World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US recruits Ba'athist police and functionaries for new Iraqi state

அமெரிக்கா புதிய ஈராக்கிய அரசிற்கு பாதிஸ்ட் போலீஸாரையும் ஆட்சிப் பணியாளர்களையும் தேர்ந்தெடுக்கிறது

By James Conachy
24 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க இராணுவமானது ஈராக் போலீசிலும் ஆட்சிப் பணித்துறையிலும், பாக்தாத் மற்றும் பிற நகரங்களில் பரந்த அளவிலான முன்னாள் அதிகாரிகளை மீண்டும் பதவியில் அமர்த்துகிறது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ''விடுதலை'' அல்லது ஜனநாயகத்தைக் கொண்டுவருதல் என்பதோடு தொடர்பற்றது என்பதற்கு இந்த நடவடிக்கையானது மேலும் சான்றாக உள்ளது. அத்துடன் புஷ் நிர்வாகம் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகத்தை தடையின்றி நடத்த சதாம் ஹுசைனின் கடுமையான அடக்குமுறை ஆட்சியாளர்களையே பயன்படுத்த நினைத்திருப்பது தெளிவாகிறது.

கிட்டத்தட்ட 2000 ம் போலீசார்கள் பாக்தாத் தெருக்களைக் கண்காணிக்க மீண்டும் வந்துவிட்டனர். மற்ற பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கானோர் பணிக்கு மீண்டும் வந்துள்ளனர். ஒரு புதிதாக மறுநியமனமாகிய போலீஸ் காப்டன் மொஷ்டாக் பாதெல் என்பவர் USA TODAY என்ற பத்திரிகைக்கு தன்னுடைய போலீஸ் தத்துவத்தைப் பற்றி விளக்கம் அளிக்கையில் ''ஈராக்கில் உங்களுக்கு எந்தத் தகவலையும் நையப்புடைக்காவிட்டால் பெறமுடியாது'' என்று கூறினார்.

அமெரிக்க இராணுவம் சுஹைர்-அல்-நோய்மே என்பவரை நகரத்தின் போலிஸ் அதிகாரியாக நியமித்துள்ளது. 1966 ல் ஈராக் போலிசில் இணைந்துகொண்ட நோய்மே, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன் ஜெனரல் அந்தஸ்து வகித்தவர் ஆவர்.

பாக்தாத்தில் ''நகரக் கண்காணிப்பு'' என்னும் பணிகள் உண்மையிலேயே பாதிஸ்ட் அரசியல் சக்திகளின் செல்வாக்கிற்கு உட்பட்டதுடன், முன்பு அவை இரகசியக் குறிப்புக்களைச் சேகரிக்கும் முக்கபரத் என்ற வலைப்பின்னலாக செயற்பட்டவை என்று பிரிட்டனின் இண்டிபென்டென்ட் பத்திரிகையில் ஏப்ரல் 21 ல் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. அத்துடன் ஒரு ஈராக்கிய போலிஸ்காரர் இப் பத்திரிகைக்குத் தெரிவிக்கையில் ''தற்போது அவர்கள் வேறொரு எஜமானைக் கண்டுபிடித்துவிட்டனர்'' என்றார்.

அமெரிக்கா, பழைய பாதிஸ்ட் ஆட்சியின் அலுவலர்கள் மற்றும் போலீஸ் படையுடன் சேர்ந்து செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 21 ம் தேதி வோல்ஸ்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிகை, பேய்ஜி (Bayji) என்ற 25.000 மக்களைக் கொண்ட வட ஈராக்கிய நகரில் புதிய சிவில் அதிகாரம் அமைத்தது பற்றிய ஒரு தகவலைக் கூறுகிறது. அது, அமெரிக்க கடற்படை பிரிகேடியர் ஒருவரின் மேற்பார்வையில் ''நகரின் பழங்குடியினர் மற்றும் பொதுத் தலைவர்கள்'' ஃபா ஹாரன் என்பரை நகர பிதாவாக தேர்ந்தெடுத்தனர் என்பதாகும்.

ஹாரன் அப்பகுதி பழங்குடித் தலைவராகவும் ஒரு முக்கியமான பாதிஸ்டாகவும் விளங்கியதுடன், ஹூசைன் ஆட்சியின்கீழ் நகரப் பொறியாளராகவும் இருந்தார். ''இங்குள்ள ஒவ்வொருவரும் சதாம் ஹுசைனுக்காக வேலை செய்தவர்கள், அவ்வாறு செய்யாவிட்டால் ஒருவரும் உயிர்வாழ முடியாது. எனவே பலரும் எந்த அளவிற்கு எதைச் செய்தார்கள் என்பதை மட்டுமே பார்க்கவேண்டும். அத்துடன் ஹாரன் அடிப்படையில் ஒரு சிறந்த அதிகாரி'' என்று அமெரிக்க இராணுவம் முடிவெடுத்ததாக அமெரிக்க கடற்படை லெப்டினன்ட் கேணல் வில்லியம் ஷாவெர் கூறினார்.

பிரிட்டிஷார், பாஸ்ராவில் கலிப் குப்பா என்பவரை இடைக்கால கவுன்ஸிலின் தலைவராக நியமித்துள்ளனர். இவர் ஒரு உள்ளூரிலுள்ள பெரும் பணக்கார வியாபாரி ஆவார். ''அவர் உடாய் ஹுசைனின் (சதாம் ஹுசைனின் மகன்) வியாபாரக் கூட்டாளி. அதை எல்லோரும் நன்கறிவர். ஈராக்கில் அனைத்து முதல் நிலை வியாபாரிகளும் சதாம் ஹுசைனின் கூட்டாளிகளே'' என்று குப்பாவின் பின்னணியைப் பற்றி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்கு ஒரு உள்ளூர் வியாபாரி தெரிவித்தார்.

''ஈராக்கில் ஒரு வியாபாரத்தை ஆட்சியாளர்களின் நெருங்கிய தொடர்புகள் இல்லாமல் நடத்த முடியாது. தற்போது நாட்டை மீண்டும் அதுபோன்ற தொடர்புகளைக் கொண்டவர்கள் இல்லாமல் நிர்வகிக்க முடியாது. பிரிட்டிஷ்காரர்கள் ஒன்றும் தெரியாதவர் இல்லை. இதைவிட வேறு எந்த வழியினாலும் நிர்வகிக்க முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள்'' என்று இப்பத்திரிகை மேலும் தொடருகிறது.

பாக்தாதைப் போலவே பாஸ்ராவிலும் பழைய போலிசார்கள்தான் பெரும்பான்மையான ஷியாட் மக்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர்கள் ஆவர். இவர்கள் தற்போது மீண்டும் வீதிக்கு வந்துள்ளனர்.

ஈராக் ''மக்களைக் கொன்று குவிக்கும் பேரழிவு ஆயுதங்களைக்'' கொண்டு தாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டைப் போலவே, ஈராக் பாதிஸ்டுகளின் மனித உரிமைகள் மீறல் என்ற புஷ் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்களும் எப்பொழுதும் சந்தேகத்குரியனவாக இருந்தன. புஸ் நிர்வாகமானது, பொதுக் கருத்தைத் தம் விருப்பப்படி மாற்றும் பெருமளவிலான யுத்தக் கொள்கைப் பிரச்சாரத்தை இதன்போது கொண்டிருந்தது.

புஷ்ஷும், ரம்ஸ்பீல்டும் ஹுசைனின் ஆட்சியை நாஜிக்களுடைய ஆட்சியோடு ஒப்பிட்டு உரையாற்றினர். இருந்தபோதிலும் வாஷிங்டன், வெளிநாடுகளில் வாழும் ஈராக்கியர்களின் கோரிக்கையான புதிய ஆட்சிக் கட்டமைப்பில் பழைய பாதிஸ்டுகளை அறவே ஒழித்திட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்கவில்லை.

புஷ் நிர்வாகம், பாதிஸ்டுகள் பெருமளவு குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற வெளிநாட்டில் வாழும் ஈராக்கிய வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர் என்று ஏப்ரல் 21 ம் தேதி தி கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர் குறிப்பிட்டுள்ளது. ''புஷ் நிர்வாகத்திற்கு அதைப்பற்றிய இரு கருத்துக்கள் உண்டு. ஈராக்கியர்கள் தடையற்ற நீதி அமைப்பைக் கொண்டிருந்தால் அரசியல் திட்டங்களோடு அவர்கள் தலையிடக்கூடும் என்ற அச்ச உணர்வு அமெரிக்கர்களுக்கு உண்டு'' என இப்பத்திரிகைக்கு ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

ஒரு சட்டபூர்வமான பாதிஸ்ட் ஒழிப்புத்திட்டம் என்பதானது, அரசியல் திட்டமான பாதிஸ்டுகளை மீண்டும் வேலைக்கமர்த்துதல் என்பதோடு குறுக்கிட்டுவிடும். அமெரிக்க ஆதரவு நாடாக மற்றும் ஈராக்கில் ''கட்டுமானப் பணிகளை'' மேற்பார்வையிட குறைந்தபட்சம் 75000 அமெரிக்க இராணுவத்தினர் அங்கு தொடர்ந்திருக்க வேண்டுமென அமெரிக்க இராணுவத்தின் புள்ளி விவரம் கூறுகிறது. அதேநேரத்தில் பழைய அடக்குமுறைக் கருவியின் முக்கிய பகுதிகள் புதிய அரசாங்கத்தில் இணைக்கப்பட்டால், சிறிய அளவிலான இராணுவத்தைக் கொண்டு இதனை செய்யலாம் என்பது அவர்களது கணிப்பாகவும் உள்ளது.

அமெரிக்க ஆதரவுபெற்ற பல வெளிநாட்டு ஈராக்கியர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து கொண்டிருந்தாலும் அவர்களிடையே போதுமான மனித சக்தியோ, அமெரிக்க இராணுவத்தின்கீழ் நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான மக்களின் அடித்தளமோ அவர்களுக்கு கிடையாது. அத்துடன், அமெரிக்கர்களோடு வடபகுதியில் ஈராக்கிற்கு எதிரான போரில் பணிபுரிந்த குர்திஷ் இராணுவத்தை பாக்தாத்திற்குக் கொண்டு வருதலோ, மற்ற தென்பகுதி நகரங்களுக்குள் அவர்களை அழைத்துவருவதோ அரேபிய மக்களின் பொது எதிர்ப்பின் வெடிப்பைத் தூண்டிவிடும். ஆகவே பாதிஸ்டு அரசாங்கத்தின் எஞ்சிய ஆட்சியாளர்களை மீண்டும் தேர்ந்தெடுப்பது அவர்களுக்கு மிகவும் எளிதான விடையாக இருக்கிறது.

பிரிட்டனின் இன்டிபெண்டன்ட் பத்திரிகையில் ராபர்ட் பிஸ்க் என்பவர் ஏப்ரல் 17 அன்று விரிவாக ஒரு நிகழ்ச்சியைப் பற்றி கூறியுள்ளார். அமெரிக்கா சதாம் ஹுசைனையும் அவருடைய நெருங்கிய உள்வட்டத்தினரையும் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, ஈராக்கிய மக்களுக்கு எதிராகக் கடுமையான குற்றங்களைப் புரிந்த இடைநிலை, கடைநிலை அதிகாரத் தட்டுக்களின் சான்றுகளை திரட்டும் பணியில் எம்முயற்சியையும் அவர்களால் மேற்கொள்ளப்படவில்லை.

ஈராக்கிலிருந்து போர் பற்றிய வர்ணனையில் தன்னுடைய தைரியத்தால் புகழ்பெற்றுள்ள பிஸ்க், அமெரிக்க இராணுவம் ஈராக்கிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கும் சான்றுகளை திரட்டக்கூடிய இடங்களைக் கைப்பற்றாதிருந்ததை விளக்கியிருந்தார். ஏப்ரல் 9 ம் தேதி பாக்தாத் அமெரிக்கத் துருப்புக்களிடம் வீழ்ச்சியடைந்ததையடுத்து, பாதிஸ்ட் போலிஸ் தலைமை அலுவலகங்கள் பலவற்றிற்கு தான் சென்றிருந்ததாக பிஸ்க் கூறுகிறார். ''ஒரு பிரிட்டன் அல்லது அமெரிக்க அதிகாரிகூட இந்த இடங்களுக்கு வந்து ஏராளமாக உள்ள சான்றுகளைச் சேகரிப்பதிலோ அல்லது பழைய கைதிகளோடு (இக் கைதிகள் தாம் பெரும் துன்பம் அடைந்த இடத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளனர்) பேசியதற்கான ஆதாரமோ எதுவும் இல்லை. இது அவர்களுடைய சோம்பேறித்தனமா? அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதா?'' என்று அவர் குறிப்பிடுகின்றார்.

பல கைதிகள் விசாரணையின்போது சித்திரவதை செய்யப்பட்ட ஒரு பாதுகாப்பு அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான கோப்புக்கள் தரையெங்கும் சிதறிக் கிடந்ததைக் கண்டார். தான் பார்த்த சில மாதிரித் தாள்களில் இறந்து போனோரின் பட்டியலையும் பல ஈராக்கிய உளவுத்துறை அதிகாரிகளின் பெயர்களையும் கண்டதாக தனது கட்டுரையில் பிஸ்க் குறிப்பிடுகிறார். ''இந்த மனிதர்கள் இத்தனை கொடூரமானவர்களா? ஆமாம். அமெரிக்கரால் அவர்கள் தேடப்படுகிறார்களா? இல்லை. சேர்ந்துள்ளனரா? ஆம், பெரும்பாலும் அப்படித்தான் இருக்கமுடியும். சொல்லப்போனால், அவர்களில் சிலர் ஒவ்வொரு நாள் காலையிலும் பாலஸ்தீன் ஹோட்டல் நுழைவாயிலில் காத்துக்கிடக்கும் நீண்ட வரிசையில் அமெரிக்க இராணுவ சிவில் நிர்வாகப் பிரிவு தங்களை மீண்டும் அமர்த்திக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கலாம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

இரகசியப் போலீசின் தலைமை அலுவலகத்தில் ஒரு பின்பக்க அறையில் சுக்குநூறாகக் கிழிக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல மூட்டைகளாக அடுக்கி வைத்திருந்ததைக் காண பிஸ்க் அழைத்துச் செல்லப்பட்டார். ''இவை வாஷிங்டனுக்கோ அல்லது லண்டனுக்கோ எடுத்துச் செல்லப்பட்டு ஏதேனும் ஒரு வழியில் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட முடியாதா? அதே நேரத்தில் கிழிக்கப்படாத கோப்புக்களிலேயே நிறைய தகவல்கள் உள்ளன. ஆனால் அமெரிக்கர்கள் இந்த ஆவணங்களை பரிசீலிக்கவில்லை. அல்லது அதைப்பற்றி கவலைப்பட விரும்பவில்லை'' என மேலும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க இராணுவம் ஈராக்கிய போலிசார் மற்றும் உளவுத்துறையினரிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களை தங்கள் கைக்குள் கொண்டுவரத் தவறினர் என்ற குற்றச்சாட்டு மற்ற செய்தி ஊடக அறிக்கைகளிலிருந்தும் தெளிவாகிறது. ''பல நேரங்களில் நாங்கள் அங்கு செல்லுமுன்பே ஆவணங்கள் அங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டோ, அகற்றப்பட்டோவிட்டன'' என்று ஏப்ரல் 18 ம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்க்கு, ஈராக் ஆட்சியின் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் தன்மையை பகுப்பாய்வு செய்யவேண்டும் என்ற பெயரளவிலான பொறுப்பிற்கு உட்பட்ட ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். ஆவணங்கள் சிதறப்பட்டுவிட்டாலோ அல்லது சான்றுகள் அழிக்கப்பட்டுவிட்டாலோ விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் என இப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கும் பாதிஸ்ட் போலிஸ், உளவுத்துறை அதிகாரிகளுக்கும் இடையேயான பரஸ்பர உறவானது, அமெரிக்காவிற்கெதிரான ஷியாட் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஈராக்கில் புதிய அரசியல் சக்தியாக உருவாகும் நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.

பாதிஸ்டுகள் ஷியாக்களை கொடுமையாக அடக்கியது, இடதுசாரி அணி ஒன்று அங்கு இல்லாதது மற்றும் மாற்று மதசார்பற்ற நிலை ஏற்படுத்த முடியாதது போன்ற நிலைமைகளும், 1990 களில் ஐ.நா. சுமத்தியிருந்த மிகப்பெரும் பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்திய துன்பங்களும், அடிப்படைவாதிகள் கூடுதலான நகரப்புற ஷியாக்களையும் மற்றும் கிராமப்புற ஏழைகளையும் கொண்ட அமைப்பை உருவாக்கக் காரணங்களாக உள்ளன.

பாதிஸ்டுகளைப் பொறுத்தவரையில் அமெரிக்கர்களுக்காகப் பணியாற்றுவது என்பது பழைய ஆட்சி அலுவலர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதோடு தாங்கள் நசுக்கிய ஷியா மக்களிடம் இருந்தும் ஓரளவு பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளனர். அதேநேரம் தற்போது ஷியாக்களை ஒடுக்குவதற்காக வாஷிங்டனின் கட்டளைகளை அவர்கள் நிறைவேற்றவும் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top of page