியச் சீர்திருத்தம், சுகாதாரச் சீர்திருத்தம் உள்ளாகியதோ அதேபோல்தான் இதிலும் சீர்திருத்தத்தைத் தவிர மீதி எல்லாம் உள்ளது. இது அமைக்கப்பட்டுள்ள முறையாவது: சிதைந்தும், அதிகமான மாணவர்களையும் கொண்டுள்ள பல்கலைக்கழகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமைகள் இன்னும் மோசமான நிலைக்குத் மிகப்பெரிய செலவுக்குறைப்புக்களுக்கும், ஆசிரியர் எண்ணிக்கைக் குறைப்பிற்கும் உட்படுத்தப்பட்டு, நோயாளி சித்திரவதைப்படுத்தப்படும் நிலையில் உறுப்பை வெட்டினாலே நன்மை என்று நினக்கக்கூடிய அளவிற்குச் ''சீர்திருத்தம்'' நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இத்திட்டங்கள், சமூக ஜனநாயக கட்சி (SPD), ஜனநாயக சோசலிச கட்சி (PDS), பசுமை கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சிகள் (CDU/CSU), தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) என்று எந்தப் புறத்திலிருந்து வந்தாலும், இலக்கைப்பற்றிய ஒற்றுமையின் அளவு ஒன்றாகத்தான் உள்ளது. அதிகபட்சமாக வாதங்கள் விதிகளின் நுட்பங்களைப் பற்றி இருக்கின்றனவே ஒழிய, எந்தத் திசையை நோக்கிச் செலுத்தப்படவேண்டும் என்பது பற்றி அல்ல. முன்னைய முறையில் கல்வி மனிதாபிமானத்தை ஒட்டி இருந்ததை, இப்பொழுது முற்றிலும் மழைலைப் பள்ளிகளிலிருந்து பல்கலைக்கழகம் வரை மாற்றி அமைக்கும் முயற்சியில் எதுவும் விட்டுவைக்கப்படவில்லை.

அனைத்துத் துறையிலும் வளர்ச்சியில்லாமல், குறுகிய துறைகளில் பெருவர்த்தகத்திற்கு உதவக்கூடிய பயிற்சிதான் கல்வி என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ளது. தனியாரின் சிறுகுழுக் கல்வி உயர்கூடங்கள், பொதுப் பல்கலைக் கழகங்களுக்குப் பதில் அமைக்கப்பட்டுவிடும். அத்தகைய நிறுவனங்களில் சேரக்கூடிய பெரும் வசதி உடையவர்கள் மட்டுமே தங்கள் கல்வியையோ, ஆராய்ச்சியையோ முடிக்க முடியம்; சாதாரண பெற்றோர்களைக் கொண்டவர்களோ அல்லது உரிய தொடர்பு இல்லாதவர்களோ மிகத்துரிதமான முறையில் தரமற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்க நேரிடும்.

பல்கலைக்கழகங்களும், பள்ளிகளும், செலவு-நன்மை ஆய்விற்கு (Cost-benefit analysis) உட்பட்ட முறையில் கொண்டுவரப்படுகின்றன. ஒருவரிடம் உள்ள பணப்பையின் அளவைப் பொறுத்துத்தான் கல்வி என்று அதன் செயற்பாடு ஆகிவிட்டது. உடனடியாக அளிக்கக் கூடிய நன்மையோ அல்லது இலாபம் இல்லாத எதுவும் சிகப்புப் பென்சில் கோட்டிற்குப் பலியாகிவிடும். மாணவர்களுக்கு பன்முக வளர்ச்சியும், மனிதப்பார்வையும் வேண்டும் என்று கருதி, பேர்லினின் மிகக் கெளரவம் வாய்ந்த பல்கலைக் கழகத்தை நிறுவிய Alexander von Humbodt உடைய கருத்துக்கள் இப்பொழுது ஆடம் ஸ்மித், பில் கேட்ஸ் இவர்களுடைய கருத்துக்களுக்கு வழிவிட வேண்டியதாகப் போய்விட்டது. மற்றவர்கள் தனிமனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் நீண்டகால விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கட்டும் என விடப்பட்டுள்ளனர்.

சமூக ஜனநாயக கட்சி, ஜனநாயக சோசலிச கட்சி (PDS) மற்றும் பசுமை கட்சிகள் ஆகியோர்தான் இந்தச் "சீர்திருத்தத்திற்கு" முன்னின்று வாதிடும் கட்சிகளாகும். கிறிஸ்தவ ஜனநாயக கட்சிகள் (CDU/CSU) மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) ஆகியவை தங்கள் கைகளைத் தேய்த்துக்கொண்டு அவர்கள் வழியில் பின்செல்கிறார்கள்.

சமூக ஜனநாயக கட்சி, ஜனநாயக சோசலிச கட்சியின் பேர்லின் செனட்டில் 75 மில்லியன் யூரோக்களை (92 $ மில்லியன்களை) தலைநகரின் மூன்று பல்கலைக் கழகங்களிலிருந்து குறைத்து விட்டது. பேராசிரியர்களில் கால்பகுதியினர், மற்றைய பல்கலைக் கழக ஊழியர்களில் கிட்டத்தட்ட 500 பேர், சில பட்டத்துறைகளிலுள்ளோர் ஆகியவர்கள் இந்த நடவடிக்கையினால் வேலையிழப்பர். இந்தக் குறைப்புக்களைச் செயல்படுத்தும் பொறுப்பு செனட்டர் தோமஸ் பிளீர்ல் (Thomas Flierl) என்னும் ஜனநாயக சோசலிச கட்சி உறுப்பினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜேர்மனியின் மிகுந்த மக்கட்தொகையுடைய மாநிலமான வடக்கு ரைன்லாந்து-வெஸ்ட்பாலியாவில் (North Rhine-Westphalia) இவருடைய சமூக ஜனநாயக சகா Hannelore Kraft என்ற அம்மையார், "பல்கலைக் கழகம் 2010" என்ற திட்டத்தை வெளியிட்டு "கூடுதலான போட்டி, கூடுதலான சிறப்புத் தேர்ச்சி, கூடுதலான தனிப் பொறுப்பு" ஆகியவைதான் தேவை என்று அறிவுரை கூறியுள்ளார். தடையற்ற சந்தைக்கு இவ்வளவு ஆர்வம் மிகுந்துள்ளபோது, பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சிகள் மற்றும் தாராளக் கொள்கையுடைய தாராளவாத ஜனநாயக கட்சி இவற்றின் எதிர்ப்புக்கள் வெற்றுச் செயலாகப் போயுள்ளன.

இந்தச் சூழ்நிலைகளில், "கல்வி பற்றிய விவாதம்" என்பது வெறும் ஏமாற்றுத்தனமான செயலாகும். இவை நேரடியாக இந்தக்குறைப்புக்களால், மழலையர் பள்ளிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றில் ஆட்குறைப்பினால் பாதிப்பிற்குட்பட்டவர்களை முற்றிலும் மறந்து பேசப்படுபவையாகும். மிகுந்த ஆதாயம் பெறும் குழுக்கள், கல்வியாளர்கள், பயிற்றுவிக்கும் திறனில் வித்தகர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழுக்களால் உயர்த்திபேசப்படும் திட்டங்களைக் கொண்டுவந்து நடைமுறையில் குறைப்புக்களையும், மூடுவிழாக்களையும், தனியார்மயமாக்கலையும் இழுத்து வருகின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரையில் எந்தத்திட்டமும் விவாதத்திற்குரியது அல்ல என்று தள்ளத்தக்கது அல்ல; நான்கு வயதில் பள்ளிக்குச் செல்லுவதை ஆரம்பமாக்குங்கள், (இது மழலைப் பள்ளி இடங்களை "மிச்சப்படுத்தும்), பள்ளி மொத்த ஆண்டுகளை 12 ஆகக் குறையுங்கள், பள்ளிகள் "சுதந்திரத்துடனும்" "பொறுப்பு நிறைந்தும்" ஆக இருக்கவேண்டும், (இது நீண்டகாலத்திட்டத்தில், தனியார் மயமாக்கப்படுதலில் முடியும்), கல்வியைச் சராசரி நான்கு அல்லது ஆறு பருவகாலங்களுக்குள் கொண்டு வந்து விடுங்கள், மாணவர்கள் கட்டணம் மற்ற செலவுகளை ஏற்கவேண்டுமென்று கொண்டு வந்து விடுங்கள், பல்கலைக்கழகங்களிடையே போட்டிகளைக் கொண்டு வாருங்கள், அவை தங்கள் மாணவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கட்டும், தனிப்பட்ட நிதிவழங்குனர்களால் நிதிஉதவிக்கு தேடுங்கள் போன்றவற்றிற்கெல்லாம் விவாதங்கள் நடைபெறும்.

இத்தகைய பொருளாதாரத் திறமையுடைய, செலவினத்திறமையுடைய கல்விமுறை எளிதில் கற்பனை செய்து பார்க்கக் கூடியதுதான். ஒரு 20 வயது இளைஞர், 4 வயதில் படிக்க ஆரம்பித்தால் 16 வயதிற்கு பல்கலைக் கழகம் நுழைந்து பட்டதாரியாக 19 வயதிற்குள் ஆகி பின்னர், குறைவான ஓய்வூதியத்தை 67 வயதிலேயே (அல்லது அப்போது 70 ஆகிவிடுமோ?) பெற செல்வந்ததட்டிற்காக அடிமைப்பட்டமுறையில் "வளைந்து கொடுக்கக் கூடிய" வேலையில் உழைக்க தலைப்பட்டுவிடுவார்.

கல்வி ஒரு விலைப் பொருளாகிவிட்டது

அரசாங்கக் கல்வி முறைக்கு எதிரான தாக்குதலுக்கு மற்றொரு காரணம், கல்வி ஒரு பொருளாதாரக் காரணியாகிவிட்ட பங்கைப் பெற்றுவிட்டதுதான். இன்று, கல்வி பூகோள சந்தையில் ஒரு விற்பனைப் பொருள் என்று ஆக்கப்பட்டுவிட்டது.

1994ல் உலக வர்த்தக அமைப்பை (World Trade Organisation WTO) நிறுவியபோது உறுப்புநாடுகள், "பணிகளில் வர்த்தகத்தில் பற்றிய பொது உடன்பாடு" என்பதில் கையெழுத்திட்டன. இது பணிகளில் சர்வதேச வர்த்தகத்தில் தாராளமயமாக்குதலைக் கருத்தில் கொண்டது ஆகும்; கொள்கை அடிப்படையில், கல்விக்கும் இது பொருந்தும். தடையற்ற போட்டி வரவேண்டுமென்று கொள்ளப்பட்டது, அரசாங்கம் நிதிகொடுப்பது அகற்றப்படுவதின்மூலமாக அல்லது தனியாகக் கல்வி கொடுப்போரை ஒரே மாதிரியாக நடத்துவது என்பதின் மூலமாக என்ற வரையறுக்கப்பட்டது.

தனிப்பட்ட நாடுகள் உடன்பாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு முழுமையாக ஏற்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். ஆனால் இந்தத்துறையில் மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்படுமாகையால், நாடுகடந்த நிறுவனங்களுடைய அழுத்தங்கள் அதையொட்டி மிக அதிகாமாப் போய்விட்டது. உலகம்முழுவதும் கல்விக்கான நிதி, UNESCO வினால் ஆண்டுக்கு 2 டிரில்லியன் டொலருக்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் GATS வரை கையெழுத்திட்டுள்ளது. 1999ம் ஆண்டு, போலோக்னாவில் கூடிய 29 ஐரோப்பிய நாடுகளின் கல்வி அமைச்சர்கள், "சம வாய்ப்புத்திடல்" (level playing field) அமைக்க ஒப்புக்கொண்டனர்; 2010 இற்குள் தேசிய விதிமுறையை அமெரிக்க மாதிரியில் மறுசீரமைக்கவும் ஒப்புகொண்டனர். இப்பொழுது 1600 பாடத்திட்டங்கள் ஏற்கனவே இம்முறைக்கு மாற்றப்பட்டுவிட்டன. மாணவர்கள் இளநிலைப்பட்டத்தை நான்கு பருவங்களுக்குள் (semesters) பெறமுடியும். இந்த நிலையில், பெரும்பாலும் நடைமுறைக்கேற்ப பெரிதளவும் மாற்றப்பட்டுள்ள திட்டத்தில் பெரும்பாலானவர்கள் படிப்பு முடிந்தவுடன் வேலைக்குச் செல்லுமாறு எதிர்பார்க்கப் படுகின்றனர். ஒரு மிகச்சிறிய பகுதிதான் பல்கலைக்கழகத்தில் கூடுதலான கல்விமுறை சார்ந்த படிப்பைத் தொடர்ந்து முதுநிலைப்பட்டம் பெற முடியும்.

இது தேர்ந்தெடுத்தலை, எது பண அளவில் முடியும் அல்லது வர்த்தகத்திற்குப் பணியாக அமையமுடியும் என்பதை நம்பியுள்ள தன்மைக்குத் தள்ளவிட்டது. இவ்வழியில், இலவசமாகப் பல்கலைக் கழகக் கல்வி வரை உறுதியளிக்கும் சட்டம், தங்கள் இளநிலைப்பட்டத்தைப் படிப்போருக்கு மட்டும்தான் பொருந்தும். அதற்கு மேல் தங்கள் கல்வியைத் தொடரவிரும்புவோர் மிகக் கணிசமான அளவு நிதியத்தைத் திரட்டவேண்டும். இக்குறைப்புக்கள் அத்தகைய தேர்வுமுறையைத் ஆரம்பிக்க தயாராகின்றன. ஏற்கனவே பல பல்கலைக் கழகங்கள் நிதிக் காரணங்களுக்காக முதுகலைப் பட்டப்படிப்பிற்கான பாடவகைகளைக் குறைத்துக் கொண்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு பாடங்களினது குறைப்பும் தனியார்மயமாக்குதல், வர்த்தகமயமாக்குதல் ஆகியவற்றைக் கல்வித்துறையில் கொண்டுவர வழிவகுத்துள்ளது.

கடத்த சிலவாரங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் டஜன் கணக்கில் ஐரோப்பிய, ஜேர்மனிய நகரங்களில் "கல்விச் சீர்திருத்தத்திற்காகக்" கொண்டுவரப்பட்டுள்ள குறைப்புக்களின் திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். இருந்தபோதிலும், அரசாங்கத்தில் இருப்பவர்கள் இத்தகைய அழுத்தங்களுக்கு இடமளித்து ஒப்புக்கொள்வர் என்று எதிர்பார்ப்பது கற்பனைத் தோற்றமாகிவிடும். அரசியல்வாதிகள் அறிந்து கொண்டும் பரிவுணர்வு காட்டுவதாகக் கூறிக்கொள்ளும் இடங்களில் கூட அவர்கள் இக்குறைப்புக்களைச் செய்யத் தயாராக இல்லை. மாணவர்களுடைய பெருகிய அதிருப்தியான நிலையைத் தங்கள் பிற்போக்குத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தத் தயாராக இருக்கின்றனர்.

கற்கும் உரிமையை எவ்வாறு பாதுகாக்க முடியும்?

பெரும்பாலான மேற்கு நாட்டு அரசாங்கங்களும், 1960களில் நடைபெற்ற மாணவர் எதிர்ப்புக்களுக்கு பதிலாக, விரிவான கல்விச் சீர்திருத்தங்களை விடையாகக் கொண்டுவந்தனர். கல்வி முறை மறுசீரமைக்கப்பட்டு, பல்கலைக்கழகங்கள் மக்களில் பரந்த பிரிவினருக்குத் திறக்கப்பட்டதுடன், பெருந்தொகைகள் கல்வியில் முதலீடாகப் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, ஜேர்மனியில் கல்விக்கான செலவு 1970லிருந்து 1975க்குள் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. 1974ல் உயர்நிலைக்கல்வியை ஆறில் ஒருவர்தான் முடிக்கமுடிந்தது என்றால், 1990களில் மூன்றில் ஒருவர் முடிக்க முடிந்தது. மேலும் மாணவர்களுக்கான நிதி உதவித்திட்டத்தின்மூலம், குறைந்த ஊதியமுடைய பெற்றோரையுடைய மாணவர்கள்கூட பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ள முடிந்தது. இங்கிலாந்தில் விரிவான கல்விமுறையில் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன; அவற்றிற்கு நிதிப்பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஸ்காண்டிநேவியாவில், "Folkeskole" என்ற கருத்துப்படிவம் (நகர ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகள்) கூடுதலாக வளர்க்கப்பட்டு, கட்டாயக்கல்வி விரிவாக்கப்பட்டது.

இந்த மாறுதல்கள் அக்காலத்திய மற்ற சமூக சீர்திருத்தங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டன. உயர்ந்த தரமுடைய, இலவசக் கல்வி பெரும்பாலான மக்களுக்கு வேண்டும் என்பது தொழிலாளர்களின் இயக்கத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது என்பதுடன் அதே கோரிக்கைதான் பின்னர் மாணவர்கள் இயக்கத்தின் கோரிக்கையும் ஆயிற்று. மிக உயர்ந்த அளவிலான அரசியல், கலாச்சார நனவு தொழிலாளர்களுக்கு சமூக நிகழ்ச்சிகளில் தலையிட அடிப்படைத் தேவையானது என்று கருதப்பட்டது. இப்பொருளில், முன்னைய கல்விச் சீர்திருத்தங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு சமூக சலுகைகள் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். உலகப் போருக்குப் பின் நிலவிய பொருளாதாரச் செழிப்பு தேசிய வரம்பிற்குள் இத்தகைய பொருளாதார அடிப்படை ஏற்படுத்தப்படக் காரணமாயிற்று.

ஆனால், இப்போக்கு சில ஆண்டுகளாகச் சரிந்து கொண்டுவருகிறது; இதோடுகூட, எதிர் சீர்த்திருத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மிகப்பெரிய குறைப்புக்களையும் ஏற்படுத்தி, கல்வி ஒரு குறுகிய செல்வந்த தட்டிற்குதான் என்ற போக்ககை இலக்காகக் கொள்ளத் தலைப்பட்டுள்ளது. நலன்புரி நன்மைகளில் குறைப்புக்கள் ஏற்பட்டுள்ளது போலவே, பிரிட்டனின் தாட்சர்தான் இந்த வளர்ச்சிக்கும் முன்னோடியாக இருந்துள்ளார். 1980களில் தாட்சர் அரசாங்கம் அரசாங்கக் கல்வித் துறைப் பகுதியை அழித்து மோசமான நிதிநிலையுடைய அரசாங்க கல்விநிலையங்கள், தனியார் நிதியில் செழிக்கும் பள்ளிகள் என்று இரண்டு பிரிவுகளுடையதாக ஏற்படுத்தியது.

இதற்கிடையில், எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இக்கருத்து பரவலாயிற்று. உதாரணமாகப் பேர்லினில், மறு ஒன்றிப்பிற்குப் பிறகு, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பேராசிரியப் பதவிகள் குறைக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான ஜேர்மனிய மாநிலங்களில் பல்கலைக் கழகங்களுக்கான கல்விமானியக்குறைப்பு, அவற்றை எலும்போடு ஒட்டிய தோலுடையவையாக ஆக்கிவிட்டன. இலவசப் பயிற்சிக் கருவிகள் மட்டும் விட்டுவைக்கப்பட்டுள்ள விதிவிலக்காக இருக்கின்றன; பள்ளிகள் அடிப்படை வசதிகளை இழந்து நிற்கின்றன. இந்த நிலைமைகளில், 1970களின் நிகழ்ந்தது போன்ற கல்விச் சீரமைப்பிற்கு இடமில்லை.

வரலாற்றின் விந்தையான அம்சம், இன்றைய அரசாங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள், அதிபர், துணை அதிபர் உட்பட தங்கள் வாழ்வின் ஏற்றத்திற்கு, 1960, 1970 களில் கொண்டுவரப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களை தான் துணையாக கொண்டிருந்தனர். ஆனால் பொருளாதார உண்மைகள், அவர்களின் அகநிலைக் காரணங்களையும், நோக்கங்களையும் விட வலுவானது போலும். உலகெங்கிலும் காணப்படும் முதலாளித்துவமுறையின் நெருக்கடி, சமூக சலுகைகளுக்கான கொள்கைகளை மதிப்புக்குறைவிற்கு உட்படுத்திவிட்டது. உலக நிதிச் சந்தைகளின் அழுத்தத்தாலும், கடுமையான, இரக்கமற்ற சர்வதேசப் போட்டியினாலும், சமூக ஜனநாயகம், சமூக முரண்பாடுகளின் தீவிரத்தைச் சமூக சீர்திருத்தங்கள் வழியாகக் குறைக்க முடியவில்லை. இது இப்பொழுது கடந்தகால சீர்திருத்தங்களையும் தூக்கி எறிந்து விட்டு முதலாளித்துவ ஒழுங்கமைப்பை பாதுகாக்க முற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, ஈராக்கிற்கெதிரான போர் முதலாளித்துவமுறையின் நெருக்கடி மிக அதிகமான உலகளாவியதாகப் போயிருக்கிறதை புலப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆதிக்கத்தைக் பாதுகாக்கவும், அமெரிக்காவில் உள்நாட்டு அழுத்தங்களிலிருந்து திசைதிருப்பவும், புஷ் நிர்வாகம் ஏகாதிபத்திய கொள்ளையடிப்பு என்ற வழமையான முன்னைய முறை மூலம் காண்பதற்கு முற்பட்டுள்ளது; இதையொட்டி, உலகம் முழுவதையும் பெருங்குழப்பத்திலும், போரிலும் அமிழ்த்த அச்சுறுத்தியுள்ளது. இதற்கு ஜேர்மனிய, பிரான்ஸ் அரசாங்கங்கள் போர்ப்பறையை ஒலியெழுப்பித் தங்கள் மக்கள் மீதே போரைத் தொடுத்துள்ளன.

இந்நிலைமைகளில், கல்வி உரிமையின் பாதுகாப்பு என்பது, முதலாளித்துவ சமூக அமைப்பு முறைக்கு எதிராகப் போராடவேண்டியதோடு தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளதும் ஆகும். அதிகாரத்திலுள்ள செல்வந்த தட்டிற்கு வெறும் முறையீடு செய்வதில் எந்தப்பயனும் கிடையாது. பெருநிறுவனங்களின் செல்வத்தை மறுபங்கீடு செய்யவும், பொருளாதார வாழ்வை பெரும்பாலான மக்களுடைய நன்மைக்காக மறுசீரமைக்கும் ஒர் அரசியல் இயக்கம் தேவையாகும். இது சர்வதேச, சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில், புதிய தொழிலாள வர்க்கத்திற்கான கட்சியை அமைக்கும் பணிக்கு அழைப்பு விடுகிறது.

Top of page