World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president at the UN seeks to justify communal civil war

இலங்கை ஜனாதிபதி ஐ.நா. கூட்டத்தில் இனவாத உள்நாட்டு யுத்தத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றார்

By Wije Dias
6 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஏனைய தலைவர்களைப் போல் அண்மையில் நடந்த ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தார். செப்டெம்பர் 24 அன்று அவர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டத்தின் தொனிப்பொருள் பூகோள உணவு நெருக்கடி மற்றும் ஐ.நா. சபையை மக்களாட்சிமயப்படுத்தல் என்பதாக இருந்த போதிலும், இராஜபக்ஷ இது பற்றிய ஒருசில வார்த்தைகளை வீசிவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை பற்றி பேசத் தொடங்கினார்.

இராஜபக்ஷ தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் இருந்தார். குழம்பிப்போன சமாதான முன்னெடுப்பை மேற்பார்வை செய்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே உட்பட பெரும் வல்லரசுகள், இலங்கை அரசாங்கம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டு மீண்டும் யுத்தத்திற்கு திரும்பியதை மெளனமாக ஆதரித்தன. எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கத்தினதும் மற்றும் அதன் இராணுவத்தினதும் வெளிப்படையான மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துபோயுள்ளநிலையில் அது சர்வதேச விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த ஆண்டு முற்பகுதியில், ஆசனத்தை கைப்பற்றுவதற்காக பல மில்லியன் டொலர்களை செலவிட்டும், ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறுப்புரிமையை இழந்தது.

குறிப்பாக மனித உரிமைகள் சம்பந்தமான ஐ.நா. உடன்படிக்கைகளை அரசாங்கம் மீறியுள்ளது என்ற அடிப்படையில் இலங்கைக்கான ஜீ.எஸ்.பி. வர்த்தக வசதிகளை விலக்கிக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் இப்போது அச்சுறுத்திக்கொண்டுள்ளது. ஜீ.எஸ்.பி. காப்புவரி சலுகைகளை இழப்பது, ஐரோப்பிய சந்தைகளில் முன்னுரிமை சலுகையில் கனமாகத் தங்கியிருக்கும் இலங்கை ஆடைக் கைத்தொழிலுக்கு மிகப் பெரும் அடியாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலும் பொருளாதாரம் மந்தமடையும் நிலைமைகளின் கீழ், இலங்கையில் கிட்டத்தட்ட 200,000 ஆடைத்தொழிற்சாலை தொழிலாளர்கள் தொழிலை இழக்க நேரிடும்.

முதலாவதாக, "பயங்கரவாதத்தின் மீதான பூகோள யுத்தத்தின்" ஒரு பாகமே புலிகளுக்கு எதிரான யுத்தம் என பிரகடனம் செய்வதன் மூலம் தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை நியாயப்படுத்திய இராஜபக்ஷ, "பயங்கரவாதத்தின் வேகமாக பரவும் அச்சுறுத்தலை" எதிர்த்துப் போரிட ஐ.நா. "தெளிவான நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பில் அமெரிக்காவினதும் மற்றும் அதன் பங்காளிகளதும் குற்றங்களை ஆதரிக்கும் இராஜப்கஷ, இலங்கையில் தனது சொந்த குற்றவியல் யுத்தத்திற்கு ஆதரவு கோரிக்கொண்டிருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள தமது சமதரப்பினரைப் போலவே, இலங்கை இராணுவமும், கண்மூடித்தனமான குண்டு மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்றுதள்ளும் நடவடிக்கையை நாடியுள்ளதோடு இலட்சக்கணக்கானவர்களை அவர்களின் வீடுகளில் இருந்து விரட்டியடித்துள்ளது.

இராஜபக்ஷவின் உரை, தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக அவரது அரசாங்கம் நடத்தும் யுத்தத்தின் இனவாதப் பண்பை மூடி மறைக்க சொல்லப்பட்ட பொய்களால் நிரம்பிப்போயிருந்தது. "இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள், நோர்வே அனுசரணை வழங்கி, சர்வதேச இணைத்தலைமை நாடுகள் மேற்பார்வை செய்த சமாதான முன்னெடுப்புகள் உட்பட, இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக [தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் பற்றிய] பிரச்சினை தீர்ப்பதற்கு பெரும் முயற்சி செய்துள்ளன. இந்த சமாதான முன்னெடுப்புகளை பயங்கரவாதிகள் அலட்சியம் செய்தனர். சமாதானத்தை எதிர்பார்த்து பேச்சுக்கள் நடந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், புலி பயங்கரவாதிகள் அற்ப காரணங்களை கூறி வெளியேறியதோடு, அப்பாதவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலக்குவைத்து ஆகவும் மோசமான பயங்கரவாதத்துக்கு மீண்டும் திரும்பினர்," என அவர் பிரகடனம் செய்தார்.

இது வரலாற்றுப் பதிவை தலைகீழாக நிறுத்துவதற்கு எடுக்கும் வெளிப்படையான முயற்சியாகும். புலிகளின் தோற்றம் "பயங்கரவாதத்தின்" உற்பத்தியல்ல. மாறாக, அது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த சிங்கள மேலாதிக்கத்தை கிளறிவிட முயற்சித்த இலங்கை அரசாங்கங்கள் தசாப்த காலங்களாக நடைமுறைப்படுத்திய திட்டமிட்ட தமிழர் விரோத பாரபட்சத்தால் உருவாக்கப்பட்ட அதிருப்தி மற்றும் ஆத்திரத்தின் உற்பத்தியாகும். தனியான தமிழ் அரசை கோரும் பல குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்புக்களில் ஒன்றே புலிகள் இயக்கமாகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கத் தொழில்களில் இருந்து மேலும் மேலும் தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை, தமிழ் பேசுபவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் பக்க சார்பு மற்றும் பெளத்தத்தை அரச மதமாக்கியமை போன்றவற்றின் பிரதிபலனாக 1970களில் தோன்றியதே இந்த தனிநாட்டுக் கோரிக்கையாகும்.

ஆரம்பத்தில் இராணுவத்திற்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட மோதல்கள் நடந்துகொண்டிருந்த அதே வேளை, மோதல்கள் உக்கிரம் கண்டு 1983ல் ஒட்டு மொத்த யுத்தமாக வெடித்தது. தமது சந்தை சீர்திருத்த வேலைத் திட்டத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை சந்தித்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், 1983 ஜூலையில் தமிழர் விரோத படுகொலையை கட்டவிழ்த்து விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்தது. பின்னர் "ஆறு மாதங்களுக்குள்" ஆயுதக் குழுக்களை நசுக்கும் கட்டளையுடன் வடக்கிற்கு இராணுவத்தை அனுப்பிவைத்தது. 25 ஆண்டுகளின் பின்னர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் யுத்தத்திற்கு முடிவுகட்ட இலாயக்கற்றவை என்பதை ஒப்புவித்துள்ளதோடு இதுவரை ஒரு மதிப்பீட்டின்படி 80,000 உயிர்கள் பலியாகியுள்ளன.

அரசாங்கங்கள் "பிரச்சினையை தீர்க்க" முயற்சித்தன என்ற இராஜபக்ஷவின் கூற்று வெறும் மோசடியாகும். புலிகளுடனும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தட்டுக்களுடனும் ஒரு வகையான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் அண்மையில் 2002ல் முயற்சிக்கப்பட்டது. ஆயினும், கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனம் முழுமையாக சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ளது என்ற உண்மையின் அடிப்படையில் அவை அனைத்தும் இடிந்துவிழுந்தன. 2002-2003ல் ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்கள், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) முன்னெடுத்த திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரத்தின் மத்தியில் துரிதமாக குழும்பிப்போனது. இந்தக் கட்சிகள் சமாதான முன்னெடுப்புகளை தாய்நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல் என கண்டனம் செய்துவந்தன.

சர்வதேச சமாதான முன்னெடுப்பு என சொல்லப்படுவதன் அடித்தளங்களை நிராகரிக்கும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே ஜே.வி.பி. யின் ஆதரவுடன் 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ குறுகிய வெற்றியை பெற்றார். ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் இழிந்த, பிரகடனப்படுத்தப்படாத ஆத்திரமூட்டல் யுத்தம் மற்றும் படுகொலைகளை நடத்த இராணுவத்தை அனுமதித்ததோடு, 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருப்பி எழுதக் கோரியதன் மூலம் விளைபயனுள்ள வகையில் பேச்சுவார்த்தைகளை கீழறுத்தார். 2006 ஜூலையில், இராஜபக்ஷ யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி தாக்குதல் நடத்த இராணுவத்துக்கு கட்டளையிட்டதுடன், அடுத்த ஜனவரியில் இறுதியாக யுத்தநிறுத்தத்தில் இருந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகிக்கொண்டது.

"இந்த சட்டவிரோத ஆயுதக் குழு, தன்னிடமுள்ள சட்டவிரோதமான ஆயுதங்களை கைவிடுவதோடு அதன் இராணுவ இயலுமையை கலைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வர தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் போது மட்டுமே எங்களுடைய அரசாங்கம் பேச்சுக்குத் தயாராகும்", என பிரகடனம் செய்து அடுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை இராஜபக்ஷ வெளியிட்டார். வேறு வார்த்தைகளில் சொன்னால், இலங்கை அரசாங்கம் நிபந்தணைகளின் அடிப்படையில் சரணடைவதை கோருகின்றது -இந்த நடவடிக்கை, புலிகளின் போரிடும் இயலுமையை அழிப்பதில் இராணுவம் வெற்றிகண்டால் மட்டுமே இடம்பெறக்கூடியதாகும்.

தீவின் கிழக்கில் அரசாங்கம் பெற்ற வெற்றிகளை இராஜபக்ஷ பெருமையாகக் கூறிக்கொண்டார். இங்கு புலிகளின் பிரதான கோட்டைகளை இராணுவம் கைப்பற்றியது. "ஜனநாயக முன்னெடுப்புகளின் நன்மைகளை மக்கள் அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதும், பயங்கரவாதிகள் அதிகளவு இருக்கும் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுமே அரசாங்கத்தின் இலக்காகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வேகாமாக இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்திகளுக்கு சமமானதாக இருக்கும். கிழக்கு மாகாணத்தில் முன்னைய பயங்கரவாதிகள் இப்போது ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களாக செயற்படுவதோடு, புலிகள் சேர்த்த முன்னாள் சிறுவர் போராளி இப்போது முதலமைச்சாரக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்தை தழுவிக்கொண்டுள்ளார்."

கிழக்கில் இந்த ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு மோசடியாகும். அரசாங்கம் சுமார் 20,000 துருப்புக்களையும் ஏனைய இராணுவ சிப்பாய்களையும் அதே போல் 27,000 பொலிசாரையும் மாகாணம் பூராவும் கரைத்துவிட்டிருந்தது. 2004ல் புலிகளில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டீ.எம்.வி.பீ.) என்ற பேர்போன தமிழ் துணைப்படைக் குழுவுடன் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அமைத்துக்கொண்டது. டீ.எம்.வி.பீ. குண்டர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததோடு அவர்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக எதிர்க் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் பரவலாக குற்றஞ்சாட்டினர். "முன்நாள் சிறுவர் போராளியும்" முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் எஸ். சந்திரகாந்தன் டீ.எம்.வி.பீ. யின் தலைவராவார். சிறவர்களை படையில் சேர்த்தல், படுகொலைகள் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக டீ.எம்.வி.பீ. யை உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்தன. "பொருளாதார அபிவிருத்தியை" பொருத்தளவில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலிவு உழைப்பை சுரண்டுவதற்காக பாதுகாப்பான உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தை அமைப்பதன் பேரில், இராணுவம் ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது வீடுகள் மற்றும் நிலங்களில் இருந்து விரட்டியடித்துள்ளது.

இரஜபக்ஷ அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழும், கொடூரமான இராணுவத் தலைவரின் தலைமையிலான பெயரளவிலான மாகாண சபை ஆட்சியின் கீழும் வைத்துள்ளது. இந்தக் கேலிக்கூத்தான ஜனநாயகத்தையே இராஜப்கஷ இலங்கையின் வடக்குக்கு மட்டுமன்றி நாட்டின் எஞ்சிய பகுதிக்கும் தயாரித்து வருகின்றார். தமது கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், மாணவர்கள் அல்லது விவசாயிகளை "யுத்த முயற்சிகளை கீழறுப்பவர்கள்" மற்றும் "பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள்" என கண்டனம் செய்வதை அரசாங்கம் வழமையாக்கிக்கொண்டுள்ளது.

நிச்சயமாக, இராஜபக்ஷவின் பொய்களையும் பொருத்தமின்மைகளையும் ஐ.நா. பொதுச் சபைக்கூட்டத்தில் இருந்த எவரும் சவால் செய்யவில்லை. இலங்கையில் "மனித உரிமைகள்" தொடர்பாக இரகசியமான விமர்சனங்கள் எழுமானால், அது யுத்தம் ஏனைய நாடுகளின் நலன்களை அச்சுறுத்துவதன் காரணமாகவே இருக்கும். இலங்கை பத்திரிகைகள் குறிப்பிட்டவாறு, அமெரிக்க உப ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலின் உட்பட ஏனைய பலருடன் நேரத்தை ஒதுக்கிக்கொள்பவராக தோன்றிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடன் பேசுவதற்கு வாய்ப்பை பெறுவதில் இராஜபக்ஷ தோல்விகண்டார். சிங் அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் இராஜபக்ஷவின் யுத்தத்தை இரகசியமாக ஆதரிக்கும் அதே வேளை, மோதல்களின் தாக்கத்தால் சீற்றமடைந்துள்ள தென்னிந்திய தமிழர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் அரசியல் அமைதியின்மையை எதிர்கொள்கின்றார். அதே போல், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் யுத்தத்தை ஆதரித்தாலும், பிராந்தியத்தில், குறிப்பாக பெரும் வல்லரசுகள் குறிப்பிடத்தக்க பொருளாதார நலன்களைக் கொண்டுள்ள இந்தியாவில் யுத்தமானது ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் சாத்தியத்தை கொண்டுள்ளது பற்றி அவை கவலைகொண்டுள்ளன.

இலங்கையிலேயே, எழுச்சியான பதங்களில் இராஜபக்ஷவின் பேச்சை ஊடகங்கள் பெருமளவில் அறிக்கை செய்திருந்தன. எந்தவொரு அடக்கமான விமர்சனமும் அவர் பலமான சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ளத் தவறியது பற்றியதோடு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தந்திரோபாயம் தொடர்பான உடன்பாடின்மைகள் என்னவாக இருந்தாலும், கொழும்பில் உள்ள முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்கள் தீவில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனவாத இரத்தக்களரிக்கு பொறுப்பாளிகளாகும்.