World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

One-quarter of British army sent for war vs. Iraq

பிரிட்டன் இராணுவத்தின் கால் பங்கினர் ஈராக்குக்கு எதிரான போருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

By Julie Hyland
23 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிரான போர் தயாரிப்புகளுக்காக பிரிட்டன், தனது இராணுவப் படைகளின் கால் பங்கை வளைகுடாப் பகுதிக்கு அனுப்பிவிட்டதாக பிளேயர் அரசாங்கம், ஜனவரி 20 திங்களன்று அறிவித்துள்ளது.

அடுத்த வாரங்களில் அந்தப் பிராந்தியத்திற்கு 29,000 தரைப்படை உட்பட, 31,000 இராணுவத்தினர் அனுப்பப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஜியோஃப் ஹூன் பாரளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையில் நடைபெறவிருக்கும், ஈராக்கிற்கு எதிரான போரில் கலந்துகொள்ளும் தனது நோக்கத்தை ஏற்கெனவே அரசாங்கம் தெளிவுபடுத்திவிட்டது. என்றாலும், உறுதியளித்துள்ள படைகளின் எண்ணிக்கையானது எதிர்பார்க்கப்பட்டதற்கு மேல் மிக அதிகமாகும். 1991 ஆம் ஆண்டு வளைகுடாப் போரில் பிரிட்டன் திரட்டியதைவிட இது அதிகமாகும். 8,000 பிரிட்டன் துருப்புகள், கடற்படைப் பிரிவின் ஒரு பகுதி HMS ஆர்க் றோயல் (HMS Ark Royal) தலைமையில் அந்தப் பிராந்தியத்தை நோக்கிச் சென்று அங்குள்ள அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்துகொள்ளும்.

''இந்த அளவிற்கு படைகளை நிலைகொள்ளச் செய்வது, சாதாரண நடவடிக்கையல்ல'' என்று ஹூன் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது தெரிவித்தார். ''தேவைப்படுகிற பணிகளுக்கு, அவசியமான அளவிற்கு சரியான படைப் பிரிவுகளாக அவை'' விளங்கும் என்றும் அவர் கூறினார்.

கூடுதல் படைகளில், 7 வது கவசப்படை (the Desert Rats), 4 வது கவசப்படை, முதலாவது பிரிட்டன் கவசப்படைத் தலைமை அலுவலகப் பிரிவினர், 16 வது விமானப்படை பாரசூட் படையினர், ஆகியோர் அடங்குவர். இந்தப் படைப்பிரிவுகள், துருக்கி, குவைத், சவூதி அரேபியாவில் உள்ள தளங்களிலும், பாஹ்ரன் வளைகுடாவில் நடமாடும், கப்பற்படையுடனும், முடிந்தால் கட்டார் நாட்டிலும் நிலை கொண்டிருக்கும். 120 சேலஞ்சர் டாங்கிகள் மற்றும் 100 மில்லியன் பவுன்கள் (ா100 னீவீறீறீவீஷீஸீ) செலவில் பாலைவன போருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட 150 கவச வண்டிகள் படை வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பிரிட்டன் இந்த அளவிற்கு அதிகமாக படைகளை திரட்டியிருப்பது, அந்நாட்டு இராணுவ தலைவர்களது கோரிக்கை அடிப்படையில்தான் ஆகும். இதற்கு முன்னர் அவர்கள் அமெரிக்காவின் போர் திட்டங்கள் குறித்து சந்தேகங்களை கிளப்பினார்கள். அமெரிக்காவின் போர் திட்டங்கள் மத்திய கிழக்கு முழுவதிலும், குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். அமெரிக்காவுடன் போரில் பிரிட்டன் ஈடுபட வேண்டுமென்றால், பெருமளவிற்கு பிரிட்டனின் படைகள் பயன்படுத்தப்படவேண்டும், அப்போதுதான் ஓரளவிற்கு சுதந்திரமாக செயல்பட முடியும். மற்றும் நிகழ்ச்சிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று, பிரிட்டனின் இராணுவத் தலைமை அதிகாரிகள் அரசிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளிவந்தன.

படைகள் அனுப்பப்பட்டாலும் போர் தவிர்க்கப்பட முடியாதது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சிடுமூஞ்சித்தனமாக குன் தெரிவித்தார். படைகள் அனுப்பப்படுவது, ஈராக் மீது நிர்ப்பந்தங்களை உருவாக்குவதற்குத்தான். படைகளை பயன்படுத்துவதற்கு எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. அல்லது அத்தகைய முடிவு உடனடியாக வரப்போவதும் இல்லை. அல்லது அத்தகைய முடிவு தவிர்க்க முடியாததல்ல'' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையில் இராணுவம் குவிக்கப்படுவது பிரிட்டனும், அமெரிக்காவும் போருக்குச் செல்வதில் உறுதியுடன் இருக்கின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றது.

ஈராக்கை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு தீட்டப்பட்டுள்ள திட்டம் 1945 ல் ஜப்பானும், ஜெர்மனியும் கைப்பற்றபட்டதைவிட மிகப்பெரும் அளவுள்ளதாகவும் மிகவும் வேகமாகவும் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 15 ந்தேதி படையெடுப்பு முழுவீச்சில் நடைபெறும் என்று பிரிட்டனின் இராணுவ மூலோபாயவாதிகள் கூறியதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. பதினான்கு நாட்கள் தீவிரமாக ஈராக் மீது விமானங்கள் தாக்குதல் நடத்தும். அதற்கு பின்னர் தரை மற்றும் கடல் வழியாக இருமுனைத் தாக்குதல் நடத்தப்படும். குவைத்திலிருந்து புறப்படும் மிகப்பெரிய படை ஈராக்கின் தென் முனையிலுள்ள எண்ணெய் வயல்களை வேலிபோல் சுற்றி வளைத்துக்கொள்ளும். தென்மேற்கு பகுதியிலும், வடகிழக்கு பகுதியிலுள்ள எண்ணெய் வயல்கள் சுற்றி வளைத்துக்கொள்ளப்பட்டு பாஸ்ரா தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் எண்ணெய் வயல்கள் பாதுகாப்பாக படையெடுக்கும் துருப்புகள் வசம் வந்தவுடன் அமெரிக்கா, தலைநகர் பாக்தாத்தை நோக்கி படையெடுக்கும் என்று இராணுவ வட்டாரங்கள் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தகவல் தந்திருக்கின்றன.

அத்தகைய ஒரு திட்டத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கின்ற வகையில் அமெரிக்கா தனது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கூன் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தனது அறிவிப்பை வெளியிட்டு சில மணி நேரத்திற்குள் அமெரிக்கா மேலும் 37,000 துருப்புக்களை அனுப்புவதாக அறிவித்தது. ஏற்கெனவே அமெரிக்க 150,000 துருப்புக்களை அனுப்பியிருக்கிறது. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் மற்றும் 5 அணு சக்தியில் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்கள் வளைகுடாப் பகுதிகளில் நடமாடுகின்றன. இந்தக் கப்பல்கள் 1,500 அடி நீளம் கொண்டவை. ஒவ்வொரு விமானந்தாங்கி கப்பலிலும் 70 போர் விமானங்கள் உள்ளன. மேலும் அந்தப் பிராந்தியத்தில் 10,000 க்கு மேற்பட்ட கடற்படை மாலுமிகள் நிலை கொண்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அறிவிப்புக்களில் மிக அப்பட்டமான ஆத்திரமூட்டும் தன்மைகள் அடங்கியிருக்கின்றன. ஏனெனில் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் இன்னும் சில நாட்களில் (ஜனவரி 27) தங்களது முதலாவது அறிக்கையை தாக்கல் செய்கின்றனர். அந்த அறிக்கையில் ஈராக்கிடம் ''மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்கள்'' இருக்கின்றனவா என்பதை தெளிவுபடுத்துவார்கள். ஐ.நா. தலைமை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிளிட்ஸ் இதற்கு முன்னர் ஒரு பேட்டியில், ஆயுத ஆய்வாளர்கள் குழு தனது விசாரணைகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் அவகாசம் தேவை என்றும், ஈராக் ஆயுதங்களை குவித்து வைத்திருக்கிறது என்றும், எந்தவிதமான ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதற்கு மேலும் அவகாசம் தரப்படமாட்டாது என்று, அமெரிக்கா தெளிவுபடுத்திவிட்டது. ஈராக்கை தாக்குவதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில், ''புகைவிடும் துப்பாக்கி'' தேவையில்லை என்று அமெரிக்கா அறிவித்தது. இத்தகைய அறிக்கைகளும் அந்த அறிக்கைகளோடு சேர்ந்து, வளைகுடாப் பகுதிக்குள் படைகள் குவிக்கப்பட்டு வருவதும், ஜனவரி 27 தினத்தை பயன்படுத்தி அமெரிக்கா போரை முடுக்கிவிட கருதியிருப்பதாக ஐரோப்பிய தலைநகர்களில் அச்சம் தலைதூக்கி உள்ளது. இப்படி கடைசி நாளை பயன்படுத்தி போரை தொடக்கிவிட்டு அதை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான், அமெரிக்காவின் நோக்கமாகும்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோது உறுப்பினர்கள் இடையே எதிர்கால நடவடிக்கை குறித்து கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஐ.நா. வெளிப்படையாக அனுமதி கொடுக்காமல், இராணுவத் தாக்குதல் எதில் ஈடுபட்டாலும், அதை ஜேர்மனியும் பிரான்சும் எதிர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கூடுதல் துருப்புகள் அனுப்புவது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஷர் தனது அரசாங்கம் ஐ.நா. ஒப்புதல் இல்லாமல், இராணுவ நடவடிக்கையை ஆதரிக்காது என்று தெரிவித்தார். ''நீண்ட கால அடிப்படையில் பிராந்தியத்தில் குழப்பமும், சீர்குலைவும் ஏற்படுவதுடன், கொலை வெறி கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவதில் நேர் எதிர்மாறான விளைவுகளும் ஏற்படும் என்று அஞ்சுவதாக'' அவர் குறிப்பிட்டார்.

ஈராக்கின் இராணுவ வலிமைகள் தொடர்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருக்கும்போது, இராணுவ நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்பட்டால், பிரான்ஸ் பாதுகாப்பு கவுன்சிலில் தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தும் என்று பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் டொமினிக் வில்பன் கோடிட்டுக் காட்டினார். ''இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு தற்போது எதுவும் இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் ஐ.நா. தனது பொறுப்பை கைவிட்டுவிடும் அளவிற்கு செயலிழக்கச் செய்துவிடக்கூடாது. ஈராக் ஆயுதங்களை ''விளக்கச் செய்வது'' ஐ.நா.வின் கடமை என்று குறிப்பிட்டார். அவரது கருத்தை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜக் ஸ்ட்ரோ ஆதரித்தார். இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்கெனவே, அமெரிக்கா பிரிட்டன் ஐ.நா.வின் அங்கீகாரத்தை பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நவம்பர் 2002 ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய 1441 வது தீர்மானத்தில் 13 வது பாராவை சுட்டிக்காட்டினார். ஐ.நா. தீர்மானங்களை மீறி நடப்பதாக கருதப்பட்டால், ஈராக் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அந்த 13 வது பாரா எச்சரிக்கை செய்திருந்தது.

கடந்த மாதங்களில் பிரதமர் டோனி பிளேயர் ஈராக்கிற்கு எதிரான போர் ஆயத்தங்கள் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே சமரசம் செய்து வைப்பவராக செயல்பட்டார். அமெரிக்காவை கட்டுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளை போர் ஆதரவு நிலைக்கு கொண்டு வரவும் டோனி பிளேயர் முயன்றார். ஆனால் எதிர்கால விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், போருக்குச் செல்ல தயாராகயிருப்பதாகவும், எந்தவிதமான சர்வதேச கட்டுப்பாட்டுக்கும் பணியப்போவதில்லை என்றும் புஷ் நிர்வாகம் தெளிவுபடுத்திய பின்னர், அமெரிக்கத் தேரில் ஏறுவதற்கு டோனி பிளேயர் முடிவு செய்தார்.

இது மிக ஆபத்தான சூதாட்டம் ஆகும். எதிர்கட்சியான பழமைவாதிகளும் (Conservative), பெரும்பாலான செய்தி ஊடகங்களும் ஆதரித்தாலும் பிரிட்டிஷ் மக்களில் மிகப்பெரும்பாலோர், குறிப்பாக 81 வீதம் பேர் தன்னிச்சையாக ஈராக் மீது போர் தொடுப்பதை எதிர்க்கின்றனர். ஐ.நா. ஒப்புதல் இல்லாமல் போர் தொடுக்கப்பட்டால் பிளேயர் எந்த அளவிற்கு ஆதரவு இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது அம்பலத்திற்கு வந்துவிடும்.

இதே நேரத்தில் நாட்டின் தீயணைப்பு படையைச் சார்ந்த 50,000 க்கும் மேற்பட்டவர்கள் ஆண்டிற்கு 30,000 பவுன்கள் ஊதியம் கோரி, திங்களன்று 3 வது தடவையாக 24 மணி நேர வேலை நிறுத்தத்தை தொடக்கினர். ஜனவரி 28 அன்றும் பிப்ரவரி முதல் தேதியும் மேலும் 48 மணி நேர வேலை நிறுத்தங்கள் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெறவிருக்கின்றன.

பிரதமர் பிளேயர் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்க மறுத்து, ஆட்குறைப்பு மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மூடல் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதிய வீதங்கள் திருத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். வேலை நிறுத்தக் காலத்தில் 19,000 இராணுவத்தினர் அவசர தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், கன்சர்வேடீவ் கட்சியினர், செய்தி ஊடகங்கள் மற்றும் இராணுவத்தில் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்து போலீஸ் மூலம் தடையை முறியடிக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டனர்.

நடைபெறுகின்ற சம்பவங்கள் எப்படி அமைந்திருந்த போதிலும் பிளேயர் அரசாங்கமானது வெளிநாட்டில் ஈராக் மக்களுக்கு எதிராகவும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இரண்டு முனைகளில் போர் புரிய உறுதியளித்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவுவாகும்.

Top of page