World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

New York City: Relatives of 9/11 victims march in opposition to US war policies

நியூயோர்க் நகரம்: 9/11 நிகழ்ச்சிகளில் பாதிக்கப்பட்டவர்களது உறவினர் அமெரிக்கப் போர்க் கொள்கைக்கு எதிராக நடத்திய பேரணி

By a WSWS reporting team
12 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

2001 செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற தாக்குதல்களில் பலியானவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பல டஜன் கணக்கான குடும்பத்தினர் சுமார் 2000 ஆதரவாளர்களுடன் புதன்கிழமை மாலை பிராட்வே யூனியன் சதுக்கதில் சிதைந்துவிட்ட உலக வர்த்தக மையம் இருந்த இடத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். அந்தப் பகுதியைச் சுற்றி ''நம்பிக்கை வளையத்தை'' உருவாக்கிக் கொண்ட அவர்கள், ஒரு மணி நேரம் அப்பகுதியில் மெழுகுவர்த்தி அமைதிப் பேரணி நடத்தினர்.

வியாழக்கிழமையன்று அதிகாரப் பூர்வமாக நினைவு நாள் குடியரசுக்கட்சி அரசியல்வாதிகளின் ஆதிக்கத்துடன் நடைபெற்றது. அதற்கு மாற்றாக, செப்டம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அமைத்துள்ள எதிர்கால அமைதி இயக்கத்தின் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது.

வியாழனன்று அரசு நடத்திய நிகழ்ச்சியில் ஜனாதிபதி புஷ் கலந்துகொள்ளாது தவிர்த்துக் கொண்டார். அவரைக் கண்டால் கண்டன முழக்கங்கள் தூண்டிவிடப்படலாம் என்று வெள்ளை மாளிகை கவலைப்பட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை. துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனி கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருப்பதால் உலக வர்த்தக மைய இடத்தை நோக்கி அணி வகுத்து வரும் குடும்பங்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்று கருதி அவரும் கலந்துகொள்ளவில்லை.

புதனன்று நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி அணிவகுப்பானது தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்டது. அணிவகுப்பில் கலந்துகொண்டவர்கள் பொதுவாக அமெரிக்காவின் போர்க் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டதைக் கண்டித்தனர்.

இந்த கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள், செப்டம்பர் 11 தாக்குதல்களில் கணவர்களை அல்லது மனைவிகளை, புதல்வர்களை அல்லது புதல்விகளை இழந்தவர்கள் ஆவர். ஆப்கானிஸ்தான் மீதும், அதற்குப் பின்னர் ஈராக் மீதும் ஆக்கிரமிப்பு நடத்தியதை நியாயப்படுத்துவதற்கு புஷ் நிர்வாகம் கூறி வந்த பொய் மூட்டைகளை உதறித் தள்ளிவிட்ட அமெரிக்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்தப் பேரணி அமைந்தது.

தங்களது துக்கத்தை அரசியல் மற்றும் சொந்த ஆதாயங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள புஷ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதில் பொதுமக்களிடையே ஆத்திரம் மலை அளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அதன் ஒரு சிறு துளிதான் புதன்கிழமையன்று டஜன் கணக்கான குடும்பங்கள் நடத்திய மெழுகுவர்த்தி ஊர்வலம் ஆகும். புஷ் நிர்வாகமானது, இந்த தாக்குதல்கள் பற்றியோ அவற்றை அனுமதித்ததற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பாகவோ எந்தவிதமான விசாரணைகளும் நடப்பதற்கு தடைக் கல்லாக செயல்பட்டு வருகின்றது.

குறிப்பாக ஆகஸ்ட் மாத கடைசி நிலவரப்படி மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள இழப்பீட்டு நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு சுமார் 1.700 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தகுதியிருந்தது. இந்த நிதி உருவாக்கப்பட்டதன் நோக்கம் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்குகள் தொடரப்படுவதை கைவிடுபவர்களுக்கு அரசாங்கம் தனது கஜானாவில் இருந்து திட்டவட்டமான குறைந்தபட்ச தொகையை வழங்குவதற்கு வகை செய்வதற்காகும். குறைந்தபட்சம் 250,000 டொலர்களிலிருந்து அதிகபட்சம் 6.1 மில்லியன் டொலர்கள் வரை சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1.6 மில்லியன் டொலர்கள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டது.

அப்படியிருந்தும் இத் தாக்குதலில் பலியான பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் மனுச் செய்யவில்லை என்பது குறித்து அரசாங்க அதிகாரிகளது கவலை அதிகரித்து வருகின்றது. சட்டப்பூர்வமாக இழப்பீடு கோரி நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதால் நஷ்ட ஈடு கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தாலும், பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதையே விரும்புகின்றனர். செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் தொடர்பாகவும், அதற்கு முன்னர் சில மாதங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக புஷ் நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டதால், அந்த பதிலை நீதிமன்றம் மூலம் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலோர் விரும்புகின்றனர்.

யுனைடெட் ஏர்லைன்ஸ் 93 வது விமானத்தில் தனது மகனை பறிகொடுத்த ஆலீஸ் ஹேக்லாண்ட் என்ற தாய் அண்மையில் Wall Street Journal பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது ''பொது நிதியிலிருந்து பணம் பெறவது எளிதானது மற்றும் பாதுகாப்பானது. விரைவாக கிடைக்கும் என்று மக்கள் சொல்கிறார்கள். அது அப்படியிருக்கட்டுமே, அதை நான் விரும்பவில்லை. உண்மை வெளியே வரவேண்டும். அழுக்கு எங்கேயிருந்தாலும் அது வெளியே வர வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

51 வயதான மோனிகா கேப்ரியல் என்பவரது கணவர் ரிச்சார்ட் உலக வர்த்தக மைய கட்டிட சிதைவினால் பலியானார். மோனிகா நியூயோர்க் டைம்ஸ் நிருபருக்கு பேட்டியளிக்கும்போது ''நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த எனக்கு தோல்வி கிடைக்கலாம். அப்படியிருந்தாலும் நான் வழக்குத் தொடரவே விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை எப்போதுமே யார் பொறுப்பு யார் இதில் தவறு செய்துவிட்டார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் குறியாகயிருப்பேன். பணத்தை நான் பொருட்படுத்தவில்லை. எனது கேள்விகளுக்கு பதில் வேண்டும். அதுதான் முக்கியம்'' என்று பதிலளித்தார்.

உலக வர்த்தக மைய கட்டிடம் இருந்த இடத்திற்கு புதனன்று மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திய சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிறரை உலக சோசலிச வலைத் தளம் பேட்டி கண்டது.

மெட்ரோ நோர்த் (Metro North) ரெயில்வேயில் பயிற்சியாளராக பணியாற்றிவரும் ஜோன் லைனுங் (வயது: 49) என்பவர், தனது வளர்ப்பு மகனை செப்டம்பர் 11 தாக்குதலில் பலி கொடுத்துவிட்டார். போல் பத்தாலியா என்ற அவரது வளர்ப்பு மகன் பலியான நேரத்தில் அவருக்கு வயது 22 தான். இவர், உலக வர்த்தக மைய வடக்கு கோபுர பகுதியில் 100 வது மாடியில் இருந்த மார்ஷ் மற்றும் மேக்லென்னான் நிறுவனத்தின் தொழிற்சாலை பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

உலக சோசலிச வலைத் தளத்திடம் ஜோன் கருத்து தெரிவிக்கும்போது ''நிர்வாகம் முதலில் ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பு நடத்தியது. இந்த சம்பவங்கள் தொடர்பாக நான் கவலைப்படுகின்றேன். ஈராக்கிற்கு எதிராக போர் தொடுக்கப்பட்டதற்கான காரணத்தை நான் தெரிந்துகொள்ளவில்லை. புஷ் நிர்வாகம் ஈராக் அரசாங்கத்திற்கும், அல்கொய்தாவிற்கும் உள்ள தொடர்புகளை எப்போதுமே எடுத்துக்காட்டவில்லை'' என்று தெரிவித்தார்.

9/11 நிகழ்ச்சிகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவது பற்றி அவரிடம் கேட்டபோது ''மிகப்பெரும் அளவில் ரகசியத்தை மறைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் விரும்புகின்றது என்பதால் எனக்கு இந்த விசாரணைகளில் சந்தேகம் நிலவுகின்றது. சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள், தீவிரவாதிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களோடு கூடிக் கூலாவிக் கொண்டிருக்கிறார்கள். சவுதி அரேபியாவின் இந்த தொடர்புகள் குறித்து பொது மக்களுக்கு தெரியக்கூடாது என்று பெரிய எண்ணெய் நிறுவனங்கள் விரும்புகின்றன. சவூதி அரேபியா தொடர்புகளால் இவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்'' என்று மேலும் குறிப்பிட்டார்.

நியூயோர்க் நகரத்தில் வசிக்கும் கொலம்பியாவை சேர்ந்த மக்கள் மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கணிசமாக கலந்துகொண்டனர். கொலம்பியாவைச் சேர்ந்த 27 பேர் மிகப்பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில் ஹோட்டல்களில் ஊழியர்களாகவும், பாதுகாப்பு பணியாளர்களாகவும், பார்சல்களை எடுத்துச் செல்பவர்களாகவும், உலக வர்த்தக மைய கட்டிடத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

38 வயதான ஜோர்ஜ் லூயி மரோன் கார்ஷியா என்பவர் இரட்டை மாடிக் கட்டிடங்கள் வீழ்ந்தபோது பலியானார். அவரது மனைவி சோனியா மரோன் பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:

''2001 செப்டம்பர் 17 அன்று அவர் அமெரிக்காவின் குடிமகனாக சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவிருந்ததால், அது நடப்பதை பார்ப்பதற்கு அவர் இல்லை. தனது பெயரால் குறிப்பாக ஈராக் மீதான போர் நடப்பதை பார்த்திருப்பாரானால் எனது கணவர் அதிருப்தியடைந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் போரை விரும்பாதவர், எதிர்ப்பவர், அவர் சமாதமான சக வாழ்வில் அதிக நம்பிக்கை கொண்டவர். எண்னைப்போன்று அவரும் புஷ்ஷிற்கு எதிராகத்தான் இருப்பார் என்று எனக்குத் தெரியும்.

''ஈராக்கில் போர் நடப்பது சரியான நடவடிக்கை அல்ல. இங்கே அமெரிக்காவில் பலியானவர்களைவிட ஈராக்கில் அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியிருக்கிறார்கள். இப்படி பலியானவர்களில் அமெரிக்கப் படையினர் மட்டுமல்ல, ஈராக் மக்களும் மிகப் பெருமளவில் பலியாகி இருக்கின்றனர். சதாம் ஹூசேன் அமெரிக்க மக்களாகிய நமக்கு எதிராக என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியாது. எண்ணெய் வளத்தை சுரண்டுவது ஒன்று தான் ஒரே நோக்கம் என்பதை நான் அறிவேன். இப்போது நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஒசாமா பின்லேடன் குறித்து பேசுவதுகூட இல்லை. அவர் மட்டும் தான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பாகும்.

''இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது எப்படி என்பது என்னால் நம்ப முடியவில்லை. தாக்குதல் நடந்தபோது நான் கர்ப்பமாகயிருந்தேன். எனது கணவர் கொல்லப்பட்டதும், குறை பிரசவத்தில் எனது குழந்தையை இழந்துவிட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலில் பலியான 27 கொலம்பிய குடும்பங்களையும் ஆதரிக்கும் குழுவினர் உலக வர்த்தக மையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் வருத்தத்துடன் மலர் வளையங்களை இறந்தவர்களுக்கு மரியாதையுடன் கொண்டு சென்றனர்

கொலம்பியாவிலிருந்து குடியேறிய டிரியானி என்பவர், அவரது குடும்பத்தினரிடம் நினைவு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளித்தார்.

''புஷ் இரவு உரையாற்றுகின்றபோது, செப்டம்பர் 11 பற்றி எத்தனையோ முறை குறிப்பிட்டார். அந்தப் போர் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது என்று நான் நினைக்கிறேன். முதலில் போருக்கு செல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கருதுகிறேன். இன்றைக்கும் அத்தகைய ஆதாரம் எதுவும் புஷ் அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கமும், செய்தி ஊடகங்களும், மிகப்பெரும் அளவிற்கு மக்களிடம் இருந்து தகவல்களை மறைத்திருக்கின்றது.

''என்ன நடக்கின்றது என்பதை தெரிந்துகொள்வதற்காக அதைப் பற்றி புரிந்துகொள்வதற்காக நான் பல இடங்களில் இருந்து தகவல்களை சேகரிக்க முயன்று வருகிறேன். எடுத்துக்காட்டாக வானொலியில் ஒரு தகவலைச் சொன்னார்கள், அந்தத் தகவலை புஷ்ஷிற்கும், செனிக்கும், நண்பர்களாகயிருக்கின்ற சில பெரிய கம்பெனிகள் ஈராக்கில் சீரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றிருப்பதாக தெரிந்துகொண்டேன். இதுபோன்ற பலர் இந்தப் போரினால் மிகப்பெரும் அளவிற்கு பணக்காரர்களாகிக் கொண்டு வருகின்றார்கள். இது மிக பயங்கரமான நிலவரம் ஆகும்.

''நமது அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்ற காரியங்களால் நமது நாட்டிற்கு எதிராக மேலும் மேலும் வெறுப்பு உணர்வு வளர்ந்துகொண்டே வருகின்றது. நாங்கள் கொலம்பியாவை சேர்ந்தவர்கள். நாங்கள் ஆங்கிலத்தில் பேசவோ அல்லது அமெரிக்க தேசியக் கொடியை ஏந்துவதற்கோ பயந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால், உலகம் முழுவதிலும் அமெரிக்க செயல்களுக்கான எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது'' என்று கூறினார்.

44 வயதான ஜேக் எல்லாக் என்பவரின் மைத்துனரான ரியான்ஹோ ஆர்ட் (26 வயது) உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் இருந்த கேன்டர்பிட்ஸ் ஹெரால்ட் நிறுவனத்தில் பங்கு பத்திர தரகராக பணியாற்றி வந்தார். அவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று உலக சோசலிச வலைதளம் ஜேக் எல்லாக்கை கேட்டபோது அவர் கூறியதாவது: ''அது மிகப்பெரிய பேரழிவு. வெளியுறவுக் கொள்கையே மிகப்பெரிய பேரழிவுதான். உள்நாட்டு அரசியல் அரங்கு பேரழிவில் உள்ளது. 9/11 நிகழ்ச்சிகளை அரசாங்கம் வெளிநாடுகளில் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கும், உள்நாட்டில் மக்கள் மீது பொருளாதார போர் தொடுப்பதற்கும் பயன்படுத்திக்கொண்டு வருகின்றது.

''9/11 நிகழ்ச்சிகளை ஈராக்குடன் தொடர்புபடுத்துவதற்கு எந்தவிதமான சான்றும் இல்லை. ஈராக் அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றது அல்லது மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களை பல்லாயிரம் தொன் கணக்கில் தயாரித்துக் கொண்டிருக்கின்றது என்று சொல்லப்பட்டதற்கான சான்று எதுவும் இல்லை. இத்தனை ஆயிரம் தொன்களை எங்கே நீங்கள் மறைத்து வைப்பீர்கள்?

''சவூதி அரேபியாவின் தொடர்பு குறித்து நடைபெற்ற விசாரணையை புஷ் நிர்வாகம் சீர்குலைத்துவிட்டது. விமானக் கடத்திகள் 19 பேரில் 15 பேர் சவூதி அரேபியர்கள் என்று இருக்கும்போது இதில் புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கை சற்று வியப்பளிப்பதாக உள்ளது'' என்று குறிப்பிட்டார்.

பிரிட்டனின் தொழிற்கட்சி உள்விவகாரங்களை நன்றாக அறிந்த முன்னாள் அமைச்சர் மைக்கேல் மீச்சர் அண்மையில் ஒரு தகவலை சான்றாக தந்திருக்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைப்புக்கள் பயங்கரவாதிகள் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஒதுங்கிக் கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டதாகவும், தாக்குதல்கள் நடக்கட்டும், அப்போதுதான் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுவரும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் படையெடுப்பை நடத்த முடியும் என்று கருதி சும்மா இருந்துவிட்டதாகவும் கூறியிருப்பது பற்றி ஜேக் எல்லாக்கை உலக சோசலிச வலைத் தளம் கேட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது ''அமெரிக்க வரலாற்றிலேயே இந்த அளவிற்கு போர் அவசியம் என்று தேவைப்பட்ட, மற்றும் இந்த போரினால் அதிக அளவிற்கு பயனடைந்த எந்த ஜனாதிபதியும் இருந்ததில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிகின்றது'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

30 வயதான ஆன்ட்ரோ ரைஸ் என்பவர் அண்மையில் நியூயோர்க் நகரத்திலிருந்து ஒக்லஹோமா நகரில் குடியேறினார். அவர் தனது மூத்த சகோதரர் டேவிட்டை (வயது 31) இந்த தாக்குதலில் இழந்துவிட்டார். டேவிட் இந்த கட்டிடத்தில் இருந்த ஷேன்ட்லர் ஹோனியில் முதலீட்டு வங்கி நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவர்.

செப்டம்பர் 11 தாக்குதலில் ஈராக்கை தொடர்புபடுத்த புஷ் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஆன்ட்ரோவிடம் கருத்து கேட்கப்பட்டபோது, ''அத்தகைய குற்றச்சாட்டிற்கு புலனாய்வு தகவல்களின் சான்று எதுவும் இல்லை. அல்கொய்தா பற்றியும், ஈராக் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு அல்கொய்தாவும், ஈராக் ஆட்சியும் ஒன்றுக்கொன்று கடுமையான எதிரிகள் என்று தெளிவாகத் தெரியவரும். அவர்கள் ஒன்றை ஒன்று வீழ்த்துவதிலேயே குறியாகச் செயல்பட்டனர். ஈராக்கிடமிருந்து திட்டவட்டமாக அமெரிக்க மக்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் வந்ததா? ஈராக் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் போரை அமெரிக்க மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பதை மக்களது கருத்துகணிப்புக்கள் தெரிவித்துவிட்டன. ஆனால், தங்களுக்கு (அமெரிக்க மக்களுக்கு) அச்சுறுத்தலாக ஏதாவது வரும் என்றால், அத்தகைய அச்சுறுத்தலை முறியடிப்பதற்காகத்தான் அமெரிக்க மக்கள் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள். நாடு முழுவதிலும் மக்களது அணுகுமுறைகள் மாறிக்கொண்டே வருகின்றன.''

போருக்கு ஆதரவு தெரிவித்த இராணுவக் குடும்பங்கள் கூட இப்போது தெருவில் இறங்கி நமது துருப்புக்கள் ஈராக்கிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று ஆண்ட்ரூ ரைஸ் மேலும் கருத்து தெரிவித்தார்.

Top of page