World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The German Social Democratic Party: 140 years

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி: 140 ஆண்டுகள்

By Ulrich Rippert
30 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஒவ்வொரு பத்து ஆண்டுகள் முடிந்த பின்னும் சமூக ஜனநாயக கட்சி (SPD-German Social Democratic Party) அதனுடைய நகைப்பிற்கிடமான ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தை ஒழுங்காக நடத்துகின்றது. மே 23, 2003ல் சமூக ஜனநாயக கட்சி 140 ஆண்டினை கடந்தது. எந்தக் கட்சியும் வரலாற்றுக்கும் மரபுக்கும் இந்த அளவு மதிப்புக் கொடுத்ததில்லை. அதேவேளை இந்தளவு வரலாற்று உண்மையைப் பற்றியும், வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் பெற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டாமல் விடுவதுமில்லை.

இந்த ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் நுழைவுச் சீட்டை சட்டென்று ஒரு முறை பார்த்தாலே ஒரு திடுக்கிடும் மூச்சுத் திணறல் ஒரு நிமிஷத்திற்கு ஏற்பட்டுவிடும். அதில் கட்சியின் மூதாதையரின் புகைப்படங்கள் ஒகுஸ்ட் பேபல் (August Babel) தொடங்கி ஹெகார்ட் ஷ்ரோடரில் (Gerhard Schroder) முடிவடைகின்றது. நடுவில் ரோசா லக்ஸ்சம்பேர்க், குர்ட் ஷூமாக்கர், வில்லி பிராண்ட் (Rosa Luxemberg, Kurt Schumacher, Willy Brandt) ஆகியோருடைய படங்கள் உள்ளன. எந்த அளவு ஒரு சீரழிவு? "மாபெரும் சோசலிச வாதிகளான பேபல், லக்ஸ்சம்பேர்க்கிலிருந்து கையை எடுங்கள்" என கூற வேண்டும் போலிருந்தது.

தற்போதைய கொண்டாட்டத்தின் சிறப்பு என்னவென்றால் கொண்டாடும் மனநிலை ஒருவரிடத்தும் இல்லை; கடந்த சில மாதங்களாகக் கட்சியின் தலைவர் எல்லோரையும் முன்பு எதெல்லாம் இன்றியமையாதவை என்று சமூக ஜனநாயக கட்சி கூறியதோ அச்செயல்கள் அனைத்தும் அகற்றப்படுவதற்கும், சமுதாயத்தின் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கும் திட்டங்களை ஏற்பதற்கும் சமூகநல திட்டங்களின் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு அச்சுறுத்தி வருகின்றார். அரச சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் சமூக ஜனநாயக கட்சியின் கால அளவினைப்போல் புராதனம் வாய்ந்துடன், முதல் சான்ஸ்லரான ஒட்டோ வொன் பிஸ்மார்க் (Otto von Bismarck) சமூக ஜனநாயக கட்சியின் ஆதரவு அதிகரித்துக்கொண்டுபோவதை இல்லாதொழிப்பதற்காக செயல்படுத்தியவையாகும். அவை இப்பொழுது ஒரு சமூக ஜனநாயக கட்சி அரசாங்கத்தால் தகர்க்கப்படுகின்றன். என்னே வரலாற்றின் விந்தை?

130 ஆண்டுகளுக்கு முன்னால் சமூக ஜனநாயக கட்சியின் எழுச்சியை, பிஸ்மார்க்கால் சமுக சீர்திருத்தம் என்ற கரோட்டைக் (Carrot) காட்டியோ, சோசலிச எதிர்ப்புச்சட்டம் என்ற சாட்டையைக் காட்டியோ தடுக்க முடியவில்லை; இப்பொழுது ஒரு சமூக ஜனநாயக கட்சியின் அதிபரே சமுதாயப்பாதுகாப்புத் திட்டத்தை படிப்படியாகத் தகர்த்து அழிக்கப் பார்க்கிறார். இதன்மூலம் தன்னுடைய சொந்தக் கட்சியின் நீண்டகால அரசியல் சீரழிவின் இறுதிக் கட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

10,12 பாராளுமன்றப் பிரதிநிதிகள் இதற்கெதிராக, கட்சி உறுப்பினரின் கருத்துக்களைத் திரட்டும் அளவில் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டபோது கட்சித் தலைமை சீற்றத்திற்குள்ளாகியது. பாராளுமன்றப் பிரிவின் தலைவரும், கட்சியின் பழைய பொதுச் செயலாளரும் ஆன Franz Muntefering, இந்த முயற்சியை "ஓர் அழுக்கடைந்த தந்திரம்" என்று வர்ணித்ததோடு எந்தப் பாராளுமன்ற உறுப்பினராவது அதிபரை முதுகில் குத்தும் முயற்சியில் ஈடுபட்டால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தினார். இன்று அடிப்படை ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதுடன், ஒவ்வொரு 'விலகி'ச் செல்வோரும் கட்சிக்குள் அச்சுறுத்துலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கட்சிதான் தன்னுடைய ஆரம்ப ஆண்டுகளில் ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் மிகப் பெரிய எழுத்துக்களில் அமைந்த கொடியைக் கொண்டிருந்தது.

வலதுசாரி செய்தி ஊடகத்தால் கைதட்டல் பெறும் அதிபர் ஷ்ரோடர் ஒவ்வொரு கட்சி முடிவு, பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கும் முன்பு கட்சி தன்னுடைய தலைமையில் நம்பிக்கை தெரிவிக்காவிடின் பதவி விலகிச்செல்வேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். பல வர்ணனையாளர்கள் இதை ஒரு வலிமையான தலைமைக்கு அடையாளமாகக் கருதி அவரைப் பாராட்டவும் செய்கின்றனர்; உண்மையோ எனின் இதற்கு மாறானது. ஒரு கட்சித் தலைவர் தன்னுடைய அதிகாரத்தை, தன்மீதான நம்பிக்கை கேள்வியை (Question of confidence) முன்வைப்பதன் மூலமும் பதவி விலகி விடுவேன் என்ற அச்சுறுத்தலின் மூலம் தான் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றால் அடிப்படையாக ஏற்கனவே அவருக்கு அதிகாரம் போய்விட்டது என்றுதான் அர்த்தமாகும். பெருநிறுவன அமைப்புக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கீழ்ப்படிந்த தன்மையும் மற்றும் எப்பொழுதும் அவர்களோடு பேச்சுக்களுக்குத் தயாராக இருக்கும் ஷ்ரோடர் தன்னுடைய கட்சிக்குள் உள்ள அனைத்து எதிர்ப்புக்களையும் மெளனப்படுத்திவிட்டு, ஒரு சர்வாதிகாரியைப்போல் நடந்து கொள்கிறார்.

மே 22ம் தேதி கட்சித்தலைவர் என்ற முறையில் ஓர் உரையில் மிகுந்த முக்கியத்துவத்தோடு தன்னுடைய நிகழ்ச்சிநிரல் 2010 (Agenda 2010) "சமூக ஜனநாயகத்தின் சிறந்த மரபுக்குட்பட்ட" திட்டம் என்று அறிவித்தார். இது "முற்றிலும் உண்மையே" சந்தர்ப்பவாதம் கட்சியை 90 ஆண்டுகளுக்கு முன்பே தன்கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த பின்னர், 'குறைந்த அளவு எதிர்ப்பு' என்ற நடைமுறையைப் பின்பற்றியே செயல்பட்டு வந்துள்ளதால், மிக பிற்போக்கான சமூக சக்திகளுக்கு உதவி செய்வதுடன், அவற்றை ஊக்குவித்தும் வருகின்றது.

இதுதான் இப்பொழுது மீண்டும் நடைபெறுகிறது. திட்டமிட்டுச் சமூக நலத்திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைப்பதும், சமூக ஜனநாயக கட்சியின் தலைமை தன் கட்சியையும் பாராளுமன்றத்தையும் நடத்துகின்ற முறையும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சி/ கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU-Christian Democretic Union, Christian Socialist Union) கூட்டணி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி (FDP-Free Democratic Party) ஆகியவற்றின் வலதுசாரிப் பிரிவுகளை பெரிதும் ஊக்குவிப்பதிலும், பலப்படுத்துவதிலும்தான் முடிந்துள்ளன. 1920களிலும் 1930களிலும் காணப்பட்ட நிலைமையையே இது நினைவுப்படுத்துகின்றது.

அந்த நேரத்தில் சமூக ஜனநாயக கட்சியின் ஹெர்மன் முல்லர் (Hermann Müller) இன் சமூக எதிர்ப்பு திட்டங்கள் மத்தியவாதியான ஹென்ரிச் பூரூனிங்கின் (Heinrich Brüning) பதவிக்கு வருவதற்கு வழிவகுத்ததுடன், அவர் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி ஹிட்லரின் சர்வாதிகாரம் தோன்றுவதற்கு வழியமைத்தார். அப்பொழுதும் கூட சமூக ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்பட்ட சமூக மற்றும் ஜனநாயக, பாராளுமன்ற உரிமைகளை வெட்டும் நடவடிக்கைகள் இறுதியில் அதன்மீதே பிரயோகிக்கப்படும் என்பதும் அப்பொழுதே தெளிவாயிற்று.

இருந்தபோதிலும், அவ்வாறு வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்வது, சமுதாய, ஜனநாயக உரிமைகளைத் தாக்கினால் அரசியல் விளைவுகள் என்ன ஆகும் எனச் சிந்திப்பதெல்லாம் இக்கட்சி வெகுகாலம் முன்னரே மறந்துவிட்டிருந்தது. இதே நிலைதான் கட்சிக்குள்ளே தோன்றும் எதிர்ப்புகள் கையாளும் முறையிலும் உள்ளது. இந்த உள்கட்சி எதிர்ப்பு ஷ்ரோடர் தலைமையைக் குறை கூறுகிறதேயொழிய அதற்கெதிரான மாற்றுத் திட்டம் ஒன்றையும் முன்வைப்பதில்லை. ஷ்ரோடரின் கீழ் சமூக ஜனநாயக கட்சி முன்னைய மந்திரியாக இருந்த Oskar Lafontaine ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கட்சித்தலைமை தேர்தல் உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிடுவதாகவும் போருக்குப்பின் வந்த எந்த அரசாங்கமும் செய்யாத அளவிற்கு சமூகசெல்வத்தை பணக்காரருக்கு பகிர்ந்தளிக்கும் வழிவகைகளில் ஈடுபட்டுள்ளதாக குறைகூறுகிறார். ஆனால் இந்த நெருக்கடிக்கு அவர் கொடுக்கும் விடையென்ன?

கட்சித்தலைவர் என்ற வகையில் 1998 தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்தவர், பின்னர் நிதியமைச்சர் என்ற முறையில் Lafontaine தன்னுடைய சொற்களைச் செயல்களாக மாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். ஆனால் வர்த்தக குழுவினர் அவரை அழுத்தத்திற்கு உட்படுத்தியபோது ஏதும் செய்யாமல் ஷ்ரோடருக்கு வழிவிட்டு விட்டார். நிறுவன நிர்வாகிகள் உதட்டசைவிலேயே என்ன பேசுகிறார்கள் என்பதை Lafontaine இனை போல் ஷ்ரோடரும் அறிந்துள்ளபோதும், Lafontaine வர்த்தக வட்டத்தை எதிர்த்து நிற்க முடியாதுள்ளார். அவரும் மக்களைத் திரட்டுவதையும் ஒரு சமூக மோதல் ஏற்படுவதையும் தவிர்க்கவே நினைக்கிறார். Lafontaine கோழைபோல் பதவியைவிட்டு விலகினார், ஏனெனில் பெருமளவு மக்கள்சக்தியை திரட்டினால் ஒழிய புதிய தாராளவாத கொள்கையின் எதிர்ப்பு சமாளிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

100 ஆண்டுகளுக்கு முன் கார்ல் கவுட்ஸ்கி (Karl Kautsky) புரட்சிக் கொள்கைகளுக்குத் துரோகம் செய்ததை நினைவுறுத்துவதுபோல், எட்வார்ட் பேர்ன்ஸ்டைனுடைய (Eduard Bernstein) சந்தர்ப்பவாதக் கருத்துக்களைக் கட்சி தொடர்ந்து பின்பற்றிய நிலையில், கட்சி பலகாலமாக தாராளவாத பொருளாதார கொள்கையை பின்பற்றுகின்ற நிலையிலும் கூட லாபொன்டைன் இன்று 1970களின் சமுக சீர்திருத்த முறையின் வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்திச் செயலாற்ற முனைகிறார். கடந்த காலத்தைப்போலவே, கடந்த நூறாண்டு காலத்தில் சீர்திருத்தம் என்ற கருத்தும் முழுமையாக மதிப்பிழந்துவிட்ட நிலைமையில் சமூக ஜனநாயக கட்சியின் எதிரெதிர் பிரிவுகள் சந்தர்ப்பவாதத்தின் வலதுசாரி - இடதுசாரி மாதிரிகளைத்தான் பிரதிபலித்து நிற்கின்றன.

பாரிய சமூகப்பிரச்சனைகளுக்கு இக்கட்சி பெரிய அளவிலான பங்கு உடைய முன்னேற்றமுடைய கொள்கைகளை வழங்கும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. சமூக ஜனநாயக கட்சியின் இந்த வருட நிறைவுக்கொண்டாட்டம், சோர்வுத்தன்மையும், நோய் பீடித்ததன்மையும் மேலோங்கி நின்ற மனநிலையைத்தான் கொண்டிருந்தது. கட்சி நிர்வாகத்தின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 242 பேர் வீதம் சமூக ஜனநாயக கட்சியிலிருந்து கடந்த மாதம்வரை 7283 உறுப்பினர்கள் விலகி விட்டனர்.

இந்தக்கட்சி அதிகாரத்துவ சிறுகுழுவின் மரத்துப்போன தலைமைபீடத்தின் முக்கியமான வாதம் பின்வருமாறு உள்ளது: நாம் செய்ய மறுத்தால், பழைமைவாதிகள் அதைச்செய்வார், அது இதை விட மோசமாக இருக்கும். சர்வதேசியரீதியாகவும், தேசியரீதியாகவும் கடுமையான பொருளாதாரச் நிலையில் சமூக நற்பணித்திட்டங்கள் வசதியற்றோருக்கு செல்லாமலும், பலம் வாய்ந்த பணக்காரருக்கு வரிச்சலுகைகள் கொடுப்பதைத்தவிர வேறு எந்த வழியும் அவர்களிடம் இல்லை.

இப்பொழுதுள்ள அரசாங்கம் 3 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திய வரிச்சீர்திருத்தம், 30 பில்லியன் யூரோ அளவு நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை அளித்தது. பெரிய நிறுவனங்கள் ஒரு காசு கூட வரியாகக் கொடுப்பதில்லை என்பது மட்டுமல்ல; கடந்த இரண்டு ஆண்டுகளாக அவை செலுத்திய மில்லியன் கணக்கான யூரோக்களை வரி அதிகாரிகள் அவற்றிற்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இதுபோல் வெளிப்படையாகவும் வெட்கங்கெட்டதனமாகவும் இதற்கு முன் எந்த அரசாங்கமும் பணக்காரரின் வேலையாள்போல் நடந்து கொண்டதில்லை. அத்துடன் இதைவிட வேறெதுவும் செய்ய முடியாது என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர்.

சமூக ஜனநாயக கட்சியின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்த நிலைமைக்கு இது முற்றிலும் எதிர்மாறானதாகும். ஏகாதிபத்திய ஜேர்மனியில் அப்பொழுது சமுதாய நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. ஆனால் சமூக ஜனநாயகவாதிகளின் பிரதிபலிப்பு இப்பொழுதையதிற்கு எதிர்மாறாகத்தான் இருந்தது. ஏதேனும் செய்யப்பட வேண்டும்! அப்போது பரந்துபட்ட மக்களின் அரசியல் மற்றும் கலாச்சார உயர்வானது ஒரு சிறந்த, நியாயமான சமுதாயத்தை அமைப்பதற்குத் திறவுகோலாக இருக்கும் என்ற உயர்ந்த நம்பிக்கை ஒகுஸ்டஸ் பேபலிடமும் மற்றைய சோசலிச சிந்தனையாளர்களிடம் பெருகி நின்று அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தது.

மே 1863ல் "சிறு நகரங்களிலிருந்தும் பெரிய நகரங்களிலிருந்தும் லைப்சிக் நகரில் பிரதிநிதிகள் கூடி ஜேர்மன் தொழிலாளர்களின் பொதுச்சம்மேளனத்தை (General Association of German Workers) கிட்டத்தட்ட 600 தொழிலாளர்கள் முன்பு நிறுவியபோது, 23 வயதேயான பேபல் பார்வையாளரில் ஒரு பிரதிநிதியாக மட்டுமே இருந்தார். ஆனால் தொழிலாளர் கல்வி அமைப்பில் அப்பொழுதே பெரிய அளவில் மதிக்கப்பட்டிருந்தார். 6 வருடங்களின் பின்னர் அவர் வில்லியம் லீப்னெக்டுடன் இணைந்து சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியை உருவாக்கியதுடன், இது முதலாம் அகிலத்திலும் இணைந்து கொண்டது.

இது ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தின் ஆரம்பமாக இருந்ததுடன், விரைவில் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள தொழிலாளர்களின் இதயங்களையும் அறிவையும் வெற்றிகொண்டது. மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோருடைய போதனைகளை தளமாகக் கொண்டு, ஆரம்பகால சமூக ஜனநாயகம் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான போராட்டத்திற்கு முக்கிய அமைப்பாகக் கருதப்படலாயிற்று.

ஒகுஸ்ட் பேபலின் உரைகள் புதிய உயர்ந்த மட்டத்திலான சமுதாயத்திற்கு புதிய பார்வையையும் உறுதியான கொள்கையையும் உருவாக்கின. அப்போது முதல் கட்சியின் குரல் சுரண்டல்காரர், சுயநல நோக்குடையோர், முட்டாள்தனமும் மூர்க்கத்தனமும் நிறைந்தோர் ஆகியோருடையதாக இல்லாமல், சமுக சமத்துவம், ஒற்றுமை, அனைவருக்கும் கல்வி என்ற எண்ணங்களைத் தழுவி நின்றது. கட்சி உறுப்பினர் எண்ணிக்கை பிரஷ்ய அரச சர்வாதிகாரத்தாலும், பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்புச் சட்டங்களாலும் ஒடுக்கப்பட்டதையும் மீறி வானளாவப் பெருகியது.

நூற்றாண்டின் திருப்பத்தில், ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி உடனடியான மாற்றத்திற்கான உணர்வு பரந்திருந்ததுடன், அது விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவை அடைந்த துரித வளர்ச்சியையும் அடித்தளமாக கொண்டிருந்தது. ஆனால் முதலாளித்துவ முறையின் சக்திவாய்ந்த வளர்ச்சியானது ஒரு விரைவாக வளரும் சந்தர்ப்பவாதத்திற்கு தேவையான அடித்தளங்களை உருவாக்கியதுடன், இறுதியில் கட்சித்தலைமையின் பெரும்பாலான பகுதியை அது சுற்றிப்பிடித்தது. பேபல் இறந்த 1 ஆண்டுக்குள்ளேயே சமூக ஜனநாயக கட்சியின் பாராளுமன்றப்பிரிவு கைய்சரின் (Kaiser) போர்ச்செலவுத் தேவைக்கு ஆகஸ்ட் 1914 ல் ஆதரவாக வாக்களித்து அதன் விளைவாக முதல் உலகப் போர் என்ற கொலைக்களத்திற்கு மில்லியன் கணக்கில் தொழிலாளர்களை அனுப்பிவைக்க துணைநின்றது.

இந்த நம்பிக்கைத் துரோகம் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் பேரழிவு விளைவுகளுக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுதிலிருந்து சமூக ஜனநாயக கட்சி முதலாளித்துவ முறைக்குத் தன்னை முழுவதுமாக அடிபணிந்து அதைக்காப்பாற்றியதோடு, புரட்சிகரமான மாறுதல்கள் வராமல் நசுக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டது. போரின் இறுதியில் ரஷ்யப் புரட்சி சோசலிச இயக்கத்திற்கு சக்திவாய்ந்த ஊக்கத்தைக் கொடுத்தபோதும், ஜேர்மனியில் கைசர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட அளவிலும், சமூக ஜனநாயக கட்சி கட்சியின் அதிகாரபூர்வ இதழ் Vorwarts எதிர்ப்புரட்சி அணியான துணை இராணுவ அமைப்பு (Free Corps) இன் விளம்பரங்களை வெளியிட்டது. இத்துணை இராணுவ வீரரின் அமைப்பு பின்னர் பல நாஜிக்கட்சி முன்னணித் தலைவர்களை உருவாக்கியதாகும்.

சமூக ஜனநாயக கட்சி யின் தலைவரும் வருங்கால ஜேர்மன் குடியரசின் தலைவருமான பிரெடெரிக் ஏபேர்ட் (Friedrich Ebert) இராணுவத் தலைமையிடத்தோடு ஒத்துழைத்தபோது அவருடைய கட்சி நண்பர் குஸ்டாவ் நொஸ்க் (Gustav Noske) இராணுவத்துறை தலைவர் என்ற முறையில் ஸ்பார்டாகஸ் எழுச்சியை (Spartakus rebellion) இரத்தம் தோய்ந்த முறையில் நசுக்கியதுடன், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்படுவதை அனுமதித்தார். இவர்களுள் மிக முக்கியமானவர்களான ரோஸா லக்ஸம்பர்க்கும், கார்ல் லீப்னெக்டும் அடங்குவர்.

இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஹிட்லருக்கும் தேசிய சோசலிஸ்டுகளுக்கும் எதிராகச் செயலாற்ற சமூக ஜனநாயக கட்சி மறுத்துவிட்டது. ஹிட்லர் பதவியேற்றத்தைத் தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சி தொழிற் சங்கத்தலைவர்கள் பாசிச ஆட்சிக்கு ஒத்துழைப்புத்தர இணங்கிய போதிலும், அது அவர்களை தடுப்புமுகாம்களுக்கு செல்வதிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. 1932ல்: "கிழடுதட்டிய ஐரோப்பிய முதலாளித்துவ முறையின் மிகக்கிழடுதட்டிய பிரிவே சமூக ஜனநாயக அதிகாரத்துவமாகும்" என லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்.

சோவியத் யூனியனிலும், சர்வதேச அளவிலும் ஸ்ராலினிசத்தின் பங்கினால் இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு சமூக ஜனநாயக கட்சி மீண்டும் செல்வாக்குப் பெறலாயிற்று. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்களைப் பயன்படுத்தி கம்யூனிச எதிர்ப்பு உணர்வுகளை அது ஊக்குவித்தது. மேலும், போருக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார மீழ்ச்சி சமூக சந்தைப்பொருளாதாரம் சோசலிசத்திற்கெதிரான வெற்றிதரும் மாற்று என்ற கூற்று முன்வரத்தலைப்பட்டது.

போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்த காலத்தின் சற்றுப்பின்னர் 1970களில் சமூக ஜனநாயக கட்சி தன்னுடைய மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தது. அதிலிருந்து அதன் வீழ்ச்சி அதிகரித்த அளவில் காணப்பட்டது. பனிப்போரின் முடிவு சமூக ஜனநாயக கட்சியின் சீரழிவிற்கான நிலையைக் கட்டியம் கூறியது. வர்க்க சமரசம், சமூகநல அரசு போன்ற கொள்கைகளுக்கான அரசியலுக்கே சிறிதளவு ஆதாரம்கூட இல்லாமல் போய்விட்டது. அமெரிக்காவின் புதிய பங்கின் பாதுகாப்பு நிழற்குடையில்தான் சமூக ஜனநாயகம் தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளைச் செயல்படுத்த முடிந்தது. இப்பொழுது சமூக ஜனநாயக கட்சிக்கு அது தேவையற்றதாகிவிட்டது.

ஒகுஸ்ட் பேபல் இன்றைய சமூக ஜனநாயக கட்சியின் உட்பூசல் நிறைந்த பிரிவுகளையும், போக்குகளையும் கண்டால் வெறுப்பையும் எள்ளிநகையாடலையும் ஒரே நேரத்தில் உமிழ்ந்திருப்பார். ''நாற்றமெடுக்கும் பிணம்" என்று ரோஸா லக்சம்பேர்க் இக்கட்சியை வர்ணித்ததிலிருந்து இந்த சீரழிவுப்போக்கானது மிகவும் வேகமாக முன்னேறிவிட்டது.

20ம் நூற்றாண்டை அனைத்துச் சோசலிச சிந்தனைகளின் கல்லறை என்று கருதுவோருக்கெதிராக ரோஸா லக்சம்பேர்க், பேபல் ஆகியோர் முதலாளித்துவ முறையின் பிறப்பும் வலியை உள்ளடக்கியதும், நீண்ட காலம் எடுத்த ஒன்று என்பதை நினைவு கூர்ந்தனர். அவர்கள் மனிதகுலத்தின் மாபெரும் படைப்பாற்றல் சக்திக்கான சான்றாக விஞ்ஞானத்தினாலும் தொழில்நுட்பத்தினால் கிடைத்த பாரிய வெற்றிகளை கண்டனர். இன்னுடைய தேவையை நீண்டகாலத்திற்கு முன்னரே இழந்துவிட்ட ஒரு கட்சியின் மரணத்தைப் பற்றிக் கவலைப்பட்டு முனகாமல், தொழிலாள வர்க்கம் தங்கள் அரசியல் விதியைத் தாங்களே நிர்ணயம் செய்யும் உரிமையை அடைய போராட்டம் நடத்த அறை கூவுவார்கள்.

Top of page