World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

John Christopher Burton replies to letters on the death penalty, parole and the California prison system

மரணதண்டனை, பரோலில் வெளிவருதல் மற்றும் கலிஃபோர்னியா சிறைமுறை பற்றிய கடிதங்களுக்கு ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன் பதிலளிக்கிறார்

1 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

கலிபோர்னியா திருப்பியழைத்தல் தேர்தலில், சோசலிச சமத்துவ கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர், ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன், மரணதண்டனை, நாணய வாக்கின்பேரில் (பரோலில்) வெளிவருதல் மற்றும் கலிஃபோர்னியா சிறைமுறை பற்றிய அவருடைய பிரச்சாரத்தின் மனப்பாங்கு குறித்து ஏராளமான கடிதங்களைப் பெற்றுள்ளார். அவற்றுள் சிலவற்றையும், பேர்ட்டனுடைய பதில்களையும், கீழே பிரசுரிக்கிறோம்.

அன்புள்ள வேட்பாளருக்கு,

ஊழல்மிகுந்த சிறைமுறை, வாக்கு நாணயத்தின் பேரில் வெளியே வரும் முறை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? நம்முடைய அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாகவே, "குற்றங்களைப்பற்றிக் கடுமையாகவே" இருப்பதாக அறிவித்துள்ளனர். உண்மையில் அவ்வாறுதான் உள்ளனர்; ஆனால் கெட்டிக்காரத்தனமாகவும், நியாயமாகவும் இருப்பதில்லை. இந்த காட்டுமிராண்டித்தனமான போக்கினால் கலிஃபோர்னியர்கள், சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். ஒரு லட்சத்து அறுபதாயிரம் கைதிகள் நம் மாநிலச் சிறையினுள் அடைக்கப்பட்டுள்ளனர்; பலர், இரண்டு, மூன்று முறை வாக்கு நாணயத்தின் அடிப்படையில் வெளி வந்தும், பழைய, புதிய கவர்னர்கள் Proposition 89ஐத்-தவறாகப் பயன்படுத்தி, வாக்கு நாணயத்தின் அடிப்படையில் வெளியேபோக தகுதியுள்ளவர்கள் கூட மறுக்கப்படுகின்றனர்.

DM

******

அன்பார்ந்த பேர்ட்டன்

கலிஃபோர்னிய கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பரோலில் விடுவிக்கப்படுவதைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? இன்னும் குறிப்பாக, கவர்னரானால், கவர்னர் டேவிசுடைய உதாரணமான, தவறான காரணங்களை காட்டி வெளியே அனுமதிக்கப்பட்ட நல்ல கைதியைக்கூட மீண்டும் சிறையில் தள்ளுகிறார், என உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பதுபோல் நடந்து கொள்வீர்களா?

உண்மையுள்ள

SL

******

ஹை,

PTO எனப்படும் சிறையிலிருந்து ஆன்லைனில் பேசும் அமைப்பைச் சேர்ந்தவன் நான். நீங்கள், சிறை முறையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தகுதியுடைவர்களை பரோலில் வெளியேவிடும் வழக்கத்தை டேவிஸ் நிறுத்திவிட்டார்; ஆயுட்கைதிகளுக்கு குடும்பத்திலிருந்தே ஒருவரும் வரக்கூடாது என்ற தவறான நிபந்தனையும் உள்ளது. இதைப்பற்றி சிந்தித்தால், குழந்தைகளும் குடும்பத்தினரும் தங்களுக்குப் பிரியமானவரைப் பார்க்க நினைக்கலாம், மாதத்தில் இதற்காக உள்ள இரு நாட்களில் பெற்றோரும் காணலாம். என்னைப்போல பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பிரியமானவர்கள் சிறையில் உள்ளனர்; அதாவது, சிறையிலுள்ளோர், அவர்களுடைய குடும்பத்திற்கு நன்மை செய்யும் கவர்னருக்கு ஆயிரக்கணக்கான வாக்குகள்.

உண்மையுள்ள,

KP

******

மரணதண்டனை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? ஆயுள்தண்டனை, நன்னடத்தைக்காக பரோலில் விடலில் உடன்பாடு உண்டா? நன்றி. திருமதி ஜேனிஸ் எல் கேய், நிறுவனர், WFFPDRCA எனப்படும், மரணவரிசையிலுள்ள மக்களின் மனைவியர், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர், கலிஃபோர்னியா.

******

உங்கள் கடிதங்களுக்கு நன்றி

நான் மரணதண்டனை விதிப்புக்கு விரோதி. மிருகத்தனத்திலும், வன்முறையிலும் ஆழ்ந்துள்ள ஒரு சமுதாயத்தினுடைய அடையாளம் தான் மரணதண்டனை ஆகும். எந்த விதத்திலும், அது குற்றஞ் செய்வதை பயமுறுத்தி நிறுத்திவிடுவதில்லை, அல்லது, இன்னும் அடிப்படையாகக் கூறினால், சமுதாயத் தேவைகள், சமுக சமத்துவமின்மை என்ற குற்றம் செய்யப்படும் சூழ்நிலையை, மாற்றிவிடுவதில்லை.

பொதுவாக பிழையுடன் செயல்படும் பரோல் குழுவே, பரிந்துரை செய்து, பரோலில் வெளிவரும் கைதிகள், டேவிஸால் பரோல் ரத்து செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவது, சீற்றத்திற்கு உரியதே. அரசாங்க வழக்குரைஞர் ரோவன் கிளேன், மற்றும் சிலரோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறேன், பரோல்களில் டேவிசின் சந்தர்ப்பவாத தலையீடுகளை எதிர்ப்பது எனக்குத் தெரியும்; அத்தகைய எதிர்ப்புகளுக்கு வலுவான ஆதரவு கொடுத்துள்ளேன்.

சிறைமுறையின் நோக்கமும், செயல்பாடும் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற பொதுப் பிரச்சினையை பரோல் முறை எழுப்புகிறது. எந்த மனிதாபிமானமுடைய, தெளிந்த சமுதாயத்திலும், கைதிகளுடைய கல்வி, பண்பாடு இவற்றின் தரத்தை உயர்த்தப்போதுமான வளங்கள் அர்ப்பணிக்கப்பட்டு, வன்முறை, குற்றஞ்சார்ந்த செயல்களை குறைக்கும் முயற்சிகள் பொதுவாக மேற்கொள்ளப்படும். அப்போதுதான் தீமைகள் குறைந்து, கைதிகள், அவர்களுடைய குடும்பங்கள், சமுதாயம் பெரிய அளவில் நன்மை பெறும். சிறையில் அடைத்து ஒருவனுக்கு தண்டனை கொடுத்தால்த்தான் திருந்துவான் என நினைப்பது காட்டுமிராண்டித்தனம் ஆகும்.

மூன்று முறை தவறு செய்தால் பரோலே கிடையாது, இன்னும் பல கடுமையான சட்டங்கள் உள்ள ஆட்சிகளை நான் எதிர்க்கிறேன். பல கைதிகளும் துரதிருஷ்டவசமாக தவறுகளை செய்துள்ளனர், பொருளாதார சூழ்நிலையினால் கைதிகள், குற்றங்களை செய்ய நேர்ந்துள்ளது. பல நிலைமைகளில், சிறைதண்டனை கொடுப்பதைவிட, மாற்று முறைகள் மற்றும் வேறு முயற்சிகள் முயற்சிக்கப்பட வேண்டும்.

இறுதியாக, பெரும்பாலான குற்றங்கள் மனிதனின் பொறாமை இயல்பால் ஏற்படுவதில்லை, அவை வறுமையினாலும், அதையொட்டிய சமுக சரிவினாலும் ஏற்படுகின்றன. நான் ஒரு சோசலிஸ்ட் என்ற முறையில், பெரும்பாலான குற்றங்களுக்கு ஆதாரமாக உள்ள சமுக அடிப்படை மாற்றப்படவேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்.

உண்மையுள்ள

John C. Burton

Top of page