World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Austria's biggest strike in 50 years

ஆஸ்திரியாவில் 50 ஆண்டுகளில் மிகப்பெரிய வேலைநிறுத்தம்

By Markus Salzmann
12 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

மே 5ந்தேதி வியன்னாவின் வலதுசாரிப் பழைமைவாதிகள் (Conservative) அரசாங்கம் ஓய்வு ஊதியமுறையில் கடுமையான குறைப்புக்களை செய்ய திட்டமிட்டதையடுத்து, ஆஸ்திரியா 50 ஆண்டுகளில் காணாத அளவு மிகப்பெரிய முதலாவது அரசியல் வேலை நிறுத்தத்தைச் சந்திக்க நேரிட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் ஏறத்தாழ 50 இலட்சம் மக்கள் பங்கு கொண்டனர். இது எதிர் பார்த்த்தைவிட அதிகமாகும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் அனைத்திலும் வெளிநடப்புக்கள் நிகழ்ந்தன. அச்சகத்தினர் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் அவசர துணைப்பதிப்புக்கள் மட்டும்தான் செய்தி பத்திரிகைகளாக வெளிவந்தன. நாள் முழுவதும் பணியிடங்களில் கூட்டங்கள் கூடுவது, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது போன்ற வடிவங்களில் ஆயிரக்கணக்கான வேலைநிறுத்த நடவடிக்கைகள் நாள் முழுவதும் பொதுப்போக்குவரத்துத் துறையின் பரந்த அளவிலான பகுதிகளை ஸ்தம்பிக்கச் செய்தன. இரயில்வே தொழிலாளர்கள் சரக்கு வண்டிகளை தடுத்து நிறுத்திவிட்டனர். பல பாடசாலைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டு விட்டன. 300 இற்கும் மேற்பட்ட உருக்கு, உடைத்தொழில் நிறுவனங்கள் அடங்கிய 500 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உத்தியோகத்தர்களும், சாதாரண தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

சால்ஸ்பேர்க்ல் (salzburg) போன்ற பெரிய நகரங்களில் 10,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாலையில் அணிதிரண்டு ஊர்வலமாகத் தெருக்களில் வந்து நகரத்தின் மையப்பகுதியில் கூடினர். மே,13 திகதி கூடுதலான எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. 70,000 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர். 5500 பாடசாலைகள் மூடப்படும். நாட்டின் தலைநகரான வியன்னாவில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட இருக்கிறது.

ஆஸ்திரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் (The Federation of Austrian Trade Unions -OGB) மற்றும் அதன் உறுப்பு ஒன்றியங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. எதிர்ப்பு முக்கியமாக ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவரப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிரானதாகும். இத்திட்டம் OVD/ FPO (ஆஸ்திரிய மக்கள் கட்சி மற்றும் ஆஸ்திரிய சுதந்திரக்கட்சி) அரசாங்கத்தால் கொண்டுவரப்பட இருக்கிறது. கூட்டணி அரசு அனைத்துத் தொழிலாளருக்கும் மிகப்பெரிய அளவில் ஓய்வூதியச் சலுகைகளைக் குறைக்க இருக்கிறது.

ஓய்வூதியச் சலுகைகள் சராசரியாக 20 சதவீதம் குறைக்கப்பட உள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் மக்கள் ஏற்கனவே 15 சதவீதம் குறைப்பை ஏற்க வேண்டியுள்ளது. வயது அதிகம் ஆகாத தொழிலாளர்கள் இன்னமும் அதிகமான குறைப்புகளுக்கு உட்பட நேருகிறது.

ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை மாற்றப்படவுள்ளது. இப்பொழுதிலிருந்து ஓய்வூதியத் தொகைகள் 40 ஆண்டுகால சேவைக்கு பின்னரே வழங்கப்படும். இதுவரை கூடுதலான அளவில் இது 15 ஆண்டுகளாக இருக்கின்றது. முற்கூட்டி ஓய்வுபெறுவதற்கான வயதும், அப்படியான ஓய்வூதியத்திலிருந்து பிடிப்புக்களும் படிப்படியாக 2009 வரை உயர்த்தப்படும். 2009ல் 61.5 ஐ விடக் குறைந்த வயதுடைய ஆடவரும் 56.5 வயதுடைய பெண்களும் முறையே 65 மற்றும் 60 வயது வரை பணிபுரிய வேண்டும். ஒரு நபர் ஓய்வு பெறும் வயதிற்கு முன்னரே ஓய்வு பெற நேரிட்டால்- உதாரணமாக அவர் வேலை இழந்துவிட்டால் அவர் சட்டபூர்வமான ஓய்வுபெறும் வயது காலம் வரைக்கும் ஒவ்வொரு ஆண்டு குறைப்பிற்கும் மிகப்பெரிய அளவிலான குறைப்புக்களை ஏற்க நேரிடும். அரசாங்க ஓய்வு விதிமுறைக்கு குறைப்புடன் இணைந்த அளவில் வயது முதிர்ந்தோருக்கான புதிய தனியார் காப்பீட்டுக்கழக வாய்ப்புக்கள் பற்றிய அணுகுமுறைகள் ஆராயப்பெறுகின்றன.

ஓய்வூதிய முறையில் சீர்திருத்தங்கள் என்பது முழுச்சமுதாய சமூகநல அமைப்பு முறையையும் கொள்ளையடிக்கும் திட்டத்தில் முதல் கட்டமாகும். அடுத்த நடவடிக்கை உடல்நல சேவை திட்டத்தில் ஓர் அடிப்படைச் ''சீர்திருத்தம்' ஆக இருக்கும்.

ஆஸ்திரியத் தொழிலாளரின் மனக்கொதிப்பு ஓய்வூதியக் குறைப்புகளுக் கெதிரானது மட்டமல்ல. பழமைவாதிகள், வலதுசாரியினர் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் ஆகியோர் சமூகபாதுகாப்பு அமைப்பு முறையைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்கி வருகின்றனர். ஆனால் சிறிதும் கருணையற்ற முறையில் இப்பொழுதைய அரசாங்கம் சட்டத்தைப் பாராளுமன்றம் மூலம் சில வாரங்களுக்குள் திணித்துவிடும் முயற்சி தீவிரமான எதிர்ப்பை தூண்டிவிட்டுள்ளது. ஓய்வூதியங்களின் மீதான தாக்குதல் சமூகநலத்திட்டங்களின் மீதான பரவலான தாக்குதலை உள்ளடக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. முன்னர் நன்கு போற்றப்பட்ட தொழிற்சங்கங்களின் உடன்பாடுடனான எல்லாச் சமுதாயச் சிக்கல்களையும் தீர்க்கும் சமூககூட்டு அரசியல் அணுகுமுறைகள் இப்பொழுது திடீரெனத் தூக்கியெறியப்பட்டு விட்டன.

பேர்லினிலிருந்து வெளியாகும் Tagesspiegel செய்திப்பத்திரிகை ''இந்த அளவு தீவிரமான தாக்குதல் சமுதாய நலத்திட்டம் மீது ஆஸ்திரியாவில் இதற்கு முன்னர் எப்பொழுதும் நடத்தப்பட்டிருக்கவில்லை; இது தொடர்பாக சாதாரணமாக ஆய்வு, விவாதம் இவற்றிற்காக ஒதுக்கப்படும் காலம் நான்கு வாரங்களாக இதற்கு முன்னர் எப்பொழுதும் குறைக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் எப்பொழுதுமே ஒரு கூட்டாட்சித் தலைவர் (Federal Chancellor) பற்பல ஆண்டுகளாக அரசாங்கத்தில் கிடத்தட்ட மறைமுகமாகப் பங்குபெற்றிருக்கும் தனது சமுதாயப் பங்காளிகளுக்கு இவ்வளவு குறைவான கவனத்தைச் செலுத்தியதில்லை'' என குறிப்பிட்டிருந்தது.

கடுமையாக வளர்ந்து வரும் எதிர்ப்புக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய பங்கிற்கு வலது-மத்தி அரசாங்கத்தின் சான்ஸ்லர் Wolfgang Schüssel (ÖVP) திட்டவட்டமாக குறைப்புகளை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறார். அரசாங்கம் நாட்டின் சமுதாய உறுதித்தன்மையை ஆபத்துக்குள்ளாக்குகிறது என்ற வணிகக்குழுவின் தலைவர் Leitl உடைய எச்சரிக்கைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் நிதி அமைச்சர் Martin Bartenstein (ÖVP) ''அரசாங்கம் தெருக்களிலிருந்து வரும் மிரட்டல்களுக்கு பணிந்துவிடாது; நாட்டின் நலனுக்கு அது உகந்ததல்ல '' என்று ஆணவத்துடன் கூறினார்.

திக்ஷீவீtக்ஷ் க்ஷிமீக்ஷீsமீtஸீவீtsநீலீ (ஷிறிலூகிustக்ஷீவீணீஸீ ஷிஷீநீவீணீறீவீst றிணீக்ஷீtஹ்) கட்சித் தலைவரின் கீழ் ÖGB தொழிற்சங்க தலைமை வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்கு பல நாட்களை கடத்தியது. தொழிற்சங்கங்கள் கொள்கையளவில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கூட்டணி அரசின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துதற்கு மாற்றுக் கால அட்டவணையை வழங்கி இருந்தால் தொழிற்சங்கங்கள் உடன்பட்டிருக்கும். தொழிற்சங்கங்கள் தங்களுடைய ''சீர்திருத்தங்கள்'' பற்றிய திட்டத்தை தயார் செய்து Schüssel உடன் ஒத்துழைப்பதாகப் பல முறைகள் கூறியிருந்தும், அவர்களுடைய பரிந்துரைகள் ஒவ்வொரு முறையும் திட்டவட்டமாக ஏற்கப்படவில்லை.

அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் வேலைநிறுத்தம் குறிவைக்கப்பட மாட்டாது என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதோடு, அது ஓர் அரசியல் சார்புடைய வேலைநிறுத்தமாக இருக்கமாட்டாது என்றும் கூறியுள்ளன. தொழிற்சங்க தலைவரான Verzetnitsch அரசாங்கத்தை மீண்டும் செவ்வாயன்று தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகள் தொடர்வதற்கு கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராகப் பொதுவான எதிர்ப்புச்சக்திகள் திரள்வதைத் தடுக்கும் முயற்சியாக தொழிற்சங்கத் தலைவர்கள் வேலைநிறுத்தத்தைக் குறைவாக அரசியல் சாரா அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தனர். அதி பழமைவாத பொதுத்துறை மற்றும் (GÖD)

தனியார் தொழில் துறை ((GPA) தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரையில், எவ்விதமான அரசியல் நடவடிக்கை பற்றிய எண்ணமும் கூட கேள்விக்கிடமில்லை. சான்றாக ஆசிரியர்களின் பிரதிநிதிகள் GOD இடம் வேலைநிறுத்தம் ''திறமான முறையில் ஏற்பாடு செய்யப்படவில்லை'' என்று குறை கூறினார்கள். தொழிற்சங்கங்களின் திட்டம் முழுஉணர்வோடுதான் அனைத்துப் பாடசாலைகளிலும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தம் என்பதைத் தவிர்த்தனர். ஆரம்பத்தில் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பானது நல்ல முறையில் கல்விமுறை வேண்டும் என்ற தேவைகளோடு இணைக்கப் பெறவில்லை.

சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைக் கட்சியினர் போன்ற எதிர்க்கட்சிகள் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்த முயலுகின்றனர். அதே நேரத்தில் தாங்கள் சமுதாயப் பணிகளைத் தகர்த்துவிடுவதில் திட்டம் போட்டவர் என்ற உண்மையையும், அவை தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்களுடன் சிறியளவில்தான் மாறுதல்களைக் கொண்டுள்ளன என்பதைப்பற்றியும் மெளனம் சாதிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக SPÖ(சமூக ஜனநாயக கட்சி), பசுமைக் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அரசாங்கத்தை உடன்பாடுபற்றி பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அழைத்தன. அவர்களுடைய அக்கறை ஓய்வூதிய திட்டத்தின் மாறுதல் பற்றி அல்ல. மாறாக எதிர்ப்பு இயக்கத் தமது கட்டுப்பாட்டை மீறி போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பசுமைக்கட்சி தலைவரான Alexander van der Bellen மக்களைத் தீவிரமானவர்களாக மாற்றி விடக்கூடாது என்று அரசாங்கத்தை எச்சரித்தார்.

ÖVP மற்றும் FPÖ ஆகியவற்றின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் வரைவுச்சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக உள்ளனர்- இது அரசாங்கப் பரிந்துரைகளுக்கு பெரும்பான்மை கிடைப்பதை சந்தேகத்திற்கு உட்படுத்திவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக FPÖ பிரதிநிதிகள் அவர்களுடைய 'நிழல்' தலைமை ஜோர்க் ஹைடர் (Jörg Haider) இன் செல்வாக்கின் கீழ், தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஹைடர் தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற உணர்விலுள்ளார். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்புதான் பதவிக்கு வந்த அரசாங்கம், சீர்திருத்தச் சட்டம் தோல்வியுற்றால் வீழ்ச்சியுறும் நிலையில் தள்ளப்பட்டு, ஹைடர் தற்பொழுதைய FPÖ இன் தலைவரும் மற்றும் உதவி சான்ஸ்லர் ஹெர்பேர்ட் ஹுப்ட் (Herbert Haupt) இன் இடத்தைப் பிடிக்கலாம்.

தங்களுடைய நன்மையை கருத்திற்கொண்டு சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைக் கட்சியினரும், வலதுசாரி எதிர்ப்பை ஹைடரைச் சூழ்ந்து அவர்கள் தங்களுடைய எதிர்ப்புத் தன்மையை ஊக்குவிக்க முயற்சி செய்கின்றனர். SPÖ கட்சித் தலைவர் Alfred Gusenbauer, NEWS- என்ற சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டியில் ''முதலில் நாம் எவ்வாறு இந்த ஓய்வூதியக் குறைப்பை தடுத்து நிறுத்துவது என்பது பற்றிப் பேசுவோம். அதில் நாம் வெற்றியடைந்தால் பின்னர் ஒருகால் அடுத்த படியாக தேர்தல்கள் வரக்கூடும். அதற்கும் பின்னர் அதற்கும் அடுத்த படிகளைப்பற்றிப் பேசுவோம்'' என விளக்கினார்.

Gusenbauer, ஹைடர் பிரிவோடு ஒத்துழைக்கலாம் என்பது பற்றி மறுக்கவில்லை. Gusenbauer FPÖ-ஐ வேறு ஒரு நிலையில் இருத்தி பார்க்கலாம் என்பது பற்றி குறிப்பட்டதுடன், ''மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லா சீட்டுக்களும் பழையபடி கலக்கப்படும்'' எனவும் குறிப்பிட்டார். ஹைடரும் தான் ''அப்படிப்பட்ட விளைவுக்குத்தான் தயார் என்றும் தானும் ஒரு பாராளுமன்றப் பெரும்பான்மையில் வேறு கூட்டுக்களைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதாக அறிவித்தார்.

Top of page