World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Bradford and Bingley: British government nationalises second failing bank

பிராட்போர்ட் மற்றும் பிங்க்ளி: பிரிட்டிஷ் அரசாங்கம் தோல்வியடைகின்ற இரண்டாவது வங்கியை தேசியமயமாக்குகிறது

By Jean Shaoul
2 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

நிதி மந்திரியான ஆலிஸ்டர் டார்லிங், திங்களன்று லண்டன் பங்குச் சந்தை திறப்பதற்கு முன் அரசாங்கம் Bradford & Bingley (B&B) ஐ எடுத்துக் கொள்ள இருப்பதாக அறிவித்தார்.

நோர்த்தேர்ன் ரொக்கிற்குப் (Northern Rock) பின்னர் இரண்டாவது இத்தகைய தேசியமயமாக்கப்படல் என்ற முறையில் B&B சொத்துக்களை கடன்வழங்க வாங்குவது, பிரிட்டனின் மிகப் பெரிய அடைமான கடன் கொடுக்கும் நிறுவனம் திவால் தன்மையை எதிர்கொண்டது. தொழிற் கட்சி அரசாங்கம் இந்த பிணை எடுப்பிற்கு சக்தி வாய்ந்த நிதிய நலன்களின் சார்பில் ஏற்பாடு செய்தது; எந்தவித பொது விவாதமும் இல்லை, கடந்த வார இறுதியில் வங்கித் தலைவர்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பேசிய பின் இது நடந்தது.

B&B யின் பங்கு விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிக உயர்ந்த 5 பவுண்ட் 20 ஷில்லிங்கில் இருந்து 20 பென்சுக்கு வீழ்ச்சியுற்றபின் தேசியமயமாக்கல் தேவைப்பட்டது என்று டார்லிங் கூறினார். இது வங்கிகளிடம் பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சிகள் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பிசாசு ஓடுகின்றது என்ற நினைப்பை எழுப்பியுள்ளது.

"வங்கியியல் முறையை மொத்தத்தில் பாதுகாக்கும் பொருட்டு நிலைமையை நாங்கள் திடப்படுத்த வேண்டியதாயிற்று, அவர் கூறினார், "அது எடுக்கும் எதுவாயினும்" பிரிட்டன் செய்யும் என்று அதனை வலியுறுத்தினார்.

நிதிய வியாபார நகரத்தை காப்பாற்ற தான் தலையிட இருப்பதை பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் தெளிவாக்கினார். அவர் கூறினார் "இங்கிலாந்து வங்கியின் கவர்னர், நிதி மந்திரி மற்றும் நான் அனைவரும், தொடர்ந்த உறுதிப்பாட்டை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்".

இந்த உறுதிமொழி கடுமையான துன்பத்தில்வாடும் உழைக்கும் மக்களின் பணத்தையும் பல ஆண்டுகளாக ஊதியங்கள் சரிந்துள்ள நிலையில் இருப்பவர்களின் பணத்தையும், பெரு வணிகம் மற்றும் நிதிய வியாபார நகரத்தின் ஏவலின் பேரில் நிதியத் தன்னலக்குழுவின் செல்வத்தைக் காப்பாற்ற பயன்படுத்துப்படும் என்ற பொருளைத் தரும்; இது மட்டும் இல்லாமல் வரவிருக்கும் திவால்களிலும் இந்த நிலைமைதான்.

தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தி நிதிமந்திரி அவசரகால வங்கி சட்டத்தின்கீழ் நோர்த்தேர்ன் ரோக் என்னும் பிரிட்டனின் ஐந்தாவது மிகப் பெரிய அடைமானக் கடன் கொடுக்கும் வங்கியை கடந்த பெப்ருவரியில் தேசியமயமாக்கினார். அச்சட்டம் அவரை சாதாரண திவால் சட்டத்தை கடக்கவும், ஒரு வங்கியை மற்றொரு வங்கிக்கு மாற்ற அல்லது எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது; இதில் அவர் விரும்பும் அதிக அல்லது குறைந்த இழப்பீடு கொடுக்கப்படும்.

B&B யின் 51 பில்லியன் பவுண்டுகள் அடைமானங்களையும் கடன்களையும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். B&B யின் 20 பில்லியன் சேமிப்புக்கள் பிரிவினதும் மற்றும் அதன் 197 கிளைகளும், ஸ்பெயின் வங்கியான Santender க்கு விற்கப்படும்; அது Abbey க்கு உரிமையாளர் என்பதுடன், Alliance & Leiceter அடைமானக் கடன்கொடுக்கும் நிதியத்திற்கும் உரிமையாளர் ஆகும்; 600 மில்லின் பவுண்டிற்கு வாங்கியது; இதையொட்டி அது இங்கிலாந்தில் ஐந்தாவது மிகப் பெரிய வங்கியாகியது. சேமிப்பாளர்களுக்கு பணத்தைக் கொடுக்க Abbey ஆல் உத்தரவாதமளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அது Financial Services Compensation Scheme (FSCS) இடம் இருந்து 20 பில்லியன் பவுண்டுகளை பெறும்.

FSCS அடிப்படையில் ஒரு சேமிப்பாளர்களின் காப்பீட்டு நிதி, அடைமானக் கடன் கொடுப்போரால் அளிக்கப்படுவது சரிந்தால், அதற்கென இருப்புக்கள் இல்லாத நிலையில், கருவூலம் FSCSக்கு 4.5 பில்லியன் பவுண்டுகளையும், இங்கிலாந்து வங்கி 14.6 பில்லியனையும் கடனாகக் கொடுக்கும்; இவை அனைத்தும் வரி செலுத்துபவர்கள் பணம் ஆகும். இதற்கிடையில் FCS ன் உறுப்பு அமைப்புக்கள், 700 நிதிய நிறுவனங்கள், சேமிப்பை பெறுபவை, இந்த 450 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள கடனுக்கு வட்டி கொடுக்க வேண்டும்; முதல் ஏழு மாதங்களுக்கு 2009ல் கொடுக்க வேண்டும்; பின்னர் அதைப் போல் இரு மடங்கு அதற்கு அடுத்த ஆண்டு கொடுக்க வேண்டும். இதை அவர்கள் தங்கள் சேமிப்பாளர்கள் தலையில் சுமத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை; அதாவது அவர்களுக்கு அதிக கட்டணம் அல்லது குறைந்த வட்டி விகிதம் என்று சேமிப்பு கணக்குக்கு அனுப்பப்பட்டுவிடும்.

FSCSம் அரசாங்கமும் முக்கிய கடன் கொடுப்பவர் என்ற முறையிலும், B&B இன் அடைமானங்கள் திரும்பப் பெறப்படும்போது அல்லது விற்கப்படும்போது 20 பில்லியன் கடனை திரும்பப் பெறலாம் என்று நம்புகின்றன. ஆனால் அடைமானங்களில் 51 பில்லியன் பவுண்டுகள் --இதில் 85 சதவிகிதம் இழப்புநேரிடக்கூடிய BTL ஐக் கொண்டவை; self-certifcation சந்தையில் 20 பில்லியன் பவுண்டுகள் சமீப எதிர்காலத்தில் திரும்பக்கிடைக்கும் என்பது உறுதியில்லை.

அரசாங்கம் நோர்த்தேர்ன் ரோக்கின் அடைமானக் கணக்கை போல் B&B கணக்கையும் கவனிக்கும் வகையில், புதிய அடைமானங்கள் எடுப்போரை மற்ற கடன்கொடுப்போரிடம் பெறும்படி ஊக்கம் அளிக்கலாம். இது வீடுகள் வைத்திருப்போருக்கு B&B உடன் கடன் தரத்தில் மோசமானதை கொடுக்கும்; அதையொட்டி அரசாங்கம் மீண்டும் உடைமைகள் பெற்றுக்கொள்ள ஆணைகளை பிறப்பித்து, குடும்பங்களை தெருக்களில் விடும்.

இந்த நடவடிக்கை வந்த விதங்கள்;

* அமெரிக்காவின் நான்காவது மிகப் பெரிய வங்கியான வாச்சோவியா அமெரிக்க பொறுப்பாளர்களால் இடைத்தரகு செய்து பிணை எடுப்பின் கீழ் வாங்கப்பட்டது.

* அமெரிக்காவில் ஆறாவது பெரிய வங்கி, சேமிப்பு கடன்கள் நிறுவனமான வாஷிங்டன் மியூச்சுவல் அமெரிக்க அரசாங்கம் மற்றும் JP Morgan Chase னால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

* டச்சு, பெல்ஜியன் மற்றும் லுக்சம்பேர்க் அரசாங்கங்கள் ஃபோர்ட்டிஸ் வங்கியை தேசியமயமாக்க நேர்ந்தது.

* ஐஸ்லாந்தின் மூன்றாவது மிகப் பெரிய நிறுவனமான Glitnir ஐஸ்லாந்து அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்பொழுதுமுதல், Dexia பெல்ஜியத்தில் ஒரே வாரத்தில் பிணை எடுப்பிற்கு உட்பட்ட பெல்ஜிய வங்கியானது; பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் லுக்சம்பேர்க் அரசாங்கங்கள் 6.4 பில்லியன் யூரோக்களுக்கு இதைச் செய்தன.

மற்றொரு தோல்வியுற்ற வங்கியும் அடைமானக் கடன் கொடுத்த அமைப்புமான HBOS, Lloyds TSB யால் வாங்க அரசாங்கம் போட்டி விதிகளைத் தளர்த்தி மற்ற குறிப்பிடப்படாத "ஆதரவையும்" அளித்து இடைத்தரகு செய்த பின், B&B பிணை எடுப்பு ஒரு வாரத்திற்குள் வந்தது.

150 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டிருந்த B&B எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பரஸ்பர நிதித் தன்மையில் இருந்து அகன்றது; 1997ல் தொழிற்கட்சி அரசாங்கம் அறிவித்த ஒரு சட்டத்தின்கீழ் இது நடைபெற்றது; இதையொட்டி அதற்கு மொத்த சந்தைகளில் நிதி பெறுவதற்கும் சேமிப்புக்களை மட்டும் நம்பியிருத்தல் விரிவாக்கத்திற்கு என்பதாக மாறியது.

இதற்குப் பின் பொறுப்பற்ற தன்மையில் அது BTL ல் ஆபத்து நிறைந்த சந்தைகளில் பங்கு பெற்ற விதத்திலும், self-certification அடைமானங்களில் ஈடுபட்ட முறையிலும், ஜெனரல் மோட்டார்ஸின் கடன் கொடுக்கும் பிரிவான GMAC-RFC இடத்தில் கடன்களை வாங்கியதின் மூலமும், ஆபத்தான கடன் கொடுத்தலில் ஈடுபட்ட வகையில் செயல்பட்டது.

வீட்டுமனைச் சந்தை, கடன் நெருக்கடி ஆகியவற்றின் சரிவு அதன் கடின இழப்புக்களை கொடுத்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் திரும்பப் பெறுவதில் அவதியுற்று, வங்கியும் அதன் நடவடிக்கைகளுக்கு பணம் கொடுப்பதை கஷ்டமாகக் கண்டது. மே மாதம் ஒரு சிறப்பு பங்கு வெளியீடு செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஆனால் இரு முறை அத்தகைய நடவடிக்கை செய்தும் நிலைமை மோசமாயிற்று; அதன் பங்குதாரர்களில் 20 சதவிகிதத்தினர்தான் முதலீட்டு இருப்புக்களை 400 மில்லியன் பவுண்டுகள் அதிகரிக்கும் முயற்சிக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருந்தனர் இது பெரும்பாலான பங்குகளை ஆறு உயர் தெரு வங்கிகளுடனும் இரு முதலீட்டு வங்கிகளுடனும் விடும் கட்டாயத்தை கொடுத்தது; அவை உரிமைகள் வெளியிடுவதில் ஏற்பட்ட நஷ்டத்தை இதையொட்டி ஈடுகட்டின.

இந்த மாதம் நிதிய நெருக்கடி மற்றும் அடைமான பாக்கிகள் பெருகியது பற்றிய அச்சங்கள் அதிகரித்தபோது, கடன் தரம் நிர்ணயிக்கும் அமைப்புக்கள் B&B கடன் தர வீதத்தை பயனற்ற (junk bond) பத்திர அந்தஸ்த்திற்கு மேலாக ஒரு வெட்டாக நிர்ணயித்தன. நிறுவனம் GMAC-RFC உடன் ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்தது; அதன் அடைமான பாக்கிகள் B&B உடையதைவிட அதிகமாக இருந்தன; வேலைகள் குறைக்கப்பட்டன; ஆக்கிரோஷமான முறையில் தொலைக்காட்சி விளம்பர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது; மூலதன விகிதங்களை பெருக்குவதற்கு நச்சுத்தன்மை ஆடம்பர பூச்சுடைய தன்மை நிறைந்த நிதிய கருவிகளை விற்றது. ஆனால் இதுவும் போதவில்லை. இதன் பங்கு விலை சரிந்தது, நாணயக் குறைவு என்பது, ஆபத்தின் குறியீடு, ஒரே வாரத்தில் இரு மடங்கு ஆயிற்று.

இதன் பங்குகள் கிட்டத்தட்ட பயனற்றவை என்ற நிலையில், பல மில்லியன் பவுண்டுகள் சேமிப்பாளர்களினால் B&B கிளைகளில் இருந்தும் இணையதளத்தின் மூலமும் வெள்ளி, சனிக்கிழமைகளில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இது BTL சந்தை பற்றி புது ஐயங்களை எழுப்பியுள்ளது; அது மொத்தத்தில் 132 பில்லியன் பவுண்டுகள் அல்லது மொத்த அடைமானங்களில் 11 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும். B&B தேசியமயமாக்கப்பட்டது அறிவிக்கப்பட்ட உடன், சில BTL கடன் கொடுப்பவர்கள் தங்கள் விகிதங்களை உயர்த்தினர்; மற்றவை புதிய வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கதவுகளை மூடிவிட்டனர்.

B&B யின் சரிவு என்பது, பரஸ்பர நிதி முறையை அகற்றிவிட்ட ஆறு முதலீடு மற்றும் கடன் கொடுக்கும் சங்கங்களும், 1986ல் வங்கிகளானவை எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன அல்லது திவாலாகிவிட்டன என்ற பொருளைக் கொடுக்கும்.

மூன்று ஆண்டுகளுக்குள் 2000ம் ஆண்டில் ஒரு வங்கியாக வுல்விச் Barclays ஆல் வாங்கப்பட்டது. 2001 ல் நான்கு ஆண்டுகளின் பின் ஹாலிபாக்ஸ், பாங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கியால் வாங்கப்பட்டது. 1989ல் Abbey பரஸ்பர நிதி முறையில் இருந்து அகன்றது மற்றும் அது 2004ம் ஆண்டு Santander ஆல் எடுத்துக் கொள்ளப்பட்டது. 2007ல் 10 ஆண்டுகளின் பின் நோர்த்தேர்ன் ரோக் வங்கி என்ற வகையில் பொரிந்தது. 11 ஆண்டுகளுக்கு பின் 2008ல் Alliance and Leicester, நிதியைப் பெற முடியாமல் இருந்த நிலையில், அந்த வங்கி சான்டான்டரால் வாங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று 2005ம் ஆண்டு பரஸ்பர நிதி முறையை அகற்றிய சங்கங்கள் பற்றி ஆய்வு நடத்தி, இவற்றிடம் இருந்து நுகர்வோர் அதிகம் பயன் பெறவில்லை என்றும் பெரும்பாலானவற்றை பொறுத்தவரையில் அடைமானத்திற்கு முதலீடு மற்றும் கடன் கொடுக்கும் சங்கத்திற்கு வங்கியை விட வட்டி அதிகம் கொடுப்பதாகவும் கண்டறிந்தது. புதிய உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணங்கள் வங்கியின் செலவினங்களில் 35 சதவிகிதத்தை அதிகப்படுத்தின. இதில் உண்மையில் இலாபம் அடைந்தவர்கள் உயர்மட்ட மேலாளர்கள்தாம்; இவர்களுடைய ஊதியங்கள் உயர்ந்தன; கிட்டத்தட்ட மூன்று மடங்கு என; முதலீடு மற்றும் கடன் கொடுக்கும் சங்கங்களில் இவர்களுக்கு இணையான வேலை பார்ப்பவர்களைவிட 65 சதவிகித ஊதிய உயர்வு இவர்களுக்கு கிடைத்தது. வங்கிகளாக மாற்றும் செலவு 1 பில்லியன் பவுண்டிற்கும் மேலாக போயிற்று.

அமெரிக்க குறைந்த பிணைமதிப்புடைய சந்தையின் சரிவிற்கான காரணம் இப்பொழுது பிற அடைமானக் கடன் கொடுப்போரிடமும் பரவியது; அதாவது உணவுப் பொருள், விசை, போக்குவரத்து செலவுகளுடன் சங்கத்திற்குப் பணம் கொடுக்க முடியாமல் மிக வறிய, ஆபத்திற்குட்பட்ட பிரிவுகள் தள்ளப்பட்டதுதான்; அவற்றின் ஊதியமும் பணவீக்கத்துடன் ஈடுகொடுத்து நிற்கவில்லை.

அடைமானக் கடன் கொடுப்பவர்கள் மற்றும் வங்கிகள் மறு சீரமைப்பு என்பது இன்னும் கூடுதலான முறையில் நிதிய இருப்புக்கள் மற்றும் சக்தியை ஒரு சில பெரும் நிறுவனங்களிடம் குவிக்கும். இதையொட்டி சிறு, நடுத்தர வங்கிகள்மீது அழுத்தம் அதிகரிக்கும்; அவற்றின் போட்டித்தன்மை குறையும்; அவை மூடப்பட வேண்டிய நிலை அல்லது பெரிய போட்டியாளர்களிடம் விற்கப்படும் நிலை ஏற்படும்.

இது கடன்களுக்கு அதிக கட்டணங்களுக்கு வழிவகுக்கும்; வீட்டு உரிமையாளர்கள் தவணையை கட்டாவிட்டால், ஆக்கிரோஷமான முறையில் வீடுகள் எடுத்துக் கொள்ளப்படும் அச்சுறுத்தலுக்கு வகை செய்யும். கிளைகள் மூடப்படும்போது அல்லது "பகுத்தறிவார்ந்த முறையில் மாற்றப்படும்போது" ஆயிரக்கணக்கான வேலைகள் இழப்பிற்கும் வகை செய்யும்; ஆகஸ்ட் 2007ல் இருந்து கடன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து நிதிய, சொத்துக்கள் மற்றும் கட்டுமானப் பிரிவுகளில் வேலை இழப்புக்கள் தோன்றிவருகின்றன.

அரசாங்கம் நோர்த்தேர்ன் ரோக் மற்றும் B&B ஐ பிணை எடுப்பு செய்தது குறைந்த பட்சம் 127 பில்லியன் பணத்தை பொதுத் துறை கடன் தொகைகளில் சேர்த்துள்ளது; இது 2007-08ம் ஆண்டு GDP யின் 8.6 சதவிகிதத்திற்கு சமம் ஆகும் மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நிகர கடனின் மொத்தத்தை 48 சதவீதம் உயர்த்தியுள்ளது; அரசாங்கம் மீண்டும் கணக்குகளில் கைவைக்கவில்லை என்றால்.

இந்த இரு பிணை எடுப்புக்கள் மட்டும் எந்த அளவிற்கு தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பதை உணர்வதற்கு --இங்கிலாந்து வங்கி நிதிச் சந்தைகளில் செலுத்தி பில்லியன் கணக்கான பவுண்டுகளை கணக்கில் எடுக்காமல்-- இது சுகாதாரப் பாதுகாப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ள 110 பில்லியன் பவுண்டை விட அதிகமாகும்; 2009-10 காலத்தில் அது மிக அதிகமான செலவினம் ஆகும். மருத்துவ மனைகள், பள்ளிகள், போக்குவரத்து போன்றவற்றிற்கு 1997ம் ஆண்டு தொழிற் கட்சி பதவிக்கு வந்ததில் இருந்து முழுக்காலத்திலும் செலவழித்த பணமான 60 பில்லியன் முதலீட்டுச் செலவை விட அதிகமாகும். ஆயினும் கூட பொது உள்கட்டுமானத்திற்கு தனியார் நிதிக்கு இன்னும் திரும்புவது, அரசாங்கம் கொடுக்க முடியவில்லை என்பதால் நாடப்படுகிறது எனக் கூறி, பகுதி அளவில் குறைந்தபட்சம் நியாயப்படுத்தப்படுகிறது.

B&B மீட்கப்பட்டது நிதியச் சந்தைகளுக்கு அமைதியை தருவதற்குப் பதிலாக இது வங்கித் துறை முழுவதும் ஒரு பகடைக்காய் விளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற பரந்த அச்சங்கள் உள்ளன. நிதிய அளிப்புக்கள் அதிகாரத்தின் தலைவரான டர்னர் பிரபு கூறினார்: "வழிவகையில் இறுதியில் நாங்கள் செய்தது ஒருவேளை சரியில்லாமல் இருக்கலாம். பிற மற்ற உயர்ந்த தெரு வங்கிகள் போதுமான முதலைக் கொண்டுள்ளன என்று நம்புகிறோம், நேரிய முறையில் இயங்குகின்றன என்று நினைக்கிறோம்; ஆனால் இந்த நிலையை பரிசீலனைக்குள் வைக்க வேண்டியிருக்கிறது."

இதை அவர் சொல்லியபோதே, பிரிட்டனின் வங்கிகளுடைய பங்குகள் தடையற்றுச் சரிந்தன. Moneycrop இன் பொருள்கள் மேலாளரான Mark Deans கூறினார்: "இங்கிலாந்தின் வங்கிகள் பற்றிய நம்பிக்கை புதிய குறைந்த அளவை, B&B தேசியமயமாக்கப்பட்டதில் இருந்து அடைந்துவிட்டது."

வங்கிகளுக்கு இடையேயான கடன் கொடுத்தல், வட்டி விகிதம் 6.26 சதவிகிதம் என்ற போதும்கூட, முற்றிலும் கிட்டத்தட்ட இயங்காமை நிலையில், வங்கியின் உத்தியோகபூர்வ விகிதமான 5 சதவிகிதத்தைவிட கூட என்ற போதிலும், Bank of England 40 பில்லியன் பவுண்டுகள் கடனை பொருளாதாரத்தில் நிதிச்சந்தைகளில் புகுத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டு, உடனடிக் கடனுக்காக மற்றும் ஒரு 10 பில்லியன் பவுண்டுகளையும் ஒதுக்க நேர்ந்துள்ளது.