World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Los Angeles Times publishes letter from John Christopher Burton, SEP candidate in California recall election

கலிபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தலில், சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளரான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் கடிதத்தை லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் நாளேடு வெளியிட்டது

By Andrea Peters
22 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

"சோசலிச வேட்பாளர் தகுதியின் அடிப்படையில் வாக்குகளைப் பெறுகிறார்" என்ற தலைப்பில், ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் எழுதிய கடிதத்தை ெலாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், தன்னுடைய அக்டோபர் 17ம் தேதி பதிப்பில் வெளியிட்டுள்ளது. கலிஃபோர்னிய கவர்னர் திருப்பியழைத்தல் தேர்தலில், சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நின்ற பேர்ட்டன், முக்கியமற்றவை என அழைக்கப்பட்ட கட்சிகளின் வாக்குப்பதிவு பற்றிய பகுப்பாய்வுக் கட்டுரையை விமர்சித்து, அப்பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

ஜேம்ஸ் ரைனி மற்றும் ஆலிசனால் எழுதப்பட்ட அக்கட்டுரை, பேர்ட்டனின் முதல், கடைசிப் பெயர்கள், கலிஃபோர்னியாவில் நன்கு அறியப்பட்ட ஓர் அரசியல்வாதியின் பெயரையே தான் கொண்டுள்ளதால், இவர் பெற்ற வாக்குகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு, பேர்ட்டனின் தேர்தல் பிரச்சாரம் பற்றி குறிப்பைச் சுட்டிக்காட்டி இருந்தது.

அரசாங்க அதிகாரிகளின் மிகச்சமீபத்திய வாக்கு முடிவகள் வெளியீட்டின்படி, சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் 6345 வாக்குகள் பெற்று, வாக்குப்பதிவில் பங்கு கொண்ட 135 மறுபெயர்களில், 14வது இடத்தைப் பிடித்தார்.

ரைனி மற்றும் ஹொப்மனின் கட்டுரை வெளிவந்த அக்டோபர் 9ம் தேதியன்றே, பேர்ட்டன், லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஒரு கடிதம் எழுதினார். டைம்ஸில் வெளிவந்த பேர்ட்டனுடைய கடிதத்தை, கீழே, அவ்வாறே பிரசுரம் செய்கிறோம்.

"அக்டோபர் 9ம் தேதி, மாநிலம் முழுவதிலும், 135 மாற்று வேட்பாளர்களில் வானொலி வர்ணனையாளர் வான் வோ, ஆரஞ்சு மாவட்டப் பகுதியின் வியட்நாமிய சமூகத்தின் ஆதரவால் 15வது இடத்தைப் பிடித்துள்ளார் என எழுதிய பிறகு, உங்கள் கட்டுரையில், 130 பேருக்கு இது ஒன்றும் வெற்றியா, தோல்வியா விவகாரம் இல்லை என்றும், முதல் 25 இடங்களில் ஜோன் பேர்ட்டனும், எட்வார்ட் கென்னடியும்.... வந்துள்ளனர். எந்த அளவு, இவர்களுடைய ஆதரவாளர்கள், அப்படி எவரேனும் இருந்தால், இவர்களுடைய புகழ்பெற்ற ஒரே பெயர்க்காரர்களுடன் குழப்பிக் கொள்ளாமல் வாக்களித்தனர் என்பது தீர்மானிக்கமுடியாது என எழுதியுள்ளீர்கள்.

"இறுதி முடிவுகளின்படி, மொத்தத்தில் நான் 14வது இடத்தை, 13வதாக முடிந்த வோ இற்கு சற்றே அடுத்து, நான் மேற்கொண்ட சோசலிச பிரச்சாரங்களின் அடிப்படையின் ஆதரவினால் இடம் பிடித்தேன். பெயர்க்குழப்பத்தால், எனக்கு பலன்கள் கிடைத்திருக்குமேயாயின், எத்தனையோ பத்தாண்டுகளின் மடங்கில், ஜனநாயக கட்சியின் மாநில செனட்டர், ஜோன் எல். பேர்ட்டனும் அவருடைய மறைந்த சகோதரர் பிலிப்பும், பெரும்புகழுடன் விளங்கும் சான் பிரான்ஸிஸ்கோவில், மிக அதிக அளவில் வாக்குகளைப் பெற்றிருப்பேன். அங்கு நான் 13வதாக வந்தேன்; ஆனால், என்னுடைய பிரச்சாரம் அதிகம் செலுத்தப்பட்ட லொஸ் ஏஞ்சலஸ் மாவட்டத்தில், நான் 11வதாக வந்தேன். மேலும், "ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன்" என்ற பெயரில் போட்டியிட்டதே, குழப்பத்தை தவிர்ப்பதற்காகத்தான். கட்சி என்ற குறிப்பிலும் நான் "சுயேச்சை" என்றுதான் குறிக்கப்பட்டிருந்தேன்.

"இதற்கு மாறாக, மிகப் பெரும்புகழ்பெற்ற பெயரைத்தன் பெயராகக் கொண்டும், ஜனநாயக வேட்பாளர் எனத் தன்னை அடையாளமும் காட்டிக்கொண்ட, எட்வார்ட் தோமஸ் கென்னடி எனக்குக் கிடைத்த மொத்த வாக்குகளில் பாதியைத்தான் பெற்றார். எங்களுக்குக் கிடைத்த வாக்குகள் பெயர் குழப்பத்தினால்தான் என்றால், அவருக்கு எனக்குக் கிடைத்ததைவிட, அதிகமாக, அல்லது அதே அளவு வாக்குகளாவது, கிடைத்திருக்க வேண்டும்.

"என்னுடைய வேட்புமனு, சோசலிச சமத்துவக் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்டது. இராணுவ வாதம், சிக்கனம், அடக்குமுறை என இரு பெரிய கட்சிகளின் வேலைத் திட்டத்தில் மேலாதிக்கம் செய்யும் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எனக்குக் கிடைத்த ஆதரவைத்தான் வாக்குகள் பிரதிபலிக்கின்றன."

பேர்ட்டன் தன் முழுக்கடிதத்தில், தானும் சோசலிச சமத்துவக் கட்சியும், தேர்தல் காலம் முழுவதும் பரந்த அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தார்; இதை, தாங்கள் வெளியிட்டு இருந்த கடிதத்தில் டைம்ஸின் ஆசிரியர்கள் வெட்டிவிட்டனர். இரண்டுமாத காலத்திற்கும் மேலாக நடந்த பிரச்சாரத்தில், பேர்ட்டனும் அவருடைய பிரதிநிதிகளும், வடக்கு, தெற்கு கலிஃபோர்னியாவில் உள்ள தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், உயர்நிலைப்பள்ளிகளிலும் உரைநிகழ்த்தியிருந்தனர்.

டைம்ஸ் ஆசிரியர்கள், பேர்ட்டன் அனுப்பியிருந்த கடிதத்தின் கடைசி வரியையும் நீக்கி விட்டனர். அது பின்வருமாறு: "டைம்ஸ் என்னுடைய பிரச்சாரத்தைப்பற்றி, தேர்தலுக்கு முன் பிரசுரிக்கவில்லை. தேர்தல் முடிந்தபின், நான் பெற்ற வாக்குகளைப் பற்றி நியாயமற்ற முறையில் அது பின்னர் இழிவாகப் பேசக்கூடாது."

திருப்பியழைத்தல் தேர்தல் முழுவதும், லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மாநிலத்திலிருந்த மற்ற பெரிய அச்சு, ஒலிக்காட்சி ஊடகங்கள், பெரிதும் பேர்ட்டனுடைய பிரச்சாரத்தை அசட்டை செய்தன. அதற்குப்பதிலாக, "பெரிய வேட்பாளர்கள்" என கூறப்பட்டவர்கள் மீதுதான், தங்கள் கவனத்தை குவித்தன; இந்த சிறிய வேட்பாளர்களில், சிலவகைப் புகழ்பெற்றவர்கள், தொலைக்காட்சி குழந்தை நட்சத்திரமாக இருந்த காரி கோல்மன், பாலியல் இழிநூல்கள் புகழ் லாரி ப்ளின்ட், நடிகை மேரி "கேரி" குக், ஆகியோரும் அவற்றின் கவனத்தில் இருந்தனர்.

ஆனால், பேர்ட்டனின் பிரச்சாரமோ, தேசிய மற்றும் சர்வதேச அளவில், உலக சோசலிச வலைத் தளம் பிரசுரிப்பை அடுத்து, பல்லாயிரக்கணக்கானோரால் கவனிக்கப்பட்டது. பேர்ட்டனின் கடிதத்தைப் பிரசுரிக்க டைம்ஸ் முடிவு எடுத்ததே, இவருடைய பிரச்சாரத்தின் முக்கிய அரசியல் தாக்கம் ஆகும்.

பேர்ட்டனுடைய தேர்தல் பிரச்சாரம் ஒன்றுதான், கலிஃபோர்னிய நெருக்கடி பற்றி பகுப்பாய்வு செய்து, விரிவான அரசியல் திட்டத்தையும் கொடுத்து வெளியிட்டதாகும். தங்களை சோசலிஸ்டுகள் என அடையாளமிட்ட இரு வேட்பாளர்களான Socialist Workers Party ன், Joel Britton, Peace and Freedom Partyன் C.T.Weber இருவரையும் விட மிக அதிகவாக்குகளை பேர்ட்டன் பெற்றார். பல சிறிய வேட்பாளர்கள், ஜனநாயக, அல்லது குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களை விட பேர்ட்டன் அதிக வாக்குகளைப் பெற்றார்.

See Also:

கலிஃபோர்னியா திருப்பி அழைத்தல் தேர்தலின் முடிவுகள்
சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் ஜோன் பேர்ட்டன் 5,915 வாக்குகளை வென்றார்

கலிஃபோர்னியாவின் திருப்பியழைத்தல் தேர்தலில் சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கை
கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தலில் ``வேண்டாம்`` என்று வாக்களியுங்கள், நெருக்கடிக்குச் சோசலிசத் தீர்வுகாண ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்கு கவர்னர் பதவிக்கான வாக்கை அளியுங்கள்

Top of page