World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

What price an American Empire?

Colossus: The Rise and Fall of the American Empire by Niall Ferguson, Penguin Press, 2004, ISBN 0-713-99615-3

அமெரிக்க பேரரசே உன் மதிப்பு என்ன?

நயல் பெர்கூசன்: கலாசஸ் : அமெரிக்கப் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும், பெங்குவின் பதிப்பகம், 2004, ISBN 0-713-99615-3

By Ann Talbot
9 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

பகுதி 1 | பகுதி 2 |பகுதி 3

இது ஒரு மூன்று-பகுதி ஆய்வுக்கட்டுரையின் இறுதிப் பகுதியாகும்

அதிகாரத்திற்கான உறுதிப்பாடு

"பால் இயல், வன்முறை, அதிகாரம்" என்று வரும் சொற்றொடர்களில் "ஆக்ஸ்போர்ட் பெருமகன்" என்ற சொற்களை சேர்த்துக்கொள்ளுதல் அபூர்வமாகும்; ஆனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக ஜீசஸ் கல்லூரியில் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கும் பேராசிரியர் நயல் பெர்கூசன், அந்த வாயப்பைத்தான் நமக்குக் கொடுத்துள்ளார்.

பெர்கூசனுடைய கருத்தில் பால் இயல், வன்முறை மற்றும் அதிகாரம் ஆகியவைதான் முக்கியமான வரலாற்றுப் போக்கு நிர்ணயிக்கும் தன்மையை பெற்றுள்ளனவே ஒழிய பொருளாதாரம் அல்ல. The Cash Nexus: Money and Power in the Modern World 1700-2000, நிதிப் பிணைப்பு: தற்கால (1700-2000) உலக வரலாற்றில் செல்வமும் அதிகாரமும் என்ற தன்னுடைய புத்தகத்தில் இந்தக் கருத்தாய்வை அவர் முன்வைத்துள்ளார். இந்தப் புத்தகத்தின் அடிக் கருத்தாக ஏற்கப்பட்டுள்ள கருத்து "இந்த முரண்பட்ட உந்துதல்களை, எளிமையைக் கருத்திற்கொண்டு அவற்றை பால் இயல், வன்முறை, அதிகாரம் என்று வைத்துக் கொள்ளுவோம் -- தனித்தனியேயும், ஒன்றாகவும், பொருளாதார உந்துதலான பணத்தையும் விஞ்சிய முறையில் நடந்து கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளன."

நிதிப் பிணைப்பு என்ற நூலின் முக்கிய முடிவுரை "பணம் ஒன்றும் உலகத்தை இயக்கவில்லை. ...மாறாக அரசியல் நிகழ்வுகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் போர்கள்தான், தற்கால வாழ்வின் நிறுவன அமைப்புக்களை உருவாக்கியுள்ளன."

பெர்கூசனுடைய முக்கிய இலக்கு வெளிப்படையாகவே மார்க்சிசம்தான்; ஆனால் தற்காலத்தை ஆய்வு செய்வதில் பொருளாதாரத்தைக் கருத்திற்கொள்ளாமல் எந்த வரலாற்று ஆய்வு முறைகளும் இருந்ததில்லை; போல் கென்னடி போன்ற நடைமுறைப் பொருளாதார உறுதிப்பாட்டுக்காரர்கள் கூட இவரால் தாக்குதலுக்கு உட்படுகின்றனர். The World's Banker L The History of the House of Rothschild, உலகத்தின் வங்கியாளர்: ரோத்ஸ்சைல்டு இல்லத்தின் வரலாறு என்ற நூலின் ஆசிரியர் என்ற முறையிலாவது பெர்கூசர் நிதிய மூலதனத்திற்கு சிறிது முக்கயத்துவம் கொடுத்திருக்க்கூடும் என்று எதிர்பார்க்கலாம்; ஏனென்றால், 18, 19ம் நூற்றாண்டுகளின் பெரும்பகுதியில் ரோத்சைலொடுகள் மிகப் பெரிய வகையில் அரசாங்கப் பத்திரங்களில் வணிகம் நடத்தியிருந்தனர். ஆனால் நிதிய மூலதனத்தின் பங்கு பற்றி அவருடைய பார்வை மிகச் சிறியதேயாகும். அரசியல் காரணிகளினால்தான் நிதிய மூலதனம் முழு ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தை அவர் கொண்டுள்ளார்; அது இரண்டாம் வழியில்தான் முக்கியத்துவத்தை கொண்டு நிர்ணயக் காரணியாக உள்ளது என்ற தீவிரக் கருத்து அவருடையது. 20ம் நூற்றாண்டு கடைசி, 21ம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கு, நிதிய மூலதனத்தின் சக்தியைக் கண்ணுற்றவர்களுக்கு, பெர்கூசனுடைய கருத்து அனுபவத்தில் இருந்து முற்றிலும் எதிர்வகையாகத்தான் இருக்கும்.

ஒரு பட்டாணி (Peanuts comic strip) நகைச்சுவைக் கதையில், இனிப்புத்தீனி (Peppermint Patty) தன்னுடைய மேசையில் உட்கார்ந்து "முதல் உலகப்போருக்குக் காரணங்கள் யாவை? தேவையானால் காகிதத்தின் இரு பக்கங்களிலும் விடையளிக்கவும்" என்ற கேள்விக்கு பதில் எழுதிக் கொண்டிருந்தது. பேராசிரியர் பெர்கூசனுடைய நூலைப்படித்திருந்தால் இச் சிறுமிக்கு காகிதத்தின் ஒருபக்கம் கூட தேவைப் பட்டிருக்காது. ஒரு தபால் ஸ்டாம்பின் பின்புறத்தில் அவள் கேள்விக்கு விடை எழுதியிருப்பாள்: பால் இயல், வன்முறை, அதிகாரம் என்று. தற்கால உலகத்தின் மிகப் பெரும் நிகழ்வுகளை விவாதிக்கும்போது பெர்கூசனுக்கு காரண காரியத்தின் சிக்கல்கள் பற்றிய நினைப்பு இல்லை. ஜேர்மன் சமுதாயத்திற்குள்ளேயே நீண்ட காலப் போக்குகளை ஆராய்ந்து அவை எவ்வாறு முதல் உலகப் போருக்குக் காரணமாயின என்று கூறும், மிகச் சிறந்த ஜேர்மனிய வரலாற்று அடிப்படை நூலை எழுதிய பிரிட்ஸ் பிஷரைப் பற்றிக் கூட அதிக அக்கறையை, பெர்கூசன் காட்டவில்லை.

உண்மையில் பெர்கூசனுக்கு பால் இயல், வன்முறை, அதிகாரம் ஆகியவை, மற்றும் நிகழ்வுகளின் ஒவ்வொரு மாறுதல் மற்றும் வரலாற்று வளர்ச்சியின் நுட்பமான தன்மை இவற்றை விளக்குவதற்குப் போதுமானவை அல்ல என்பது நன்கு தெரியும்; எனவே பத்திரச் சந்தை என்ற ஓர் இரண்டாம் காரணக் கூறுபாட்டை அவர் வாசிப்பவர்களுக்குக் கொடுத்துள்ளார். பிரான்ஸ் ஏன் நெப்போலியப் போர்களில் தோல்வியடைந்தது? பத்திரச் சந்தை நன்கு வளர்ச்சியடையாததுதான். ஜேர்மனி ஏன் முதலாம் உலகப் போரில் தோல்வி அடைந்தது? பத்திரச் சந்தை நன்கு வளர்ச்சியடையாதது தான். இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனி ஏன் தோற்வியுற்றது. பத்திரச் சந்தை நன்கு வளர்ச்சியடையாததுதான். அமெரிக்கா ஏன் வியட்நாம் போரில் வெற்றி பெறவில்லை?... இல்லை, இல்லை. அந்த விடை இதற்குக் கூற முடியாதது.

இன்னும் கூடுதலான வகையில் அவருடைய உலகப் பார்வைக்கு மதிப்புக் கொடுக்கும் மையக் கருத்தாக மற்றொரு காரணக் கூறுபாட்டையும் பேராசிரியர் பெர்கூசன் கொண்டுள்ளார்; அது இன்னும் கூடுதலான இரக்கமற்ற தன்மையைக் காட்டாதது என்ற கருத்துரையாகும். அமெரிக்க குடியேற்றங்களை பிரிட்டன் ஏன் இழந்தது? அது இன்னும் கூடுதலான இரக்கமற்ற தன்மையைக் காட்டாதுதான். பிரிட்டன் தன்னுடைய பேரரசை ஏன் இழந்தது? அது இன்னும் கூடுதலான இரக்கமற்ற தன்மையைக் காட்டாததுதான். அமெரிக்கா ஏன் வியட்நாம் போரில் தோல்வியடைந்தது? அது இன்னும் கூடுதலான இரக்கமற்ற தன்மையைக் காட்டாததால்தான். இப்படி வரலாற்றை எளிதாக்கும் முறையாகத்தான் உண்மையில் இந்தக் கருத்துரை உள்ளது.

வரலாறு அடிப்படையிலேயே நிர்ணயிக்க முடியாத தன்மையைத்தான் கொண்டுள்ளது என்பது பெர்கூசனுடைய வாதம் ஆகும். Virtual History என்பதில், "பெருங்குழப்பமும், முன்கூட்டி நிர்ணயிக்க முடியாத நிகழ்வுகளை கொண்டுள்ள தொகுப்பாபவும், வேறுவிதமான விளைவுகளைக் கொடுக்கக் கூடிய தன்மையையும்தான்" வரலாறு கொண்டிருக்கிறது என்பது அவர் கருத்து.

அக்காலத்தில் வாழ்ந்தவர்களும், அதற்குப் பின்னர் பெரும்பாலான வரலாற்றாளர்களும் முதல் உலகப் போர் ஓர் தவிர்க்க முடிந்திராத நிகழ்வு என்று கருதும்போது, பெர்கூசனைப் பொறுத்தவரையில் அது முற்றிலும் தற்செயலாக நிகழ்ந்தது என்ற கண்ணோட்டத்தை கொண்டுள்ளார். "இராணுவ வெறியோ, ஏகாதிபத்தியமோ, இரகசிய தூதரகச் செயல்பாடுகளோ போரைத் தவிர்க்க முடியாத நிகழ்வு என்று செய்யவில்லை. ஐரோப்பா முழுவதும் 1914ல் இராணுவ வெறிக்கு எதிரான உணர்வுதான் அரசியலில் ஏற்றம் பெற்றிருந்தது. க்ருப் (Krupp) போன்ற "மரண வியாபாரிகள்" உட்படப் பல வணிகர்களும் ஒரு பெரும் ஐரோப்பிய போரில் அக்கறை காட்டவில்லை. இரகசியாமாகவோ, வெளிப்படையாகவோ, தூதரகச் செயல்களும் வல்லரசுகளுக்கு இடையே இருந்த ஏகாதிபத்திய பூசல்களை தீர்ப்பதில் வெற்றியைத்தான் கொண்டிருந்தன: குடியேற்ற மற்றும் கடற்படை பிரச்சினைகளிலும் கூட பிரிட்டனும், ஜேர்மனியும் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து கொள்ள முடிந்தது." என்று அவர் வலியுறுத்துகிறார்.

இது நாம் வழக்கமாகக் கேட்கும் வாதம்தான்; ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான கார்ல் கவுட்ஸ்கி முன்வைத்திருந்த தீவிர ஏகாதிபத்தியக் கருத்தாய்வைத்தான் இது ஒத்திருக்கிறது. போரின் தொடக்கத்தின் கவுட்ஸ்கி போட்டியிடும் வல்லரசுகள் ஒருங்கிணைந்து, ஒத்துழைத்து உலகத்தை சுரண்டுவதற்கு ஒப்புக்கொள்ளக்கூடும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். நான்கு ஆண்டுகள் பதுங்கு குழிகளுக்குகள்ளிருந்து படுகைலைகள் நிகழ்த்தப்பற்றவை அத்தகைய வாதங்களுக்கு நம்பிக்கைத்தன்மையைக் கொடுக்கவில்லை. போரின் மிகப் பெரிய அளவு, மற்றும் கால நீட்டிப்பு, மற்றும் ஒரு தலைமுறைக்குள் அதே பூசல் வெளிப்பட்டது என்ற உண்மை ஆகியவை அனைத்தும் இன்னும் ஆழ்ந்த வரலாற்றுக் காரணிகள் செயல்பட்டிருந்தன என்பதைத்தான் நிரூபிக்கின்றன.

பெர்கூசனுடைய கருத்தின்படி முதல் உலகப் போர் தவிர்க்கப்பட்டிருக்கலாம், அல்லது குறைந்தது அந்தப் பெரிய அளவில் நடந்திருக்க வேண்டியதில்லை. பிரிட்டன் தலையீடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, அது உலகப் போராக மாறியது. பிரிட்டன் தலையீடு செய்யாமல் ஒதுங்கியிருந்தால், அது தன்னுடைய உலகப் பேரரசைத் தக்க வைத்துக் கொண்டிருந்திருக்கும் என்பதோடு, ஜேர்மனியின் தலைமையில் ஓர் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்பட்டிருக்கும். நூறாண்டுப் போருக்குப் பின்னர் எந்த அரசாங்கமும், திறனுடைய விரோதப் போக்கு நாட்டை ஆங்கில கால்வாய்க்கு மறுபுறம் அனுமதிக்க இசைந்தது இல்லை. 18, 19, 20ம் நூற்றாண்டுகள் முழுவதும் பிரிட்டனின் வெளிநாட்டுக் கொள்கை ஐரோப்பாவில் வல்லமை சமநிலை (Balance of power) பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் எந்த ஒரு தனி நாடும் முழு ஐரோப்பிய கண்டத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதும்தான். இந்த வல்லமை சமநிலையை சற்று மாற்றிய விதத்தில்தான் ஐரோப்பாவை பற்றிய இன்றைய அமெரிக்கக் கொள்கையின் வழிகாட்டு நெறியும் அமைந்துள்ளது. ஆனால் அத்தகைய நீண்டகால வரலாற்று தொடர்ச்சிகள் பெர்கூசனின் பகுப்பாய்வில் இடம் பெறவில்லை; மகத்தான உலகப் போர், உலகப் பேரரசை இழத்தல் போன்றவை கூட, போதுமான உறுதிப்பாடு இல்லாததால்தான் நிகழ்ந்தன என்பது பெர்கூசனுடைய கருத்து.

உறுதியான விருப்பம், பால் உணர்வு, வன்முறை, அதிகாரம் இவற்றைப் பற்றிய நீட்ஷிய முறையிலான பெர்கூசனின் அயராத சிந்தைக் குவிப்பு ஐயத்திற்கிடமின்றி அறியப்படலாம்; Cash Nexus என்னும் நூலில் இவர் தன்னுடைய தத்துவத்தை வெளிப்படையாகக் கூறியிராவிட்டாலும் இது நன்கு விளங்கும். உள்ளுணர்வை நசுக்கியது என்ற காரணத்தால் வரலாற்றை வெறுத்திருந்த நீட்ஷேயிடம் தத்துவார்த்த ஊக்கநெறியைப் பெற விழைவது எந்த வரலாற்றாசிரியருக்குமே வேடிக்கை நிறைந்த தன்மையுடையதுதான். வரலாற்றுக் குவிப்புக்களினாலும், ஊழலினாலும் நலிந்து நிற்கும் ஒரு சகாப்தத்தில் தான் வாழ்ந்து வருவதாகத்தான் நீட்ஷே உணர்ந்திருந்தார்; அதிலும், குறிப்பாக "ஹெகலுடைய தத்துவத்தின் அரக்கத்தனம் கூடுதலாகப் படர்ந்திருந்த காலம்" என்பது அவருடைய கருத்து. ஓர் அறிவுபூர்வ முறை என்று ஹெகல் வரலாற்றை கருத்தாய்விற்கொண்டது, மாயத்தோற்றங்களை அழித்துவிடுவதால், அவற்றால் மட்டுமே சாதிக்கக்கூடிய மிகப் பெரிய விஷயங்கள் நிறுவப்பட முடியாமற்போய்விடும்; எனவே ஹெகல் கருத்து கண்டனத்திற்கு உரியது என்று நீட்ஷே கூறினார். "அனைத்து உயிரினங்களுக்கும் தங்களைச் சுற்றி ஒரு சூழல் தேவை என்றும், ஓர் இருண்ட இரகசிய வட்டம் வேண்டும்" என்பது நீட்ஷேயுடைய கருத்து.

"வரலாற்றுத் தொடர்பற்ற பனிபடர்ந்த பாதையில் ஒரு முறை சென்றதில்லை என்றால் மனிதரால் எதையும் சாதிக்க இயலாது" என்று நீட்ஷே கருதினார். புதிர்களைப் புனைவதற்கு வரலாறு பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பத்தை நீட்ஷே கொண்டிருந்தார். கலைப்படைப்புக்கள்தாம் உள்ளுணர்வுகளைத் தட்டி எழுப்பமுடியும் என்பதால், வரலாறும் அத்தன்மைக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அவர் விரும்பினார். [Nietzsche: On the Use and Abuse of History for Life]

நீட்ஷேயில் "வரலாற்றுத் தொர்பற்ற பனிபடர்ந்த பாதை" என்பது ஏந்த வரலாற்றாசிரியருக்கும் உறுதியைத் தரக்கூடிய தொடக்க நிலை அல்ல; ஆனால் நீட்ஷேயையும், பெர்கூசனையும் அருகருகே ஆய்தால் எண்ணங்களின் இணைவைப் பற்றி நாம் வியந்து போகிறோம். Virtual History என்ற தலைப்பில் மாற்று வரலாற்றுக் காட்சிகளை பற்றிய ஆய்வு என்பதுதான் பெர்கூசனுடைய தொடக்க கால நூல்களில் ஒன்றாகும். மிகப் பெரிய வரலாற்று மாறுதல்கள் நிகழ்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், "எவ்வாறு மாறி இருந்தக் கூடும்" என்று நிகழ்வுகளைப் பற்றி ஆராய்வதில் வரலாற்றாசிரியர்கள் இயற்கைக்கு விரோதமாக ஏதும் செய்துவிடவில்லை; ஆனால் வரலாறு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள வகைகளில் சென்று கொண்டிருக்கும்போது, அத்தகைய மாற்றுச் சிந்தனைகள் தேவையில்லை; நிகழ்வுகளின் இயக்கம், அவற்றின் காரணங்கள் இவற்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் தன்மை இருக்கும்போது அத்தகைய பார்வை தேவையில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் ஏற்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு அறைகூவும் வகையில் உள்ளன; பல வரலாற்றுக் கருத்துக்கள் மறு மதிப்பீடு செய்யப்படவேண்டும் என்று அவை வலியுறுத்துகின்றன. ஆனால் பெர்கூசனுடைய உண்மைக்கு மாற்றால வரலாறு அத்தகைய மறு மதிப்பீட்டுத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. பெர்கூசன் அளித்துள்ள நிகழ்வுகளில் "இவ்வாறிருந்தால்?" என்ற கேள்வியில் ஒரே மாதிரியான, "புரட்சிகளே இல்லை என்றால் என்ன நிகழ்ந்திருக்கும்?" போன்ற தன்மைதான் உள்ளது. ஆங்கிலேய புரட்சி இருந்திருக்காது, அமெரிக்கப் புரட்சி இருந்திருக்காது, பிரெஞ்சுப் புரட்சி இருந்திருக்காது, ஆம் ரஷியப் புரட்சியும் இருந்திருக்காது.

வரலாற்றில் காரண-காரியத் தொடர்பு என்பதைப் பற்றிய ஆழ்ந்த ஆய்வாக இல்லாமல், பெர்கூசடுனைய உண்மை-எதிர் வரலாறு, ஒரு வகையான நீட்ஷிய கற்பனையுரைத் தயாரிப்பாக இருந்து புரட்சியைப் பற்றிய நினைவுகள் அனைத்தையும் அழித்து விடும் முயற்சியைக் கொண்டுள்ளது. "உண்மையின் குருட்டு (அப்பட்டமான) த்தனமான ஆற்றலுக்கு" எதிராக இருக்கவேண்டும் என்ற நீட்ஷேயில் எழுச்சிதான் அது.

உண்மையான வரலாறு பேராசிரியர் பெர்கூசனுக்குச் சிக்கல்களைத்தான் உறுதியாகக் கொடுக்கிறது. முதல் உலகப் போர் ஏன் நிகழ்ந்திருக்கக் கூடாது என்பதை அவர் கூறுகிறாரே ஒழிய, ஏன் நிகழ்ந்தது என்பதற்குக் காரணத்தைக் கூறவில்லை; சமீபத்திய அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் பற்றியும் அவர் திகைப்பும், குழப்பமும் அடைந்துள்ளார். கெர்ரி வெற்றி பெற்றவேண்டும் என்று ஆதரவைக் கொடுத்தபின்னர், எந்த ஐரோப்பிய தாராளவாதி போலவே இவரும் புஷ்ஷின் வெற்றியினால், பெருந்திகைப்பிற்கும், தடுமாற்றத்திற்கும் உட்பட்டுள்ளார். Independent என்ற இதழில் தேர்தல் முடிவிற்குப் பின் எழுதிய கட்டுரையில், தான் இயல்பான ஜனநாயகக் கட்சியாளர் என்றில்லாவிட்டாலும், "குடியரசுக் கட்சி எவ்வாறு சமூகத்தின் திருமணங்களில் இருந்து உயிரணு ஆராய்ச்சிவரை அனைத்து விஷயங்களிலும் பெருகிய வகையில் காட்டும் தொடர்ந்த திமிர்த்தனமான, சகிப்புத்தன்மையற்ற நிலையை ஏற்க முடியாமல் இருப்பதாக" குறைகூறியுள்ளார்.

"அடிப்படையிலேயே, ஒரு மெசியானிய அமெரிக்க கால்வினியராகப் புஷ் உள்ளார்" என்று எழுதும் பெர்கூசன் புஷ்ஷிற்குத் தடைகள் அனைத்துமே "ஆழ்ந்த நம்பிக்கையுடைய ஜனாதிபதி பிடிவாதமான உறுதியுடன் விடைகாண்பதற்கான, இறைச் சோதனைகள் போலத் தோன்றின" என்கிறார்.

"மிகக் கூடுதலான அமெரிக்கர்கள் இந்தச் சமய உணர்வில் பங்கு கொண்டுள்ளனர்" என்பதுதான் பெர்கூசனுக்குப் பிரச்சினையாக உள்ளது. Book TV க்குக் கொடுத்துள்ள பேட்டியில், தன்னை ஒரு தாராளவாத அடிப்படையாளர் என்று பெர்கூசன் விவரித்துக் கொண்டுள்ளார். அதாவது பொதுநலச் சீர்திருத்தங்களைவிட அவர் தடையற்ற சந்தை முறைக்கு ஆதரவு தருகிறார் என்ற வகையில் தாராளவாதி என்று உணரப்படவேண்டும் என்று அவர் கருதுகிறார். குடியரசுக்கட்சியின் புதிய கன்செர்வேடிவ்கள் போல் இல்லாமல், இவர் தன்னுடைய தடையற்ற சந்தை முறைத் தாராளக் கொள்கையை எந்த அளவிற்கு இட்டுச் செல்லுகிறார் என்றால் ஒவ்வாரு தனிநபரும் சமூக வாழ்விலும், பொருளாதார செயற்பாடுகளிலும் தன்னுடைய நலன்களைத்தான் தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளார். இம்முயற்சியில் நுண்ணுயிர் ஆராய்ச்சி, ஓரினத் திருமணம் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தபோதிலும் கூட, இப்பொழுதுள்ள நிர்வாகத்திற்கு மிகவும் வலதில்தான் இவர் உள்ளார்.

அதன்னுடைய வரலாற்றுக் கருத்தாய்வுகள் உண்மை நிகழ்வுகளோடு தொடர்பு அற்று இல்லை என்பதனாலும் அமெரிக்காவில் சமய வலதுகளின் எழுச்சியை விளக்குவதற்கு இயலாமையினாலும், பெர்கூசன் அமெரிக்க தேர்தலின் முடிவினால் பெரும் திகைப்பிற்கு தள்ளப்பட்டுள்ளார். பாலுணர்வு, வன்முறை, அதிகாரம் எப்பொழுதுமே வரலாற்றில் இருந்திருந்த போதிலும், நிகழ்வுகளுக்குத் தெளிவான விளக்கத்தை அவற்றினால் அளிக்க முடியாததோடு, முன்கூட்டிக் கூறும் திறனையும் பெற்றிருக்கவில்லை. வரலாற்றைப் புரிந்து கொள்ளுவதற்கு பகுத்தறிவான முறையை அவர் தனக்கே கொடுத்துக் கொள்ள மறுத்துவிட்டதால், அவருக்கு வரலாறு உண்மையாகவே பெரும் குழப்பமாக தோன்றுகிறது.

இதன் விளைவாக பெர்கூசனுடைய பருமனான நூல்களில் அறிவார்ந்த முறையில் மிகப்பெரிய வெற்றிடம்தான் உள்ளது. விமான நிலையங்களில் விற்கப்படும் அதிக விற்பனையாகும் நாவல்களில் காணப்படும் முறையில், மனத்திற்கு எளிதான வகையில் ஏராளமான கதைகளை ஒயிலுறச் சொல்லும் வகையில், அவருடைய நூல்களின் தொடக்கங்கள் இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்புகின்றன. ஆனால் ஒரு சிந்தனைவகை என்று இதைக் கொண்டால், அவருடைய நூல்கள் அனைத்திலும் மேம்போக்கான கருத்தாய்வுகள், கோர்வையில்லாத நிலையில் என்ற சொல்லக்கூடிய வகையில் சுமாராக எடுத்துரைக்கப்பட்டுள்ள நிலையில்தான் நிறைந்து வழிகின்றன. வாதங்கள் பிற்போக்குத்தன்மை நிறைந்தனவாக மட்டுமின்றி, வெற்றுத் தன்மையும் கொண்டுள்ளன. ஆனால் ஒரு நபர் கல்வியுலகில் மிகப்பெரிய இடத்தையும், செய்தி ஊடகத்தில் பெரும் புகழையும் இத்தன்மையான எண்ணங்களின் அடிப்படையில் அடையும் நிலை, தான் வாழும் உலகத்தின் உண்மைநிலையை ஆராய விரும்பாத, ஆட்சி வர்க்கத்தின் பொதுவான அறிவார்ந்த நிலைப்பாட்டின் சரிவைத்தான் காட்டுகிறது. பகுத்தறிவு எண்ணங்களுக்கு பதிலாக கற்பனை உரைகள் எழுதப்படுவது சரியாக அமையாது. இதையும் விட வேறு எதுவும் கூடுதலான முறையில் அறிவார்ந்த நிலை திவாலாகி விட்டதற்கு எடுத்துக்காட்டாக இருக்க முடியாது.

இன்றைய உலகில் நடந்து கொண்டிருப்பவற்றிற்கு தக்க விளக்கத்தை பெர்கூசனால் கொடுக்க இயலவில்லை என்றாலும், அவருடைய வரலாற்றைப் பற்றிய தத்துவம் முற்றிலும் அவருடைய கருத்துக்களுக்கு பொருந்தும் தன்மையைக் கொண்டுள்ளது. பெர்கூசனைப் போல் பேரரசுக் கருத்தைப் பற்றி புதிய சீரமைக்கும் தன்மையைக் கொடுக்கவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு நீட்ஷே பிரமாதமான முன்னோடித் தேர்வுதான். ஏகாதிபத்தியத்தைப் பெரும் களிப்புடன் புகழாரம் சூட்டியவராகத்தான் நீட்ஷே இருந்தார். தற்கால ஏகாதிபத்தியம் எழுச்சியுறுவதற்கு முன்னர் அவருடைய நூல்களில் பல எழுதப்பட்டதால், இது பொருந்தாத் தன்மையுடையதோ என்று தோன்றினாலும்., அந்தத் தத்துவஞானி பெருந்திறைமை படைத்த இசைக் கலைஞராகவும் இருந்ததால், வருங்காலத்தைப் பற்றிய ஒரு கற்பனை எதிர்பார்ப்பில் ஒரு கலைஞரிடம் காணப்படும் ஆறாம் உள்ளுணர்வை அவர் பெற்றிருந்தார். The Destruction of Reason, பகுத்தறிவின் அழிவு என்ற தன்னுடைய புத்தகத்தில் Lukacs விளக்கியிருப்பதுபோல், நீட்ஷேயின் தத்துவம், ஒரு ஏகாதிபத்திய சகாப்தத்தின் எண்ண வடிவங்களின் உள்ளுணர்வு உந்துதல்களை கற்பனையுரை வடிவில் வெளிப்படுத்துகிறது. அவருடைய எண்ணங்களில் அறிவார்ந்த வரையறைகள் இல்லாத தன்மையே, அவை கணக்கிலடங்கா முறையில் மறுசீர் விளக்கத்திற்கு உட்படுதலின் தன்மையை கொடுத்துள்ளன; எனவேதான் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்திலும், முன்பு நாஜிக்களிடையே கொண்டிருந்த செல்வாக்கைப் போல், அவர் இன்னமும் செல்வாக்கைக் கொண்டுள்ளார்.

இறுதிப் பகுப்பாய்வில், வரலாற்றில் காரண காரியத் தொடர்பு என்பது பெர்கூசனைப் பொறுத்தவரையில் நீட்ஷே அழைத்துள்ள அதிகாரத்திற்கான பெருவிருப்பம் என்பதிலும், வலிமையற்ற குழுக்களின்மீது ஆதிக்கம் செலுத்துவதில் கிடைக்கும் திருப்தியிலும் அடங்கிவிடுகிறது.

இத்தகைய அதிகாரத்திற்கான பெருவிருப்பம் இல்லாவிட்டால், கூடுதலான ஆக்கிரோஷம் நிறைந்த போட்டியார்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஒரு பேரரசு தவிர்க்கமுடியாமல் தோல்வியுற்றுவிடும். சரியான விளக்கம் என்றாலும் இந்தக் கருத்தாய்வு தற்போதைய அமெரிக்க ஆட்சி வர்க்கத்தின் சிந்தனையளவு இலக்குகளுக்குப் பொருந்தும். பெர்கூசனைப் பொறுத்தவரையில் அனைத்துமே வலுவற்றவர்கள்மீது வலிமை மிகுந்தவர்கள் ஆதிக்கம் கொள்ள வேண்டும் என்ற பெரு விருப்பத்தை ஒட்டி உள்ளது என்று இருப்பதால், வெள்ளை மாளிகையை விட வேறு எந்த இடத்திலும் இக்கருத்து நல்ல முறையில் வெளிப்பட்டிருக்கவில்லை.

வரலாறு என்பது பொருளாதாரத்தால் நிர்ணயிக்கப்படவில்லை என்ற கருத்தை பெர்கூசன் கொண்டிருப்பதால், அமெரிக்கா போல் இரண்டு முடக்கும் பற்றாக்குறைகளில் ஆழ்ந்துள்ள பொருளாதார சக்திகூட ஒரு போரை வெல்ல இயலும். Cash Nexus ல் இவர் எழுதுவதாவது: "அதிகாரம் என்பது முற்றிலும் பொருளாதாரத்தை ஒட்டி அல்ல, அதிலும் ஒரு குறுகிய கால நிகழ்விற்கு என்பது அல்ல என்பதை இந்தப்போர் தெளிவாக்கியுள்ளது ..உற்பத்தி செய்யும் ஆற்றல் அல்லது திறனை விட அழிக்கும் திறமைதான் போரின் வெற்றியை நிர்ணயிக்கிறது."

இந்த கருத்துரை தாராள சமுதாய அரசியல் கொள்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானது என்று பெர்கூசன் கைகளை பிசைந்து கொள்ளுவதைத்தான் காட்டுகிறது. அட்லான்டிக்கைக் கடக்கும்போது முதல் வகுப்பில் படுத்தே செல்லும் வசதியுடைய அவரும் அவரைப் போன்ற கருத்து உடையவர்களும், தங்களுடைய சுதந்திரங்களையும் சலுகை பெற்ற வாழ்க்கை முறையையும் தக்க வைத்துக் கொள்ளும் நிலை இருக்கும் வரை, நாம் ஒரு நன்கு படித்த, பண்பாடுடைய, நாகரிகமுடைய நபர் உலகத்தைக் கொள்ளையடிப்பதற்கும், சூறையாடுவதற்கும் ஏற்ற ஒரு கருத்தை முன்வைப்பதைத்தான் பார்க்க முடியும். இந்த முறையில் சற்று கோரத்தனமும், பிற்போக்குத் தனமும் இருக்கிறது என்றாலும், அமெரிக்கவிடம் ஓர் இராணுவ வலிமை இரக்கும்போது உலகத்தின் செல்வத்தை எந்த அளவிற்குச் சுரண்ட முடியுமோ அந்த அளவிற்கு சுரண்டலாம் என்ற கருத்து புஷ்ஷைச் சுற்றியுள்ள சிறுகுழுவின் இயக்கு உந்துதலாக இருப்பதுதான், பெர்கூசனுடைய எண்ணங்களின் கல்விக்கூடப் பிரிவு போன்றவற்றின் நிலைப்பாட்டின் உறுதியாகவும், வரலாற்றுப் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது.

புஷ்ஷுடைய சமுதாயம் பற்றிய கொள்கைகள், இவரே ஒரு பகுதியாக உள்ள சலுகை பெற்றுள்ள தட்டுக்களின்மீது இருக்கும் என்பதைப் பற்றி மன உளைச்சல் சிறிது பெர்கூசனுக்கு இருந்தாலும், பெரும்பாலான மக்கட் தொகுப்பின்மீது அதன் தாக்கம் அல்லது பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்ற அக்கறை இவருக்கு கிடையாது. பேரரசுகள் பரந்து விரிந்து போவதனால் அழிந்து விடுவதில்லை என்பது இவர் வாதம். அதிகம் பரந்து விரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணமில்லாவிட்டால்தான், அதாவது இராணுவத்திற்கு போதுமானதாக செலவிடாவிட்டால்தான் அவை அழிந்துபடும். "ஜனநாயகமற்ற ஆட்சியில்" செலவினங்கள் ஒரு பிரச்சினை அல்ல; ஏனெனில், "போரின் மொத்த, நீண்ட கால செலவினங்கள் பொருட்டல்ல. போரின் உடனடி நலன்கள் ஆட்சி வர்க்கத்தினரை அடையும் என்றாலும், அதிகாரத் தகுதி பறிக்கப்பட்ட பிரிவினரால் செலவினங்கள் ஏற்கப்படுகின்றன என்றாலும், போர் என்பது முற்றிலும் பகுத்தறிவார்ந்த தேர்வுதான்."

முற்றும்