World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்

200,000 march in Paris against Iraq war

ஈராக் மீதான போருக்கு எதிராக பாரிசில் 2- லட்சம் பேர் பேரணி

By a WSWS reporting team
17 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

நடைபெற இருக்கும் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை அன்று பாரிஸ் நகரத்தில் 2 லட்சம் மக்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பிரான்சின் எல்லா பிராந்தியங்களிலிருந்தும் வந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பாரிஸ் நகரின் தெற்கில் Denfert-Rochereau என்னும் இடத்தில் தொடங்கி, நகரின் மத்திய கிழக்கே பாஸ்டி (Bastille) அருகே அந்த ஊர்வலம் வந்து சேருவதற்கு பலமணி நேரமாயிற்று.

இந்த அணிவகுப்பு மாணவர்கள் தொழிற்சங்க இயக்கத்தினர், பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வடக்கு ஆபிரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பிரான்சில் குடியேறியவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்மைக்கால பிரெஞ்சு வழக்கப்படி பேரணியில் எவரும் உரையாற்றவில்லை. மாலையில் இருட்டும் முன்னர் ஊர்வலம் கலைந்து சென்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜ் புஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி வந்தனர். எண்ணெய்காக மிகக் கொடூரமான போருக்கு வாஷிங்டன் திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டினர். படுகொலை மிரட்டலை ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சு மொழி வார்த்தைகளில் அச்சுறுத்தும் "Busherie" (பிரெஞ்சு மொழியில் இறைச்சிக் கடைக்கு boucherie என்று பெயர்) கண்டனம் செய்தனர். "ரத்து அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம்" என்று மற்றொரு முழக்கத்தை எழுப்பினார்கள் (ஐ.நா பாதுகாப்பு சபையில் பிரான்சிற்கு உள்ள ரத்து அதிகாரத்தைக் குறித்தனர்). "நாங்கள் அனைவரும் போருக்கு எதிரிகள்", "புஷ் கொலைகாரர்", "ஐ.நா அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் போரை விரும்பவில்லை", என்பது போன்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு வந்தார்கள். "புஷ் மற்றும் ரம்போ இருவரும் இந்த ஆண்டின் தலைசிறந்த ஜோடி," "போர் ஒரு விளையாட்டல்ல", "சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" ஆகிய முழக்கங்களும் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி வந்தனர். கடைசி இரண்டு முழக்கங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.

ஊர்வல தொடக்கத்தில் முன்னே கொண்டு செல்லப்பட்ட பதாகையில், "ஈராக்கிற்கு எதிராகப் போர் வேண்டாம், மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநாட்டப்பட வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்திச்சென்றவர்களில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) தலைவர்களான மரி ஜோர்ஜ் புஃப்ஃபே (Marie-George Buffet) மற்றும் ஜோன் குளோர்ட் கேசோட் (Jean-Claude Gayssot), பசுமைக் கட்சித் தலைவர் நொயெல் மாமேர் (Noel Mamère), CGT தொழிற்சங்க பொதுச்செயலர் பேர்னாட் திபோல்ட் (Bernard Thibault), சோசலிஸ்ட் கட்சியோடு தொடர்புடைய தொழிற் சங்கமான CFDT பிரான்சுவா செரெக் (François Chérèque), விவசாயிகள் சம்மேளனத் தலைவர் ஜோசே போவே (José Bové) மற்றும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த (LCR) அலன் கிறிவின் (Alain Krivine) ஆகியோர் உட்பட பலர் பேரணிக்கு தலைமை வகித்து நடத்தி வந்தனர்.

சுமார் எண்பது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் அதிகாரபூர்வமான இடதுசாரி, சில "அதி இடதுகள்" மற்றும் பூகோளமய எதிர்ப்பு இயக்கமான "அட்டாக்", மனித உரிமைக் கழகம், சமாதான இயக்கம், இனவெறி க்கு எதிரான மற்றும் மக்களிடையே நட்புறவுக்கான இயக்கம், பாலஸ்தீன ஐக்கிய குழுக்கள் ஆகிய அமைப்புக்களும் அடங்கும். Lutte Ouvrière பிரதிநிதிகளும், சிண்டிகல் இயக்கத்தினரும், பல்வேறு இதர அமைப்புக்களை சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தொழிற்சங்கங்களில் CGT, CFDT, மற்றும் SUD (சிறிய இடதுசாரி தொழிற் சங்கம்) மற்றும் சிறிய எண்ணிக்கையில் கத்தோலிக்க யூனியன்கள் ஆகிய அமைப்புக்களும் கலந்து கொண்டன. பாரிசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், டசின் கணக்கில் அமெரிக்கர்களும் கூட கலந்து கொண்டனர்.

சோசலிஸ்ட் கட்சி (PS) தலைமை, ஆர்ப்பாட்டத்தில் மிகப் பெரும் அளவில் கலந்து கொண்டது. கட்சி செயலாளர் பிரான்சுவா ஹொலாண்ட் (François Hollande), மற்றும் முன்னாள் அமைச்சர்கள் லோரன்ட் ஃபாபுய்ஸ் (Laurent Fabius), ஜாக் லாங் (Jack Lang), பியர் மோருவா (Pierre Mauroy), மார்ட்டின் ஓபரி (Martine Aubry) மற்றும் எலிசபெத் கீயோ (Elisabeth Guigou) ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர். இப்படி சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டது, திட்டவட்டமாக குறிப்பிடத்தக்கது. கட்சி கடந்த வசந்த காலத்தில் பொதுத்தேர்தலில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பொதுவாக, சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள் பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்தோன்றாமல் தவிர்த்து வந்தனர்.

பிரான்சின் 80 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் மிகப் பெரும் அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நகரங்கள், துலூஸ் (Toulouse), போர்டோ (Bordeaux) நீஸ் மற்றும் மார்சைல்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குறைந்த பட்சம் இந்த ஆர்ப்பாட்டங்களில், ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக அமைப்பாளர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றனர்.

இவை மிக கணிசமான அளவிற்கு, நடைபெற்றாலும், பிரெஞ்சு பேரணியை மிஞ்சுகின்ற வகையில் பிரிட்டன், ஜேர்மனி, மற்றும் ஸ்பெயின் நாடுகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. தற்போதைய சர்வதேச மற்றும் தேசிய அரசியல் சூழ்நிலைகள் இவ்வளவு பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களுக்கு முக்கிய காரணமாகும். தற்போது அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களுக்கிடையை மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஜாக் சிராக் அரசாங்கம் "சமாதான விரும்பியாகவும்", "மனித நேயம் மிக்கதாகவும்" வேடம் கட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த தவறான கருத்தை உறுதிப்படுத்துகின்ற வகையில் ஊடகங்களும் உத்தியோகபூர்வ இடதுகளும் செயல்படுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள், ஏதோ ஒரு வகையில் அதிகாரபூர்வமாக நடத்தப்பட்ட சம்பவங்களின் தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியான UMP அல்லது அதன் கூட்டணி பங்குதாரரான UDF ஆகிய இரண்டும் ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கவில்லை. 15 வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர் எதிர்ப்பு கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக செயல்படும் தீவிர வலதுசாரியான பிலிப் டு வில்லியே (Philippe de Villiers) தானும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள விரும்புவதாக பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.

பாரிஸ் பேரணியில் கலந்து கொண்ட PS மற்றும் PCF தலைவர்கள் சிராக் ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இருப்பதாகத் தெரிவித்தனர். ஈராக் தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கைகளை PS ஆதரிப்பதாக ஹொலண்ட் மீண்டும் உறுதிப்படுத்தினார். "தன்னுடைய பொறுப்புணர்வு பற்றி சுய உணர்வோடு செயல்படும் எதிர்க்கட்சியின் பங்கு இது" என ஹொலண்ட் குறிப்பிட்டார். PCF -ஐச் சேர்ந்த புஃப்ஃபே தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து நிருபர்களிடம் கீழ்க்கண்டவாறு விளக்கினார். "நாங்கள் இங்கே வந்திருப்பது போரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிரகடனப்படுத்துவதற்காக, ஆம் நாங்கள் சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறோம். இன்றைய தினம் நாம் அனைவரும் ஓரளவிற்கு உலகக் குடிமக்கள் என்ற உணர்வோடு இருக்கிறோம். ஏனென்றால் அந்த அளவிற்கு உலகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் கண்டனப் பேரணிகள் நடந்து வருகின்றன. இதில் பிரான்சின் நிலைப்பாடு துணிச்சலானது. ஆனால் இறுதிவரை இதேநிலையை அது உறுதியாக பற்றி நிற்கும் என்று நான் நம்புகிறேன்" என்று புஃப்ஃபே குறிப்பிட்டார். CGT-யைச் சேர்ந்த திபோல்ட் கருத்துக் கூறும்போது, "பிரான்சின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது, சர்வதேசச் சட்டம் அதன் அடிப்படைக் கொள்கைகள் ஆகியவற்றின் மீது நம்நாடு உறுதியாக நிற்க வேண்டுமென்று விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.

ஜாக், நிக்கோனோப் (Jacques Nikonoff) (அட்டாக்) போன்றவர்கள் மறைமுகமாக சிராக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அவர்களது கண்டனக் கணைகள் அனைத்தும் அமெரிக்காவை நோக்கியே பாய்ந்தன. "வாக்குப் பதிவில் வாக்காளர்கள் போரைப் புறக்கணித்தனர். அந்தப் புறக்கணிப்பு தற்போது சாலைகளில் ஆர்ப்பாட்டங்களாக திட்டவட்டமாக செயல்வடிவம் பெற்றிருக்கிறது. ஏனென்றால் அமெரிக்கா தனது ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை ஒரு நிலைப்படுத்திக் கொள்வதோடு நவீன தாராண்மை பூகோளமயத்தையும் இணைத்துக் கொண்டு செயல்படுகிறது." என்றார் நிக்கோனோப்.

புஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மக்களிடையே எந்த அளவுக்கு ஆழமாக வெறுப்பு வளர்ந்துள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை அல்லது நடைபெற இருக்கும் போரினால் ஏற்படவிருக்கும் பயங்கர பின்விளைவுகள் குறித்து மக்களிடையே நிலவுகின்ற நேர்மையான கவலை உணர்வுகளிலும் சந்தேகத்திற்கு இடமில்லை. இதுபோன்ற வாதங்களில் கலந்து கொண்டவர்களில் பலர், தற்போது ஐவரிகோஸ்ட் நாட்டில், பிரான்ஸ் தனது பழைய காலனி ஆதிக்கப்பாணியில் தலையிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் திட்டங்களை எதிர்க்கின்ற சிராக் அரசாங்கத்தின் நோக்கங்களை சந்தேகக் கண்ணோடு பார்த்தனர்; கருத்து தெரிவித்தனர்.

உலக சோசலிச வலை தளத்தின் ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு, பிரெஞ்சு மொழி அறிக்கைகளை விநியோகித்தனர். "போர் எதிர்ப்பு இயக்கம் எதிர் நோக்கும் பணிகள்" என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்ட பலரது பேட்டிகள் வரும் நாட்களில் பிரசுரிக்கப்படும்.

Top of page