World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

Trade deficit up, as US economy turns down

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு: அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி

By Nick Beams
21 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற வாரம் வெளியிடப்பட்ட பல்வேறு புள்ளி விபரங்கள் அமெரிக்க பொருளாதாரத்தின் சர்வதேச நிதி நிலை மோசம் அடைந்து கொண்டு வருவதை காட்டுகின்றன. மேலும் அமெரிக்க பொருளாதாரம் புதிய வீழ்ச்சிப்பாதையில் அடி எடுத்து வைக்கலாம் என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி நவம்பர் மாதம் அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறை 13.9 சதவிகிதம் அதிகரித்து 40.1 பில்லியன் டாலர் அளவிற்கு பற்றாக்குறை புதியதொரு உச்ச நிலையை எட்டியிருக்கிறது. மிகப் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 36-பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருக்கும் என்று மதிப்பீடு செய்திருந்த்தைவிட அதிகமாக ஆகி இருக்கிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுக மூடல் அக்டோபர் மாதம் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து இறக்குமதிகள் மிக வேகமாக அதிகரித்ததால், ஓரளவிற்கு வர்த்தக பற்றாக்குறை பெருகியிருக்கலாம். ஆனால் அடிப்படைப் போக்குகளில் எந்த விதமான சந்தேகத்திற்கும் இடம் இல்லை. 2002-ன் முதல் 11 மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 390.5- பில்லியன் டாலராகயிருந்தது. இது 2000ம் ஆண்டில் நிலவிய பற்றாக்குறையான 378.7- பில்லியன் டாலர்களை விட அதிகமாகும்.

வர்த்தக மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்து வருவது தொடர்பாக பொருளாதாரக் கொள்கை ஆய்வு அமைப்பு விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இது போன்ற பற்றாக்குறை வெளிநாட்டு கடன் அளவை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 2002ம் ஆண்டில் அமெரிக்காவின் இதர வெளிநாட்டு கடன் அளவு இதுவரை இல்லாத அளவிற்கு 2.8- திரில்லியன் டாலர் அளவிற்கு உயரும். இது அமெரிக்காவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் 27-சதவிகிதத்திற்கு சமமாகும்.

''அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் மிக வேகமாக பெருகிக் கொண்டுவருவது அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மிரட்டலாக அமைந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இத்தகைய கடனை சமாளிக்கின்ற அளவிற்கு கடன் பெறுகிற வல்லமை அமெரிக்காவிற்கு இருக்குமா என்பது குறித்து சந்தேகத்தை கிளப்புவார்களானால் அதன் மூலம் நிதி புழக்கத்தில் பீதி ஏற்பட்டு வட்டி விகிதங்கள் மிக வேகமாக உயரும். அப்போது டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும். மேலும் ஆழமான பொருளாதார மந்தநிலை அல்லது பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும்'' என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவிலிருந்து பெருமளவிற்கு முதலீடுகள் வெளியேறிச்செல்வது இன்னும் நடக்கவில்லை ஆனால் பங்குச் சந்தைகளில் டாலர் நெருக்கடிக்கு உள்ளாகிறது என்பதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. பங்கு சந்தை வர்த்தக அடிப்படையில் பார்த்தால் டாலர் தனது மதிப்பில் 16-சதவிகிதத்தை இழந்துவிட்டது. 2002 பெப்ரவரியில் டாலரின் பங்கு சந்தை மதிப்பு உச்சாணிக்கொம்பில் இருந்தது.

அமெரிக்க பொருளாதாரத்தில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் முதலீடுகள் அமெரிக்காவை நோக்கி வந்ததால் 1990களின் கடைசி 6மாதங்களில் வெளிவர்த்தக பற்றாக்குறை மிக வேகமாக பெருகி வந்தாலும் டாலரின் மதிப்பு அதிகரித்தது. ஆனால் அந்த நாட்கள் போய்விட்டன. அமெரிக்கா, தேக்க நிலை காலத்தில் உள்ளது என்பதற்கு தெளிவான அடையாளங்கள் காணப்படுகின்றன. இறங்கு முகம் இல்லாவிட்டாலும் தேக்க நிலையில் அமெரிக்க பொருளாதாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி சென்ற மாதம் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் சேவைப்பிரிவுகளின் உற்பத்தி 0.2 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து விட்டது. கார்கள் மற்றும் கார் பாகங்கள் உற்பத்தி 4.7 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2002ம் ஆண்டில் தொழிற்துறை உற்பத்தி 0.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. 2001ம் ஆண்டில் இது 3.5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்தது. இப்படி 1974-75ம் ஆண்டுகளில் பெரிய மந்த நிலை ஏற்பட்ட பின்னர் இப்போது தொழில் உற்பத்தி தேக்க நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிற்துறை உற்பத்தி உயர்வு 1-சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது 1983-ம் ஆண்டுக்கு பின்னர் நிலவும் மிக மோசமான நிலவரம் ஆகும். அந்த ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் வரலாற்றிலேயே பொருளாதார மந்தத்திற்குப் பின்னர் இரண்டாவது தடவையாக மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவில் இருந்தது.

மத்திய ரிசர்வ் Beige Book மதிப்பீடு, நவம்பர்-மத்தியிலிருந்து ஜனவரி தொடக்க காலம் வரை பொருளாதார வளர்ச்சி மந்த கதியிலேயே சென்றது, ஒட்டு மொத்த நிலையில் சிறு மாற்றங்கள் இருந்தது என்றது. 12 பிராந்திய வங்கிகளின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய ரிசர்வ் அமைப்பு இந்த ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் "மந்தமான", "மென்மையான", "கம்மிய" என்ற வார்த்தைகளுடன், "சோகை" என்பது போன்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தி தங்களது பகுதியில் உள்ள பொருளாதார நிலையை விமர்சனம் செய்திருக்கின்றனர்.

அமெரிக்க பொருளாதாரத்தை எப்படி பண்பிடுவது என்பதில் கடுமையான குழப்பம் நிலவுகிறது. பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து சாதகநிலையில் உள்ளன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் வேலை இழப்புக்கள் கடுமையாக பெருகி வருகின்றன. வேலைவாய்ப்புக்கள் டிசம்பரில் 101,000-அளவிற்கு வீழ்ச்சியடைந்தன. நவம்பரில் 88,000-அளவிற்கு வீழ்ச்சியடைந்தன.

பொருளாதார தேசிய ஆய்வுக் கழகம் (National Bureau of Economic Research -NBER) தான் வர்த்தக சுழற்சி அளவை காலத்தை மதிப்பீடு செய்கிற அமைப்பு, அது மந்த நிலை என்று அறிவிக்க மறுத்து விட்டது. ஏனென்றால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய மந்தநிலை தற்போது முடிந்து விட்டதாக தற்போது அந்த அமைப்பு கருதுகிறது. சென்ற வாரம் NBER வெளியிட்டுள்ள அதன் மாதாந்திர அறிக்கையில், "மந்த நிலை முடியும் பொழுது செயலில் நாளைத் தீர்மானிக்கையில், இப்போது அமெரிக்க பொருளாதாரம் இருக்கும் நிலை பழைய மந்த நிலையின் தொடர்ச்சியல்ல, இதை தனியாக மதிப்பீடு செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறது.

இதை வேறுமுறையில் சொல்வதென்றால் வேலை வாய்ப்பு அடிப்படையில் தான் NBER வர்த்தக சுழற்சியில் திருப்பு முனைகளை மதிப்பீடு செய்கிறது. அதன்படி அமெரிக்கப் பொருளாதாரம் மார்ச்-2001ல் சிக்கிக்கொண்ட மந்த நிலையிலிருந்து விடுபட்டு விட்டதா அல்லது ''இரட்டிப்பு வீழ்ச்சி நிலை'' க்கு சென்று கொண்டிருக்கின்றதா என்பது தெளிவாக இல்லை என்பதாக அந்த அறிக்கை விளக்கியிருக்கிறது.

அதிகாரபூர்வமான விளக்கம் எப்படியிருந்தாலும், அமெரிக்க பொருளாதாரம் செல்லும் திசை பற்றி எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. வட்டி விகிதங்கள் மிகக் குறைவாகி, மேலும் தனி நபர்கள் வாங்குகின்ற கடன்கள் அளவு அதிகரிக்க, கடந்த 2 ஆண்டுகளில் நுகர்வோர் அதிகம் செலவிட்டிருப்பது பொருளாதார வளர்ச்சி நீடித்திருப்பதற்கான காரணி ஆகும். ஆனால், இப்போது இந்த நிகழ்ச்சிப்போக்கு முடிவிற்கு வந்துவிட்டது என்பதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் நுகர்வோர் உணர்வு பற்றிய குறியீட்டெண் அமெரிக்காவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 87ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இது ஜனவரியில் 83.7 ஆக வீழ்ச்சியடைந்தது. டிசம்பரில் இது 86.7ஆக இருந்தது. இப்படி எதிர்பார்த்த அளவிற்கு நுகர்வோர் குறியீட்டெண் உயராததற்கு காரணம் அமெரிக்க பொருளாதாரம் செல்லும் வழி பற்றிய அச்ச உணர்வுகள், ஈராக்குடன் போர் ஏற்பட்டால் உருவாகும் தாக்கங்கள் மற்றும் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்படும் கவலைகள் என்று விளக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கவலைகள் வரும் வாரங்களில் நிச்சயமாக அதிகரிக்கும். போர் தொடர்பாக நிச்சயமற்ற நிலைகள் இருப்பதால் அமெரிக்க கம்பெனிகள் முதலீட்டு செலவுகளை அதிகரிக்கவும், புதிய ஊழியர்களை நியமிக்கவும் தயங்குவதாக வர்த்தக பொருளாதாரம் பற்றிய தேசிய அமைப்பு சென்ற வாரம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கை அடிப்படையில் கருத்து தெரிவித்த பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டு முதல் ஆறுமாதங்களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கணக்கு அடிப்படையில் 2-முதல், 3-சதவிகிதத்திற்கு இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். குறைந்த பட்சம் 4-சதவிகித அளவிற்காவது பொருளாதாரம் வளர்ந்தால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதைத் தடுக்க முடியும்.

Top of page