World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : நெதர்லாந்து

The Netherlands: Anti-immigrant List Pim Fortyn loses heavily in parliamentary elections

நெதர்லாந்து: குடியேற்ற விரோத லைஷ்ட் பிம் ஃபோட்ரைன் கட்சி பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வியடைந்தது

By Wolfgang Weber
4 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

நெதர்லாந்தில் ஜனவரி 22-ம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சியும் (Christian Democratic Appeal -CDA), சமூக ஜனநாயக தொழிற் கட்சியும் (Social Democratic Labour Party -PVDA) மிக வலிமையான கட்சிகளாகின. லைஷ்ட் பிம் ஃபோட்ரைன் (List Pim Fortyn -LPM) கட்சி, அதன் நிறுவனரும் தலைவருமான பிம் ஃபோட்ரைன் படுகொலை செய்யப்பட்ட சிறிது காலத்திற்குள் எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் கடந்த முறை அமோக வெற்றி பெற்ற அக்கட்சியானது இம்முறை தனது மூன்றில் இரண்டு பகுதி வாக்குகளை இழந்தது. 150 ஆசனங்கள் கொண்ட டச்சு பாராளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் 26 இருந்து 8 இடங்களாக வீழ்ச்சியடைந்தது.

லைஷ்ட் பிம் ஃபோட்ரைன் (LPF) இன் தோல்வியானது சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் வெற்றியாக பிரதிபலித்துள்ளது. 27.3% வாக்குகள் பெற்று 42 இடங்களை தக்கவைத்துக்கொண்ட சமூக ஜனநாயக கட்சி சென்ற வருட தேர்தலில் நம்பமுடியாத தோல்வியடைந்ததிலிருந்து ஓரளவுக்கு மீண்டுள்ளது. அந்த தேர்தலில் 45 இடங்களில் கிட்டத்தட்ட பாதி இடங்களை இழந்திருந்தது. சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் அந்த தோல்விக்கு காரணம் 12 ஆண்டு கால அதனது ஆட்சி முறையின் மீது ஏற்பட்ட பரவலான அதிருப்தியாகும்.

28.6 சதவிகித வாக்குகள் பெற்று பதவியேற்றுள்ள பிரதமர் ஜன் பேற்றர் பால்ஹனன்ட (Jan Peter Balkenande) தலைமையிலான கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சி கடந்த தேர்தலைவிட சிறிய அளவில் தான் முன்னேறியுள்ளது. அதாவது 43 இருந்து 44 இடங்களாக உயர்ந்துள்ளது. நவதாராளவாத "சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக்கள் கட்சி" (People's Party for Liberty and Democracy -VVD) சிறிய அளவில் தன் வாக்குகளை அதிகரித்துள்ளது. 15.9 இருந்து 17.9% வாக்குகள் பெற்று முன்பு வைத்திருந்த 24 ஆசனங்களுடன் சேர்த்து மேலும் 4-இடங்களை அதிகம் பெற்றுள்ளது.

தேர்தலின் விளைவாக பால்ஹனன்ட இன் கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சி அடுத்த அரசை அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. அது, சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக்கள் கட்சி (VVD), லிஸ்ட் பின் ஃபோரூன் (LPF) கட்சிகளுடன் தனது கூட்டணியை புனரமைத்துக்கொள்ளுமா அல்லது சமூக ஜனநாயக தொழிற் கட்சி (PVDA) உடன் ஒரு பாரிய கூட்டரசுக்கு செல்லுமா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஜனவரி 27 அன்று பால்ஹனன்ட, சமூக ஜனநாயக தொழிற் கட்சி உடன் கூட்டணி அரசை அமைக்கும் பேச்சுக்களை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தார்.

இந்த தேர்தலில் ஜன் பேற்றர் பால்ஹனன்ட உம் மற்றும் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக்கள் கட்சியின் தலைவர் ஹெரிற் ஷால்ம் (Gerrit Zalm) உம் தங்கள் இரு கட்சிகளும் ஆளும் கூட்டணி அரசாக வெளிப்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் இத்திட்டம் தோல்வியடைந்தது.

சென்ற அக்டோபரில் ஆட்சியமைத்து 100 நாட்களுக்குள் லிஸ்ட் பின் ஃபோரூன் இற்குள் எழுந்த பிரச்சனைகளை ஜன் பேற்றர் பால்ஹனன்ட உம் ஹெரிற் ஷால்ம் உம் பயன்படுத்திக் கொண்டு கூட்டணியை உடைக்க முயற்சித்தனர். அவ்வரசு வலதுசாரி திருப்பத்தை எடுத்ததுடன் சமூக நல திட்டங்களை நிறுத்த அழைப்பு விடுத்தும் குடியேறுபவர்களுக்கும், அகதிகளுக்கும் எதிராக கடுமையான சட்டம்- ஒழுங்கு கொள்கையையும் கையாண்டது.

ஆனால் சில வாரங்களுக்குள்ளாகவே லிஸ்ட் பின் ஃபோரூன் கட்சிக்குள்ளேயே அக்கட்சியின் அரசியல் போக்கை பற்றியும் அரசு உயர்மட்ட பதவிகளில் யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதைப்பற்றியும் கடுமையான வாக்குவாதங்கள் வெடித்தது. இது வெகு விரைவில் கட்சிக்கு கிடைத்த ஆதரவை வலுவிழக்கச் செய்ததால் லிஸ்ட் பின் ஃபோரூன் கட்சிக்கு உள்ளேயே பிளவுகளுக்கு வழிவகுத்தது. ஃபோட்ரைன் இன் இயக்கத்தை வலதுசாரி கொள்கையை அறிமுகப்படுத்துவதற்காக உபயோகித்துக் கொண்டு பால்ஹனன்ட உம் ஹெரிற் ஷால்ம் உம் லைஷ்ட் பிம் ஃபோட்ரைன் கட்சிக்கு குழிபறித்துவிட்டு கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சி, சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக்கள் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைக்க நம்பிக்கை கொண்டனர்.

தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது இதற்கு முன்பு வாக்குப்பதிவுக்கு சென்று வாக்களிக்காத மக்களின் வாக்குகளையும், பால்ஹனன்ட இன் கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சியினதும் மற்றும் ஷால்ம் இன் சுதந்திர மற்றும் ஜனநாயக மக்கள் கட்சியினதும் தலைமையில் வலதுசாரி கூட்டணி ஆட்சி அமைவதை தடுப்பதற்காக அதற்கு எதிராக வாக்களித்தவர்களின் வாக்குகளையும் சமூக ஜனநாயக தொழிற் கட்சி தக்க வைத்துக்கொண்டது.

மேலோட்டமாகப் பார்த்தால், குறிப்பாக சமூக ஜனநாயக தொழிற் கட்சிக்கு கிடைத்துள்ள அதிக வாக்குகள் நெதர்லாந்தில் அரசியல் ''இயல்புக்கு'' திரும்பியுள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்லலாம். ஃபோட்ரைன் இன் வலதுசாரி தேர்தல் பிரச்சாரம் கட்டவிழ்த்த அரசியல் சூறாவளிக்குப் பின்னர் அவருடைய படுகொலைக்கும், தேர்தலுக்கு பிந்தைய வெற்றிக்கும் எட்டு மாதங்களுக்குப் பின்னர் முன்னைய அரசு கூட்டணியும், ஆட்சி முறையும் மீண்டும் திரும்பிள்ளது போல் தோன்றினாலும் அத்தோற்றம் வெறும் போலியே.

ஆழமான பொருளாதார பிரச்சனைகள் கடுமையான சமூக பதட்டங்களின் பின்னணியில் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பு முறையுமே வலதுசாரி பக்கம் நகர்ந்துவிட்டது. சமூக ஜனநாயக தொழிற் கட்சியோ அல்லது மற்றைய இடதுசாரி முதலாளித்துவ அரசியல் போக்கு கொண்டவர்களான GroenLinks , D'66 கட்சிகளோ சமூக இருப்புகளுக்கு மதிப்பளிக்கும் (consensus) பாரம்பரிய அரசியலுக்கு திரும்ப விரும்பவில்லை.

தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகள் குறைந்துவரும் வேளையில் (கடந்த ஆண்டைவிட 2% குறைவு) வேலையில்லா திண்டாட்டமும், வீடுகளில்லா பிரச்சனையும் மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகின்றது. உழைக்கும் வயதில் உள்ள 5,00,000 மக்களுக்கும் அதிகமாக ஏறத்தாழ 7.5% ஆனோர் வேலையற்றவர்களாக பதிவுசெய்துள்ளார்கள். இத்தோடு இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் நீரில் மூழ்காமல் தலையை வைத்துக்கொண்டுள்ளது போல் ''சிறு வேலைகள்'' செய்தும் பகுதி நேர வேலைகள் செய்தும் உயிர் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒரு வாரத்துக்கு 15 மணி நேரங்களே வேலை செய்தாலும், அதிகாரபூர்வமான புள்ளி விவரத்தில் அவர்கள் ''வேலையில்லாதோராக'' அறிவிக்கப்படுவதில்லை. அத்துடன் அவர்களும் அவர்கள் குடும்பங்களும் கடுமையான ஏழ்மையில் மூழ்கிக் கொண்டுள்ளனர்.

ஜனவரி மாத மத்தியில் நிதி அமைச்சர் ஹன்ஸ் ஹோகர்fபர்ஸ்ட் (Hans Hoogervarst -VVD) 2002 இற்கான வருமான வரி வசூல் 2.5 பில்லியன் யூரோ என்றும் இது எதிர்பார்த்ததைவிட குறைவு என்றும் அறிவித்தார். புதிய வரவுசெலவுத்திட்ட வெட்டுகளின் விளைவாக வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் இன்னும் அதிகரிக்கும்.

தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் தலைவர் வெளட்டர் bபொஸ் (Wouter Bos) மற்ற கட்சி தலைவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு fபோட்ரைன் இனைப்போல் தோற்றமளிக்க அதாவது அவருடைய பேச்சு, மொழி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களில் அவருடைய தோற்றங்கள் ஆகியவற்றிற்காக போட்டியிட்டார். அது fபோட்ரைன் ஐ போலவே 39 வயதான வெளட்டர் bபொஸ் மற்றைய முன்னணி அரசியல்வாதிகளுடன் ஒன்றாக சேர்ந்து ''பொதுப்பணியிலும் அதிகாரத்துவத்தை எதிர்த்து முழக்கமிட்டும், அரசு பணியாளர்களின் ''உபயோகமில்லா செயல்பாடுகள்'' மற்றும் வீணாக பொழுது போக்குவதாக குற்றம்சாட்டி பணியிடங்களையும், ஊதியத்தையும் குறைப்பதை நியாயப்படுத்தியுள்ளார்கள்.

வெளியேறும் வலதுசாரி கூட்டணி ஆட்சி செய்த, வேலைசெய்ய முடியாதோருக்கான பணிக்கால நிதியுதவியை (Disability Working Allowance -WAO) தற்போதைய அளவிலிருந்து 40 சதவிகிதமாய் குறைப்பதை சமூக ஜனநாயக தொழிற் கட்சி அப்படியே தொடரவுள்ளது. அரசு உதவி பெறும் மருத்துவ காப்புறுதி திட்டத்தின் தனியார்மயமாக்கலும் மற்றும் அதன் சேவைகளை கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் வலதுசாரி கட்சிகளுடன் சமூக ஜனநாயக தொழிற் கட்சிக்கு உள்ள முரண்பாடு ''சீர்திருத்தங்கள்'' அறிமுகப்படுத்தப்படும் வேகம் தொடர்பானதாக மட்டுமே உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மருத்துவ காப்புறுதிக்கு செலுத்தும் தொகை இரட்டிப்பு செய்யப்பட்டது.

நிதி மற்றும் சமூககொள்கைகளை பொறுத்த அளவில் சமூக ஜனநாயக தொழிற் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சி, சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக்கள் கட்சி, பசுமை (Green Links) மற்றும் இடது சுதந்திர கட்சிகளிடையே எந்த வேற்றுமைகளும் இல்லை.

வெளட்டர் bபொஸ் ஏற்கனவே விம் காக் (Wim Kok- சமூக ஜனநாயக தொழிற்கட்சி) தலைமையிலான அரசில் நிதித்துறை அமைச்சகத்தில் செயலாளராக நீண்டகாலம் பொறுப்பு வகித்தவர். செல்வந்தர்களுக்கு வரிச்சலுகைகளை அறிமுகம் செய்து, நுகர்வோர் வரியை அதிகரித்தும், பெரும்பான்மை மக்களுக்கு எரிபொருள் விலையை அதிகரித்தவரும் இவர்தான். இதன் மூலம் சமுதாயத்தின் உயர் வசதிபடைத்த தட்டினரிடம் செல்வம் பாரியளவில் மாற்றீடு செய்யப்பட்டது. ஆட்சியை விட்டு வெளியேறும் வலதுசாரி கூட்டணி அரசு இந்த செயல்முறையை துரிதப்படுத்தியது.

தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகளுக்கு எதிரான போக்கு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி காணப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறுபவர்கள் டச்சு சமூகத்தோடு ஒற்றுமைப்பட விரும்பாதவர்களுக்கு கடுமையாக கையாளும்படி கோருவதற்கு வெளட்டர் bபொஸ் ஒரு போதும் சோர்வடைவதில்லை. உதாரணமாக, டச்சு மொழியை கட்டாய பாடம் பயிலுபவர்கள் அதனை வெற்றிகரமாக முடிக்கவில்லையென்றால் சமூகநல சலுகைகள் குறைக்கப்பட வேண்டும் என என்பதும் ஆகும்.

சமூக ஜனநாயக தொழிற்கட்சி வெற்றி பெற்றால் ஆம்ஸ்டர்டாம் மாநகரத் தந்தை ஜொப் ஹோஹன் (Job Cohen) ஐ பிரதமர் பதவிக்கு கொண்டுவரலாம் என வெளட்டர் bபொஸ் மனதில் நினைத்திருந்தார்.

Wim Kok அரசில் செயலாளராக சென்ற வருடம் மே மாதம் வரை பணியாற்றியவர் கோஹன், தன் நாட்டு எல்லைகளை அகதிகளுக்கு அடைத்துவிட்டு, அகதிகளை நாட்டைவிட்டு வெளியேற்றும் பணியையும் மேற்பார்வையிட்டார். இவருடைய நடவடிக்கைகளால் தஞ்சம் கேட்பவர்களது எண்ணிக்கை 2000 மற்றும் 2002 இல் இருந்ததைவிட பாதிக்கு மேல் குறைந்துவிட்டது. அதாவது கிட்டத்தட்ட 19,000 ஆக குறைந்துவிட்டது.

ஆம்ஸ்டர்டாமில் சில பகுதிகளை ''ஆபத்தான பகுதிகள்'' என்று அழைக்கப்படவேண்டும் என்று புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜொப் கோஹன். இதன் படி இப்பகுதியில் உள்ளவர்களையும், வீடுகளையும் சோதனையிடும் வழக்கத்தை எந்த குற்றவியல் செயல்பாடு ஆதாரங்கள் இன்றியும் செய்யலாம் என்கிறது. றொட்டர்டாமில் அத்தகைய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டம் பெரிய நகரங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

இனி 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடையாள பத்திரங்களை தங்களோடு எடுத்துசெல்ல வேண்டும் என்ற தேவையை அறிமுகம் செய்வதில் சமூக ஜனநாயக தொழிற்கட்சி மற்றும் அதன் தலைமைக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. இத்தகைய சட்டம் ஹொலந்தில் நாஜிகள் ஆக்கிரமித்த காலத்தில் 14 வயது மேற்பட்டோருக்கு நடைமுறையில் இருந்ததை சமூக ஜனநாயகவாதிகள் தெரிந்திருந்தனர். நாஜிகளின் கீழ் இருந்ததுபோல் அடையாள பத்திரங்களை எடுத்துசெல்ல வேண்டிய கட்டாயம் விருப்பமற்ற குடிவாசிகளை அடையாளம் காண்பதற்காகவாகும். அக்காலத்தில் யூதர்கள், இப்போது அகதிகளே அனுமதிபத்திரங்கள் இல்லாமல் நாட்டிற்குள் வருகின்றார்கள்.

இந்த அடையாள பத்திரங்களின் சட்டத்துக்கு இணங்காதவர்களும், அப்பத்திரங்களை சமர்பிக்க தவறுபவர்களும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள். ஆட்சி பொறுப்பை விட்டு வெளியேறும் வலதுசாரி கூட்டணியினர் அனுமதிபத்திரங்கள் இல்லாமல் உள்ளே குடியேறியவர்களை தேடிக்கண்டுபிடித்து நாட்டைவிட்டு வெளியேற்ற ஒரு பிரத்தியேக இராணுவ பிரிவை செயல்படுத்தியுள்ளது. ஐரோப்பா முழுவதும் அமுலில் உள்ள இதை சமூக ஜனநாயக தொழிற் கட்சி அப்படியே தொடரவிரும்புகின்றது.

அரசியல் கொள்கைகள் குறித்து கூடியவில் ஒத்ததன்மை காணப்பட்டதால் தேர்தல் நாள் வரையிலும் முக்கால் பகுதி வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி தீர்மானிக்கவில்லை என்றால் அதில் ஆச்சரியமில்லை. வாக்குகள் எண்ணப்படும்போது எல்லா பக்கமும் மாறுதல்கள் இருந்தன. 2,30,000 வாக்காளர்கள் கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சியிலிருந்து சமூக ஜனநாயக தொழிற்கட்சிக்கு தாவிவிட்டனர். அதே அளவினர் லிஸ்ட் பின் ஃபோரூன் கட்சியிலிருந்து கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சிக்கு மாறினர். சுமார் 290,000 சுதந்திரத்திற்கும் ஜனநாயத்துற்குமான மக்கள் கட்சி வாக்காளர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பு லிஸ்ட் பின் ஃபோரூன் கட்சிக்கு மாறியவர்கள் மீண்டும் சுதந்திரத்திற்கும் ஜனநாயத்துற்குமான மக்கள் கட்சிக்கே ஆதரவு தந்தனர். ஏறத்தாழ 180,000 முன்னாள் சுதந்திரத்திற்கும் ஜனநாயத்திற்குமான மக்கள் கட்சி வாக்காளர்கள் கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சிக்கு மாறிவிட்டனர் மற்றும் அதே அளவு வாக்காளர்கள் கிறிஸ்துவ ஜனநாயக குழு கட்சியிலிருந்து சுதந்திரத்திற்கும் ஜனநாயத்திற்குமான மக்கள் கட்சிக்கு வந்தனர்.

இந்த விவரங்களை பார்த்த அநேக தேர்தல் ஆய்வுகளும், கருத்துகணிப்பு மையங்களும், வாக்காளர் போக்கு அரசியல் ஸ்திரமின்மையை காட்டுவதாகவும், எந்த ஒரு கட்சிக்கும் திடமான பிணைப்பு இல்லாததும், தீர்மானமற்றதும், நோக்குநிலையற்றதாகவும் இருந்த தன்மையை காட்டுவதாக கருதின. ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போலவே நெதர்லாந்திலும், ஆளும் தட்டிற்கும் பரந்தளவிலான மக்கள் திரளுக்கும் உள்ள இடைவெளி முன் எப்போதும் இருந்திராத அளவிற்கு அதிகமாகியுள்ளது.

இதன் படி, 1970 களில் ஸ்ராலினிச போக்காக ஆரம்பித்து பின்னர் மா சேதுங் (Mao Zedong) இனை சார்ந்த சோசலிச கட்சி (SP) ஒரு விஷேட பங்கு ஆற்றியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் எல்லாம் சோசலிச கட்சிக்கு பெரும் ஆதரவை காட்டியது. ஆனால் கட்சியானது தன் வாக்குகளை 560,000 இருந்து 608,000 ஆக மட்டும் உயர்த்திக்கொண்டதால் ஒட்டு மொத்த வாக்குகளில் 6.3% வாக்குகள் பெற்று பாராளுமன்றத்தில் தன் 9 இடங்களை தக்கவைத்துக் கொண்டது.

சோசலிச கட்சியின் பெயரில் ''சோசலிஸ்ட்'' என்ற சொல்லை கொண்டிருப்பதால் அது ஒரு இடதுசாரி ஒரு மாற்றாக அமைவது போன்ற தோற்றத்தை காட்டமுயல்கின்றது. ஆனால் சமூக பிரச்சனை மற்றும் ''சமூக மறுசீரமைப்பு'' போன்ற தெளிவற்ற கோரிக்கையை முன்வைத்தாலும், முக்கியமான கேள்விகளில் அது பொதுவான வலதுசாரி நிலைப்பாட்டிற்கு அடிபணிந்துள்ளது.

அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் குடியேறுபவர்களை தேடும் பணியிலுள்ள காவல் மற்றும் இராணுவத்திற்கு உதவும் சோசலிச கட்சியின் போக்கும், ''ஒன்றுபடவிரும்பாத வெளிநாட்டவர்கள்'' மீதான அதன் போராட்டமும் வெறுப்பூட்டக்கூடியதாக உள்ளது. லிஸ்ட் பின் ஃபோரூன், கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சி, சமூக ஜனநாயக தொழிற்கட்சிக்கு முன்பே சோசலிச கட்சி சட்டவிரோதமாய் குடியேறியவர்கள் மீது உறுதியான சட்டங்கள் பிரயோகப்படுத்த வேண்டும் என்று கோரியது. தயை, கருணை என்பன ''டச்சு சமுதாயம் வழமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களை விட அதிகமாக'' அகதிகளைத்தான் கவர்ந்து இழுக்கும் என்கிறார் அதன் பேச்சாளர்.

நியூயோர்க்கில் செப்டம்பர் 11-ல் நடந்த தாக்குதலுக்கு பிறகும் fபோட்ரைன் இன் படுகொலைக்கு பிறகும் இஸ்லாமிய விரோத உணர்வுகளை தூண்ட முனைந்தபோது இஸ்லாமிய மத குருக்கள் டச்சு கலாச்சாரத்தோடு ஒருமைப்படுவது பற்றிய வகுப்புகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் மறுத்தால் அவர்கள் தங்கள் சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கவும் நேரிடும் என்னும் ஒரு சட்டத்தை சோசலிச கட்சி முன்வைத்தது.

மிக அண்மையில் சோசலிச கட்சி பாராளுமன்ற துணை தலைவர் அலி லஷ்றக், ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹில்bபிரான்ட் நாவைன் (Hilbrand Nawijin -LPF) யிடம் எல்லாம் இஸ்லாமிய பள்ளிகளிலும் டச்சு கலாச்சாரத்தோடு ஒருமைப்படுவதைப்பற்றி திருப்திகரமாக போதிக்கிறார்களா என்று விசாரிக்கவும் அவ்வாறு இல்லையென்றால் அவைகளை மூடிவிடும் படியும் கேட்டுக்கொண்டார். உதாரணத்திற்கு அத்தகைய பள்ளிகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே வகுப்புகளை நடாத்த முடியாது. அப்படிப்பட்ட முறைகள் ''அம்ஸ்டர்டாமில் தாலிபான் ஆட்சியை'' பிரதிநிதித்துவப்படுத்தவதாக இருக்கும் என்று அலி லஷ்றக் குறிப்பிட்டார். இஸ்லாமிய பாடசாலைகள் அரசு மானியங்களை பெற்றுக்கொண்டு அதை துஸ்பிரயோகிக்கும் விதத்தில் அரசியல் கருத்துக்களை பரப்பியும் ''டச்சு ஜனநாயகத்தின் மதிப்பிற்கு'' எதிரானதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

''டச்சு ஜனநாயகத்தினையும்'', ''மதிப்புகளையும்'' எத்தனை உயர்வாய் சோசலிச கட்சி போற்றுகிறது என்பதை அக்கட்சியின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்தல்கள் நடந்து முடிந்த உடனேயே சோசலிச கட்சியின் முன்னணி வேட்பாளர் கட்சியின் தலைவர் ஜன் மறைனிஷன் (Jan Marijnissen) அரசிக்கு தன் மரியாதைகளை செலுத்தினார். மிகவும் பவ்யமான முறையில் அரசியிடம் அடுத்த அரசை அமைக்க அவர் யாரை அழைக்க வேண்டும் என்பதை குறித்து தன் தனிப்பட்ட சிபாரிசுகளை முன்வைத்தார். அவர் சிபார்சு செய்தது கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சியினதும் மற்றும் முன்னாள் வலதுசாரி கூட்டணிக் கட்சி அரசின் தலைவருமான ஜன் பேற்றர் பால்ஹனன்ட இனையும், சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் தலைவருமான வெளட்டர் bபொஸ் ஆகியோரையாகும்.

Top of page