World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Why Junichiro Koizumi is being retained as Japanese leader

ஜப்பானிய தலைவராக ஜூனிச்சிரோ கொய்சுமி நீட்டிக்கப்படுவது ஏன்?

By James Conachy
20 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜப்பானில் ஆளும் வலதுசாரி தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party -LDP) தலைவராக, ஜப்பானியத் தலைவர் ஜூனிச்சிரோ கொய்சுமி (Junichiro Koizumi) நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து, இன்று கட்சியில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதன்மூலம் அவர் பிரதமராக நீடிப்பதா? இல்லையா? என்பதும் முடிவாகும். அதன் சொந்த தலைமை முடிவு செய்யப்பட்டதும், ஆளும் கட்சி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நவம்பரில் நாடு தழுவிய தேர்தலுக்கு அறிவிப்புக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரோடு கட்சித் தலைமைக்குப் போட்டியிடும் மூன்று அரசியல் தரகர்களான, ஷிசுகு காமி, டக்காவோ பிஜி, மசாஹிக்கோ கோமுரா ஆகியோரை கொய்சுமி எளிதாக வீழ்த்தி விடுவார் என வாக்குப் பதிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. மொத்தம் 657 வாக்குகள்தான் போட்டியில் முடிவு செய்யும் தன்மை கொண்டவை. ஜப்பானின் நாடாளுமன்ற மேலவை, மற்றும் கீழ்சபையில், இடம் பெற்றுள்ள 357 - LDP உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலைவரை முடிவு செய்ய ஒருவாக்கு உண்டு. மீதமுள்ள 300 வாக்குகளும், நாடு முழுவதிலும் உள்ள கட்சி உறுப்பினர்கள் LDP கிளைகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்களிப்பதன் மூலம் முடிவு செய்யப்படுகிறது.

ஒரு வேட்பாளருக்கு முதல் சுற்றில் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாவது சுற்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். கொய்சுமிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 சதவீதம் பேர் ஆதரவு இருப்பதாக நம்பப்படுகிறது, கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலோர் அவரை ஆதரிக்கின்றனர், எனவே இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு தேவையற்றதாக கருதப்படுகிறது.

தற்போது தேர்தலுக்கு முந்தைய சூழ்நிலைகளில் அவருக்கு ஆதரவான போக்கு காணப்படுவது, மிகுந்த முரண்பாடுகளை உள்ளடக்கிய நடவடிக்கையாகும். அண்மையில் Yomiuri Shimbun நாளேடு நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமரின் மந்திரி சபை, உருவாக்கியுள்ள பொருளாதார கொள்கைகளுக்கு LDP அரசியல்வாதிகளில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களும், கிளை நிர்வாகிகளில் 79 சதவீதம் பேரும் எதிர்ப்பு தெரிவிப்பது காணப்படுகிறது. ஜப்பானில் மிகப் பெரிய கட்சி குழுக்களுக்கிடையே, இதற்கிடையே எந்த நேரத்திலும் மிக முக்கியமான அரசியல் விவகாரங்கள் இரகசியமாக நடத்தப்படவில்லை. 1990-களில் கொய்சுமிக்கு ஆதரவு முடிவு செய்யப்பட்டது அவரது தோற்றத்தைக் கொண்டுதான். அவர் சராசரி மனிதரைப் போன்று தோன்றவில்லை, திருமணமாகாதவர், தீவிரமான வலதுசாரி தேசியவாதி மற்றும் சுதந்திர சந்தை பொருளாதாரத்தை ஆதரிப்பவர் என்ற காரணத்தால் ஆளுங்கட்சியின் எந்த பெரிய குழுவும் இரகசியக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாக செயல்படவில்லை.

கட்சிக்குள், எந்தக் குழுவும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், 2001 ஏப்ரல் மாதம் யோசிரோ மோரி (Yoshiro Mori) பதவி விலகியதும் LDP தலைமை கொய்சுமியை பிரதமராக தேர்ந்தெடுத்தது. கடந்த 13 ஆண்டுகளாக ஜப்பானிய பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது. நெருக்கடி சீராக பெருகிக் கொண்டிருக்கிறது. LDP கன்னைகள் (பிரிவுகள்) ஜப்பானின் சமுதாய நலன்களுக்கும், பல்வேறுபட்ட, கம்பனிகளின் ஆதிக்க நலன்களுக்கும் ஏற்புடைய வகையில், கொள்கையை உருவாக்குவதற்கு தகுதியற்றவை என்பது தெளிவாகத் தெரிகின்றது. கட்சிக்குள் கடுமையான உட்பிளவுகள் நிலவியது, கட்சி சிதறும் நிலையில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில், இதற்கு முன்னர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு வாய்ப்பில்லாதவர் என்று கருதப்பட்ட கெளசுமி தான் இது போன்ற கன்னைகளுக்கு "அப்பாற்பட்டவர்" என்றும், எந்தக் குழுவையும் கலந்து ஆலோசிக்காமல் ஆட்சி செய்வதாகவும் அறிவித்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது.

அவர் பிரதமராக பதவி உயர்வு பெற்றதை மக்களிடம் செல்வாக்கு நிறைந்த அரசியல் வாதியான மக்கிக்கோ தனாக்கா ஆதரித்தார். வலது சாரி செய்தி ஊடகங்களும் அவருக்கு ஆதரவு காட்டின. பொருளாதாரத்தை சீரமைக்கவும், பொருளாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு குறுகிய கால, நம்பிக்கையின் சின்னம், என்று வலதுசாரி ஊடகங்கள் கொய்சுமிக்கு வரவேற்பு கொடுத்தன. அதே நேரத்தில், ஜப்பானிய வலதுசாரிகளின் விரிவான ஆதரவை திரட்டுவதற்காக சில உறுதி மொழிகளையும் அவர் வழங்கினார். ஜப்பானிய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள சமாதானத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் இராணுவத்தை அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் 9-வது பிரிவை நீக்கிவிடுவதாக கொய்சுமி உறுதியளித்தார். மேலும், ஜப்பானின் கடந்த கால இராணுவ மயத்தின் சின்னமாக விளங்கும் யாசுக்குனி போர் ஆலயத்திற்கு மிகுந்த விளம்பரத்தோடு, அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

LDP-க்கட்சியின் பிரதான குழுக்களைச் சார்ந்த வேட்பாளர்களை 2001ல் கொய்சுமி முறியடித்ததைக் குறிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி "கொய்சுமி" புரட்சி என்று வர்ணிக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அத்தகைய ஊடக பிரச்சாரங்களுக்கு வழி எதுவும் இல்லை என்றாலும், அவர் பிரதமர் பதவியில் அமர்ந்தது ஒரு திருப்புமுனையாகும். LDP கன்னைகள் செல்வாக்கு முடிவிற்கு வந்தது மற்றும் ஜப்பானின் அரசியல் தரத்தை மதிப்பிடும்போது நிலையான அரசாங்கம் உருவானது.

கொய்சுமிக்கு முன்னர் LDP கட்சி சார்பில் ஏழு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மக்கள் செல்வாக்கை இழந்ததாலும், குழுக்களின் சதிகளாலும் நான்கு பிரதமர்கள் பதவி விலகினர், ஐந்தாவது பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படும் முன்னர் இயற்கையாக மரணம் அடைந்தார். ஆளுங்கட்சிக்குள் கொய்சுமியின் "கன்னை(பிரிவு) மனப்பான்மையில்லாத" நிர்வாகம் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் வெற்றிகரமாக ஆகியிருந்த கண்ணோட்டத்தை எதிரொலிக்கும் வகையில், ஜப்பானிய மேல்சபையில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய LDP குழுவான ஹாசிமாட்டோ குழுவினர் தங்களது சொந்த வேட்பாளரான டக்காவோ ஃபியூஜிக்கு எதிராக கொய்சுமிக்கு வாக்களிக்க உத்தேசித்திருக்கின்றனர்.

கொய்சுமி உள்கட்சி பிளவுகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதில் வெற்றி பெற்றார். குழுக்களின் ஆதிக்க நலன்களுக்குமேல் பொதுநலனை கருத்தில் கொண்டு செயல்பட்டார். கனிசமான அளவிற்கு உடன்பாடு உள்ள பிரச்சனைகளில் - ஜப்பானை ஒரு பூகோள அரசியல் மற்றும் இராணுவ வல்லரசாக- ஜப்பானிய வலதுசாரிகளை திரட்டினார்.

பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அரசாங்கங்களைப் போல் கொய்சுமியும் 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து புஷ் நிர்வாகம் பிரகடனப்படுத்திய "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" ஜப்பானையும் தீவிரமாக ஈடுபடுத்தினார். அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது ஜப்பானிய ஆயுதப்படைகள் அமெரிக்காவிற்கு ஆதரவாக பங்களிப்பு செய்தனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் தீவிரமாக பங்கெடுத்துக்கொண்ட ஆயுத மோதல் ஆப்கானிஸ்தான் மீது நடைபெற்ற படையெடுப்பாகும். தனது கட்சிக்குள் நிலவுகின்ற பிரதான குழுக்களின் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக தனது பொருளாதார செயல்பட்டியலை மட்டுப்படுத்திக்கொண்டார். கட்சிக் குழுக்களுடன் சமரசம் செய்துகொண்டதையும், அமெரிக்காவுடன் வலுவான உறவை நிலைநாட்டிக் கொண்டதையும் எதிர்த்த வெளியுறவு அமைச்சர் திருமதி மக்கிக்கோ தனாகாவை (Makiko Tanaka) 2002 ஜனவரியில் அவர் பதவியிலிருந்து நீக்கினார்.

கடந்த ஓராண்டிற்கு மேலாக அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது நடத்தப்பட்ட படையெடுப்பின் மூலம் ஜப்பானுக்கு அதிகபட்ச பயன்கள் கிடைப்பதற்கு கொய்சுமி முயன்று வருகிறார். கொய்சுமி அரசாங்கம் போரை முழுமையாக ஆதரித்தது மற்றும் வெள்ளை மாளிகை உருவாக்கிய "விருப்புள்ளோர் கூட்டணியில்" ஜப்பான் சேர்க்கப்பட்டிருந்தது. ஜப்பானில் போருக்கு எதிராக பொதுமக்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது என்பதை கருத்தில் கொண்டு கொய்சுமி இராணுவ உதவி எதையும் செய்வதற்கு மறுத்துவிட்டார். ஜப்பானிய அரசியல் சட்டம் அப்படி இராணுவ உதவி தருவதை தடுத்திருப்பதாக குறிப்பிட்டார். போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் போருக்குப் பிந்தைய ஈராக்கிற்கு ஜப்பானிய படைகளை அனுப்புவதை அவர் தாமதப்படுத்தி வருகிறார்.

ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் ஈராக்கிற்கு குறைந்தபட்சம் 1000 ஜப்பானிய போர் வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு டோக்கியோ பல பில்லியன் டாலர்களை உதவியாக வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புஷ் நிர்வாகம் தனது பங்கிற்காக, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை செயல் பட்டியலுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரான்சு மற்றும் ரஷ்யாவிடமிருந்து எதிர்புப் வருவதை சரியீடு செய்வதற்காக ஜப்பானுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அழுத்தமாய் கூறி வருகிறது.

வடகொரியா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள மோதல் போக்கு கொள்கைக்கு கொய்சுமி ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனால் ஜப்பானிய வலதுசாரிகள் பிரதமருக்கு வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரிய தீபகற்பத்தில் நிலவுகின்ற நெருக்கடியைப் பயன்படுத்தி வடகிழக்கு ஆசியாவில் ஜப்பான் தனது நலன்களை வலியுறுத்தி நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது, அதேவேளை, இராணுவத்தை அனுப்புவதற்கு அரசியல் சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதை நியாயப்படுத்துவதற்கு உள்நாட்டில் அச்ச சூழ்நிலை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கறது.

வடகொரியா மீது அவரது அரசாங்கம் வேண்டும் என்றே திட்டமிட்டு தனது அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருகிறது. சீன கடல் எல்லை என்று கருதப்படும் பகுதியில் வடகொரியாவின் வேவு பார்க்கும் கப்பல் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு கப்பலை 2001 டிசம்பரில், ஜப்பானிய கடலோர எல்லை காவல் படையினர் தாக்கி மூழ்கடித்துவிட்டனர். பிரதான வல்லரசுகளின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரை, வடகொரியாவின் ஏழ்மை நிறைந்த நாட்டிற்கு எந்த பொருளாதார உதவியையும் மறுக்கும் புஷ் நிர்வாகத்துடன் ஜப்பானும் சேர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த அழுத்தங்கள் 2002 செப்டம்பர் மாதம் கொய்சுமி பியோங்காங்கில் உச்சி மாநாடு நடத்தவேண்டிய அளவிற்கு நேரடியாக இட்டுச் சென்றது. மோதல் போக்கை நிறுத்தவேண்டும் என்ற தீவிரமான நம்பிக்கையில் வடகொரியா 1977 முதல் 1983 வரை 13 ஜப்பானிய குடிமக்களை கடத்தி வந்திருப்பதாக ஒப்புக்கொண்டது. இப்படிக் கடத்தப்பட்டவர்களில் சிலர் ஜப்பானுக்கு திரும்பிய நேரத்தில் ஊடகங்களில் உருவாக்கப்பட்ட உற்சாகமும் மற்றும் ராஜ்ஜியத் துறையில் வடகொரியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் LDP கட்சியில் கொய்சுமியின் செல்வாக்கை அதிகரிக்க உதவியது.

ஏப்ரல் மாதம் வடகொரியா தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கோடிட்டு காட்டிய பின்னர், இதை சாக்காகக் கொண்டு LDP ஜப்பானிய மக்களிடையே அச்ச உணர்வையும், ஆவேச சூழ்நிலைகளையும் உருவாக்க முயன்றது. ஜப்பான் மீது மற்றொரு அணு குண்டு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று LDP வலியுறுத்தி கூறிவந்தது. வடகொரியா ஜப்பான் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தக்கூடிய உடனடி ஆபத்தை தொடங்கும் என்றால் நடப்பு அரசியல் சட்டத்தின்படியேகூட, முன் கூட்டியே திடீர் இராணுவ தாக்குதலை நடத்தி எதிரியை முறியடிக்கும் உரிமை ஜப்பானுக்கு உண்டு என்று ஜப்பானின் முன்னணி கேபினெட் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.

உள்நாட்டில் அரசாங்கம் தொடர்ந்து பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகின்றது. கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானிய பொருளாதாரத்தை சீரமைக்கவும், மற்றும் புத்துயிர் ஊட்டவும், மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தனை முயற்சிகளுக்கும் அப்பால் ஜப்பானிய பொருளாதாரம் இன்றைக்கும், பணச்சுருக்கத்தின் பிடியில்தான் சிக்கித் தவிக்கின்றது. ஜூலை மாதத்துடன் முடிந்த 46 மாதங்களில் நுகர்பொருள் விலை குறியீட்டு எண் தொடர்ந்து, வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும், 1300-க்கு மேற்பட்ட கணிசமான வர்த்தகங்கள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன.

சாதகமான ஒரே ஒரு பொருளாதார குறியீடான, ஏற்றுமதிகள் மிகவும் ஆழமான சிக்கலில் உள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சார்ந்திருக்கின்றது. கொய்சுமி பிரதமர் பதவியேற்ற பின்னர், டோக்கியோ பங்கு விலைகள் மேலும் 22 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு அதிகாரபூர்வ வீதமான 5.3 சதவீதத்திலேயே உள்ளது - அதிகாரபூர்வமற்ற வகையில் அதனைவிட மூன்று மடங்கு உள்ளது, மற்றும் சம்பளங்கள் 1995 மட்டத்திற்கு முன்பிருந்த ஊதிய விகிதங்களுக்கு குறைவாகவே உள்ளன. பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக, 6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் பெற்று, பெருமளவில் ஜப்பான் பெரும் பற்றாக்குறையுடன் செலவு செய்திருப்பதால், பொருளாதார நுட்ப நிலைப்பாடுகளின்படி ஜப்பானிய அரசாங்கம் திவாலாகிவிட்டது.

கொய்சுமியும் LDP-க் கட்சியும் இத்தகைய தீர்வுகாண முடியாத பொருளாதார பிரச்சனைகளிலிருந்தும், அவற்றின் மூலம் உருவாகும் சமுதாய நெருக்கடியிலிருந்தும், மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக இராணுவ மய செயல்திட்டத்தில் கடைப்பிடித்து வருகின்றது. இந்த மாதம் கொய்சுமி வெளியிட்ட ஒரு அறிவிப்பில், 2005-ம் ஆண்டு வாக்கில் நாடாளுமன்றத்தில் தான் ஒரு உத்தேச திட்டத்தை தாக்கல் செய்யப் போவதாகவும், அது அதிகாரபூர்வமான அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவை ரத்து செய்யும் நோக்கம் கொண்டது என்றும், அதன் மூலம் ஜப்பான் ஆக்கிரமிப்பு போர்களை நடத்துவதற்கு உள்ள சட்டபூர்வமான தடைகள் நீக்கப்படும் என்றும் அறிவித்தார்.

கட்சி வாக்கெடுப்பில் குறிப்பிடத்தக்க ஆதரவை நிலை நாட்டிக் கொண்டு இந்த வலதுசாரி செயல் திட்டத்தை செயல்படுத்துகின்ற கொய்சுமியின் ஆற்றல், இன்றைக்கு நடக்கும் கட்சி வாக்குப்பதிவில் அவர் லிஞிறி தலைமையை ஏன் உறுதியாகத் தக்கவைத்துக் கொள்வார் என்பதை விளக்குகிறது.

Top of page