World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா

Australian prime minister an enthusiastic promoter of the WMD fraud

அவுஸ்திரேலிய பிரதமர் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் தொடர்பான ஏமாற்றை உற்சாகமாக முன்வைப்பதில் ஒருவர்

By Nick Beams
5 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிடம் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் இருப்பதாக புஷ் மற்றும் பிளேயர் ஆட்சிகள் பின்னிய பொய் வலை குறித்து மக்களது கவனம் மிகப்பெரும் அளவில் ஈர்க்கப்பட்டுள்ளபோதிலும் அவுஸ்திரேலியாவில் ஹாவார்ட் அரசாங்கம் மீதும் கவனம் திருப்பப்படவேண்டும். போலியான அச்சுறுத்தல்கள் மற்றும் அப்பட்டமான பொய்களை பரப்புவதில் சுற்றுக்கு விட்டபோது அவுஸ்திரேலிய பிரதமர் மற்றவர்களைவிட மிகப்பெரும் அளவில் அதற்காக குரல்கொடுத்தவராவர்.

நியூயோர்க் டைம்ஸ், பத்திரிகையாளர் பவுல் குறூக்மான் (Paul Krugman) அண்மையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ''மோசடிகளையும் தவறான கருத்துக்களை தருவது என்பது புஷ் நிர்வாகத்தின் வழமையான நடைமுறையாகும்'' என கருத்து தெரிவித்துள்ளார். இதே கருத்து ஹாவர்ட் அரசாங்கத்திற்கும் சரிசமமாக பொருந்தும். 2001ம் ஆண்டில் அதனது மறுதேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பா அகதிக்கப்பல் நெருக்கடி, மற்றும் படகில் இருந்த குழந்தைகள் குறித்து பொய்மூட்டைகளையும் மோசடிகளையும் ஹாவர்ட் அவிழ்த்துவிட்டார். பின்னர் 2002 ஜூலை ஆகஸ்ட்டில் ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியில் புஷ் நிர்வாகம் இறங்கியபோது, ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகுந்த ஆர்வத்தோடு அதில் கலந்துகொண்டது.

சென்ற ஜூலை மாதம் 16-ந்தேதி, வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவுனர், (Alexander Downer) ஈராக் அணுக்குண்டையும், மற்றும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கும் திறனையும் வளர்த்துக்கொண்டிருப்பதால் உலகம் அது குறித்து கவலைப்பட வேண்டுமென்று அவர் அப்போது குறிப்பிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ரொபேர்ட் ஹில் (Robert Hill) ஈராக், மூன்றாண்டுகளுக்குள் அணுகுண்டை தயாரித்துவிடும் என்று கூறப்படுவதில் தமக்கு வியப்பு எதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.

''பேரழிவிற்குரிய ஆயுதங்களை தயாரிப்புத் திட்டத்தில் சதாம் ஹுசேன் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் என்று நாம் நம்புகிறோம் மற்றும், அவரது திட்டத்தில் அணு ஆயுத திறனை பெறவேண்டும் என்பதும் அடங்கியுள்ளது`` என ரொபேர்ட் ஹில் கருத்து தெரிவித்தார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 16ம் திகதி, இது சம்மந்தமாக, ஹாவர்ட் தனது முதலாவது பெரிய அளவிலான தகவலை வெளியிட்டார். ஈராக் ஆட்சி இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கு தேவையான சாதனங்களையும் பொருட்களையும் மற்றும் தொழில்நுட்பத்தையும், பெறுவதற்கு முயன்றுவருவதாக, அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறை கண்டுபிடித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும்போது, ''1991 முதல் ஈராக் பேரழிவிற்குரிய ஆயுதங்களை தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது என்பதில் தமக்கு சந்தேகம் இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார். சதாம் ஹுசேன் தனது பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பு திட்டத்தை அதிகரித்துவருவதாகவும், அல்லது தொடர்ந்து அத்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தொழில்நுட்ப வட்டாரங்களிலிருந்தும் மற்றும் தனி நபர்களிடமிருந்தும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக ஹாவார்ட் குறிப்பிட்டார்.

இதில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் மட்டும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை அணு ஆயுதங்களும் சம்மந்தப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலிய புலனாய்வு ஏஜென்சிகள் செய்துள்ள மதிப்பீடுகளின்படி வெளிநாடுகளிலிருந்து அணுவை பிளப்பதற்கான சாதனங்களை ஈராக் பெறுமானால் அணுகுண்டு தயாரிக்க வேண்டுமென்ற ஈராக்கின் ஆசை ஒரு சில மாதங்களுக்குள் நிறைவேறிவிடும். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மூன்றாண்டுகளுக்குள் ஈராக் அணு ஆயுதங்கள் தயாரித்துவிடும் என்று கூறப்பட்டது. தற்போது, அது குறைந்து சில மாதங்களுக்குள் ஈராக் அணு ஆயுதங்களை தயாரித்துவிடும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

இது சம்மந்தமாக மறுப்புகள் தொடர்ந்து பல மாதங்கள் வரை தெரிவிக்கப்பட்டு வந்தாலும், ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துடனோ அல்லது இல்லாமலோ ஈராக்கிற்கு எதிரான இராணுவ தாக்குதலில் அவுஸ்திரேலியப் படைகள் பங்கெடுத்துக்கொள்ளும் என்று புஷ்ஷிற்கு ஹாவர்ட் ஒரு உறுதிமொழியளித்தார். அன்றைய தினம், அவுஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கில் ''பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாமலேயே, சில நேரங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் சட்டபூர்வமானது'' என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பெப்பிரவரி 5ம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பெளல் உரையாற்றிய நேரத்தில் அடுத்து இரண்டாவது முறையாக ஹாவர்ட் இது சம்மந்தமாக தனது கருத்தை தெரிவித்தார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ஈராக் வசமுள்ள இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் மற்றும் அந்நாடு அணு ஆயுத தயாரிப்பு திறனை பெறுவதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சி ஆகியவை நமது உலகின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நாம் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

''இதற்கு வேறு அர்த்தங்களோ அல்லது எடுத்துக்காட்டுக்களோ இல்லை. ஈராக்கிடம், இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் உள்ளன என்பது ஆஸ்திரேலிய அரசிற்கு தெரியும். மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க ஈராக் விரும்புகிறது என்றும் தெரியும். இந்த வகையில் பலரது கருத்தை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஈராக்கை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், வெளிநாட்டு உதவி இல்லாமலே அந்த நாடு ஐந்தாண்டுகளில் அணு ஆயுதங்களை தயாரித்துவிடும் என்று ஹாவர்ட் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நம்பிக்கைகளை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மிகவும் நம்பத்தக்க சான்றுகளை அமெரிக்க மற்றும் பிரிட்டன் புலனாய்வு அறிக்கை விபரங்களிலிருந்து பெறமுடிகிறது என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால், அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு என குறிப்பிடப்படும் கால அளவு ஒரு சில மாதங்களில் ஆரம்பித்து 3 இலிருந்து 5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம்வரை மாறுபடுகின்றது.

ஈராக், ஆபிரிக்காவிலிருந்து பெற முயலும் யூரேனியத்திலிருந்து அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தொடர்ந்து முயன்றுவருவாகவும், ஈராக்கில் யூரேனியத்தை பயன்படுத்துவதற்கான சாதாரண அணு ஆயுத பயன்பாடு எதுவும் இல்லை எனவும் ஹாவர்ட் வலியுறுத்திக் கூறினார். இந்தக் கருத்திற்கு அடிப்படையான அறிக்கை மிகவும் மோசமான ஏமாற்று என்று தற்போது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹாவர்ட் கூறியுள்ள கருத்துக்களை CIA தந்த தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. வளைகுடா போருக்கு முன்பு ஈராக்கில் நடைபெற்றதைவிட தற்போது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் உயிரியல் ஆயுதத்தயாரிப்பு ஆகியவை மிக வேகமாகவும் மிக முன்னேறிய நிலையிலும் உள்ளன என CIA ஐ மேற்கோள்காட்டி ஹாவர்ட் கருத்து தெரிவித்தார். அவரது நாடாளுமன்ற உரையில், 30 தடவை பேரழிவிற்குரிய ஆயுதங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு ஐந்து வாரங்களுக்கு பின்னர், எந்தவிதமான திட்டவட்டமான ஆதாரமும் இல்லாத காரணத்தினால் அத்தகைய கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று படிப்படியாக அம்பலத்திற்கு வரத்துவங்கின.

இந்தச் சூழ்நிலையில் மார்ச் 13ம் திகதி தேசிய பத்திரிகையாளர் சபையில் ஹாவார்ட் உரையாற்றும்போது, ஈராக் மீது அமெரிக்கா தொடுக்கவுள்ள போருக்கான அடிப்படைகளை விரிவுபடுத்துவதற்காகவும், ஆவேசமாக கருத்துக்களை கூறவுத் தீர்மானித்தார்.

அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்புக்கள், தேசிய மதிப்பீட்டு (Office of National Assessments-ONA) கொடுத்திருக்கின்ற தகவலின்படி அல் கொய்தா அமைப்பு இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் பெறுவதற்கும், அணு ஆயுதங்களை மற்றும் கதிரியக்க ஆயுதங்களை பெறுவதற்குமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருப்பதாகவும் ஹாவர்ட் தெரிவித்தார். ஆனால், ஈராக்கிற்கும் அல் கொய்தாவிற்கும் உள்ள உறவுகளை நிரூபிப்பதற்கு நீதிமன்றத்தால் ஏற்கக்கூடிய சாட்சியை தன்னால் முன்வைக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்டார். அப்படியிருந்தாலும் இதில் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எப்படி வந்தது என்றால், இதுபோன்ற சம்பவங்கள் ''பேர்ல் துறைமுக" (Pearl Harbour) போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போதுதான், ''இறுதியாக நிரூபிக்கப்படும்'' என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.

ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் படையெடுப்பு நடாத்துவதில் ஆஸ்திரேலியா இணைந்துகொள்வதை எதிர்த்து மார்ச் 11ம் திகதி ராஜிநாமா செய்த முன்னாள் ONA இன் மூத்த ஆய்வாளரான ஆன்ட்ரூ வில்கி (Andrew Wilkie) 16-ந் தேதி வெளியிட்ட ஒரு கட்டுரையில் அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்துக்களை மறுத்துள்ளார்.

வில்கியின் கருத்துப்படி, ஈராக் இராணுவம் பலவீனம் ஆனதுடன், பேரழிவிற்குரிய ஆயுத தயாரிப்பு திட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியற்றது. மேலும் ''சதாம் ஹூசேனிடம் உள்ள பேரழிவிற்குரிய ஆயுதங்களை அவர் கடத்தும் முன்னர் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கும் முன்னர் அவரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் கருத்து தவறானது. ஏனெனில் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் வலைப்பின்னலுக்கும் பாக்தாத்திற்கும் இடையே தீவிரமான ஒத்துழைப்பு நிலவுகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லையென்று வில்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டதற்கு உண்மையான காரணம் அமெரிக்காவின் கேந்திர நலன்கள்தான். அமெரிக்காவை, அஸ்திரேலியா எந்த விலை கொடுத்தும் ஆதரித்தே தீரும் என்றும் வில்கி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வில்கி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது எதிர்வரும் வாரங்களில் அதிக அளவிற்கு முக்கியத்துவம் பெறும் என்பது நிச்சயம். ஏனென்றால், பேரழிவிற்குரிய ஆயுதங்கள் பற்றிய பொய்கள் மேலும் அம்பலத்திற்கு வரும்போது, அந்த பொய்களை கூறியவர்கள் தப்புவதற்கு வழிவேண்டும். அத்தகைய தப்பிக்கும் வழிதான், ''தவறான'' புலனாய்வு அறிக்கை என்ற கருத்தாகும்.

திங்களன்று Sydney Morning Herald பத்திரிகையில் வந்திருக்கும் விமர்சனங்களை பார்கும்போது, இதுதான் ரொபேர்ட் ஹில்லின் அணுகுமுறையாக அமைந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ''நாம் புரிந்துகொண்டவரை, நாம் எடுத்த நடவடிக்கைகள் சரியானவைதான். ஆனால், நாம் புரிந்துகொண்டதில் தவறு இருக்குமானால், அதில் தவறு இருந்தது என்பதை நாம் சொல்லியாகவேண்டும். ஆனால், அப்படி சொல்லுகின்ற நிலை இன்னும் வரவில்லை'' என ரொபேர்ட் ஹில் கருத்து தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முந்திய வில்கியின் குறிப்புகளில் புலனாய்வு வட்டாரங்கள் மீது பழிபோடும் முயற்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஈராக் போருக்கு ஆயத்தம் நடக்கும்போது தயாரிக்கப்பட்ட புலனாய்வு தகவல்களை தானே நேரில் பார்த்ததாகவும், அந்த தகவல்கள் அரசிற்கு அனுப்பப்பட்டதாகவும், வில்கி கருத்து தெரிவித்தார்.

மே 27ம் திகதி, Sydney Morning Herald பத்திரிகையில் வெளிவந்துள்ள தகவல்களின்படி, அமெரிக்க புலனாய்வு அறிக்கைகள் ஈராக்கின் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் தயாரிப்புத் திட்டம் தொடர்பாகவும் பயங்கரவாத அமைப்புக்களுடன் ஈராக்கிற்குள்ள தொடர்புகள் குறித்தும் மிதமிஞ்சிய கற்பனைகளைத் தந்து வருவதாக ஆஸ்திரேலியப் புலனாய்வு அதிகாரிகள் ஹாவார்டு அரசிற்கு எச்சரிக்கை செய்ததாக வில்கி குறிப்பிட்டுள்ளார்.

''ஈராக் தொடர்பான அமெரிக்காவின் தகவல்களை பல ஆண்டுகளாக O.N.A. சந்தேகத்துடனேயே நோக்கியதாகவும், இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு தகவல்களைத் தந்துள்ளது. அவுஸ்திரேலிய அரசுதான் பேரழிவிற்குரிய ஆயுதங்கள் தொடர்பாகப் பெரிய கூக்குரலை எழுப்பியதாகவும் புலனாய்வு ஆய்வாளர்கள் அப்படிச் செய்யவில்லை என்றும் பேரழிவிற்குரிய ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக மிதமிஞ்சிய கருத்துக்களை அரசு பொருட்படுத்தவில்லை'' என்றும் வில்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அல் கொய்தா அமைப்போடு உள்ள தொடர்புகள் பற்றி அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் ஈராக் பற்றித் தருகின்ற தகவல்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்ற சந்தேகத்தை O.N.A. வெளியிட்டுள்ளது. இந்த வகையில் வில்கி அமெரிக்காவின் சில கருத்துக்களை வியப்பூட்டுபவை என்று வர்ணித்துள்ளார்.

பேரழிவிற்குரிய ஆயுதங்கள் தொடர்பான மோசடி அம்பலத்திற்கு வந்தது ஹாவர்டு மற்றும் அவரது அமைச்சர்களை மட்டும் அம்பலத்திற்கு கொண்டுவரவில்லை. இத்தகைய மோசடி இவ்வளவு எளிதாக எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதலிடத்திற்கு வருவது ஊடகங்கள். இவை இடைவிடாது பொய்களையும் கற்பனைகளையும் திரிபு வேலைகளையும் அப்படியே வெளியிட்டு வந்தன. இரண்டாவது அம்சம், முதலாவது ஏவுகணை ஏவப்பட்டதுமே, ஈராக்கை நிராயுதபாணியாக்குவது என்ற அரசாங்கத்தின் கோரிக்கையுடன் இணைந்துகொண்டு யுத்தத்திற்கான எதிர்ப்பை ''எதிர்க் கட்சியான'' தொழிற் கட்சி கைவிட்டது.

இதில் ஹாவர்டு அரசாங்கம் இன்னும் தொடர்ந்து நம்பிக்கொண்டிருப்பது இந்த இரண்டு வட்டாரங்களையும் தான். இந்த மோசடிகள் முழுமையாக அம்பலத்துக்கு வரும் நிலையிலும் இந்த இரண்டு வட்டாரங்களும் ஆதரவு தரும் என்றும் அவர் நம்புகிறார். அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஊடகங்கள் தவறான புலனாய்வு அறிக்கைகளை அப்படியே பின்பற்றும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் தொழிற் கட்சித் தலைவர்கள் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்திற்கு வாய் மூடி மெளனிகளாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், மிக விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஈராக் மீது நடாத்தப்பட்ட படையெடுப்பு போர்க்குற்றம் மட்டுமல்ல; நூரம்பேர்க் விசாரணைகளின் போது சட்டபூர்வமாக விளக்கம் தரப்பட்டுள்ளதைப்போல் ஒருதலைப்பட்சமான தாக்குதலுமாகும். இவை நாஜிக்கள் ஆட்சியில் செய்ததுபோல் பெரிய பொய்யை சொல்லி அதை மெய்யாக்கியதற்கு ஒத்ததுபோல், தற்போது ஈராக் போர் நடைபெற்றிருக்கிறது.

Top of page