World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Why the LTTE has targetted SEP members in northern Sri Lanka

வட இலங்கையில் SEP-உறுப்பினர்களை LTTE இலக்கு வைத்திருப்பது ஏன்?

By K. Ratnayake
19 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள ஊர்காவற்துறை தீவில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பான மூன்று வழக்குகளில் கடந்த 9-மாதங்களாக தொடர்ந்து அசாதாரணமான தாமதங்கள் ஏற்பட்டு உள்ளது. இப்படி நீண்ட காலமாக இழுபடும் சட்ட நடைமுறைகள் தாமதம், அரசு எந்திரத்திற்கும் LTTE -க்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு நிலவுவதையும், அரசு எந்திரம் தாக்குதல்களை மூடி மறைப்பதையும் மற்றும் அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எதையும் எடுக்காமல் தடுப்பதையும் வெளிக்காட்டுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களை தற்காப்பதற்காக உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் பிரச்சாரம் ஒன்றைத் தொடக்கிய பின்னர் தாமதமாக ஊர்காவற்துறை போலீசார் LTTE உறுப்பினர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் வழக்குகளை தாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகள் ஆறுமாதங்களாக இழுபட்டு வருகின்றன. இதற்கிடையில், உள்ளூர் போலீசார் வழக்கு விசாரணையை கிடப்பில் போடுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

முதல் வழக்கில் LTTE யின் ஊர்காவற்துறை முன்னாள் அரசியல் தலைவர் செம்மணன் மீது போலீசார் சமனைக் கூட அனுப்பவில்லை. த.ஈ.வி.புவின் வட்டார அலுவலகத்தைக் கட்டுவதற்காக அம்பிகை நகர் மீனவர் கூட்டுறவு சங்க (AFCU) நிதியை தன்னிடம் தருவதற்கு சோ.ச.க உறுப்பினர்கள் மறுத்து விட்டார்கள் என்பதற்காக சென்ற செம்டம்பர் மாதம் அவர்களை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இடைப்பட்ட மாதங்களில் முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு த.ஈ.வி.பு அந்த சங்கத்தைக் கைப்பற்ற முயன்றது.

கடைசியாக, ஜூன் 13 ந் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், போலீசார் ஐந்தாவது முறையாக, சம்மன் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று அறிவித்தனர். போலீஸ் அதிகாரிகள் பல்வேறு, அற்பமான சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர். கொழும்பு ஆட்சிக்கும் த.ஈ.வி.பு போராளிகளுக்கும் இடையில் நடைமுறையில் உள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை கண்காணித்து வருகின்ற இலங்கை கண்காணிப்பு குழுவின் (SLMM) பொறுப்புத்தான் அது என்று சமாதானம் கூறிவருகின்றனர். ஆனால், தற்போது நீதிமன்றம் சம்மன் வழங்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது. போலீசார் சம்மந்தப்பட்ட நபர் "கிடைக்கவில்லை" என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இக்கூற்று அபத்தமானது. யாழ்ப்பாணம் பகுதியின் அரசியல் துணைத் தலைவர் பதவிக்கு பகிரங்கமாக செம்மணனை த.ஈ.வி.பு. அறிவித்தது. யாழ்ப்பாண தீபகற்பத்தில், கொக்குவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் அவரை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடமுடியும்.

இரண்டாவது வழக்கு சோ.ச.க உறுப்பினர் நாகராஜா கோடீஸ்வரன் மீது அக்டோபர் 8ந் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பந்தப்பட்டதாகும். நீண்ட தாமதத்திற்கு பின்னர், இறுதியாக போலீசார் த.ஈ.வி.பு- உறுப்பினர் கார்த்திகேசு அமிர்தலிங்கத்தை கைது செய்திருக்கின்றனர். ஆனால், ஆரம்பத்திலிருந்தே தாக்குதலின் கடுமையை குறைத்து மதிப்பிடுவதற்கு போலீசார் முயன்று வந்தனர். தலை, கழுத்து, தோல் பட்டைகளில் காயம் ஏற்பட்டு கோட்டீஸ்வரன் மருத்துவமனையில் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றார். போலீசார் ஆரம்பத்தில் அமிர்தலிங்கம் மீது சொற்ப காயமே ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினர். இது அற்பமான குற்றச் சாட்டாகும். எனவே குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து நீண்டவாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவை, இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலை மற்றும் கோடீஸ்வரன் பட்டிருக்கின்ற காயங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அவை கொலை செய்வதற்கான முயற்சி என்பது மேலேழுந்தவாரியாக பார்க்கும்போதே தெரிகின்றது என கோடீஸ்வரனது வழக்கறிஞர் கூறுகிறார்.

மூன்றாவது வழக்கு சோ.ச.க உறுப்பினர்களுக்கு மேலும் அச்சுறுத்தல்கள் விடுத்து மற்றும் அவர்களது மீன் பிடி சாதனங்களை சேதமடையச்செய்தது சம்மந்தப்பட்டது. போலீசார், இந்த வழக்கை சோ.ச.க உறுப்பினர்களுக்கு எதிராகவே திருப்பிவிட முயன்றனர். சோ.ச.க உறுப்பினர், எவரும் தவறு செய்தார்கள் என்பதற்கு எந்தவிதமான சான்றும் இல்லாத நிலையில் போலீசார் சோ.ச.க மற்றும் த.ஈ.வி.பு உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றம் நன்னடத்தை ஜாமீன் கட்டளை பிறப்பிக்க வேண்டும் என கோரவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. நீதிமன்றம் இருத்தரப்பையும், எழுத்துமூலம் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய கோரியது. சோ.ச.க உடனடியாக, வாக்குமூலம் தாக்கல் செய்தது. த.ஈ.வி.பு வழக்கறிஞர், அத்தகைய பிரமாண வாக்குமூலம் எதையும் தாக்கல் செய்ய தவறிவிட்டார் என்பது மட்டுமல்ல, கடந்த இரண்டு விசாரணைகளில், நேரில் ஆஜராகாமல் தாமதப்படுத்தினார். இதன் மூலம் வழக்கு விசாரணையை காலவரையின்றி தாமதப்படுத்தியுள்ளார். போலீசாரோ அல்லது நீதிமன்றமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசாரின் இத்தகைய தாமதப்படுத்தும் தந்திரங்களை நீதிமன்றம் நீடிக்க அனுமதித்திருக்கிறது. இந்த நடவடிக்கை திறமைக் குறைவினாலோ அல்லது அனுபவம் இல்லாததாலோ நடந்துவிடவில்லை. அவர்கள் விரும்பினால், மிக வேகமாகவும் கருணையற்ற வகையிலும் செயல்படுவதில் இலங்கை போலீசார் நன்கு பிரபலமானவர்கள். கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இலங்கையின் உள்நாட்டுப் போரில் போலிசார் பாதுகாப்பு படைகளின் உதவியோடு "சந்தேகத்துக்குரிய த.ஈ.வி.பு" என்று கருதப்படும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கையின் கடுமையான பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கைது செய்திருக்கின்றனர். தற்போது சோசலிஸ்டுகளுக்கு எதிராக, த.ஈ.வி.பு பகிரங்கமாக முரட்டுத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு சான்றுகள் இருந்தும் மிக குறைந்தபட்ச நடவடிக்கைகளைக் கூட எடுப்பதில் பின்னடித்துக் கொண்டுள்ளனர்.

இதை தனிப்பட்ட உள்ளூர்-போலீஸ் அதிகாரிகள் தங்களது கடமையை செய்வதற்கு தவறிவிட்டார்கள் என்று மட்டும் எடுத்துக் கொள்ளமுடியாது. அரசின் மட்டங்களிலிருந்து தகுந்த முன் அனுமதி கிடைத்தால் தான் அவர்கள் நடவடிக்கையில் இறங்க முடியும். கொழும்பில் ஆட்சி புரிகின்ற ஐக்கிய தேசிய முன்னணிக்கும் த.ஈ.வி.புக்கும் இடையில் நிலவுகின்ற புதிய உறவுகளின் அடிப்படையில்தான் போலீசாரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நீண்ட காலமாக இடைவிடாது நடைபெற்று வருகின்ற உள்நாட்டுப்போரை முடிவிற்கு கொண்டு வந்து ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு இரு தரப்பினருமே முயன்று வருகின்றனர். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்தான போர் நிறுத்த உடன்படிக்கையின்படி கொழும்பு மத்திய ஆட்சி வடக்கிலும் மற்றும் கிழக்குப் பகுதியிலும் செயல்படும், பல்வேறு மாநில அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள ஆணையில், த.ஈ.வி.பு க்கு ஆத்திரமூட்டுகின்ற வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் தவிர்க்க வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளது.

சென்ற அக்டோபர் மாதம் சோ.ச.க பிரதிநிதியிடம் தெரிவித்த ஊர்காவற்துறை பகுதி துணை போலீஸ் கண்காணிப்பாளர் ஜனதா குணதிலகா அரசாங்கத்தின் புதிய கொள்கை குறித்து நேரடியாக விளக்கம் தந்தார். ''எங்களது விசாரணை குறித்து, த.ஈ.வி.புக்கு நேரடியாக தெரிவிப்போம். அவர்கள் ஆஜராகவில்லை என்றால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அரசாங்க ஆணையின் காரணமாக. SLMM தான் இப்பொழுது த.ஈ.வி.புலிகள் விஷயங்களுக்கு பொறுப்பாகும்'' என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் நிகழ்ச்சிகளை ஆராயும்போது, ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. அது என்னவென்றால், ஊர்காவற்துறை தீவில் மிகச் சிறிய மீனவர் சங்கத்தை தனது கட்டுப்பாட்டில், கொண்டுவரவும் சோ.ச.க உறுப்பினர்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை மேற்க்கொள்ளவும் இந்த அளவிற்கு த.ஈ.வி.பு செல்வதற்கு காரணம் என்ன?

இந்தப் பிரச்சனைக் குறித்து உலக சோசலிச வலைத் தளத்திற்கு த. ஈ.வி.பு ஆதரவாளர்கள் எழுதியுள்ள பல கடிதங்களில் அப்பட்டமாக எழுப்பப்படுகிறது. அவர்கள் ஊர்காவற்துறையில் சோசலிஸ்டுகளைப் பாதுகாப்பதற்கான உலக சோசலிச வலைத் தள பிரச்சாரத்தை ஏளனம் செய்ய முயற்சித்துள்ளனர். எல்லா அரசியல் சந்தர்ப்பவாதிகளையும் போல் உடனடி தோற்றத்தையும், எண்ணிக்கையையும் கண்டு அவர்கள் மெய்மறந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். த.ஈ.வி.பு தமிழ் மக்களின் தன்னிகரில்லாத தலைமைக்கு தகுதியுள்ளதாகயிருக்கும் போது சோ.ச.க போன்ற சிறிய எந்தவிதமான அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத கட்சியின் நடவடிக்கை மீது அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும் என்று பலர் கேலி பேசுகின்ற முறையில் கேட்கின்றனர்.

உண்மைகள் பேசுகின்றன. நீதிமன்ற பதிவேடுகளில் கண்டுள்ள சான்றுகளின்படி, கடந்த மாதங்களில், த.ஈ.வி.பு தனது முந்தைய எதிரிகளான போலீஸ் மற்றும் அரசு எந்திரத்தோடு ஒத்துழைத்து மிகக் கடுமையான அளவிற்கு தனது ஆற்றலை செலவிட்டு ஊர்காவற்துறை தீவில், செயல்பட்டு வரும் சோ.ச.க உறுப்பினர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கு முயன்று வருகின்றது. அம்பிகை நகர் மீனவர் கூட்டுறவு சங்கத்தையும் அதன் நிதிகளையும், அரச அதிகாரிகளது ஒத்துழைப்போடு கைப்பற்றுவதற்கு த.ஈ.வி.பு அனைத்து கடைகெட்ட தந்திரங்களையும் கையாண்டு வருகின்றது.

த.ஈ.வி.பு ஆதரவாளர்கள் எவ்வளவு கேலி பேசினாலும், த.ஈ.வி.பு தலைமை சோ.ச.க மற்றும் அதன் சோசலிச செயல் திட்டத்தை திட்டவட்டமாக தனக்கு ஒரு அரசியல் அச்சுறுத்தல் என்று கருதுகின்றது. சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கொழும்பு அரசாங்கத்துடன் த.ஈ.வி.பு அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ளும் அதன் முன்னோக்கு, நேரடியாக தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இரு தரப்பினரின் நலன்களுக்கும் எதிராக அமைந்திருக்கிறது மேலும் மேலும் தெளிவாகி இருக்கிறது. த.ஈ.வி.பு சார்பில் சமரச பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் அவர்களது தலைமை ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஏற்கனவே "சந்தை பொருளாதார கொள்கைக்களுக்கு" தனது ஆதரவை உறுதிபடுத்தியுள்ளார். அது சாதாரண மக்களது வாழ்கைத் தரங்களை மேலும் சீர்குலைவிக்கும்.

தனது அரசியல் ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது, எதிர்காலத்தில் மேலும் குறையக்கூடும் என கவலையடைந்து த.ஈ.வி.பு தனது எதிரிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு மிகக் கொடூரமான நடவடிக்கைகளை பயன்படுத்துவதற்குக் கூட தயங்கவில்லை. குறிப்பாக, உழைக்கும் மக்களின் மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாய பிரிவினர்களுள் ஒருவரான, தமிழ் மீனவரிடையே சோ.ச.க வின் செல்வாக்கு வளர்ந்து வருவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களிடம் இதற்கு முன்னர் த.ஈ.வி.புக்கு கணிசமான அளவிற்கு ஆதரவு இருந்து வந்தது.

சோ.ச.கவும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (RCL) தான், இலங்கை ஆயுதப்படைகள், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலிருந்து உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும், வெளியேற வேண்டும் என்று இடைவிடாது கோரி வந்த ஒரே அமைப்பாகும். அதே நேரத்தில் சோ.ச.க, த.ஈ.வி.பு. கோரிக்கையான தமிழ் ஈழம் முதலாளித்துவ தனி நாடு கோரிக்கையையும் எதிர்த்து வருகிறது. நியாயமான, சமூக சமத்துவ அடிப்படையிலான சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டமுடியும் என்று அது கூறிவருகிறது.

இந்த அடிப்படையில், தமிழ் மீனவர்கள் உரிமைகளை பேணிக் காப்பதற்கு இடைவிடாது, சோ.ச.க போராடி வருவதோடு இலங்கை கடற்படையின் கட்டுப்பாடுகள் மற்றும், தடைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. இந்த அடிப்படையில்தான், அம்பிகை நகர் மீனவர் கூட்டுறவு சங்கமும், பருத்தி அடைப்பு சங்கமும், 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்டன. ஏழை மீனவர்களிடமிருந்து அவர்கள் பிடித்த மீனை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றபோது, இந்த தொழிற்சங்கங்கள் நஷ்ட ஈடு கோரி பிரச்சாரம் நடத்தின. மீனவர்களின் குடும்பங்களை சார்ந்தவர்கள்மீது ஆயுதப்படைகளால் நடாத்தப்பட்ட கற்பழிப்பு மற்றும் கொலை உள்பட்ட கொடூரமான தாக்குதல்களையும் கூட சோ.ச.க அம்பலப்படுத்தியது.

சோ.ச.க செயல்பாடுகள் உள்ளூர் மீனவர்கள் தங்களது உரிமைகளை தற்காத்து நிற்பதற்கு உறுதியான நிலைப்பாட்டை மேற்க்கொள்ள ஊக்குவித்தன. எடுத்துக்காட்டாக, 2000ம் ஆண்டு மார்ச் மாதம் மீன்பிடிப்பதற்கு இடங்கள் காலம் நிர்ணயிக்கப்படுவகற்கு நடைபெற்ற கூட்டத்தை ஊர்காவற்துறை தீவு மீனவர்கள் புறக்கணித்தனர். தனது கட்டளைகள் இப்படி பகிரங்கமாக மீறப்படுவதைக் கண்டு, ஆத்திரமுற்ற கூட்டத்தின் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலருமான என்.மதனராஜா, சோ.ச.க உறுப்பினரும் பருத்தியடைப்பு சங்க தலைவருமான ஆர். சுதர்சனுக்கு "இறுதியானதும் மற்றும் கடைசி" எச்சரிக்கையை விடுத்தார். சுதர்சன் தனது அரசியல் பணிகளை நிறுத்துக் கொள்ளவேண்டும் என்று மிரட்டும் வகையில் எச்சரிக்கை விடுத்தார்.

2003 ஜனவரி மாதம் சுதர்சன் யாழ்ப்பாணம் கூட்டுறவு ஆய்வாளரை சந்தித்தபோது, அவர் பருத்தியடைப்பு சங்கம் பதிவு செய்யப்படாத சங்கம் என்று த.ஈ.வி.பு கட்டளையிட்டிருப்பதாக நேரடியாக சுதர்சனிடம் தெரிவித்தார். சுதர்சன் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை. த.ஈ.வி.பு நடவடிக்கைகள் ஈ.ம.ஜ.க யின் நடவடிக்கைகளுக்கு இணையாக அமைந்துள்ளன. ஈ.ம.ஜ.க வின் உள்ளூர் தலைவர்தான் என்.மதனராஜா, உள் நாட்டு போரின்போது, இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் துணை இராணுவமாக, ஈ.ம.ஜ.க செயல்பட்டதாக அந்த அமைப்பு பரவலாக இழிபெயர் பெற்றிருக்கிறது. 1999ம் ஆண்டு சோ.ச.க வுக்கு ஆதரவு வளர்ந்து கொண்டு வருவது குறித்து கவலையடைந்த ஈ.ம.ஜ.க, கூட்டுறவு ஆய்வாளர் பருத்தி அடைப்பு சங்கத்தை அங்கீகரிக்க மறுத்து விடவேண்டும் என்று கோரியது.

வட பகுதி தீவுகளைச் சார்ந்த 18 யூனியன்களின் தலைவர்கள் சுமார் 1000 மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள், ஒரு சம்மேளனத்தை அமைத்த பொழுது, த.ஈ.வி.பு ஜனவரி மாத இறுதியில் இந்த ஆண்டு மேலும் கலவர உணர்விற்கு ஆட்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குழு சுதர்சனைக் கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க முடிவு செய்தது. இதை அறிந்து கொண்ட த.ஈ.வி.பு, சங்க கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டத்தை நடத்தி சுதர்சனை வெளியேற்றியது. அரசியல் பிரச்சனைகளில் விவாதம் நடத்தி இதை அவர்கள் செய்யவில்லை, மாறாக அதிகாரத்துவ சூழ்ச்சி நடவடிக்கை மூலம் இந்தச் செயலில் ஈடுபட்டார்கள். த.ஈ.வி.பு தூண்டுதலால் கூட்டுறவு ஆய்வாளர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சுதர்சனின் சங்கம் பதிவு செய்யப்படாததால் அவரால் தலைவராக பணியாற்ற முடியாது என அறிவித்தார்.

ஊர்காவற்துறை பகுதியை சார்ந்த இரு த.ஈ.வி.பு நிர்வாகிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வட்டாரத் தலைவர் அருந்தவன் மற்றும் கடற்படைபிரிவு தலைவர் மறவன் மாஸ்டர் இருவரும் மறைமுகமாக கூட்டத்தில் கலந்துகொண்ட சோ.ச.க மற்றும் இதர யூனியன் தலைவர்களுக்கு, அச்சுறுத்தல்களை விடுத்தனர். சோ.ச.க உறுப்பினர்களுக்கு "சரியான மருந்து" கொடுக்கவேண்டும் என்றும் த.ஈ.வி.பு வழியைப் பின்பற்ற தவறுவதால் அவர்களை "இருட்டறையில்" விசாரிக்கவேண்டும் என்றும் அருந்தவன் எச்சரிக்கை விடுத்தார். வன்னி பகுதி த.ஈ.வி.பு கட்டுப்பாட்டில் இருப்பதால், மீனவர்களுக்கு சங்கம் தந்துள்ள கடன்களின் பாக்கியை திரும்ப வசூலிப்பதற்கு உள்ளூர் த.ஈ.வி.பு தலைவர்களுக்கு வழி தெரியும் என்றும் மறவன் மாஸ்டர் எச்சரிக்கை விடுத்தார்.

வளர்ந்து வரும் குரோதம்

விரிவான அடிப்படையில் தமிழ் மக்களிடையில் பகைமை உணர்வு வளர்ந்து வருவதை த.ஈ.வி.பு எப்படி சமாளிக்கும் என்பதற்கு சோ.ச.க க்கு எதிரான த.ஈ.வி.பு நடவடிக்கை ஒரு கடும் எச்சரிக்கை ஆகும். தமிழ் மற்றும் சிங்கள உழைக்கும் மக்களில் மிகப்பெரும்பாலோர் உள்நாட்டு போர் முடிவிற்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். கொழும்பு அரசாங்கத்துடன் த.ஈ.வி.பு ஒன்றாய் இணைந்து உருவாக்கியுள்ள சமாதான உடன்படிக்கை பெரிய வல்லரசுகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பெரு வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் நலன்களை காப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன, மிகப்பெரும்பாலான மக்களது நலன்களை காப்பதற்காக அல்ல, என்பதை நாளுக்கு நாள் அனைவரும் தெளிவாக உணர்ந்து வருகின்றனர்.

போரினால், வீடுகளை உடமைகளை இழந்து விட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள், முகாம்களிலும், அல்லது இதர இடங்களிலும் இன்னமும் வாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். போரினால் சிதைவுபட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு தீவுப் பகுதிகளில் பரவலாக நிலவும் வறுமையை போக்குவதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சமுதாயப் பிரச்சனைகளை மேலும் கடுமையாக்குகின்ற வகையில் த.ஈ.வி.பு தனது சொந்த முறையிலான வரி விதிப்புகளை வசூலிக்கின்றது. இதனால் அடிப்படை அத்தியாவசிய பொருட்களின் அத்தியாவசிய விலை உயர்ந்துள்ளது. அண்மையில் அகதிகள் முகாம் ஒன்றில் வசிக்கின்றவர்கள், உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளிக்கும் போது, ''அவர்கள் அனைவரும் இங்கே வருகிறார்கள், எங்களிடம் பேசுகிறார்கள், போய்விடுகிறார்கள், ஆனால் நாங்கள் அனைவரும் துன்பத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்றனர்.

மே தினத்தன்று த.ஈ.வி.பு மீது வளர்ந்து வருகின்ற வெறுப்பு பகிரங்கமாக அம்பலத்திற்கு வந்தது. த.ஈ.வி.பு நடத்திய ஆர்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள் என்று த.ஈ.வி.பு தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சுமார் 2000 பேர் மட்டுமே த.ஈ.வி.பு நடத்திய மே தின ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அண்மையில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கவிற்கு த.ஈ.வி.பு தலைமை சமரச பேச்சாளர் பாலசிங்கம் எழுதிய கடிதத்தில் சலுகைகள் வழங்க கோரியிருந்தார். ''எங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டே வருவதால்", சலுகைகளை வழங்கவேண்டும் என்று பாலசிங்கம் கோரியிருந்தார். சென்ற வாரம் த.ஈ.வி.பு சரிந்து கொண்டு வரும் தமது அரசியல் அடித்தளத்தைத் தூக்கி நிறுத்தி முண்டு கொடுப்பதற்காக, "தமிழ் விழிப்புணர்வு இயக்கத்தை" நடத்தியது.

தங்களது அடிப்படை உரிமைகளை தற்காத்து கொள்வதற்கு தமிழ் மக்களில் மிகப்பெரும்பாலோர், வேறு அமைப்புகளுக்கு தாவி விடுவார்கள் என்று த.ஈ.வி.பு பயப்படுகின்றது. குறிப்பாக, சோ.ச.க மற்றும் அதன் சோசலிச பதிலீட்டின் பக்கம் அவர்கள் சென்றுவிடுவார்கள் என த.ஈ.வி.பு பயப்படுகின்றது. இலங்கையின் இதர கட்சிகளைப் போல அல்லாமல் தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதிலும், தொடர்ந்து வந்த கொழும்பு ஆட்சிகள் நடாத்திய போரை எதிர்ப்பதிலும் நீண்ட அப்பழுக்கற்ற வரலாற்றை சோ.ச.க கொண்டிருக்கின்றது.

அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கின்ற அனைவரும் சோ.ச.க மீது த.ஈ.வி.பு கொடுத்து வரும் தாக்குதல்களை மிகக் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். எனவே நாம் அனைத்து, உலக சோசலிச வலை தள வாசகர்களையும் த.ஈ.வி.புக்கு எதிர்ப்புக் கடிதங்களை அனுப்புமாறும் சோ.ச.க கட்சியின், தற்காப்பு நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். சோ.ச.க உரிமைகளை தற்காத்து நிற்பது என்பது தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தமாக பாதுகாக்கப்பட வேண்டியதுடன் ஒருங்கிணைந்த ஒன்றாகும்.

எனவே த.ஈ.வி.புலிகள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் EPDP பயன்படுத்திய அதே நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது என்பது வியப்பை அளிக்கவில்லை. கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பெரு முதலாளிகளின் கட்டளைகளை வலிந்து செயல்படுத்துவதற்கு, அமைதி உடன்படிக்கை மூலமாக அது ஆர்வம் கொண்டுள்ள பாத்திரம் EPDP லிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. அதன் விளைவாக, த.ஈ.வி.புலிகளால் சோ.ச.க வை சகித்துக் கொள்ளமுடியாது. சோ.ச.க தொழிலாளர், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை தமிழர் பகுதிகளில் கவருகின்ற துருவமாக விளங்கி வருகிறது. பகிரங்க அரசியல் விவாதத்தில் அதன் முன்னோக்கிற்காக ஆதரவை வென்றெடுக்க முடியாமல், த.ஈ.வி.பு ஆனது EPDP யைப்போல் ஒரேயடியாக முரட்டுத்தனத்தில் இறங்கியிருக்கின்றது.

கடிதங்கள் அனுப்பவேண்டிய முகவரிகள்:

Jaffna
Ilamparithi
LTTE Jaffna Office
Potpathy Road,
Kokuvil
Jaffna

Colombo
LTTE
c/- Sri Lanka Monitoring Mission
PO Box 1930
Galle Road
Colombo 3
Email: slmm-hq@mfa.no

They can also be posted or faxed to:

London
The LTTE
c/- Eelam House
202 Long Lane
London SE1 4QB
United Kingdom
Telephone: 44-207-403-4554
Fax: 44-207-403-1653

(Please note changes in telephone and fax numbers)

Please send copies of all statements to the WSWS at: editor@wsws.org

Fax:
United States: 248 967 3023
Britain: 0114 244 0224
Australia: 02 9790 3501

Donations to the SEP's 250,000 rupee ($US2,500) campaign fund can be sent to:
Account Number 1472834301 at the Kirullapona Branch of the Commercial Bank of Ceylon
94A Pamankada Road
Kirullapona
Colombo
Sri Lanka

Top of page