World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Ontario Tories deny farm workers trade union rights

ஒன்டாரியோவின் டோரி அரசு விவசாயப் பண்ணை தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை மறுக்கிறது

By David Adelaide
6 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஒன்டாரியோவின் டோரி அரசானது, வேளாண்மை மற்றும் விவசாயப் பண்ணை தொழிலாளர்களுக்கு அடிப்படை தொழிற்சங்க உரிமைகளை மறுக்க சட்டம் இயற்றியுள்ளது. "விவசாயப் பண்ணை தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம்" என்று இடக்கரடக்கலாக பெயரிடப்பட்டு, சட்டம் 187ன் கீழ் வருவதாவது, "வேளாண் பண்ணை தொழிலாளர்கள் கூட்டாக சங்கங்கள் அமைக்கலாமென்றும், ஆனால் போராட்டமோ வேலை நிறுத்தமோ நடத்த சட்ட ரீதியாக அனுமதிக்கப்படமாட்டார்கள்" என்கிறது. அதுவுமில்லாமல், முதலாளிகள், இந்த சங்கங்களை தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அவர்களுக்காக தங்களுடன் பேரம் பேசும், ஏக முகவர்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை. நவம்பர் 18, 2002 அன்று இயற்றப்பட்ட இச்சட்டத்தை எதிர்க்கட்சியான லிபரல் கட்சி ஆதரவு தெரிவிக்க, அதனை புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party -NDP) எதிர்த்தது.

ஏறத்தாழ 1,00,000 ஒன்டாரியோவின் பண்ணை தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்படும் மற்றும் சுரண்டப்படும் உறுப்பினர்கள் ஆவர். இந்த மாகாணத்தின் தொழில் வட்டங்களில் மிகவும் குறைந்த ஊதியம் பெறும் இவர்கள் மிக அதிக எண்ணிக்கையிலான பணியிட விபத்துகள், காயங்கள், நோய்கள் மற்றும் இறப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

10,000 ற்கும் மேலான இந்த பண்ணை தொழிலாளர்கள் (2000 ஆண்டில் 14,500) கரீபியன் மற்றும் மெக்சிகோவிலிருந்து புலம்யெர்ந்த தொழிலாளர்களாவர். காமன்வெல்த் கரீபியன் பருவகால விவசாயத் தொழிலாளர் திட்டத்தின்படியும், மெக்சிகோ பருவகால விவசாய தொழிலாளர் திட்டத்தின்படியும், இவர்கள் வரவழைக்கப்பட்டவர்கள். இத்திட்டத்தின்கீழ் கனடாவுக்கு வரும் 90 சதவிகித தொழிலாளர்கள், ஒன்டாரியோ விவசாய தொழில்துறைக்கு பணிக்கு செல்கின்றனர். "வடக்கு-தெற்கு நிலையத்தின்" ஆன் வெஸ்ரோன் (Ann Weston) இன்படி, 1995-99 காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6.90 டாலர்கள் கொடுக்கப்பட்டதாக தெறிவிக்கிறார்.

சமீபத்தில் இயற்றப்பட்ட இச்சட்டப்படி, எர்னி ஈவ்ஸின் (Ernie Eves) டோரி அரசானது பாரம்பரியமாக வரும் பழக்கமான "வேளாண் பணியாளர்களை சங்கங்கள் அமைக்க தடைவிதிப்பதை" பின்பற்றி நிலைநாட்டுகிறது. ஒன்டாரியோ பண்ணை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை ஒருபோதும் பெற்றதில்லை.

பொப் ரே (Bob Rae) (1990-1995) இன் NDP மாகாண அரசு புகுத்திய சட்டத்தில், பண்ணை தொழிலாளர்கள் சங்கங்கள் அமைத்துக்கொள்ளலாம் என்றபோதும், சமூக ஜனநாயகவாதிகள் இந்த சங்கங்களுக்கு வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை தடுத்தனர். அதற்கு மாறாக, தொழிற்சங்கமும், முதலாளியும் சமர்ப்பிக்கும் முன்மொழியப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களை மத்தியஸ்த நடுவர் தேர்வு செய்து பரிசீலிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

NDP அரசின் இறுதி மாதங்களில் இயற்றப்பட்ட இந்த வேளாண் பண்ணை தொழிலாளர்களின் சட்டமானது உழைக்கும் மக்களுக்கு சலுகையாக இருப்பதைவிட தொழிற்சங்க அதிகாரத்துவத்தை திருப்திப்படுத்துவதாகவே அமைந்தது. பல பில்லியன்கள் பொதுப்பணிகளிலும், ஊதிய குறைப்பு மற்றும் பணியிடங்கள் குறைப்பையும், ஒரு மில்லியன் பொதுத்துறை பணியாளர்களுக்கு அரசு ஆணைகள் மூலமாகவும், வரிச்சுமைகளை அதிகரித்தும், தொழிலாளர் நலம் என்ற நிலை வேலை நலம் என்பதற்கு மாறுவதை முன்னெடுத்து, சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாள வர்க்கத்துடன் கண்மூடித்தனமாக மோதலுக்கு வந்தனர். தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதலில், NDPக்கு மிக வெளிப்படையாக ஆதரவு தரும் சங்கங்களில் ஒன்றுதான் "ஐக்கிய உணவு மற்றும் வர்த்தக தொழிலாளர்கள் சங்கம்". இந்த சங்கம்தான் முன்பு பண்ணை தொழில்துறையில் சங்கம் பேரம்பேசும் உரிமைகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் பெறுவதற்காக ஆதரவு திரட்டி இருந்தது.

இந்த சமூக ஜனநாயகவாதிகள் உழைக்கும் மக்களை ஏமாற்றி, திசைத்திருப்பிவிட்டனர். இதன்மூலம் அதி வலதுசாரி வேலைத்திட்டத்தின் பேரில் மைக் ஹாரிஸ் (Mike Harris) தலைமையில் டோரிக்கள் ஆட்சிக்குவர கதவு திறந்து விட்டது. உண்மையில் ஹாரிஸ் டோரிக்களின் "பொது உணர்வு புரட்சி" யானது, ஜிங்ரிச் குடியரசு கட்சியின், "அமெரிக்காவுடன் ஒப்பந்தம்" என்ற திட்டத்தை அடுத்து வெளிப்படையாக அமைக்கப்பட்டது.

டோரிக்களைப் பொறுத்தவரை, பண்ணை தொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கூட்டாக பேரம் பேசும் உரிமைகளைக் கூட NDP- தந்ததை, டோரிக்கள் ஒரு அவமானமாக கருதுகின்றனர். அரசாங்கத்தின் கட்சி என்ற வகையில், அவர்களின் முதற்கட்ட நடவடிக்கைகள் மத்தியில், NDP வகுத்த பண்ணை தொழிலாளர்கள் சட்டத்தையும், கருங்காலிகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்தையும் இவர்கள் ரத்துச்செய்ததாக இருந்தது.

பண்ணைத் தொழிலாளர்களுக்கு சங்க உரிமைகள் அனைத்தையும் பறித்த டோரிக்கள், பாரம்பரிய விவசாயத் தொழிலை பேணுவதாக சொல்கின்றனர். அப்போது எழுந்த பிரச்சனையைப் போலவே இப்போதும், குடும்ப விவசாயத் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்துவதை செய்யாமல், வர்த்தக ரீதியிலான வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைத்தான் ஒழுங்குபடுத்துகிறது. ஒன்டாரியோவில் 10 சதவிகித விவசாயப் பண்ணைகளில் 50 சதவிகித வேளாண் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள்.

இன்று வரை பண்ணை தொழிலாளர்களை ஒழுங்குமுறைபடுத்துவதில் வெற்றி கண்டதுதான் "ஐக்கிய உணவு மற்றும் வர்த்தக தொழிலாளர்கள் கனடா" (United Food and Commercial Workers Canada -UFCW) இது சுமார் 200 தொழிலாளர்களை ஒன்டாரியோவிலுள்ள லீமிங்டனில், ஹைலைன் காளாண் உற்பத்தி நிறுவனத்தில் ஒழுங்குபடுத்தியுள்ளது. 1995-ன் டோரிக்கள் சட்டத்தின் பின்விளைவால், ஹைலைன் உற்பத்தி தொழிலாளர்கள் சங்கம், பேச்சுவார்த்தை நடத்த பேரம்பேசும் முகவராக இருக்கும் அங்கீகாரத்தை இழந்தது.

கனடா அரசியல் சாசனத்திலுள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சட்ட அடிப்படையில் UFCW சட்டபூர்வமாக பதிலடி கொடுத்தது. டிசம்பர் 2001ல் எடுக்கப்பட்ட 8-1 தீர்மானத்தின்படி, கனடா உச்சநீதிமன்றம், "1995 டோரி சட்டப்பேரவை, விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகள் சாசனத்தை இரண்டு வழிகளில் மீறியுள்ளது என்றது. சங்கத்தோடு சுதந்திரமாய் தொடர்புகொள்ளும் உரிமை மற்றும் சட்டத்தின் கீழ் சரிசமமாய் மதிக்கப்படவேண்டிய உரிமையையும் மீறியுள்ளது. டோரி அரசியல்சாசனத்துடன், இன்னும் 18 மாத காலத்தில் சட்டத்தோடு ஒழுங்குபடுத்த என நீதிமன்றம் தனிப்பட அறிவித்துள்ளது.

2002ல் விவசாயத் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியதில், டோரி அரசு, உச்சநீதிமன்ற ஆணையின் கடிதத்தைப் பின்பற்றியது, ஆயினும் பண்ணை தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியமும், நல்ல தொழில் சூழ்நிலைக்குமான எந்த வழிமுறைகளையும் ஏமாற்றியது.

UFCW கனடா-வின் இயக்குனர் மைக்கேல் ஜே. ஃபேராசர் (Michael J. Fraser), இந்த புதிய சட்டத்தை கண்டித்து அதற்கு நீதிமன்றம் மூலம் சவால் விடவும் சூளுரைத்தார். ஏழு வருடங்களுக்கு முன் ஹாரிஸ் அரசானது, உரிமைகளை பறித்தபோது இருந்த நிலையைவிட, ஒன்டாரியோவின் 100,000 விவசாய தொழிலாளர்கள் எந்த விதத்திலும் முன்னேற்றம் பெற்றுவிடவில்லை. சங்கத்தில் சேரும் உரிமை இல்லாமலும், கூட்டு பேரம்பேசலில் ஈடுபடமுடியாமலும் இத்தொழிலாளர்கள் உள்ளனர். UFCW வானது, ஒன்டாரியோ அரசிடம், பண்ணை தொழிலாளர்களுக்கு, சங்கம் அமைக்கும் உரிமை உண்டு என்று சொல்ல, பல வருடங்கள் நீதிமன்றத்தில் செலவழிக்கவில்லை, வழக்காடுவதற்காக அரை மில்லியன் டாலர்களும் செலவிடவுமில்லை.

ஆனால், வேலை நிறுத்தம் செய்யும் பண்ணை தொழிலாளர்கள் மீது சட்ட ரீதியான தடையை அல்லது திரளான வேலைநடவடிக்கையயை ஏற்பதில் குறித்து UFCW தலைமை திருப்தியடைந்துள்ளது. ஃபேராசர் சொல்கிறார், "டோரியின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஹெலன், முந்தைய என்டிபி அரசின் விவசாய தொழிலாளர் தொடர்பு சட்டத்தின் கீழ் நாம் இருந்திருந்ததால், சங்கத்தில் தொழிலாளர்களுக்கும் அவர்கள் முதலாளிகளுக்கும் இடையில் வேறுபாடுகளைத் தீர்ப்பதில் கட்டுப்படுத்தும் இடையீட்டாளர் / நடுவர் தீர்ப்புக்கு விடல் நிகழ்ச்சிப்போக்கை" UFCW கனடா ஏற்றுக்கொள்ளும் என்ற எனது கடப்பாட்டை ஜோன்ஸ் கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறாார்.

வேறுவகையில் சொன்னால், தொழிலாளர்கள் கட்டாயம் வேலை செய்தாக வேண்டிய ஒடுக்குமுறை சூழ்நிலைகளுக்கு எதிராக சீரிய தொழிற்துறை மற்றும் அரசியல் போராட்டங்களைக் குவிப்பதில் தலையிடாது, பண்ணை தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க போராட்டத்திற்கான மிக அடிப்படையான ஆயுதங்களை அளிப்பதில் டோரிகளை விடவும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஆர்வம் இல்லை.

Top of page