World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Terrorism commission caves in to White House over 9/11 documents

பயங்கரவாத விசாரணைக் குழு 9/11 பத்திரங்கள் தொடர்பான விஷயத்தில் வெள்ளைமாளிகைக்கு விட்டுக் கொடுத்தது

By Patrick Martin
24 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 11ம் தேதியன்று, பயங்கரவாதிகளால் நியூயோர்க் மாநகர் மற்றும் வாஷிங்டன், தாக்குதல்களுக்கு ஆளானதை விசாரணை செய்ய அமைக்கப்பட்டிருந்த சுயாதீன விசாரணைக்குழு, வெள்ளை மாளிகையின் வளைந்துகொடுக்காத தன்மையை எதிர்கொள்கையில் பின்வாங்கி, குழுவிற்கு எந்த தகவல்களைக் கொடுத்தால்போதும் எனத் தீர்மானிக்கும் உரிமையை புஷ் நிர்வாகமே எடுக்கட்டும் என்று ஏற்றுக்கொண்டுவிட்டது.

அன்றாடம் ஜனாதிபதிக்கு கொடுக்கப்படும் குறிப்புக்கள் (Presidential Daily Briefs PDBs), குழுவிடம் குறைந்த பட்சம் மட்டுமே காட்டப்படும், அன்றாடம் அவற்றைப்பற்றிய உளவுத்தகவல்கள் சுருக்கம் அளிக்கும் ஆவணங்கள் அதன் பரிசீலனைக்கு கொடுக்கப்படமாட்டாது என, வெள்ளை மாளிகைக்கும் அமெரிக்காமீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றி விசாரணைசெய்யும் குழுவிற்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது.

சட்டபூர்வமாக நிர்வாகச் சலுகைகள் என்ற பெயரில் அதிகாரம், இல்லாவிட்டாலும், சுயாதீனமான சிறப்புக்குழு சட்டமன்றத்தின் பகுதியாக இல்லாமல், காங்கிரசும் வெள்ளை மாளிகையும் கூட்டாக நிறுவியிருந்த குழு என்றபோதிலும், ஜனாதிபதிக்கு அன்றாடம் கொடுக்கப்படும் குறிப்புக்களை புஷ் நிர்வாகம் கொடுக்க மறுத்துவிட்டது.

புஷ்ஷிற்கும் அவருடைய உயர் ஆலோசகர்களுக்கும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்படுவதற்கு ஒருமாதம் முன்பே, ஆகஸ்ட் 6, 2001ல் கொடுக்கப்பட்ட ஒரு PDB தான், அல் கொய்தா பயங்கரவாதிகள், அமெரிக்க கண்டத்திலுள்ள அமெரிக்காவிற்குள், கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு பயங்கரத்தாக்குதல்கள் நடத்தப் போவதாக திட்டமிட்டிருந்ததைக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குழுவின் பத்து உறுப்பினர்களில் ஒருவரும், வெள்ளை மாளிகை அலுவலர் ஒருவரும், கிளின்டன் நிர்வாகம், புஷ் நிர்வாகத்தின் முதல் எட்டு மாதங்கள் வரையிலான, செப்டம்பர் 11 தொடர்புடைய PDBக்கள் பற்றிய நூற்றுக்கணக்கான ஆவணங்களைப் பரிசீலனை செய்வர். தொடர்புடைய PDB க்களின் சுருக்கத்தை இவர்கள் தயார்செய்வர், அவை குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் முன்னர், வெள்ளை மாளிகை அதை ஆய்வுசெய்து, தணிக்கைக்கு உட்படுத்தும்.

குழுவின் இரு மூத்த தலைவர்களான, நியூ ஜெர்சியின் பழைய கவர்னரும் குடியரசுக் கட்சியின் குழுத் தலைவருமான தோமஸ் கீனும், இண்டியானாவின் பழைய சட்டமன்ற உறுப்பினரும், ஜனநாயகக் கட்சியிலிருக்கும் குழுவின் துணைத்தலைவரான லீ ஹாமில்டனும், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு இடாமல், இந்த வெள்ளை மாளிகையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட விதிமுறைக்கு உடன்பட்டுள்ளனர்.

நிர்வாகம் ஊர்ந்து செயல்படுவது, மத்திய விமானத்துறை நிர்வாகத்திற்கும் (Federal Aviation Administration -FAA) விமானப்படைக்கும், செப்டம்பர் 11 அன்று, விமானப் படையின் தற்காப்பு விமானங்கள் அன்று எவ்வாறு செயல்பட்டன எனக்கூறும் ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடும்படி ஏற்கனவே இக்குழுவை நிர்ப்பந்தித்துள்ளது. வெள்ளை மாளிகை, FAA யிற்கும் பெண்டகனுக்கும் இந்த உத்தரவை ஏற்குமாறு பணித்தாலும், ஜனாதிபதியின் அன்றாட குறிப்புக்கள் பற்றி உத்தரவு வந்தால், எதிர்த்துப் போராடுவதற்கு அது உறுதிபூண்டுள்ளது, நீண்டகாலம் பிடிக்கும் நீதிமன்ற வழக்கை போடும் என்று அச்சுறுத்தியுள்ளது.

மேயர் மைக்கல் ப்ளும்பர்க், இரகசியமானவை என்று காரணம் காட்டி, கொடுக்க மறுத்ததை அடுத்து, நியூயோர்க் நகர் போலீசிற்கும் தீயணைப்பு செய்தித் தொடர்பிற்கும், செப்டம்பர் 11 பதிவு நாடாக்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுமாறும், இக்குழு உத்தரவு இட்டது.

கீனும், ஹாமில்டனும் றிஞிஙிக் க்களை ஆய்வு செய்வதற்கு, குடியரசுக் கட்சியிலிருந்து பிலிப் ஜெலிகோவ் (Philip Zelikow), ஜனநாயக் கட்சியிருந்து ஆணையர் ஜேமி கோர்லிக் (Jamie Gorelick), என இரண்டு பேரைத் தேர்ந்து எடுத்தனர். அமெரிக்க இராணுவ/உளவுத்துறை அமைப்புக்களைக் காக்கும் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால் இருவருமே சரியான தேர்வுதான்.

ஜெலிகோவ், வேர்ஜீனிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளவர்; புஷ் நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். இவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கோண்டலீசா ரைசுடன் இணந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்; தேசிய பாதுகாப்பு குழுவில் கிளின்டன் நிர்வாகத்திலிருந்து புஷ் நிர்வாகத்திற்கு மாறும் காலத்தில் வேலைசெய்திருந்தார். கோர்லிக், கிளின்டன் நிர்வாகத்தில் எட்டு ஆண்டு காலம், முதலில் பென்டகனில் வழக்கறிஞராகவும், பின்னர் அரசாங்கத்துணை தலைமை வழக்கறிஞராகவும், மொத்தம் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

செப்டம்பர் 11 தாக்குதல்களில் பாதிப்புற்றவர்களுடைய குடும்பங்களின் பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை ஆவணங்களை அணுகுவதற்கு வரம்பு கட்டியதைக் கண்டித்தனர்; பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி அமெரிக்க உளவுத்துறையினரும், அரசாங்க அதிகாரிகளும் முன்கூட்டியே என்ன அறிந்திருந்தார்கள் என்பதுபற்றி குழு அறிந்துகொள்ளப் பெற்றுள்ள அதிகாரத்தை இது மீறுகிறது என்றும் கூறியுள்ளனர்.

குடும்பங்கள் இயக்க குழுவினர், உடன்பாடு, "முழுமையாக உண்மையைக் கண்டுபிடிக்க உதவுவதை தடுப்பதால், ஏற்பதற்கில்லை.... குழு, சிஐஏ- க்கும் நிர்வாகத்துறைக்கும் ஆணையிடுவதற்குப் பதிலாக ஏன் இந்த உடன்பாடு ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதை அமெரிக்க மக்களுக்கு முழுமையாக விளக்கி ஓர் அறிக்கையை வெளியிடவேண்டும்" என்ற ஒரு அறிவிப்பையும் வழங்கி உள்ளது.

இக்குழுவின் செய்தித்தொடர்பு பெண்மணி, கிறிஸ்டன் பிரீட்வீசர் (Kristen Breitweiser), (இவருடைய கணவர் றோனால்ட் உலக வர்த்தக மையத் தாக்குதலில் உயிரிழந்தவர்), செய்தியாளரிடம்: "உடன்பாடு பற்றிய முழுவிவரமும் பொதுமக்களுக்கு விளக்கப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன். இது ஒரு சுயாதீனமான விசாரணைக்குழு, இதன் செயல்முறை வெளிப்படையாக இருக்கவேண்டியதென்பது தெரிந்ததே, அதாவது பகிரங்கமானது என்று கூறப்படுவதாக இருக்க வேண்டும்." எனக் கூறினார்.

பிரீட்வீசர் அலுவலக இயக்குனர் ஜெலிகோவின் பங்கைத் தனியே எடுத்துக் கூறினார்: பில் ஜெலிகோவ் நலன்களைப் பொறுத்தவரை மிகுந்த மோதல் நிலையில் உள்ளார். கோண்டி ரைசுடன் அவருக்கு மிகுந்த நட்பு உண்டு, மாற்றுக்காலக் குழுவிலும் (Transition team) அவர் இருந்துள்ளார், இவற்றில் சில ஆவணங்கள் அதைப்பற்றிய தொடர்புடையதாகவும் இருக்கும். இது மனச் சஞ்சலத்தைக் கொடுக்கிறது. இது ஒரு சுயாதீனமான விசாரணைக்குழுவே அன்றி, ஜனாதிபதிக்குழு அல்ல."

குழுவின் இரண்டு ஜனநாயக கட்சி உறுப்பினர்களும், உடன்பாட்டைக் கண்டித்துள்ளனர். பழைய இண்டியானா சட்டமன்ற உறுப்பினர், டிமோதி ரீமர் (Timothy Roemer), குழுவிற்கு கொடுப்பதற்குமுன் PDBக்களைத் தணிக்கை செய்தல் என்ற அதிகாரத்தின் மூலம், பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய எந்தக்குறிப்பையும் வெள்ளை மாளிகை அகற்றிவிடமுடியும் என்றும், "புகைவிடும் துப்பாக்கிகளை" மறைத்து விடலாம் என்றும் கூறியுள்ளார். இந்த உடன்பாட்டின்கீழ், "நம்முடைய உறுப்பினர்கள், ஒரு ஒன்பது பக்க அறிக்கையில் இரண்டு அல்லது மூன்று பத்திகள் மட்டுமே பார்க்க கூடும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஜோர்ஜியாவின் பழைய செனட் உறுப்பினர், மாக்ஸ் க்ளீலாண்ட், உடன்பாட்டை, "மனமொப்பி ஏற்பதற்கில்லை," மற்றும் அமெரிக்க ஜனாதிபதியால் உறுப்பினர்கள் வேண்டுமென்றே சமரசத்திற்குத் தள்ளப்படுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

இந்த உடன்பாட்டின்படி செயல்பட்டால், "குழு உறுப்பினர் என்னும் முறையில் எந்த அமெரிக்கரையும், குறிப்பாகப் பாதிக்கப்பட்டவரது குடும்பத்தினரை நான் நேரெடுத்துப் பார்க்கமுடியாது, குழு முழுமையாக எல்லாவற்றையும் அணுகியது என்றும் கூறமுடியாது" என க்ளீலாண்ட் கூறினார்.

கிளீலாண்ட், ஒரு பழமைவாத ஜனநாயகக் கட்சியாளர்; வியட்நாம் போரினால் உடலில் முன்று உறுப்புக்களை இழந்தவர்; பழைய போர்வீரர்கள் அமைப்பிற்கு ஒருமுறை தலைவராக இருந்தவர். ஆனால் கடந்த மாதம் அவர், வெள்ளை மாளிகையின் தடுப்புமுயற்சியானது, குழுவை செப்டம்பர் 11 தாக்குதல்கள் குறித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவேண்டிய மே, 27, 2004 காலக்கெடுவிற்குள் அதனை செய்யமுடியாமல் ஆக்கிவிடும் என்று எச்சரித்துள்ளார். காலதாமதம் செய்வது புஷ் நிர்வாகத்தை "நேரப்படி வேலை செய்யாதவாறு" அனுமதிக்கும் மற்றும் 2004 தேர்தல்களுக்கு முன்னர் பதில்கூறக்கடமைப்பட்டதை தவிர்க்கும் நோக்கம் கொண்டது, அரசியல் ரீதியான நோக்கமுடையது.

அந்த நேரத்தில் செய்தி ஊடகத்தால் குறைவாகக் கவனிக்கப்பட்ட கருத்து, ஆனால் மிக அசாதாரண முறையில் உட்குறிப்புக்களைக் கொண்டு, கிளேலாண்டால் கூறப்பட்டது; "ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல, செப்டம்பர் 11க்கு முன்னர் இந்த பயங்கரவாதிகளைப் பற்றி அரசாங்கம் தான் ஒத்துக்கொண்டதைவிடக் கூடுதலாகவே, அறிந்திருக்கக் கூடும் என்பதைத்தான் நாம் அறிகிறோம்."

செப்டம்பர் 11 பற்றிய விசாரணைக் குழுவிற்கும், வெள்ளை மாளிகைக்கும் இடையே ஒற்றுமை பற்றி, செய்தி ஊடகம் பொதுவாக குறைகளில்லாமல்தான் தகவல்கள் கொடுத்துள்ளன. கிளின்டன் தன்னுடைய பாலியல் வாழ்க்கை பற்றி சிறப்பு விசாரணைக்குழுவிற்கு ஊர்ந்த முறையில் நடந்து கொண்டதற்கு கூச்சல்போட்ட செய்தி ஊடகம், புஷ் நிர்வாகம், அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஒற்றைச்செயலில் நிகழ்ந்த, பெரும் மக்கள் படுகொலை பற்றிய விசாரணைக்கு, போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது பற்றி, அதிக கவனம் செலுத்தாததின் பின்னணி கடும் மாறுபாடுதான்.

Washigton Post இந்த உடன்பாட்டை, வெள்ளை மாளிகையின் குறிப்பிடத்தக்க சலுகை எனச் சித்தரித்துள்ளது. இந்த உடன்பாடு நவம்பர்16ம் தேதி, "காங்கிரசும், அடிக்கடி அரசாங்க ஆய்வாளர்களும் நிர்வாகத்துறையின் முக்கிய ஆவணங்களைப் பரிசீலனை செய்யப் போராடும் முயற்சிகளை எதிர்க்கும் நிர்வாகம், இப்பொழுது அதிலிருந்து விலகியுள்ளதைக் குறிக்கிறது," என எழுதியுள்ளது.

இந்நாளேடு, ஜெலிகோவ் நிர்வாகத்தைப் புகழ்ந்ததை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது: "நாங்களோ, வெள்ளை மாளிகையினரோ, குடியரசின் வரலாற்றில் முன்னோடி இல்லாதமுறையில் இந்த உடன்பாட்டைக் கொண்டுள்ளோம். இந்த ஆவணங்கள் பரிசீலனைக்கு மட்டும் என்பதோடன்றி, எங்களுக்கு மிகவும் இரகசியமான ஆவணங்கள் பலவற்றை ஆராயும் உரிமை வழங்கப்பட்டதும் உண்மையேயாகும்."

போஸ்ட் இந்த மூடிமறைத்தலுக்கு நவம்பர் 17 தலையங்கத்தில், "அணுகுதலுக்கு போதுமான ஒப்புதல்" என்ற தலைப்பில், தன்னுடைய ஆசியையும் கொடுத்துள்ளது. நாளேடு அறிவித்தது: "புஷ் நிர்வாகம், குழுவிற்கு மலையளவு ஆவணங்களைக் கொடுத்துள்ளது. சமீபத்திய பேரங்கள் மிக இரகசியமான ஆவணங்களைப் பொறுத்தவை, அவற்றைப் பாதுகாக்க, தக்க முன்னெச்செரிக்கை எடுத்துக்கொள்வது நியாயமே... நம்முடைய பார்வையில், குறையிருந்தாலும் இந்த உடன்பாடு குழுவிற்குத் தேவையான அணுகுதலைக் கொடுக்க உத்தரவாதம் கொடுத்துள்ளது."

இந்த உடன்பாட்டைப்பற்றிய செய்திக் கட்டுரையில் New York Times: "நிர்வாகத்தின் அதிகாரிகள், 9/11க்கு சிலவாரங்கள் முன்பே, உளவுத்துறை அறிக்கைகள் திரு புஷ்ஷின் பார்வைக்கு வந்தன என்பது, வெள்ளை மாளிகையானது அல்கொய்தா பெரும் அழிவைத்தரக்கூடிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததற்கு, தக்க நடவடிக்கை மேற்கொள்ள தவறிவிட்டதோ என்று உய்த்துணர வைக்கலாம், என்ற கவலையையும் உணர்ந்துள்ளனர்" என வர்ணித்துள்ளது.

Top of page