World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan delays sending troops to Iraq

பாக்கிஸ்தான் ஈராக்கிற்கு படைகளை அனுப்புவதை தாமதப்படுத்துகிறது

By K. Ratnayake
21 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு படைகளை அனுப்புவது என்று "கொள்கை அடிப்படையில்" ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வெஸ் முஷாராப் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு பின்னரும் வாஷிங்டனுடன் படைகளை அனுப்புவதற்கான "வழிவகைகளின்" ஏற்பாட்டில் இறுதி முடிவிற்கு வரவில்லை. இப்படி நீண்டகாலமாய் பாக்கிஸ்தான் நடவடிக்கைகள் தாமதப்பட்டுக்கொண்டு வருவதற்குப் பின்னால் பாக்கிஸ்தான் படைகள் ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் ஈராக்கை பிடித்துக் கொண்ட படைகளுடன் சிக்கிக்கொள்ளும் என்பதுடன் அது உள்நாட்டில் எதிர்ப்புக்களைத் தூண்டிவிடும் என்ற இஸ்லாமாபாத்தில் ஆழமான கவலைகள் நிலவுகின்றன.

ஈராக்கில் நடைபெற்றுக் கொண்டுள்ள கொரில்லா தாக்குதல்களால் ஒவ்வொரு நாளும் அமெரிக்க துருப்புக்களுக்கு இழப்புக்கள் ஏற்படுவது அதிகரித்துக் கொண்டிருப்பதால் மற்ற நாடுகள் தங்களது இராணுவ படைகளை அனுப்ப வேண்டும் என்று புஷ் நிர்வாகம் தீவிரமாக முயன்று வருகின்றது. அது அதன் இராணுவ ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தவும் இராணுவத்தின் வலிமையை வலுப்படுத்துவதற்கும் ஆக இரண்டுக்குமாகும். பிற நாடுகள் தங்களது துருப்புக்களை அனுப்பி வைக்கவேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஜூன்- கடைசியில் முஷராப் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட பொழுது ஈராக்கிற்கு 10,000- பாகிஸ்தான் துருப்புக்களை அனுப்புவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

துருப்புக்களின் எண்ணிக்கை அளவின் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து தனக்கு இராணுவ உதவி கிடைக்க வேண்டும் என்பதில் வாஷிங்டன் குறியாக உள்ளது. புது தில்லியைப் பொறுத்தவரை இந்தியா17,000- துருப்புக்களை அனுப்பும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. இது அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய பட்டாளமாக இருக்கும். அமெரிக்க அதிகாரிகள் கணிசமான அளவிற்கு தங்களது நேரத்தையும் ஆற்றலையும், செலவிட்டு இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது துருப்புகளை அனுப்புவதற்கு அழுத்தம் கொடுக்கவும் லஞ்சம் கொடுக்கவும் முயன்று வருகிறார்கள்.

காம்ப் டேவிட்டில் ஜனாதிபதி புஷ்ஷை சந்தித்த பின்னர் முஷாரப் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது: ''புஷ் ஈராக் தகராறு குறித்து பேசினார், மற்றும் நாங்கள் பாகிஸ்தான் துருப்புக்கள் பற்றி விவாதித்தோம். கொள்கை அடிப்படையில் நாங்கள் உடன்படுவோம், ஆனால் நாங்கள் அதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.'' இவ்வாறு முஷாரப் கூறியதும் நிருபர்கள் என்ன வழிவகை என்று வினவினர். அவற்றுள் ஒன்று "நிதிப் பொதியம்" என்று முஷாரப் கோடிட்டுக் காட்டினார். வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், பாகிஸ்தான் தனது துருப்புக்களை அனுப்புவதற்கு வாஷிங்டன் எவ்வளவு பணத்தை பாகிஸ்தானுக்கு தரும் என்பதுதான்.

ஆயினும், அதேநேரத்தில், முஷாரப் "முஸ்லிம் உலகத்தின் கண்ணோட்டம்" குறித்து கவலை தெரிவித்தார். தனக்கு ஒரு வகை அரசியல் முகமூடி தேவை என்பதை வெளிப்படுத்தினார். ''ஐ.நா-சார்பில் அல்லது இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (OIC) சார்பில் அல்லது வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCE) சார்பில் துருப்புக்களை அனுப்ப முடியுமா? என்பதை நாங்கள் பார்க்க வேண்டியது அவசியமாகும்'' என்று முஷாரப் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஆக்கிரமித்த பின்னர், முஷாரப் பாகிஸ்தானில் அரசியல் கழைக்கூத்தாடி போல் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. வாஷிங்டனின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை நிலைநாட்டிக் கொள்வதில் தீவிரம் காட்டிவந்த இராணுவ வல்லாண்மை அதிகாரியான அவர் காபூலில் இருந்த தலிபான் ஆட்சிக்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்டார். அமெரிக்க இராணுவத்திற்கு பாகிஸ்தான் இராணுவத் தளங்களை திறந்துவிட்டார். அதற்குப்பின்னர் இருந்து, ஆப்கனிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையை மூடுவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு அடிபணிந்தார் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உடன்பட்டார்.

ஆனால் ஈராக்கிற்கு பாகிஸ்தான் துருப்புக்கள் எதையும் அனுப்புவது உள்நாட்டில் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கிவிடக் கூடும். ஈராக் படையெடுப்பிற்கான ஆயத்தங்கள் நடைபெற்ற நேரத்தில் போருக்கு எதிரான கண்டனப் பேரணிகளில் பத்து லட்சக் கணக்கான மக்கள் பாகிஸ்தானில் பங்கு எடுத்துக் கொண்டனர். இந்த எதிர்ப்புக்களின் காரணமாக அமெரிக்க போர்த்திட்டங்களுக்கு எதிராக ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட கண்டனங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு உருவாயிற்று. ஈராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்தும் ஐ.நா- தீர்மானத்தை பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை.

ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதை எதிர்க்கட்சிகள் எதிர்த்துள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாத (Jamaat-i-Islami) ஜமாத்தே இஸ்லாமி தலைவர் குஷித் அஹமத் இது மிகவும் ''ஆபத்தான நிலவரம்'' என்று வர்ணித்தார். ஆறு கட்சி கூட்டணியில் ஜமாத்தே இஸ்லாமி முன்னணி கட்சியாகும். இந்த அணியான (Muttahida Majlis-e-Amal) முக்தாஹிதா மஜ்லிசே அமல் (MMA) சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. ஆப்கனிஸ்தானுக்கு பக்கத்தில் உள்ள இரண்டு பாகிஸ்தான் மாகாணங்களான பலுசிஸ்தானிலும், வடமேற்கு எல்லை மாகாணத்திலும் இந்த அமைப்பு ஆட்சி புரிந்து வருகிறது. ஈராக்கிற்கு படைகள் அனுபப்பட்டால், MMA- கண்டனப் பேரணிகளை நடத்தும் என்றும் இராணுவ வீரர்களது குடும்பங்களை ''சமுதாய புறக்கணிப்பு'' செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் MMA- அச்சுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தலைமையில் இயங்கிவருகிறது. இந்தக் கட்சி ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதற்கான திட்டத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் இறுதியில் அத்தகைய ஆலோசனைக்கு உடன்படுவதைப் பொருத்தமற்றது என அது விலக்கவில்லை, ''அமெரிக்கா ஐ.நா- அங்கீகாரம் பெறாமல் ஈராக்குடன் போருக்கு சென்றிருக்கிறது. எனவே தேவையான கலந்துரையாடல் விவாதங்களுக்கு பின்னர் துருப்புக்களை அனுப்புவதால் என்ன பயன் கிடைக்கும், என்ன பாதகம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்த பின்னர், இஸ்லாமாபாத் முடிவு எடுப்பது சரியாக இருக்கும்'' என்று அக்கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.

வாஷிங்டனை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்கும் மக்களது எதிர்ப்புக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டு, முஷாரப் முடிவெடுப்பதில் இழுத்துக்கொண்டு போவதாகக் காணப்படுகிறார். ஜூலை-9-ந் தேதி Dawn நாளேடு ஒரு செய்தியை சுட்டிக்காட்டி இருந்தது: ''இஸ்லாமிய சகோதரத்துவத்தை பேணிக்காத்து வளர்க்கின்ற வகையில் இஸ்லாமிய துருப்பு ஒன்றை அனுப்புவதற்கு இஸ்லாமாபாத் முயன்று வருகின்றது. இந்தோனேஷியா, மலேசியா, வங்கதேசம், மற்றும் சில வடக்கு ஆபிரிக்க நாடுகளை உள்ளடக்கியதாக இந்த இஸ்லாமிய சகோதரத்துவப் படை அமைய வேண்டும் ." ஆனால் அந்த விருப்பம் எதுவும் நிறைவேறவில்லை.

ஐ.நா படையின் ஒரு பகுதியாக இல்லாமல் இந்தியா தனது துருப்புக்களை அனுப்பாது என்று சென்ற வாரம் புது தில்லி தனது முடிவை அறிவித்ததானது, பாகிஸ்தான் இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை குறைவாகச் செய்யலாம். முஷாரப் கொள்கை அடிப்படையில் உடன்பட்டதற்கு காரணம் அமெரிக்காவிற்கும் தனது எதிரி நாடான இந்தியாவிற்கும் இடையில் இராணுவ மற்றும் மூலோபாய உறவுகள் வளர்ந்து வருவதை எதிர் கொள்வதற்கான தேவையுடன் கட்டுண்டிருக்கிறது. இந்திய துருப்புக்களை வடக்கு ஈராக்கில் பொறுப்பில் அமர்த்துவதற்குக்கூட அமெரிக்கா முன் வந்தது மற்றும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தம்பாவில் அமெரிக்க மத்திய இராணுவ தலைமையில் ஒரு மூத்த இந்திய அதிகாரியை வைத்திருக்க அமெரிக்கா இணங்கியது. இந்தியாவின் பங்களிப்பு உடனடியாக இல்லை என்று தெரிந்ததால் முஷாரப் புது தில்லிக்கு இணையான வகையில் செயல்படுவதற்கு எந்த விதமான அழுத்தமும் இல்லாத நிலையில் செயல்பட்டு வருகிறார்.

இரண்டு நாடுகளிலும் உள்ள ஆட்சியாளர்கள் மிகவும் அப்பட்டமான புதிய காலனி ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டுவரும் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதில் பீதி கொண்டுள்ளனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் - இந்திய துருப்புக்களை பீரங்கிகளுக்கு இறையாக ஆக்கிய கசப்பான நினைவுபடுத்தல்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் இருக்கின்றன.

முதலாவது உலகப்போரின் போது, இந்திய துணைக் கண்டத்திலிருந்த பிரிட்டிஷ் காலனிகளில் இருந்து 15,00,000- மக்கள் ''தொண்டர்களாக'' அனுபப்பட்டனர். மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் கிணறுகளை கைப்பற்றவும், அவற்றைப் பேணிக்காக்கவும், 700,000 இராணுவ வீரர்கள் அனுப்பட்டனர். ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் அன்றைய ஒரு மாகாணமான மெசபட்டோமியாவை கைப்பற்ற 1916-ம் ஆண்டு குட்- என்ற பகுதியில் பிரிட்டிஷ் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 12,000-துருப்புக்களில் 10,000-இந்திய துருப்புக்கள் மாண்டனர்.

மேலும் ஈராக்காக அமைந்துள்ள பகுதிகளில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அப்போது நடைபெற்ற நான்கு ஆண்டு போரில் மேலும் 31,000- இராணுவ வீரர்கள் பலியானார்கள். 1920- களில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கு நடைபெற்ற தாக்குதல்களில் 1,000- இந்திய மற்றும் அரபு இராணுவ வீரர்கள் பலியாயினர். மத்திய கிழக்கிலிருந்து பலியான இராணுவ வீரர்களின் சடலங்களாகவே இந்தியா முழுவதிலும் திட்டு திட்டாக இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.

வாஜ்பாயியோ அல்லது முஷாரப்போ, தங்களது துருப்புக்களை மக்களின் வெறுப்பிற்கு ஆளான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு -குறிப்பாக இடைவிடாது நீண்ட மற்றும் ஆபத்தான ஒன்றாக ஆன ஒன்றுக்கு-- ஆதரவாக அனுப்புவதன் மூலம் கடைசியாய் செய்ய விரும்புவது, பழைய காலனி ஆதிக்க காலத்து கசப்பான அனுபவங்களை மீளத் தூண்டுவதாக இருக்கும்.

Top of page