World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bush vows decades of war for "democracy" in the Middle East

மத்திய கிழக்கில் "ஜனநாயகத்திற்காக" பல பத்தாண்டுகளுக்கும் கூடப் போர் நடக்கும் என்று புஷ்ஷின் சபதம்
By Bill Vann
8 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையில் (National Endowment for Demorcarcy -NED) வியாழனன்று உரையாற்றிய ஜனாதிபதி புஷ், ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை, அப்பகுதியில், அமெரிக்காவின் "ஜனநாயகம்" அமைப்பதற்கான தர்மயுத்தத்தின் முதல் கட்டம்தான் என்றும், "வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கும்" அது தொடரும் என்றும் சித்தரித்தார்.

அதிகமாகிவரும் அமெரிக்க இராணுவ வீரர்களின் இறப்பினாலோ -- மேலும் 30 வீரர்கள் இவ்வாரம் கொல்லப்பட்டனர்-- அல்லது அதிகமாகப் பெருகியுள்ள கருத்துக்கணிப்பின் படி, உள்நாட்டில் போருக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பினாலோ தான் கலங்கமாட்டார் என தெளிவாக்கிய புஷ், "மத்திய கிழக்கில் ஜனநாயகத்திற்கான ஒரு பெரிய, முன்னேற்றமான வழிமுறையை வாஷிங்டன் ஏற்றுள்ளதாகவும்" அறிவித்தார். அப்பகுதியில், வரவுள்ள இராணுவத் தலையீடுகளுக்காக, அவருடைய நிர்வாகத்தின் திட்டங்கள் மிக முன்னேற்றமான கட்டத்தில் ஏற்கனவே உள்ளதாகவும் அறிவித்தார்.

"ஈராக்கிய ஜனநாயகம் வெற்றிபெறும், அவ்வெற்றி டமாஸ்கஸிலிருந்து டெஹ்ரான்வரை, ஒவ்வொரு நாட்டின் வருங்காலத்திலும் சுதந்திரம் வரவுள்ளது என்ற செய்தியைப் பறைசாற்றும்" என்ற புஷ், "மத்தியகிழக்கின் இதயபீடத்தில் சுதந்திர ஈராக் நிறுவப்பட்டு விட்டால், உலக ஜனநாயகப் புரட்சியில், அது தனிப்பெறும் நிகழ்ச்சியாக விளங்கும்." எனவும் அறிவித்தார்.

இப்போருக்கு முக்கிய சிந்தனைச் சிற்பிகளாக இருந்த, பென்டகனின் ஆட்சித்தலைமையின் வலதுசாரி சிந்தனையாளர்கள், போர் தொடங்கப்படும் முன், வெளியிட்டு வந்த கருத்துரையைத்தான், இந்த கருத்தும் பிரதிபலிக்கிறது. ஒரு விரைவான, தைரியமான இராணுவத் தாக்குதலின் மூலம், சதாம் ஹுசைன் வீழ்த்தப்பட்டுவிட்டால், அது மத்திய கிழக்கு முழுவதும் ஓர் "அதிர்ச்சி, பெரும் வியப்பு" இவற்றை ஏற்படுத்தி, ஈரானிலும், சிரியாவிலும் ஆட்சிகளை, பகடைக்காய்கள்போல் உருளச்செய்து, இஸ்ராலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பாலஸ்தீனியர்கள் காட்டும் எதிர்ப்பையும் கைவிடச் செய்ய ஊக்கிவிடவும் காரணமாகிவிடும் என்றும் கூறினர்.

இதே சிந்தனையாளர்கள்தான், ஈராக் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிலையில் உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள், அமெரிக்க வீரர்கள் சுதந்திரத்தைக் கொடுக்க வருபவர்கள் என மலர்களுடன் ஈராக்கியர்களால் வரவேற்கப்படுவர் என கூறியவர்களாவர்.

வேறெதுவும் இல்லையென்றாலும், ஈராக்கில் நடைபெற்ற இந்தக் கொடூரமான நிகழ்ச்சிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிராக, அரேபிய உலகம் முழுவதும், மக்களை ஒற்றுமைப்படுத்தியுள்ளது. ஈராக்கை ஒரு "சுதந்திர நாடாக காணாமல்", வாஷிங்டன், தன்னுடைய இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, எண்ணெய் வளங்களின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அப்பகுதியில் தன் மேலாதிக்கத்தை நிறுவும், ஒரு புதிய காலனித்துவத்தின் கட்டத்தை நிறுவும் முயற்சியைத் தொடங்கி உள்ளதாகத்தான் பெரும்பான்மையான கருத்து ஆகும். அமெரிக்கப் படைகளை நாட்டைவிட்டு வெளியேற்ற முயலும் எதிர்ப்பு வீரர்களுடைய நடவடிக்கைகளுக்கு, பொதுவான பரந்த ஆதரவு உள்ளது.

ஈராக்கிலிருந்து எந்தவித பின்வாங்கலும் தங்களது பூகோள நலன்களுக்கு மூலோபாயத் தோல்வி என்று, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் முக்கிய பகுதியினர் கருதுவதால், அவர்கள் இன்னும் அழிவுதரும் கொள்கையைத்தான் ஈராக்கில் பின்பற்றுவார்கள், என்பதைக் குறிக்கும் வகையில்தான், புஷ் தன்னுடைய "ஜனநாயகம்" காக்கும் பாசாங்கைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஒரு கொள்ளையிடும் கொள்கையை, பிரத்தியேகமான, அமெரிக்க பணியான சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உலகம் முழுவதும் பரப்புகிறோம் என்ற பெயரில் ஒரு முகமூடிக்குள் மறைப்பது, அவரே ஒத்துக்கொண்டுள்ளது போல அது புஷ்ஷின் புதிய கண்டுபிடிப்பு இல்லை. தன்னுடைய புதிய மத்தியகிழக்கு கொள்கையை, அவர் உட்ரோ வில்சனுடைய "14 குறிப்புக்கள்", பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் "நான்கு சுதந்திரங்கள்" ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப்பேசியுள்ளார்.

தன்னுடைய பூகோள பேரவாக்களை, ஜனநாயகக் கருணையென்று காட்டிக்கொண்டே, அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து வந்திருப்பதை வரலாறு காட்டியுள்ளது. ஐரோப்பிய வல்லரசுகள், உலக இயற்கை வளங்களையும் சந்தைகளையும் கைப்பற்றும், புவிசார் அரசியல் ஆதாயங்களை நாடியது போலன்றி, "உலகத்தை ஜனநாயகத்திற்காக காத்திடல்" தான், அமெரிக்கா முதல் உலகப்போரில் நுழைவதன் ஒரே நோக்கம் என்று வில்சன் பிரகடனப்படுத்தினார். இதேபோல், ஜேர்மனிய பாசிசம், ஜப்பானிய இராணுவவாதம் இவற்றை எதிர்த்து இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தலையிட்டதும் சிறிதுகூட தன்னலம் இல்லாதது என்றுதான் சித்தரிக்கப்பட்டது.

குளிர்யுத்த காலம் முழுவதிலும், முப்பது இலட்சம் மக்களை வியட்நாம் போரில் கொன்றதில் இருந்து, பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளை சர்வாதிகாரத்திற்குத் தள்ளிய தொடர்ச்சியான, பாசிச இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கள் வரை, ஒவ்வொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் வாஷிங்டனால், "ஜனநாயகத்திற்காக" தான் மேற்கொண்ட நடவடிக்கை என்றுதான் சித்தரிக்கப்படுகிறது.

ஆனால், NED முன்பு புஷ் ஜனநாயகத்தின் பெயரை இழுத்து பேசிய உரையைப் போல பாசாங்கான உரை எப்பொழுதுமே இருந்ததில்லை. இந்த அமைப்பானது, முன்பு இரகசியமாக, எதிர்ப்புரட்சிகர நாசவேலைகள் நடத்திய சிஐஏ யின் செயல்களுக்கு ஒரு மறைப்பு கொடுக்க, றேகன் நிர்வாகத்தால் நிறுவப்பட்டது.

ஈராக்கிற்கு எதிராக சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு போரை மேற்கொண்டு மற்றும் அந்நாட்டை இராணுவ ஆக்கிரமிப்பு ஆட்சியின் கீழ் ஆண்டுவருகிறது என்பதை காணும்போது, புஷ் ஜனநாயகத்தை விடுவிக்க வந்தவர் போல் தன்னைக் காட்டிக்கொண்டு பேசுவது, நம்மை திகைப்படைய வைக்கும் திமிர்த்தனமான மற்றும் எதையும் பொருட்படுத்தாத செயல் ஆகும். தான் விரும்பும் எந்த நாட்டிலும், "ஜனநாயகத்தை" இப்படிப்பட்ட முறைகளில், கொண்டுவரும் உரிமை உள்ளது என்ற வாஷிங்டனின் போக்கையும் பற்றி இது எச்சரிக்கின்றது. தேசிய இறைமை, சர்வதேச சட்டங்கள், சாதாரண மக்களின் உயிரிழப்பு பற்றிய அக்கறைகள், இந்நோக்கத்தின் குறுக்கே நிற்க அனுமதிக்கப்படமாட்டாது.

அப்பகுதியில், அமெரிக்கா கையாண்டுவந்த பிழையான கொள்கை, சரிசெய்யப்படுவதுதான் தன்னுடைய புதிய மத்திய கிழக்குப்பகுதி கொள்கையின் செயற்பாடு எனத் தெரிவிக்கும் அளவிற்கு புஷ் சென்றுள்ளார். "மத்திய கிழக்கில் சுதந்திரம் இல்லாததை பொறுத்தும், ஏற்றும் அறுபது ஆண்டுகள் மேலைநாடுகள் இருந்ததுதான், நமக்குப் பாதுகாப்பு இல்லாமல் போயிற்று; ஏனெனில், நீண்டகாலப் பார்வையில், சுதந்திரத்தின் இழப்பில் உறுதித் தன்மையை விலைகொடுத்து வாங்குவது முடியாததாகும்" என புஷ் அறிவித்தார்.

நல்ல உள்ளம் இருந்தபோதிலும், மத்திய கிழக்கு மக்களுடைய ஜனநாயக விழைவுகளைப் புறக்கணித்தது, வாஷிங்டனுடைய குற்றம் என்ற கருத்தை, இங்கு அமெரிக்க ஜனாதிபதி தெரிவிக்கிறார். ஈரானின் ஷாவிலிருந்து செளதி முடியாட்சி வரை, அப்பகுதியின் மிகப்பெரிய சர்வாதிகாரிகள், இப்பகுதியிலும் அதன் மூலோபாய வளங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், மக்களுடைய ஜனநாயக போராட்டங்கள், சமுதாய முன்னேற்றங்கள் இவற்றை அடக்குவதற்காகவும், வாஷிங்டனால் நேரடியாக சுமத்தப்பட்டோ அல்லது முட்டுக்கொடுக்கப்பட்டோ விளங்கிய அரசியல் கருவிகள்தான் என்று, இவருடைய வரலாற்றை பற்றிய கருத்துப்பேச்சுக்களில் இருந்து உணருவது கடினம்தான்.

அதனுடைய நலன்களுக்குத் தேவையான போதெல்லாம், இத்தகைய சார்பு ஆட்சிகள் மூலம், அமெரிக்கா ஆட்சியைத் தொடர்ந்து கொள்ளும். ஆனால் இனி இத்தகைய கொள்கையினால் தான் கட்டப்பட்டுள்ளதாக கருதாது என்ற கொள்கையை, புஷ் தெரிவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், "சுதந்திரம்" என்ற பெயரில், நேரடி இராணுவக் கைப்பற்றுதலையும், காலனிய முறையிலான ஆக்கிரமிப்பையும் மேற்கொள்ள அது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் "விடுதலை வழங்கும்" அடுத்த இலக்குகள் எவையாக இருக்கும் என்பதைப் பற்றி சந்தேகம் இல்லாமல், அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சு அடையாளம் காட்டி உள்ளது. 2002ல் "தீமைகளின் அச்சு" என சிரியாவையும் வடகொரியாவையும் இணைத்துப் பேசியவற்றை, மீண்டும் கூறாமல், நேரடியாகவே ஈரானை அச்சுறுத்தி உள்ளார். டெஹ்ரானிலுள்ள ஆட்சி, "ஈரானிய மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுக்கு உடன்பட வேண்டும்; இல்லாவிடில் முறைமையான ஆட்சி என்ற மதிப்பை இழக்க நேரிடும்" என அவர் எச்சரித்துள்ளார். புஷ்ஷின் முன் கூட்டித் தாக்கும் போர் என்ற கொள்கை விளக்கத்தின் கீழ், ஆட்சியின் முறைமைத் தன்மை போய்விட்டால், அமெரிக்க இராணுவம் சுமத்தும் "ஆட்சி மாற்றத்திற்கு", ஈரான் ஒரு வேட்புத்தகுதியைப் பெற்றுவிடும்.

மேலும் இப்பேச்சு அமெரிக்கப் படையெடுப்பினால் கவிழ்க்கப்பெற்ற சதாம் ஹுசைனின் ஆட்சியோடு சிரிய அரசாங்கத்தை சமன்படுத்தியது. "ஈராக்கிலும் சிரியாவிலும், தேசிய கெளரவம், பண்டைய அருஞ்சிறப்புக்கள் இவற்றிற்கு மீண்டும் திரும்புவதாக, சர்வாதிகாரிகள் உறுதிமொழி அளித்திருந்தனர். ஆனால், சித்திரவதை, அடக்குமுறை, வறுமை, அழிவு, ஆகியவற்றின் மரபை விட்டுச் சென்றுள்ளனர்" என புஷ் அறிவித்தார்.

அமெரிக்க நட்புடைய சர்வாதிகார நாடுகளில் இவர் குறிப்பிடும் ஜனநாயக சீர்திருத்தங்களின் பீடுநடைக்கு, ஈரானிலும் சிரியாவிலும் தனிச்சிறப்பான தீமைகள் என்று கூறப்படுவதை எதிராக வைப்பதன் மூலம், இவருடைய சுதந்திர வேட்கை பாசாங்குகளின் பின்னால், இவருடைய நிர்வாகம், அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களை பின்பற்றுவதில் மிகுந்த மிருகத்தனமான வழிவகைகளைக்கூட பயன்படுத்தத் தயங்காது என்ற உணர்வை ஐயத்திற்கிடமின்றி தெரிவித்துள்ளார்.

தேர்தல்களும் பொது ஆர்ப்பாட்டங்களும் சர்வ சாதாரணமாக உள்ள ஈரானை, ஜனநாயகத்தின் பார்வையில் முறைமையற்றது என்று அவமதிக்கும் புஷ், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என ஒதுக்கப்பட்டு, நாடு முழுவதும் அரச குடும்பத்திற்கு மட்டும் உரிமையானது என செளதி அரேபியா ஆளப்படும்போது, பிந்தையதை அப்பகுதி முழுவதற்கும் நம்பிக்கை ஒளியூட்டுவதாக உயர்த்திப் பிடிக்கிறார். "செளதி அரசாங்கம், தேர்தல்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுவதற்கான திட்டம் உட்பட சீர்திருத்தத்தினை நோக்கிய முதல் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. செளதி மக்களுக்கு தங்கள் சொந்த சமுதாயத்தில் கூடுதலான பங்கு கிடைத்துள்ளதன் மூலம் அவ் அரசாங்கம் உண்மைத் தலைமையை விளக்கிக் காட்ட முடியும்."

செளதி ஆட்சி, வாடிக்கையாக சிறைக்கைதிகளை சித்திரவதை செய்வது, பொது இடங்களில் சவுக்கடி கொடுப்பது, உடல் உறுப்புக்களை துண்டித்தல், ஒரினச்சேர்க்கை குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றினாலும் பரவாயில்லை. இப்பொழுதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள், ஒர் ஆலோசனைக் குழுவில், 30 சதவீத இடங்களை தேர்தல் மூலம் மக்கள் நிரப்ப அனுமதிக்கப்படுவர் என்று அரச குடும்பம் ஒப்புக்கொண்டு உள்ளதால், அது இப்பொழுது "ஜனநாயக" முகாமை அடைந்து விட்டது.

இதேபோல், "ஒரு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய சட்டமன்றம்" இருப்பதற்காக, குவைத் அரச குடும்பத்தை புஷ் பாராட்டியுள்ளார். அப்பகுதியில், அமெரிக்க நலன்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் குவைத் ஆதரவு கொடுப்பதால், மேலே குறிப்பிட்டுள்ள தேர்தலில் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 5சதவீதம் கூடத் தேர்தலில் பங்குபெற அனுமதிக்கப்படுவதில்லை என்பது பற்றிய பேச்சு எழுப்பப்படுவதும் இல்லை.

மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை வளர்த்தல் பற்றிய புஷ்ஷின் உரையில், இஸ்ரேலிய நிலை பற்றி எந்த குறிப்பும் இல்லாததுதான் வேடிக்கை. உண்மையில், இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பூசல் பற்றிய ஒரே குறிப்பு, 36-ஆண்டுகால சட்டவிரோத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பாலஸ்தீனியர்கள் நிறுத்தினால்தான் தீர்வு கிடைக்கும், என வாஷிங்டன் வழக்கம்போல் கூறுவதை வலியுறுத்தியதுதான்.

"ஜனநாயக சீர்திருத்தத்தை மதிப்புக் குறைத்தும், தடுத்தும், விரோத உணர்வைப் பெருக்கியும், வன்முறையை ஊக்குவிக்கவும் செய்யும் பாலஸ்தீன தலைவர்கள், தலைவர்களே அல்லர். அவர்கள் அமைதிக்கும், பாலஸ்தீனிய மக்களுடைய வெற்றிக்கும் முக்கிய தடைகளாவார்கள்" என புஷ் அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களும், ஏன் அரபு உலக மக்கள் அனைவருமே, ஆக்கிரமிப்புத்தான் "அமைதிக்கு முக்கிய தடை", என்ற தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பு நிலைமைகளின் கீழ்- சியோனிச குடியேற்றங்களுக்காக பாலஸ்தீனிய நிலத்தைப் பறித்தல், சட்டத்திற்குப் புறம்பான அரசியல் படுகொலைகள், வீடுகள் இடிக்கப்படுதல், சாலைத்தடைகள் மூலம் பொருளாதார வாழ்க்கையை முடக்குதல், ஊரடங்கு உத்தரவுகள், வாழமுடியாத சேரிகளில் பாலஸ்தீனியரை பிரிக்கும் பாதுகாப்புச் சுவர்கள் - இவற்றைப்பற்றி புஷ் பேச மறந்துவிட்டார்.

பாலஸ்தீனியப் பகுதிகளில் வாஷிங்டனுக்கு விருப்பமில்லாத தலைவர்களை பாலஸ்தீனியர் தேர்ந்தெடுப்பர் என்பதனால் அமெரிக்கா அப்பகுதியில் தேர்தல்கள் நடத்துவதை எதிர்க்கிறது.

"பழைய தவறுகளை பற்றியே பேசிக்கொண்டும், பிறரைக் குறைகூறுதலுக்கும் பதிலாக, மத்திய கிழக்கில் உள்ள அரசாங்கங்கள் உண்மையான பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும், தங்கள் நாடுகளின் உண்மையான நலன்களுக்கு உழைக்க வேண்டும்" என்று இஸ்ரேலிய-அரபு பூசல்கள்பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டு, புஷ் பேசினார். வாஷிங்டனால் முழுவதும் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு, அணுவாயுதங்களையும் வைத்துக்கொண்டு, தன்னுடைய ஒவ்வொரு அண்டை அரபுநாட்டினோடும் ஆக்கிரமிப்பு வெறியில் அவர்கள் மத்தியில் இருக்கும் இஸ்ரேல், ஓர் "உண்மையான பிரச்சினை" இல்லையா?

இதற்குக் கொடுக்கப்படும் "உண்மையான தீர்வு" ஆச்சரியப்பட வைக்கவில்லை: "வெற்றி பெற்றுள்ள சமூகங்கள், தங்கள் பொருளாதாரத்தை தனியார்மயமாக்கி, சொத்துரிமையை பாதுகாப்பு உடையதாக்கிக் கொள்கின்றன." அமெரிக்க ஆட்சியாளரான போல் ப்ரீமரின் ஆணையால், ஈராக்கில் இக்கொள்கை முதலில் நடைபெற்று வருகிறது. ஈராக்கிய பொருளாதாரம் முழுவதும் ஏலத்தொகுப்பில் வைக்கப்பட்டு, மிகுந்த இலாபம் தரும் துறைகள் அயல்நாட்டு மூலதனம் வாங்குவதற்காக வைக்கப்பட்டு, குறைந்த இலாபம் தருபவை மூடப்பட்டு அவற்றின் தொழிலாளர்கள் வேலையிழப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய மூலோபாய இலக்கு, எண்ணெய் ஆதாரங்கள், உற்பத்தி இரண்டின்மீதும் இப்பொழுதுள்ள அரசாங்கக் கட்டுப்பாட்டை அகற்றி, அமெரிக்காவை அடிப்படையாக கொண்டுள்ள பெரும் ஆற்றல் நிறுவனங்களின் நேரடிக்கட்டுப்பாட்டிற்குள், அவற்றைக் கொண்டுவருவதாகும்.

அரேபிய மக்களுக்கு இக்கொள்கை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, 1990களில் பழைய சோவியத் ஒன்றியத்தில் "சுதந்திரத்திற்கு" அழைத்தச் செல்லும் பாதை என்ற பெயரில் 17 பில்லியனர்களை உருவாக்குவதற்காக, நாட்டுமக்கள் பாதிப்பேரை வறுமைக்குத்தள்ளிய நிலையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

புஷ்ஷின் பேச்சு, ஜனநாயகப் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் தகுதிகள் எந்த அளவு அவரிடம் துல்லியமாக உள்ளது என்ற வினாவை எழுப்புவது வெளிப்படை ஆகும். தன்னுடைய NED கூட்டத்தினருக்கு: "இப்பகுதியில் சீர்திருத்தங்களை ஊக்குவித்து, அவற்றைக் காணும் பொழுது, நவீனமயமாக்கப்படுதல் என்றால், மேல்நாட்டு நாகரிகமுறையைப் புகுத்துதல் என்ற கருத்து கூடாது என நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்." மத்திய கிழக்கில் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் அவர்களுடைய கலாச்சாரத்தையே பிரதிபலிக்கும். அவர்கள் நம்மைப்போல் இருக்கவேண்டாம், இருக்கத் தேவையுமில்லை." என அவர் கூறுகிறார்

அப்படியானால், இந்நாடுகளில் ஜனாதிபதிகள் வாக்குகள் எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுவார்களா, அல்லது அரசியல் சார்புடைய நீதிபதிகளின் முடிவுகளால், தோற்றவர்கள் பதவியில் இருத்தப்படுவார்கள் என்ற பொருளா? இப்படிப்பட்ட ஜனாதிபதிகள் தங்கள் குடிமக்களை "எதிரிகளின் போராளிகள்" என அறிவித்து, அவர்களை காலவரையின்றி குற்றச் சாட்டுக்கள், விசாரணைகள் எதுவுமின்றிச் சிறையில் அடைக்கும் உரிமையையும் தாங்களே எடுத்துக்கொள்ள மாட்டார்களா? அவர்களுடைய பண்பாட்டு வேறுபாடுகள் இத்தகைய பிரச்சினைகளில் மாறுபட்டு இருப்பதற்கு உடன்படுவாரா என்பது, புஷ்ஷினால் தெளிவாக்கப்படவில்லை.

மத்திய கிழக்கிலும், சர்வதேச அளவிலும், புஷ் நிர்வாகம் கடைப்பிடிக்கும் கொள்கைகளும், வழிவகைகளும், அமெரிக்காவிற்குள்ளேயே அது கடைபிடிக்கும் கொள்கையின் விரிவுதான். இதுகாறுமில்லாத அளவு போலீஸ் அதிகாரங்களை உள்நாட்டிற்குள் கொண்டு, மிகப்பரந்த அளவு நிதிகளை உழைக்கும் மக்களிடமிருந்து செல்வம் நிறைந்த மேல்தட்டிற்கு மாற்றிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் ஆகும். மத்தியகிழக்கை இராணுவ சக்தியினால் கைப்பற்றி, அப்பகுதியின் எண்ணெய் வளங்கள்மீது கட்டுப்பாட்டை கொள்வதற்காகவும், அமெரிக்கத் தளமுடைய நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர்களுக்கு புதிய வருமான ஆதாரம் கொடுப்பதற்காகவும், நவீன காலனித்துவ ஆட்சியை சுமத்த முயலுகிறது. புஷ்ஷின் ஜனநாயகப்படுத்தல் என்ற பாசாங்குகளின் குற்றஞ்சார்ந்த சாரம் இதுதான்.

இத்தகைய கொள்கை, மத்தியகிழக்கில் காலனித்துவ மரபுவழி பற்றி கசப்பான விளைவுகள் இருப்பதை கருத்தில் கொள்ளாமலும், தேசிய இயக்கங்கள் நீண்டகால, இரத்தம் சிந்திய போராட்டங்களை, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக நடத்துவர் என்பதைக் கருதாததில் பைத்தியக்காரத்தனத்தின் கூறு உள்ளது. அரபு மக்கள் "ஜனநாயகம்" என்ற பெயரில் அமெரிக்கப் படைகளை வரவேற்பர் என்ற ஏமாந்த கொள்கை அம்பலப்படுத்தப்பட்டு, ஈராக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்பகுதி முழுவதும் இக்கொள்கை செயல்படுத்தப்பட்டால், மக்கள் எழுச்சி கொழுந்து விட்டு எரிந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவை நேருக்கு-நேர் எதிர்கோள்ளும்.

புஷ்ஷின் உரை, செய்தி ஊடகத்திற்குள்ளே இருந்தோ அல்லது ஜனநாயகக் கட்சியினுள்ளே இருந்தோ ஆழ்ந்த விமர்சனத்தை சந்திக்கவில்லை. அமெரிக்க கொள்கை, உயர்சிந்தனை அளவிலும், ஜனநாயக புரவலர் முறையாலும் உந்தப்படுகிறது என்ற பாசாங்குத்தனம் பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது; புஷ் நிர்வாகத்துடன் நெருங்கிய பிணைப்புக்களை கொண்டுள்ள ஹாலிபேர்ட்டன் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஈராக்கில் கொண்ட இலாபத்தினால் பெரும் பொருள் ஈட்டியுள்ளபோதிலும், இக்கருத்துதான் உள்ளது.

வாஷிங்டன் மேற்கொண்டுள்ள வெற்றிகொண்டு காலனித்துவ முறையை நிறுவுதல் என்ற கொள்கைக்கான எதிர்ப்பு, பொருளாதார அளவில் அதன் செலவினங்களை கட்டாயமாக ஏற்கவேண்டிய நிலையில் உள்ள, மற்றும் அங்கு சண்டையிடவும் உயிரிழக்கவும் அனுப்பப்படும் அமெரிக்க சமுதாயக் கூறுபாடுகளிலிருந்து, அதாவது, பரந்த அமெரிக்க உழைக்கும் மக்களிடமிருந்து வரவேண்டும்.

See Also :

ஹெலிகாப்டர் மீதான தாக்குதலை அடுத்து - ஈராக்கில் பரந்த மக்கள் படுகொலைக்காக வாஷிங்டன் தயாரிப்பு செய்கிறது

Top of page