World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Huge rally in Hong Kong against anti-subversion laws

நாசவேலைகளுக்கு எதிரான சட்டத்திற்கு எதிராக ஹாங்க்காங்கில் பிரம்மாண்டமான பேரணி

By John Chan
8 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

சீனாவினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற தலைமை நிர்வாகி டுங்-சி-குவா சதி வேலைகளுக்கு எதிராக இயற்றியுள்ள சட்டத்தை எதிர்க்கும் வகையில், ஹாங்க்காங்கில் ஜூலை முதல் தேதி 5லட்சம் மக்கள் பிரம்மாண்டமான பேரணி நடத்தினர். ஹாங்க்காங் நிர்வாக பொறுப்பு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 6-வது ஆண்டை குறிக்கின்ற வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஹாங்காங்கின் அடிப்படை சட்டத்தில் 23-வது பிரிவின் கீழ் இயற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு மசோதா முன்னாள் பிரிட்டிஷ் காலனியிலும் சீனாவில் நடைமுறையில் உள்ள போலீஸ் அரசு நடவடிக்கைகளை விரிவுபடுத்தப்படுவதற்கு வகைசெய்கின்றது.

தியானன்மென் சதுக்கத்தில் தொழிலாளரும், இளைஞர்களும், சீனா ஸ்ராலினிச ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி ஹாங்காங் தெருக்களில் பத்து லட்சம் மக்கள் கண்டன பேரணி ஒன்றை நடத்தியதன் பின்னர் நடக்கும் பெரிய பேரணி இதுவாகும். பேரணியில் கலந்து கொண்டோருள் பெரும்பான்மையினர் ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டதை குறிக்கின்ற வகையில் கறுப்பு மேலாடைகளை அணிந்திருந்தனர். விக்டோரியா பூங்காவிலிருந்து அரசு கட்டிடங்கள் வரை நகரின் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணி மாநகரின் பொதுப் போக்குவரத்து வாகனங்களை தற்காலிகமாக முடக்கி விட்டது.

ஹாங்க்காங்கின் தலைமை நிர்வாகி டுங்கிற்கு எதிராகவும் 23-வது பிரிவிற்கு எதிராகவும் பதாகைகளையும் கொடிகளையும், ஏந்திவந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ''ஹாங்க்காங்கிற்காக சுதந்திரத்திற்காக, சட்டப் பிரிவு 23- இனை எதிர்க்க வேண்டும்", "மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை திருப்பித் தரவேண்டும்!", "நாங்கள் சலிப்படைந்து விட்டோம், நாங்கள் ஆத்திரத்துடன் இருக்கின்றோம், எனவே பதவிவிலக வேண்டும்!" என்பது உட்பட பல முழக்கங்களை எழுப்பிக்கொண்டு வந்தார்கள் 1300-க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பிற்காக அணி வகுத்து வந்தனர்.

ஓய்வு பெற்ற ஒரு செவிலியர் (Nurse) ராய்டர் நிருபருக்கு பேட்டியளிக்கும் போது "இது (சட்டப்பிரிவு 23) ஹாங்க்காங்கை கொடுங்கோன்மை காலத்திற்கு கொண்டு சென்றுவிடும்" என்று கருத்து தெரிவித்தார். வழக்குரைஞர் டெர்ரி சான், "மக்களது குரலை ஒடுக்குவதற்காக கருத்துக்களை அடக்குவதற்காக இந்த சட்டத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள்" என்று கருத்து தெரிவித்தார். தனது மகளுடன் பேரணியில் கலந்து கொண்ட நடுத்தர வயது தாய் யான்-சூய்-லி, ''எனக்காக இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை, அடுத்த தலைமுறையின் சுதந்திரத்திற்காக இங்கு வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

1997- ஆண்டு பிரிட்டன் ஹாங்க்காங்கின் நிர்வாக பொறுப்பை சீனாவிடம் ஒப்படைக்கும் போது நடைபெற்ற ஒரு விழாவில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும்: ஹாங்க்காங் நகரம் எதிர்வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு சிறப்பு தன்னாட்சி உரிமை படைத்த பகுதியாக அடிப்படை சட்டத்தின்படி, ஹாங்காங்கின் அரசியல் சட்டப்படி செயல்பட்டுவரும் என்று கூறியது. அதற்கு முன்னர் ஹாங்க்காங்கில் தியன்னமென் சதுக்க படுகொலைகள் குறித்து கண்டன பேரணிகள் நடந்ததை அடுத்து, புதிய பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுவதற்கு, பெய்ஜிங் அடிப்படை சட்டத்தில் ஒரு சிறப்புப் பிரிவை- 23-வது சட்டப் பிரிவை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

சீனாவில் தியனன்மென் சதுக்க படுகொலைகளைத் தொடர்ந்து பல அதிருப்தியாளர்கள், ஹாங்காங்கில் தஞ்சம் புகுந்தனர். ஹாங்காங்கிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சீனாவிற்கும் அரசியல் அச்சுறுத்தல்களாக கருதப்படும் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீது குறிப்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பெய்ஜிங் ஆட்சி விரும்பியது.

23-வது பிரிவு "அரச துரோகம், நாட்டிற்கு எதிரான பிரச்சாரம் மத்திய அரசிற்கு எதிரான நாசவேலைகள் அல்லது அரசாங்க இரகசியங்களை திருடுவது இந்த பிராந்தியத்தில் வெளிநாட்டு அரசியலமைப்புக்கள், அல்லது குழுக்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவது ஆகியவற்றை தடுப்பதற்கு சட்டம் இயற்ற வழிவகை செய்கின்றது. மேலும் இந்த பிராந்தியத்து அரசியலமைப்புக்கள், அல்லது குழுக்கள் வெளிநாட்டு அரசியலமைப்புக்கள் அல்லது குழுக்களோடு தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதைத் தடுப்பதற்கு தனது சொந்த சட்டங்களை இயற்றுவதற்கு" ஹாங்காங் அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குகிறது.

தேசிய பாதுகாப்பு மசோதாவின்படி, எதிர்ப்புக் குழுக்களும், அதிருப்தியாளர்களும் ஹாங்காங்கில் தஞ்சம் புகுந்துள்ள சீன ஜனநாயகக் கட்சி, ஃபாலுன் கொங் (Falun Gong) போன்றவற்றின் உறுப்பினர்கள் உள்பட சிறப்பாக குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். சீனா பாதுகாப்புச் சட்டங்களின் படி தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புக்களோடு சம்மந்தம் உள்ளவர்கள் "தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள்" என்று கருதப்படுவார்கள் மற்றும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.

மசோதாவின் 4வது ஷரத்து, சீன மக்கள் குடியரசிற்கு எதிரான அழிவுவேலை என்பதற்கு அதன் ஸ்திரத்தன்மைக்கு "இடருண்டாக்கும் பலத்தை அல்லது குற்றவியல் நடவடிக்கையை பிரயோகித்தலை அர்த்தப்படுத்தல்" உள்பட பரந்த வரையைறையை வழங்குகிறது. ஆயுள் தண்டனைக் குற்றம் இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு பெய்ஜிங் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குகொள்ளும் ஹாங்க்காங் வாசிகளுக்கும் பொருந்தும்.

அரச துரோக குற்றம் என்பது விரிவாக விளக்கப்படவில்லை. சீனாவில் ஸ்திரத்தன்மைக்கு இடர்விளைவிக்கும், பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும், வன்முறையில் ஈடுபட ஏனையோரைத் தூட்டியதற்கும்" பத்திரிகையாளர்கள் மீதும் இந்தச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். துரோகம், நாசவேலை அல்லது பிரிந்து செல்லுதலுக்கு "மற்றவர்களைத் தூண்டிவிடும் நோக்கம்" இருக்கும்பொழுது வெளியீடுகள் அரச துரோகத்திற்கு உரியதாக கருதப்படும் என்று மசோதா அறிவிக்கிறது. ஆயினும் "நோக்கம்" பற்றிய சட்ட விளக்கம் தெளிவில்லாமலும், அரைகுறையாகவும் விடப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக் குற்றங்கள் இழைத்தவர் என சந்தேகிக்கப்படுபவர்களைக் கவனிப்பதற்கு போலீசாருக்கு விரிவான அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. "அவசர விசாரணை அதிகாரம்" போலீசார் வாரண்ட் இல்லாமலேயே, வீடுகளில் சோதனை நடத்த சட்டத்தில் வழிவகை செய்கிறது.

பரந்த அதிருப்தி

சென்ற வாரம் நடைபெற்ற எதிர்ப்பு, 100,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று அமைப்பாளர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகப் போய் இருக்கிறது. மேலும், அதில் பங்கு கொண்டோர் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் அட்டூழியத்திற்கு ஆளாகி இருந்தார்கள், டுங் நிர்வாகம் தொடர்பாகவும் மோசமடைந்து வரும் சமூக நிலைமைகள் பற்றியும் பரந்த கவலைகள் இருந்தன. ஹாங்க்காங்கின் நாடாளுமன்ற பெரும்பான்மையைப்போல் டுங் ஒரு கோடீஸ்வர வர்த்தகர், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லர், மாறாக பெய்ஜிங்கால் நியமிக்கப்பட்டவர்.

இது சம்மந்தமாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருப்பதாவது: ''கண்டன ஆர்ப்பாட்டம் உத்தேச தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதேவேளை, அது மக்களது எல்லாவிதமான குறைபாடுகளையும் வெளிப்படுத்தும் அரங்காக மாறிவிட்டது. டுங் ஆட்சிக்கு பொதுவான அதிருப்தி தொடங்கி வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் மிக உயர்ந்த அளவிற்கு உள்ளது வரை, பல மாதங்கள் வரை ஹாங்க்காங்கை பாதித்த சார்ஸ் தொற்றுநோயை சமாளிப்பதில் தவறிவிட்டது வரை அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாக அந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அமைந்துவிட்டது.

சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்ரைட் டைம்ஸ் நாளேட்டில் வெளிவந்துள்ள தகவலின்படி, பஸ் தொழிலாளர்களின் பிரதிநிதி மாக் டாக் செங் (Mak Tak Cheng) சக ஊழியர்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாக ஒரு எடுத்துக்காட்டை பிரசுரித்திருக்கின்றது. ''ஹாங்க்காங்கில் வரலாறு காணாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அளவு வீதம் நிலவுகிறது என்றார் அவர். சுகாதார கண்காணிப்பு ஊழியர் உட்பட இதர குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஹாங்க்காங்கில் சார்ஸ் தொற்று நோய் பரவியதில் டுங் ஆட்சி எடுத்த நடவடிக்கை குறித்து நடுநிலை விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டன.

சீனாவிற்கு ஹாங்க்காங் திருப்பித் தரப்பட்ட நேரத்தில் 1997-98-ல் ஆசிய பொருளாதார நெருக்கடி உருவாயிற்று. அந்த நெருக்கடி ஹாங்க்காங் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்தது மற்றும் "சுதந்திர சந்தை அற்புதம்" என்று அழைக்கப்பட்டதை அழித்தது. 1990-களின் கடைசியில் நிலம் வாங்கல் விற்றல் தொழிலின் குமிழி பொறிந்தது, அதன் காரணமாக சொத்துக்களின் விலையில் 65 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. பல்லாயிரக்கணக்கான நடுத்தரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு எதற்கும் பயனற்றதாக ஆகிவிட்டது மற்றும் நடுத்தர வகுப்புகளைச் சார்ந்தவர்கள் மிகப்பெரும் அளவில் அடமான தொகைகளைச் செலுத்த திணற ஆரம்பித்தனர்.

பொருளாதார பிரச்சனைகள் சார்ஸ் தொற்றுநோய்கள் தாக்கியதால் தீவிரமடைந்தன. சுற்றுலாத்துறையில் கடுமையாக வீழ்ச்சியை உருவாக்கியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஹாங்க்காங் நகரில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 2.3 சதவீதமாக இருந்தது, தற்போது 8.2 சதவீதமாக பெருகிவிட்டது. ஹாங்காங்கில் மிகப்பெரிய சேவைத் தொழிலில் ஊதிய விகிதங்களும் பணி நிலைகளும் சீர்குலைந்தன. மிகக்குறைந்த அளவிற்கே சமூகப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் ஹாங்க்காங் பல்கலைக் கழகத்தில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு திட்டக்குழுவினர் வாக்கெடுப்பு நடத்தியதில் ஏறத்தாழ மக்கள் தொகையில் பாதிப்பேர் இன்றைய நிலைப்பாடு குறித்து தங்களது பொதுவான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் முதல் இந்த அதிருப்தி 14 சதவீதம்- அதிகரித்துள்ளது.

சென்றவாரம் நடைபெற்ற கண்டன பேரணிகள் பற்றி விமர்சனம் செய்திருக்கும் ஹாங்க்காங்கின் லிக்னான் பல்கலைக் கழகத்து அரசியல் விஞ்ஞானி போல் ஹாரிஸ் AFP- செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ''இது ஒரு மகத்தான பேரணி இங்கு இதற்கு முன்னர் நாம் பார்த்த கண்டனப் பேரணிகளைவிட மிகப்பெரியது. தாங்கள் செய்யும் எந்த மாற்றமும் எந்த அளவுக்கு பாதிப்பை உண்டு பண்ணும் என்பது பற்றி, ஹாங்க்காங் மக்கள் எரிச்சலும் சிலநேரங்களில் ஐயுறவு மனப்பான்மையும் கொண்டவர்களாக காணப்படுவார்கள். அப்படியிருந்தும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது எதிர்ப்பை காட்டுவதற்காக மிகப்பெருமளவில் திரண்டு விட்டனர். இது பிரச்சனை பரவலானது என்பதை எதிரொலிப்பதாக அமைந்திருக்கின்றது- அது அரசாங்கத்தையும் கூட தாக்குகிறது. இப்படி கடும்வெறுப்பு உணர்வு வெளிப்பட்டிருப்பதை ஆட்சியாளர்கள் மிக எளிதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற உண்மையான நிலவரம் என்ன என்பது டுங்கிற்கு தெளிவாக தெரியவில்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது.''

சீன ஸ்ராலினிச அதிகாரத்துவத்தைப் பற்றியும் இதே கருத்தைக் கூற முடியும். கண்டப் பேரணி தொடங்குவற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், சீனப் பிரதமர் வென்ஜியா பாவோ, பிரிட்டன் ஹாங்க்காங் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்த ஆறாவது ஆண்டு விழாவை அதிகாரபூர்வ சிறிய விழாவில் உள்ளூர் அதிகாரிகளுடனும், வர்த்தகத் தலைவர்களுடனும் சேர்ந்து கலந்து கொண்டு விட்டு, ஹாங்க்காங் நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். புதிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங் மக்களுக்கு சுதந்திரங்களையும் மற்றும் பல்வேறு உரிமைகளையும் எந்த வகையிலும் பாதிக்காது என்று அவர் பொதுமக்களுக்கு உறுதியளிக்க முயன்றார். புதிய சீன தலைமையில் இடம் பெற்றுள்ள "ஜனநாயக ஆதரவு சீர்த்திருத்தக்காரர்களில்" வென்னும் ஒருவர் என்று கருதப்படுகிறது.

டுங் நிர்வாகமும் மற்றும் பெய்ஜிங்கும் சென்ற வார எதிர்பின் அளவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடக்கத்தில் எதிர்ப்பாளர்கள் மீது கடுமை காட்டுவதற்கு அதிகாரிகள் முயன்றனர். பெய்ஜிங் ஆதரவு பத்திரிகை வென் வெய் போ (Wen Wei Po)- தெரிவித்த கண்டனத்தை மேற்கொளாக எடுத்துக் கொள்ளலாம் இந்தக் கண்டனப் பேரணி "உள்நோக்கங்களோடு செயல்படும் சில சக்திகளால் இயக்கப்படுகிறது" என்று அந்த பத்திரிகை கண்டனம் செய்தது மற்றும் ஹாங்க்காங்கின் "சமூக ஸ்திரத்தன்மைக்கு" அச்சுறுத்தலாக இது அமைந்துவிடும் என்று எச்சரித்தது.

சென்ற வியாழக் கிழமையன்று, ஹாங்க்காங்கின் போலீஸ் தலைமை அதிகாரி ட்சாங் யாம் புய் (Tsang Yam-pui) புதன் கிழமையன்று உத்தேச மசோதா மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் போது மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்கப்போவதாக அச்சுறுத்தினார். "நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிடுவது, மற்றும் சட்டம் இயற்றும் பணிகளை பாதிக்கச் செய்வது சட்டவிரோத நடவடிக்கை" என்று அவர் அறிவித்தார். சட்டத்தை எதிர்ப்பவர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தை சுற்றி வளைத்து பேரணி நடத்த கோரிக்கை விடுத்த்து, நாடாளுமன்ற கூட்டம் நடப்பதை தடுக்கப்போவதை அவர்கள் நோக்கமாகக் கொள்ளவில்லை என குறிப்பாய் தெரிவித்தது.

சனிக்கிழமையன்று டுங், பத்திரிகையாளர் பேட்டிக்கு ஏற்பாடு செய்தார். எதிர்க்கட்சிகளை எதிர்ப்பை சமாதானப்படுத்துகின்ற முறையில் உத்தேச தேசிய பாதுகாப்பு மசோதாவின் மூன்று அம்சங்களில் விட்டுக்கொடுக்க முன்வந்தார். சீனாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புக்களோடு தொடர்புடைய குழுக்கள் அல்லது அமைப்புக்கள் ஹாங்காங்கில் செயல்படும்போது அவற்றிற்கு தடைவிதிக்கும் பிரிவை கைவிட முன்வந்தனர். வாரண்ட் எதுவும் இல்லாமல் போலீசார் வீடுகளில் சோதனையிட வகைசெய்யும் பிரிவை கைவிடவும் முன்வந்தார். அரசாங்கம் தொடர்பான தகவல்களை வெளியிடுகின்ற பத்திரிகையாளர்கள், பொதுநலன் கருதி அவற்றை பிரசுரித்ததாக சமாதானம் கூறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் வழிவகை செய்வதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இப்படி உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் போதுமானவையல்ல, எனவே சட்டமியற்றுவதையே தள்ளிவைக்க வேண்டும் என்ற நிர்பந்தங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. நேற்று டுங் வார இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். அவரே இப்போது உத்தேச சட்ட முன் வரைவு மேலும் ஆலோசனை கலந்த பின்னரே பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறவிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. வாக்கெடுப்பு நடத்த தொடங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் டுங்கின் முக்கிய கூட்டாளியான, பெரு வர்த்தகர்கள் அடங்கிய தாராளவாத கட்சித் தலைவர் ஜேம்ஸ் டியான் (James Tien) ஹாங்காங்கின் நிர்வாகக் குழுவிலிருந்து ராஜிநாமா செய்தார் மற்றும் சட்டமியற்றுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்ற வாரம் நடைபெற்ற சம்பவங்கள் ஹாங்காங் நிர்வாகம் எவ்வளவு பலவீனமானது, எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. உடனடி நெருக்கடியிலிருந்து டுங் தப்பித்திருக்கலாம் ஆனால் அவரது அரசியல் எதிர்காலம் தற்போது சந்தேகத்திற்குரியதாக ஆகிவிட்டது.

Top of page