World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

A rebellion on its knees: German SPD bows to Schröder on social cutbacks

ஷுரோடருடைய சமூக நலத்திட்டங்கள் மீதான வெட்டு கோரிக்கைக்கு ஜேர்மன் சமுக ஜனநாயகக் கட்சி பணிந்தது

By Ulrich Rippert
30 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷுரோடர், (Gerhard Schröder) (ஜேர்மன் சமுக ஜனநாயகக் கட்சி - SPD) தனது கோரிக்கைகளை தனது சொந்தக் கட்சியின் இறுதி எச்சரிக்கையோடு தொடர்பு படுத்தியிருக்கிறார், அதாவது ஜேர்மனியின் நலன்புரி அரசு திட்டங்களில், கடுமையான, வெட்டுக்களை கொண்டு வரவேண்டும் என்று அவர் கோரி வருகிறார். சமூக ஜனநாயக கட்சி ஒன்றில், அதிபர் பிஸ்மார்க் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்துவரும் அடிப்படையான சமூக நலன்களை ஒழிப்பதற்கு இணங்க வேண்டும் அல்லது ஷுரோடர் ராஜிநாமா செய்ய வேண்டும். வேறு எந்தவிதமான கொள்கை அடிப்படையிலும் அவர் பதவியில் நீடித்து இருக்க தயாராக இல்லை.

சமுக கொள்கையின் பல்வேறு அம்சங்களில், பெருமளவிற்கு செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஷுரோடரின் திட்டங்களுக்கு கடந்த சில வாரங்களாக, சமூக ஜனநாயக கட்சிக்குள்ளேயே பல்வேறு குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்தக் கட்சியின் ''தொழிலாளர்களுக்கான செய்தி எனும் பாராளுமன்றக் குழு'' தொழிற் சங்கங்களோடு நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. கட்சியின், இளம் சோசலிஸ்ட்டுகளின் இளைஞர் குழுவும், மற்றும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஷுரோடருடைய திட்டத்தின்மீது உறுப்பினர்களுக்குளே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். அப்படி வாக்கெடுப்பு நடத்துவதற்கு கட்டாயப்படுத்தும் வகையில் அவர்கள் தேவையான உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெறுவதற்கு முயன்று வருகின்றனர். இந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்களும், ''பாராளுமன்ற புரட்சிக்காரர்கள்'' என்று வர்ணிக்கப் படுகின்றனர்.

இந்த முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாராளுமன்ற இடதுசாரிகள் (PL) என்று அழைக்கப்படும் குழுவிற்கு சமூக ஜனநாயக குழுவைச் சார்ந்த இரண்டு துணைத் தலைவர்களான, மைக்கேல் முல்லர், (Michael Müller) மற்றும் பெர்னாட் எர்லர், (Gernot Erler) ஆகிய இருவரும் தலமை தாங்குகின்றனர். இவர்கள், அதிபர் ''2010 நிகழ்ச்சி நிரல்'' என்று உத்தேசித்துள்ள சமூக நலத்திட்டங்களுக்கான வெட்டு மற்றும் ஆலோசனைகள் போன்றவற்றில் சிறிய மேற்பூச்சு மாற்றங்களை செய்வதற்கான, ''சமரச அறிக்கை'' எனும் அடிப்படையில், பேச்சு வார்த்தைகளை தொடக்கி இருக்கின்றனர்.

அதற்கு பின்னர் சில நாட்களில், ''சமூக ஜனநாயக கட்சியின் 21 ஜனநாயக இடதுகள்'' என்பதின் தலைவரான ஆன்ட்ரி நகலஸ், (Andrea Nahles) அதிபரின் (தனது அரசியல் வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படாத முறையில்) திட்டத்திற்கு தனது சொந்த கண்டனங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இறுதியாக, அதிபர் புதிய கொள்கைத் திட்டங்களை விவாதிப்பதற்கு கட்சியின் சிறப்பு மாநாட்டை நடத்துவதற்கு இணங்கி இருக்கிறார். இந்த மாநாடு ஜனவரி முதல் தேதி நடை பெறவிருக்கிறது.

இந்த மாநாட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அனுமானித்து கூறுவதில் எந்தவிதமான சங்கடமும் இல்லை. எதிர்கட்சிகளின் எதிர்ப்பு கூப்பாடு மற்றும் ஆளுங்கட்சிக்குள்ளேயே கிளம்பும் எதிர்ப்புகள் என்பன, இவை மணல் வீடு போல் நொறுங்கி விடும். ஷுரோடர் தனது பிற்போக்குத்தனமான ஆலோசனைகளை செயல்படுத்தவும், வலியுறுத்தவுமே செய்வார்கள். ஏனெனில் கட்சியில் உள்ள வலதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டை மிகக் கடுமையாக தற்காத்து வருகின்றனர். எதிர்ப்புக் குரல் எதையும் அவர்கள் கண்டிக்கின்றனர். எதிர் கட்சிக்காரர்கள், அதிபருக்கு தங்களது விசுவாசத்தை தெரிவித்து வருகின்றனர். அவர்களில் எவரும், அதிபர் என்ற முறையில் ஷுரோடர் செயல்படுவதை ஆட்சேபிக்கவில்லை. கொள்கையில் மாற்றம் செய்யப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ஷுரோடர் பதவி விலகுவதாக மிரட்டியதை தொடர்ந்து இந்த அணுகுமுறை, கட்சிக்குள்ளேயே நடைபெற்று வருகின்ற முதல் சுற்று பேச்சு வார்த்தைகள் துவங்குவதற்கு முன்னரே எதிர்ப்பு நிலை குறைந்து விட்டது, அடிபணிந்து விட்டது என்பதை காட்டுகிறது.

சமூக ஜனநாயக கட்சிக்குள்ளேயே இப்படி நடப்பது இதுதான் முதல் தடவையும் அல்ல, ''இடதுசாரிகள்'', தங்களது கருத்துக்களில் மிகவும் கடுமையாகயிருப்பதில்லை. ஆனால் இந்த முறை இந்த எதிர்ப்பு மிகவும் வெறுக்கத்தக்க வகையிலும், கேலிக்குரியதாகவும் ஆகிவிட்டது. எதிர்ப்பு தெரிவிக்கிற எவரும் கடுமையான மாற்றுத் திட்டம் எதையும் தாக்கல் செய்ய முடியவில்லை. சமூக ஜனநாயக- பசுமைக் கட்சிகளின் கூட்டணி அரசின் ஆலோசனைகளில் அடங்கியுள்ள அடிப்படைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். இந்த அடிப்படைகள், ''சமூக நலத்திட்டங்களுக்கு அரசு பணம் தருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'', ''தனி மனிதர்கள் முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்'', ''மலிவான, தொழிலாளர்களைக் கொண்டு, செலவினங்களைக் குறைத்து வர்க்கத்தை பெருக்கிக் கொள்ளும் நிறுவனங்களுக்கு அதிக நிவாரணம் தரவேண்டும்'' என்பது போன்ற திட்ட நடவடிக்கைகளை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். சமூக ஜனநாயக கட்சி தனது 100 வது ஆண்டு வரலாற்றை திரும்பிப் பார்க்க தயாராகவே உள்ளது. தனது கட்சி அலுவலகங்களில், ஓகுஸ்ட் பெபல், (August Bebel) மற்றும் ரோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg) புகைப் படங்களை மாட்டி வைக்கத் தயங்கவில்லை. அதே நேரத்தில், நீண்ட நாட்களுக்கு முன்னரே, பெரு வர்த்தக நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதை தனது முதல் முன்னுரிமையாக எடுத்துக் கொண்டிருக்கின்றது.

எதிர்கட்சிகள் தங்களது அடிப்படை தொண்டர்கள் ஏற்றுக் கொள்கிற வகையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறார்களே தவிர, இவ்வாறான பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற உந்துதலால் செயல்படவில்லை. சமூக ஜனநாயக கட்சிக்குள் அதிகார குழுவில் இடம் பெற்றுள்ள பல தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதுடன் மேலும் தமது பதவிகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

இதை வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், பெரு வர்த்தக நலன்கள் ஒரு பக்கம், பொதுமக்களின் விரிவான சமுதாய தரப்பினர் மற்றொரு பக்கம், இந்த இரண்டிற்கும் நடுவே சிக்கிக் கொண்டு, எதிர்கட்சிகள் வயிற்று வலியால் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அதிபருக்கு எதிரான எதிர்ப்புகள், கண்டனங்கள், அதிகரித்து இருக்கையில், சமூக ஜனநாயக கட்சியின், முன்னாள் நிதியமைச்சர் ஆஸ்கார் லபோன்டைன் (Oskar Lafontaine) பல்கனிக்கு வெளியில் தலையைத் தூக்கி, ஷுரோடர் தேர்தல் வாக்குறுதிகளை மீறிவிட்டார் என 100 வது தடவையாக குற்றம் சாட்டுவது இவருக்கு வாடிக்கையாகும். இவர் பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு பயந்து பதவியிலிருந்து வெளியேறியவர். ''சார்லாந்து நெப்போலியன்'' ("Napoleon of Saarland,") என்று அழைக்கப்படுபவர், ஆனால் உண்மையான நெப்போலியன் எதிரியைக் கண்டு அஞ்சவில்லை, போர்க்களத்திலிருந்து தப்பியோடவில்லை.

தற்போது சமூக ஜனநாயக கட்சியில் நடந்துவரும் மோதல்கள் ஒன்றை தெளிவு படுத்துகின்றன. அரசாங்கம் உத்தேசித்துள்ள, சமூக நலத்திட்டங்களின் வெட்டு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து போராடுவதற்கு தொழிலாளர்களுக்கு புதிய தலைமை தேவை, அந்த தலைமை பெரிய வர்த்தக வட்டாரங்களுக்க விட்டுக் கொடுத்துச் செல்லக்கூடாது, தனது கொள்கைகளின் அச்சாணியாக உழைக்கும் மக்களின் கவலைகள், வேலையில்லாத் திண்டாட்டம், முதுமையில் வறுமை, உடல் நலக்குறைவு ஆகியவற்றை அச்சாணியாக கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த வகையில் உண்மையை அப்பட்டமாக வெளியிடுவது அவசியமாகும். ஏற்கனவே, வறுமையை அனுபவித்துவரும் சமுதாய பிரிவுகளான அரசு உதவியை நாடியிருப்போர், நோய்வாய்பட்டோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன்களை எவரும் இல்லாத நிலையில் அவர்களை மேலும் வாட்டுகின்ற வகையில், ஷுரோடர் மேற்க்கொள்ள உத்தேசித்திருக்கும் நடவடிக்கைகள் முழுமுழுக்க சமூக விரோதச் செயல்கள் மட்டுமல்ல, அவை அரசியல் அடிப்படையில் குற்றச் செயல்களாகும்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு ஏறத்தாழ 20% அளவிற்கு உயர்ந்து விட்டதாக அதிகாரபூர்வமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல பிரதேசங்களில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. இதற்கு இடையில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக உதவித் திட்டங்கள் வெட்டப்படுவதால் மேலும் பல குடும்பங்களின் பொருளாதார அடிப்படை சீரழிந்துவிடும். குடும்பத்தின் சேமிப்பு தீர்ந்துவிட்ட நிலையில் இத்தகைய உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, குடும்பத்தின் இதர உறுப்பினர்களது வருவாயை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

தற்போது, இதுபோன்ற வெட்டுக்களால் உருவாக்கப்படுகின்ற துன்பங்களையும், நெருக்கடிகளையும் வலதுசாரி சிந்தனையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு சமுதாயம் முழுவதையுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிபர் ஷுரோடரோ அல்லது சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த அவரது நிதியமைச்சரான கான்ஸ் அஜ்கிலோ (Hans Eichel) தங்களது சமுதாயக் கொள்கைகயின் விளைவுகள் குறித்து சிறிதளவுகூட அக்கறை செலுத்தவில்லை. ஏதாவதொரு வகையில் பொருளாதார மறுமலர்ச்சி உருவாகும் என்று அவர்கள் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை நசிந்துபோகும் அளவிற்கு பொருளாதார வீழ்ச்சி பற்றிய கெட்ட செய்திகள், ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக, வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு வரலாறு காணாத அளவிற்கு உயரும் நிலை தோன்றியுள்ளது. எனவேதான், உடனடியாக வங்கிகளும், பெரு வர்த்தக நிறுவனங்களும் தெரிவிக்கின்ற கோரிக்கைகளை உடனடியாகவும், மிகக் கொடூரமாகவும், செயல்படுத்த முயன்று வருகிறார்கள்.

சமுகநல அரசிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பண வசதி இல்லை. அந்த அளவிற்கு சமுதாயத்தின் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்று கூறுவது, வெறும் வார்த்தைகள்தானே தவிர உண்மையல்ல. கடந்த காலத்தில் பல ஆண்டுகளில் திட்டமிட்டு, பணக்காரர்களுக்கு சலுகை காட்டுவதற்காக சேம நல அரசிற்கான நிதி ஆதாரங்கள் சூறையாடப் பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் சட்டப்பூர்வமாக ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கடுமையாக குறைக்கப் பட்டுள்ளன.

தற்போது உள்ள நிலவரப்படி உழைக்கும் மக்களது வருமானங்களில் இருந்து, பிடித்தம் செய்யப்படும் வரிகள் மூலம் தான் பிரதானமாக சமூக நலன்புரி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதே நேரத்தில், இதர வருமானங்களான பங்கு பேர வருமானங்கள், வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் முதலீட்டு சேமிப்புக்களில் எந்தவிதமான பிடித்தமும் செய்யப்படுவதில்லை. அதே நேரத்தில், சமூக நலன்புரி திட்டங்களுக்காக சேருகின்ற பணம் தொடர்ந்து விரயம் செய்யப்படுகின்றது. அதனால் துன்பம் கடுமையாகிறது. மலிவான கூலியில் கிடைக்கும் தொழிலாளர்கள் மூலம், எந்தவிதமான வரி வருவாயும் அரசிற்கு கிடைப்பதில்லை. எனவே, சமுதாயத்தின் பெருகிவரும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அளவிற்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

நிதி நெருக்கடி அதிகரித்து வருவதற்கு மற்றொரு காரணம் சமூக ஜனநாயகம் - பசுமைக் கட்சிகளின் கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் வரிக் கொள்கைதான். நிதித்துறை மதிப்பீடுகளின்படி 1999 ம் ஆண்டுக்கும் 2002 ம் ஆண்டிற்கும் இடையில் தொழில் அதிபர்களுக்கு விதிக்கப்பட்ட வரி 20.1% வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதே நேரத்தில், ஊழியர்களுக்கான வரிவிதிப்பு 2.4% அதிகரித்துள்ளது. நுகர்வோர் வரி மூலம் வருவாய் 8.9 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2001 ல் மட்டும் கம்பெனிகளின் வரி வசூல் 1.7 பில்லியன் யூரோக்களால் வீழ்ச்சியடைந்துள்ளது, ஒப்பீட்டு ரீதியில் 2000 ம் ஆண்டில் இந்த வீழ்ச்சி 23.6 பில்லியன் யூரோக்களாகும்.

பெருகிவரும், பொருளாதார பிரச்சனைகளை சமாளிப்பதற்கு செலவு குறைப்பை தவிர, வேறு எந்த வழியும் இல்லை என்று கூறப்படுவது உண்மையல்ல. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஜேர்மனியின் மொத்த தேசிய செல்வமானது ஏறத்தாழ இரண்டு மடங்கு உயர்ந்து, தற்போது 7 திரில்லியன் யூரோக்களாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்த செல்வம் சமுதாயத்தில் பரவியிருப்பதில் கடுமையான திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்களில் மிகப்பெரும் செல்வந்தர்களான 10 வீதத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தின் 50 வீதத்திற்கு மேற்பட்டதை கட்டுப் படுத்துகின்றனர். அதே நேரத்தில் மத்திய தரவர்க்கம் மற்றும் குறைந்த வருவாய் குழுக்களின் செல்வ உடைமைகள் கணிசமான அளவிற்கு குறைந்துள்ளன.

இப்படிப்பட்ட பணக்காரர்கள், சூப்பர் பணக்காரர்கள் ஆகிய தரப்பினரை நம்பித்தான் ஷுரோடர் தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார். இவர்களில் பலர் தொண்ணூறுகளில் நடைபெற்ற வெறியூட்டும் பங்குமார்க்கெட் பூரிப்பில் பங்குகொண்டவர்கள், இவர்கள் தற்போது நிலவும் ஆழமான பொருளாதார நெருக்கடிகளால் தங்களது நிலைப்பாடு ஆட்டம் காண்பதாக அஞ்கின்றனர். இவர்கள் மிகுந்த வெறியுணர்வோடு, சமுதாயம் முழுவதுமே பாதிக்கப்பட்டு போனாலும் தங்களது சொந்த நலன்களை நழுவாமல் உறுதியோடு இறுக்கமாக பிடித்துக் கொண்டு நிற்பதற்கு அவர்கள் முயன்று வருகிறார்கள்.

எனவேதான், ஜேர்மனியின் நலன்புரி அரசு மீது தொடுக்கப் படுகின்ற தாக்குதலை சந்தித்து, சமாளிக்க விரிவான அடிப்படையில் பொதுமக்கள் இயக்கம் நடத்தப் படவேண்டும்.. பிப்ரவரி மத்தியில், கோடிக்கணக்கான மக்கள் ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்த்து, தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்வதேச உழைக்கும் வர்க்கத்தினரின் இந்த இயக்கத்திற்கு மீண்டும் உயிர்துடிப்பை ஏற்படுத்தி அரசியல் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.

இன்று, ஒவ்வொரு பெரிய சமுதாய பிரச்சனையும் ஒரு சர்வதேச வடிவத்தை எடுக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒரே வகையான பிரச்சனைகளைத்தான் சந்திக்கின்றனர். எனவே, அவர்கள் ஒன்றுபட்டு நின்று செயல் படுகின்ற முறையை வகுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு சமுக சமத்துவத்தை உருவாக்குகின்ற மிகவும் அடிப்படையான சர்வதேச மூலோபாயம் ஒன்று அவசியமாகிறது..

முன்னாள் சமூக ஜனநாயக கட்சியின் செயலாளரான ஆட்மார் சீட்னர் (Ottmar Schreiner) போன்ற சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த ''கிளர்ச்சிக்காரர்கள்" முகத்திலேயே அச்சம் தெளிவாக தெரிகிறது. தகுந்த சமரச ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய அதேசமயம் சமுக முரண்பாடுகளுக்கான ஆபத்துக்களை பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டியும் உள்ளது.

தொழிலாளர்களைப் பொறுத்தவரை, கொடூரமான ஆளும் வாக்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் உருவாக்குகின்ற திட்டங்களை எதிர்த்து போராடுவதற்கும், வெகுஜன அரசியல் போராட்ட இயக்கம் ஒன்றை உருவாக்குவதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

Top of page