World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Former minister Robin Cook says Blair lied over Iraqi weapons of mass destruction

பிரிட்டன்: ஈராக்கிய பேரழிவு ஆயுதங்கள் பற்றி, பிளேயர் பொய் கூறினார் என முன்னாள் மந்திரி ரொபின் குக் தெரிவிக்கிறார்

By Chris Masrden
8 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிராக ஒரு சட்டவிரோத, ஆக்கிரமிப்புப்போரை தொடக்க முடிவெடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே, சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பது, தான் நன்குணர்ந்தவரை பிரதம மந்திரிக்கு தெரியும் என முன்னாள் காபினெட் மந்திரி ரொபின் குக், வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வளம் கொழிக்கும் மத்திய கிழக்கு நாட்டை அமெரிக்க தலைமையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தி படையெடுப்பதை தான் ஆதரிக்கத்தயார் என்று ஜோர்ஜ் புஷ்ஷிடம், பல மாதங்கள் முன்பே ஏற்றுக்கொண்ட உடன்படிக்கையை நியாயப்படுத்தும் வகையில், பிளேயர் பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய ஆபத்தைப்பற்றி வேண்டுமென்றே பொய் கூறினார் என குக் உறுதியாகக் கூறுகிறார்.

கூட்டு உளவுத்துறைக்குழுவின் தலைவரான ஜோன் ஸ்கார்லெட்டும், அத்தகைய அணு, இராசயன, உயிரியல் ஆயுதங்களின் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தார் என்பதையும் குக் மேலும் உறுதிப்படுத்தினார். 45 நிமிஷத்திற்குள் பேரழிவு ஆயுதங்களை ஈராக் ஏவிவிட முடியும் என்று கூறிய, இப்பொழுது பரந்த அளவில் நம்பகத்தன்மையை இழந்துள்ள, அரசாங்கத்தின் செப்டம்பர் 2002 பாதுகாப்பு ஆவணத்தொகுப்பை தயாரிக்கும் பணிக்கு பொதுப்பொறுப்பை ஸ்கார்லெட்டுதான் ஏற்றுக்கொண்டிருந்தார். டாக்டர் டேவிட் கெல்லியின் மரணம் பற்றிய ஹட்டன் பிரபு விசாரணையின்பொழுது, அரசாங்கம் கோப்பை "பாலியல் ரீதியில் குழப்பி இருந்தது" என்ற குற்றச்சாட்டிற்கு எதிரான அரசாங்கத்தின் முக்கிய தற்காப்பு வாதமே, ஸ்கார்லெட்தான் ஆவணத்தை "கொண்டிருந்தார்" என்பதும், 45நிமிஷ கூற்று MI6 உளவுத்துறை தகவலைத்தான் ஆதாரமாக கொண்டது என்பதுமாகும்.

ஐ.நா.வின் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளின் அழுத்தங்களினாலும், ஆயுத ஆய்வாளர்களின் சோதனைகளாலும், தான் வைத்திருந்த என்ன பேரழிவு ஆயுதங்களிருந்தாலும், அவற்றை முன்னரே அழித்துவிட்டதால், ஈராக் உலக அமைதிக்கு ஆபத்தைக்கொடுக்கவில்லை, என்பதை நன்கு அறிவாராகையால், ஸ்கார்லெட்டும், பிளேரைப் போலவே பெரிய பொய்யர் என குக் இப்பொழுது சக்திமிக்க வகையில் முத்திரையிட்டுள்ளார்.

பிளேயரின் முன்னாள் வெளிநாட்டு மந்திரியும், பின்னர் மக்கள் மன்றத்தின் தலைவருமாக இருந்தும், மார்ச் 17ம் தேதி மந்திரிசபையிலிருந்து ராஜிநாமா செய்துள்ளவரின் வெளியீடுகள், ஹட்டன் பிரபு விசாரணை, எவ்வாறு ஒரு அரசியல் பனிப்பூச்சு என்பதையும் அம்பலப்படுத்த உதவியுள்ளன.

ஹட்டனோ, அல்லது அவருடைய வக்கீலான ஜேம்ஸ் டிங்கிமன்ஸோ, பிளேயரையோ, மற்ற அரசாங்க உயரதிகாரிகளையோ, இப்பொழுது பொய்கள் எனத் தெரிந்துவிட்ட கூற்றுக்களைப்பற்றி, ஆணித்தரமாக சவால் விடவில்லை. சொல்லப்போனால், விசாரணையின் பெரும்பகுதி, மார்ச் 29 அறிக்கையில் BBC Today நிகழ்ச்சியில் நிருபர் ஆண்ட்ரூ ஜில்லிகன், அரசாங்கம்தான் தவறு என்று தெரிந்தே 45 நிமிஷ கூற்றை சேர்த்தது என அழுத்தமாகக் கூறியதைத்திருப்ப பெற வலியுறுத்தவதிலேயே கடந்தது.

இம்முயற்சியில் விசாரணை வெற்றிகண்டுள்ளது; ஹட்டனுடைய அறிக்கை, ஜில்லிகன்மீது, அவருடைய "தவறான அறிவிப்பினால்" கெல்லியின் மரணத்திற்கு அவர்தான் காரணம் என முக்கிய ஆள்மாறாட்ட பொறுப்பைக்கூட சுமத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என்பதற்கு ஒவ்வொரு குறிகாட்டலும் இருக்கிறது.

பிளேயரின் போருக்குச் செல்லவேண்டும் என்ற முடிவை, மிக உயர்ந்த பதவியிலிருந்து எதிர்ப்பவர் விசாரணைக்குச் சாட்சியம் சொல்லக்கூட அழைக்கப்படாதவர்கள் International Development ன் பழைய Secretary ஆன கிளேர் ஷோர்ட் போல் பலர் -- 45 நிமிஷக்கூற்று, மற்றும் பல தகவல்கள் பொய் என்பதை பிளேயர் அறிந்துள்ளார் என்று கூறுவதால், இத்தகைய தவிர்ப்புக்கள் நிலைக்காதவையாக ஆகும்.

புறப்பாட்டுப் புள்ளி (Point of Departure) என்ற தலைப்பில் வெளிவர உள்ள குக்கின் நாட்குறிப்புக்கள், ஈராக் போருக்கு இரண்டு வாரம் முன்பு, பிளேயர் தனிப்பட்ட முறையில், சதாம் ஹுசைன் உபயோகிக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார், என்பதை விளக்குகின்றன. பிரதம மந்திரி, ஈராக்கிற்கும் அல்கொய்தாவிற்கும் தொடர்பு உண்டு என மக்கள் தவறாக நினைக்க வேண்டும், என்ற எண்ணத்திலேயே "குறிப்பாக தெரிவிக்கும் பொய்யுரையை வேண்டுமென்றே" தயாரித்தார் என்றும், ஐ.நா. ஆயுத ஆய்வுகள் வெற்றியடையக்கூடாது என விரும்பியதாகவும் தெரிகிறது. ஆகவேதான், அரசாங்கம் மக்கள் மன்றத்திற்கு தவறான வழியின்மூலம் "பொய்யுரையை ஒட்டி" போருக்காக வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார் என குக் கூறுகிறார். ஜோன் ஸ்கார்லெட்டும் ஈராக்கிடம் அத்தகைய பேரழிவு ஆயுதங்கள் கிடையாது என்பதை "ஏற்றுள்ளார்" என எழுதுகிறார்.

ஐ.நா.வில் செயல் முடியவில்லை என்றால், ஜனாதிபதி பில் கிளின்டனிடம், அமெரிக்கா ஈராக்மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால், தான் ஆதரவு கொடுப்பதாக முன்னரே பிளேயர் உறுதியளித்திருந்ததாகவும், "ஜனாதிபதி புஷ்ஷிற்கும், பிரிட்டிஷ் ஆதரவை அவர் கொடுத்தால், பழைய வழக்கத்தை ஒட்டியே அவ்வுறுதிமொழி அமையும்", என குக் தெரிவிக்கிறார்.

குக்கின் நாட்குறிப்பின் தொடர்புடைய பகுதிகள், பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:

இந்த ஆண்டு பெப்ரவரி 20ம் தேதி, ஸ்கார்லெட், குக்கிடம் அறிக்கையளித்தார். "ஒரு மணிநேரம் அவர் கூறியதைக்கேட்ட பின்னர், ஆயுதங்கள், பெரிய அளவில் மக்களை இலக்குகொண்டு தாக்க என்ற கருத்தில், சதாம் ஹுசைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்ற முடிவிற்குத்தான் வந்தேன்."

மார்ச் 5ம் தேதி, பிளேயரை, குக் சந்தித்தார்; "சதாமுடைய ஆயுதக்கிடங்குகளை பற்றி பேசும்பொழுதுதான் முக்கியமான உரையாடல் வெளிவந்தது. அவரிடத்தில், நான் கூறினேன்; எனக்கு கூறப்பட்டுள்ள தகவலின்படி, பெரிய அளவில் முக்கிய நகரங்களை தாக்கக்கூடிய ஆற்றல் உடையவை என்ற முறையில், சதாமிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை. ஒருவேளை அவரிடம் போர்க்களத்தில் பயன்படுத்தக்கூடிய இரசாயன ஆயுத வெடிமருந்துகள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும். அவற்றைப் பிரிட்டிஷ் படைகள் மீது அவர் செலுத்தக்கூடும் என்று நீங்கள் கவலைப்பட்டதில்லையா?"

பிளேயர் பதில் கூறினார்: "ஆம், ஆனால் அவற்றை அவர் மறைத்துவைக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சி, அவற்றை விரைவில் இணைத்துப் பயன்படுத்த முடியாமல் கடினமாக்கியுள்ளது."

இந்த உரையாடலிலிருந்து, இரு தொடர்புடைய முடிவுகளுக்கு குக் வந்தார்: "முதலாவதாக, ஐ.நா.வின் ஆயுத ஆய்வுகளின் முன்னேற்றத்தை பொறுத்து, போருக்கான கால அட்டவணையின் உந்துதல் இல்லை. ஹான்ஸ் பிளிக்ஸ், (ஐ.நாவின் தலைமை ஆயுத ஆய்வாளர்) எவ்விதமான அறிக்கை கொடுப்பார் என்பது, போருக்குச்செல்ல நாள்குறிக்கப்பட்டுள்ளதில் மாற்றத்தை ஏற்படுத்தும், என்ற பாசாங்கான முயற்சியை பிளேயர் கொண்டிருக்கவில்லை.

"இந்த உரையாடலில் என்னை கவலை கொள்ளவைத்த இரண்டாவது அம்சம், நீண்டதூர இலக்குகளை உத்தரவாதத்துடன் தாக்கும் திறனுடைய, நகர மக்கள் தொகைகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள உண்மையான பேரழிவு ஆயுதங்கள், சதாமிடத்தில் இல்லை என்ற என்னுடைய கருத்தை மாற்றிட, பிளேயர் எம்முயற்சியையும் கொள்ளவில்லை. கூட்டு உளவுத்துறை குழுத்தலைவர், பிரதம மந்திரி இருவரிடமுமே அக்கருத்தை தெரிவித்துள்ளேன், அவர்கள் அதை ஏற்கவும் செய்துள்ளனர்."

அப்பொழுது, போர்க்களத்தில் தந்திரோபாய முறையில் உபயோகிக்கக்கூடிய கணிசமான இராசயன வெடிபொருட்களை சதாம் கொண்டிருக்கக்கூடும் என நான் நம்பினேன். ஆனால், நகர மக்களுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய வடிவமைப்பு இல்லாததால், அவை பிரிட்டனுக்கு உடனடி உண்மை ஆபத்தை அளிக்காது, ஈராக்கிய பீரங்கிப்படை தாக்கக்கூடிய தூரத்தில், போர்க்களத்தில் நம்முடைய வீரர்களை இறக்கினால், வடிவமைப்பு வரையறையின்படி, அவர்களை ஆபத்திற்குட்படுத்தும்.

"ஊடுருவிய ஆய்வுகளின் அழுத்தத்தை ஒட்டி, இத்தகைய இராசயன குண்டுகளும்கூட, உபயோகிக்க இயலாதபடி செய்யப்பட்டுவிட்டன என இரு முறை எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது."

முடிவுரையாக, குக் கொடுக்கும் சுருக்கமாவது: "45 நிமிஷத்திற்குள் தாக்க தயாராகிவிடும் பேரழிவு ஆயுதங்களை சதாம் உண்மையிலேயே கொண்டிருந்தாரென, பிளேயர் செப்டம்பரில் நம்பினார் என்பதில் எனக்குச்சந்தேகம் இல்லை. ஆனால் உரையாடலில் தெளிவானது என்னவென்றால், மார்ச் மாதம் அத்தகைய நம்பிக்கை அவரிடம் கிடையாது என்பதுதான்."

இந்த அறியப்படுதலிலிருந்து, தன்னுடைய நம்பிக்கையை அவர் கூறுகிறார்: "அமெரிக்க ஜனாதிபதியின் வேண்டுகோளை தவிர்க்க முடியாததைவிட, பிரிட்டிஷ் மக்கள் கருத்தைப் புறக்கணிக்கமுடிவது எளிதாகையால், அவர் போருக்குச் சென்றார் என்பதுதான் உண்மையான காரணம் என நான் நிச்சயமாக நம்புகிறேன்."

இப்பொழுது அவர் அழைக்கின்றவாறு, "மிகுந்த ஆழமுடைய அரசியல் கேள்விகளில் ஒன்று எழுகிறது. மக்கள் மன்றத்தின் விதிகளின்படி, தாங்கள் பாராளுமன்றத்தில் தவறான தகவலைக் கொடுத்துவிட்டது தெரிந்தவுடன், அமைச்சர்கள் உடனடியாக சான்றை சரிசெய்ய வேண்டும். செப்டம்பர் கோப்புத் தொகுப்பில் உள்ளவற்றை (அமெரிக்க) அரசுத்துறை நம்பவில்லை என்றால், இவர்களுடைய உயர்மட்ட வல்லுநர்களே நம்பவில்லை என்றால், பாராளுமன்றத்திடம் தவறான செய்தி தொகுப்பைக்கூறி, பொதுமக்களிடம் போருக்கு வாக்களிக்குமாறு கேட்பதைவிட, உண்மையை சொல்லி இருக்கவேண்டாமா?"

வேறு எந்த சூழ்நிலையிலும் எவ்வாறு குக்கின் நாட்குறிப்புக்கள், பிளேயர் பிரதம மந்திரி பதவியிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை கூட்டாக ஒலிக்கச் செய்யவில்லை என்பதை கற்பனை செய்தல் கூட இயலாது. மாறாக, ஒரு சில தொழிற்கட்சி அதிருப்தியாளர்கள், லிபரல் ஜனநாயகவாதிகள், பழமைவாதிகள் ஆகியோர்தான், மீண்டும் --இம்முறை, உளவுத்தகவல் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா, அல்லது போதிய அளவு தகவலின்மையினாலா, அல்லது அதன்வழி தயாரிக்கப்பட்ட "பிழையான முன்னறிவிப்பு தகவலினால்" பிரிட்டன் போருக்குச் செல்ல நேரிட்டது-- என ஆராய்வதற்காக, ஒரு நீதிவிசாரணை கோரியுள்ளனர்.

அரசாங்கத்தின் பொய்களைப்பற்றி, சுதந்திரமான விசாரணை வேண்டும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஹட்டன் பிரபு சமீபத்தில் தலைமையேற்று நடத்தி பூசிமெழுகிய விசாரணையைப்போல், அதுவும் இருக்கக்கூடாது. மேலும் பேரழிவு ஆயுதங்களே இருந்ததில்லை, பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் பொய் கூறின என்ற ஐயத்திற்கிடமில்லாத அடிப்படை உண்மையும் அசட்டை செய்யப்படுகிறது. இச்சூழ்நிலையில் விசாரணை கோரல் என்பது, அரசாங்கத்திற்கு சவால் விடுதல் என்பதைவிட, அதன் தாள்களில் அரசியல் ரீதியாய் நெடுஞ்சாண் கிடையாக விழுவதைத்தான் குறிக்கும்.

குக்கின் நடவடிக்கைகளே இதை உறுதி செய்கின்றன. இவருடைய நாட்குறிப்புக்கள்தான் முதல் முறையாக பிளேயர் வேண்டுமென்றே பொய் கூறினாரென்பதை கூறுகின்றன. இதற்குமுன், பிரதம மந்திரி நேர்மையான கணிப்பு பிழைகளைத்தான் செய்தார் எனக்கூறி ஒதுங்கியிருந்த ஷோர்ட் போலவே, இவரும் ஒதுங்கித்தான் இருந்தார்.

கடந்தவாரம், தொழிற் கட்சியின் மாநாடு வரை, வேண்டுமென்றே இதை வெளியிடாமல்தான், குக் இருந்தார்; ஏனெனில், பிளேயருக்கு கூடுதலான சிரமங்களைக் கொடுக்க இவர் விரும்பவில்லை. அச்சூழ்நிலையில் தொழிற்சங்க அதிகாரத்துவம், 10ம் இலக்கத்துடன் சேர்ந்து சதிசெய்து, போரைப்பற்றியோ, ஈராக்கிய ஆக்கிரமிப்பு பற்றியோ, பிளேயர் அகற்றப்படவேண்டும் என்பது போன்ற தீர்மானங்களை விவாதத்திற்கு வராமல் செய்தது.

குக்கின் நாட்குறிப்பின் வெளியீட்டிற்கு, தன்னுடைய வழக்கமான அகந்தையுடன், பிளேயர் எவ்வாறு விடையிறுத்தார் என்பது, இவர் எதிர்கொள்ளும் வெட்கம் நிறைந்த அரசியல் எதிர்ப்பை காணும்போதே தக்க அளவில் விளக்குகிறது. பிளேயரின் செய்தித்தொடர்பாளர், பிரதம மந்திரி மீது கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை, "அபத்தமானவை" எனக்கூறினார்; அவருடைய பழைய சக ஊழியர்கள், குக் கூறிய, போரைப்பற்றி அமைச்சரவையில் குறிப்பிடத்தகுந்த அமைதியின்மை இருந்தது என்பதை, வரிசையில் நின்று மறுத்துப்பேசினார்கள்.

பிளேயருக்கு அதிகாரபூர்வமானது எனக்கூடிய எதிர்ப்பு, ஏன் இந்த அளவு மறைமுகமாகவும், கோழைத்தனமாகவும் உள்ளது என்பதை இரு காரணிகள் வடிவமைக்கின்றன.

முதலாவதாக, வாஷிங்டனுடன் அரசியல் உடன்பாடுகாண, பிளேயர் எந்த அளவு செல்லுவார் என்ற அமைதியற்ற தன்மையும், ஐரோப்பிய நட்பு நாடுகளை தேவைக்கதிகமாக பிரிட்டன் பகைத்துக் கொண்டுவிடுமோ என்ற பயமும் உள்ளன; ஆனால், இவை இன்னமும், மாற்று முன்னோக்கிற்கான தன்மையைப் பெற்று விடவில்லை. ரூப்பேர்ட் முர்டோக்கின் தலைமை ஒலிப்பானாக உள்ள Sunday Times லியே வந்த தலையங்கம், இவ்வகையில் தனித்தன்மை கொண்டு, பிளேயரைப்பற்றி எழுதுகிறது: "இவர் எப்போழுதுமே, நீண்ட விளையாட்டைத்தான் கொள்வார். மார்ச் 2002ல் அமைச்சரவை சலசலப்புக்களை எதிர்நோக்கியபொழுது, குக் வெளிப்படுத்தியுள்ளது போல், பிளேயர் கூறினார்; "நாம் அமெரிக்காவுடன் நெருங்கியே இருக்கவேண்டும். இல்லாவிடில், அவர்கள் எதைச்செய்கிறார்களோ, அதில் மாறுதல் செய்ய நமக்கு செல்வாக்கு இல்லாமல் போய்விடும்." இது அப்போதும் உண்மை, இப்போதும் உண்மையாகத்தான் உள்ளது. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க நிர்வாகத்திறனை, உலகின் மற்றய பகுதிகளோடு ஏதேனும் செய்ய வைப்பதுதான், பிரதம மந்திரியின் சாதனை. அமெரிக்கா சும்மா இருந்துவிடாமல் எதையேனும் தொடரவேண்டும். மிஸ்டர் பிளேயர் அவ்வாறு செய்யவேண்டிய அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளார்."

காத்திரமான முறையில் பிளேயரை எதிர்ப்பது என்பது, அது வாஷிங்டனையும், இரு அரசாங்கங்களையும், காலனித்துவ வென்று கைப்பற்றல், சமூகநலத்திட்டங்களை தகர்த்தல், பெருநிறுவனங்களுக்கு பெரிய அளவில் வரிகளைக்குறைத்தல் ஆகியவற்றை செயல்படுத்த ஆணையிடும் நிதிபடைத்த ஒருசிலவர் ஆட்சிக்கு சவால் விடுவதுபோல் ஆகும். அதிருப்தியடைந்துள்ள தொழிற் கட்சியினரோ, டோரிக்களோ, லிபரல் ஜனநாயகவாதிகளோ, அத்தகைய போராட்டத்தை நினைத்தும் கூட பார்க்கமாட்டார்கள்.

பிளேயர் மற்றும் அவரைக்குறை கூறுவோர் இருதரப்புமே, அரசியல் பரிசீலனைகளில் முக்கியமாகக் கொண்டுள்ள இரண்டாவது தன்மை, அரசியல் நிகழ்ச்சிப்போக்கிலிருந்து பெரும்திரளான தொழிலாள வர்க்கம் ஈவு இரக்கமின்றி ஒதுக்கப்படவேண்டும் என்ற உடன்பாடுதான். இவ்வாண்டில் பெப்ரவரி மாதம், போரை எதிர்த்து மில்லியன் கணக்கில் தெருவிற்கு வந்து ஆர்ப்பரித்த மக்கள், கோபமாகவும், அரசாங்கத்திடமும் அதன் பெருவர்த்தக சார்பு உடைய செயல்பட்டியலில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அனைத்துப்பெரிய கட்சிகளின் அரசியல்வாதிகளும் நன்கு அறிவர். இவை அரசியலளவில் எந்த வெளிப்பாட்டையும் காட்டக்கூடாது என்பதில் --வாக்குப்பெட்டியோ, செய்தி ஊடகமோ, கட்சிக்குள்ளேயோ, தொழிற்சங்கங்கள் மூலமோ, எப்படியாயினும்-- அன்றாட முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனவே பிளேயரின் மீது குறைகூறுவோர், அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொண்டுவர நினைக்கலாம் --ஆனால், ஈராக் போன்ற வெடிக்கும் பிரச்சினையை ஒட்டி, பரந்த அளவு சமுதாய மற்றும் அரசியல் இயக்கமாக, அது தீப்படித்து எரியும் அளவிற்கு அல்ல.

தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் சுயாதீனமாய் அணிதிரட்டல் தான், அரசாங்கத்தின் போர்வெறிக்கும், வலதுசாரி சமுதாய அரசியலுக்கும் சவால்விடும் வழியாக அமையும். இதற்கு, ஒரு புதிய, உண்மையான, சோசலிசக் கட்சியைக் கட்டி எழுப்பியாக வேண்டும். அது போர் எவ்வாறு, பெரிய அளவில் ஈராக்கில், காலனித்துவ ஆக்கிரமிப்பைக்கொள்ள தயார்படுத்தப்பட்டு தாக்குதல் நடைபெற்றது என்பதைப் பற்றி ஒரு சுயாதீனமான மற்றும் ஜனநாயக ரீதியிலான விசாரணையைக் கோரும்.

Top of page