World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

26 reported killed

Bolivian troops massacre strikers

26 பேர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

வேலை நிறுத்தம் செய்வோரை கொன்றுகுவிக்கும் பொலிவிய துருப்புக்கள்

By César Uco and Bill Vann
14 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

பொலிவியா நாட்டின் துருப்புக்கள் பீரங்கிகள் சகிதம் அணிவகுத்து ஞாயிற்றுக் கிழமையன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள குறைந்தபட்சம் 26-தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை கொன்று குவித்தனர் மற்றும் மேலும் 90 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்க ஆதரவு பெற்ற ஜனாதிபதி Gonzalo Sanchez Lozada வின் பொலிவிய அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு எதிராக கடந்த ஒரு மாதமாக இவர்கள் நடத்தி வரும் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு அவர்கள் மீது அரசாங்கம் கொலை வெறியோடு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கட்ட்டவிழ்த்து விட்டுள்ளது.

பொலிவியா நாட்டின் லா பாஸ் புறநகர் பகுதியான எல் ஆல்டோ தொழிற்துறை நகர்ப்புறப் பகுதிகளில் இராணுவம் நுழைந்தது. இந்த பகுதி அரசாங்கத்திற்கு சவால்விடுகின்ற வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களின் மையமாக இருந்து வருகிறது. கற்களும் கம்புகளும் தவிர வேறு எந்த ஆயுதமும் இல்லாத அந்நகர மக்கள் மீது துருப்புக்கள் எந்திர துப்பாக்கியால் சுட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல் ஆல்டோ புறநகர் பகுதியில் வேலை நிறுத்ததிற்கு ஏற்பாடு செய்த தொழிற்சங்க தலைவரான ராபர்டோ டிலா குரூஸ் ''எங்களை அவர்கள் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்தார். ''இங்கு சண்டை எதுவும் நடக்கவில்லை. அவர்கள் விருப்பப்படி சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள், கூட்டத்தை நோக்கி சுடுகிறார்கள்'' என்று குறிப்பிட்டார். இயந்திர துப்பாக்கிக்கு ஒரு ஐந்து வயது சிறுவன் பலியாகி கிழே விழுந்தான். உள்ளூர் மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் கூட்டம் நிரம்பிவழிந்து கொண்டிருக்கின்றது. இரத்த நன்கொடைக்காக வேண்டுகோள்கள் விடப்பட்டு வருகின்றன.

லா பாஸ் நகரை வேலை நிறுத்தத்தில் உள்ளவர்களும் மற்றும் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்களும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுக் கொண்டுள்ளதை முறியடிப்பதற்காக ஹெலிகாப்டர்கள் கூட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது. தலைநகரின் உணவு மற்றும் எரிபொருள் கையிருப்புக்கள் குறைந்து கொண்டு வருவதால் அவற்றின் சப்ளையை மீண்டும் நிலைநாட்டுவதுதான் இராணுவத்தின் உடனடி குறிக்கோளாகும்.

எல் ஆல்டோ 600,000 மக்கள் தொகை கொண்ட பொலிவியா நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் அமைந்திருக்கின்ற நகரம். இது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் உணவுக்கிடங்குகளின் மையமாக அமைந்துள்ள நகரம். இது பொலிவியா நாட்டிலேயே மிக அதிகமான அளவிற்கு வறுமை நிறைந்த மாவட்டமும் ஆகும். ஆதலால் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் வேலை தேடி கிராமபுறத்திலிருந்து வந்து குடியேறிய மக்கள்தான். ஆல்டேனொஸ் நகர மக்களில் பெரும்பாலோர் பரந்து விரிந்த சேரி நகரங்களில் வசிப்பவர்கள்.

பொலிவியா நாட்டின் கத்தோலிக்க மாதா கோவிலும், மனித உரிமை அமைப்புக்களும் பிரதான பத்திரிகை சங்கமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை, எல் ஆல்டோ நகரத்திலிருந்து உடனடியாக அரசாங்கம் துருப்புக்களையும் போலீசாரையும் விளக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. ''இனி நாம் மோதல்கள் குறித்து எதுவும் பேசமுடியாது ஆனால் உண்மையிலேயே படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன'' என்று அந்த அறிக்கை கூறுகின்றது. அந்த அறிக்கை, ''பொலிவியா நாட்டு மக்களுக்கு எதிராக கனரக எந்திரத் துப்பாக்கிகள் உள்பட பெரிய இராணுவ ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன'' என பல்வேறு செய்திகளை மேற்கோள் காட்டியது.

இரத்த வெள்ளத்தில் இந்த கண்டன இயக்கத்தை மூழ்கடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதில் அமெரிக்க தூதரகம் திட்டவட்டமாக பங்காற்றி இருப்பதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். அமெரிக்க தூதர் டேவிட் கிரீன் லீ 1980-களில் இந்நாட்டின் CIA யின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். கொக்கோ விவசாயிகளுக்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை பொலிவியா அரசாங்கம் மேற்கொண்டதற்கு அவர்தான் பொறுப்பு என பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது. குறிப்பாக 1988-ம் ஆண்டு நடைபெற்ற 28 விவசாயிகளை பலிகொண்ட வில்லா துனாரி படுகொலையில் அவர் மீது குற்றம் சாட்டப்படுகின்றது.

அமெரிக்காவில் அரசியல் தொடர்புடைய விரல்விட்டு எண்ணத்தக்க எரிபொருள் நிறுவனங்களின் நலன்களை பேணிக்காக்கவும் மேலும் வளர்க்கவும், ஈராக்கிலும் உலகின் இதர இடங்களிலும் அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைப்போல், அதே நோக்கத்திற்காக தற்போது பொலிவியாவில் அமெரிக்க தூதரக பலாத்கார ஒடுக்கு முறைகளை ஏவிவிட்டுக் கொண்டிருக்கின்றது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பல்லாயிரக்கணக்கான பொலிவியா தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் மாணவர்கள் வாஷிங்டன் அரசாங்கத்தின் ஆதரவாளரான Sanchez Lozada -க்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தினை உள்ளூரில் ''எரிவாயு போர்'' என்று குறிக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று கோரி வருகின்றனர். இயற்கை எரிவாயு பொலிவியா நாட்டில் கிடைக்கின்ற இயற்கை வளம் அதுதான். அது தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் கைவசம் இல்லை. அதனை சிலிநாட்டு துறைமுகம் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என பொலிவியா நாட்டு மக்கள் கோரி வருகின்றனர்.

இலத்தீன் அமெரிக்காவின் இதர நாடுகளில் போல, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பொலிவிய மக்கள் தங்களது நாட்டு இயற்கை வளம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதை பார்த்துகொண்டு வறுமையில் வாடுகிறார்கள். உத்தேச இயற்கை வாயு பேரத்தின் மூலம் வரலாறு திரும்பும் என்ற அவர்களது அச்சம் நியாயமானதுதான். இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் வெள்ளி மற்றும் தகரம் தொடர்பான சுரங்கத்தொழில் அமெரிக்க கம்பெனிகளால் சுரண்டபட்டது. இலாபம் வரவில்லை என்று தெரிந்ததும் அந்த நிறுவனங்கள் அதனை கைவிட்டன.

உத்தேச எரிவாயு பேரம் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதி ஏற்பாடாகும், இந்தப் பணி பசுபிக் LNG, என்ற கூட்டிணைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டிணைப்பில் Bechtel Group, அமாக்கோ- பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் இதர பல சர்வதேச எரிபொருள் தொடர்பான பெரிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்னர் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்வது தொடர்பான உடன்படிக்கையின் படி வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டிற்கு 1.3-பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளன. பொலிவியா வரிகள் மற்றும் உரிமம் கட்டணம் மூலம் 20-மில்லியன் டாலர்களைத்தான் பெறுகிறது.

தற்போது பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பரந்த கிளர்ச்சி எழுச்சியில் ஈடுபட்டிருப்பதற்கு காரணமாக அமைந்தது, செப்டம்பர் 20-ந்தேதி உள்ளூர் மக்கள் வாரிசாத்தா என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தான். அந்த படுகொலையில் 7-பேர் மாண்டனர் டசின் கணக்கில் காயம் அடைந்தனர்.

வாரிசாத்தா படுகொலையை தொடர்ந்து, பொலிவியன் தொழிலாளர்கள் மையம் (COB), நாட்டின் பிரதான தொழிற்சங்க கூட்டமைப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

அதே நேரத்தில் பொலிவிய நாட்டிலேயே மிகப்பெரிய விவசாய அமைப்பான கிராமத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு (CSUTCB) தனது மறியல் கிளர்ச்சியில் தீவிரப்படுத்துவதால் மிகப்பெரிய நகரும் அரசாங்க அலுவலகங்கள் மையமுமான லா பாஸ் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

சோசலிசத்தை நோக்கிய இயக்கத்தின் (Movement Towards Socialism -MAS) தலைவர் ஈவா மோரல்ஸ் தலைமையில் கொக்கோ விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இதுதான் பிரதான எதிர்க்கட்சியாகும். வேலை நிறுத்தத்தை இந்த அமைப்பு ஆதரிக்கவில்லை சாலை மறியலோடு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது.

லா பாஸ் நகரில் பொது வேலை நிறுத்தத்திற்கு உடனடியாக வியாபாரிகள், கசாப்பு கடைக்காரர்கள், சரக்குகள், மற்றும் பயணிகள் போக்குவரத்து ஊழியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவை தெரிவித்தனர். சந்தைகள் மூடப்பட்டும் நகரமே ஸ்தம்பித்தும் கிடந்தன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வேலை நிறுத்தத்திற்கான ஆதரவு சுகாதார ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமுதாய குழுக்கள் மத்தியில் பெருகியது. தினசரி லா பாஸ் நகரத் தெருக்களில் பேரணிகள் நடைபெற்றன. சஞ்செஸ் லுசாடா பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போலீசாருடன் நடைபெற்ற மோதலில் பலர் கைதுசெய்யப்பட்டனர். அக்டோபர்-10-ந்தேதி பல்லாயிரக்கணக்கானோர் லா பாஸ் நகரில் காலிடின்களை தட்டி ஓசை எழுப்பிக்கொண்டு ஊர்வலம் வந்தனர்.

பொலிவியா நாட்டில் மிகப்பெரிய La Ceja சாலைப் போக்குவரத்தின் மிகப்பெரிய இணைப்பு பகுதியாக CSUTCB போர்குணமிக்க சாலைகளில் மறியல் செய்ததால் தேசிய மற்றும் சர்வதேச போக்குவரத்து சீர்குலைந்தது. லாரி ஓட்டுநர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்காக தங்களது லாரிகளில் ஏற்றப்பட்ட சரக்குகளை ஆற்றில் தூக்கிப்போட்டார்கள் என்று செய்திகள் பிரசுரிக்கப்பட்டன. சிலி நாட்டு துறைமுகமான அலிகாவில் 17,000 டன்கள் சரக்கு தேங்கிக் கிடக்கின்றது. அவற்றை கப்பலில் ஏற்ற முடியவில்லை, ஏனென்றால் சிலிய துறைமுக நகர் அரிகாவிற்கும் லா பாஸ் நகரத்திற்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்ற இதர நகர்களில் கோகபாம்பா, எல் ஆல்டோ இருந்தன மற்றும் சுரங்க நகர்களான ஓரூரோ மற்றும் பெட்டாசி நகரங்களிலும் தொழிலாளர் பேரணிகள் நடைபெற்றன. பெட்டாசி பொலிவியா நாட்டிலேயே மிகப்பெரும் அளவிற்கு வறுமை நிலவுகின்ற பகுதியாகும்.

இப்படிப்பட்ட கிளர்ச்சிக்கு பதிலளிக்கின்ற வகையில் அரசாங்கம் லா பாஸ் மற்றும் எல் ஆல்டோ மண்டலத்தை சுற்றி இராணுவத்தை அனுப்பிவிட்டது. லா பாஸ்சிற்கும் எல் ஆல்டோ நகருக்கும் இடையே உள்ள 12-கிலோ மீட்டர் சாலைகளையும் இராணுவம் தன்பொறுப்பில் எடுத்துக்கொண்டது. இதற்கிடையில் சர்வதேச விமான போக்குவரத்தை நிலை நாட்டுவதற்காகவும் விமானங்களை அனுப்புவதற்காகவும் சர்வதேச விமான நிலையத்தை இராணுவம் சுற்றி வளைத்துக்கொண்டது. பல நகரங்களில் இராணுவம் பல்கலைக்கழக வளாகங்களைச் சுற்றிவளைத்துக் கொண்டு நிற்கின்றது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற படுகொலைகளுக்கு முன்னர் எல் ஆல்டோ நகரில் போலீசார் மற்றும் இராணுவம் ஆகிய இருதரப்பினரும் அந்த நகர மக்களோடு மோதலில் ஈடுபட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பொதுமக்கள் இராணுவம் மற்றும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் பொதுமக்கள் கற்களையும், கம்புகளையும், கவன்களையும் வெடிகுண்டுகளையும்தான் பயன்படுத்தினர். இராணுவமும் போலீசாரும் கவச வாகனங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.

சென்ற மாதம் இராணுவத்தோடு நடைபெற்ற ஒரு மோதலில் ஒரு போர்வீரரின் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒரு சிறுமி மாண்டதை தொடர்ந்து ஆல்டோ நகரத்து மக்கள் ஆவேசம் கொண்டு ஆயிரக்கணக்கானோர் திரண்டு அந்த மண்டலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை தாக்குவதற்கு ஆயுதங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எல் ஆல்ட்டோ மக்கள் "முற்றுகை நிலை" யை அறிவித்தார் மற்றும் இராணுவத்தினர் உயிருக்கு உத்திரவாதம் தர முடியாது என்றும் அறிவித்தனர்.

பொலிவியா நாட்டில் முழு வீச்சில் உள்நாட்டு போர் நடைபெறவிருக்கின்றது என்பதற்கான அறிகுறிகள் அதிக அளவில் தோன்றுகின்றன. அதற்கு அடையாளமாக எல் சாக்கோ போர் நினைவாக அந்த போரில் மாண்டவர்களின் விதவைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த மாசர் துப்பாக்கிகளுடன் அணிவகுப்பு நடத்தினர். 1932-முதல் 35-வரை பராக்குவே நாட்டிற்கு எதிராக நடைபெற்ற போரில் அவர்கள் மாண்டார்கள் 1952-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சிகர போராட்டங்களின் போது இத்தகைய காலாவதியான துப்பாக்கிகள் நினைவுச்சின்னமாக பயன்படுத்தப்பட்டன.

பொலிவியா மக்களில் மிகப்பெரும்பாலோர் ஏற்கனவே வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அதற்கு பின்னர் கடந்த 5- ஆண்டுகளாக பொருளாதார பின்னடைவு நிலவுவதால் வறுமையின் கொடுமை அதிகரித்துள்ளது. ஹைத்தி நாட்டிற்கு அடுத்ததாக அமெரிக்காவிலேயே அதிக வறுமையில் வாடும் இரண்டாவது நாடு பொலிவியா ஆகும். ஏறத்தாழ 60-சதவிகிதம் மக்கள் வறுமையில் உள்ளனர். கிராமங்களில் வாழுகின்ற 40-சதவிகிதம் பேரில் 10 பேருக்கு 9 பேர் வறுமையில் வாடுகின்றனர்.

பொலிவிய விவசாயிகள் தொழிற்புரட்சிக்கு முந்தைய பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மின்சார வசதியில்லை. திரி விளக்குகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை உரத்தைத்தான் நம்பியிருக்கின்றனர். சமயலுக்கு விறகைத்தான் பயன்படுத்துகின்றனர். கிராமங்களில் மருந்துவர்களோ மருந்தகங்களோ இல்லாத காரணத்தினால் கொக்கோ, சிறுநீர் மற்றும் மூலிகைகள் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். பல குழந்தைகள் வயிற்றுப்போக்காலும் அல்லது ஊட்டச் சத்து குறைவினாலும் மடிகின்றனர் அல்லது கைவிடப்படுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் விவசாய குடும்பங்களின் சராசரி வருவாய் 50 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து விட்டது என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. அரசாங்கம் தந்திருக்கின்ற புள்ளி விபரங்களின்படி 10 விவசாயிகளில் 5 பேர் பட்டினியில் கிடக்கின்றனர். மற்ற நான்கு பேருக்கு போதுமான உணவு கிடைக்கில்லை.

80 சதவீதத்திற்கு மேற்பட்ட பொலிவியா நாட்டு மக்கள் அந்நாட்டு பூர்வ குடிகள் ஆவர். இவர்கள் விவசாயிகளாக மிகப்பெரும்பான்மையினராக உள்ளனர். மிகப்பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்களையும் கொண்டுள்ளனர், இவர்கள் தான் வரலாற்று அடிப்படையில் பார்த்தால் பொலிவியா நாட்டு தொழிலாள வர்க்கத்திலேயே மிகத்தீவிரமான போர் குணம் கொண்டவர்கள். பலர் கிராமப்புறங்களில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். பொலிவியா நாட்டு தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்பட இருப்பவர்கள் இந்த தரப்பினர்தான்.

பொலிவிய பூர்வ குடிமக்கள்தான் மிகப்பெரும் அளவில் சுரண்டப்படுகின்றனர் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கு ஆட்படுகின்றனர். 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பானிய வீர்ர்கள் படையெடுத்து வந்து இன்கா சாம்ராஜ்ஜியத்தை முறியடித்த காலத்திற்கு முந்தைய பூர்வகுடிகளான Aymara மற்றும் Quechua பரம்பரையிலிருந்து வந்தவர்கள். காலனி ஆதிக்கத்தையும் ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடுவதில் பொலிவியா மக்கள் நீண்ட போராட்டத்தை பின்னணியாக கொண்டவர்கள். அதற்குப் பின்னர் ஸ்பெயினிலிருந்து 1825ம் ஆண்டு விடுதலை பெற்றனர்.

இலத்தீன் அமெரிக்காவின் இதர நாடுகளைப் போன்று பொலிவியாவில் இரண்டு தரப்பினர் வாழ்ந்து வருகிறார்கள். மிகப்பெரும்பாலோர் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகள். பொலிவியா மக்களிலேயே மிக குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் அமெரிக்க வங்கிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தொடர்புகளால் பணக்காரர் ஆனவர்கள்.

இன்றைய ஜனாதிபதி சாஞ்செஸ் லோசாடா 73-வயதானவர் சுரங்கத்தொழிலில் பெருமளவில் சம்பாதித்த, 73 வயது பணக்காரர், அமெரிக்காவில் கல்வி பெற்றவர், ஸ்பானிய மொழியைவிட ஆங்கிலத்தில் நன்றாக பேசுபவர், பொலிவியா நாட்டின் இதர இரண்டு மொழிகளையும் அவருக்கு தெரியாது.

ஜனாதிபதியின் செல்வாக்கு மக்களிடையே வெறும் ஒன்பது சதவீதமாக குறைந்துவிட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பொலிவியா நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் சுதந்திர சந்தை கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில், அமெரிக்காவிற்கு எரிவாயு விற்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 15-ஆண்டுகளுக்கு மேலாக எரிவாயு தவிர இதர பொலிவியாவின் வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பும் வசதிகளும் -எண்ணெய் மற்றும் எரிபொருளிலிருந்து ரயில் இணைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் வரை- நாடு கடந்த நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன.

2002-ஆகஸ்ட் மாதம் தேர்தலில் 22 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற Gonzalo Sanchez Lozada பொலிவிய ஜனாதிபதியாக பதவியில் இருத்தியதில், அமெரிக்க தூதரகம் முக்கிய பங்களிப்பு செய்திருக்கின்றது. கொக்கோ விவசாயிகளின் தலைவரான MAS-ன் Evo Morales ஜனாதிபதி பதவி பெற்றுவிடாமல் தவிர்ப்பதற்கு, வாஷிங்டன் முயன்று லோசாடாவின் தேசிய புரட்சிகர இயக்கம், முன்னாள் ஜனாதிபதி Jaime Paz Zamora -ன் இடது புரட்சிகர இயக்கம் (MIR) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் சர்வாதிகாரியான Hugo Banzer- ன் தேசிய ஜனநாயக நடவடிக்கை (ADN) ஆகியவற்றுக்கிடையில் ஒரு கூட்டணியை உருவாக்கியது.

MAS கட்சிக்கு ஜனாதிபதி பதவி கிடைக்குமானால் அதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆதரவான மற்றும் சார்புடைய நிறுவனங்கள் பொலிவியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு விடும் என்று வாஷிங்டன் அஞசியது. கொலம்பியாவிற்கு அடுத்தபடியாக பொலிவியா நாட்டிற்கு கொக்கோ விவசாயத்தை வீழ்த்துவதற்காக அமெரிக்கா மிகப்பெரும் அளவில் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.

IMF கட்டளையிடுகின்ற பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொவதில் Sanchez Lozada உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். புதிய வரிகளை விதித்திருக்கிறார். பென்ஷன்கள் மற்றும் வருமானத்தை குறைத்திருக்கிறார். எரிவாயு கேசலின் ஆகியவற்றிற்கு நுகர்வோருக்கு வழங்கப்பட்ட மானியத்தொகையை குறைத்துவிட்டார். அரசாங்க செலவினங்களை குறைத்திருக்கிறார், ஏற்றுமதிகளை பெருக்கியிருக்கிறார்.

IMF- கோரியுள்ள மிகக்கடுமையான நடவடிக்கைகளில் ஒன்று பொலிவிய குடிமகன் பாதுகாப்பு சட்டம் ஆகும், இது வெளிநாட்டு முதலீடுகள் அமைதியான சூழ்நிலையில் செயல்படுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டது. இந்த சட்டம் சுதந்திர சந்தை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற போர்க்குணமிக்க தொழிலாளர்களையும் விவசாய தலைவர்களையும் சிறைக்கு அனுப்புவதற்கு வழிவகை செய்கின்றது.

Sanchez Lozada- அமெரிக்கா தூதரகம் மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களால் பொலிவியா நாட்டு இராணுவத்தின் ஆதரவோடு ஜனாதிபதி பதவியில் அமர்த்தப்பட்டார். அப்படியிருந்தாலும் அவர் இன்னமும் பதவியில் நீடிப்பதற்கு காரணம் பொலிவிய விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தலைவர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கின்ற நபர்களின் காட்டிக் கொடுப்பு மற்றும் பீதி இல்பு ஆகும்.

2003- பெப்ரவரி மாதம் பொலிவிய மக்கள் ஒட்டுமொத்தமாக ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தார்கள் அப்போது ஆட்சியை கவிழ்த்திருக்க முடியும், ஆனால் MAS- மற்றும் COB- தொழிற்சங்கத் தலைவர்கள் Sanchez Lozada உடன் ஒரு சமூக ஒப்பந்தத்தை செய்து கொண்டார்கள், அதன் விளைவாக அவருக்கு அரசியல் தந்திரங்களில் ஈடுபடுவதற்கு தேவையான அவகாசம் கிடைத்தது. இத்தொழிற்சங்க தலைவர்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்ககத்தின் இதர பகுதியினர் அனைவரையும் காட்டிக் கொடுத்து விட்டார்கள்.

இப்படி இந்த தொழிற்சங்க தலைவர்கள் உருவாக்கிய சமுக ஒப்பந்தத்தில் தரப்பட்டுள்ள எந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. எனவே தொழிலாளர்கள் விவசாயிகள் ஒவ்வொரு பிரிவாக போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்கள், இதன் உச்சக்கட்டமாக செப்டம்பர்19-அன்று லா பாஸ் நகரில் 150,000 தொழிலாளர்கள் அணிவகுத்து வந்தனர். அது வாரிசாத்தா படுகொலைகள் நடைபெறுவதற்கு முதல் நாளாகும்.

மீண்டும் ஒரு முறை பொலிவியா நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தலைவர்கள் அரசாங்கத்துடன் அரசாங்கத்திற்கு சமரச குறிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றனர்.

தொழிற்சங்கத் தலைவரான இவா மொராலஸ் COB தொழிற்சங்கத் தலைவரான Jaime Solares ஆகியோர் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் இந்த கோரிக்கையை மறுத்துக்கொண்டுதான் வருகின்றது, ஏனென்றால் அவர்களது கோரிக்கைகள் அதன் ஆதரவான அமெரிக்க நலன்களை குறுக்காக வெட்டிச்செல்கிறது.

எல் அல்டோ படுகொலைகளால் மக்களிடையே வளர்ந்து வருகின்ற கோபாவேசத்தை அடக்குகின்ற முயற்சியாக Sanchez de Lozado திங்கட்கிழமை காலை ஒரு கட்டளையை வெளியிட்டார். இந்த ஆண்டு இறுதிவரை பொலிவிய எரிவாயு எதுவும் புதிய மார்கெட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என்பதுதான். இடைப்பட்ட காலத்தில் உத்தேச எரிவாயு பேரங்கள் தொடர்பாக லோசாடா அரசாங்கம் ''ஆலோசனைகளை நடத்தும் விவாதங்களுக்கு" ஏற்பாடு செய்யும் என குறிப்பிட்டார். இப்படி நடத்தப்படும் ஆலோசனைகள் அல்லது விவாதங்களில் உருவாகும் முடிவுகள் எதுவும் அரசாங்கத்தை கட்டுப்படுத்தாது என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார். எல் ஆல்டோ நகர தலைவருடன் "பேச்சுவார்த்தை" நடத்துவதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது.

இப்படிப்பட்ட அரைகுறையான சொற்பமான சலுகைகளால் பொதுமக்களது கிளர்ச்சி எந்த வகையிலும் குறையும் என்று தோன்றவில்லை. எல் ஆல்டோ மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திங்களன்று அரசாங்க மற்றும் தனியார் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பேக்கரி தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதுவரை கண்டனப் பேரணிகளில் கலந்து கொள்ளாமல் இருந்துவரும் கொக்கோ விவசாயிகள் லா பாஸ் நகரத்தை நோக்கி அணிவகுத்து வந்து சாலைத்தடைகளை ஏற்படுத்த போவதாக கோடிட்டுக்காட்டியுள்ளனர். லா பாஸ் Cochabamba மற்றும் இதர நகரங்களிலும் மக்கள் பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

எல் ஆல்டோ நகரம் முழுவதிலும் அரசாங்கம் இராணுவமயமாக்க ஆணையிட்டாலும், படுகொலைகளுக்கு பின்னர் கண்டனங்களை தொடர்ந்து நகர மக்கள் இராணுவத்திற்கு எதிராக தீவைப்பு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். மாநகர ரோந்து படைகள் மீது கற்களை வீசி கொண்டிருக்கின்றனர்.

Top of page