World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Toronto: New SARS outbreak provokes nurses' protest

டோரண்டோ: புதிய "சார்ஸ்" நோய் பரவல் தாதிகளை கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தூண்டுகிறது

By Lee Parsons
10 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

டோரண்டோ நகரின் கிழக்குப் பகுதியின் கடைசியில் உள்ள ஸ்கார்பரோ பொது மருத்துவமனைக்கு வெளியில் ஜூன் 4ம் தேதி நூற்றுக் கணக்கான தாதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சார்ஸ் நோய் கண்டவர்கள் என்று சந்தேகப்படுகின்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்ற மருத்துவமனை சுகாதார ஊழியர்களுக்கு சிறப்பான பாதுகாப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கோரினர். டோரண்டோவில் சார்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக கனடாவின் டோரி அரசு பொது விசாரணைக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஆசிய பசிபிக் மண்டலத்திற்கு வெளியில் டோரண்டோ நகரைப் போல் வேறு எந்த நகரும் சார்ஸ் நோயினால் மிகப் பெருமளவிற்கு பாதிக்கப்படவில்லை. சென்ற மார்ச் மாதத்திற்குப் பின்னர் டோரண்டோ பகுதியில் குறைந்த பட்சம் 32 பேர் சார்ஸ் நோயினால் மடிந்திருக்கின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து 60க்கு மேற்பட்டோர் சார்ஸ் நோய்வாய் பட்டிருக்கின்றனர்.

சென்ற மாதம் ஆட்சி அதிகாரிகளும் மருத்துவ நிபுணர்களும் டோரண்டோ பகுதியில் சார்ஸ் நோய் பரவுவது முற்றிலுமாக முடிவிற்கு வந்துவிட்டது என அறிவித்தனர். ஆனால், மே மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் புதிய தொகுதி சார்ஸ் நோய்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. டோரண்டோ மருத்துவ மனைகளில் சார்ஸ் நோய் தாக்குதல்கள் தொடர்பாக கண்டுபிடிக்கப்படாத நோயாளிகள் மூலம் இந்தப் புதிய நோய்க்குறிகள் பரவியிருக்கலாம் என்று அதிகாரிகளும் மருத்துவ நிபுணர்களும் தெரிவித்தனர்.

ஒண்டாரியோ தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ள புகார்களில் ஒன்று, மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்டது. தங்களது நோயாளிகளில் சிலருக்கு சார்ஸ் நோய் கண்டிருக்க கூடும் என்று தாதிகள் தெரிவித்த சந்தேகங்களை மருத்துவமனை நிர்வாகம் புறக்கணித்து விட்டதாகவும் அவர்களில் பலருக்கு பின்னர் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டதாகவும் அவர்கள் புகார் கூறினர்.

தாதிகள் சந்தேகித்த நோயாளிகளுக்கும் சார்ஸ் நோய் தாக்குதல்களுக்கு இலக்கானவர்களுக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பையும் நிலைநாட்டிவிட முடியாது என்பது தாதியர்களின் சந்தேகங்களை நிராகரிப்பதற்கான மருத்துவ நியாயமாக இருந்தது. கனடா, ஒண்டாரியோ மற்றும் டோராண்டோ அரசியல்வாதிகளும் வர்த்தகத் தலைவர்களும் உலக சுகாதார நிறுவனம் டோரண்டோவிற்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தெரிவித்துள்ள ஆலோசனைகளுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரசாரத்தை முடித்துவிட்டிருக்கின்றன. டோரண்டோ நகரில் "வர்த்தகம் செய்யலாம்" என்று பிரகடனப்படுத்தி உள்ளனர். சார்ஸ் நெருக்கடி இன்னும் நீங்கவில்லை என்பது போன்ற கருத்தை பகிரங்கமாக எதிர்க்காவிட்டாலும் உத்தியோக ரீதியிலான வட்டாரங்களில் அத்தகைய எதிர்ப்பு உணர்வு நிலவுகிறது.

வடக்கு யோர்க் பொது மருத்துவமனையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் சார்ஸ் திரும்பத் தோன்றியபோது அவர்கள் டோரண்டோ ஸ்டார் பத்திரிகைக்கு பேட்டி அளித்தனர். மருத்துவமனை சார்ஸ் நிர்வாகத்தினர் சார்ஸ் நோய் பற்றி அதிக அளவில் பீதியூட்டும் வகையில் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை செய்ததாக தெரிவித்தனர். தனிப்பட்ட நோயாளிகள் சார்ஸ் நோய் கண்டிருப்பதாக "பொது மக்களை எச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை". "ஏனென்றால், எங்களுக்கு அந்த பிரச்சினை (இல்லை)" என டாக்டர் பார்பரா மதர்ஸ்கி (Dr. Barbara Mederski) கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

புதன் கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்திய தாதியர் சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வரும் தாதியர்களுக்கு பாதுகாப்பு ஆடைகள் உள்பட சிறந்த தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினர்.

சுகாதார பராமரிப்பு வல்லுநர்களின் படி, நோய்த் தாக்குதல் நடைபெறக் கூடும் என்ற கவலை ஏற்பட்டிருப்பது வலுவான அடிப்படையைக் கொண்டது. ஒண்டாரியோ, கிங்ஸ்டனில் உள்ள குவீன் பல்கலைக்கழக சுற்றுப்புறச்சூழல் சுகாதார ஆலோசகர் உக்கிஷ் பிக்கிஷ் (Ugis Bickis) தனது எச்சரிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை மற்றும் டோரண்டோ தாதியர்களுக்கு அறுவைச் சிகிச்சையின் போது முகமூடிகள் வழங்கப்பட வேண்டும் என்ற எச்சரிக்கையும் பொருட்படுத்தவில்லை. இது போன்ற கடுமையான தொற்று நோய்கள் ஏற்படும் போது சுகாதாரத்துறை ஊழியர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.

அறுவைச் சிகிச்சையின் போது முகமூடி அணிந்து கொள்வதைப் போல், முகமூடிகளை அணிந்து கொண்டால் காற்றினால் பரவும் தொற்று நோய்களில் 50 சதவீத தொற்று நோய்களைக் கட்டுப்படுத்திவிட முடியும். அதில் மிகவும் செலவு பிடிக்கும், என்-95 கவசங்கள் அணிந்தால் 95சதவீத தொற்று நோய்களை சுகாதார ஊழியர்கள் தடுத்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். கனடா பொது சுகாதாரச் சட்டத்தில் சார்ஸ் போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்போது 95 சதவீத அளவிற்கு N95 முகமூடிகளால் சுகாதார ஊழியர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று விதி இருந்தும் சில சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இன்றைக்கும் தரம் குறைந்த முகமூடிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

டோரண்டோ மருத்துவ மனைகளில் சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளில் கால்வாசிக்கு மேல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தனி அறைகள் இல்லை என்றும் தகவல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. இப்படி தனி அறைகள் இருந்தால்தான் காற்றில் நோய் பரவுவதைத் தடுக்க முடியும். அப்போதுதான் மருத்துவமனைக்குள்ளேயே நோய் பரவுவதைத் தடுக்க முடியும். ஒண்டோரியோ தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் காலின் டி குன்ஹா (Dr. Colin D'Cunha) இதற்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கும் பொழுது "இத்தகைய வசதி இல்லாத மருத்துவமனைகளுக்கு எந்த நோயாளியும் அனுப்பப்பட மாட்டார்" என்று அறிவித்தார். அப்படியிருந்தும் இந்த வாரம் பல மருத்துவமனைகளில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தனி அறைகள் ஏற்பாடு இன்னமும் செய்து முடிக்கப்படவில்லை. ஒண்டோரியோ மருத்துவ சங்கத்தின் சுகாதாரக் கொள்கை இயக்குநரான, டாக்டர். டெட் போட்வே-ன் படி, " இதற்காக எவரும் தயாராக இருந்தார்களா என்று நீங்கள் கூற முடியாது, ஏனெனில் ஒருவரும் இல்லை."

சென்ற புதன் கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், தாதியர்களுக்கு சார்ஸ் நோய் ஏற்படக்கூடும் என்ற ஆபத்து உள்ளதால், சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தாதியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர். தற்காலிக முகவாண்மைகள் வழியாக சார்ஸ் நோய்க்காக பணியாட்கள் பற்றாக்குறையை சமாளிக்க பணியில் அமர்த்தப்படும் செவிலியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதேவேளை முதன்மையாய் நின்று சார்ஸை குணப்படுத்த போராடிக் கொண்டிருக்கும், நிரந்தரமாக அல்லது பகுதிநேரப் பணியில் ஈடுபட்டுள்ள தாதியர்களுக்கு தொடர்ந்தும் வழக்கமான ஊதிய விகிதங்களே வழங்கப்பட்டு வருகின்றன என்று அறிந்த பொழுது தாதியர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

ஒண்டாரியோ டோரி கட்சி ஆட்சி சுகாதார அமைச்சர், டோனி கிளமெண்ட், டோரண்டோ பகுதியில், பொதுவாக ஸ்கார்பொரோ ஜெனரல், வடக்கு யோர்க் ஜெனரல், புனித மைக்கல் மற்றும் வில்லயம் ஒஸ்லர் சுகாதார மையம் எனும், சார்ஸ் நோய் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள, நான்கு மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்ற முன்னணி ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தர சம்மதம் தெரிவித்தார். திட்டவட்டமாக சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.

இந்தப் பிரச்சனையில், அடிப்படை சிக்கல் என்னவென்றால், கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக அன்டாரியோ மருத்துவமனைகளில், தாதிகள் எண்ணிக்கையை கடுமையாக குறைத்துவிட்டார்கள். தொண்ணூறுகளின் கடைசியில் 10,000-க்கு மேற்பட்ட தாதிகள் பதவிகள் நீக்கப்பட்டு விட்டன. இன்றைய தினம், பணியாற்றுகிற தாதியர்களில் பாதிப்பேர் தற்காலிகமானவர்கள் அல்லது பகுதிநேர பணியாளர்கள். இப்படி தற்காலிக தாதியர்கள் அதிக அளவில் பணியாற்றி வந்ததால், ஆரம்ப கட்டத்தில் சார்ஸ் நோய் பரவுவதற்கு அது ஒரு பிரதான அடிப்படையாக, அமைந்து விட்டது. தங்களது வருவாய் பெருக்கிக் கொள்வதற்கும், வாழ்க்கைச் செலவை சரிக்கட்டுவதற்கும் தாதியர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் பகுதிநேர பணியாளர்களாக பணியாற்றி வந்ததால், அவர்கள் தெரிந்து கொள்ளாமலே, அவர்களுக்கு புரியாத சூழ்நிலையில் ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு தொற்று நோயை பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த தாதியர் பராமரிப்பு "தற்காலிகமாதல்" தொடக்கத்தில் சார்ஸ் பரவுதற்கு ஒரு பிரதான காரணியாக இருந்தது.

ஒன்டாரியோ பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளில் மத்திய லிபரல் அரசாங்கமும், மாநில டோரி அரசாங்கங்களும், பொது சுகாதார ஒதுக்கீடுகளையும் மருத்துவமனைகளையும் மிகக் கடுமையாக குறைத்து விட்டதன் பாதிப்பை சார்ஸ் நோய் பரவியது அம்பலப்படுத்திவிட்டது. எனவேதான், மாகாண டோரி அரசாங்கங்கள் பொது விசாரணைக்கு மறுத்துவிட்டன. மாகாண பிரதமர் எர்னி ஈவ்ஸ்சும், சுகாதார அமைச்சர் டோனி கிளமண்ட்டும் பொது விசாரணை அரசாங்கத்திற்கு "விரோதமாக", "குற்றம் சாட்டுகிற வகையில்" அமையும். எனவே, மருத்துவ நிபுணர்கள், நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் என்பதை "மீளாய்வு செய்வார்கள்" என்று அறிவித்துள்ளனர்.

வாக்கர்-டன் (Walkerton) தண்ணீர் தூய்மை கெட்டு அதனால், ஏற்பட்ட பொது, விசாரணையின் போது அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது போன்று, இப்போதும் நடந்து விடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. அப்போது தூய்மை கெட்ட தண்ணீரை பருகியதால் 7 பேர் மாண்டனர். சுற்றுப் புறச் சூழல் பராமரிப்பு செலவினங்கள் குறைக்கப்பட்டதாலும், தண்ணீரின் தூய்மையை சோதனையிடுவதற்கு உருவாக்கப்பட்ட அமைப்புக்களை தனியார் மயமாக்கியதாலும், இத்தகைய சாவுகள் நடந்தன என்று அரசாங்கத்தின் மீது விசாரணைக் கமிஷன் குற்றம் சாட்டியது.

Top of page