World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Washington presses India to send troops to Iraq

ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்ப இந்தியாவிற்கு வாஷிங்டன் அழுத்தம்

By K. Ratnayake
30 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கப் படைகளுக்கு உதவுகின்ற வகையில் கணிசமான அளவிற்கு இந்திய துருப்புக்களை அனுப்புவதற்கு அது உறுதியளிக்க வேண்டுமென்று புஷ் நிர்வாகத்திலிருந்து வரும் அழுத்தத்தின் கீழ் இந்தியா இருக்கின்றது. அமெரிக்க துருப்புக்கள் பகைவர் தாக்குதலுக்கு ஆளாகி வருவதால், ஏனைய நாடுகளின் படைகள் ஈராக்கில் ஸ்திரத்தன்மையை உருவாக்கும் படை என்று அழைக்கப்படுவதில் சேரவேண்டும் என்பதில் வாஷிங்டன் மிகுந்த ஆவலாக உள்ளது. ஈராக்கில் வளர்ந்து வருகின்ற எதிர்ப்பை ஒடுக்கும் சுமையை ஏற்பதற்கும், சர்வதேச ஆதரவு என்கின்ற முலாம் பூசுவதற்கும் இந்த படைகள் பயன்படுத்தப்படும்.

ஈராக்கின் வடக்கு பிரிவு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுகொள்வதற்கு 17,000- துருப்புக்களுக்கு மேற்பட்ட முழு இராணுவப்பிரிவை இந்தியா அனுப்ப வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. ஈராக்கின் வடக்கு பகுதியில் பூர்வகுடி குர்து இனத்தவருக்கும், அரபு மக்களுக்கும் இடையே கடுமையான பதட்டங்கள் நிலவுகின்றன. புதுதில்லி அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்குமானால், இந்தியப் படைப்பிரிவின் எண்ணிக்கை தற்போது அங்குள்ள பிரிட்டனின் துருப்புக்களைவிட அதிகமானதாக இருக்கும் மற்றும் அமெரிக்க இராணுவப் படைகளுக்கு அடுத்த இரண்டாவது பெரிய வெளிநாட்டு படையாக அமையும்.

ஜனாதிபதி புஷ்சும் முன்னணி அமெரிக்க அதிகாரிகளும் மே- மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா வாஷிங்டனுக்கு விஜயம் செய்தபொழுது இந்த ஆலோசனையை தெரிவித்தனர். அதற்குப் பின்னர் மே- மாதத்தில் அமைச்சரவை பாதுகாப்புக்குழு இரண்டு முறை இது பற்றி விவாதித்தது ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக புதுதில்லி ஈராக்கில் அதன் உத்தேச பங்கு பற்றியும் இந்திய துருப்புக்கள் பணியாற்ற வேண்டிய தலைமை பொறுப்பு நிர்வாக அமைப்பு குறித்தும் அமெரிக்காவிடம் மேலும் விளக்கம் கேட்டிருந்தது.

உடனடியாக இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்க தயங்கியதற்கு காரணம் ஈராக்கில் காலனி ஆதிக்கப் பாணியில் அமெரிக்கா ஆக்கரமிப்பு செய்திருப்பதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கும் எதையும் மூலமாகக் கொண்டு வளர்ந்தெழவில்லை. புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்ததிலிருந்து பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி புஷ் நிர்வாகத்துடன் நெருக்கமான அரசியல் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முயன்று வருகிறார். ஆளும் இந்துபேரினவாத பாரதீய ஜனதா கட்சி வெளிப்படையாக புஷ்ஷின் "பயங்கரவாதம் மீதான பூகோள யுத்தம்" என்பதை ஆதரித்து வருவதோடு ஆப்கனிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தலையீட்டையும் ஆதரித்தது.

ஈராக் மீது படையெடுப்பதற்கும் அந்த நாட்டையும் அதன் எண்ணெய் வளத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டுவருதற்குமான அப்பட்டமான காலனி ஆதிக்க தன்மையில் அமைந்த அமெரிக்காவின் திட்டங்களுக்கும் இந்தியாவில் பரவலான எதிர்ப்பு உருவாயிற்று. பிரதமர் வாஜ்பேயி கூட ''இராணுவ நடவடிக்கைக்கு எந்தவிதமான நியாயமும் இல்லை'' என்று மிகவும் அடக்கமான முறையில் கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது அறிக்கையில் கவனமாக அமெரிக்கா பற்றிய நேரடி குறிப்புக்கள் தவிர்க்கப்பட்டன. ஆனால் ஐ.நா-பாதுகாப்பு கவுன்சிலில் உடன்பாடு ஏற்படாதது குறித்து பெரும் கவலை வெளிப்படுத்தப்பட்டது.

வாஜ்பேயி தனது விமர்சனங்களை கைவிடும் அவரது திறனும் ஈராக்கிற்கு இந்திய துருப்புக்களை அனுப்புவது குறித்து எண்ணுவதும், வாஷிங்டனுடன் தங்களது சொந்த கொள்கையற்ற சமாதானத்தை நிலை நாட்டிக் கொண்ட பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் முடிவில் பெரிதும் முளைவிட்டு இருக்கிறது. இந்த மூன்று நாடுகளும் அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்ளும் ஐ.நா- பாதுகாப்பு சபை தீர்மானத்தை ஆதரித்தன. இது அமெரிக்கா துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா பரிசீலிப்பதற்கு தேவையான அரசியல் மூடிமறைப்பை வழங்கி இருக்கிறது.

அமெரிக்காவின் உத்தேசத்திட்டம் ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி வாஷிங்டன் விஜயத்தை மேற்கொண்ட போது விறுவிறுப்பு அடைந்தது. காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஆதரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அத்வானி விரும்பினார் மற்றும் பாகிஸ்தானுக்கு நிர்பந்தம் கொடுக்க அமெரிக்காவின் உதவியை நாடினார். ஆனால் அத்வானி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது "ஈராக்கிற்கு இந்திய துருப்புக்களை அனுப்புவது தான் பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கம் செலுத்தியதாக" ஒப்புக் கொண்டார். இதை வேறு வார்த்தைகளில் விளக்குவது என்றால் வாஷிங்டனின் நிகழ்ச்சிநிரல் ஆகும்.

இந்திய துருப்புக்களை அனுப்புவதற்கு அத்வானி உறுதியளிக்கும் வகையில் அவர் அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு புஷ் நிர்வாகம் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் இந்தப்பிரச்சனையில் அத்வானிக்கு நிர்பந்தம் கொடுத்தார். ஜூன்-9-ந்தேதி ஜனாதிபதி புஷ் அத்வானியை சந்தித்து 30-நிமிடங்கள் பேசினார். அப்போது அவருக்கு புஷ் நிர்பந்தம் கொடுத்தார். இந்திய அரசாங்கம் மேலும் விளக்கத்தை கோருகிறது என்று அத்வானி கோடிட்டு காட்டிய பின்னர், எந்த கேள்விக்கும் பதில் தருவதற்காக புதுதில்லிக்கு பென்டகன் குழு ஒன்றை அனுப்ப தாம் உத்தேசித்திருப்பதாக புஷ் உடனடியாக அறிவித்தார்.

இதற்கு அரசியல் கைமாறாக, ஜனாதிபதி புஷ், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளுக்குள் "எல்லை தாண்டிய பயங்கரவாத்த்தை" தடுத்து நிறுத்துமாறு முஷராப்பிற்கு அழுத்தம் கொடுப்பதாக புஷ் உறுதியளித்தார். காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சிக்கு எதிரான ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது என்று இந்தியா வழக்கமாக குற்றம் சாட்டி வருகிறது. அந்த குற்றச்சாட்டை இஸ்லாமாபாத் மறுக்கிறது. இந்தியாவில் ஆளும் மேல்தட்டினர் நீண்டகாலமாக இந்தியாவிற்கு ஐ.நா- பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டும் அபிலாஷை கொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்கு ஐ.நா- பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்று தான் "கருதுவதாக" புஷ் அத்வானியிடம் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு திரும்பி வரும்போது லண்டனில் தங்கிய அத்வானியிடம் பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் இந்திய துருப்புக்கள் ஈராக்கிற்கு அனுப்பப்படவேண்டும் என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்தை வலியுறுத்திக் கூறினார். இந்தியா கோருகின்ற தேவையான "விளக்கங்களை" தருவதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் பீட்டர் ரோடாம் ஐ அமெரிக்கா அனுப்பியதன் மூலம் புதுதில்லிக்கு ஜூன்-16-ந் தேதி அனுப்பப்பட்ட பென்டகன் குழுவின் அந்தஸ்தை வாஷிங்டன் உயர்த்தவும் செய்திருந்தது.

அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் றொபர்ட் பிளாக்வில் இதற்காக ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அவர் இந்து நாளேட்டிற்கு அளித்த பேட்டியில், ஈராக்கின் பாதுகாப்பை நிர்வகிக்கும் "உள் நிர்வாக இயக்குநர்கள் குழுவில்" இந்தியா பங்குபற்றி "பிரதான பங்கு" ஆற்ற முடியும் என்று கூறியுள்ளார். ஈராக்கில் நடைபெற்றுக்கொண்டுள்ள மோதல்களில் இந்திய துருப்புக்கள் சிக்கிக் கொள்ளும் என்ற கருத்தை அமெரிக்கத்தூதர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய துருப்புக்கள் போர்ப் பணிகளுக்காக பயன்படுத்தப்படமாட்டாது என்று அவர் விளக்கினார்.

ஆனால் பென்டகன் குழு இந்தியாவிற்கு வந்தது திரும்பிச்சென்றுவிட்டது, இன்னும் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. பிரதமர் வாஜ்பேயி தற்போதைய சீன சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பும் வரை முடிவு எதுவும் செய்யப்படமாட்டாது என்பதுதான் தற்போதைய செய்தி. இந்திய அதிகாரிகள் மேலும் ஆட்சேபணைகளை கிளப்பி உள்ளனர்: கூட்டு இராணுவத் தலைமையின் அவசியம் மற்றும் ஈராக்கில் அரசாங்கத்தை அமைப்பதற்கான உறுதியான நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை இந்திய அதிகாரிகள் வலியுறுத்திவருகின்றனர். "புதுதில்லி மெதுவாக செல்லுகின்ற அணுகுமுறையை'' மேற்கொண்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அப்படியிருக்கும்போது வாஜ்பேயி அரசாங்கம் ஏன் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது மற்றும் வாஷிங்டனிலிருந்து எதிர்மறை எதிர்விளைவு உருவாகும் நிலையை ஏன் விரும்புகிறது? வாஷிங்டனில் இருந்தபோது அத்வானி எதிர்கட்சிகள் மீது பழிபோட முயன்றார். இந்திய தொலைக்காட்சி நிலையம் ஒன்றில், அத்வானி ''எதிர்கட்சிகள் உண்மைகள் எதுவும் இல்லாமல் ஈராக்கிற்கு படைகளை அனுப்புவது தவறு என்று ஒரு தரப்பு கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் உண்மையான கவலைகள் எதிர்கட்சிகள் அல்ல. ஈராக் மீதான அமெரிக்கப் போர் பற்றி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைப் போலவே, அமுக்கி வாசிக்கும் வகையில் மிதமாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இதர இரண்டு ஸ்ராலினிச கட்சிகளுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) ஆகியன, ஏப்ரல் 9-ந்தேதி அதாவது ஈராக் போர் முடிந்துவிட்டது என்று புஷ் அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்திய நாடாளுமன்றத்தில் ஈராக் போருக்கு எதிராக தீர்மானத்தை தாக்கல் செய்தனர்.

அதேபோன்று, காங்கிரஸ் கட்சி அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக இந்திய துருப்புக்களை அனுப்புவதற்கு பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையிலேயே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் ஜூன்-15-ந்தேதி அன்று வாஜ்பேயியைச் சந்தித்து படைகள் அனுப்பும் திட்டத்தை எப்படி இரகசியமாக மக்களது கவனத்திற்கு வராமல் மறைத்துக் கொள்வது என்பதற்கான ஆலோசனைகளை வழங்கினர். ஐ.நா- தலைமையில் இந்திய துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக் காட்டினர். ஈராக் மற்றும் பக்கத்து நாடுகளின் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர்.

ஆளும் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எதையும் வாஜ்பேயி சந்திக்கவில்லை. ஜூன்-21-அன்று தேசிய ஜனநாயக முன்னணித் தலைவர்களை (NDA) அவர் சந்தித்தார். அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே தவிர, இறுதியாக முடிவு செய்வதை பிரதமரின் பொறுப்பில் விட்டுவிட்டனர். பி.ஜே.பி. யுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கின்ற இந்து தீவிரவாத அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக்சங்கம் (RSS), காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக வாஷிங்டனிடம் அதிக ஆதரவை முதலில் இந்தியா பெற்றுகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் உத்தேச திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

அதன் லாபம் தருகின்ற மறுகட்டமைப்பு ஒப்பந்தங்களை பெறுவதை, மத்திய கிழக்கு எண்ணெய் வளத்தில் லாபம் பெறுவதை மற்றும் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரிய பங்கு கிடைக்கச்செய்வதை உத்திரவாதப்படுத்தும் ஒரு வழிமுறையாக இந்தியாவின் பெரு முதலாளிகள் ஈராக்கில் இந்தியா தலையீட்டை ஆதரித்தனர். இந்து நாளேட்டின் கட்டுரையாளர் C.ராஜாமோகன் இந்த மாத ஆரம்பத்தில் கீழ்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்: ''ஈராக்கில் குறிப்பிட்ட ஒரு முழு பகுதியையும், நிர்வாகம் செய்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொள்கின்ற இந்தியா, பாரம்பரியமாக இந்திய துணைக்கண்டத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் எல்லைக்குள் செயல்பட்டு வருகின்ற நிலையிலிருந்து விடுபட்டுவிட்டது என்று உலகிற்கு அடையாளம் காட்டும்."

இந்திய அரசாங்கத்தின் உண்மையான கவலை என்னவென்றால் ஈராக்கிற்கு அனுப்பப்படும் இந்திய துருப்புக்கள் மிகக் கொடூரமான நவகாலனி ஆதிக்க நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ளும், அது அரசாங்கத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்பை உருவாக்கும் என்பதுதான். ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக நடைபெற்று வரும் கண்டனங்கள் நிச்சயம் எதிரொலிக்கும் அது இந்திய துணைக் கண்டத்தில் வாழுகின்ற பரவலான மக்கள் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிரான கடுமையான போராட்டங்களை நினைவுபடுத்தும். இந்திய துருப்புக்களை பிரிட்டன் இந்தியாவிலும், உலகின் பல நாடுகளிலும் தங்களது சொந்த அருவருப்பான பணிகளுக்காக பயன்படுத்திக் கொண்ட நீண்ட வரலாறு உண்டு.

முன்னாள் பிரதமர்களான வி.பி. சிங் மற்றும் இந்தர் குஜ்ரால் இருவரும் இந்தியப் படைகள் ஈராக்கிற்கு அனுப்பபடுவதை எதிர்த்து ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் அரசியல் ஆபத்துக்களை கோடிட்டு காட்டியிருந்தனர்: ''ஈராக் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கின்ற வகையில் இந்திய துருப்புக்கள் அனுப்பட்டால் இந்தியாவின் நற்பெயருக்கும் புகழுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்'' என்று முன்னாள் பிரதமர்கள் இருவரும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதில் இருக்கின்ற ஆபத்துக்களை வாஜ்பேயி நிச்சயம் அறிவார். ஆனால் இறுதியில் வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு இணங்குவார் என்பதில் சந்தேகமில்லை. அவரது ஆட்சியின் மூலோபாய நோக்குநிலை அமெரிக்காவோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாக இருக்கிறது.

Top of page