World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India temporarily tones down its sabre rattling against Pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான அச்சுறுத்தும் போக்கை
இந்தியா தற்காலிகமாக குறைத்துக்கொண்டது

By K. Ratnayake
2 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

பாகிஸ்தானுக்கு எதிராக, மார்ச் இறுதியிலிருந்து அச்சுறுத்தல்களை விடுத்துக்கொண்டிருந்த இந்திய அரசாங்கம் ஏப்ரல் நடுப்பகுதியில் திடீரென தனது போக்கை மாற்றிக்கொண்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள அதன் சரிநேர் ஆட்சியாளர்களுடன் பேச்சு நடத்துவதற்கு முன்வந்திருக்கிறது.

இந்தியாவின் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பேயி ஏப்ரல்-19-20-ல் சர்ச்சைக்குரிய இந்திய மாநிலமான, ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான, சிறீநகருக்கு விஜயம் செய்தார். இந்தியப் பிரதமர் அரசியல் கூட்டம் ஒன்றில், குண்டு துளைக்காத கண்ணாடியின் பின் பகுதியிலிருந்து உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தானுக்கு தான் "நேசக்கரம்" நீட்டுவதாக குறிப்பிட்டார். "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படவேண்டும்" - என்று அவர் குறிப்பிட்டார்.

மறுநாள், நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, உடனடியாக தனது கருத்திற்கு தகுதிகளையும் விதித்தார். இருதரப்பு உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளுக்கான, நிகழ்ச்சிநிரல் பற்றி முடிவு செய்யப்படுவதற்கு முன்னர் பாகிஸ்தான், "எல்லை தாண்டி நடத்திவரும், பயங்கரவாத செயல்களையும், ஊடுருவலையும் நிறுத்திக்கொள்ளவேண்டும், பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாம்களை மூடிவிடவேண்டும்" என்று அவர் நிபந்தனை விதித்தார். இதே நிபந்தனைகளைத்தான் இந்தியா - இதற்கு முன்னரும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விதித்து வந்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தியாவின் ஆட்சியை எதிர்த்து, போராடி வரும் ஆயுதம் தாங்கிய போராளி குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வாஜ்பேயி தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதும், "ஜம்மு-காஷ்மீர் உட்பட, எல்லா பிரச்சனைகள் குறித்தும், பேச்சுவார்த்தை நடத்தமுடியும்" என்று குறிப்பிட்டார். பாகிஸ்தானின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட வாஜ்பேயி, பேச்சுவார்த்தைகளுக்கு இஸ்லாமாபாத்திற்கு முறையான அழைப்புவிடுக்கவில்லை என்பதைக் குறிப்பிட தவறிவிட்டார்.

வாஜ்பேயி உரையின் தொனியைப் பார்க்கும்போது, புதுதில்லியிலிருந்து வெளிப்பட்ட, ஆவேசமான அறிக்கைகளிலிருந்து மாறுபட்டதாக தோன்றுகின்றது. மார்ச்-23 இரவில், மிக ஒதுக்குப்புறத்தில் உள்ள காஷ்மீர் கிராமமான நந்திமார்கில் 24-இந்துக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, புதுதில்லியிலிருந்து ஆவசேமான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. யார் அந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய அடிப்படைவாத குழுவாக அது இருக்கக்கூடும் என்றாலும், இந்து தீவிரவாதிகளும் மற்றும் ஆயுதப்படைகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சில சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

என்றாலும், ஆளும் பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைவர்கள், இந்த துயர சம்பவத்தைப் பிடித்துக்கொண்டு பாகிஸ்தான் மீது நிர்பந்தத்தை தீவிரப்படுத்த முயன்றனர். இந்தியாவின் துணை பிரதமரும், இந்து பேரினவாதியும் கடுங்கோட்பாட்டாளருமான எல்.கே.அத்வானி நந்திமார்க் படுகொலைக்கு உடனடியாக பாகிஸ்தான் மீது பழிபோட்டார். ஆத்திரமூட்டும் வகையில், "காஷ்மீர் அல்லது நாட்டின் இதர பகுதிகளில் நடைபெற்ற ஒவ்வொரு பயங்கரவாத செயலிலும் இந்தியாவின் பக்கத்து நாடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அறிவித்தார்.

ஈராக் மீது போரைத் தொடக்கிய வாஷிங்டன், இந்திய துணைக் கண்டத்தில் இரண்டாவது நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கவலைப்பட்டது, மார்ச்-29-ந் தேதி கேம்ப்டேவிட் உச்சிமாநாட்டில் புஷ் - பிளேயர் இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். "உடனடியாக மோதலை நிறுத்தவேண்டும்" என்றும், பாகிஸ்தான் "எல்லை தாண்டிய ஊடுருவலை" நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும், காஷ்மீர் தகராறை தீர்த்துவைப்பதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையை தொடக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சின்கா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது என அறிவித்தார், அதனால் பதட்டங்கள் மேலும் அதிகரித்தது. வாஷிங்டனை கண்டிக்கும் வகையில் அவர் மிகத்தீவிரமாக: "ஈராக் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தி அந்த நாட்டிலிருந்து உருவாக இருந்த ஆபத்தை தவிர்ப்பதற்கு என்னென்ன காரணங்களைக் கூறியதோ, அதைவிட வலுவான சிறப்பான காரணங்கள் இந்தியாவிற்கு உள்ளன என்பதை சர்வதேச சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதில் நாங்கள் மனநிறைவு அடைகிறோம்." என அறிவித்தார். ஏப்ரல் 9-ந் தேதி இந்தியாவின் மேல் சபையான மாநிலங்கள் அவையில் இதே கருத்துக்களை திரும்பவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

அமெரிக்க அரசு செயலர் கொலின்பவல் ஏப்ரல்-11-ந் தேதி பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, அவர் (ஈராக் மற்றும் பாகிஸ்தான்) "இரு நிலவரங்களிலும் ஒரே மாதிரியானதை" தாம் பார்க்கவில்லை என்று விளக்கினார். (பாகிஸ்தானையும் இந்தியக் காஷ்மீரையும் பிரிக்கின்ற) "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால், சங்கடனமான மற்றும் ஆபத்தான நிலவரம் உள்ளது" என்று குறிப்பிட்ட பவல், "எந்தவகையான இராணுவ நடவடிக்கைக்கும் தற்போது, எந்தவிதமான அவசியமும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை" என்று கருத்து தெரிவித்தார். அமெரிக்காவும், மற்றும் புஷ் தனிப்பட்ட முறையிலும், இந்த நிலவரம் குறித்து "தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும்" என்று பவல் வலியுறுத்தி கூறினார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், முன்னாள் இராணுவ வீரர்கள் கூட்டத்தில், பல மணி நேரம் கழித்து உரையாற்றும்போது சின்ஹாவின் கருத்துக்களை ஆதரித்தார். தொடர்ந்து அமெரிக்கா, இந்த பிரச்சனையில் கவனம் செலுத்துகிறது என்பதைக் கேட்கத்தான், இந்திய ஆட்சி விரும்பியது. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போரை" ஆதரித்து உறுதியாக அதன் பக்கம் இந்தியா நிற்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவை உறுதியாக ஆதரிக்கவில்லை என்பதில் புதுதில்லியின் கடும்எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத்தான் சின்ஹா அவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பவல் கூறிய கருத்துக்களைத் தொடர்ந்து, புஷ் நிர்வாகம் அமெரிக்காவின் அரசுத்துறை துணை செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தலைமையில் இந்திய துணைக் கண்டத்திற்கு உயர் அதிகார குழு விஜயம் செய்யும் என்று அறிவித்திருக்கிறது. அடுத்த வாரம் இந்த விஜயம் தொடங்குகிறது. ஆர்மிடேஜ், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் "ஏராளமான இருதரப்பு பிரச்சனைகளை" ஆய்விற்கு எடுத்துக்கொள்வார். "பதட்டத்தை தணிப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நோக்கி, இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்தும்" கவனத்தில் எடுத்துக் கொள்வார், என்று அரசுத்துறை பேச்சாளர் ரிச்சர்ட் பவுச்சர் வாஷிங்டனில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதர பல்வேறு உயர்மட்ட விஜயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மே மாத இறுதியில் அமெரிக்க அரசுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா தெற்கு ஆசியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். மே-6-ந்தேதி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஸ் மிஸ்ராவும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர், ஹொண்டொலிசா ரைசும் (Condoleeza Rice) சந்திக்க இருக்கின்றனர். ஜூன் மாதம் இந்தியாவின் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, வாஷிங்டனுக்கு விஜயம் செய்கிறார். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் லத்தீப் மான்சிங்கும் மற்றும் வர்த்தக தலைவர்களும் ஈராக்கில் மறுநிர்மாண ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து வெள்ளை மாளிகையை வலியுறுத்த உள்ளனர்.

பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா கோரிக்கை

அதே நேரத்தில், ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராகவும் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் ஏதாவது ஊடுருவல் நடந்தால், அதற்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வாஷிங்டன் பாகிஸ்தானை நிர்பந்தித்து வருகிறது.

"கடந்த ஆண்டு உறுதிமொழி அளித்ததைப்போல், ஊடுருவல் நடப்பதை தடுப்பதில் பாகிஸ்தானை இயங்கச்செய்வதில் அமெரிக்கா "வெற்றிபெறவில்லை" என்பதை அமெரிக்க அரசுத்துறை கொள்கை திட்டமிடல், இயக்குநர் - ரிச்சர்ட் ஹாஸ், ஏப்ரல்-18-ந் தேதி இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டார். "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நடைபெறும் எல்லா வகையான ஊடுருவல்களையும் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லா வகையான முயற்சிகளையும் எடுத்து பயனுள்ள வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் தவறுமானால், அந்நாடு தனது அமெரிக்க உறவில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல முடியாது" என்று இஸ்லாமாபாத்திற்கு எச்சரிக்கைவிடுத்தார்.

சென்ற வாரம் சிஐஏ இயக்குநர் ஜோர்ஜ் டெனட் (George Tenet) அமெரிக்க செனட் சபை புலனாய்வு குழு கூட்டத்தில் உரையாற்றும்போது, "இந்தியாவை உடன்பாட்டு பேச்சிற்கு இணங்கச் செய்யும் ஒரு முயற்சியாகவும், காஷ்மீரில் இந்தியா இருப்பதை எதிர்க்கும் குழுக்களை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருவதாக" விளக்கினார். இதே கருத்தை பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ராப்புடன் தொலைபேசியில் பேசும்போது பவல் வலியுறுத்தினார். பாகிஸ்தான் நிர்வாகம் காஷ்மீரில் "பயங்கரவாதத்தை" தடுத்து நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காஷ்மீர் தகராறு தொடர்பான நீண்ட சர்ச்சையைச் சூழ நடைபெற்றுக்கொண்டுள்ள ராஜ்ஜியத்துறை நடவடிக்கைகளில் பவல் தந்திருக்கும் கருத்துக்கள் புதுதில்லிக்கு அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்துகின்றன. காஷ்மீர் அதன் முஸ்லீம் பெரும்பான்மையுடன், பாகிஸ்தானின் ஒரு பகுதியாகயிருக்கவேண்டும் என்று எப்போதுமே பாக்கிஸ்தான் வலியுறுத்திவருகிறது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக, ஆயுதப்புரட்சி நடத்தி வருகின்ற போராளிகளை, "சுதந்திர போராளிகள்" என்று பாகிஸ்தான் வர்ணிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் பவல் தெரிவித்துள்ள கருத்துக்கள் முஷ்ராப் சந்தித்துவரும் நெருக்கடிகளை தீவிரப்படுத்தவே செய்யும். ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையெடுப்பிற்கு முஷ்ராப் ஆதரவு தந்ததையும் மற்றும், பாகிஸ்தானில் CIA-மற்றும் FBI-அதிகாரிகள் நடமாடுவதையும், இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் கடுமையாக கண்டனம் செய்துவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை தேவையான மீளஉறுதிமொழிகளை அமெரிக்கா வழங்கியிருக்கிறது. வாஜ்பேயி சிறிநகரில் ஆற்றியுள்ள உரை, பொதுவாக அவரது அரசாங்கத்தின் போர்வெறி வாய்ச்சவடால்களை மட்டுப்படுத்தி காட்டுவதாக அமைந்திருக்கிறது. வெளியுறவு அமைச்சர் சின்ஹாவும் தனது நிலைப்பாட்டை வேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். ஏப்ரல்-23-ந்தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நீடித்த குரோதம் அடிப்பைடையாக இருக்க முடியாது மற்றும் இருக்கக் கூடாது என்று விளக்கினார். "அமெரிக்காவிற்கு எதிரான வலுக்கட்டாய குரோதப்போக்கை விட்டுவிடவேண்டும்" என்று கூறியதுடன் தனது அறிக்கையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக கூறிய கருத்துக்கள் "உரிய உள்ளடக்கத்திற்கு முரணாக" பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உணர்வுகளை மதித்து, சமானப்படுத்துவதற்கு வாஷிங்டன் விருப்பம் தெரிவித்திருப்பது, அமெரிக்காவின் உத்திகளில் எந்த அளவிற்கு இந்தியா நடுநாயகமான பங்குவகிக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்திருக்கிறது. கிளிண்டன் நிர்வாகத்தில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கமான இராணுவ மற்றும் பொருளாதார உறவுகள் உருவாக்கப்பட்டன. புஷ் நிர்வாகத்தில் அவை விறுவிறுப்பு ஊட்டப்பட்டுள்ளன. அது மத்திய கிழக்கிலும், மற்றும் மத்திய ஆசியாவிலும், அமெரிக்கா மேலாதிக்கம் செய்யும் திட்டங்களில் இந்தியா இணைப்பு உள்ள நாடு என்று புஷ் நிர்வாகம் கருதுகிறது. மேலும், சீனாவுடன் ஏதாவது மோதல் உருவாகுமானால், தனது நட்பு நாடாக இந்தியா இருக்கும் சாத்தியகூறுகள் உண்டு என்றும் அமெரிக்கா கருதுகிறது.

இந்தக் கருத்தை அமெரிக்க அரசுத்துறை உதவிச் செயலாளர் றொக்கா, செனட் சபை வெளியுறவுகள் குழுவில் மார்ச் மாதம் வலியுறுத்தி கூறியிருக்கிறார். இந்தியா வளர்ந்துகொண்டு வருகின்ற உலக வல்லரசு, எனவே இந்தியாவுடன் நமது உறவுகளை அதற்கு ஏற்றவகையில் மாற்றம் செய்துகொண்டு வருகிறோம். நம்முடைய இரு தரப்பு உறவுகள் ஆழமாகி வருகின்றன. பிராந்திய ஸ்திரத்தன்மை, ஆயுத பரவல் தடுப்பு, பயங்கரவாதத்தை ஒடுக்குவது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதார சீர்திருத்தம், மனித உரிமைகள், மற்றும் சர்வதேச பிரச்சனைகளில் அமெரிக்கா இந்தியாவுக்கு உதவிகளை வழங்கிவருகிறது என விளக்கியுள்ளார்.

பாகிஸ்தான் இந்திய பேச்சுவார்த்தைகளை பொறுத்தவரை இன்னமும் கருக்கொள்ளவில்லை, பேச்சு அளவிலேயே நிற்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஜபருல்லா கான் ஜமாலி, (Zafarullah Khan Jamali ) சிறிநகரில் வாஜ்பேயி வெளியிட்ட அறிக்கையை வரவேற்றார். முன்நிபந்தனை தொடர்பாக, இந்தியாவின் நிலைப்பாட்டில் அடிப்படை மாற்றம் எதுவும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஏப்ரல்-21-ந்தேதி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள் ஓர் அறிவிப்பில் "நிபந்தனை எதுவும் விதிக்கப்படாமல்" பேச்சுவார்த்தைக்கு தயாராகயிருப்பதாக அறிவித்தது. இந்த வாரம், ஜமாலி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாஜ்பேயியுடன் பேசினார். பேச்சுவார்த்தைகள் குறித்தோ அல்லது, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தோ எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இரு நாடுகளுக்கிடையிலும் கொந்தளிப்பு முற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்குள், இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும், தீவிரவாத பிரிவினைவாத போராளிகளுக்கும் இடையே சண்டை நீடிக்கிறது, மற்றும் தீவிரமடைந்துள்ளது. வாஜ்பேயி உரையாற்றிய பின்னர், அடுத்த வாரம் 77-பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அரசியல் ரீதியில் - இரண்டு ஆட்சிகளுமே சலுகைகளை தந்துவிட முடியாது. ஏனெனில், தங்களது மக்கள் ஆதரவை பெருக்கிக்கொள்வதற்காக, இரண்டு ஆட்சிகளுமே, வகுப்பு விரோதத்தை தூண்டிவிட்டு; அதை சார்ந்திருக்கவே விரும்புகின்றன. இந்தச் சூழ்நிலையில் திடீர் தாக்குதல் அச்சுறுத்தல்கள் மிக வேகமாக கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடக்கூடும்.

புஷ் நிர்வாகம் புதுதில்லிக்கு தனது ஆதரவை தந்திருப்பது, மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பதிலாக, ஏற்கெனவே பதட்டம் அடைந்து கொண்டிருக்கும் நிலவரத்தை மேலும், குழப்பம் ஊட்டும் அம்சமாகத்தான் அமைந்திருக்கிறது. ஆளும் பிஜேபியில் இடம்பெற்றுள்ள ஹிந்து பேரினவாதிகள் தங்களது அகன்ற இந்தியா அபிலாஷைகளை இந்தப் பிராந்தியத்தில் நிறைவேற்றிக்கொள்ள முயலுகின்றபோது, இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. அவை மோதிக்கொள்ளும் ஆபத்து அதிகரித்திருக்கிறது.

Top of page