World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

After capture of Pentagon contractors:
Wider US war threatened in Colombia

பென்டகன் ஒப்பந்தக்காரர்களின் கைதை தொடர்ந்து: கொலம்பியாவில் அமெரிக்காவின் பரவலான போர் அச்சுறுத்தல்

By Bill Vann
21 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுப்பதற்கு முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கும் நேரத்தில், கொலம்பியாவில் அமெரிக்காவில் பரவலான போரை நடத்தும் என்ற அச்சுறுத்தல் வந்திருக்கிறது. கொலம்பியாவின் புரட்சி ஆயுதப்படை (FARC) கெரில்லாக்கள் பென்டகனின் ஒரு ஒப்பந்தக்காரரை கொன்றதையும், வேறு மூவரை கடத்திச் சென்றுவிட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா நேரடி இராணுவ நடவடிக்கையில் இறங்கும் கொந்தளிப்பு அதிகரித்துவிட்டது.

இந்தச் சம்பவம் பெப்ரவரி 14ம் திகதி நடந்துள்ளது. ஒரு விமானத்தில் 4 அமெரிக்கர்களும் கொலம்பியா இராணுவ வீரர் ஒருவருடன் (கொலம்பிய இராணுவ வீரர் கொல்லப்பட்டார்) பயணம் செய்யும்போது அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. FARC கெரில்லாக்களின் கோட்டை என்று நீண்ட காலமாகக் கருதப்பட்டு வரும் கொலம்பியா நாட்டின் தெற்குப் பகுதியில் விமானம் இறங்கியது.

Cessna விமானம் இறங்க வேண்டிய சூழ்நிலை என்ன என்பதைப் பற்றியும், அந்த பயணத்தின் நோக்கம், அதில் பயணம் செய்தவர்களின் அடையாளம் உட்பட அனைத்தும் மர்மமாக உள்ளது. ஏனெனில், பென்டகனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளும் எந்த தகவலையும் தர மறுத்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவரது உடல் ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கூட அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ரிச்சர்ட் பெளச்சர் (Richard Boucher) அவரது உறவினர்களுக்கு ''மதிப்பளிப்பதற்காக'', இறந்தவர் யாரென அடையாளம்கூற மறுத்துவிட்டார்.

கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவிற்கு தெற்கில் சுமார் 250 மைல்களுக்கு அப்பால் உள்ள புளோரன்ஸ்சியா நகருக்கு அருகில் அந்த அமெரிக்க விமானம் இறங்கியது, கொல்லப்பட்ட இரண்டு பேரும், தாங்கள் பிடிக்கப்பட்டபோது எதிர்த்து போரிட்டார்கள் என்பது தெளிவாகின்றது. பொகோட்டாவிலிருந்து டிரஸ் ஹிகியூனஸ் (Tres Esquinas) என்ற தெற்குப் பகுதி நகரில் உள்ள ஒரு இராணுவத்தளத்திற்கு அந்த விமானம் சென்றது என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஜிம்மி காட்டர் (Carter) நிர்வாகத்தின் கீழ் கொலம்பியாவில், வாஷிங்டனின் இராணுவ தலையீடு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்ததிலிருந்து, முதல் தடவையாக தற்போது அதிகாரபூர்வமாக செயல்பட்ட அமெரிக்க பிரஜை ஒருவர் கொல்லப்பட்டிருகிறார். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, இஸ்ரேலுக்கும் எகிப்திற்கும் மூன்றாவதாக மிகப்பெரும் அளவிற்கு அமெரிக்காவின் இராணுவ உதவியைப் பெற்று வருகிறது.

கொக்கைன் என்கிற போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் சாக்குப்போக்கில் சுமார் 2 பில்லியன் டொலர்கள் அளவிற்கு கொலம்பியாவிற்குள் ஆயுதங்கள் குவிக்கப்பட்டன. 2001 செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்கு பின்னர் புஷ் நிர்வாகம் சர்வதேச அளவில் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்'' ஒரு பகுதியாக கொலம்பியாவில் தலையிடுவதாக பிரகடனப்படுத்திவிட்டது.

நூறு ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலிகொண்ட கடந்த 40 ஆண்டுகளாக கொலம்பியாவில் நடைபெற்று வரும் கெரில்லா புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தற்போது அமெரிக்கா வெளிப்படையாகவே ஆயுதங்களையும் மற்றும் கொலம்பியா இராணுவத்திற்கு உதவுவதற்கான இராணுவத்தினரை அனுப்பி வருகிறது. சென்ற மாதம் புதிய இராணுவ உதவித்திட்டம் ஒன்றை அமெரிக்கா அறிவித்தது. அத்திட்டப்படி, போரினால் சிதைந்து கிடக்கும் அராகுவா(Arauca) மாகாணத்திற்கு 70 சிறப்பு அமெரிக்கப் படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். அந்த மாகாணத்திலிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாண ஒக்ஸிடென்டல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Occidental Petroleum Corp) இற்கு எண்ணெய் கொண்டு செல்லும் 500 மைல் குழாயைப் பாதுகாப்பதில் கொலம்பியா இராணுவத்திற்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உதவுகின்றனர்.

அந்த விமானத்திலிருந்த 4 அமெரிக்கர்களும் சில அரசு வட்டாரங்கள் சொல்வதைப் போல் போதைப் பொருள்கள் ஒழிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல மாறாக FARC கெரில்லாக்கள் நடமாட்டம் தொடர்பாக எலெக்ட்ரோனிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தவர்களாவர். வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ரொபேர்ட் நொவாக், பொகோட்டாவிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தந்திருக்கும் தகவலில் சிவிலியன் ஒப்பந்தக்காரர்கள், கலிபோர்னியா, சன்னிவேலில் உள்ள கலிபோர்னியா மைக்ரோவேவ் (California Microwave Inc) கம்பெனியிலிருந்து வந்தவர்கள் என்று கூறி இருக்கிறார்.

தற்போது அந்த நிறுவனம், நார்த்ராப் கிரம்மன் (Northrop Grumman) என்கிற மிகப்பெரும் ஆயுத தயாரிப்பு நிறுவனத்தின் துணை அமைப்பாக உள்ளது. அந்த நிறுவனம் விமானத்தில் பறந்து, வேவு பார்ப்பது, கண்காணிப்புச் செய்வதற்கான ஆயுதங்களைத் தயாரித்து விற்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. அந்த நிறுவன தகவல்தளம் தந்துள்ள விவரங்களின்படி, ''போர் விமானங்கள் வெற்றிகரமாக இலக்குகளைத் தாக்குவதற்கு வழி செய்து தரும் வகையில், முன்கூட்டியே உளவுபார்த்து பட்டியலிட்டுத் தருவதற்கு உதவுவதுதான் இந்த கம்பியூட்டர் உதவியிலான திட்டம்'' என விளக்கப்பட்டிருக்கிறது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், FARC கொல்லாக்களின் நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் அளவிற்கு தகவல் திரட்டித் தருவதற்கு கொலம்பியாவிற்கு வந்த விமானமாக அது இருக்கக்கூடும்.

அண்மை ஆண்டுகளில் வாஷிங்டன், இதுபோன்ற சிவிலியன் ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நடைமுறையிலுள்ள சட்டத்தில் கண்டுள்ள வரையறைக்கு மேல், இராணுவம் தொடர்பான நபர்களை அதிகரிக்க வேண்டி இருந்தால், இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்ப பயன்படுத்தப்படுவதுடன், அந்த ஒப்பந்தக்காரர்களை இராணுவ வீரர்கள் ஈடுபடக்கூடாது என்று திட்டவட்டமாகத் தடை விதிக்கப்பட்ட விஷேட பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

தற்போது கொலம்பியாவில் 500 அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் பணியாற்றி வருகின்றனர் மற்றும் குறைந்தபட்சம் 300 சிவிலியன்கள் உள்ளனர். இவர்களில் பலர் முன்னாள் இராணுவத்தினர். இதுதவிர 86 அமெரிக்க ஹெலிகாப்டர்கள், கொலம்பியாவின் எதிர் புரட்சி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்று அமெரிக்கர்களையும் கைப்பற்றுவதற்காக கொலம்பியா அரசு 4000 துருப்புகளை அனுப்பியுள்ளது. FBI ஏஜென்டுகளும் இராணுவத்தினரும் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதற்கிடையில், கொலம்பியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தூதுக் குழு மூன்று பென்டகன் ஒப்பந்தக்காரர்களை கடத்திச் சென்றமை அமெரிக்க இராணுவம் ''`எதிர்த் தாக்குதல்'' நடத்தும் நிலைக்கு ஆத்திரமூட்டிவிடும் என அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது.

வெர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த, குடியரசுக் கட்சியின் கீழ் சபை உறுப்பினரும், அரசாங்க சீர்திருத்த குழுத்தலைவருமான டொம் டேவிஸ் (Rep. Tom Davis), கொலம்பியா நிருபர்களுக்குப் வழங்கிய பேட்டியில் ''FARC இன் இந்த ஆபத்தான நடவடிக்கைக்கு மிக வலுவான எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. நாம் பேசிக் கொண்டிருக்கும்போது என்ன நடக்கிறது என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த கெரில்லாக்கள் மிகப்பெரிய பயங்கரமான தவறைச் செய்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்தின் மூலம் FARC சட்டபூர்வமான ஓர் அமைப்பல்ல. மாறாக ''ஒரு சட்டத்திற்குமாறான கொள்ளைக் கூட்டம்'' ஆகும். இந்த நடவடிக்கைக்கு எதிராக ''மிகுந்த உறுதியுடன்'' அரசாங்கம் எதிர்நடவடிக்கையில் ஈடுபடும்.``

''உலகில் பல பகுதிகளில் நாம் சம்மந்தப்பட்டிருக்கிறோம். ஆனால் காங்கிரசும் நிர்வாகமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்'' எனவும், இது தொடர்பான விபரங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் FARC மிகக் கடுமையாக தவறை செய்துவிட்டதாகவும் அதற்காக அந்த அமைப்பு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும்'' என்றும் வெர்ஜினியா மாநில ஜனநாயகக் கட்சி கீழ் சபை உறுப்பினர் ஜேம்ஸ் மோரான் (Rep. James Moran) தெரிவித்தார்.

கொல்லப்பட்ட அமெரிக்க ஒப்பந்தக்காரர் நமது இராணுவத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினார். தற்போது கொலம்பியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்று டேவிஸ் வர்ணித்தார்.

கொலம்பியாவில் வலதுசாரி ஜனாதிபதி அல்வாரோ உறிபி வெலேஸ் (Alvaro Uribe Velez) இந்த சம்பவத்தை புதிய பயங்கரவாத எதிர் நடவடிக்கை சட்டத்தை உருவாக்க பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு அவரது ஆட்சி பதவிக்கு வந்தபோது ஏற்கனவே சர்வாதிகாரி அளவிற்கு அதிகாரங்களை பெற்றிருக்கும் அவர் இன்னும் அதனை அதிகரித்துக்கொள்ள பயன்படுத்தலாம்.

அவர் உத்தேசித்துள்ள சட்டங்கள் புதிதாக ''பயங்கரவாத'' குற்றங்களை உருவாக்க வகை செய்கிறது. எடுத்துக்காட்டாக, பயங்கரவாத இயக்கம் என்று அரசாங்கம் கருதும் அமைப்பில் உறுப்பினராக இருந்தால், 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். யாராவது ஒருவர் தலைவராகவோ, ''பயங்கரவாதக் குழுவின் முக்கியமானவராகவோ'' இருந்தால், அவருக்கு 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், ''பொதுவாக பயங்கரவாதத்தை வளர்ப்பவர்கள்'' யாராக இருந்தாலும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். பயங்கரவாத செயல்கள் என கூறப்படுபவற்றில் அவர்கள் ஈடுபட்டிராவிட்டாலும் கூட இந்தத் தண்டனை உண்டு.

மற்றொரு நடவடிக்கை, கொலம்பியா ஊடகங்கள் மீது இருப்புக்கரம் போன்ற முன் தணிக்கை முறைகளைச் செயல்படுத்த வகை செய்கிறது. உத்தேசச் சட்டத்தின்படி, ஏதாவதொரு செய்திப் பத்திரிகை அல்லது ஒளி, ஒலி பரப்பு சாதனங்கள், ''இராணுவத்தினரும், போலீஸாரும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடையூறு செய்யும் வகையில், பொதுப்படையினரின் உயிருக்கு ஆபத்தை உருவாக்கினால், அல்லது பொதுஅமைதி, பொது தார்மீகத் தூய்மை ஆகியவற்றை பாதிக்கும் வகையில், அல்லது எதிரியின் நிலை அல்லது பெயரை மேம்படுத்துகிற வகையில் அல்லது பயங்கரவாதிகளது நடவடிக்கைகள் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் அத்தகைய ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எட்டு முதல் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்'' அத்துடன் சம்மந்தப்பட்ட ஊடகம் தவறு செய்ததாக கருதப்பட்டு மூடப்படும்.

இதற்கிடையில், கொலம்பியா உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. அராகுவா மாகாணத்தில், FARC கெரில்லாக்களுக்கும், கொலம்பியா இராணுவ ஆதரவோடு இயங்கும் வலதுசாரி துணை இராணுவ பிரிவுகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகளில் குறைந்தபட்சம் 70 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அராகுவாவிற்கும் கசனரேயிற்கும் இடையிலான எல்லை அருகில் FARC கெரில்லாக்கள், துணை இராணுவத்தினரைத் தாக்கியபோது சென்ற ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் சண்டை வெடித்தது. சென்ற வாரம், புடமாயோ மாகாணத்தில் 46 துணை இராணுவத்தினரைக் கொன்றதாக FARC தெரிவித்தது.

Top of page