World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India offers half-hearted criticism of US war on Iraq

ஈராக் மீதான போர் தொடர்பாக இந்தியா அரை மனதான விமர்சனத்தை வழங்குகிறது
By Wije Dias
25 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீதாக போர் தொடுப்பதற்கான வாஷிங்டனின் ஒருதலைப்பட்ச முடிவு பற்றி மிக ஓசையற்ற விமர்சனத்தை இந்திய அரசாங்கம் செய்திருக்கிறது. கடந்த வியாழன் அன்று பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி மற்றும் மூத்த தலைவர்கள் இவர்களுக்கு இடையிலான ஒரு சந்திப்பிற்குப் பின்னர், ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை "இராணுவ நடவடிக்கை நியாயப்படுத்தல் பற்றாக்குறையாய் இருக்கிறது" மற்றும் அது "தவிர்க்கப்படக்கூடியது" என்று எச்சரிக்கையுடன் அறிவிக்கப்பட்டது.

அறிக்கையானது ஐக்கிய அமெரிக்க அரசுகள் பற்றி எந்தவிதமான நேரடி குறிப்பையும் கவனமாக தவிர்த்தது மற்றும் பதிலாக ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள வேறுபாடுகள் பற்றி "ஆழ்ந்த கவலைகளை" வெளிப்படுத்தியது, அது "அதன் உறுப்பினர்களின் நிலைப்பாடுகளின் ஒருங்கிசைவை தடுத்தது", மற்றும் "ஐ.நா அமைப்பு முறையின் செல்வாக்கை சீரிய வகையில் ஆற்றல் குறைத்திருக்கிறது" என்றது. அதேநேரம், புதுதில்லியானது போருக்கான அமெரிக்க சாக்குப் போக்கான --ஈராக் "பேரழிவுகர ஆயுதங்களை" வைத்திருக்கிறது என்பது பற்றி அதன் ஏற்றுக் கொள்ளலை திரும்பக் கூறியது.

வாஜ்பாயி இன் நிலைப்பாடு எரிச்சலூட்டும் சூழ்ச்சி நடவடிக்கையைவிட அதிகமாக வேறு ஒன்றுமில்லை. ஒருபுறம், அவர் போருக்கு வெளிப்படையாக ஆதரவு தருவதை தவிர்க்க விரும்புகிறார், அது இந்தியாவில் பரவலாக -- ஒரு கொள்ளையடிக்கும் நவீன காலனித்துவப் போர் என கருதப்படுகிறது. ஏற்கனவே அங்கு போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் வளர்ந்து வருகின்றன. மற்றொரு புறம், வாஜ்பாயியும் அவரது அமைச்சர்களும் இந்தியா அமெரிக்காவுடனான அதன் நெருங்கிய பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை நீட்டிப்பதை உறுதிப்படுத்துவதற்கு முதுகு வளைந்து கொடுக்கின்றனர்.

பாக்தாதில் முதலாவது அமெரிக்க தாக்குதலுக்கு சற்றுப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி புஷ் இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். இந்து நாளிதழின்படி, "இராணுவ நடவடிக்கை சீக்கிரமே முடிந்துவிட வேண்டும்" என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார் மற்றும் ஈராக்கில் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு இந்தியாவின் விருப்பத்தை வழங்கினார். சனிக்கிழமை அன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில், இந்தியாவின் வார்த்தைகளும் நடவடிக்கைகளும் "வாய்ச்சவடால் பாதிப்புக்களை உருவாக்குவதைக் காட்டிலும் செயல்முறைவாத இலக்குகளை அடைவதற்கு முயற்சிப்பதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்" என்று அவர் அமெரிக்கப் போரை "கண்டிப்பதற்கான" எதிர்க்கட்சிகளால் எடுக்கப்பட்ட முயற்சியை அவர் தடுத்தார்.

வார இறுதியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸ், 1990-91 வளகுடாப் போரின்பொழுது செய்தவாறு, அமெரிக்க போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை வழங்காது என அறிவித்தார். ஆயினும், வாஷிங்டன் அத்தகைய உதவிக்கான சம்பிரதாய வேண்டுகோளை விடுத்திருக்காதபோது, அந்த அறிக்கையானது வெற்று உரையாக இருந்தது. உயர் தொழில்நுட்ப அமெரிக்க இராணுவ சாதனத்தை வாங்குவதைப் புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்பதையும் கூட பெர்ணாண்டஸ் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

கடந்தவார இறுதியில் ஈரானிய சிறப்புத் தூதுவர் அலி அக்பர் வெலாயத்தி இந்தியாவுக்கு வருகை தந்தபோது, இந்திய அதிகாரிகள் ஈராக் மீதான போரை எதிர்ப்பதற்கு ராஜதந்திர முன்முயற்சியை புதுதில்லி கைக்கொள்ளாது என்று குறிகாட்டினர். இந்து நாளிதழால் மோற்கோள் காட்டப்பட்ட தகவல்களின்படி, "அமெரிக்க இராணுவ நடவடிக்கையை விவரிப்பதற்கு 'கண்டனம்' போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுடன் பகைத்துக்கொள்வது தேவை இல்லை என்பது புதுதில்லியின் புரிதல் ஆகும்." குறிப்பாக காஷ்மீர் மீதான வாஷிங்டனின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கு புதுதில்லி அக்கறையாக இருக்கிறது என்பதை அக்கட்டுரை சுட்டிக் காட்டியது.

மொத்தத்தில் இந்திய அரசாங்கம் எந்தவிதமான "எதிர்ப்பை" யும் குரல்கொடுக்காதிருப்பதை முன்தேர்வு செய்து கொண்டது. பெப்ரவரி மத்தியில் பூகோள ரீதியான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னரே வாஜ்பாயி ஈராக் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான போரைப்பற்றி விமர்சித்தார். பெப்ரவரி 18 அன்று அவரது பாரதிய ஜனதாக் கட்சியின் (பிஜேபி) பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவிடம் பேசியபோது, ஐ.நாவானது அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தால் "தார்மீக ரீதியாய் ஐ.நாவின் இறப்பாக" அது இருக்கும் என்று அவர் அறிவித்தார். அரசாங்கமானது அமெரிக்கா தலைமையிலான போரை எதிர்ப்பதில் ஒரு கூட்டு தீர்மானத்தை நிறைவேற்றுதற்கு அதன் தயார்நிலையை வெளிப்படுத்தவும் கூட செய்தது.

ஆயினும், சிலமணிநேரங்களில், புஷ் நிர்வாகமானது புதுதில்லிக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி இருந்தது. அமெரிக்க தூதர் றொபர்ட் பிளாக்வில் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி, பிஜேபி தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் வெளியுறவு செயலாளர் கன்வல் சிபல் ஆகியோருடன் தொடரான சந்திப்புக்களை நிகழ்த்தினார். இந்த "கலந்தாலோசித்தல்களின்" உடனடி எதிர்அதிர்வுகள் பிரதமர் அலுவலகத்தில் (PMO) உள்ள அதிகாரத்துவங்கள் சரிசெய்யும் நடவடிக்கைக்குப் போவதில் விரைவில் வெளிப்பட்டன.

அதேநாள் மாலையில், வாஜ்பாயியின் பேச்சை இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதுடன் சிக்கல் இருந்திருந்தது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். பிரதமர் கூறியதாக அது கூறியது அவர் முன்னர் சொன்னதுதான்: ஐ.நாவிற்கு வெளியே ஈராக் மீதான எந்த நடவடிக்கையும் "சர்வதேச சமூகத்திற்கு துரதிருஷ்டவசமானது" ஆக இருக்கும் மற்றும் ஐ.நா செல்வாக்கை "அரித்து" விடும்.

அதன் பின்னர் இருந்து வாஜ்பாயியும் அவரது அமைச்சர்களும் அந்த நிலையை விட்டு வெளியே வரவில்லை. அவர்களது விமர்சனங்கள் இதமானதாகவும் பொதுவானதாகவும் வாஷிங்டனை எந்தவிதமாகவும் நேரடியாகக் குறிக்காமல் கவனமாக தவிர்ப்பதாய் இருந்து வருகின்றன. பிஜேபி-ன் இந்து பேரினவாதிகளின் பின்னால் உள்ள இந்திய ஆளும் மேல்தட்டின் சக்திமிக்க பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாஷிங்டனுடன் ஏற்படுத்தப்பட்ட நெருக்கமான பொருளாதார, அரசியல் மற்றும் மூலோபாய பிணைப்புக்களை பராமரிப்பதில் விருப்பங் கொண்டிருக்கின்றன.

மேலும் இந்திய பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டி இருக்கிறவாறு, அங்கு உடனடி வெகுமதிகள் இருக்கக்கூடும். பெப்ரவரி 21 அன்று ஆசியன் ஏஜ் நாளிதழில் சீமா முஸ்தபா எனபவர் பின்வருமாறு எழுதினார்: ஈராக் மீதான அதன் போருக்கான இந்தியாவின் வலிந்து செய்யும் ஆதரவுக்கு, அமெரிக்கா தற்போது பாக்தாத் இங்கு அரசாங்கத்திற்கு கடன்பட்டுள்ள 2.5 பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்திருக்கிறது." அக்கட்டுரையானது ஈராக்கின் போருக்குப் பிந்தைய மீள்கட்டுமானத்திற்காக இலாபமிக்க ஒப்பந்தங்கள் இந்தியக் கம்பெனிகளுக்கு வழங்கப்படலாம் என்று கூட சுட்டிக்காட்டியது.

மார்ச் 11 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த குறிப்புக்களில் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளாக் வில் வழங்க முன்வந்ததை உறுதிப்படுத்தினார். இந்தியா "ஈராக்கை பொருளாதார ரீதியாய் மீளக் கட்டமைக்கவும் குடிமக்கள் சமுதாயத்தைக் கட்டலிலும்" பங்காற்றுதற்கு ஒரு பாத்திரத்தைக் கொண்டிருந்தது மற்றும் அது பல "ஒப்பிடத்தக்க சாதகங்களை" பெற்றிருந்தது என்றார். "ஒவ்வொரு நாடும் வரவேற்கப்பட்டிராத அந்த சூழ்நிலையில் இந்தியா வரவேற்கப்பட்டிருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள்

எதிர் கட்சியான காங்கிரசும் ஸ்ராலினிச கட்சிகளும் அரசாங்கத்தை விமர்சனம் செய்து, போருக்கு எதிரான கடுமையான அறிக்கைகளுக்காக அழைப்பு விடுத்தன. அவர்களின் நிலைப்பாடு ஆளும் வட்டங்களில் உள்ள அக்கறைகளை எதிரொலித்தன, முதலில் இந்தியா முழுவதிலும் நடக்கும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் வளர்ச்சி பற்றியது, மற்றும் இரண்டாவதாக, முன்னரே தாக்கும் போர் பற்றிய வாஷிங்டனின் கொள்கையின் இந்தியாவிற்கான விளைபயன்கள் மற்றும் ஐ.நா வின் பொறிவு மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச உறவுகள் ஆகும்.

மார்ச் 12 அன்று டெக்கான் ஹெரால்டு நாளிதழில் ஒரு ஆசிரிய உரை எச்சரித்தது: "இந்தியா அதன் சொந்த மூலோபாயத்தை வரைவதில் அதன் சொந்த மூலோபாய மற்றும் பொருளாதார அக்கறைகளை இந்தியா கட்டாயம் புறக்கணிக்காத அதேவேள, போர் பற்றி கோட்பாடற்ற நிலையை எடுத்துக் கொண்டு, நீண்ட கால நோக்கில் இந்தியாவின் நலன்களை மேலும் எடுத்துச்செல்லும் நோக்கில் அமெரிக்க வண்டியில் தட்டித் தடுமாறி ஏறிக்கொள்கின்றது.

போருக்கு மக்களின் எதிர்ப்பு எல்லை பம்பாய் மாநகரில் ஒரு அண்மைய கணக்கெடுப்பால் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டது. பேட்டி எடுக்கப்பட்டவர்களுள், 8 சதவீதத்தினர் மட்டும் ஐ.நா அனுமதி இன்றி ஈராக் மீதான அமெரிக்கப் போருக்கு ஆதரவளித்தனர் மற்றும் எந்த சூழ்நிலைகளிலும் போரை 59 சதவீதத்தினர் எதிர்த்தனர். போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இந்திய அளவினைக் கருத்தில் கொள்கையில் ஒப்பீட்டளவில் சிறியதாக இதுவரை இருந்து வந்திருக்கிறது, பல பிரதான மாநகரங்களில் அது பரவிவருவதுடன் அளவிலும் அதிகரித்து வருகின்றது. கடந்த பெப்ரவரியில் தெற்கு நகரமான திருவனந்தபுரத்தில் 100,000 க்கும் அதிகமானோர் பங்கேற்ற பேரணி மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.

இந்த போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் சிறப்பியல்பு என்னவெனில், முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்களின் வராமை ஆகும். அரசாங்கத்தைப் போலவே, காங்கிரசும் வாஷிங்டனை தாக்குவதைத் தவிர்க்க கவனமாக இருந்துவந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திரும்பத்திரும்ப அறிவித்தார்: "நாம் எந்தவித ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கும் எதிராக இருக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் ஒரு தீர்வு காணப்பட வேண்டும்."

சனிக்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்தில், காங்கிரஸ் வாஜ்பாயியுடன் அடிப்படை ரீதியில் உடன்பாடின்மை கொண்டிருக்காதது, வியப்புக்குரியது அல்ல. அதன் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளை --அமெரிக்காவைக் கண்டிக்கும் கூட்டுத் தீர்மானம்-- விரும்பினர். கட்சி அந்த விஷயத்தை ஏதாவது மேலும் எடுக்கும் என்பதற்கு குறிகாட்டல் கூட அங்கு இல்லை.

காங்கிரசின் பின்னே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (சிபிஐஎம்) இழுபடுகின்றன. விவாதம் ஒன்றில் சிபிஐ(எம்) தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, போர் தொடர்பானதில் "கண்டிக்கிறோம்" என்ற வார்த்தையை பயன்படுத்த வாஜ்பாயி அரசாங்கம் தயாரிக்கப்படாதது "துரதிர்ஷ்டவசமானது" என்று அறிவித்தார். அவர் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் மற்றும் ஐ.நாவுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவித்ததில் காங்கிரசுடன் சேர்ந்து கொண்டார்.

தொடக்கத்தில் இருந்தே, ஸ்ராலினிச கட்சிகள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை உத்தியோகப்பூர்வ வழிகளை அழுத்தம் கொடுப்பதற்கு மட்டுப்படுத்துவதை நாடி வந்திருக்கின்றன. சிபிஐ (எம்) அரசியல் குழு அறிக்கை "இந்த ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் உலக அரசாங்கங்களின் பெரும்பான்மையுடன் சேருவதற்கு மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் அரசு ஊட்டிவளர்க்கும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பிரச்சாரத்தைக் குவிப்பதற்கு "இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் கீழை உலகின் நாட்டுப்புற வழக்கில் சொன்னால், அமெரிக்கப் போரை எதிர்க்க வாஜ்பாயியை அழைப்பது இன்னும் சொல்லப்போனால் ஆமையின் முதுகிலிருந்து இறகுகள் உதிர்வதை எதிர்பார்ப்பதாகும்.

மார்ச் 7 அன்று, சிபிஐ(எம்) பாராளுமன்ற உறுப்பினர் ஜிபோன் ராய், பாக்தாத்திற்கு எதிரான எந்தவிதமான ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையும் இந்தியா எதிர்க்கிறது என்ற அரசாங்கத்தின் நன்கு ஒத்திகை செய்யப்பட்ட நிலைப்பாட்டை திரும்பக் கூறிய, வெளிவிவகார அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு விட்டுக் கொடுத்து, ஈராக் மீதான போரை எதிர்ப்பதற்கான அவரது தீர்மானத்தை வாபஸ் வாங்கினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், சிபிஐ (எம்) ஆனது கோட்பாடுகளின் அடிப்படையில் -அது கொள்ளையிடும் ஏகாதிபத்தியப்போர் என-- ஈராக் மீதான ஆக்கிரமிப்பை எதிர்க்கவில்லை, இன்னும் சொல்லப்போனால், அது ஐ.நாவின் இசைவு ஆணையைக் கொண்டிருக்கவில்லை என்று, வாஜ்பாயி அரசாங்கத்தைப் போலவே எதிர்க்கிறது.

போரானது, சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) இந்திய முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல் நிறுவனத்தின் பகுதியாக தொழிற்படுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான உண்மையான எந்த எதிர்ப்புக்கும் இந்த வங்குரோத்தாகிப்போன அமைப்புக்களில் இருந்து ஒரு முழுமையான அரசியல் உடைவு தேவைப்படுகிறது.

Top of page