World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Sarkozy woos Socialist Party and trade unions

பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன் சார்க்கோசி ஊடாடுகிறார்

By Peter Schwarz
15 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

புதனன்று பிரான்சின் ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் கோலிச தலைவர் நிக்கோலா சார்க்கோசி முன்னாள் சோசலிஸ்ட் கட்சி மந்திரிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க உள்ளார். பதவி ஏற்பதற்கு முன்னரே, இவர் பிரான்சின் முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

சார்க்கோசி பதவியேற்ற பின்னர்தான் புதிய அரசாங்கம் செயல்படத் தொடங்கும்; ஆனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தன்னுடைய நெருக்கமான நம்பிக்கைக்கு உரிய பிரான்சுவா பிய்யோன் ஐ பிரதம மந்திரியாக வியாழனன்று நியமிப்பார் என்று பரந்த அளவில் எதிர்பார்க்கப்படுவதுடன், முழு அரசாங்க அமைப்பையும் அடுத்த திங்கட்கிழமைக்குள் எப்படியும் ஒழுங்குபடுத்துவார் என்றும் தெரிகிறது. அரசாங்கம் ஒரு இடைக்கால தன்மையை பெற்றிருக்கும்; ஜூன் 17ம் தேதி பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர்தான் இறுதி வடிவத்தை பெறும்.

கடந்த சில தினங்கள், வரவிருக்கும் அரசாங்கத்தின் உட்சேர்க்கை பற்றிய ஆழ்ந்த கலந்துரையாடல்கள் மற்றும் ஊகத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளியன்று சார்க்கோசி, அப்பொழுது சோசலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த லியோனல் ஜோஸ்பன் தலைமையில் இருந்த இடது பன்முக அரசாங்கத்தில் (1997-2002) வெளியுறவு மந்திரியாக இருந்த Hubert Védrine உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். செய்தி ஊடகத் தகவல்களின்படி, சார்க்கோசி தன்னுடைய அரசாங்கத்தில் Védrine க்கு வெளியுறவு மந்திரி பதவியை கொடுக்க உள்ளார் எனத் தெரிகிறது.

ஜோஸ்பன் அரசாங்கத்தில் குறுகிய காலத்திற்கு சுகாதார மந்திரியாக இருந்த பேர்னார்ட் குஷ்நெர் (Bernard Kouchner) க்கும் வெளியுறவு மந்திரி பதவி தரப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. குஷ்நெர் இன் அரசியல் வாழ்வு பரபரப்பூட்டும் நிகழ்வுகள் நிரம்பியதாகும். எல்லைகள் அற்ற டாக்டர்கள் (Médecins sans frontières) என்ற உதவி அமைப்பை இணையாக நிறுவிய இவர் 1988ல் இருந்து 1993 வரை பல உயர் அரசாங்கப் பதவிகளை வகித்துள்ளார். 1999க்கும் 2001க்கும் இடையே அவர் கோசோவோவில் ஐ.நா.வின் நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இதன்பின் அவர் ஜோஸ்பன் அரசாங்கத்தில் சேர்ந்தார்; 2003ல் ஈராக்கின்மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்தார்.

மந்திரி பதவிக்கு வேட்பாளர் என்று கருதப்படும் ஜோஸ்பன் அரசாங்கத்தின் மூன்றாவது உறுப்பினர், குளோட் அலேக்ர் (Claude Allègre) ஆவார். ஜோஸ்பனுடைய இளமைக்கால நண்பரும் 1997ல் இருந்து 2000 வரை கல்வி மந்திரியாகவும் இருந்த இவர் இம்மாத ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான செகோலென் ரோயாலுக்கு ஆதரவைக் கொடுக்க மறுத்துவிட்டார்.

சார்க்கோசியின் அழைப்பை Védrine, Allègre இருவரும் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது -- குறைந்தது தற்பொழுதிற்கேனும். ஆனால் வரவிருக்கும் ஜனாதிபதி பற்றி அலேக்ர் உற்சாகத்துடன் புகழ்ந்துள்ளார். "இம்மனிதர் என்னில் பாதிப்பை ஏற்படுத்துகிறார். இவரிடம் ஈர்க்கும் தன்மை உள்ளது; பெரிதும் விரும்பப்படத்தக்கவர்" என்று Le Figaro விடம் அவர் கூறினார்.

இதற்கு மாறாக குஷ்நெர்க்கு மந்திரிப் பதவியில் ஆர்வம் உடையதாக கூறப்படுகிறது. சார்க்கோசிக்கு நெருக்கமான ஆதாரங்களின்படி, "அரசாங்கத்தில் சேருவதற்கு தயாராக" குஷ்நெர் இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய அரசாங்கம் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து உண்மையில் ஓர் உறுப்பினரை கொள்ளுமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு நிலை வேண்டும் என்று தீவிரமாகப் பரிசீலிக்கப்படுவதே பாரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சார்க்கோசியின் வெற்றி அவருடைய பலத்தின் விளைவு என்பதை விட பிரெஞ்சு "இடதின்" திவால் தன்மையினால்தான் என்பதை இது மீண்டும் நிரூபணம் செய்கிறது.

முந்தையதொரு கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் சார்க்கோசியின் தேர்தல் வெற்றி வலதுசாரி கொள்கையின் முக்கியமான விளைவு என்றும் மரபார்ந்த வகையில் உழைக்கும் மக்களிடம் இருந்து ஆதரவை தளமாகக் கொண்ட இவ்வமைப்புக்களின் கோழைத்தனமான கொள்கைகளில் இருந்தும் வந்தது என்று விளக்கப்பட்டது. (பார்க்க: "சார்க்கோசியின் தேர்தல் வெற்றியும் பிரெஞ்சு "இடதின்" திவால் தன்மையும்")

வலதுசாரி கோலிசவாதி இப்பொழுது இதே "இடது" அமைப்புக்களைத்தான் தொழிலாளர்கள் மீதான தன்னுடைய தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதரவிற்கு சார்ந்திருக்கிறார்; அவருடைய புதிய தாராளக் கொள்கை பரந்த அளவில் பிரெஞ்சு மக்களால் எதிர்க்கப்படுகிறது.

குறுகிய காலத்தில், முன்னாள் சோசலிஸ்ட் கட்சி மந்திரிகளிடம் இருந்து மந்திரிகளை சேர்ப்பதற்கான அவரது முயற்சி வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் தன்னுடைய கட்சியின் வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்று நம்புகிறார். இவருடைய மோதல் பாணி கட்டுப்படுத்தப்படா சமூக மோதல்களை கட்டவிழ்த்துவிடும் என்ற அச்சத்தை தணிப்பதற்கு அவர் கவலை கொண்டுள்ளார். லிபரேஷன் ஏட்டின் பதில் விளக்கிக்காட்டுவது போல் இவருடைய முயற்சிகள் வெற்றி பெறாமல் இல்லை.

இந்த பெயரளவான இடது செய்தித்தாள், ரோயாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரித்தது, இப்பொழுது சார்க்கோசியின் அளிப்புக்களை "பாராளுமன்ற தேர்தல்களையொட்டிய முற்றிலுமான தந்திரோபாய கையாளல்தான்" என ஒருவர் அர்த்தம் கொள்ள முடியும் என்று எழுதியுள்ளது. "அடிப்படையில் வலதுசாரியாக தொடர்ந்து இருக்கும் அரசாங்கத்தை, ஒரு தூக்கணாங்குருவி வசந்தமாய் ஆக்கிவிடாது" என்று அது தொடர்ந்து எழுதியது.

ஆயினும்கூட, "இந்த அரசாங்கம் எதிர்பார்ப்பதைவிடச் சற்றே குறைந்த தன்மை உடைய கன்சர்வேடிவ் ஆகவும் தடையற்ற சந்தை சார்பு உடையதாகவும் இருக்கக்கூடும் என்பதை அறிந்துகொள்ளாவிடில் ஒருவர் குறுகிய பற்றாளர் எனலாம் என லிபரேஷன், சொல்லிச் செல்கிறது. ஆயினும் அதன் செயல்களை ஒட்டி முடிவிற்கு வருவோம்" என்று எழுதியுள்ளது.

உண்மையில், தனது வலதுசாரி, பெருவணிக ஆதரவுத் திட்டத்தை சிறிதும் சார்க்கோசி குறைத்துக் கொள்ளவில்லை. அனைத்து முக்கிய அரசாங்க மந்திரிப் பொறுப்புக்களுக்கும் - பொருளாதாரம், நிதி, தொழிலாளர் துறை போன்றவற்றிற்கு புதிய தாராளக் கொள்கையில் இருந்து சமரசத்திற்கு இடமில்லை என்ற கருத்தை உடைய நெருக்கமானவர்களைத்தான் கருத்திற் கொண்டுள்ளார்.

இவருக்கு முன்பு இருந்த ஜனாதிபதிகள் எவரைக் காட்டிலும் சார்க்கோசி மிக நெருக்கமான உறவுகளைத்தான் முக்கியமான வணிக வட்டங்களிடம் கொண்டுள்ளார். அவருடைய திருமணத்தின்போது மணமகனின் இரு சிறந்த நண்பர்கள் முக்கியமான தொழிலதிபர்கள் ஆவர். மே 5 தேர்தலுக்கு பின்னர் இவர் தன்னுடைய பில்லியனர் நண்பர் ஒருவருடைய ஆடம்பரப் படகில் குறுகியகால விடுமுறையைக் கழித்தார்; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இவருடைய சகோதரர் Guillaume, Medef எனப்படும் வணிகர் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.

புதிய ஜனாதிபதி இளம் குற்றவாளிகள் மற்றும் குடியேறுபவர்களுக்கு எதிரான கடினமான நிலைப்பாட்டில் இருந்து சிறிதளவும் விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை.

இவர் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவது தீவிரமான எதிர்ப்பை தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனிய செய்தி ஏடான Der Spiegal எச்சரிக்கை விடுகிறது: "பிரெஞ்சு அரசாங்கங்கள் இதுவரை சீர்திருத்தங்களுக்காக மேற்கொண்ட முயற்சிகள் தடுப்பரண்களை எரிப்பதில்தான் முடிவடைந்துள்ளன." இதன் பின் முன்னாள் ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் முக்கியமான நெருக்கமான ஒருவரை மேற்கோளிட்டுக் கூறுகிறது: "சார்க்கோசி இன்னும் தடுப்பரண் சோதனையில் தேறவேண்டும்."

எனவேதான் சார்க்கோசி இப்பொழுது முன்னாள் சோசலிஸ்ட் மந்திரிகளின் ஆதரவிற்காக கையை நீட்டியுள்ளார். தன்னுடன் அவர்களுக்கு கொள்கையளவிலான அரசியல் வேறுபாடுகள் இல்லை என்பதை அவர் அறிவார்; அவருடைய கொள்கைகளுக்கு எதிர்ப்பை அடக்குவதில் உதவவும் தயாராக உள்ளனர் என்பதையும் அவர் அறிவார். தொழிற்சங்கங்களை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பொருந்தும்.

திங்கள் மற்றும் செவ்வாயன்று சார்க்கோசி அனைத்து பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் தலைவர்களையும் சந்தித்தார். இது மிகவும் அசாதாரணமானது ஆகும். பொதுவாக இத்தகைய கூட்டங்கள் புதிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவியை ஏற்றபின்னர்தான் நடைபெறும்.

Force Ouvrière (FO) தொழிற்சங்கத்தின் தலைவரான Jean Claude Mailly இந்த அழைப்பு பற்றி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "எப்பொழுதும் இல்லாத முதல் தடவை இது" என்று அவர் லிபரேஷனுக்குக் கொடுத்த பேட்டியில் கூறினார். "அவர் என்ன சொல்ல இருக்கிறார் என்பதை நாங்கள் முதலில் கேட்போம். எங்களை பொறுத்தவரை உள்ளடக்கத்தையும் வழிவகைகளையும் விவாதிக்க விரும்புகிறோம்."

சார்க்கோசியுடன் ஒத்துழைப்பதற்கு தான் தயாராக இருப்பதை Mailly அடையாளம் காட்டினார். "நியமிக்கப்பட்ட அரசாங்கம் வெகு விரைவில் செயலாற்றி தொடர்ச்சியான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் அல்லது நடைமுறைப்படி உள்ளேன் என்ற முறையில் ஆலோசனை செய்து உடன்பாடு கண்டு, நிலுவையில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். நாங்கள் வெளிப்படையாக பிந்தைய போக்கிற்குத்தான் வாதிடுவோம். உதாரணமாக வேலையின்மை காப்பு போன்ற பிரச்சினையில் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியது அவசியமாகும்."

ஏனைய தொழிற்சங்க தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டைத்தான் முன்வைத்தனர். தாங்கள் பங்காளர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வரைக்கும் அனைவருமே "சீர்திருத்தங்களை" செயல்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்புத்தர உறுதியை காட்டினர்: "சீர்திருத்தங்கள்" என்பது, நலன்புரி செலவினக் குறைப்புக்களின் மறு பெயர் ஆகும்.

CFDT இன் François Chérèque கூறினார்: "பொது விவாதங்களின் மையத்தில் இருக்கும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கான விடைகள், சமூகப் பங்காளிகளின் தீவிர பங்குடன் காணப்படவேண்டும். நாட்டின் தலைவர், சீர்திருத்தங்களை செயல்படுத்தும் வழிவகையை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது ஆகும்." CGT ஐ சேர்ந்த பேர்னாட் திபோ இந்நிலைப்பாட்டுடன் தன்னுடைய அடிப்படை உடன்பாட்டை வலியுறுத்தினார். "தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்பு என்ற வகையில் எடுத்த உடனேயே முன்முடிவு செய்வதில்லை." என்றார் அவர்.

கன்சர்வேட்டிவ் நாளேடான Figaro தன்னுடைய திருப்தியை தெரிவித்தது: "தேர்தல் முடிவுகளை தொழிற்சங்கங்கள் கேள்விக்கு உட்படுத்தவில்லை. முற்றிலும் மாறான நிலைதான் உள்ளது. அனைத்துமே ஒருமனதாக ஜனநாயகம் புதுப்பிக்கப்படுதலை மற்றும் நிக்கோலா சார்க்கோசிக்கு விளைவுகள் சட்டரீதியான தன்மையை கொடுத்துள்ளதை வரவேற்றுள்ளன."

ஒரு சில முன்னாள் சோசலிச மந்திரிகள் பிய்யோன் தலைமையிலான அரசாங்கத்தில் சேரக்கூடிய சாத்தியத்திற்கு தயாரித்துக்கொண்டிருக்கும் நிலையில், சோசலிஸ்ட் கட்சி முழுமையாக இன்னும் வலதிற்கு நகர்வதற்கு தயாரிக்கிறது. ஞாயிறன்று சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான பிரான்சுவா ஹொலன்ட், பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர், ஒரு "மிகப் பெரிய இடது கட்சியை" தோற்றுவிப்பதற்கான புதிய திட்டங்களை அறிவித்தார். "இடதின் முழுப் பரிமாணம், இடது-மையம் அல்லது மையம் இவற்றை அது கொண்டிருக்க வேண்டும், ஆனால் தீவிர இடது அல்ல" என்றார்.

பிரெஞ்சு அரசியலில் வலதுசாரி முதலாளித்துவ பிரான்சுவா பேய்ரூவின் UDF ஐ விவரிக்க பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ சொற்றொடர் "மையம்" ஆகும். எனவே ஹொலன்ட் உடைய சமீபத்திய அறிவிப்பு பேய்ரூவுடன் நெருக்கமாக அணிசேரும் முயற்சியாக காணப்படவேண்டும். "சமூக ஜனநாயகம்" என்ற சொல்கூட, மரபார்ந்த வகையில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் வலதுசாரி குறிப்பை கொண்டாலும், ஹொலன்டை பொறுத்தவரையில் "அதிக இடதாகும்". சமூக ஜனநாயகம் என்பது "ஒரு முதிர்ந்துவிட்ட முன்மாதிரி, இது 1970 கள் அல்லது 1980 களில் புழக்கத்தில் இருந்த சொற்றொகுதிகளில் இருந்து கிளைத்தெழுந்தது" என்று அவர் கூறினார்.