World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்க

The US terror alert
Washington employs fear and panic as instruments of war

அமெரிக்காவில் பயங்கரவாத எச்சரிக்கை

போருக்கு ஆயுதமாக மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் கிளப்பி விடும் வாஷிங்டன்

By Bill Vann
14 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகம் பிரிட்டனின் டோனி பிளேயர் அரசுடன் சேர்ந்நு கடந்த வாரம் ஈராக் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் மக்களிடையே பரவலாக உருவாகி வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக பீதி உணர்வையும் பயங்கரத்தையும் விதைப்பதற்கு திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தி வருகின்றன.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அடிப்படையில் ''கோட் ஆரெஞ்சு'' (Code orange) என்கிற அவசர நிலை எச்சரிக்கையை விடுத்ததை தொடர்ந்து விமானங்களை தாக்கும் விமான எதிர்ப்பு பீரங்கி வண்டிகள் வாஷிங்டன் நினைவுச் சின்னம் அருகிலும் அமெரிக்கா காப்பிட்டல் (Capitol- அமெரிக்க காங்கிரஸ் கட்டிடம்) பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இயந்திர துப்பாக்கிகளோடு SWAT-படைவீரர்கள் நியூயோர்க் நகரத்து தெருக்களில் காவல் புரிந்து வருகின்றன. லண்டனில் டாங்கிகளும், போர் படை வீரர்களும் கீத்ரோ விமான நிலையத்தில் காவல் புரிந்து வருகின்றனர்.

இவ்வளவு பயங்கரமான உயர்ந்த அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய பிரகடனம் ஏன் வெளியிடப்பட்டது? என்பதற்கு எந்த அமெரிக்க அதிகாரியும் திட்ட வட்டமான அல்லது நம்பத்தகுந்த காரணத்தை கூறவில்லை. தெளிவில்லாத சில குறிப்புகள் கூறப்படுகின்றன. துப்பறியும் மற்றும் புலனாய்வு ஏஜென்சிகள் ஹஜ் கொண்டாட்ட முடிவில் மிகப்பெரும் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற பேச்சுக்களை ஒட்டுக்கேட்டதாக சில தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இதில் ஆதாரபூர்வமான தகவல் எதுவுமில்லை.

அரசாங்கம் கூறுகின்ற தகவல்களை ஆழமாக ஆராய்வதற்கு அமெரிகக ஊடகங்கள் எந்த விதமான முயற்சியையும் மேற்க்கொள்ளவில்லை. மாறாக அரசாங்கம் சொல்கின்ற ஒவ்வொரு தகவலையும் பெரிதுப்படுத்தி வெளியிடுகின்றன. மக்களிடையே கவலையையும், பீதி உணர்வையும் உருவாக்குகின்ற வகையில் ஊடகங்களும் செயல்படுகின்றன. எடுத்துக்காட்டாக வியாழக்கிழமையன்று NBC இரவு செய்தி அறிக்கையில் அல்கொய்தா குழுக்கள் அமெரிக்காவிற்குள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டை எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் வெளியிட்டிருக்கிறது.

''கோட் ஆரெஞ்சு'' எச்சரிக்கையை வெளியிட்ட உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ரொம் ரிட்ஜ், (Tom Ridge) இந்த எச்சரிக்கை நம்பகத் தன்மையுள்ள ஒன்றுக்கொன்று தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து முடிவு செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார். இவற்றிற்கும் ஈராக் மீது மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியிருக்கிறார். இந்த அவசர எச்சரிக்கை எதிர்வரவுள்ள ''ஈராக்குடனான போருடன் தொடர்பானது'' தான் மக்களில் மிகப்பெரும்பாலோருக்கு உள்ள பலத்த ஐயுறவுக்கு எதிராகவே ரொம் ரிட்ஜ் இன் இந்த விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

இந்த பயங்கரவாதம் தொடர்பான அவசர எச்சரிக்கை எந்த நோக்கத்திற்காக பயன்படுகிறது? அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்கும் இந்த எச்சரிக்கைக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. இவ்வளவு அறிவிப்புகளுக்கும் இடையிலும் இரசாயன, உயிரியல் அல்லது அணு தாக்குதல்களால் ஏற்படும் பயங்கரமான அழிவை தொடர்ந்து உருவாகின்ற கடுமையான பொது சுகாதாரக் கேடுகளை சமாளிக்க எந்த விதமான திட்டத்தையும் அரசு உருவாக்கவில்லை. மாறாக, பெரிய நாசங்கள், விபத்துக்கள் ஏற்படும்போது ஓடிச்சென்று மக்களை காப்பாற்றுகின்ற பணியில் ஈடுபட்டிருக்கின்ற தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் இதர அவசரபணியாளர்கள் ஆகியோருக்கான ஒதுக்கீட்டை 2 பில்லியன் டொலர் அளவிற்கு புஷ் நிர்வாகம் குறைத்து வரவுசெலவுத் திட்டம் தயாரித்திருக்கிறது. பொது மக்கள் பிளாஸ்டிக் தகடுகளையும், ஒட்டும்ரேப்புகளையும் (Duct tape) வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் வலியுறுத்திக்கேட்டுக் கொண்டு வருகிறது. இது போன்ற பொருட்கள் அவசரகாலத்தில் பயனற்றவை என்று பெரும்பாலான நிபுணர்கள் கருதுகின்றனர்.

செப்டம்பர்11 அன்று கடத்தல் விமான குண்டு தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து, எவ்வாறு மக்கள் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது என்று பொது மக்களுக்கு எந்தவிதமான முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை. வழமையான வாழ்க்கையை நடத்துமாறு சற்று அதிக கவனத்தோடு நடந்து கொள்ளுமாறும் மட்டுமே அப்போது கேட்டுக்கொண்டார்கள். இது போன்ற கட்டளைகளின் பொருள் என்னவென்றால் துருப்புகள், டாங்கிகள், பீரங்கி வண்டிகள் ஆகியவை தெருக்களிலும், பொது சதுக்கங்களிலும் நடமாடுவதை அமெரிக்க மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் தங்களது சிவில் உரிமைகள் பறிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகள் தாக்ககூடும் என்று முன்னெச்சரிக்கை செய்திருப்பதன் பின்னால் உள்ள உண்மையான அடிப்படைக் காரணம் அரசியல் நோக்கம் கொண்டது. நிர்வாகத்தின் போர் கொள்கைகள் தொடர்பாக அரசியல் மற்றும் ஊடக நிர்வாகங்கள் அனைத்தும் இனிமேல் எந்த விதமான சந்தேகங்களையும், கேள்விகளையும் கிளறப்பக்கூடாது. அப்படி செய்தால் பயங்கரவாதத்திற்கு உதவுவதாகவும், தூண்டுதலாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கும் வகையில் தான் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளும் பிரதான பத்திரிகை மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களும் இந்த கட்டளைக்கு அடிபணிந்து அப்படியே செய்ல்பட்டு வருகின்றன.

இரண்டாவது முக்கியமான காரணம், பொதுமக்களது போர் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான சாக்குபோக்கை உருவாக்குவதாகும். இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்ற நேரம் உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் ஒரு கோடி முதல், ஒன்றரை கோடி மக்கள் (10 to 15 million) தெருக்களில் அணிவகுத்து வந்து போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பேரணி நடத்துகின்ற இந்த நேரத்தில் அமெரிக்கா மிக பயங்கரமான தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்திருப்பது தற்செயலாக நடந்துவிட்ட ஒன்றல்ல. ஏற்கனவே அமெரிக்காவில் இத்தகைய பேரணிகளை நடத்துவதற்கான முயற்சிக்கு எதிராக கடுமையான, வரலாறு காணாத ஒடுக்குமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன. நியூயோர்க் நகர போலீஸ்துறையினர் மத்திய அரசின் நீதிபதிகள் உதவியோடு பேரணி நடத்துவதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை மறுத்து வருகிறார்கள்.

2001ல் அமெரிக்க தேசபக்தி சட்டம் (2001 USA PATRIOT Act) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் அரசாங்கம் அதிகாரங்களை பெருமளவில் அதிகரிப்பதற்கு வகைசெய்யும் சட்டத்தை நீதித்துறை தயாரித்து வருவதாக கூறப்டுகின்ற நேரத்தில் கடைசியாக இந்த மக்களை உஷார்படுத்தும் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா குடிமக்கள் எவரையும் மத்திய அரசாங்கம் நாட்டிற்கு எதிராக போர் புரியும் எதிரி என்று பிரகடனம் செய்வதற்கு இச்சட்டம் வகை செய்கிறது. பயங்கரவாதி என்று கருதும் தனிநபர் அல்லது ஒரு குழுவை ஆதரிக்கும் அமெரிக்க மக்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் அல்லது அவர்களது குடியுரிமையை பறிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இப்படி கைது செய்யப்படுகின்ற நபர்கள் என்ன ஆனார்கள்? அவர்களது கதி என்னவென்று தகவல்களை வெளியிடுவது குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நீதித்துறை தயாரித்து வரும் கடுமையான ஒடுக்குமுறைச் சட்டம் குறித்து தகவல்கள் அம்பலத்திற்கு வந்ததும் சிவில் உரிமை குழுக்கள் மிகுந்த ஆவேசம் கொண்டன. இது சம்மந்தமாக கருத்து வேறுபாடுகளை மறைக்கின்ற வகையில் ''புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்'' வந்திருக்கிறது.

இறுதியாக அமெரிக்கா மீது உடனடியாக தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற எச்சரிக்கை பொது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்துவதுடன், அரசியல்ரீதியாக குழப்பத்திலும் ஆழ்த்துகையில், இச்சந்தர்ப்பத்தை புஷ் நிர்வாகம் தனது யுத்தத் திட்டத்தை நிறைவேற்ற வசதியாக பயன்படுத்துகின்றது.

இப்படியான முறைகள் புஷ் நிர்வாகத்தின் முக்கிய சமூக மற்றும் அரசியல் தன்மைகளை பிரதிபலிக்கின்றது. இது தனது கொள்கைகளிலும், வெளித்தோற்றத்திலும், அதனை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களிலும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கிரிமினல் முறைகளால் பொருளாதாரத்தை கொள்ளையடித்து தம்மை செல்வந்தராக்கிக் கொண்ட மிகவும் பிற்போக்கானதும், கொள்கைக்காரத் தனமானதுமான ஆளும்தட்டினரது பிரிவை உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்கா மீது உடனடி தாக்குதல் நடைபெறக்கூடும் என்று கூறப்படுவதில் மிகுந்த சந்தேகம் எழுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. இந்த அரசாங்கத்தின் வழமையான நடவடிக்கைகள் பொய் சொல்வது, ஆத்திரம் மூட்டுவது போன்றவையாகும். இதைதான் 2000ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்றுவதற்கு புஷ் பயன்படுத்தினார். வாக்குகள் எண்ணப்படுவதை தடுத்து நிறுத்த, உடலியல் ரீதியான மிரட்டல்களை பயன்படுத்தினார். தனது அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக வலதுசாரி உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை தலையீட்டை நம்பி செயல்பட்டார்.

இந்த அரசாங்கம் மக்களது ஜனநாயக உரிமைகளை துச்சமாக மதிப்பதுடன், பெரும்பான்மை அமெரிக்க மக்களது உணர்வுகளையும் பொருட்படுத்தவில்லை. அது தயாரிக்கும் கிரிமினல் போர் முயற்சிக்கும் பரந்த மக்கள் ஆதரவுக்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது என்பது அமெரிக்க நிர்வாகத்திற்கு நன்கு தெரிகிறது.

புஷ், வெளியுறவு அமைச்சர் கொலின் பெளல் மற்றும் இதர அரசுதரப்பினர் மீண்டும் மீண்டும் தங்களது உரையில் அமெரிக்காவிற்கு ஈராக்கினால் படுபயங்கரமான ஆபத்து வரப்போகிறது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருவதால், பெரும்பாலான அமெரிக்க மக்களின் போருக்கு எதிரான உணர்வையோ அல்லது நிர்வாகம் போருக்காக கூறுகின்ற சமாதானங்களை சந்தேகிக்கும் போக்கையோ எந்த வகையிலும் மாற்றிக்கொள்ள முடியவில்லை. படையெடுத்துச் சென்று ஈராக் மக்களை கொடுங்கோன்மையிலிருந்து ''விடுதலை செய்து" -அல்லது மனித உரிமைகள் மீறப்படுவதற்கு முற்றுப் புள்ளிவைத்து ஈராக் மக்களை காப்பாற்றும் என்ற அமெரிக்காவின் கருத்தும் கதைக்கு உதவாதது.

அமெரிக்காவின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து நிலவுவதால் ஈராக் மீது படையெடுத்தால்தான் அந்த ஆபத்தை தடுத்துநிறுத்த முடியும் என்ற அச்சத்திற்கு அழைப்புவிடுவது ஒன்றுதான் மிச்சமாக உள்ளது. இந்த சாட்டானது பொய்களும் மற்றும் புரட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா பாதுகாப்பு சபையில் பெளல் உரையாற்றும்போது 2001 செப்டம்பர் 11 திகதி நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பான அல் கொய்தாவிற்கும் சதாம் ஹூசேனின் ஆட்சிக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக அடுக்காடுக்காக குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே போனார். கொலின் பெளல் உரையாற்றி ஒரு வாரத்திற்குள் இந்தக் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை உண்மைக்கு மாறானவை என்று நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

அல் கொய்தாவிற்கும், ஈராக் பாத் ஆட்சிக்கும் இடையே பிரதான தொடர்பு அபு முசாப் சர்காவி (Abu Musab Zarqawi) எனவும், இந்த அல் கொய்தா இயக்கத்தின் கூட்டாளி ஈராக் தலைநகரான பாக்தாத்தில் பாதுகாப்பாக தங்கியிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் அமெரிக்கா செனட் சபையின் ஆயுத சேவை குழுவின் (Senate Armed Service Committee) முன் சாட்சியம் அளித்த CIA இயக்குநர் ஜோர்ஜ் ரெனட் (George Tenet) சர்காவி மற்றும் அவரது அமைப்பு அல்கொய்தாவிலிருந்து ''சுயாதீனமாக'' செயல்பட்டு வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், அவரது சாட்சியத்தை தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் சர்காவி எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளன.

செவ்வாய் கிழமையன்று பெளல் மூச்சுவிடாது ஒசாமா பின் லேடன் உரை அடங்கியதாக கூறப்படும் ஒலிப்பதிவுநாடா இருப்பதாக அறிவித்தார். அந்த ஒலிப்பதிவுநாடாவில் பின் லேடன் எப்படி ஈராக்கோடு இணைந்துள்ளார்'' என்பதை நிரூபிப்பதாக பெளல் குறிப்பிட்டார். ''பயங்கரவாத அரசுகள் மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்களை தயாரித்து வரும் இந்த நாடுகளுக்கு இடையே நிலவுகின்ற தொடர்பை அலட்சியப்படுத்தவோ, புறக்கணித்துவிடவோ முடியாது'' என்று பெளல் குறிப்பிட்டார்.

''தொடர்பு'' என்ற ஆங்கில வார்த்தையை மிக பொதுமையாக மொழி பெயர்ப்பது என்றால் ''அப்பட்டமான கற்பனை'' என்று மொழி பெயர்க்கலாம். இது போருக்கான சாக்கு போக்காக இது பயன்படுத்தப்படுகின்றது. ஒலிப்பதிவுநாடாவில் என்ன இடம் பெற்றிருக்கிறது என்பது பற்றி பெளல் பொய் சொல்லியிருக்கிறார். அதில் சதாம் ஹூசேனையும் அவரது ஆதரவாளர்களையும் ''இறைநம்பிக்கை இல்லாதவர்கள்'' என்று கண்டித்திருக்கிறார். ''சோசலிஸ்ட்டுகளும் (ஈராக்கில் ஆளும் அரபு பாத் சோசலிஸ்ட் கட்சியை) மற்றும் ஆட்சியாளர்களுமான சோசலிஸ்ட்டுகளும் இறைநம்பிக்கையில்லாதவர்களும் அவர்கள் பக்தாத்திலிருந்தாலும் அல்லது ஏடனிலிருந்தாலும் நீண்டகாலத்திற்கு முன்னரே தங்களது சட்டப்பூர்வமான அந்தஸ்தை இழந்து விட்டார்கள்'' என்ற வாசகம் அந்த ஒலிப்பதிவுநாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த ஒலிப்பதிவுநாடா உண்மையானது என்றால், மற்றும் அது ஏதாவது ஓர் உண்மையை எடுத்துக்காட்டுகிறது என்றால், அது சதாம் ஹூசேயின் மீது பின் லேடன் கொண்டிருக்கின்ற வெறுப்பை காட்டுவதுடன், ஈராக்கிற்கு எதிரான போரை தனது சொந்த பிற்போக்கு இயக்கத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வாஷிங்டன் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்தும் முயற்சிக்கு தான் மட்டுமே எதிரி என்று காட்டிக்கொள்வதாகும். பின் லேடன் ஈராக் மக்களோடு ஐக்கியம் கொண்டிருப்பதாக கூறுவது பாக்தாத் அரசுடனான ''தொடர்புக்கான'' அத்தாட்சி என்பதிலும் பார்க்க, ஈராக் மக்களின் ''விடுதலையாளன்'' என காட்டிக்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதியான புஷ், சதாம் ஹூசேனது கூட்டாளி என கூறுவதற்கான அத்தாட்சி என கூறுவதே பொருத்தமானதாகும்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்காது என்று கூறிவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சியும், ஆக்கிரமித்துக் கொண்ட பகுதிகளில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ந்து இஸ்ரேல் இராணுவ அடக்குமுறைக்கான புஷ் நிர்வாகத்தின் முழுமையான ஆதரவும், இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரும் அளவிற்கு பொது மக்களிடையே கடுமையான ஆத்திர உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் அல்கொய்தா மற்றும் அதுபோன்ற இயக்கங்கள் நடத்தும் பிற்போக்குத்தனமான பயங்கரவாத அரசியலின் பக்கம் அவர்களில் பலர் திரும்பக்கூடும்.

சென்ற வாரம் ஐ.நா பாதுகாப்பு சபையில் கொலின் பெளல் உரையாற்றும் போது நாடக மேடை வித்தை (Stage effects) ஒன்றை காட்டியதை பிரயோசமானது என கூறப்பட்டது. ஒரு சிறிய ஊசிமருந்து குடுவையை பெளல் கையில் எடுத்துக்கொண்டு இந்த சிறிய குடுவைக்குள் இரண்டு தபால் ஊழியர் சாவிற்கும், நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்கும், அமெரிக்க ''கப்பிட்டால்'' கட்டிடப் பகுதியிலிருந்தும் வாஷிங்டனிலுள்ள இதர அலுவலக கட்டிடங்களிலிருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கு காரணமாகயிருந்த அந்திராக்ஸ் என்கின்ற இரசாயனப்பொருள் இந்த சிறிய குடுவைக்குள் அடங்கியிருக்கலாம் என சுட்டிக்காட்டினார்.

இந்த நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. இப்போது இரண்டு மூத்த செனட் சபை ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும் எதிராக தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட அந்திராக்ஸ் ஈராக் அல்லது அல்கொய்தாவிடமிருந்து வரவில்லை, அமெரிக்காவின் இராணுவ கிடங்குகளிலிருந்து தான் வந்தது என்பது அம்பலமாகியிருக்கிறது. இதில் பிரதானமாக சந்தேகப்படுகிற நபர்கள் அமெரிக்க உயிரியில் ஆயுதங்கள் தயாரிப்பு திட்டத்தோடு தொடர்பு உள்ளவர்கள். இந்த தாக்குதலை நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகளைப் போன்று தோற்றமளிப்பதற்காக அதற்கேற்ற வாசகங்களை வடிவமைத்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த உதாரணத்தை பெளல் பயன்படுத்தியிருப்பது போருக்கான அமெரிக்க தரப்பு எவ்வளவு மோசடியான அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதை வலியுறுத்துகிறது.

2001 செப்டம்பர் 11 திகதிக்குப் பின்னர் நடைபெற்ற ஒரே மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல் அமெரிக்க மண்ணிலேயே பயன்படுத்தப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தான். இவை அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு அமைப்பிற்குள்ளே இருந்துதான் உருவாகி உள்ளது. இந்த தாக்குதல் நடத்தியதாக எவரையும் இதுவரை கைது செய்யவில்லை. இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை பிடிப்பதற்கு எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெளனம் சாதிக்கின்றனர். இந்த பயங்கரவாத நடவடிக்கைகான அரசாங்கத்தின் பங்கு, ஒரு சதியை உருவாக்கி அதை மூடிமறைப்பதற்கு முயலுகின்றார்கள் என்பது தான்.

இதில் இன்னொன்றையும் கருதிப்பார்க்க வேண்டும் 2001 செப்டம்பர் 11ம் திகதி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று 17 மாதங்களுக்குப் பின்னரும் அது பற்றி தீவிரமான புலன் விசாரணையை அமெரிக்க அரசாங்கம் எப்போதுமே நடத்தவில்லை. அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை சரியாக அமெரிக்க மக்களுக்கு அரசாங்கம் விளக்கம் தரவில்லை. பின் லேடனையும் அவரது கூட்டாளிகளையும் அமெரிக்கா மிகப்பெரும் அளவிற்கு கண்காணித்து வந்தது. அப்படியிருந்தும் அந்தத் தாக்குதல் எப்படி நடந்தது? என்பதையும் அரசாங்கம் விளக்கவில்லை. இப்படி அரசாங்கம் தகவல் தர மறுப்பதற்கு காரணம் தனது குறைபாடுகளை மறைக்கவும், உடந்தையாக இருந்திருந்தால் அதை மூடி மறைக்கவும்தான் என கருதப்படுகின்றது. இப்போது அமெரிக்காவின் ஒரே நோக்கம் அமெரிக்க மக்களது பாதுகாப்பு மட்டும்தான் என கூறுவது நகைப்பிற்கு இடமளிப்பதாக உள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையின்கீழ் பயங்கரவாத நடவடிக்கை ஏதாவது நடைபெறுமானால், அதற்கு புஷ் நிர்வாகமும், அல்லது அரசின் புலனாய்வு அல்லது இராணுவ அமைப்பே முக்கிய சந்தேக நபர்களாக இருப்பர். போரை ஆரம்பிப்பதில் தீவிரமாக புஷ் நிர்வாகம் இருக்கையில், நீண்டகாலத்திற்கு முன்னரே திட்டமிட்ட ஈராக் மீதான போருக்காக இதுவரை அவர்களுக்கு இல்லாதிருக்கும் ஒரு நம்பகூடிய யுத்தத்திற்கான காரணத்தை வழங்குவதற்கு, அமெரிக்க மக்கள் மீது ஒரு ஆத்திரமூட்டலோ அல்லது பயங்கரவாத வன்முறையையோ அனுமதிப்பதை நடக்காதது என தவிர்த்துவிட முடியாது.

Top of page