World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Over 200 dead in worst Sri Lankan floods in 60 years

இலங்கையில் 60 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்

By our correspondents
20 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் கடந்த சனிக்கிழமை ஐந்து தென் மாவட்டங்களை தாக்கிய பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 200 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 175,000 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. அரசாங்க அலுவலர்களின் படி 700 க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். இது இறப்புத் தொகை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. வீடுகளை இழந்தவர்களில் பெரும்பாலானோர் தற்காலிக அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி நிறைந்து போயுள்ளனர்.

தலைநகர் கொழும்புக்கு தென் கிழக்கில் கடுமையாக பாதிப்புக்குள்ளான இரத்தினபுரி மாவட்டம் 1947 ன் பின்னர் மிகவும் மோசமான வெள்ளத்தை அனுபவித்தது. தென் மாகாணத்தில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் மேல் மாகாணத்தில் களுத்துறையும் பாதிப்புக்குள்ளான ஏனைய மாவட்டங்களாகும்.

திங்கட்கிழமை மழை குறைந்திருந்த போதிலும், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் பற்றிய மேலதிக அறிக்கைகள் வெளிவந்தன. இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய நிலச்சரிவில் சுமார் 25 பேர் புதையுண்டனர். பல பிரதேசங்களில் மின்சாரம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை மீளமைக்க பல நாட்கள் செல்லும்.

இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 12 பெரும் நிலம் மற்றும் மண் சரிவுகளில் உயிருடன் புதையுண்டுள்ளனர். அலபத்த பிரதேசத்தின் பலேவலவில் முழு கிராமமும் புதையுண்டு போயுள்ளதோடு 70 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் ஞாயிறு இரவு 34 சடலங்களை கண்டுபிடித்திருந்த போதிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விரைவதில் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இரத்தினபுரி நகரம் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சனிக்கிழமை நீர்மட்டம் இரண்டு மீட்டர்களுக்கும் அதிகமாக உயர்ந்ததோடு மின்சாரம் மற்றும் தொலைபேசி தொடர்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாகியுள்ளதோடு பெருந்தொகையானவை அழிக்கப்பட்டுவிட்டன. அலபத்த பிரதேசத்தில் 5,100 குடும்பங்கள் உட்பட மாவட்டத்தில் 9,400 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

இரண்டாவதாக பாதிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தில், 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு 25,000 க்கும் அதிகமான குடும்பங்களும் வீடுகளை இழந்துள்ளன. மொரவக்க மற்றும் தெனியாய பிரதேசங்களில் நிலச்சரிவுகளை அடுத்து சுமார் 200 வீடுகள் புதையுண்டுள்ள அதே வேளை100 க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

தென் மாகாணத்தில், காலி, மாத்தறை, அம்பந்தோட்டை மற்றும் தங்கல்லை ஆகிய நகரங்கள் 1968ன் பின்னர் மிக அதிகளவிலான மழைவீழ்ச்சியைப் பெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளதோடு நூறுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். காலி மாவட்டத்தில் மொத்தமாக 5,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

அம்பந்தோட்டை மாவட்டத்தில் 22 பேர் இறந்துள்ளதாகவும் 200 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 21 பேர் கட்டுவான நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். கொழும்புக்கு தெற்கில், களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, பதுரலிய, மீகஹதென்ன மற்றும் யடிகம்பிட்டிய ஆகிய பிற்படுத்தப்பட்ட நகரங்களும் கிராமங்களும் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கும் மேலான மோசமான வெள்ளத்தால் 10,000 த்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையையிட்டு தமது கவலையை வெளிப்படுத்தினர். பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் விஜயத்தையும், அரசாங்க அலுவலர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான அவரது ஆலோசனைகளையும் பற்றிய முதன்மையான ஊடக அறிக்கைகள் வழங்கப்பட்டன. ஒரு புறம் ஒதுக்கப்படாமல் இருப்பதன்பேரில் முன்னணி எதிர்க்கட்சிக்காரர்களை முந்திக் கொண்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவசியமானால் உதவி நிதி வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால் எமது நிருபர்கள் பலேவெல ரட்னகார பாடசாலையில் உள்ள அகதி முகாமுக்கு சென்றபோது பிரச்சாரத்துக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் தெளிவாகியது. மிகவும் பாதிப்புக்குள்ளான இரண்டு கிராமங்களான பட்டகட மற்றும் அபேயபுரவில் இருந்து 3,000 த்துக்கும் அதிகமானவர்கள் பாடசாலையில் தங்கியிருந்தனர். 4,000 க்கும் அதிகமானவர்கள் எல்லாவற்றையும் இழந்துள்ளனர்.

சுமார் 28 வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டுள்ளதோடு 70 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. ரஞ்சித், சமன் ஆகிய இரு இளைஞர்கள், உடல்களை தோண்டுவதற்காக அரசாங்க அதிகாரிகள் எந்தவொரு உபகரணத்தையும் வழங்கவில்லை என எம்மிடம் குறிப்பிட்டனர். "அவர்கள் மண்ணை அகற்றுவதற்கு எமக்கு மண்வெட்டிகளைக் கூட வழங்கவில்லை," எனக் குறிப்பிட்டனர்.

அகதிகள் சனிக்கிழமை மாலை முதல் பாடசாலையில் தங்கிருந்த போதிலும், தூங்குவதற்கோ அமர்ந்திருக்கவோ அவர்களுக்கு ஒரு பாய் கூட கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கம் போதுமானளவு உணவு வழங்காமையினால் அயல் கிராமத்தவர்கள் உணவு வழங்கியுள்ளனர். அங்கு ஐந்து வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்கள் 500 க்கும் அதிகமாக உள்ளனர். இந்தப் பாடசாலையில் இரண்டு மலசல கூடங்களே உள்ளன. மற்றும் சுத்தமான நீர் இல்லாமையால் தொற்றுநோய் பீதியும் ஏற்பட்டுள்ளது.

மக்கள் இடம்பெயர்ந்த அன்று அணிந்திருந்த ஆடைகளையே இன்னமும் அணிந்திருக்கின்றனர். அங்கு மெழுகுவர்த்திகளோ அல்லது விளக்கு மூட்டுவதற்கான மண்ணெண்ணெய்யோ கிடையாது. கிராமத்தவர்கள் எல்லோரும் மிக ஏழைகள். அவர்களின் வாழ்க்கைச் செலவை இறப்பர் தோட்டங்களிலும் இரத்தினக்கல் சுரங்கங்களிலும் அல்லது அன்றாட கூலி உழைப்பிலும் ஈடுசெய்கின்றார்கள். "பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலத்தில் வரிசையாக வருவார்கள், ஆனால் இப்பொழுது ஒருவரையும் காணவில்லை. ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வந்து போனார். ஆனால் அவ்வளவுதான்," என ஒருவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் மற்றும் ஊடகங்களும் இந்த அழிவை ஒரு இயற்கை அழிவாக வருணிக்க முயற்சித்தன. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அடைமழை பெய்தது நிச்சயமான உண்மை. எவ்வாறெனினும், இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலான இரத்தினக்கல் தோண்டும் நடவடிக்கைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட காடுகளை சுத்தம் செய்வதும் நிலச்சரிவுகளுக்கான அபாயத்தை அதிகரிக்கச் செய்தன.

பலேவெல மற்றும் பட்டகொடவின் சில பகுதிகளில், நிலமோ அல்லது வீடோ இல்லாத வறிய மக்கள் ஒதுக்கப்பட்ட காட்டுப் பகுதிகளை சுத்தம் செய்துள்ளனர். அரசாங்க அலுவலர்கள் அவர்களை வெளியேறக் கோரியபோதும் செல்வதற்கான இடத்தைக் கொடுக்கவில்லை. நிலம் ஸ்திரமற்றுள்ளது மற்றும் நிலங்கள் நிலச்சரிவுக்குள்ளாகும் என தெரியப்படுத்தியிருந்தும் கூட அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் வெளியேறவில்லை. இந்த ஆபத்து பற்றி நன்கு அறிந்திருந்த போதிலும், தங்களின் வாக்குகளை காப்பதற்காக, அரசியல்வாதிகள் அவர்களுக்கு நில உரிமைப்பத்திரத்தை தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

ஒருவர் தெளிவுபடுத்தும் போது: "இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் 1982ல் வெள்ளப்பெருக்குக்கும் நிலச்சரிவுக்கும் முகம்கொடுத்துள்ளனர். அது இதுபோன்று கடுமையாக இல்லாவிட்டாலும் டசின் கணக்கான மக்களின் உயிர்களைப் பலியெடுத்தது. ஆனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வெறும் 1,000 ரூபா ($US30) மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த அற்ப பணத்தில் யாரால் சமாளிக்க முடியும்! ஆகவே அவர்கள் அதே இடத்துக்கு மீண்டும் திரும்பினார்கள்."

இன்றைய நிலைமையில் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 15,000 ($US160) ரூபாய்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தமது வாழ்க்கையை அடிப்படையில் இருந்து மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் குடும்பங்களுக்கு இது கொஞ்சமும் போதுமானதல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அழிவுக்கு காரணமான அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வெள்ளப்பெருக்கின் உடனடி தாக்கங்கள் கடந்து செல்லும் போது, அரசாங்கம், எதிர்க் கட்சி, மற்றும் ஊடகங்களும் தனது போலி அக்கறைகளை கைவிட்டு பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் தலைவிதிப்படி விட்டுவிடுவார்கள்.

See Also:

Government leaves thousands of flood victims in eastern Sri Lanka without adequate aid

Top of page