World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain's governing Peoples Party loses support in close vote

ஸ்பெயினில் ஆளும் மக்கள் கட்சி குறைந்த எண்ணிக்கையில் ஆதரவை இழக்கிறது

Mike Ingram
10 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கியப் போரில் அமெரிக்காவை ஆதரித்திருந்ததைத் தொடர்ந்து, மே 25 அன்று நடைபெற்ற (நகராட்சித்) உள்ளாட்சித் தேர்தல்களில், தற்போதைய பிரதம மந்திரி யிஷீsங விணீக்ஷீணணீ கிக்ஷ்ஸீணீக்ஷீ உடைய வலதுசாரி மக்கள் கட்சி (People's Party), அதிகமான அளவு எதிர்பார்க்கப்பட்டிருந்த ஆதரவை இழந்தது தோல்வியைப் பெற்றது.

1991லிருந்து முதல் முறையாக சோசலிச கட்சி (PSOE), மக்கள் கட்சி (PP) யை விட உள்ளாட்சித் தேர்தல்களில் கூடுதலான வாக்குகளைப் பெற்றது. தேர்தலுக்கு முன்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட வாக்கு வித்தியாசம் மிகக்குறைவானதுதான். கருத்துக்கணிப்புக்கள் 90சதவீதம் மக்கள், போருக்கு ஆதரவாக அஸ்தெர் இருந்த நிலைப்பாட்டை எதிர்த்திருந்தனர் என்று தொடர்ச்சியாகக் காட்டியதோடு, அரசியல்வாதிகளும் -எதிர்க்கட்சியினர்- செய்தி ஊடகமும் முனிசிபல் தேர்தல்களில் PP அழிக்கப்பட்டுவிடும் என்ற ஊகம் கொண்டிருந்தனர். இறுதியில் சோசலிசக் கட்சி 34.7சதவீதம் வாக்குகள் பெற்று மக்கள் கட்சியின் 33.9சதவீதத்தை விடச் சற்றே கூடுதலான நிலையில் இருந்தது. 1999ல் தேர்தல்களின்போது 64சதவீத வாக்காளர்கள் வாக்குப்போட்ட நிலையில், இந்தத் தேர்தலில் 68சதவீதம் வாக்காளர்கள் வாக்குச் செலுத்தினர்.

ஸ்பெயின் நாட்டின் சிக்கலான தேர்தல் முறையால், வீதாச்சார பங்குமுறை பிரதிநிதித்துவம் (Proportional Representation), விருப்ப வாக்கு (Preference Voting), போன்றவை உள்ளதால், நாடெங்கிலுமான இறுதி நிலை இனிமேல்தான் தெளிவாகக் கிடைக்கும் என்றாலும், மிக அதிகமான மாறுதல்கள் தன்னாட்சிப் பகுதிகளிலும் (Autonomous Regions) அதிலும் குறிப்பாக பாஸ்க் (Basque) பகுதியில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. PSOE, PP இரண்டுமே பாஸ்க் பகுதியில் Alava, Vitoria மாவட்டம் ஆகியவற்றில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் போட்டியிட்டுள்ளன. PSOE ஆனது விட்டோரியா மாவட்டத்தில் போட்டியிடும் மக்கள் கட்சி வேட்பாளரை சோசலிசக் கட்சி ஆதரிப்பதற்கு பதிலாக அல்வா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர் Javier Rojo- வை அரசாங்கம் ஆதரிக்க விரும்புகிறது. PSOEயுடைய JOse Blanco, இவ்விரு இடங்களைப் பற்றியும் ஏற்கனவே உடன்பாடு உள்ளது என்று கூறினாலும், துணைத் தலைமை அமைச்சரான Mariano Rajoy பேரம் பாஸ்க் இல்லாத தேசிய வேட்பாளருக்குத்தானேயொழிய, அதிலும் எந்த வேட்பாளர் அதிக சதவிகித வாக்குகளை பாஸ்க் பகுதியில் வாங்கியுள்ளரோ அவருக்குத்தான் என்றுள்ளார்; Alava விலும் Vitoria விலும் அது அரசாங்க வேட்பாளர்களாக அமைந்துள்ளது.

மற்றைய நகராட்சிகளிலும் குதிரைபேரம் இடம்பெற்றுள்ளது. Madrid மக்கட்தொகுப்பில் PSOE, IU (ஐக்கிய இடதுகள்) கூட்டணி ஆளும் PPயை வெளியேற்றிவிட்டது, ஆனால் மேயர் பதவியோ மக்கள் கட்சியின் பிடியில்தான் உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்பார்த்த அளவு அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன; அவற்றுள் பரந்த அளவில் உணரப்படுவது, சாதாரண உழைக்கும் மக்களின் நலன்களின் நிலைப்பாட்டிலிருந்து PSOE, PP இவற்றைத் தேர்ந்து எடுப்பதற்கு இவற்றிடையே அதிக அளவு வேறுபாடு ஒன்றும் கிடையாது. 1982ல் பதவிக்கு வந்த உடனேயே அமெரிக்காவில் இப்பொழுதுள்ள புஷ் நிர்வாகத்தின் கடும் பொருளாதார கெடுபிடிக் கொள்கைகளை அப்பொழுதே இக்கட்சி தேவை என வக்காலத்து வாங்கி இருந்தது. தொழிலாளர்கள் நலன் மீதான PSOE அரசாங்கத்தின் சீற்றம் மிகுந்த தாக்குதல்தான் பின்னர் PPயுடைய அரசியல் ஏற்றத்திற்கு வழிவகை செய்தது.

ஆனால் மக்கள் கட்சிக்கு ஆதரவாக ஆனதில் வேறு ஒரு முக்கிய காரணம் -பாஸ்க் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு மக்கள், பட்டசுனா (Batasuna) என்ற தேசிய கூட்டணி கட்சி தடை செய்யப்பட்டதையடுத்து, வாக்குரிமை இழந்ததுதான். இந்தத் தடையினால் பட்டசுனாவிலிருந்து கணிசமான எண்ணிக்கையில் மேயர்களும் நூற்றுக்கணக்கில் நகரமன்ற உறுப்பினர்களும் மறு தேர்தலில் நிற்பதற்குரிய உரிமையை இழந்துவிட்டனர். 1999ல் பட்டசுனாவில் நகர வாக்குகளில் 20 சதவிகிதத்தைப் பெற்றிருந்தது. பழைய பட்டசுனாக் கட்சியினர் வேறு கட்சிகளின் சார்பில் தேர்தலில் பங்குபெற்றனர் என்று கூறி நாட்டின் தலைமை நீதிமன்றம் 241 பேரை தேர்தல் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டது; பின்னால் அரசியலமைப்பு நீதிமன்றம் 16-பேரை மீண்டும் சேர்த்தது; இதில் பாஸ்க் நகராட்சித் தேர்தல்களில் 6-பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்ட அளவில் பட்டசுனா போலி வாக்குச் சீட்டுக்களைத் தயாரித்து தன் ஆதரவாளர்களுக்கு வழங்கியது; அடையாளமாக அவர்கள் வாக்குப்போட்டாலும், அச்சீட்டுக்கள் செல்லுபடியாகாமற் போகும். தேசிய அளவில் செல்லாத வாக்குகள் 1.3 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், பாஸ்க் பகுதியில் பத்து சதவிகித வாக்குகள் செல்லுபடியாகவில்லை; இது கடந்த தேர்தலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 12 மடங்கு வீணாகிப்போன வாக்குகளாகும். நகராட்சி தேர்தல்களைக் கணக்கில் கொண்டு அத்தன்மை அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்று வைத்துக்கொண்டால், மக்கள் கட்சி பதவியை இழக்கக்கூடும்.

அஸ்நரின் ``தீவிரவாதத்திற்கு எதிரான போர்``

வாஷிங்டனின் ``பயங்கரவாதத்தின் மீதான போர்`` ஏற்படுத்தியுள்ள அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, அஸ்நர், பாஸ்க் பகுதியில் தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு எதிராக சட்டபூர்வமான தாக்குதலைத் தொடக்கியதோடு, துணை இராணுவ படையான ETA பிரிவினைவாதக் குழுவிற்கு எதிராக தீவிரமான இராணுவத் தாக்குதலை ஏவியுள்ளார்.

ETAயுடன் தொடர்புடைய Euskaldunon Egunkaria என்ற செய்தித்தாள், பெப்ரவரி மாதம் மூடப்பட்டது; அதில் வேலை பார்த்தவர்கள் சிறையில் தங்களை சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஸ்பானிஷ் அரசரை ``சித்திரவதை செய்பவர்களின் எஜமான்`` என்று விவரித்த பாஸ்க் பகுதி பாராளுமன்ற உறுப்பினரை அரசாங்க வக்கீல்கள் விசாரணை செய்தனர்.

அண்மையில், பாஸ்க் பிரிவின் ஸ்ராலினிசத் தலைமையிலான IUவின் தலைவர், Javier Madrazo மீது அவதூறுக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத் துவக்கத்தில் இரு முறை, ஈராக் போரை எதிர்த்துப் பேசும்போது, அரசர், அரச குடும்பத்தினர், அஸ்நர் ஆகியோர் மீது அவதூறுகள் கூறியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு பேச்சில் Madrazo தெரிவித்தாகக் கூறப்படும் வர்ணனையில், ``ETAயைப் போலவே அஸ்நரும் ஒரு தீவிரவாதிதான்`` என்றும், ``எவ்வாறு ஈராக்கின் மீது பயங்கரவாதப் போரை நடத்துபவர்கள், புஷ், பிளேயர் இப்பொழுது அஸ்நர், தீவிரவாதிகளோ, அவ்வாறே (பாஸ்க் பகுதியில்) Eus-kadiயில் கொல்வோர் தீவிரவாதிகளே,`` என்றார்.

ஸ்பெயின் மக்களிடையே அமெரிக்க தலைமையிலான ஈராக்கின் மீதான போருக்குக் கடும் எதிர்ப்பு உள்ள அளவில், ஸ்பானிய அரசாங்கம் அதை ஆதரித்தபொழுது அரசர் Juan Carlos மெளனம் சாதித்ததையும் அவர் தாக்கினார்; இது ``ஜனநாயக விரோத தன்மையை" கோடிட்டுக் காட்டுவதாக`` உள்ளது என்றும் அவர் கூறினார்.

``அவர்களுடைய அரண்மனைகளுக்கும், உல்லாசப் படகுகளுக்கும், பனிச்சறுக்கு விளையாட்டிற்கும், குதிரையேற்ற விடுமுறைகளுக்கும், நாம் பணம் செலவழிக்கிறோம் என்ற அளவில், சமுதாயத்தின் கவலையில் சற்று பங்குகொள்வது அவர்களுக்கு அதிகமாகப் போய்விட்டது`` என்று மாட்ரசோ கூறினர்; அரசர்தான் அரசியலமைப்பின்படி நாட்டின் தலைமைப் பொறுப்பையும், இராணுவத்தின் காப்டன் ஜெனரலாகவும் விளங்குவதையும் அவர் சுட்டிக்காட்டி, அவருடைய அனுமதியின்றி போர்க் கூட்டணியில் ஸ்பெயின் சேர்ந்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அரசாங்க வழக்கறிஞர்கள், ஜனாதிபதியை ETAவுடன் சமப்படுத்திப் பேசுதல் அவரை ``கொலையாளி அல்லது எல்லாவிதமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீறுபவர்`` என்று சொல்வதற்கு ஒப்பாகும் எனக் கூறுகின்றனர். அஸ்நரின் பொது நிலையில் அது பொறுத்துக்கொள்ள முடியாத தாக்குதல் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் மாட்ரசோவின் அரசரைப் பற்றிய கருத்து பேச்சுரிமை, ஒரு அரசியல் அமைப்பு என்ற வகையில் முடியாட்சிக்கெதிரான நியாயமாக வெளிப்படுத்தும் எதிர்ப்புக் கருத்துக்களை மீறுவதாக உள்ளது என்றும், அரச குடும்பத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என்றும் இதையொட்டி ``பெரும்பாலான ஸ்பானிய மக்களின் ஆதரவோடு அமைக்கப்பட்ட ஆட்சியை, அரசியலமைப்பு நெறியின் ஒப்புதல் பெற்ற ஆட்சியை`` "அவமதிக்கும்" தன்மைதான் உள்ளது என வலியுறுத்தினர்.

அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், அஸ்நர் ``தீவிரவாதிகளின் ஆதரவாளர்`` எனக் கருதப்பட்ட பாஸ்க் பகுதியில் உள்ளோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருடைய அரசாங்கம், ``எந்த அமைப்பும், அரசியல் சார்ந்ததோ அல்லது செய்தி ஊடகத்தைச் சேர்ந்ததோ, ETAவிற்கு ஆதரவளிப்பதாகக் கருதப்பட்டால் தங்கள் செயல்களைப் புரியும் உரிமைகளை இழந்துவிடும்`` என அறிவித்தது.

ஜனநாயக விரோத நடவடிக்கையின் குவிமையம் ETAவும் பாஸ்க் பிரிவினைவாத ஆதரவாளர்களுமாக உள்ள நிலையில், அவை முழு மக்கட்தொகையின் ஜனநாயக உரிமைகளுக்கெதிரான பொது தாக்குதலின் ஒரு பகுதியேயாகும். ஸ்பானிய பாதுகாப்பு அமைச்சரகத் திட்டம் ஒன்று போரெதிர்ப்புச் சுவரொட்டிகளைத் தடை செய்யவிருந்தது என்பது, EL Pais என்ற நாளிதழுக்கு இரகசியமாகக் கிடைத்தது. நீதித்துறை அமைச்சரகம் அதைப் பற்றி மறுப்புத் தெரிவித்தபோதிலும், பாதுகாப்புத் துறையினர், ``பன்னாட்டு அளவில் நடத்தப்படும் இராணுவப் போருக்கு, ஸ்பெயின் தொடர்புடையதை, அதன் பங்கை அவமதிக்கும் வகையில் சுவரொட்டி மூலம் தெரிவிக்கும்`` எதிர்ப்புக்கட்குத் தடை தேவை என வலியுறுத்தியுள்ளது. முன்மொழியப்பட்ட ``அக்குற்றத்திற்காக,`` ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டிருக்கும். அரசாங்கம் ஈராக்கியப் போரைப் பற்றி தேர்தல் அறிக்கைகளில் தடை விதிக்க முயன்று, அதில் வெற்றியடையாமல் போயிற்று.

மே 7ம் தேதி தேர்தலுக்கு முன்னால், அஸ்நர், அவருடைய போர் ஆதரவிற்காக அன்பளிப்பு ஒன்றை, அதாவது பட்டசுனா அமைப்பு தீவிரவாதிகள் அமைப்புக்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்காவிடமிருந்து பெற்றார். அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லும்போது : ``ஒரு குறிப்பிட்ட ஆதரவின் பொருள் என்ன என்பதை நாம் பார்க்க முடியும்.`` என அவர் செய்தியாளரிடம் கூறினார்.

அரசியல் எதிரிகளை அப்பட்டமாகத் தொடர்ந்து நசுக்குவது சமுதாயத்தில் பிளவுகளை அதிகப்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டசுனா மீதான தடையும், ETA ஆதரவாளர்களிடம் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்படுதலும் மக்களிடையே கணிசமான எதிர்ப்பு உணர்வைத் தூண்டியுள்ளன.

ETA உடைய பிற்போக்கான அரசியல் கொள்கைகளும், தீவிரவாதக் குண்டு வீசுதல்களும் பெரும்பாலான மக்கள் பிரிவுகளிடையே அதை விரோதப்படுத்தியுள்ளது; அரசியல் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது: தொடர்ச்சியான குண்டு வீச்சுக்கள், தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்டவை, மக்கள் கட்சிக்குக்குத்தான் உதவியை அளித்திருக்கும்.

அதிகாரபூர்வமான அரசியல் எதிர்க்கட்சிகளான PSOE, PCE (ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி), IU, மற்றும் பிரிவினைவாதிகள் அனைத்துமே பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்த திறனற்றவை என்பதை தேர்தல் முடிவு தெரிவிக்கிறது. மக்கள் ஆதரவு இல்லாத போரைத் தொடர்ந்து 57 நகரங்களில் மில்லியன் கணக்கில் கூட ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அளவில், தொடர்ந்து பல கருத்துக்கணிப்புக்களில் 98 சதவீதத்தினர் போரை எதிர்த்து நின்ற அளவில், வாக்குச்சாவடிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட 4 சதவிகிதமே கூடுதலாக வந்திருந்தனர். எந்த எதிர்க்கட்சியும் பலவித எதிர்ப்பு அறிக்கைகளைப் போருக்கு எதிராக வெளியிட்டபோதிலும், குறிப்பிடத்தக்க அளவு கூடுதலான ஆதரவைப் பெறவில்லை.

அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மேலாதிக்கத்திற்கான திட்டங்களை தோற்கடிக்கக் கூடிய ஒரு அரசியல் சக்திக்கு குரோதமானவை. எனவே அவை அனைத்தும் அஸ்நர் பின் தவிர்க்கவியலாது அணிதிரண்டு, ஈராக்கின் போருக்குப் பிந்தைய உலகில் தங்களது இடத்தைப் பெற்றுக்கொள்வர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், ஸ்பெயினில் அஸ்நர் ஆட்சியையும் எதிர்க்கும் சாதாரண உழைக்கும் மக்களைச் சார்ந்த மில்லியன் கணக்கிலுள்ளோருடைய பணி - ஐரோப்பியத் தொழிலாளருடன் இணைந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதனுடைய அஸ்நர் போன்ற ஆதரவாளரையும் எதிர்த்து ஒரு கூட்டுத்தாக்குதலில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் பற்றிய சர்வதேச மூலோபாயத்திற்கு திரும்புவதாகும்.

Top of page