World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush administration targets Iran for US aggression

புஷ் நிர்வாகம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈரானை இலக்காக்குகிறது

By Peter Symonds
26 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் புஷ் நிர்வாகமானது ஈரானை தெளிவான அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காக்கும் வகையில் ஈடுபட்டுள்ளது. தெஹ்ரானில் ''ஆட்சி மாற்றம்'' என்று அதிகாரப்பூர்வமான பிரகடனம் செய்யவில்லையே தவிர, ஈரானின் அணுவாயுதத் திட்டத்தைப் பற்றி ஓலமிட்ட வகையிலும், மீண்டும் இரகசியமாக அந்நாடு அணுவாயுதங்களைத் தயாரித்து வருகிறது என்று கூறும் வகையிலும் அமெரிக்கா தன் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.

கடந்த புதனன்று ஜனாதிபதி புஷ் ''சர்வதேச சமூகமானது ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதை பொறுத்துக் கொள்ளமாட்டாது என அதற்கு தெளிவாக்க வேண்டும்'' என்று அறிவித்துள்ளார். IAEA (International Atomic Energy Agency) ஈரானை அணுவாயுத ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வியன்னாவில் அமெரிக்க அதிகாரிகள் வாதம் செய்து, ஒரு ஆயுத ஆய்விற்குட்பட்ட ஆட்சி அங்கு வேண்டும் என்றும் கூறினர். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதற்கோ அல்லது தயாரிக்க முற்படுகிறது என்பதற்கோ எந்தவித ஆதாரத்தையும் அமெரிக்கா கொடுக்கவில்லை.

IAEA உடைய அறிக்கை மறுநாள் வெளிவந்தபோது, அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவை ஆதரவு கொடுத்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் தெஹ்ரானை அதனுடைய அணுவாயுதத் திட்டம் பற்றிய சில கேள்விகளுக்கு விடையளிக்குமாறும், கூடுதலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு IAEA யின் பரந்தளவு ஆய்வுகள் நடத்தக் கையெழுத்திடுமாரும் கேட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் IAEA மற்றொரு அறிக்கை தயார் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளது.

சர்வதேச செய்தி ஊடகத்தால் இது ஒரு ''சமரசம்'' என்று விவரிக்கப்பட்டாலும், IAEA அறிக்கை புஷ் நிர்வாகத்திற்கு அது கேட்டதில் பெரும்பாலானவற்றைக் கொடுத்துள்ளது. புஷ்ஷின் செய்தித் தொடர்பாளர் ஆரி பிளீஷெர் ''சர்வதேச அளவில் ஜனாதிபதியின் செய்திக்குக் கூடுதலான வலிமை'' என்று வரவேற்றார். இம் மாதத் துவக்கத்தில் G8 உச்சிமாநாட்டின்போது ஜேர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை அமெரிக்காவின் ஈரான், கொரியா மீதான கோரிக்கைகளை ஏற்க விருப்பம் தெரிவித்த அளவில், ஏதோ ஒரு வகையில் IAEA யின் செயல்பாடு வரும் என்பது முன்கூட்டியே முடிவாகிவிட்டது.

IAEA கூட்டத்தில் நிறுவனத் தலைவர் முகம்மது எல்பரடேய் பெப்ரவரி மாதம் ஈரானுக்குச் சென்ற பயணத்தைப் பற்றியும் தகவலறிந்தது. ஜூன் முற்பகுதியில் வெளிவந்த அவருடைய அறிக்கையை வைத்து, தெஹ்ரான் அணுசக்தி தொடர்புடைய வசதிகள் பற்றி தெரிவிக்காதது பற்றியும், நாடன்ஸில் (Natanz) யூரேனியச் செறிவு பற்றிய முன்னோடி ஆலை பற்றியும், 1.8 தொன்கள் இயற்கை யுரேனியம் வாங்கியது பற்றிப் பேசாமல் இருந்ததையும் குறை கூறியுள்ள அமெரிக்கா, இந்த அறிக்கையின் மீது தாவி விழுந்து ஈரானின் தீய எண்ணங்களைப் புலப்படுத்துகிறது என்று புலம்பியது. IAEA க்கு அமெரிக்காவின் தூதரான கென்னத் பிரில், கடந்த வாரம் இக்கண்டுபிடிப்புக்கள் ''ஆழ்ந்த கவலை'' தருவதாகவும், ஈரான் ''நீண்ட கால பாதுகாப்பு முறைகள் மீறல் மற்றும் தவிர்த்தலுமான தன்மையை'' வெளிப்படுத்தும் சமீபச் சான்றுகளாக உள்ளன என்று விவரித்தார்.

ஆனால் நாடன்சில் உள்ள ஆலையானது அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு எதிரானதும் அல்ல. விதிமுறைகளை மீறியதும் அல்ல. ஒப்பந்தப்படி ஈரான் IAEA டம் அவற்றைச் செயல்படுத்தினால் தெரிவிக்கவேண்டும் என்று மட்டுமே உள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன், 1991 ல் சீனாவிலிருந்து ஒரு குறைந்தளவான 1.8 தொன் இயற்கை யூரேனியம் வாங்கியது மட்டுமே நிகழ்ந்தது. ஈரானியத் தலைவர்கள் பலமுறை தங்களுக்கு அணுவாயுதத் தயாரிப்பில் நாட்டம் இல்லையென்றும், அணு சக்தி அனைத்தும் மின்சாரத் தயாரிப்பிற்காகவே உள்ளது என்றும் கூறி வந்துள்ளனர்.

ஈரானின் அணு சக்தித் திட்டத்தின் தலைவர் கோலம்ரேஜா அகாஷாடே IAEA யுடன் தங்கள் நாடு ஒத்துழைக்கும் என்று அறிவித்துள்ளார். இந்த நிறுவனம் ஏற்கனவே நாடன்ஸ் திட்ட இடத்தில் கண்காணிப்புக் கருவிகளையும் வைத்துள்ளது. ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட இருக்கும் பஷெஹ்ரி (Bushehr) ஆலையானது மின்சக்தி தயாரிக்கத் தேவைப்படும் எரிபொருட்களையே கொண்டுள்ளது. அத்துடன், IAEA யின் கோரிக்கையான சுற்றுப்புற மாதிரிகளை Kalaye Electric Company லிருந்து அனுப்பவேண்டும் என்பதை அது மறுத்துவிட்டது. ஏனெனில் அணு சக்தி தொடர்பற்ற இந்த கோரிக்கைகளை அனுமதித்தால் இதேபோன்ற பல தேவையற்றவைகள் வரக் கூடியதைத் தவிர்க்கும்.

ஈராக் போலவே, ஈரானையும் முடியாததை நிரூபிக்குமாறு கேட்கிறார்கள். குறிப்பாக தன்னிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் திறன் நாட்டில் எப்பகுதியிலும் இல்லை என்பதை நிரூபிக்குமாறு கேட்கிறார்கள். வாஷிங்டனின் கருத்தை அதன் தூதுவர் பிரில் தெளிவுபடுத்தியுள்ளார். (IAEA வருங்கால ஆய்வுகளின் முடிவைப் பற்றிய நிலையை) ''அமெரிக்கா IAEA யின் கூடுதலான தகவல் சேகரிப்பு ஒரே ஒரு முடிவிற்குத்தான் இட்டுச்செல்லும். ஈரான் முனைப்போடு அணுவாயுதத் திட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது'' என்று அவர் கூறினார். வாஷிங்டனின் கடந்த கால பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய பொய்யுரையை (ஈராக்கில்) நினைவுகூறும்போது, ஈரானில் அணுவாயுத உற்பத்தியைப் பற்றிய அறிக்கைகளில் எந்த நம்பிக்கையையும் கொள்வதற்கில்லை.

இரகசியமாகச் செயல்படுவதற்கு ஈரானிடம் அனைத்துக் காரணங்களும் இருக்கின்றன. தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்கள் - அமெரிக்க நண்பர் ஷா (Shah) பதவியிலிருந்து 1979 ஆண்டு துரத்தப்பட்டதிலிருந்து - ஈரானில் அணுத்திட்டத்திற்கோ வேறு எதற்காவதற்தோ சட்டத்திற்கு புறம்பாகவே உள்ளது என்று கூறிவரும் நிலையே காணப்படுகிறது. அத்துடன் பஷெஹ்ரி அணுசக்தி ஆலை நடத்தப்பட அனைத்துத் தடைகளையும் அமெரிக்கா செய்து வந்துள்ளது. இந்தத் திட்டம் ஜேர்மன் நிறுவனம் ஸீமன்ஸால் (Siemens) ஆரம்பிக்கப்பட்டதுடன் 1980 களின் ஈரான்-ஈராக்கிய போரின்போது கடுஞ்சேதமடைந்தது. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீமன்ஸ் இதனை பழுது பார்க்கவும் மறுத்ததோடு திட்டக் கட்டுமானத்தையும் அது முடிக்கவில்லை. இதர ஐரோப்பிய நிறுவனங்களும் இந்த முறையில்தான் நடந்துகொள்கின்றன.

1990 களின் நடுப்பகுதியில் ஈரான், ரஷ்யாவின் உதவியை நாடி பல ஒப்பந்தங்களில் இத்திட்டத்தை முடிப்பதற்காகக் கையெழுத்திட்டுள்ளது. இந்த 800 மில்லியன் டொலர் திட்டம் மீது, இதுவரை புஷ் நிர்வாகம் கொடுத்து வந்த அழுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் நிறுத்த மறுத்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்யா ஈரானை கூடுதலான IAEA ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும், இருக்கும் உறுதிகளை விடக் கூடுதலான கண்காணிப்பதற்கு உட்படுமாறும் - உதாரணமாக பயன்படுத்தப்பட்ட எரிபொருள் தண்டுகள் (fuel rods) மீண்டும் பயன்படுத்தப்படுவதற்காக ரஷ்யாவிற்கு அனுப்பப்படவேண்டும் போன்றவை - வலியுறுத்தி வருகிறது

இராணுவ நடவடிக்கை விருப்பம்

தெஹ்ரானால் கொடுக்கப்படும் அருமையான உறுதிமொழிகள்கூட வாஷிங்டனின் கோரிக்கைகளை நிறுத்தாது என்பது தெளிவு. ஏனெனில் ஈராக்கைப் போலவே, ஈரானிலும் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறுவது அமெரிக்கப் பேரவாவின் பரந்த திட்டத்திற்கு ஒரு பாசாங்கே ஆகும். ஈரான் மீதான அமெரிக்காவின் நல்லெண்ணத்தை, அமைதி எண்ணங்களை விளக்க வெளிவிவகார அமைச்சர் கொலின் பவல் எடுக்கும் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, மற்றைய அமெரிக்க அதிகாரிகள் ''இராணுவ நடவடிக்கை விருப்பத்தை'' பற்றி நேரடியாகவே பேசி வருகின்றர்.

அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாட்டுத்துறை உதவிச் செயலர் ஜான் போல்டன் வெள்ளியன்று BBC வானொலிக்கு ''ஜனாதிபதி பல முறை அனைத்து விருப்பங்களையும் செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளபோதிலும், இராணுவ நடவடிக்கை எங்களுடைய விருப்பமில்லாதது ஒன்று மட்டுமல்லாமல், எங்கள் உள்ளங்களிலிருந்து தொலைதூரத்தில் அது உள்ளது'' என்று கூறினார். அவரை மேலும் வற்புறுத்திக் கேட்டபொழுது ''அது ஒரு விருப்பம்தான்'' என்று போல்டன் ஒப்புக்கொண்டார். புஷ் ஈரானை, வடகொரியா, ஈராக்குடன் இணைத்து ''தீய அச்சானி'' என்று முத்திரை குத்தினார். 2002 அவருடைய அரச அலுவலக குறிப்புக்கள் ஈரான் அடுத்த இலக்கு என்பதையும், தடுப்பு இராணுவ நடவடிக்கை என்றும் தெரிவிக்கின்றன.

புஷ் நிர்வாகத்தின் தீவிர வலதுசாரிகள் ''ஆட்சி மாற்றத்திற்கு'' அமெரிக்க அரசியலின் அதிகாரபூர்வமான கொள்கையென அறிவிக்க வேண்டுமென வற்புறுத்துகின்றன. செல்வாக்குப் பெற்ற நவபழமைவாதிகளும் அல்லது அவர்களோடு சேர்ந்த அமெரிக்க ஹெரிடேஜ் இன்ஸ்டிட்டியூட்டின் (Heritage Institute) புதிய ஏமாற்றுப் பேர்வழிகளும் அரசு எதிர்ப்பு எழுச்சியைச் சந்திக்க ஒரு அணுகுமுறையை வகுத்துள்ளனர். அது ''ஜனநாயகம்'' என்ற பெயரில் இருக்கும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு தெஹ்ரானில் அமெரிக்க சார்புடைய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

குடியரசுக்கட்சி செனட்டர் சாம் பிரவுன்பாக் ஈரானிய ஜனநாயக சட்டத்தை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார் (1998 ல் ஈராக்கிய விடுதலைச் சட்டத்தை பாக்தாத்தில் ''ஆட்சி மாற்றம்'' என்பதை அமெரிக்க கொள்கையாக ஆக்கியது போல்) இந்தச் சட்டவரைவின்படி 50 மில்லியன் டொலர்கள் அமெரிக்க ஆதரவு, ஈரானிலுள்ள அரசாங்க எதிர்ப்புக் குழுக்களுக்கு தொலைக்காட்சி, வானொலி பிரச்சாரங்களுக்காக பிரவுன்பாக் வெளிப்படையாக தேவை எனக் கூறுகிறார். ஆனால் மறைமுக நடவடிக்கைக்கு இந்த நிதியத்திலிருந்து சட்டப்படி ஒதுக்கப்படுமானால், போல்டன் போலவே ஈரானின் அணு சக்தி வசதிகளை அழித்தல் ஒரு விருப்பமாகவும் இருக்கும்.

பிரவுன்பாக் சமீபத்தில் லண்டனிலிருந்து வெளிவரும் Financial Times க்குக்கு கூறும்போது ''பென்டகன் உயர்மட்டத்திலிருந்து எனக்கு ஆதரவு உள்ளது. ஈரான் அரசாங்கத்தில் உள்ள கணிசமான சீர்திருத்தவாதிகளுடன் பேச (ஜனாதிபதி கடாமி ஆட்களுடன்) அழுத்தம் கொடுக்கவேண்டும். இப்பொழுது நாம் ஈரான் ஆட்சியோடு ஆக்கிரமிப்பு முனைப்போடு எதிர்கொள்ள வேண்டும் '' என்றார்.

பிரவுன்பாக்கின் சட்டவரைவை வாஷிங்டன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும் புஷ் சுற்று அவநம்பிக்கையுடன் ''இந்த தைரியமான நபர்கள் விடுதலையைப் பற்றிப் பேசுகிறார்கள்'' என்று ஈரானில் அரசு எதிர்ப்பு மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பற்றி ஆதரவோடு கூறினார்.

ஈராக்கைப் போலவே அமெரிக்காவின் கூடுதலான அழுத்தம் ஈரானில் இருப்பதற்குக் காரணம் வாஷிங்டன், மத்திய கிழக்குப் பகுதியை அதன் பரந்த எண்ணெய் வளத்திற்காக தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் எண்ணங்களை கொண்டிருக்கிறது என்பது தெளிவு. தன்னுடைய உரிமையிலேயே ஈரான் ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி நாடு மட்டுமல்ல, மத்திய ஆசியாவிற்கு அருகிலுள்ள எண்ணெய், எரிவாயுப் பகுதிக்கருகிலும் இது உள்ளது. மத்திய ஆசியாவிலிருந்து விரைவான, குறுக்கு வழி எண்ணெய்க் குழாய்கள் மூலம் ஈரானைக் கடந்து பாரசீக வளைகுடாவை அடையலாம்.

அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்நோக்கும் சூழ்நிலையில் ஈரான் தன்னை எந்த விதத்திலும் பலப்படுத்திக்கொள்ள, அணுவாயுத முறை உட்பட சகல உரிமையையும் கொண்டுள்ளது. அனைத்துப் புறத்திலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்கப் படைகள், பாரசீக வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை, பல மத்திய ஆசியக் குடியரசுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் என்று அமெரிக்கத் துருப்புகள் விரிவடைந்துள்ளது. மேலும் ஈரானிய அரசாங்கம், ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரிலிருந்து ஒரு முடிவுக்குத்தான் வரமுடியும். என்னதான் IAEA யின் கோரிக்கைகளை ஏற்றாலும் இறுதியில் ஆக்கிரமிப்பு போர்தான் முடிவாக இருக்கும். இராஜதந்திர அழுத்தங்கள், பொருளாதாரத் தடைகள், இரகசிய நடவடிக்கைகள் முதலியவை அமெரிக்க சார்புடைய ஆட்சியை தெஹ்ரானில் கொண்டுவரவில்லையென்றால் வாஷிங்டன் தன்னுடைய இராணுவ ஆற்றலைப் பயன்படுத்தி தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் தயங்க மாட்டாது.

Top of page