World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The German press and the Iraq war: "Might makes right"

ஜேர்மன் பத்திரிகைகளும் - ஈராக் போரும்: "வல்லான் வகுத்ததே வாய்க்கால்"

By Peter Schwarz
26 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் பத்திரிகைகளில் தலையங்கம் எழுதுபவர்கள் ஒரு சங்கம் அமைத்துக்கொள்வார்களானால், அந்தச் சங்கத்திற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் இலச்சினை காற்றடிக்கும் பக்கமெல்லாம் திரும்பும் திசைகாட்டும் கருவியாக இருக்கும். ஈராக்கில் அமெரிக்க இராணுவம் வெற்றிபெற்றதும் தலையங்கங்களை எழுதுபவர்கள் தலைகீழாக தங்களது போக்குகளை மாற்றிக்கொண்டுவிட்டனர். போருக்கு முன்னர் மிகப்பெரும்பாலான விமர்சனங்கள் கண்டனக் குறிப்புக்களை வழங்கின. சர்வதேச சட்ட மீறல், ஐ.நா.வை புறக்கணிப்பது, பேரழிவு ஆயுதங்கள் பற்றிய போலி சான்றுகள், அமெரிக்காவின் எண்ணெய் மற்றும் ஆதிக்க நலன்கள், இவை அனைத்தையும் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டன கண்டன விமர்சனங்களும் எழுதப்பட்டன. போர் முடிந்ததும் இந்தக் கருத்துக்கள் மாறிவிட்டன. நிலைநாட்டப்பட்டுவிட்ட உண்மையை பாராட்டி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள். காட்டுத்தனமான சட்டங்களுக்கு தலைவணங்க ஆரம்பித்துவிட்டார்கள். வழக்கம்போல், Die Zeit இதற்கு தலைமைதாங்கி வழிநடத்தி செல்கிறது. பாஸ்ட்டியன் தத்துவத்தைப்போல், தனக்குத் தானே தர்க்கம் செய்துகொண்டு போராடி இறுதியில் நீண்ட விளக்கம் அளிக்கும் தார்மீக நெறியில் அமைந்த கட்டுரையை ஜேர்மன் லிபரலிசத்தின் முக்கிய பத்திரிகை விமர்சனம் வெளியிட்டிருக்கிறது. இப்போது எதிர்ப்பை கைவிட்டுவிட்டு, போருக்கு ஆதரவாக எழுதியுள்ளது.

மார்ச்-6-ந்தேதி, போர் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், மைக்கேல் நொமான் (Michael Naumann), தொடர்ந்து தனது முதல் பக்க கட்டுரையில், கண்டனங்களை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவால் விளக்கம் தரப்படும் உலக ஒழுங்கின் பெயரால், சர்வதேச சட்டம் கைவிடப்படுவதை அமெரிக்கா தார்மீக உந்துதலால் மேற்கொண்டுள்ள அமெரிக்க மேலாதிக்கக் கொள்கையை அவர் கண்டித்தார். அமெரிக்க ஜனாதிபதி, "அமெரிக்க மக்களின் மிகப்பெரும்பாலோரின் அழுத்தத்திற்கு, தொழிற்சங்கங்களின் அழுத்தத்திற்கு, அடிபணிந்து நடவடிக்கை எடுக்கவில்லை, மாறாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்தட்டினர், மற்றும் இராணுவ தொழில்துறை நலன்களுக்கு ஆதரவு திரட்டுபவர்கள், எண்ணெய் நிறுவனங்கள், இவற்றிற்கெல்லாம் மேலாக பரபரப்பூட்டும் ஊடகங்களின் அழுத்தத்தின் கீழ் உள்ளார் என்று அவர் தெளிவாகவே எழுதியிருந்தார்.

நொமான் (Naumann) தனது கட்டுரையை முடிக்கும்போது, "வாஷிங்டன் உலக சமாதானத்திற்காகவும், ஆயுத குறைப்பு பேச்சுகளிற்காகவும், கணிசமான அளவிற்கு தனது ராஜ்ஜியத்துறை முயற்சிகளை மேற்கொண்ட காலம் மலையேறிவிட்டது. உலகின் மிகப் பழமையான குடியரசின் (அதில் பெரும்பாலான மக்கள். இன்றைய ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை) ஜனாதிபதி தேவைப்பட்டால் இராணுவ பலத்தை பயன்படுத்தி நிரந்தர அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டி, போரிலிருந்து உலகத்தை விடுவிக்க விரும்புகிறார். இத்தகைய பரிகார நடவடிக்கைக்கு அமெரிக்கா தகுதியான நாடல்ல, ஐரோப்பிய நாடுகளும், அத்தகைய தகுதிக்கு உரியவை அல்ல" - என்று எழுதியிருந்தார்.

மூன்று வாரங்களுக்குப் பின்னர் போர் நடைபெற்ற ஏழாவது நாளில், அதே ஆசிரியர், மற்றொரு தலையங்கத்தை அதே வகையான பாஸ்ட்டியன் உள்மன போராட்டத்தோடு, எழுதியிருக்கிறார். தலைப்பில் "சர்வதேச சட்டத்தின் சிதைபாடுகளுக்கு மத்தியில்" அந்தப் போர் நடந்துவருவதாக எழுதியுள்ளார். அதற்குப் பின்னால், தகுதியான ஒரு துணைத் தலைப்பு தந்திருக்கிறார். "தார்மீகம் இல்லாத வெளியுறவுக் கொள்கை அகந்தைமிக்கது, ஆனால் தார்மீகம் மட்டுமே, நம்மை பயங்கரவாதம் மற்றும் பரந்தமக்கட் படுகொலையில் இருந்து காப்பாற்ற முடியாது". (பாக்தாத் நகரத்தின் மீது குண்டுமாரி பொழியப்பட்டது தொடர்பாக பயங்கரவாதம் மற்றும் பரந்த மக்கள் படுகொலை" என்று அவர் குறிக்கவில்லை. செப்டம்பர்-11-தாக்குதல் மற்றும் சதாம் ஹூசேனின் சர்வாதிகாரம் தொடர்பாகத்தான் இந்த விமர்சனங்களை அவர் செய்திருக்கிறார்.)

இந்தக் கருத்துக்களின் மீதான பல்வேறு வேறுபாடுகளை ஐந்து பத்திகளில் தலைப்பிட்டு அவர் விவரித்திருக்கிறார். கவனமாக படிக்கின்ற வாசகர்கள் கூட, நொமானின் -உண்மையான நோக்கங்கள் என்ன என்பதை கண்டுகொள்ள முடியவில்லை ஆனால், அந்த நேரத்தில், போரின் முடிவு என்ன என்பது தெரியாத நேரம். ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது: மூன்று வாரங்களுக்கு முன்னர் சர்வதேச சட்டத்திற்கு அவர் முக்கியத்துவம் தந்த அளவை விடவும் இப்போது குறைத்தே முக்கியத்துவம் தந்துள்ளார்.

அந்தக் கொள்கைகளை விளக்குவதற்கு நீண்ட பத்திகளில் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அவரின்படி, ஏனென்றால், "(செப்டம்பர்-11-தாக்குதல் போன்ற) அத்தகைய சம்பவங்களுக்கு சர்வதேச சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை மற்றும் ஐ.நா.வை அடிப்படையாகக் கொண்ட உலக சமுதாயம் அதுபோன்ற சம்பங்களை தடுப்பதற்கு அதிகம் செயல்படவில்லை."

இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, ஏப்ரல்-10-ந்தேதி, பெர்ன்-உல்ரிச் (Bernd Ulrich) Die Zeit பத்திரிகையில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். அந்த தலையங்கத்தில் அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறியது என்றால் அதற்கு சர்வதேச சட்டம்தான் பழியை ஏற்கவேண்டும் என்று முடிவாகக் கூறியிருக்கிறார். "ஆம், இந்தப் போர் சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது தான், அதற்காக அமெரிக்காவை கண்டிக்கவேண்டும் அதேபோன்று சர்வதேச சட்டத்தினையும் கண்டிக்கவேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

ஏப்ரல்-16-ந்தேதி, போரின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டபொழுது, Die Zeit பத்திரிகை புஷ் ஆதரவு முகாமுக்கு வந்துவிட்டது. "ஒரு வல்லரசு நன்னடத்தை உள்ளதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்கிறது, ஆனால் நிச்சயமாக நன்னடத்தைக்குரிய வல்லமை அதற்கு உண்டு. மேலும் அது நம்பிக்கைக்குரிய காரணம் அல்ல அது நமக்கு நம்பிக்கையை தருகிறது" என்று "ஆயுதம் ஏந்திய தார்மீகம்" என்ற தலைப்பில், பத்திரிக்கை எழுதியது.. இந்த முறை தலையங்கத்தை எழுதிய ஆசிரியர், ஜோன் ரோஸ் (Jan Ross).

"ஐரோப்பிய சட்ட கலாச்சாரத்திற்கு" அமெரிக்காவின் "சென்று பெறுதல் பாணிகளுடன்" ரோஸ் வேறுபடுகிறார், மற்றும் அமெரிக்காவிற்கு தனது பேரார்வத்தை வெளிப்படையாக புலப்படுத்தினார். அதனது குறிக்கோள்களின் உண்மையான மற்றும் சர்வதேச செல்தகைமையை, அதன் பணியின் குறிக்கோள் மற்றும் சர்வதேசத் தன்மையினை ஆழமாய் நம்பாவிட்டால், இப்படிப்பட்ட சக்திமிக்க நடவடிக்கைகளை எடுத்திருக்காது என்று கூறுகிறார். சர்வதேச சட்டம் மீதான, ஐக்கிய நாடுகள் சபையின் பாத்திரம் மீதான மற்றும் பன்முகத்தன்மையின் நேர்மைத்தன்மைகள் மீதான ஐரோப்பாவின் வற்புறுத்தலுக்கு மாறாக, "நாட்டமின்மையின் விளைவாக, எக்களிப்புடன் கூடிய முட்டுக்கட்டை, பகை உள்ளம் கொண்ட உற்பத்தித் திறனின்மையின் அம்சத்தைக் கொண்டிருந்தது." அது சட்டபூர்வமான பந்திகள் மற்றும் கிளர்ச்சியற்ற உண்மையான அரசியல் தொடர்பான பிரமையுடன் கூடிய பகட்டின் விநோதமான கலவையாக இருக்கிறது." "ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் புரட்சிகர நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு முயலும்பொழுது", ஆட்சிக் கலையின் பயன்படா வாதங்களுக்கு எந்தவிதமான திரும்புதலுக்கும் எதிராக கட்டுரை எச்சரிக்கிறது. இப்படி அப்பட்டமான அதிகார பலத்தின் முன்னர் வெட்கம் கெட்ட வகையில் அடிபணிந்து ஒரு எழுத்தாளர் மாறிவிட்டதை விளக்குவதற்கு வார்த்தைகள் இல்லை. அமெரிக்க இராணுவ எந்திரத்தின் கொடூரமான நடவடிக்கைகளும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டெனால்ட் ட்ரம்ஸ்பீல்ட் மற்றும் ஜெனரல் டொமி பிரான்ஸ் ஆகியோரது ஆத்திரமூட்டும் செயல்பாடுகளும் Die Zeit பத்திரிகையில் தலையங்க எழுத்தாளர்களை கவர்ந்திருக்கிறது.

எது எப்படியிருந்தாலும், ஒரு குற்றமானது வெற்றி பெற்றாலும் குற்றமாகவே இருக்கும். போர் தொடங்குவதற்கு முன்பு சர்வதேச சட்டத்தின் குற்ற மீறல்களாக இருந்த அமெரிக்க அரசின் செயல்கள், போர் முடிந்த பின்பும் அவ்வாறே இருக்கின்றது.

ஒரு வெற்றிகரமான வங்கிக்கொள்ளை மீது ஒத்திசைவான கருத்தைக் கூறுபவர், என்ன சொல்லுவார்? "ஆம், இந்த வங்கிக் கொள்ளை குற்றவியல் சட்டத்தை மீறிய செயல்தான். கொள்ளைக்காரனை கண்டிக்கவேண்டும், ஆனால் குற்றவியல் சட்டத்தையும் கண்டிக்கவேண்டும் என்றுதானே கூறுவார். இப்படி, "தனது பணியில் ஆழமாய் நம்பிக்கை கொண்ட" கொள்ளைக்காரனின் "முயன்று பெறும் பாணிகளை" "குற்றவியல் நீதிமன்றத்தின் பங்கைப் பொறுத்தவரை "சட்ட ரீதியான பந்திகள் சம்பந்தமாக உற்பத்தித்திறனற்ற, எக்களிப்புடன் கூடிய முட்டுக்கட்டை மற்றும் பிரமையுடன் கூடிய பகட்டு" க்கு எப்படிப்பட்ட ஆசிரியர் சார்பாய் ஒப்பிடுவார்?"

ஈராக் போரின்போது, ஆயிரக்கணக்கான குண்டுகள் பாதுகாப்பற்ற ஈராக்கிய படையினர் மீது வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு அரசுகளின் நடவடிக்கைகள் முழு நடவடிக்கையின் குற்றத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்க டாங்கிகள், எண்ணெய் கிணறுகளையும், எண்ணெய் வள அமைச்சகத்தையும், காப்பாற்றுவதற்காக அணிவகுத்து நின்றன. அதே நேரத்தில் இதர எல்லா அமைச்சகங்களும் ஈராக் நாட்டின் அளப்பரிய மதிப்புமிக்க கலாச்சார செல்வங்களும், சூறையாடல்களுக்காக அனுமதிக்கப்பட்டன. இந்தப் போரின் நோக்கம் ஈராக்கை காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதும், அந்த பிராந்தியம் முழுவதையும் அமெரிக்கா மற்றும் அதன் கார்ப்பரேஷன் நலன்களுக்கு உட்படுத்துவதும் தான்.

Die Zeit - மட்டுமல்ல, மேலும் பல பத்திரிகைகள் இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளன. சர்வதேச சட்டத்திற்கும் அமெரிக்க மேலாதிக்க முயற்சிக்கும் இடையே மோதல்கள் வருமானால், சர்வதேச சட்டம்தான் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும், என்பதுபோல் மேலும் பல செய்தித்தாள்களும் அதைப் போன்ற தலையங்கங்களை எழுதியுள்ளன.

இவ்வாறு, ஏப்பிரல் 12ன் Süddeutsche Zeitung பத்திரிகையில் Stefan Kornelius, அமெரிக்கா "சர்வதேச ஒழுங்கு என்கிற விலங்கை உடைத்து எறிந்துவிட்டதாக, எழுதியிருக்கிறார். அவர் எழுதுகிறார்: "அரசுகளின் இறையாண்மை --மக்கள் மத்தியிலான பிரதான விதிகளில் ஒன்று-- மிகக் குறைவாக கவனத்தில் கொள்ளப்படுகிறது." ஆயினும், இது "சட்டமில்லாதநிலைக்கு இட்டுச்செல்வது அவசியமில்லாது இல்லாதிருக்கிறது." இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவானது அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து இப்போது புதிய விதிமுறைகளை விரிவாக்குவதற்கு அழைப்பு விடுக்கிறது. ஏனெனில் "வெற்றிபெற்றவர்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள்" என்று, மற்றொரு பத்திரிகை எழுதியிருக்கிறது.

வன்முறையால் உருவாக்கப்பட்ட உண்மைகளுக்கு சார்பானதில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான கோட்பாடுகளை நிராகரித்தல், மற்றும் "முயன்று பெறுதல் பாணிகளில்" பெயரில் "சட்டரீதியான கலாச்சாரத்தை" தள்ளுபடி செய்தல், ஜேர்மன் வரலாற்றின் மிக மோசமான அத்தியாயத்தை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. 1933-ம் ஆண்டு பல ஜேர்மன் துறை நிபுணர்கள் மற்றும் சட்ட மேதைகள் தங்களது கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் எளிதாக நாஜி ஆட்சியோடு இசைந்துபோகும் அளவிற்கு வளைந்துகொடுக்கச் செய்தனர். இதன் பின்னே அனுசரித்துக் கொள்ளுதலும் கோழைத்தனத்திற்கும் கூடுதலாய் இருக்கிறது. இதில் உருவாக்கப்பட்ட உண்மைகளை ஈவிரக்கமற்று உருவாக்கல் மூலம் நாஜிக்களின் கொடூரமான நடவடிக்கைகளால் அவர்கள் கவர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். இப்படிப்பட்ட உண்மைகளின் எதிரொலி இன்றைக்கும் Ernst Jünger மற்றும் Leni Riefenstahl போன்ற நபர்களைச் சுற்றிய வழிபடலில் தொடர்ந்து இருக்கின்றது.

தலையங்க வாதிகளை மட்டும் பழி சொல்வது நியாயமற்றது, ஜேர்மன் அரசாங்கம் நடைமுறையிலாக்கியுள்ள நிலைப்பாட்டைத்தான் அவர்கள் விளக்குகிறார்கள். அதிபர் சுரோடரும், வெளியுறவு அமைச்சர் பிஷ்ஷரும் அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்வதற்காகத்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். "உத்தியோக பூர்வ அறிக்கைகளுக்கு மாறாக இரண்டு வாரங்களுக்கு முன்னரே Der Spiegel சஞ்சிகை (வழக்கமாய் அரசாங்கத்திற்குள்ளேயான அபிவிருத்திகள் பற்றி நன்கு அறிந்திருப்பது) எழுதியதாவது, "ஜேர்மனியின் உண்மையான அரசியல்வாதிகள் சுரோடரும் பிஷ்ஷரும், வளைகுடாவில் அமெரிக்காவின் வெற்றியை நீண்ட காலத்திற்கு முன்னரே ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், அதில் வெற்றிபெற்றவர்களுடைய முன்னுரிமைகளை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது." ஐ.நா.விற்கு "நடுநாயகமான" பங்குவேண்டும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்புகள் மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. ஈராக் சீரமைப்பில், ஜேர்மனியின் பங்கு பணி பற்றியும், ஜேர்மன் படைகளின் ஈடுபாடு குறித்தும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பேட்டியிலும் சுரோடர், ஜேர்மனி மற்றும் அமெரிக்காவின் "கூட்டு மதிப்புக்கள்" பற்றிக் கூறிக்கொண்டே வருகிறார், Der Spiegel இடம் பேசுகையில் உண்மையில், நேரடியாகவே ஜனாதிபதி புஷ்ஷிடம் "எனது அமைச்சர்களின் மிதமிஞ்சிய அறிக்கைகள் பற்றி, முன்னாள் அமைச்சர்களின் கருத்துக்கள் பற்றியும், நான் பெரிதும் மன்னிப்புக் கேட்கிறேன்" என்றார்.

ராஜ்ஜிய முயற்சிகள் மூலம் அமெரிக்கா போர் தொடுப்பதை தடுக்க தவறிவிட்ட சுரோடரும் மற்றும் பிஷ்ஷரும் அமெரிக்காவுடன் இளைய பங்காளர்களாக சேர்ந்துகொள்ள முயன்று வருகிறார்கள்.

Top of page