World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US: 13,000 Arab and Muslim men face deportation

அமெரிக்கா: 13,000 அரபு மற்றும்முஸ்லிம்கள் நாடு கடத்தப்படும் ஆபத்து

By Kate Randall
11 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

அண்மைய மாதங்களில் அமெரிக்காவில் குடியேற்ற உரிமை வழங்கக் கோரி அமெரிக்காவில் பதிவு செய்து கொண்டுள்ள 82,000க்கு மேற்பட்ட அரபு மற்றும் முஸ்லிம் மக்களில் 13,000 பேருக்குமேல் நாடு கடத்தப்படுவார்கள் என்று அமெரிக்க குடிவரவு-அகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கக் குடிமக்கள் அல்லாத 25 நாடுகளைச் சேர்ந்த 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுள்ள ஆடவர்கள் அனைவரும் (அமெரிக்காவில் வாழ்பவர்கள்) டிசம்பர் 2002-க்கும் இந்த ஆண்டு ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் குடியேற்றப் பதிவு அதிகாரிகளிடம் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று சிறப்புத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்தது. அதற்கு ஏற்ப அரபு மற்றும் முஸ்லிம் ஆடவர் தங்களைப் பதிவு செய்துகொண்டனர்.

அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு கிரிமினல் குற்றங்கள் எதிலும் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படுபவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று எவ்விதமான அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை, மற்றும் இந்தச் சிறப்புத் திட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகளில் கண்டுள்ளபடி அனைவரும் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்திக் கூறினர். அந்த நேரத்தில் நீதித்துறையும் இதர அரசு அதிகாரிகளும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டனர். இந்த நிபந்தனைப்படி பதிவு செய்துகொள்பவர்கள் பயப்பட வேண்டியதில்லை என்று சமாதானம் கூறினர்.

இப்படி பதிவு செய்ய முன்வந்திருப்பவர்களில் சுமார் 16சதவீதம் பேர் தற்போது நாடுகடத்தப்படும் நிலைக்கு வந்திருக்கின்றனர். 2001, செப்டம்பர் 11ம் தேதிக்குப் பின்னர் மிகப் பெருமளவிலான நாடுகடத்தல் இது என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலைச் சேர்ந்த ஃபாயிஸ் ரகுமான் Agence France Presse செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``தங்களது உயர்ந்த மனச்சாட்சியின்படி மக்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் விதிகளைப் பின்பற்ற விரும்புகிறார்கள்". இந்த சிறப்புத் திட்டம் "முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது... அமெரிக்க மண்ணில் முஸ்லிம்களது எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் குடியேறுவதை ஊக்குவிக்க அவர்கள் விரும்பவில்லை. மட்டுப்படுத்தவே விரும்புகிறார்கள். எங்களது வாழ்க்கையை சங்கடம் நிறைந்ததாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்`` என்று விளக்கமளித்தார். குடியேறியவர்கள் சார்ந்திருப்பதாக அரசாங்கம் கருதுகின்ற 25 நாடுகளிலும் அல்-கொய்தா மற்றும் இதர பயங்கரவாதிகள் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் தஞ்சம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

குடியேறியவர்கள் பதிவு செய்யப்படுவது, அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள போரின் ஒருங்கிணைந்த பகுதியாகும். 82,000 பேரில், 11-பேர் மட்டுமே பயங்கரவாதத்தோடு தொடர்புள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுவதாக அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்க்ப்ராப்ட் கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் தகவல் தந்திருக்கிறது. பயங்கரவாதிகளோடு "உறவுகள்" என்று கூறப்படுவது குறித்து எந்தவிதமான விளக்கமும் தரப்படவில்லை.

செப்டம்பர் 11 நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான அமெரிக்காவில் குடியேறிய மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாகவும் அவர்களது அடிப்படை சிவில் உரிமைகள் மீறப்பட்டதாகவும் உள்நாட்டு நீதித்துறை ஜூன்-2ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அரசாங்கத்தால் பொறுக்கி எடுக்கப்பட்டு சிறைவைக்கப்பட்ட பெரும்பாலும் 762 அரபு மற்றும் முஸ்லிம்கள் முறைகேடாக நடத்தப்பட்டவற்றுள், வசைபாடல், துன்புறுத்துதல், அவர்கள் வக்கீல்களை ஆலோசிக்க அனுமதி மறுத்ததல், ஜாமின் பத்திரம் தாக்கல் செய்ய உரிமை மறுத்தல் மற்றும் இதர முறைகேடுகளும் அடங்கும். இது தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்தமாக அரபு முஸ்லீம் மக்களை நாடுகடத்தும் திட்டம் பற்றிய செய்தி வந்திருக்கிறது.

செப்டம்பர் -11 நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அரபு மற்றும் முஸ்லீம் ஆடவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதை புஷ் நிர்வாகம் தொடங்கியிருக்கிறது. மக்கள் தொகையின் இந்தப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டாலும், அரசாங்கத்தின் இறுதி இலக்கு பொதுமக்கள், குடியேறியோர் மற்றும் தற்காலிகமாக அமெரிக்கா வருவோரது சிவில் உரிமைகளை பரந்த அளவில் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு ஆளாக்குவதை அது கொண்டிருக்கிறது.

செப்டம்பர்-11ந் தேதி தாக்குதல்களைத் தொடர்ந்து பல மாதங்கள் வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 600-க்கு மேற்பட்ட அரபு மற்றும் முஸ்லீம் மக்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் அமெரிக்காவில் குடியேறியவர்கள். இப்படிப்பட்ட தரப்பினர் மீது செப்டம்பர் 11-க்கு பின்னர், எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் மற்றும் நாடுகடத்தப்பட்டோர் தொடர்பான பெயர் மற்றைய விபரங்களை வெளியிட அமெரிக்காவின் நீதித்துறை மறுத்துவிட்டது. இவர்களில் மிகப்பெரும்பாலோர் தற்போது நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும், சிறு எண்ணிக்கையினர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

சென்ற ஆண்டு அரசாங்க அதிகாரிகள் நாட்டின் "பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" ஆக இருப்பவர்கள் என்று அவர்கள் கூறியவர்களைக் கைது செய்த பொழுது நாடுகடத்தப்படும் நடவடிக்கையின் இன்னொரு அலை இருந்தது மற்றும் அவர்கள் ஏற்கனவே, நாடுகடத்தல் உத்தரவுகளை பெற்றிருந்தார்கள்.

டைம்ஸ் இன் படி, கடந்த இரண்டாண்டுகளில் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து குடியேறியவர்கள், நாடுகடத்தப்படுவது ஏறத்தாழ 27 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானியர், ஜோர்டானியர், லெபனியர் மற்றும் மொரோக்கர்கள் நாடுகடத்தப்படுவது இரட்டிப்பாகி உள்ளது. எகிப்தியர்கள் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் தூதர் அலுவலக அறிக்கைகளின்படி, செப்டம்பர் 11க்குப் பின்னர் இருந்து, தற்போது நடைபெற்றுவரும் பதிவுகள் தொடர்பான விபரம் இல்லாத 15,000-க்கு மேற்பட்டோர், நாடுகடத்தலை தவிர்ப்பதற்காக கனடா, ஐரோப்பிய நாடுகள், மற்றும் பாகிஸ்தானுக்கு வெளியேறி சென்றுவிட்டனர்.

2002-ஆரம்பத்தில் நாடுகடத்தல் உத்தரவை பெற்ற பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருந்த 3,14,000-வெளிநாட்டு குடிமக்களை கைது செய்து நாடுகடத்துவதற்கு அமெரிக்க நீதித்துறை "Absconder Apprehension Initiative," நடவடிக்கை எடுத்தது. மத்திய புலனாய்வுத்துறை (FBI) குடி வரவு மற்றும் இயற்கை நியதி சேவை (INS) மற்றும் அமெரிக்க மார்ஷல் சேவை ஆகிய அமைப்புக்களிலிருந்து முகவர்களை உள்ளடக்கிய "Apprehension teams", பிப்ரவரி-2002-ம் ஆண்டில், சுமார் 1000 மத்திய கிழக்கு மற்றும் பாகிஸ்தானிய ஆடவர் தண்டிக்கப்பட்டவர்கள் என்று இனங்காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்டன.

"தலைமறைவாளர்" திட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு குறிவைக்கப்பட்ட 3,14,000- குடிபெயர்ந்தோரில் மிகப்பெரும்பாலோர் விசாக்காலம் முடிந்த பின்னும் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள். கடந்த காலத்தில் இத்தகைய தவறுகள் சிறிய குற்றமாக கருதப்பட்டு அவர்களை மன்னித்து அல்லது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். ஆனால், தற்போது இத்தகைய மீறல்கள் சிறைப்படுத்தல்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன --காலவரையறையற்று கைது செய்து வைக்கப்படுகின்றனர் மற்றும் நாடுகடத்தப்படுகின்றனர்.

குடியேறியவர்களில் மிகப்பெரும்பாலானோரது எதிர்காலம் மிகவும் சிக்கல் நிறைந்ததாக ஆகிவிட்டது. அவர்களில் பலரது விசா மனுக்கள் INS-ல் பரிசீலனை செய்யப்படாமல் தாமதப்படுத்தப்படுகின்றன. இதனால், தனிநபர்களும் குடும்பங்களும், காலவரையற்று மாதக்கணக்கில் ஏன், ஆண்டு கணக்கில்கூட தங்களின் மனுக்களின் பரிசீலனைக்காக காத்துக்கிடக்க வேண்டியிருக்கின்றது. இப்படி மனுச் செய்துவிட்டு காத்திருப்போரில் 13,000- பேர்தான் இந்த வகையினத்தின் கீழ் தற்போது நாடுகடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Top of page